24/7/11

ராயல் சல்யூட்



எனக்கு வேண்டாம் அந்த புதையல்

அந்த பென்ஸ் கார் திருவனந்தபுரம்  கோவிலின் வடபுறமிருக்கும் நுழைவாயிலின் முன்னே நிற்கிறது.  நாலுமுழ வேஷ்ட்டியில்   மேலே சட்டையில்லாமல் காலில் செருப்புமில்லாமல் இறங்கும் அந்த மெலிந்த  அதிக உயரமில்லாத  மனிதர் நான்கு பேர்களுடன் உள்ளே நுழைகிறார், மெல்ல நடந்து  அவர் சன்னதியை   அடைந்ததும் அந்த சனனதியில் அனந்தசயனத்திலிருக்கும்  பெருமாள் பத்மாநாபருக்கு தீபாராதனை காட்டிய பின் தலமை அர்ச்சகருடன் சன்னதியிலிருக்கும் அனைவரும் வெளியேறுகிறார்கள். சன்னதியில் அவரும் பெருமாளும் மட்டுமே 10 நிமிடங்கள்  தனியே.  பின்னர்  வெளியே வரும் அவர் வந்த வாயில் வழியே திரும்புகிறார். வாயிலின் கதவு மூடப்படுகிறது.  காரில் ஏறுமுன் கால்களிலிருக்கும் மணலை தட்டிவிட்டு    செருப்பை அணிந்து கொள்கிறார்.  அவர் தான் உலகிலியே பணக்கார கோவிலாக  இப்போது ஆகிவிட்ட  திருவனந்தபுரம் கோவிலுக்கு சொந்தகாரான  திருவனந்தபுர மஹாராஜா .உத்திராடம் திருநாள் மார்தாண்ட வர்மா. பல  ஆண்டுகளாக  அந்த சம்ஸ்தான மன்னர்கள் கடைபிடிக்கும் மரபு இது. தினசரி மன்னர் வந்து பத்மநாபஸவாமியிடம் தனியாக பிரார்த்னை செய்து பேசி அவரது ஆணைகளை பெறுகிறார். கோவிலின் மண் கூட காலில் ஒட்டி அரணமணைக்கு வந்து விடக்கூடாது என்று மன்னர் பரம்பரை சாரட்டில் ஏறும் முன் செய்ததை இன்றைய மன்னரும் பின்பற்றுகிறார்.
இன்றைய திருவன்ந்தபுர ம்ஹாராஜ  மிக எளிமையான மனிதர்.  வயது 90. மிக ஆரோக்கிய்மாக இருக்கிறார். வாக்கிங்ஸிடிக் இல்லாமல் நடக்கிறார் காலையில் 4 மணிக்கு எழுந்து யோகா செய்துவிட்டு வேதம் படித்தபின் கோவிலுக்கு செல்லுகிறார்.. சுத்த வெஜிட்டேரியன். பால் தவிர வேறு பானகம் எதுவும்  அருந்துவதில்லை. நிறைய படிக்கும் இந்த மன்னர்  செய்திதாளில் வரும் முக்கிய செய்திகளை தானே கத்தரித்து ஒட்டிவைகிறார்.  30 ஆண்டு கலக்‌ஷன் வைத்திருக்கிறார்.. வெளிநாட்டு பயணம் அல்லது தவிர்க்க முடியாத காரணத்த்தால் கோவிலுக்கு வர முடியாத போனால் பதமாநாபர் கட்டளயிட்டிருப்பது போல மன்னர் கோவிலுக்கு 166ரூபாய் 35 பைசாஅபராதம் கட்ட வேண்டும். 
 தென்தமிழ் நாட்டை ஆண்ட சேரமன்னர்களின் பரம்மபரையில் வந்தவர்கள் மார்தாண்டவர்மாக்கள், 1750 ஆண்டுதிருவீதாங்கூர் சம்ஸ்தாணத்தை ஆண்ட மன்னர் தனது தேசத்தையும் சொத்துக்ளையும் பெருமாளிடம் ஒப்படைத்துவிட்டு அவருடையா தாஸனாக நாட்டை ஆண்டுவந்தார். அன்றுமுதல் மன்னர்கள் பத்மாநாபரின் தாஸர்கள். பணியாட்கள் என்றால் பதவி விலகலாம், ஓய்வுபெறலாம், தாஸர்கள் இறக்கும்வரை அந்த பணியை செய்யவேண்டும்.