15/9/12


உலகை கவர்ந்த  “வசந்தமே வருக

கல்கி 23/09/12 
70களில்  அனேகமாக தமிழகத்தின் எல்ல திரையரங்கங்களிலும் படம் துவங்குமுன் திரை விலகும் போது ஒலித்த இசையான  “கம்செப்டர்” டூயூன் இன்றும் பலரின் நினைவில் நிற்கும் இசை.. இந்த ஆண்டு செப்டம்பரில் பொன்விழா காணும் இந்த திரைஇசையை கெளரவிக்க அந்த ஒரிஜினல் டிராக்கை இப்போது டிஜிட்டல் வடிவத்தில் மீண்டும் வெளியிட்டிருக்கிறார்கள்.

30 ஆண்டுகளாக ”மனதில் தங்கிவிட்ட மறக்கமுடியாத டாப்டென் ட்யூன்”களின் பட்டியலில் இடம்பெற்றிருக்கும் இதை உலகின் எந்த பகுதியிலிருக்கும் இசைக்கலைஞனும் அடையாளம் கண்டுகொள்வார். இதை வாசிக்காத, குறைந்த பட்சம் வாசிக்க முயற்சிக்காத இசைக்குழுவே இருக்காது என்ற அளவிற்கு பாப்புலாரான இதன் இசை வடிவத்தை சற்றே மாற்றி வாசித்து புகழ்பெற்ற குழுக்களும் உண்டு. காரணம் எவரையும் தாளமிட்டு நடனமாடச்செய்யும்  இதன் சக்தி.  மூன்று கிட்டார்,ஒரு மாண்டைலின் ஒரு பியானோ மட்டுமே பயனபடுத்த பட்டிருக்கும்,  எந்த வாத்தியத்திலும் எளிதாக வாசிக்ககூடிய இந்த ட்யூனை கற்றுகொடுக்காத கிதார் பள்ளியே கிடையாது.1961ஆம் ஆண்டு இத்தாலியில் படமாக்கபட்ட  இந்தஹாலிவுட் படத்தில் அன்றைய காதல்மன்னன்   ராக்ஹ்ட்சனுடன்  கனவுகன்னி ஜினா லோலபிரிகேடா  இணைந்து நடித்திருக்கிறார். முதலில் மர்லின்மன்ரோ நடிப்பதாகயிருந்தது.   இந்த காமெடி படத்தின் டைட்டில் ஓடும் போதும் ஒலித்த பின்னணி இசை இது.  அமெரிக்க கோடிஸ்வரனான கதாநாயகன் விடுமுறைக்காக இத்தாலியில் ஒரு மலைவாசஸ்தலத்திலிருக்கும் தனது ஆடம்பர பங்களாவிற்கு வருகிறார். அவரது மானேஜர் அதை ஹோட்டலாக்கி  ஒருகல்லூரி கோஷ் டிக்குவாடகைக்கு விட்டிருக்கிறார். அதில் நாயகனும்  ஒரு கெஸ்ட்டாகவே தங்கி கலாட்டாவும் காதலுமாக முடிவதுதான்  கதை.(அன்பே வா படம் நினைவிற்கு வந்தால் சத்தியமாக நாங்கள் பொறுப்பல்ல) படத்தின் துவக்கத்தில் நாயகனின் பளபளக்கும் ஆடம்பர கார் ஒரு தனி விமானத்தில் வந்திறங்கும். அதை டிரைவர் ரோம் நகரின் வீதிகளின் வழியே  நாயகன் தங்கியிருக்கும்  ஹோட்டலுக்கு ஒட்டிசெல்லும் போது ஒலிக்கும் இந்த பின்னணி இசையோடு படத்தின் டைட்டில்கள் காட்ட படுகிறது.படத்தில் மீண்டும் ஒரேஒருமுறை இந்த இசை ஒலிக்கிறது. அவ்வளவுதான். ஆனால் படத்தின் இசை அமைப்பாளார் ஹான்ஸ்  ஸால்ட்டர், இந்த ஒரு மெட்டினால் ஒரே இரவில் உலகபுகழ்பெற்றுவிட்டார். ஹாலிவுட் படங்களுக்கு டைட்டில் தீம் மியூசிக் என்ற ட்ரெண்டையும் உருவாக்கியவர் இவரே.
ஒரு நல்ல இசை, அது டைட்டில் மியூசிக்காக இருந்தாலும் கூட அரை நூறாண்டுக்குபின்னும்  கேட்பவர்களை கவரும் என்பதை சொல்லும் கம்-செப்டமபரின் ஒரிஜினலை இப்போது இந்த படத்தை அல்லது லிங்க்கை கிளிக் செய்தால்

http://www.youtube.com/watch?v=ysdcsPl782E



 காட்சியை பார்த்துக்கொண்டே  கேட்கலாம்.  ஒரு முறை கேட்டுத்தான் பாருங்களேன். 

1 கருத்து :

உங்கள் கருத்துக்கள்