28/9/14

கோபுரங்களும் சாய்வதுண்டு.

நேற்று மோடி நியூயார்க்கிக்கில் செப் 11 மெமோரியலில் மலர் பொறிக்கபட்ட இந்தியர்களின் பெயர்களுக்கு மலர் வைத்ததை பார்த்தோம். இந்த நினைவுசின்னத்திற்கு வருபவர்கள் முதலில் அவர்களின் உறவினர், அல்லது தேசத்தினரின் பெயரைத்தான் தேடுகிறார்கள் ஒற்றை மலர் வைக்கிறார்கள்.
செய்தியை பார்த்ததும் கல்கியில் எழுதியது நினைவில் எழுந்தது.
கோபுரங்களும் சாய்வதுண்டு.
உலகமே அதிர்ச்சியில் ஆழ்ந்த செப் 11 2001 அன்று ”இதை நாங்கள் மறக்க மாட்டோம். மன்னிக்கவும் மாட்டோம்” என்று கோபத்துடன் அன்றைய அமெரிக்க அதிபர் தன் உரையில் சொன்னதை சொன்னதை உலகமே பார்த்தது.. 10 ஆண்டுகளுக்கு மேல் ஆனபின்னரும், அதிரடி ஆப்ரேஷனில் பின்லேடனை பிடித்து கொன்ற பின்னரும் இன்றும் அந்த கறுப்பு தினத்தை அமெரிக்கர்களால் மறக்கமுடியவில்லை. நியூயார்க் நகரின் அத்தனை வானாளவிய கட்டிடங்களுக்கிடையே துல்லியமாக தகர்க்க பட்ட அந்த இரட்டை கோபுரங்கள் இருந்த இடத்தில் ஒரு நினைவு சின்னம் எழுந்த்திருக்கிறது. நிகழ்ந்த அந்த விபத்தில் உலக புகழபெற்ற அந்த டவர்களில் வேலை பார்த்து கொண்டிருந்தவர்கள், வேடிக்கை பார்த்து கொண்டிருந்தவர்கள், ஷாப்பிங் செய்துகொண்டிருந்தவர்கள், உணவகங்களில் இருந்தவர்கள், அதே நாளில் மற்றொரு விமானவிபத்திலும் பெண்டகன் அலுவலகத்தில் பலியானோர், மீட்புபணியில் பலியானாவர்கள் என்று மறைந்த போன 3000பேர்களுக்கும் இப்போது ஒரு நினவு சின்னம் அங்கே எழுப்பபட்டிருக்கிறது..
10 ஆண்டுகாலமாக கிரவுண்ட் ஸீரோ என அழைக்கப்பட்டு வந்த அந்த இடம் இனி 9/11 தேசிய நினைவகம் என அழைக்கபடும், 63 நாடுகளிலிருந்து,பெறபட்ட 5200 டிசைன்களிலிருந்து தேர்ந்தெடுக்க்பட்டிருக்கிறது இந்த டிசைன். 8 ஏக்கர் பரப்பில்,பறந்துவிரிந்திருக்கும் பசும் புல்வெளியில் அணிவகுத்து நிற்கும் 400 ஓக் மரங்களுடன் நியூயார்க நகர கான்கீர்ட் காட்டிற்கு நடுவே ஒரு பசுஞ்சோலையாக இதை உருவாக்கியிருகிறார்கள்.
மிகச்சரியாக இரட்டை கோபுரங்கள் இருந்த அதே இடங்களில் இப்போது தொடர்ந்து நீர்வழிந்துகொண்டே இருக்கும் இரண்டு பெரிய தடாகங்கள். அதன் சுற்று சுவர்களின்மேலே சற்றே சாய்வாக அமைக்கபட்டிருக்கும் கரும்பளிங்கு பலகைகளில் விபத்தில் உயிர் நீத்த அனைவரின் பெயர்களும் தங்க எழுத்தில் மின்னுகிறது. பல பெயர்கைன் மேலே புதிதாக வைக்கபட்ட ஒற்றை ரோஜாக்கள் அந்த கருப்பு பளிங்கு கற்களில் இந்திய,- சில தமிழ் பெயர்களைக்கூட பார்க்கமுடிகிறது. இரண்டு நீர்தடாகங்களுக்குகிடையே ஒரு மியூசியம். பூமிக்கடியில் உருவாகிகொண்டிருக்கிறது. பணி இன்னம் முடியவில்லை. அதன் முகப்பு ஒரு கோபுரத்தின் ஒரு பகுதி இடிந்து சாய்ந்து விழுந்த நிலையில் வடிவமைக்கபட்டிருக்கிறது. பின்னணியில் பிரமாண்டமாக எழுந்துகொண்டிருக்கும் புதிய ஒற்றை கோபுரம்.
சாயந்து விழுந்த இரட்டை கோபுரங்களில் ஒன்றின் வடிவில் ஒரு மியூசியம். முதலில் எப்படி இருக்கும் என்பதை புரிந்துகொள்ள அங்கு காட்சியில் வைக்கபடப்போகும் பொருட்கள் சிலவற்றின் மாதிரிகளுடன் ஒரு பிரிவியூ செண்டர் அமைத்திருந்தார்கள். இப்போது மீயூசியம். . மறைந்தவர்களின் உடமைகள், போராடி மடிந்த தீயணைப்பு படையினரின் சீருடைகள், பெயர் பேட்ஜ்கள், மறைந்தவர்களின் குடும்பத்தினர் அளித்த பரிசு பொருட்கள் இப்படி பல. அமைக்கபட்ட எக்ஸாஸ்ட் பைப்புடன் ஒரு ஒரு மோட்டார் சைக்கிள் பார்ப்பவர்களை கவருகிறது.

2012ம் ஆண்டு ஆண்டு செப் 11 பத்தாவது நினைவு நாளான்று அதிபர் ஒபாமா நாட்டுக்கு அர்ப்பணித்த விழாவில் நாள்முழுவதும் கல்வெட்டில் இடம் பெற்றிருக்கும் அத்தனை பேரின் பெயரும் படிக்க பட்டது.. இன்னமும் சில பணி தொடர்ந்து கொண்டிருக்கும் அந்த சதுக்கத்தில் பலத்த பாதுகாப்பு. முன்னமே ஆன்லனைல் பதிவு செய்துகொண்டவர்கள் மட்டுமே விமான நிலையங்களைப் போல தீவீர சோதனைக்கு பின்னர் பார்க்க அனுமதிக்கபடுகின்றனர்..
மறந்து தொலைக்க வேண்டிய ஒரு சோகத்தை ஏன் இப்படி நிரந்திரமாக்கி பார்பபவர்களின் மனதை கஷ்ட படுத்துகிறார்கள் என்று கோபமாக அரசை திட்டும் அமெரிக்கர்களும் இருக்கிறார்கள். சரிதானே.. என நமக்கும் தோன்றினாலும் நீண்ட தூரத்திலிருந்து வந்து மகனின் பெயரை தேடிபார்த்து தடவி அழும் தாயையும், நண்பனின் பெயரை பார்த்தவுடன் இங்கிருந்தே அவரது உறவினருக்கு போன் செய்பவர்களையும், தினசரி யாராவது வைத்துதிருக்கும் பூங்கொத்துக்ளையும் பார்க்கும்போது, திட்டமிட்ட ஒரு தீவிரவாதத்தையும் அதன் உச்சகட்டத்தின் வீபரீதத்தையும் வரும் தலமுறை உணர்ந்துகொள்ள இப்படி ஒரு நினைவுச் சின்னம் அவசியம்தானே என்ற எண்ணம் எழுகிறது.
(கல்கி செப் 13 இதழ்)

24/9/14

நீண்ட நிமிடங்கள்

டெல்லி  மிருக காட்சி சாலையில்  நிகழந்த கொடூரத்தின் செய்திகளைப்பார்த்தபோது சில ஆண்டுகளுக்கு முன் பாங்காங்க் சபாரி யில் எனக்கு நேர்ந்த அனுபவமும் அதை எழுதியதும் நினைவில் வந்தது. 