இந்தியாவின் மற்ற ராஜ குடுமபங்கள் போல ஆடம்பரமாக் இல்லாமல் மிக எளிமையாக சிக்கனமாக வாழும் ராஜகுடும்பம் இது. அன்னிய ஆக்கிரமிப்பை எதிர்த்து 1741 லேயே டச்சுகாரகளுடன் போரிட்டு  வென்றதையும் தொடர்ந்து வந்த ஆங்கிலேயர்களுக்கும் எளிதில் அடிபணிய மறுத்தையும் சமஸ்தானத்தின் சரித்திரம் சொல்லுகிறது.  மன்னர் பரமபரையில் ஸ்வாதி திருநாள் போல  பல இசை, நடன கலைஞ்ர்கள் இருந்திருக்கிறார்கள். சென்னையில் வசிக்கும் இந்த  அரச குடுமபத்தை சேர்ந்த இன்றைய தலைமுறையான கோபிகா வர்மா சிறந்த மோகினி ஆட்டகஞ்ர்
. கல்விக்கும்,கலைகளுக்கும் நிறைய ந்னகொடைகள் வழங்கியிருக்கும் இந்த அரச குடும்பத்திற்கு இன்றைய வருமானம் அவர்கள் செய்துவரும் டிராவல்எஜன்சி, ஏற்றுமதி/ இற்க்குமதி  ஹோட்டல் ஓன்ர பிஸினஸ்க்ளிலிருந்து.  இன்றும் ஒரு பிரிட்டிஷ் கம்பெனியின் சேர்மனாக்யிருக்கும் மன்னர், மீடியா வெளிச்சத்தை விருமபாதவர். அவர் படங்களை செய்திதாட்களில் பார்பது அபூர்வம். வேஷ்டி சட்டை அல்லது ஜிப்பாவில்தான் எப்போதும். பார்பவர்கள் இவர்தான் திருவன்ந்தபுர மஹாரஜா என்றால் யாரும் நமப மாட்டார்கள். திருவனந்தபுரத்தில் கெளடியார் எனபது மன்னரின் அரண்மனைஒணம், அரச குடுபத்தவர்களின் பிறந்த நாள் போன்ற நாட்க்ளில் தான் . மன்னர். மக்களை சந்திப்பார். மற்ற சந்திப்புகள் அபூர்வமாக அவரது அழைப்பின் பேரில்மட்டுமே. இரண்டு ஆண்டுகளுக்கு முன் மன்னரை மரியாதை நிமித்தம் காணவந்தவர் லெப்டினட் க்ர்னல் மோகன்லால். தன் படங்களின் மூலம் இந்திய ராணுவத்தின் பெருமையை இளைஞர்கள் உணர செய்த மோகன்லாலுக்கு  மெடராஸ் ரெஜிமெண்ட் டெரிடோரியல் ஆர்மி கெளரவ லெப்படினெட் கர்னல் பதவி கொடுத்திருக்கிறது.  1870ல் அந்த ரெஜிமெண்ட் அன்றைய திருவனந்தபுரம் மன்னரால்  துவக்கப்பட்டது அதனால்  திருவன்ந்தபுர மன்னர்கள்   அதன் கெளரவ தளபதி.  தன் உயர் அதிகாரியை பார்த்து ஒரு ராயல் சல்யூட் கொடுக்க தன் அம்மாவுடன் சாந்த குமாரியுடன் வந்தார். மகிழந்தது மன்னர் மட்டுமில்லை அவரது முழு குடும்பமும்தான். நேருவிலிருந்து ராஜிவ் வரை வந்திருக்கும் அந்த  அரண்மணைக்கு வந்த  முதல் நடிகர் மோகன்லால்.



 தங்கள் கோவிலில் திடுமென புதையல் போல கிடைத்திருக்கும் கோடிக்கணக்கான் செல்வம் யாருக்கும் சொந்தமானததில்லை. நிச்சியமாக  எங்கள்  குடுமபத்தினுடையதில்லை. அது ஆண்டவனுடையது எனபதினால் ஒரு பைசா கூட எங்கள் குடுமபத்திற்கு வேண்டாம். அரிய பொருட்களை மீயுசியத்திலும், மற்றவைகளை கோவில் மூலமாக அறப்பணிகளுக்கு செலவிடலாம் அற்வித்திருகிறார் இந்த் மன்னர்.  பத்தமநாபா ஸ்வாமி இவருக்கு பெரிய செல்வத்தை மட்டுமில்லை பெரிய மனதையும் கொடுத்திருக்கிறார். மோகன்லாலைப்ப்பொல நாமும் வைப்போம் ஒரு சல்யூட்.




கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்கள்