17/7/12

(இன்-ஸைட்    புத்தக அறிமுகம்


வலிமையான பாரதத்தைப் படைக்க ஓளி படைத்த கண்ணினாய் வா வா என்றான் பாரதி. வெளிநாடுகளில் கண்மருத்துவத்தில் பட்டங்களும் பயிற்சிகளும் பெற்ற ஒரு இளைஞன் படிப்பை முடித்தவுடனேயே, பொதுமக்களின் நன்கொடையில் ஒரு மிகப்பெரிய கண்மருத்துவ மனையை துவக்கி எழைகளுக்கு தன் படிப்பால் சேவை செய்ய வேண்டும் எனற உறுதியான நெஞ்சத்தோடு தமிழ் நாட்டுக்கு திரும்பி, போராடி வென்ற ஒரு இளைஞனின் கதையைச்சொல்லுகிறது இந்த புத்தகம்.
1978ல்  டாக்டர் பத்திரிநாத்தால் மிக எளிமையான ஒரு கிளினிக்காக துவக்கப்பட்டு இன்று உலகபுகழ் பெற்ற கண்மருத்துவ மனையாகவும், ஆராய்ச்சி , மற்றும் பயிற்சி கூடமாகவும் மிளிரும் சங்கர நேத்திராலாயாவின் வரலாறு இந்த இன்சைட். கண் மருத்துவத்தில் முதுகலைபட்டம் பெற்ற பல டாக்டர்கள் இன்று காத்திருந்து நேத்திராலாயாவில் பயிற்சி பெற்று தங்கள் தகுதியை வளர்த்துகொள்கின்றனர்.. இசையிலும் நாட்டியத்திலும் மஹா குருக்கள் சிலர் ஒருதனிப்பாணியைபடைத்திருப்பதுபோல்  இன்று கண்மருத்தவதில்  “நேத்திராலாயா ஒரு தனிப்பாணியை”” “ உருவாக்கியிருக்கிறது. இது மிகபாதுகாப்பானது என்பதால் பல மருத்துவர்கள் பின்பற்றுகின்றனர்.
நன்கொடையினால் மட்டுமே ஒரு  பெரிய மருத்துவ மனை என்ற பெருங்கனவுடன் அமெரிக்காவிலிருந்து வந்த பத்திரிநாத்க்கு பிரமுகர்களை அறிமுகபடுத்தி உதவியவர் டாக்ட பிராதாப்ரெட்டி. அவரால் அறிமுகபடுத்த பட்ட எம்.எஸ் அம்மாவும் கல்கிநிறுவனத்தின் குடுமபத்தினரும் உதவியிருகிறார்கள்.  அறக்கட்டளையாக வளர்க்கும் ஆலோசனை தந்தவர் காஞ்சி ஜெயந்திரர்.
புத்தகம் ஒரு நிறுவனத்தின் வரலாறாக இல்லாமல் மருத்துவர்கள்,  நர்ஸ்கள் நோயாளிகள், அவர்களின் உறவினர்கள், பணியாளார்கள், நன்கொடையாளார்களின் பார்வையில் எளிய ஆங்கிலத்தில் அழகாக  33 ஆண்டு வளர்ச்சியைச்சொல்லுகிறது.   இதற்கு  விவி ரெங்கநாதன், ஜார்ஜ், மீராபிராசாத என்ற 3 ஆசிரியர்கள். மூன்று ஆசிரியர்கள் ஒரே புத்தகம் எழுதுவது புதில்லை. ஆனால் கையாண்டிருக்கும் டெக்னிக் புதிது. வரலாறு, பேட்டிகள், கோபாலகிருஷ்ண காந்தி, டாக்டர் பிராதப்ரெட்டி, மல்லிகாசீனிவாசன் போன்றவர்களின் கட்டுரைகள், கண்மருத்துவம் பற்றிய படச்செய்திகள்,டாக்டர் பத்ரிநாத்தின் அமெரிக்காவில் உடன் பணிபுரிந்த வசந்தியுடன் நடந்த எளிய காதல்  திருமணம், பயபக்தியுடன் பரமாச்சாரியருக்கு பத்ரிநாத் செய்த ஆப்ரேஷன், ” டாக்டர்  சின்னபையன்  இப்போதுதான் பிராக்டிஸ் வருகிறது அவன் சொன்னபடி கேட்டு தலைக்கு குளிக்காமலேயே இருக்கேன். எனக்கு ஏதாவது பிரச்ச்னையானால் அவருக்கு நல்ல பேர் இல்லாமல் போய்விடும் “
 ஓரே நாள் இரவில் எம்ஜியாருக்கு  ரகசியமாக செய்யபட்ட கண்சிகிச்சை.  அவர் ஒவ்வொரு கண்ணுக்கும் வெவ்வேறு லென்சை பொருத்துங்கள் என்னால் சமாளிக்க முடியும் என டாக்டருடன் விவாதம் செய்தது, மருத்தவமனைக்கு வரும் யாரும் வரிசைப்படிதான் டாக்டரை சந்திக்க முடியும் எனற விதியை மதித்து தன் மருமகளுடன் பெஞ்சில் காத்திருந்த அமைச்சர் நீதிஷ் குமார் போன்ற பல சுவையான தகவல்கள்.
நேதிராலாயவிற்கு முதன்முதலில்  சிகிச்சை எதுவும்பெறாமல் வந்து பார்த்து சேவையை பாராட்டி  எதிர்பாரமல் மிகப்பெரிய நன்கொடையை வழங்கியவர்  சட்டநிபுணர், வழக்றிஞர் பல்கிவாலா.  தொடர்ந்து டாடா நிறுவனம்.    வங்கிகளில் கடன்வாங்குவதில்லை என்ற நேத்திராலாயவின் கொள்கையில் ஆச்சரியமில்லை. ஆனால் அந்த வங்கிகளே பெரிய அளவில் நன்கொடைகள் வழங்கியிருப்பதுதான் ஆச்சரியம்.
விலை 1000 ரூபாய். .ஒவ்வொரு புத்தக விற்பனைமூலம்  இரண்டு  எளியவர்களுக்கு  இலவச  காட்ராக்ட் ஆப்ரேஷன் என்பதை அறியும்போது அது அதிகமானதாக தோன்றவில்லை.
 




கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்கள்