மெல்லப்போய்க்கொண்டிருந்த கார் சட்டென்று நின்றது. படக்கென்ற சத்ததுடன் அது காரின் முன்புறம் தாவி பானட்டில் அமர்ந்து கொண்டது. காரின் உள்ளே அதுவரை பேசிக்கொண்டே வந்தவர்களின் சப்த நாடியும் ஒடுங்கி விட்டது. டிரைவர் செய்வதறியாது எஞ்ஞினை ஆப் செய்துவிட்டார். ரோடைபார்த்து உட்கார்ந்திருந்த அது மெல்ல திரும்பி பார்த்து காரின் வைப்பரை காலால் நோண்ட ஆரம்பித்தது.பின்சீட்டிலிருந்த உள்ளூர் நண்பர் மெல்ல நழுவி சீட்டின் இடையில் பதுங்குகிறார்.மற்றவர் பயத்தில் நடுங்கிக்கொண்டிருக்கிறார். தாய்லாந்துகார டிரைவர் பையிலிருந்த புத்தர் படத்தை எடுத்துகையில் வைத்துக்கொண்டு கண்களை மூடி அழத்தொடங்குகிறார். முன் சீட்டில் பயத்தில் உரைந்துபோயிருந்த நான் கண்ணாடிக்கு வெளியே சில அங்குல  துராத்தில் குளோசப்பில் தெரியும் அதைப் பார்த்துக்கொண்டிருக்கிறேன். ஒரே அடியில் இந்த கண்னாடியை நொறுக்கினால் அடுத்தவினாடி நாம்காலி என்ற நிலையில் கண்முன்னே கலடைஸ்கோப்பாக மனைவி, குழந்தைகள்.அப்பா, தம்பி எலோரும் வந்துபோகிறார்கள்.செய்ய முயற்சிக்கும் பிராத்தனைகள் எல்லாம் மறந்துபோகிறது.  எங்களுக்கு மரணத்தின் நுனியை தொட்டுகாட்டி கொண்டிருக்கும் அந்த புலி அதைப்பற்றி கவலைப்பாடமல் எழுந்து திரும்பி உட்கார்ந்து ரோட்டை பார்த்துகொண்டிருந்தது.
பாங்காங் நருக்கு வெளியே இருக்கிறது  சபாரி வோர்ல்ட்., டால்பின் ஷோ நடைபெறும் மரையின் லாண்ட், பலவண்ண பறவைகள் நிறைந்த பேர்ட்ஸ் லாண்ட் என180 எக்கரில் பறந்து விரிந்திருப்பது. இயற்கை சுழலில் மிருகங்கள் சுதந்திரமாக திரிகிறது.  தங்களிருப்பிடத்திலிருந்து சட்டென்று வெளியே வரமுடியாத அமைப்பில் கொடிய மிருகங்கள். நட்பாக பழகும் மிருகங்கள் எல்லாம். வாழுமிடம்.  20மைல் நீண்ட அந்த ரோடில்  நமது காரிலேயோ அல்லது அவர்களின் பஸ்லியோ போகலாம். காரைவிட வேகமாகச்செல்லும் நெருப்புகோழி, கார் கண்ணாடிக்கு அருகில் வந்து ஹலோ சொல்லுகிறது. உயரமான ஒலைக் குடைகளின்கீழிருக்கும் ஒட்டைசிவிங்கி மெல்ல வந்து காரின் டாப்பை மூக்கால் தொடுகிறது. கைகெட்டும் தூரத்தில் காண்டாமிருகம் 






இப்படி ஒரு புதிய அனுபத்திலில் அந்த சபாரி பார்க்குக்குள் போனபோது தான் இது நிகழ்ந்தது. டிக்கட்டுடன் தரும் பாதுகாப்பு குறிப்பில் விபத்துகள் நிகழ வாய்ப்பில்லை.அப்படி நேர்ந்தால் பைனாகுலரில் கவனித்துக்கொண்டிருக்கும் மார்ஷல்கள் வந்து மிருகத்தை வெளியேற்றிவிடுவார்கள் என்றும் நாம் செய்யகூடாதவைகளையும் பட்டியிலிட்டிருக்கிறார்கள். அதில் முக்கியமானது கத்தாதீர்கள்காரைவிட்டு இறங்காதீர்கள்.ஹாரன் அடிக்காதீர்கள் போட்டோ எடுக்காதிர்கள் என்பன.

ஐந்துநிமிடத்திற்குள் ஒருவித வினாத ஒலியுடன் வந்தது வெள்ளை வேன். துப்பாக்கிகளுடன் கார்டுகள். வேனுக்குமுன்னே பொருத்தப்பட்ட ஒரு  கிரேன். உள்ளேயிருந்து டிரைவர் இயக்குக்கிறார். எதோ ஒரு வளையத்தை தூக்கிப்போட்டவுடன்  காரின்மேல் புலி எழுந்து நின்றது. உடனே கிரேனிலிருந்து கயிறுடன் தொங்கிய  அரைவளைய கொக்கியை அதன் வயற்றில் மாட்டி இறுக்கி அப்படியே  தூக்கி  அருகிலுள்ள அதனிடத்தில் விட்டுவிட்டார்கள். அது மெல்ல நடந்து போய் தூங்க ஆரம்பித்துவிட்டது 

 இது எல்லாம் நடந்தது ஐந்து நிமிடத்திற்குள் தான்.ஆனால் அது எங்கள் வாழ்க்கையின் மிக நீண்ட............ நிமிடங்கள். அருகில் வந்த அந்த கார்டு  நமது காரின் கண்ணாடியை தட்டி இறக்கச்சொல்லி “ அவர் புதிதாக சேர்க்க பட்டிருக்கும் குட்டி.  சில நாட்களில் பழகிவிடுவார். நீங்கள் பயப்படாமல் போங்கள்”  மற்றவைகளையும் போய்ப் பாருங்கள் என்றார்.  ஆனால் நாங்கள் போனது -சாபரியிலிருந்து வெளியே செல்லும் கேட்டிற்கு.






