11/7/12

கருந்தேள் கண்ணாயிரம்

ஏதோ காமிக் புத்தக தலைப்பு மாதிரி இருக்கும் இது ஒரு  வலைப்பூ காமிக்குகளுக்கும் இதற்கும் ஒரு  சம்பந்தமும் கிடையாது. லார்ட் ஆப் ரிங்ஸ் படம் நினைவிருக்கிறதா? பன்னிரெண்டு ஆண்டுகள் உழைப்பில் ஒரு புதிய உலகையும் ஏராளமான  கிராஃபிக்ஸில் பல அசாத்தியங்களை காட்டிய முதல் படம்..

 JRR  டால்கீன் எனபவர் படைத்த  மிடில் எர்த் என்ற ஒரு கற்பனை உலகின் காவியம்  லார்ட் ஆப் ரிங்ஸ். இன்றும்   இது அதிகம் விற்கும் முதல் 10 புத்தகங்களின் பட்டியலில் இருக்கிறது, அறிவியல், மயாஜாலம்,  அமானுஷ்யம் என எல்லாமிருக்கும் இந்த நாவலை பிரமிக்க வைக்கும் திரைப்படங்களாக  எடுத்து   உலக சினிமாவையே மிரட்டியவர் பீட்டர் ஜாக்ஸன். இந்த ஹாலிவுட்படம் உருவாக்கபட்ட விதத்தை, கிராபிக்ஸ் தொழில் நுட்பங்களை எப்படி செய்தார்கள், சொதப்பல்களை எப்படி சரிசெய்திருக்கிறார்கள் எனபதை தன் வலைப்பூவில் அலசுகிறார் கருந்தேள் கண்ணாயிரம். கவனியுங்கள் அலசல் அத்தனையும் தமிழில். கடந்த வருடம் மே மாதம் முதல் தொடராக எழுதி வந்தவர் இப்போது அதை   வார் ஆப் ரிங்ஸ்”“  என்று ஒரு மின் புத்தககமாகமாவே தளத்தில் வெளியிட்டிருக்கிறார். மின்புத்தகம் என்றதும் வெறும் வார்த்தைகள் அடங்கிய ஒரு PDF தொகுப்புஇல்லை.  இதுவரை தமிழில் இப்படிப்பட்ட ஒரு மின்புத்தகம் வந்ததில்லை என்று சொல்லும் அளவிற்கு இப்புத்தகத்தில் இப்படங்களைப் பற்றிய ஏராளமான தகவல்கள், புகைப்படங்கள், வரைபடங்கள், புள்ளி விபரங்கள், படங்களில் இடம்பெறும் இடங்களையும் மிருகங்களையும் கதாபாத்திரங்களையும் ஆயுதங்களையும் படங்கள் எடுக்கபட்ட விதத்தையும் பற்றிய அழகான் லே அவுட்டில் பல அரிய தகவல்களையும் மிக விறுவிறுப்பாக சொல்லுகிறது. 275 பக்கம் இருக்கும் இந்த அருமையான  தமிழ் மின் புத்தகத்தை இலவசமாக  WWW.Karundhel.com தளத்திலிருந்து  டௌன்லோட் செய்து உங்களுடையாதாக்கிகொள்ளாலாம். ஆமாம் நிஜமாகவே ஒசி தான்.
 1950 களில்
கருந்தேள் கண்ணாயிரமாக அவதாரம் எடுத்து இதை எழுதியிருக்கும் ராஜேஷ் சினிமாக்காரர் இல்லை. கோவையை சொந்த ஊராகக் கொண்டஇவர். பெங்களூரில் கணிப்பொறி வேலையில் இருப்பவர். இவர் ஆங்கில வலைப்பூ ஒன்றும் நடத்திக்கொண்டிருக்கிறார். ஆங்கில மற்றும் உலக சினிமா விமர்சனங்கள், வீடியோ கேம் மற்றும் காமிக்ஸ், புத்தக விமர்சனங்கள் இவரது தளத்தில் தூள் பறக்கிறது. அமெரிக்காவில் ஃப்ளோரிடாவில் இருப்பவர்  பாலமுருகன். ஹாலிவுட் பாலா என அறியபட்டிருக்கும் இவர்  லார்ட் ஆப் ரிங்ஸ் படங்களின் பெரிய விசிறி. ராஜேஷின் வலைப்பூவில்  தொடராக வந்த கட்டுரைகளை வாசித்து வந்த இவரது ஐடியா இந்த மின் புத்தகம்,  புத்தகத்தை அருமையான வடிவில் இரவும் பகலுமாக உழைத்து டிஸைனும், எடிட்டும் செய்து கொடுத்திருக்கிறார். இதைப்போல  இலங்கையைச் சேர்ந்த சஜீவன் மற்றும் கரூரை சேர்ந்த மோகன் பொன்ராஜ் என்ற நண்பர்களும் அவர்களளவில் டிஸைன் வேலையில் உதவியுள்ளனர்.. புத்தகத்திற்கு அருமையான ட்ரெய்லர் (!) வெளியிட்டு, இந்த மின்புத்தக தயாரிப்பில் முதலிலிருந்து இறுதிவரை ஒருங்கிணைப்பாளராக இருந்தது   சரவண கணேஷ் என்கிற வலைப்பதிவர். இவர் திண்டுக்கல்லில் வசிப்பவர். சினிமாத்துறையில் இல்லாத, உலகின் பல மூலைகளில்  இருக்கும் இந்த நணபர்கள்,  விரல் நுனியில் விரியும் இணையமும் தாங்கள் அறிந்த கணணி தொழில் நுட்பமும் கை கொடுக்க  இணைந்து படைத்திருக்கும் இந்த மின்புத்தகத்தை சினிமாத் துறையிலிருப்பவர்களும் கனவுகளுடன் அதில் நுழைய  துடிப்பவர்களும் அவசியம் படிக்க வேண்டும். எதற்காக இந்த புத்தககம் என்ற கேள்விக்கு   "உலகெங்கும் கோடிக்கணக்கான பேரை வசியப்படுத்தியிருக்கும் இந்த படத்திற்கும் புத்தகத்திற்கும் எங்களாலான ஒரு tribute தான் இந்த முயற்சி" என்பது தான். இந்த நண்பர்களின் பதில்
சி பீல்ட் (Syd field)எழுதிய ஸ்கிரிப் ரைட்டிங் என்ற நால் தான் இன்றும் உலக கமர்ஷியல் சினிமாக்களின் பைபிளாக கொண்டப்படும் புத்தகம்.   அதை தமிழாக்குவதுதான்  ராஜேஷின் அடுத்த முயற்சி.  அதற்கான அனுமதியை அவரிடம் பெற்றிருக்கிறார் எனபதைவிட சந்தோஷமான விஷயம் அவர் ராஜேஷின் முயற்சியைப் பாரட்டி தானே புத்த்கத்திற்கு  முன்னுரை எழுதவும் சம்மதித்திருக்கிறார். என்பதுதான்.

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்கள்