21/8/11

சொர்க்கத்தை நிச்சியப்பவர் -இவர்



திருமணங்கள்  இணயத்தில் நிச்சியக்கபடுகின்றன.
எவருடைய வாழ்விலும் திருமணம் ஒருஇனிமையான் முக்கியமான கட்டம். அது காதல் திருமணமாகயிருந்தாலும் சரி, பெற்றோர்கள் முடிவுசெய்த திருமணமாகயிருந்தாலும் சரி. அவைகள் சொர்கத்தில் நிச்சியக்கபட்டவை என நம்பபடுகிறது. இன்று அப்படி சொர்கத்தில் முடிவு செய்யபட்ட  வாழ்க்கை  துணை யாரென்று கண்டுபிடிக்க இன்று இணயம் உதவுகிறது. இந்தியாவில் இன்னும் 60% க்கும் மேலான திருமணங்கள் பெற்றோரால் முடிவு செய்ய்படுகிறது என்கிறது ஒரு ஆய்வு.  கோவில்களில், சமுக சேவை மையங்களில் விபரங்கள் பதிவு செய்வதிலிருந்து  தினசரிகளில்  வரி விளம்பரங்கள் தரும் வரை பலவகைகளில்  தங்கள் வாரிசுகளுக்கு தகுந்த துணையை  தேடிக்கொண்டிருக்கும் பெற்றோர்களில்  பலர் இன்று இணையத்தின் துணையை நாடுகிறார்கள்.  இந்த புதிய பாதையை கண்ண்டுபிடித்தவர் முருகவேல் ஜானகிராமன் என்ற தமிழர். அவரது நிறுவனம் பாரத் மேட்டர்மோனி.கடந்த 12 ஆண்டுகளாக் இயங்கும் இந்த நிறுவனத்தில் பதிவுசெய்துகொண்டவர்கள் 1 கோடிக்கும் மேல். இந்த இணைய தளத்தின் மூலம்  நடந்த திருமணங்கள் 7 ல்ட்சத்திற்கு  மேல் என்கிறது லிம்கா புக்  ஆப் ரிகார்ட்ஸ்

1997ல் நியூஜெர்சியில் ஒரு இந்திய மென்பொருள் நிறுவனத்தில் கன்ஸெல்டெண்ட்டாக  பணியாற்றிகொண்டிருந்த முருகவேல் ஒய்வு நேரத்தில் அமெரிக்க வாழ் இந்தியர்களுக்காக ஒரு வெப்ஸைட்டை  வடிவமைத்திருந்தார். அதில் தாய் நாட்டுசெய்தி. அரசியல், சினிமா, கோவில் விழாககளின் படங்கள் போன்றவற்றுடன் ஒரு பகுதியாக் மணமகன்/மகள் தேவை அறிவிப்பு.   இந்தப் பகுதி  மிக பிரபலமாகி அதற்காக நிறைய இடம் ஒதுக்க வேண்டியதாயிற்று. அபோது எழுந்த எண்ணம் இதையே ஏன் பெரிய அளவில் ஒரு தனிவெப்ஸைட்   ஆக்கி பலருக்கு உதவக்கூடாது?