20/9/14

மோடியை பார்க்க லாட்ரி டிக்கெட்

-அமெரிககாவிலிருந்து ஜனனி ஸ்ரீராம்

இந்தியாவிலிருந்து  அரசியல் தலைவர்கள், பிரதமர் போன்றவர்கள் வரும்போது இங்குள்ள இந்திய சங்கங்கள் வரவேற்பு கொடுப்பதும் கூட்டங்களுக்கும் டின்னர்களுக்கும் ஏற்பாடு செய்வது வழக்கம். ஆனால் இம்முறை  பிரதமர் மோடியின்  வருகைக்கு  மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.  


அனேகமாக எல்லா அமெரிக்க மாநிலத்தில் வசிக்கும்  பல இந்தியர்களும் இந்திய அமைப்புகளும் மோடியின் கூட்டத்தில் பங்கேற்க ஆவலாக இருக்கிறார்கள்.  இம்மாதிரி கூட்டங்களுக்கு நியூயார்க் அல்லது வாஷிங்டன் நகரங்களில்  உள்ள அமைப்புகள் அறிவிப்பு வெளியிடும். ஆனால் இம்முறை மிகப்பெரிய அளவில் பங்கேற்பாளார்களை எதிர்பார்ப்பதால்   எல்லா மாநில இந்திய சங்கங்களின் பிரதிநிதிகளை இணைத்து இண்டோ-அமெரிக்கன் கம்யூனிட்டி பௌண்டேஷன்  என்ற அமைப்பு ஒன்று இதற்காகவே நிறுவபட்டது. 20க்க்கும் மேற்பட்ட தமிழ் சங்களும் இதில் அடக்கம்  இவர்கள்  இந்த வரவேற்புக்கு அமைத்திருக்கும் கமிட்டியில்  அமெரிக்க குஜராத்திகள் அதிகம் என்றாலும் 2 மூஸ்லீம்கள், 2 கிருத்துவர்கள், ஒரு சீக்கியர் என முழு இந்திய முகத்தை காட்டியிருக்கிறார்கள். கமிட்டியில் இருக்கும் ஒரே தமிழர்  அமெரிக்க தமிழ் சங்க தலைவர் பிர்காஷ் எம் ஸ்வாமி.
 இவர்கள் இந்தியசங்களின்  நெட் ஒர்க்கில் தனி வெப்ஸைட் செய்திகள் அறிவிப்புகள் என கலக்கிவிட்டார்கள். 

 வெள்ளை மாளிகைக்கு வரும் வெளிநாட்டு தலைவர்கள் எவரும் இரண்டுநாள் தங்கியதில்லை, மோடி  இருக்கும் 3 நாட்களில் 26 மீட்டிங்கள், வாஷிங்டனில்  ஹோட்டலில் இல்லாமல் வெள்ளை மாளிகைக்கு எதிரிலுள்ள பிளேர் ஹவுஸில் தங்குவது,  இரண்டுநாள் வெள்ளை மாளிகை விஜயம் அதில் ஒரு நாள் ஒபாமா குடும்பத்தினர் தரும் தனி விருந்து.-  என்பதெல்லாம் இங்கு மிகப்பெரிய கெளரவமாக பார்க்கபடும் விஷயங்கள்
 இந்திய பிரதமர் பேசப்போகும் கூட்டத்தில்  பங்குபெறப்போகிறவரகள் பதிவு செய்துகொண்டு அனுமதி பாஸ்கள் பெற வேண்டும் என அறிவித்திருந்தார்கள். நீயூயார்க்கில் மோடி  அமெரிக்க இந்தியர்களிடம் பேசப்போகும் மாடிஸன் சதுக்கத்தில்  30,00 பேர் அமரலாம்.  ஆனால் இது வரை  பதிவு செய்திருப்பவர்கள் 50,000 பேர். அதனால்   (லாட்ரி) குலுக்கல் முறையில் தேர்ந்தெடுத்து  அனுமதி டிக்கெட்களை  வழங்க போகிறார்கள். பதிவு செய்தவர்கள் பிட்ஸ்பர்க் வெங்கடசலாபதியை வேண்டிக்கொண்டிருக்கிறார்கள்.  இப்படி டிக்கெட் லாட்ரி நடப்பது இதுவே முதல் முறை.  பதிவு செய்திருப்பவர்கள் இங்குள்ள படேல்கள்  மட்டும்  இல்லை. எல்லா மாநில இந்தியர்களும். குறிப்பாக  நம்ம ஊர் சாப்ட்வேர் டெக்கிகள் 30-40 வயதுக்காரகள் தான் அதிகம்.  என்கிறார் நீயூயார்க் அருகிலுள்ள டெலவேர் மாநில பகுதி  தமிழ் சங்க தலவர்  திரு முத்துமணி.  கலிபோர்னியா பகுதியில் வாழும் இலங்கை தமிழர்களும் பெருமளவில் பதிவு செய்திருக்கிறார்கள்

 எல்லோருக்கும் மோடி என்னபேசப்போகிறார் என்பதைவிட மோடியை நேரில் பார்க்கவேண்டும் முடிந்தால் ஒரு படம் எடுத்துகொள்ளவேண்டும் என்பதில் ஆர்வமாகயிருக்கிறார்கள். அவர் போடும் அரைக்கை ஜாக்கெட்கள்  பேஷன் ஸெட்மெண்ட் ஆகி விற்று தள்ளுகிறது
நீயூயார்க்கில் ஐக்கிய நாடு சபையில் பேச வரும் மோடிக்கு நம்மூர் ஸ்டைலில் ஒரு பேரணியுடன் வரவேற்பு ஏற்பாடு செய்திருக்கிறார்கள் இதற்காக அண்டை மாநிலங்களிலிருந்து  பல பெரிய பஸ்களில் வரப்போகிறார்கள்.  அதற்கான டிக்கெட்கள் விற்று  தீர்ந்துவிட்டன.

அமெரிக்க சட்ட விதிகளின்படி மதங்களின் சுதந்திரதிற்கு எதிரான கொள்கைகள் கொண்ட வெளிநாட்டவர் என்பதால் 10 ஆண்டுகளாக  விசா வழங்க மறுத்த   தேசத்திற்கு  ஒரு நாட்டின் பிரதமராக  வரவேற்கபடுவதால் அமெரிக்க வாழ் இந்தியர்களின் பெரும் உற்சாகமாக இருப்பது பற்றி  இதுவரை எந்த இந்திய தலைவரின் வருகைக்கும் முக்கியத்துவம் தராத  இங்குள்ள  பத்திரிகைகள் எழுதிக்கொண்டிருக்கின்றன..

