11/7/12

கனவை மறந்த குடியரசு தலைவர்.


இந்திய அரசியலில் சிலர் நிரந்தரமாக இரண்டாம் இடம் இடத்திலிருக்கும் பெருமையை பெற்றவர்கள்.  என்றாவது ஒரு நாள் பிரதமராவோம் எனற  கனவில்  தொடர்ந்து எல்லா பிரமதர்களுக்கும் அடுத்த இடத்திலிருந்து வந்த பிராணப்

விரைவில் ராஷட்டிரபதிபவனுக்கு குடியேற போகும் பிராணப் முகர்ஜிக்கு அது மிக அதிர்ஷ்டமான் இடம். 1973ல் ராஷ்டிரபதி பவனுக்கு அமைச்சர்கள் பதவிஏற்பு விழாவை பார்க்க போன வருக்கு  அமைச்சராகும் அதிர்ஷ்டம் அடித்தது. அன்று பதவி ஏற்ற அமைச்சர்களின் எண்ணிக்கை அதிர்ஷ்டமில்லாத எண் என்று சொல்லபட்டதால் அதை சரி செய்ய ஒரு அமைச்சர் சேர்க்கபட்டு இவர் அழைக்கபட்டார். அன்று முதல் மத்திய அரசில் ஏதாவது ஒரு துறையின் அமைச்சராக தொடர்பவர். பல முறை ராஜ்ய சபா வழியாக நழைந்தவர் என்றாலும் கடந்த முறை ஜாங்கீப்பூர் தொகுதியிலிருந்து வென்று அந்த தொகுதிக்கு அடிக்கடி சென்று நிறையச்செய்து  செழிக்க வைத்திருக்கிறார். தொகுதிலியிருக்கும் போது மக்கள் இவரை சதாரணமாக சந்திக்க முடிவதால்அங்கு இவருக்கு மிகபெரிய இமேஜ்.
55 வருடமாக அரசியலில் இருக்கும் இந்த 77வயது இளைஞரின் பலம். அபார ஞாபக சக்தி. எண்களையும் சட்டபிரிவுகளை பாராளுமன்ற நடைமுறைகளை விரல் நுனியில் வைத்திருக்கும் வித்தகர்.  எந்த பிரச்சனைகளையும்  பேசியே அது உள்கட்சி, கூட்டணிகட்சிகள், எதிர்கட்சிகள் என் யாராயிருந்தாலும் நிதானத்துடன் பேசி சரி செய்வதில் வல்லவர். அதனால் சோனியா எந்தபிரச்சினைக்கும் முதலில் அழைப்பது  இவரைத்தான். தன் பேச்சுவார்த்தை திறனில்  இவர் கொண்ட நம்பிக்கைக்கு ஒரு சாம்பிள், போட்டி வேட்பாளரை அறிவித்து சவாலுக்கு அழைக்கும் மம்தாவை  “அவர் என் சகோதரி நிச்சியம் மனம் மாறி எனக்கு ஆதரவு தருவார்“ என்ற அறிக்கை

மத்திய அமைச்சரைவைக்கு போகும் முன்   விஷயங்களை பரிசீலிக்க 35 அமைச்சர்கள் குழுக்கள் இயங்குகின்றன். அதில் 33க்கு இவர் தலைவர். தெரியாத துறையே இல்லை என போற்ற படும் இந்த ஆறிவு ஜீவியை குடியரசு தலவராக ஆக்குவதில் காங்கிரஸ்கட்சிக்கு  இழப்புதான் என்றாலும் சோனியா இந்த முடிவை எடுத்தற்கு அரசியல் காரணங்களும்  சொல்லப்படுகிறது.  
இந்திரா காலத்திலிருந்தே கட்சி, ஆட்சி தலமைக்கு நெருக்க்மாக்யிருந்தவர் ராஜிவ் காலத்தில் ஓரம் கட்டபட்டிருந்தார்.பின்னர் நரசிம்மராவ் காலத்தில் தன்னை நிலைநிறுத்திகொண்ட இவரை, ராஜிவ்க்கு எதிராக போர்க்கொடிதூக்கியவர் என்றபோதிலும் சோனியா இவரை நம்பியது இந்திய அரசியிலின் ஆச்சரியங்களில் ஒன்று. இரண்டு மகன்களில் ஒருவர் நாடாளுமன்ற உறுப்பினர். மகள் கதக் நாட்டிய தாரகை. பிடித்து மீனும், ரபீந்தர் சங்கீதமும்.
விரும்பியது  விலகிபோனால் தேடிவந்ததை விரும்பி ஏற்பது புத்திசாலித்தனம் என்பதை உணர்ந்து கொண்டதால் பிரதமர் கனவை மறநத பிராணப் முகர்ஜி அடுத்த பிரமருக்கு பதவிபிராமணம் செய்யும் வாய்ப்பை பெற்றிருக்கிறார். .  

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்கள்