இந்தியாவிற்கு திரும்பியுடன் வேலையை ராஜினாமா செய்து விட்டு பாரத் மேட்டர்மோனியை துவக்கினார்.  இண்டர்நெட்டின் முழுவீச்சும் அதன் பலமும் இந்தியாவில் அதிக தாக்கம் ஏற்படுத்தாதாத  நேரம் அது.  நெட்டில் பார்த்தெல்லாம் கல்யாணம் செய்யமாட்டார்கள்  இந்து போன்ற பெரிய பேபர்களில் வந்த விளமபர்களைக்கூட பலரிடம் விசாரித்த பின் தான்  திருமண பேச்சையே துவக்கும் நம் தேசத்தில் இதெல்லாம் சரிவராது என்று இவரை பயமுர்த்தியவர்கள் தான் அதிகம். ஆனால் ஜாதக பொருத்தங்களிலும்மதவழக்கங்களில் நம்பிக்கைகளும், கொண்ட நம் நாட்டில் தங்கள் பிள்ளைகளுக்கு நல்ல துணையை தேடித்தருவதை கடமையாக கருதும் பெற்றோர்கள் இருப்பதால். வருங்காலங்களில்  இணைய தளவழி   நிச்சியமாக தவிர்க்க முடியாதாகிவிடும் என்று நம்பிய முருகவேல் மன்ந்தளராமல் தன் முயற்சியை திவிரப்படுத்தினார். மேலும் ஒரு தினசரியில் 4 வ்ரி விளமபரத்தைவிட விரிவான தகவல்கள் தர வெப்ஸைட் உதவும், பயன் படுத்தி பலன் அடைந்தவர்களின்  வார்த்தைகளினால் புதிய தொடர்புகள் நிச்சியம் என நம்பினார். நம்பிக்கை உண்மையாயிற்று.  இன்று  பல நிருவனங்கள் இறங்கியிருக்கும், 1000கோடி பிசினஸ் இருப்பதாக நம்பபடும் இநத துறையின் முன்னோடியானார் இவர். பாரத் மேட்ர்மோனியின் வெற்றிக்கு காரணம் மாநில, மொழி வாரியாக, மத வாரியாக  அவர்களது வெப்ஸைட் தமிழ்மேட்டர்மோனி,பஞ்ஞாபி மேட்டர் மோனி என்று இயங்குவதுதான். இந்தியாவில் உள்ள அத்தனை மொழி பேசுபவர்களுக்கும் தனித்தனி தளங்கள்  இருப்பதால் பங்குகொள்பவர்களுக்கு வசதியாகயிருக்கிறது.  அது மட்டுமில்லமல், விவாகரத்து பெற்றவர்கள், தனித்து வாழ்பவர்கள்மாற்றுதிறனாளிகள் இப்படி பல வகையான பிரிவுகள். கடந்த ஆண்டு ஒரு 63 வயது இளைஞ்ர் இதன் மூலம் தன் துணையை க்ண்டுபித்து மணந்திருக்கிறார். .  இந்த  இணையதளம் எப்படி இயங்குகிறது ?
 இவர்களது வெப்ஸைட்டில்   மணமகன்/மகள் விபரங்களை பெற்றோர் அல்லது அவர்களே பதிவு செய்தால் அது விபரம் தேடுபவர்களுக்கு எளிதில்  ஆன் லயனில் கிடைக்கும் படி வசதி செய்யபட்டிருகிறது. அதில் தரப்ப்ட்டிருக்கும் போன் அல்லது மெயிலில்  சம்பந்தபட்டவ்ர்கள் நேரடியாக தொட்ர்புகொள்ள முடியும். இதற்கு கட்டணம் எதுவுமில்ல.  தரப்பட்டிருக்கும் தகவல்களை  எப்படி நமபுவது?
எங்கள்  நிறுவனத்தின் நம்பகதன்மைதான் எங்கள் பலம். அதை  ஏற்படுத்தவதில் ஆரபம்த்திலிருந்தே மிகுந்த கவனம் செலுத்திவருகிறோம். பதிவு செய்யப்படும் தகவல்கள் ஒவ்வொன்றும் எங்கள் அலுவலர்களால் சோதிக்கபடுகிறது. போன் நம்பர்களை தொடர்பு கொண்டு சோதிக்க தனி நிறுவனமிருக்கிறது. அவர்களால்  சோதித்த பின்னர்தான் நம்பர் பதிப்பிக்கபடும் .அதுபோல் பதிவு செய்யபட்டவர்களின் படங்கள் தகவல் தருபவர்கள் விரும்பினால் மட்டுமே வெளியிடப்படும்.  பாஸ்வேர்ட் பாதுகாப்புடன் படத்தையும் ஜாதகத்தையும்  வெளியிடும் வசதியும் இருகிறது.  இவைகளெல்லாம் கட்டணம் செலுத்த வேண்டும். பதிவு செய்யும்போது உறவினர், நண்பர்,அல்லது சமூக பிர்முகர்ரை ரெபரன்ஸாக கொடுக்பட்டிருப்பரை நேர்டையாக் அணுகி விசாரித்துகொள்ளலாம். தனி கட்டணம் செலுத்தி சம்பளம் படிப்பு ஆகியவற்றை  எஜென்சி மூலம் விசாரித்து உறுதி செய்யது கொள்ள வசதியும்  உண்டு. 
 பாரம்பரிய பழக்கங்களை  பெரிதும் மதிக்கும் ஒரு கட்டுபாடன  குடுமபத்திலிருந்து வந்திருக்கும்  முருகவேல் இந்திய திருமணத்தை முடிவு செய்ய கூடிய பல விஷயங்களை ந்ன்றாக  புரிந்து வைத்திருகிறார்.
. இவரே  ஒரு புரோகிரமராக இருப்பதால் பதிவு செய்யும்போதே பல விஷயங்களை தரும்படியாக  திட்டமிட்டு  இணையதளம்  அமைக்கபட்டிருகிறது. அதனால் பயன்படுத்துவர்   இந்த ஜாதி பிரிவில்-வெளி நாட்டில் வேலை செய்யும் கம்ப்யூட்டர் எஞ்னியர் -இன்ன சம்பளத்தில்  மண்மகன் தேவை என  குறிப்பிட்டால் பளிச்சென்ற வேகத்தில் பட்டியலை தருகிறது. இணையதளம். இந்த தளத்தின் மூலம் முடிவான ஒரு திருமணத்தில் மணமகளின்  தந்தை  “பழைய  வைதீக முறைப்படி ஜாதகப் பொருத்தம் பார்த்து அதே நேரத்தில் மற்ற விபரஙகளையும் எளிதாக  அறிந்து கொள்ள இன்றைய மார்டன்  இண்டர்னெட்யுகத்தில் அதன் முலமே  செய்யபட்டிருக்கும் இந்த வசதி ஒரு பெரிய வரப்பிரசாதம். “எங்கள் காலத்தில்  இப்படி ஒரு வசதி இல்லைபோல எதுமில்லை “ என்கிறார் (நல்ல வேளை இல்லை! எனபது அவ்ர் மனைவி அடித்த கமெண்ட் என்பது வேறு விஷயம்)
 இவர்களுடைய தளங்களிலியே அதிகம் பயன்படுத்தப்ட்டிருப்பதும் அதிக திருமணங்கள் முடிந்ததும் தமிழ் மேட்ர்மோனியும் ஹிந்தியும் தானாம் ஆன்லைன் வசதி மிக பாப்புலாராக இருந்தாலும்  இன்றும் கல்யாணம் என்றால் நேரில் சந்தித்து பேசுவதுதான் சிற்ந்தது என்ற எண்ணம் பலருக்கிறது. அதனால் நிறைய நகரங்களில்  சிறிய ஆபீஸ்களை அமைத்து இண்ட்டர் நெட்டில் பதிவு செய்ய தேர்வு செய்ய உதவுகிறார்கள். அடிக்கடி நேரடி சுயம்வரங்கள் நட்த்திகொண்டிருந்தவர்கள் இப்போது இணயத்தில்  ஒரே நேரத்தில் பலர் பங்குகொள்ளும் வெர்சுவல் சுயம்வரத்தையும் முயற்சிக்கிறார்கள்