 (நன்றி கல்கி 27/09/14 இதழ்)



13/9/14

நாடு திரும்பிய நடராஜர்



ஆஸ்திரேலிய பிரதமர்  டோனி அபோட்டின் சமீபத்திய இந்திய வருகையினால் மிக சந்தோஷம் அடைந்தவர்கள் தமிழ்நாட்டின் அரியலூர் அருகிலிருக்கும் சின்னஞ்சிறிய கிராமமான ஸ்ரீபுரந்தன் கிராம மக்கள்தான். காரணம் அவர்கள் ஊரிலிருந்து பல ஆண்டுகளுக்கு முன்னால் காணாமல் போன 1000 ஆண்டுகள் பழமையான நடராஜார்  சிலையை  அவர் கொண்டுவந்திருக்கிறார் என்பது தான்.
ஸ்ரீபுரந்தன்  அரியலூர்  மாவட்டத்திலிருக்கும் ஒரு மிகச்சிறிய கிராமம். இங்கு  சோழர்கள் காலத்தில் கட்டபட்ட  ஒரு பிரகதீஸ்வரர் கோவில்  இருக்கிறது. அதனுள் நிறுவபட்டு பல நூற்றாண்டுகள்  வழிபடபட்டுவந்த தெய்வம் நடராஜரும் அன்னை சிவகாமிசுந்தரியும். 1970களின் இறுதியில்; போதிய வருவாய் இல்லாதால் அர்ச்சகர் பணிவிலகி போனபின் கோவில் பூட்டப்படுவிட்டது. கிராமத்தின் காளி கோவில் பிரபலமாகிவந்ததால் மக்கள் மெல்ல இதை மறந்தே போனார்கள்.  மீண்டும் திறந்து வழிபடும் ஆர்வத்துடன் இருந்தவர்களுக்கும் போதிய ஆதரவும் உதவிகளும் கிடைக்கவில்லை. இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை காளிபூஜை அன்று இந்த கோவில் முன் கொண்டு வந்து வழிபடும் முறையும் ஒரு முறை அந்த பூசாரியை இந்த பழையகோவிலின் உள்ளிருந்து வந்த ராட்சத தேனி கொட்டிவிட்டதால்  நின்று போயிருந்தது.  ஊரில்  இன்றய தலைமுறையினர்  அந்த கோவிலின் பாரம்பரியத்தையும், அந்த விக்கரகங்களின் பெருமையும் அறிந்திருக்கவில்லை.
2008ம் ஆண்டில்  அருகிலுள்ள சுத்த மல்லி என்ற கிராமத்தின் கோவிலில் இருந்த விக்கரகங்கள் காணமல் போன சமயத்தில்  இம்மாதிரி கோவில்களின் விக்கரகங்களை  அருங்காட்சியகத்தில் பத்திரபடுத்தலாம் என்று யோசனை தெரிவிக்கபட்டிருந்தது. அதற்கான முயற்சியில் தொல்பொருள் துறை இறங்கிய போது  கிராம மக்கள் எங்கள் தெய்வத்தை எல்லையை விட்டு வெளியே அனுப்ப சம்மதிக்க மாட்டோம் என ஒத்துழைக்க மறுத்தார்கள். பாதுகாப்பகாக கோவிலின் நுழைவாயில்களுக்கு சுருக்கி –விரிக்கும் இரும்புகதவுகளை (collapsible gate) போடலாம் என்று பஞ்சாயத்தாயிற்று.   போலீஸின் சிலைதிருட்டுகளை தடுக்கும் பிரிவின் உதவியுடன் அதற்காக கோவிலின் கதவுகளை திறந்த போது அதிர்ச்சி.  உள்ளே இருக்கும் நடராஜர் உள்பட 8 சிலைகளும் காணவில்லை, எப்போது எப்படி திருடு போனது? என்பதே தெரியவில்லை.. இந்த அதிர்ச்சியான செய்தி வெளியானபோது நடராஜர் 9000 கிமீ பயணித்து ஆஸ்திரேலியாவில் கானிபரா  நகரத்தில் தேசிய அருங்காட்சியகத்திலிருக்கிறார் என்பதை அவர்கள் அறிந்திருக்க நியாமில்லை.
சிலை எப்படி திருடபட்டது?
சுபாஷ் கபூர் கடந்த 40 ஆண்டுகளாக அமெரிக்காவில் நீயூயார்க் நகரில் கலைப்பொருட்கள் இறக்குமதி செய்து விற்கும் கடையை நடத்தி வரும் அமெரிக்க இந்தியர்.  உலகின் பல பிரபல மீயூசியங்களுக்கும், கலைச்செல்வங்களை சேகரிக்கும் உலக பணக்கார்களுக்கும் அறிமுகமானவர் ஆனால்  இறக்குமதி என்ற போர்வையில் பாரம்பரிய சிலைகளை கடத்தி விற்பனை செய்வது தான் உண்மையான தொழில் என்பது யாருக்கும் தெரியாது.  உலகின் கண்ணுக்கு இவர் ஒரு செல்வாக்குள்ள, நிறைய விஷய்ங்கள் தெரிந்த  ஆர்ட் டீலர்.
.100 மில்லியன் டாலர்கள் மதிப்பிலான (1மில்லியன்= 10 லட்சம்) 150க்குமேலான  இந்தியாவிலிருந்து பழைய சிலைகளை கடத்தியிருப்பதாக  இவர் மீது வழக்கு போடபட்டிருக்கிறது. உலகம் முழுவதும் இண்டர்போலால் தேடப்பட்டு வந்த இவரை ஜெர்மானிய போலீஸார் கைது செய்து தமிழக போலீசிடம் ஒப்படைத்தது. இப்போது சிறையில் இருக்கிறார், இவருக்கு உதவிய ஆட்களையும் கைது செய்திருக்கிறார்கள். இவர்கள் தந்த ஓப்புதல் வாக்குமூலத்தின் படி குற்ற பத்திரிகை தயாரிக்க பட்டிருக்கிறது.

