19/12/12

ஒலிம்பிக்ஸ் பாலிடிக்ஸ்


இந்தியன் ஒலிம்பிக் சங்கங்கத்திற்கு 85 வயதாகிறது. சர்வே தேச ஒலிம்பிக் கமிட்டி அங்கீகரித்திற்கும் இந்த சங்கம்தான் ஒலிம்பிக், காமன்வெல்த் கேம்ஸ்போன்ற சர்வதேச விளையாட்டு போட்டிகளுக்கு இந்திய அணிகளை தேர்ந்தெடுக்கிறது. ஒவ்வொரு விளையாட்டு அமைப்புகளின் தேசிய  பெடரேஷன்களின் தலைவர்கள் இதன் உறுப்பினர்கள்.  ஊதியம் ஏதுமில்லாத  கெளரவ பதவி தான் என்றாலும்  கையாளும் காண்டிராக்ட்கள் ஆயிரம் கோடிகளில். கடந்த ஆண்டு வரை இந்த இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலவராக இருந்தவர் சுரேஷ் கல்மாடி..

 காமன்வெல்த் போட்டிகளில்  நடந்த ஊழல்களில் கைதானால் பதவி விலகினார். தொடர்ந்து அடுத்த தேர்தல் நடக்கும் வரை தலமை பொறுப்பில் நியமிக்க பட்டவர் விஜய் குமார் மல்ஹோத்ரா. . டெல்லி நீதிமன்றம், தேசிய விளையாட்டு ஆணையத்தின் விதிகளின் படி அடுத்த தேர்தலை நடத்த ஆணையிட்டதின் படி  அந்த தேர்தல் சமீபத்தில் நடைபெற்றது. முதலில் இந்த தேர்தலை நடத்திதர சம்மதித்திருந்த குரேஷி (முன்னாள் தேர்தல் ஆணையர்) வேட்பாளர்கள் மனுக்கள் விதிகளின் படி இல்லாதாதால் தேர்தலை நடத்தாமல் விலகிவிட்டார். புதிய தேர்தல் அதிகாரி நடத்திய தேர்தலில், தலைவராக,அபய்சிங் செளதலாவும் செயலாளாராக லலித்பாநாட் (Bhanot) தேர்ந்தெடுக்கபட்டனர். பாநாட் காமன் வெல்த்விளையாட்டு செகரட்டரி ஜெனரலாக யிருந்து ஊழலில் சிக்கி கல்மாடிக்கு முன்னரே கைது செய்யபட்டு 1 ஆண்டுசிறை வாசத்துக்கு பின் ஜாமீனில் வெளிவந்திருப்பவர்.


. செளதாலா சொத்துகுவிப்பு வழக்கில் சிக்கியிருக்கும் ஹரியானா அரசியல்வாதி. இந்த தேர்தலில் கடைசி நிமிடத்தில்இவர்களை எதிர்த்து போட்டியிட்டவர்கள்   மனுக்களை திரும்ப பெற்று கொண்டதால் போட்டியெதுமில்லாமல் ஏக மனதாக தேர்ந்தெடுக்கபட்டிருக்கிறார்கள். இந்த பதவிக்கு வர திட்டமிட்டிருந்த சுரேஷ் கல்மாடியின் ஆசியுடன் தேர்ந்தெடுக்கபடிருக்கும்  இவர்கள் தாங்கள்  தேர்ந்தெடுக்கபட்டதில் தவறேதும் இல்லை என்கிறார்கள்.  ஊழல் குற்றம் சாட்டபட்டு வழக்குகளில் சிக்கியிருக்கும்  முலாயம், லாலுபிராசாத் ஜெயலலிதா மயாவதி போன்றவர்கள்  பதவியிலிருந்து ஆட்சிசெய்யும்போது,  இந்திய விளையாட்டு வீரர்களுக்காக நல்லபணிகளை செய்யும் பாநாட் தேர்ந்தெடுக்கபட்டதில் என்ன தவறு? என்கிறார் செளதலா இதை ஆமோதிப்பவர் சுரேஷ் கல்மாடி. சுருக்கமாக சொல்லபோனால் இந்திய ஒலிம்பிக் சங்கம் மீண்டும் சுரேஷ் கலமாடி& கோவின் வசமாகிவிட்டது.
 கடந்த ஆண்டு  ஓட்ட விராங்கனை அஸ்வினி நாச்சியப்பா துவக்கியிருக்கும் “கிளின் ஸ்போர்ட்ஸ் இந்தியா எனற அமைப்பினால்  சர்வ தேச ஒலிம்பிக் கமிட்டிக்கு கல்மாடி அண்ட்கோவினரின் ஊழல்கள் தெரிவிக்கபட்ட பின்னர் அவர்கள் ஒலிம்பிக் சங்க தேர்தல்களில்  பங்குகொள்ளவதை அனுமதிக்ககூடாதாது என கடிதங்கள் அனுப்பபட்டிருந்தன. அதன் விளைவாக  இவர்கள் போட்டியிட கூடாது என்று சர்வதேசத ஒலிம்பிக் கமிட்டியின் நெறிமுறை கமிஷன் அறிவித்திருந்தது. அதைபற்றி கவலைபடாமல் தேர்தலை நடத்தி முடித்துவிட்டது இந்திய ஒலிம்பிக் சங்கம். அதனால் இப்போது சர்வதேச ஒலிமிக் கமிட்டி “எங்கள் விதிமுறைகளுக்கு ஏற்ப தேர்தல்  ஒழுங்காக  நிர்வாகிகளின் தேர்தல் நடத்தபடாவிட்டால் அடுத்த செயற்குழுவில் இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் அங்கீராத்தையே ரத்துசெய்ய வேண்டிய தீர்மானம் கொண்டுவரப்படும் என மிரட்டுகிறது.“ நாங்கள் எந்த ஒலிம்பிக் விதியையும் மீறவில்லை. தேர்தலுக்கு தகுதி பெற்றவர்கள் பங்கேற்று முறையாக நடைபெற்ற தேர்தல்(லஞ்ச குற்ற வழக்கு,ஜெயிலுக்கு போனவர்களுக்கு தேர்தலில் நிற்க தடை என்று விதிகளில் சொல்லப்படவில்லையாம்) என்று செளதால குழுவினர் வாதிடுகிறார்கள்  இதை  நேரில் விளக்கி ஒலிம்பிக் கமிட்டிக்கு சொல்ல இரண்டு உறுப்பினர்கள் ஜெனிவாவிற்கு போயிருக்கிறார்கள்.
,< இந்திய அரசின் விளையாட்டுதுறை அமைச்சர் இது வரை இதுபற்றி  வாய்திறக்கவில்லை.
தார்மீக பொறுப்பு, மரபுநெறிமுறைகள், இவைகளை காற்றில் பறக்கவிட்டுவிட்டு சங்கவிதிகளின் இடுக்குகள் வழியே இப்படி ஒருதேர்தலை இந்திய ஒலிம்பிக் சங்கம் நடத்தி உலக விளையாட்டு அரங்கில் இந்தியாவிற்கு அவப்பெயரை ஏற்படுத்தியிருக்கவேண்டாம்.
சர்வ தேச அளவில் ஒலிம்பிக் சங்கங்களில் இருக்கும் பாலிடிக்ஸ்களுக்கு  இடையே போட்டி இருக்குமானால் நமக்கு தங்கம் நிச்சியம்.>




கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்கள்