வெறும் திருமணத்துடன் நிறுத்திவிடாமல் வேலைவாய்ப்பு, ரியல் எஸ்டேட் கார் விற்பனை போன்றவைகளுக்கும் தனித்தனி  இணைய தளங்களை துவக்கி இப்போது செயல்படுத்தி கொண்டிருகிறார். முருகவேல். மிக வேகமாக மாக வளரும் இவர்களின் நிருவனத்தில் யாஹூ இணைய தள நிருவனம்  முதலீடு செய்திருகிறது. சமூகத்திற்கு தஙகளது பங்களிப்பாக  இணையத்திலேயே பாரத் ரத்தவங்கி, கண்வங்கி போன்ற வற்றை துவக்கி  மருத்துவ  மனைகளுக்கு உதவுகிறார்கள்.  பெற்றோர் பார்த்து, பாரமப்ரிய முறை  திருமணங்கள் போற்றபட வேண்டும் எனபதற்காக் எப்பரல் 14யை மண்வாழ்க்கைநாளாக (matrimonial day)  கொண்டாடி அன்று தங்கள்தள்த்தின்  மூலம் இணைந்தவர்களின் பங்களிப்புடன் எதாவது ஒரு சமூகப் பணியைச் செய்கிறார்கள்.
வெப்ஸைட் வடிவமைப்பது எனபது கணணியியல் பயின்ற எவரும்  செய்யக்கூடிய ஒரு பணி. ஆனால் தன் பணியில்   சிறு பொறியாக கிளம்பிய மாறுபட்ட ஒரு  சிந்தனையை ஒரு பிஸினஸ் மாடலாகவே உருவாகியிருகிறக்கும் முருகவேல் ஜானகிராமன் இணையத்தில் புதிதாக சாதிக்க  துடிக்கும் இளைஞர்களுக்கு  சொல்ல விருமபவது.: வாய்ப்புகள் வானளவில் இருக்கிறது. அதில் வியாபரா ரீதியாக வெற்றி பெறக்கூடியது  எதுவென்று   கண்டுபிடிப்பதில் தான் உங்கள் வெற்றியிருகிறது. .


    



  


கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்கள்