கபூருக்கு  உலகம் முழுவதுமுள்ள கோவில்களில், அரண்மனைகளில் இருக்கும் பராம்பரிய சின்னங்கள் சிலைகளின் விபரங்கள் அத்துப்படி.  இந்தியாவைத்தவிர பாக்கிஸ்தான். ஆப்கானிஸ்தான்,பங்களாதேஷ்,ஹாங்காங்,இந்தோனிஷியா,துபாய்.கம்போடியா என உலகின் பலநாடுகளில்   இவருக்கு உள்ளுர் எஜெண்ட்கள். தாஜ் மாதிரியான  ஆடம்பர ஹோட்டல்களில் தங்கி தனது ஏஜெண்ட்களிடம் எந்த கோவிலிருந்து எந்த சிலை வேண்டும் என்பதை போட்டோவை காட்டி சொல்லிவிடுவார். அவர்களுக்கு பெருமளவில் பணம் தரப்படும். 28 சிலைகளுக்கு 7 லட்சம் டாலர்கள்   இவருடைய எச் எஸ் பி வங்கி கணக்கிலிருந்து இந்தியாவிற்கு இதற்காகவே மாற்றபட்டிருக்கிறது என்கிறது போலீஸ் குற்றபத்திரிகை.  அந்த ஏஜண்ட்கள் உள்ளூர்  ஆட்கள் மூலம், யாருக்காக செய்கிறோம் என்பது கூட  தெரியாமல் வேலையை முடித்து கொடுப்பார்கள்.  சென்னையில் இவரது எஜெண்ட் அசோகன்  இவர் இந்த பணியை செய்ய ஓப்புகொண்டார். இந்த கோவிலில் பாழடைந்த நிலையில் இருந்தது வசதியாக போய்விட்டது.  முதலில்  அந்த பழைய பூட்டை உடைத்து 3 சிலைகளை அப்புறப்டுத்திவிட்டு பூட்டை மீண்டும்  பூட்டிய நிலையில் இருப்பது போல ஒட்டிவிட்டார்கள். கிராமத்தில் யாருக்கும் சந்தேகம் வரவில்லை என்பதை உறுதிசெய்துகொண்டு சில நாட்களில் ஒரு லாரியில் நிறைய மண்ணை கோண்டுவந்து அருகில்  நிறுத்தி கொண்டு 3 அடி உயரமும் 150கிலோ எடையையும் கொண்ட அந்த நடராஜரை கோவிலிலிருந்து கிளப்பி மண்ணில் புதைத்து கொண்டுபோய்விட்டார்கள்.
நடராஜர் ஆஸ்திரேலியா எப்படி போனார்.?
சர்வதேச சிலைகடத்தல் மன்னன் கபூரின் நெட் ஒர்க் மிகப் பெரியது. வலிமையானது. இந்தியாவிலிருந்து ஒரு சிலை அல்லது கலைப்பொருள் ஏற்றுமதி செய்யப்படவேண்டுமானால் அது பழங்கால அல்லது பாதுக்காக்க பட்ட சிற்பம் இல்லை என்பதை தொல்பொருள் துறையினர் அல்லது அவர்து அங்கீகாரம் பெறப்பட்டவர்கள் சான்றிதழ் அளிக்கவேண்டும். கபூர் தான் திருடும் சிலைகளின் படங்களையும் மாதிரிகளையும் கொடுத்து ஸ்வாமிமலையில் சிற்பிகளிடம்  புதிய சிலைகளை வடிக்கசெய்யவார். ”பழையது மாதிரியான (”antic look சிலகளுக்கு இப்போது மவுசு அதிகம் என்பதால் அதே போல் செய்ய சில சிலைகளைச் செய்ய  சொல்லி அதற்கு சான்றிதழ் வாங்கி  அனுப்பும் போது அதில் ஒன்றாக திருடிய சிலையையும் கலந்து  அனுப்பிவிடுவார்.  நியூயார்க்கில் அவருடைய நிறுவனதிற்கு எது மதிப்பு வாய்ந்தது என்பதை கண்டுபிடிக்க தெரியும். இப்படி கொண்டுவரபட்ட சிலைகளை தனது  நிறுவன கேட்லாக்கில் மிகபழமையான அரிய சிற்பம் என்றும் அது எங்கிருந்து  எப்போது வாங்கி யாரல் விற்பட்டது என்ற சரித்திரங்களை, ஆதாரங்களாக போலியாக தயரித்து ஆவணமாக்கியிருப்பார். அப்படி 2010ம் ஆண்டு இவர்  வெளியிட்டிருந்த கேட்லாக்கிலிருந்த இந்த நடராஜரை ஆஸ்திரேலிய தேசிய மீயூசிய இயக்குனர் பார்த்துவிட்டு நியார்க் வந்து இவரை சந்தித்து விலை பேசி தனது மியூசியத்திற்கு வாங்கியிருக்கிறார். விலை என்ன தெரியுமா? இந்திய மதிப்பில் 31 கோடிகள்.
காட்டிக்கொடுத்தார் கணேசர்
இந்த கொள்ளையில் ஈடுபட்டுள்ள திருடர்களில் ஒருவன் பிச்சுமணி. ஸ்ரீபுரந்தன் நடராஜரை திருடும் முன் சுத்த மலை சிலைகலை திருடிய போது ஒரு நாலு அங்குல அளவில் ஒரு அழகான வினாயகர் சிலையை தனக்காக ஒதுக்கி கொண்டுவிட்டான். அன்னை பார்வதியை வினாயகர் மடியில் இருத்தியிருக்கும் அபூர்வமான சிலை அது.  எப்போதும் அதை தன்னுடன் வைத்திருப்பான். ஒரு நாள் கேரள எல்லையை தாண்டும்போது மதுபானம் இருக்கிறதா என சோதனையிட்ட செக்போஸ்ட் போலீஸாருக்கு இது கோவில் சன்னதி சிலையாக இருக்கும் என்ற சந்தேகத்தில் கைது செய்து தமிழக சிலை திருட்டு பிரிவு போலீசிடம் ஒப்படைத்ததுவிட்டார்கள்.  சுத்த மலை சிலை திருட்டை ஆராய்ந்து கொண்டிருந்த அவர்களுக்கு  அப்போது லட்டுவாக கிடைத்த துப்பு இது. அவர்களது கவனிப்பில் அசோகன் தொடர்பு, ஸ்ரீபுரந்தன் கோவில் திருட்டு வெளிநாட்டிலிருந்து பணம், உடன் வேலை செய்தவர்கள் எல்லாம் வெளிவந்துவிட்டது.
ஆண்டவனே ஆனாலும் ஆவணம் முக்கியம்
தமிழகத்தில்  பெருமளவில் சிலைகடத்தல் நடைபெற்றுகொண்டிருந்ததால்  காவல்துறையின் அந்த பிரிவு விரிவான  ஆராய்ச்சியில்  ஈடுபட்டிருந்தது.  அவர்கள் எதிர் கொண்ட ஒரு விஷயம் ஆஸ்திரேலிய  தேசிய மீயூசியத்தின் ஆண்டுமலர் புத்தகத்தில்  புதிய சேர்க்கை என போடபட்டிருக்கும் நடராஜரின் படம் நமது ஸ்ரீபுரந்தன் கோவிலைச்சேர்ந்தது என்பது. உடனே முழித்துகொண்டார்கள்.    அதை அவர்களிடமிருந்து மீட்க கோர்ட் உத்தரவு வேண்டும். என்பதால்  சட்ட விதிகளின்படி உள்ளூர்  மாஜிஸ்ட்ரேட் கோட்டில் மனுச்செய்தார்கள். நீதிபதி கேட்ட கேள்வி இந்த சிலைதான்  கோவிலில் இருந்தது என்பதற்கு ஏதாவது ஆதாரம் இருக்கிறதா?   தெய்வ சன்னதிகளை படம் எடுக்க அனுமதிப்பதில்லை என்பதால் ஒரு போட்டோ கூட இல்லை. அரசின் அறநிலத்துறையிலும் இல்லை. திகைத்தது போலீஸ்.  செய்திகளை தினசரியில் பார்த்து கைகொடுத்து உதவினர் பாண்டிச்சேரியை சேர்ந்த பிரென்ச் இன்ஸிடியூட் ஆப் பாண்டிச்சேரி என்ற நிறுவனத்தினர். இவர்களின் ஆராய்ச்சையில் ஒரு அங்கம் இந்து கோவில்களீன் சிலைகள். உரிய அனுமதியுடன் தமிழக பண்டைய கோவில்கலையும் சிலைகளை ஆராய்பவர்கள். அவர்களிடம் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட கோவில் சிலைகளின் படங்கள் இருக்கின்றன.  அதன் ஆராய்ச்சியாளர் முருகேசன் இந்த நடராஜரின் படத்தை கொடுத்து உதவினார். அவர் 1958ல் எடுத்தது, 1994ல் மீண்டும் எடுத்ததையும் கொடுத்தார். (இந்த படங்களும்,ஆஸ்திரேலிய மீயூசிய படமும் கபூரின் போனிலிருந்த படமும் ஒத்துபோயிற்று. இதனால்தான் இண்டர்போல் கபூரை கைது செய்யவும் முடிந்தது.) அதை ஏற்று மாஜிஸ்ட்ரேட் ஆஸ்திரிலியே மீயூசியத்துக்கு நோட்டிஸ் அனுப்பினார்.  மத்திய அரசு அதிகாரிகளுக்கு மீயூசியம் இம்மாதிரி சிறிய கோர்ட்  ஆணைகளை ஏற்பார்கள் என்ற நம்பிக்கையில்லை. ஆனால் ஆச்சரியமாக அந்த மியூசியம்  உடனடியாக செயலில் இறங்கி  விசாரணையில் அது திருட்டு பொருள் என கண்டுபிடித்துவுடன்.இந்தியாவிற்கு திருப்பி அனுப்பிவிடுவதாக அறிவித்துவிட்டார்கள். கபூர்நிறுவனத்தின் மீது தாங்கள் செலுத்திய பணத்தையும் நஷ்ட ஈடாக மிகப்பெரிய தொகையையும் கேட்டு வழக்கு போட்டிருக்கிறார்கள்.

இந்த நடராஜரைத்தான் ஆஸ்திரேலிய பிரதமர் தன் கையோடு கொண்டுவந்திருக்கிறார். இந்திய பிரதமரிடம் ஒப்படைத்திருக்கிறார்.  இந்த நடராஜருடன் ஆஸ்திரேலிய பிரதமர் கொண்டுவந்தது ஒரு அர்தநாரிஸ்வரர் சிலை. இது விருத்தாச்சலத்திலிருக்கும் விருந்த கீரிஸ்ரவர் கோவிலில் இருந்து திருடபட்டு ஆஸ்திரேலியாவிற்கு கடத்தபட்ட கற்சிலை. இது ஆஸ்திரேலியாவின் நீயூ சவுத் வேல்ஸ் பகுதி மீயூசியத்தில் இருந்தது..  கர்பக்கிருஹத்தின் பக்கவாட்டு சுவரிலிருந்த இதன் இடத்தில் ஒரு போலியை நிறுவி விட்டு  இதை அபேஸ் செய்திருக்கிறார்கள்.  எப்போது காணாமல் போனது என்று யாராலும் சொல்ல முடியவில்லை. பாண்டிச்சேரி இன்ஸ்டியூட் 1974ல் படம் எடுத்திருக்கிறார்கள். அதற்கு பின்னால் என்றோ ஒரு நாள் இடம் மாற்றப்பட்டிருக்கிறது
.
எப்போது இந்த சிலைகள் கோவிலுக்கு வரும்?
டில்லி வந்து விட்ட நடராஜர் எப்போது ஸ்ரீபுரந்தன் வருவார்?   நாட்டின் பிரதமரே கொண்டுவந்து கொடுத்தாலும்  சில சட்ட சிக்கல்களை   நடராஜர்  சந்திக்கவேண்டியிருப்பதை  தவிர்க்க முடியாது. . சட்டப்படி இவைகள் கோர்ட்டால் ஆணையிட்டு கண்டுபிடிக்க பட்ட திருட்டு சொத்துக்கள். வழக்கு முடியம் வரை இவை கோர்ட்டின் பாதுகாப்பில்தான்.  இருக்க வேண்டும். வழக்கு, மேல்முறையீடுகள் முடிய பல வருடங்கள் ஆகலாம். ஆனால்  இம்மாதிரி வழக்குகளில் சில முன்மாதிரிகள் இருக்கின்றன. பல ஆண்டுகளுக்கு முன்  கும்பகோணம் அருகே உள்ள சிவபுரம் நடராஜர் கடத்தபட்டு மீட்க பட்ட போது  வழக்கு முடியம் வரை அதை மயிலாப்பூர் கபாலி கோவிலில் பாதுகாக்கவும் பூஜிக்கவும் நீதிபதி அனுமதித்தார். அதுபோல் இதற்கு அனுமதிப்பார்கள் என கிராம மக்கள் எதிர்பார்த்துகொண்டிருக்கிறார்கள். பாழடைந்த கோவிலை சீராக்க நிதி திரட்டிக்கொண்டிருக்கிறார்கள்.
நம் கடவுள்கள் பத்திரமாக இருக்கிறார்களா?
 அபின் கஞ்சா போன்ற போதைப்பொருட்களை கடத்துவதைவிட  சிலைகடத்தல் மிக பெரிய லாபத்தைக்கொடுக்கும் பிஸினஸ் என்பதால் உலகின் பல இடங்களில் கபூர்கள் இயங்கிகொண்டிருக்கிறார்கள். இந்தியா ஒரு  முக்கிய டார்கெர்கெட். தமிழக காவல்துறையின் சிலைகடத்தல் தடுப்பு  பிரிவு கடந்த சில ஆண்டுகளாக சிறப்பாக இயங்கி வருகிறார்கள்.  இப்போது 28 சிலைகளை மும்பரமாக தேடிக்கொண்டிருக்கிறார்கள். 5  சிலைகள் மீயூசியங்களில் இருப்பதை கண்டுபிடித்துவிட்டார்கள்.  இவர்கள் சந்திக்கும் பெரிய பிரச்னை  மாநிலத்தில் இருக்கும் 45000 கோவில்கள். இதில் பலவற்றில் சிற்பங்களுக்கும் சிலைகளுக்கும் போட்டோக் களோ விபரங்களோ இல்லை. காணாமல் போனால்  அடையாளம் சொல்லக்கூட முடியாது.  இவர்கள் முயற்சியில் ஒரு 900 ஆண்டு பழமையான நடராஜர் சிலையும் ஒரு1000 ஆண்டு பழமையான சம்பந்தர் சிலையும் வெளிநாட்டு மியூசியத்தில் இருப்பதை கண்டுபிடித்திருக்கிறார்கள். அவைகள் தமிழ்நாட்டிலிருந்து கடத்த பட்டிருக்கும் தொன்ம சிலைகள் என நம்புகிறார்கள்.  ஆனால் எந்த கோவிலுடையது என்பது தெரியவில்லை. அது தெரியாமல், அதை நீருபிக்காமல்  அவைகளை மீட்க முடியாது. அந்த கோவில்களை கண்டுபிடிக்க பொதுமக்களின் உதவியை கேட்டு  திரு பொன் மாணிக்கம் டிஐஜி அறிவிப்பு வெளியிட்டிருக்கிறார். (அவசியமானல் போலீஸ் அறிவிப்பை பாக்ஸில் போடாலாம்-தந்தி 7/9/14)
ஸ்ரீபுரந்தன் நடராஜர். கூடவே இருந்து காணமல் போன அம்பிகை இப்போது அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறார்.  நல்ல வேளையாக விற்பனை செய்யப்படுமுன் அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்பு துறை கைபற்றிவிட்டது.  இந்தியா கொண்டுவர முயற்சிகள் துவங்கியிருகின்றன. உலகம் சுற்றியபின் ஆண்டவன் வந்துவிட்டார். அம்பிகை எப்போது வருவாரோ? .
அரும் சிலைகளும் கலைப்பொருட்களும்  வெளிநாடுகளுக்கு கடத்தபடுவதும், மீட்கபடுவதும்  நீண்ட நாட்களாக நடைபெற்றுவரும்  விஷயங்கள். ஆனால் ஒரு நாட்டின் பிரதமர் நல்லெண்ண பயணத்தின் போது கொண்டுவந்து தருவது இதுவே முதல் முறை.  நமது பிரதமர்  இதற்காக நன்றி சொன்ன போது  டோனி அபோட் சொன்னது ”இந்தியர்களின்  கோவில் வழிபாட்டு முறைகளை நாங்கள்  அறிவோம். அவற்றை மதிக்கிறோம்”  

5/9/14

ஆசிரியர் தினம்




இன்று ஆசிரியர் தினம்.  ஒரு ஆசிரியரைப்பற்றி இன்னொரு ஆசிரியர் எழுதியிருப்பது இது.  இதை என் சுவடுகளில் பதிவு செய்வதில் சந்தோஷமும் பெருமையும் அடைகிறேன் 
i



05.09.2014
`இன்று’ டன் ` நான் – 21
ஆசிரியர் தினம்!
தாயுமானவன்! தந்தையானவன்!
எனக்கு ஆசிரியர்கள் யார்?
பள்ளி ஆசிரியர்களை விட எனக்கு வாழ்க்கையை சொல்லிக்கொடுத்த பத்திரிகை ஆசிரியர்கள் தான்!
பள்ளிக் காலத்திலிருதே நான் மானசீகமாக வணங்கிய ஆனந்த விகடன் நிறுவன ஆசிரியர் எஸ்.எஸ்.வாசன், நான் ரசித்த படித்த கல்கி ஆசிரியர் அமரர் கல்கி! என்னை சின்ன வயதில் பத்திரிகை படிக்கத் தூண்டிய `கல்கண்டு’ ஆசிரியர் தமிழ் வாணன். குமுதம் ஆசிரியர் அமரர் எஸ்.ஏ.பி. ஆசிரியர் குழுவிலிருந்து என்னை கை தூக்கி விட்ட குமுதம் இணையாசிரியர் ரா.கி.ரங்கராஜன், எனக்கு புதிய நாமகரணம் சூட்டிய குமுதம் இணையாசிரியர் ஜ.ரா.சுந்தரேசன் (பாக்யம் ராமசாமி) என்னை பத்திரிகை உலகில் பிரசவித்த மாலன், அவர் பெற்றெடுத்த குழந்தையை ஊருக்கெல்லாம் அறிமுகப்படுத்திய அன்றைய ஆனந்த விகடன் ஆசிரியர் எஸ்.பாலசுப்ரமணியன் இவர்கள் அனைவருக்கும் என் வணக்கங்கள்!
முதலில் என்னை `பெற்றெடுத்த தாய்’ மாலன்!
என்ன ஆகும் எனது வாழ்க்கை என்றிருந்த இளமை பருவம் அது!
படிப்பில் நான் அத்தனை கெட்டி இல்லை!
சினிமா, பத்திரிகை இரண்டும்தான் எனக்கு வெறி!
எந்த பத்திரிகை கிடைத்தாலும் படிப்பேன்!
இப்போது ப்ளஸ் டூ மாதிரி அப்போது பி.யூ.சி!
நான் டாக்டராக வேண்டுமென்கிற கனவில் என் தாத்தா என்னை சயன்ஸ் குருப்பில் சேர்த்துவிட்டார்!
குருடனை ராஜ முழி முழிக்க சொன்ன கதைதான்!
விளைவு நான் பி.யு.சி பெயில்!
இவன் எதற்கும் லாயிக்கில்லை என்று ஒதுக்கப்பட நிலையில் அன்று நான்!
மனதிற்குள் மட்டும் ஒரு உறுதி!
நான் இறந்தால் அது பத்திரிகைகளில் செய்தியாக வேண்டும்!
இவன் `திருடன்’ என்று வரலாம்!
`திறமையானவன்’ என்றும் வரலாம்!
எது எப்படியோ என்னை ஊருக்கு தெரிய வேண்டும்!
அப்போது மேற்கு மாம்பலம் சீனுவாசா தியேட்டர் அருகே இருந்த வடிவேல்புரம் என்கிற தெருவில் நாங்கள் ஜாகை!
என்னை அடையாளப்படுத்திக் கொள்ள ஒரு கையெழுத்து பிரதி துவங்கினேன்!
பெயர் `வானவில்’
நான் எழுதுவேன்! என் அப்பா நகல் எடுப்பார்!
ஒரு பத்திரிகை எடுத்து, ஒரு விட்டிற்கு ஒரு நாள்!
படித்துவிட்டு மாலையில் திருப்பித் தரவேண்டும்! வாடகை 10 காசுகள்!
அப்போது சாவி ஆசிரியர் இளைஞர்களுக்காக ஒரு பத்திரிகை துவங்கியிருந்தார்! `திசைகள்’. ஆசிரியர் மாலன்!
அதற்கு முன்பே மாலன் சாவியில் தொடர்ந்து எழுதி வந்த அரசியல் கட்டுரைகள்! உலக செய்திகளை அலசும் `டைனிங் டேபிள்’, தமிழன் என்கிற பெயரில் அவர் எழுதி வந்த பகிரங்க கடிதங்களினால் அவர் எழுத்தில் கிறங்கி போயிருந்த காலம்!
`திசைகள்’ பத்திரிகைக்காக இளைஞர்கள் தேர்வு செய்யப்பட்டு, அதன் வெளியிட்டு விழா தி.நகர் வாணிமகாலில் கோலகலமாக நடந்தது!
தேர்ந்தெடுக்கப்பட்ட இளைஞர்கள் படங்கள் முதல் பிரதியில்!
அதில் அறிமுகமானவர்கள் இன்றைய சினிமா இயக்குனரான வஸந்த் (வீரப்பன்)! எழுத்தாளர் கார்த்திகா ராஜ்குமார்! பட்டுக்கோட்டை பிரபாகர்!
இந்த முகநூலில் அனுராதா கிருஷ்ணசாமி என்றிருக்கும் `ஷ்யாமா’! இவரது `ஷ்யாமாவின் டைரி’ முதல் இதழிலேயே துவங்கிவிட்டது! முகநூலில் இருக்கும் பிரபல கவிஞர், எழுத்தாளர் கல்யாண் குமார்! ஒவியர் அரஸ், இன்றைய திரையுலக பிரபலம் யூகி சேது (அப்போது அவர் யூகி தமோரஸ்!),சமீபத்தில் மறைந்த கைலாசம்(கே.பாலசந்தரின் மகன்) எல்லோர் படங்களும் அந்த முதல் பிரதியில் இருந்தது.
விழாவிற்கு போயிருந்தேன்! ஏக்கத்தோடு!
நான் மேடையில் இல்லையே என்று உள்ளுக்குள் ஒரு அழுகை!
`திசைகள்’ வார இதழ்! இரண்டு இதழ்கள்
வெளி வந்த சமயம்!
அப்போது அண்ணா சாலையில் இருக்கும் அரசினர் கலைக் கல்லூரி வளாகத்தில் புத்தகக் கண்காட்சி நடக்கும்!
வாங்க காசில்லாவிட்டாலும் புத்தகங்களை பார்க்கவாவது அங்கே போய் வலம் வருவேன்!
இம்முறையும் போனேன்! கையில் என் கையெழுத்துப் பிரதி!
வலம் வரும்போது, அங்கே அந்த தம்பதிகளை கண்டேன்!
மாலன் அவர் மனைவி சரஸ்வதியுடன் நடந்து கொண்டிருந்தார்!
கதாநாயகனை கண்டதும் ஒடும் பாமர சினிமா ரசிகனைப் போல் அவரருகே ஒடினேன்!
பவ்யமாக நின்றேன்! அன்பாக பார்த்தார்!
கையிலிருந்த கையெழுத்து பிரதியை நீட்டினேன்!
அதன் அட்டையைப் பார்த்தவுடனேயே அவர் கண்கள் மகிழ்ச்சியால் விரிந்தது!
புருவங்களை தூக்கி வியப்போடு என்னை பார்த்தார்!
இதை நான் படிக்கணும்! நாளை இதை `திசைகள்’ அலுவலகத்தில் வந்து வாங்கிக்க முடியுமா!
பேச வார்த்தை வரவில்லை! சந்தோஷ உணர்ச்சிகளில் தொண்டைக்குழியில் சிக்கிய வார்த்தைகள் வெளி வர மறுத்தது!
தலையாட்டினேன்!
அடுத்த நாள் மாலை நான் சாவி அலுவலகத்தில் அவரை சந்தித்தேன்!
அதற்குள் அந்த பத்திரிகையை அவர் முழுவதுமாக படித்து முடித்திருந்தார்!
என்ன கேட்டார்! என்ன பதில் சொன்னேன்!
தெரியாது!
அவர் பேசிய விதம்! என்னை வேலைக்கு எடுத்துக் கொள்ளப்போகிறார் என்பது உறுதியான உற்சாகம்!
எதுவுமே என் காதுகளில் விழவில்லை!
ஏழைக் குடும்பத்து ஆபிரகாம் லிங்கன் அமெரிக்க ஜனாதிபதி ஆனதைப் போல!
பாமர லால்பகதூர் சாஸ்திரி இந்திய பிரதமரானதைப் போல!
அந்த மனநிலையில் நான்!
சம்பளம்? அதுவா முக்கியம்!
இவருடன் வேலை செய்யப்போகிறேனே அது போதாதா!
அடுத்த நாளே திசைகள் பத்திரிகையின் உதவி ஆசிரியன்
மூன்றாவது இதழில் ரங்கராஜன் (உதவி ஆசிரியர்) என்று என் புகைப்படத்தையும் வெளியிட்டார்!
அவர் கொடுத்த சுதந்திரம்!
கடிந்து கொள்ளாமல் வேலை வாங்கிய பாங்கு!
அப்போது அவர் பெஸண்ட் நகரில் இருந்தார்! அவர் ஒரே மகன் சுகன்! கைக்குழந்தை!
அந்த வீட்டிற்கு அழைத்துப் போனது!
அங்கே பல நாள் பழகியதைப் போல் அவர் மனைவி சரஸ்வதி தாயைப் போல அரவணைத்து சோறு போட்டது!
பிரம்பால் அடித்து போதிக்கவில்லை இந்த ஆசிரியர்!
பாசப் பிணைப்பால் என்னைப் பக்குவப்படுத்தினார்!
பிறகு என் திருமணம்! காதல் திருமணம்!
பெண் வீட்டார் வரவில்லை!
அப்போது மனையில் அமர்ந்து திரு மாலன் திருமதி சரஸ்வதி மாலன் என் மனைவியை மனதால் சுவீகரித்து கொண்டு, அவளை மகளாக மடியில் அமர வைத்து, எனக்கு தாரைவார்த்தவர்கள்!
அதுவரையில் மாலனுக்கு மாணக்கனாக இருந்த நான் (மரு) மகனானேன்!
என் மனைவி இறந்த போது `எங்களுக்கிருந்த ஒரே மகளையும் பறி கொடுத்துவிட்டோமே’ என்று மாலன் – சரஸ்வதி அழதார்கள்!
தாயுமானவர் தந்தையானவர்!
(படத்தில் என் முதல் புத்தக வெளியீட்டு விழாவில் பாரதிராஜா-மாலன் - கமல்ஹாசன்)
LikeLike ·  · 
  • 15 people like this.
  • Karthika Rajkumar nice Sudangan,!,,in your marriage a group of Thisaigal team was with you, including me...we were there to do our part as 'Mappilai thozargal" , did you remember that? Your marriage is a " kalakkal "one many still remembering that for the excitements...
    32 mins · Like · 3
  • Vedha Gopalan கதாநாயகனை கண்டதும் ஒடும் பாமர சினிமா ரசிகனைப் போல் அவரருகே ஒடினேன்!
    பாமர லால்பகதூர் சாஸ்திரி இந்திய பிரதமரானதைப் போல!
    அந்த மனநிலையில் நான்!
    ...See More
    31 mins · Like · 2
  • Suresh K Perumalsamy உங்களின் நன்றி உணர்வு பெருமைக்குரியது.
    பத்திரிகை உலகில் பன்முக தன்மை கொண்ட வெகு சிலரில் நீங்களும் ஒருவர். உங்களின் எழுத்து ப் பணி தொடர வாழ்த்தக்கள்.
    ...See More
    24 mins · Like · 1
  • Pitchumani Sudhangan தற்சயம் எங்கு பணிபுரிகீர்கள்! உங்களைப் போன்றவர்களின் இதயத்தில்!
    24 mins · Like · 2
  • Suresh K Perumalsamy எங்கள் இதயத்தில் என்றும் உங்களுக்கு இடமுண்டு அய்யா
    21 mins · Like · 2
  • Vedha Gopalan திசைகள் இதழ் ஒன்றை பட்டுக்கோட்டை பிரபாகரும் கார்த்திகா ராஜ்குமாரும் தயாரித்தபோது அதில் "ஞாயிறுகள் இவர்களுக்காக" என்று ஒரு உருக்கமான பகுதியை எனக்கும என் கணவருக்கும் அளிக்க மாலன் ஒப்புக்கொண்டார்! நமக்கெல்லாம் ஞாயிறுகள் இனிக்கும். பார்வை ./.கேட்கும் திறன...See More
    10 mins · Edited · Like · 1
  • Vedha Gopalan தேதியில்லாத டயரி வரிக்கு வ்ரி சுவாரஸ்யம். ஆமாம் வெளியீட்டு விழவுக்கு ஒரு பிரபலத்தை அழைப்பதே பெரும்பாடு! எப்படி இந்த காமபினேஷன்!
    12 mins · Like · 1
  • Pitchumani Sudhangan இது மேடையில் ஒரு பகுதி! அந்தப் பகுதியில் இந்தியன் வங்கி கோபாலகிருஷ்ணன், வைரமுத்து, நெல்லைக் கண்ணன், மலைச்சாமி!
    10 mins · Like · 1
  • Vedha Gopalan ayyyooodaa!!
    2 mins · Like · 1
  • Ramanan Vsv