15/11/14

ஒரு உடைந்த சுவரும் இணைந்த தேசங்களும்


வரையறுக்கபட்ட எல்லைகளை  நிர்ணயக்க நிறுவப்பட்ட சுவர்கள் பாதுகாப்பின் அடையாளம். என்பதை சரித்திரம் நமக்கு சொல்லுகிறது. ஆனால்  உடைக்க பட்ட ஒரு சுவற்றின் வெள்ளி விழாவை ஜெர்மனி  இந்த ஆண்டு  அரசு விழாவாக கொண்டாடுகிறது
இரண்டாம் உலகபோர் முடிந்தபின் வெற்றிபெற்ற நாடுகள் ஜெர்மனியை பங்குபோட்டுபிரித்துகொண்டன. ஒரு பகுதி கம்னியூச சித்தாந்தத்தை நிலைநிறுத்திய ரஷ்யாவும் மற்றொன்று நேசநாடுகள் என்று தங்களை அழைத்துகொண்ட அமெரிக்கா, இங்கிலாந்து பிரான்ஸ் எடுத்துகொண்டன.  இந்தபகுதி மேற்குஜெர்மனி,என்றும் சோவியத்தின் கட்டுபாட்டிலிருந்த பகுதி கிழக்கு ஜெர்மனி என்றும் அழைக்கபட்டுவந்தது. ஒரே நாட்டு மக்கள் பிரிக்கபட்டனர். என்பது மட்டுமில்லை, தலைநகரான பெர்லின் நகரத்தையும் பிரித்துகொண்டார்கள். பங்காளிகளின் சண்டையில் தேசமும், நகரமும் நான்கு துண்டுகளாகின. நேச நாடுகள் ஒவ்வொன்றும்  ஒவ்வொரு பகுதியை சொந்தம் கொண்டாடி தங்களது ராணுவத்தை செக்போஸ்ட்களில் நிறுத்தியிருந்தன.  கம்யூனிச கட்டுபாட்டில் இருந்த  ஜெர்மனியார்கள்,  சுதந்திர காற்றை சுவாசிக்க மறுபக்கத்துக்கு  நகர துவங்கினார்கள் ஒரே ஆண்டில் 35 லட்சம்பேர் கட்டுபாடுகளை மீறி தப்பித்துவிட்டார்கள்  ராணுவ கெடுபிடிகளினால் இவர்களை நிறுத்த முடியவிலை. அதன் விளைவாக   அரணாக ஒரு சுவரை எழுப்பியது சோவியத் ரஷ்யா.   பெரிலின் சுவர் என அறியபட்ட இதற்கு கிழக்கு ஜெர்மனி நிர்வாகம் இட்டிருந்த பெயர் பாசிசஸ்ட்களிடமிருந்து மக்களை காக்கும்  ”பாதுகாப்பு அரண்”. . மேற்குஜெர்மனி அரசு  அழைத்த பெயர் ”அவமானத்தின் சின்னம்”

1961ஆம் ஆண்டு ஒரு ஆகஸ்ட் மாத நள்ளிரவில் எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் ரஷ்யா தங்கள் எல்லையாக அறவிக்கபட்டிருந்த பகுதியில் கம்பி முள் வேலிகளை அமைத்து, அடுத்த சில நாட்களிலேயே வலுவான கான்கீர்ட் சுவற்றை எழுப்பினார்கள். இந்த சுவர் ரஷ்ய எல்லைக்கோடு முழுவதிலும் எழுப்பட்டது.  நாட்டின் எல்லையின் ஒருமுனையில்  துவங்கிய சுவர்  பெர்லின் நகரின் நடுவே, வீதிகள்  வீடுகள், பள்ளிகள்  அலுவலகங்கள்  எல்லாவற்றையும் மட்டும் வெட்டிப் பிரிக்கவில்லை  உறவுகளையும் நட்புகளையும் குடும்பங்களையும் பிரித்தது.  நகரின் மறுபகுதியில் வசித்த பெற்றோர், ஒரே இரவில் மகனுக்கு  எட்டிகூட பார்க்கமுடியாத அன்னிய நாட்டினராகி போயினர்..  பெர்லின் நகரின்  அழகான தூண்களுடன் நிற்கும் பிரம்மாண்டமான வாயில் பிராண்டன்பர்க் கேட். அதன் முன்னும் சுவர் எழுந்தது. 

 நாட்டின் எல்லைகோட்டில் 156 கீமிக்கு 13 அடி உயரத்தில் எழுப்பபட்ட அந்த சுவர், பெர்லின் நகரின் வழியே மட்டும் 27 கீமிக்கு சென்றது. அதன் அருகில் நூறு மீட்டர் இடைவெளியில். மற்றுமோர் சுவர். இடைவெளியில் பல இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் தப்ப முயற்சித்தவர்கள் சுடபட்டார்கள்.. பலர் இப்படி இறந்துவிழுந்ததால் அந்த சுவரின் இடைவெளிப்பகுதி   ”மரணபடுகுழி” என அழைக்கபட்டது. இரவுபகலாக காவல். இரவெல்லாம் சுழலும் பெரிய ஒளிவிளக்கு. ஆனாலும் நம்பிக்கையை கைவிடாது சுரங்க வழி, சிறிய விமானம், பலூன்கள் போன்றவைகளில் தப்பிக்க முயன்று தோற்றவர்களின் சோக்கதைகள் ஏராளம்.
 குடும்பத்தினருடன் இணைய, நல்ல வேலைதேடி சுதந்திரமாக வாழ என  இந்த சுவர் எழுப்பும் போது தப்பிக்க முயன்றவர்கள 5000பேர்.  இறந்தவர்கள் 200க்கும் மேல். பலர் சரணடைந்து கைதியாக வாழ்ந்தார்கள்.  இந்த அவலம் 28 ஆண்டுகள். தொடர்ந்தது, சுவரின் மறுபக்கம்  நமக்கு மறுக்கபட்ட சொர்க்கம் என கிழக்கு பகுதி மக்கள் ஏங்கிகொண்டும், நம்முடைய நாட்டை அநியாமாக பிரித்துவிட்டார்கள் அரக்கர்கள் என மேற்குபகுதி மக்கள் பொருமிக்கொண்டுமிருந்தார்கள். 
1980களின் இறுதியில்  சோவியத் யூனியனில் எழுந்த சுதந்திர சூறவளி,, அன்றைய அமெரிக்க பிரதமர் ரீகனின் வெளிப்படையான மேற்கு ஜெர்மனியின் நிலைக்கு ஆதரவு,  உச்சகட்டத்தை அடைந்திருந்த மக்களின் கோபம் எல்லாம் சேர்ந்து கனிந்து கொண்டிருந்தது. , புரட்சி வெடித்துவிடுமோ என்ற நிலையில் கிழக்கு ஜெர்மனி நிர்வாகம்  எல்லைகளை கடக்க மக்களுக்கு தடையில்லை என 1989 நவம்பர் 9ம் தேதி அறிவித்தது.  அறிவிப்பை ரேடியோவில் கேட்ட  அந்த சந்தோஷமான கணத்தில்  மக்கள் செய்ய ஆரம்பித்த காரியம்  அவமான சின்னமான அந்த சுவரை இடித்தது தான். பெரிய இயந்திரங்களை வைத்து அரசாங்க அலுவலர்கள் செய்ய வேண்டிய பணியை அதற்காக காத்திராமல். வீட்டிலிருந்து சுத்தியல் கடப்பாரை எல்லாம்  கொண்டுவந்து இடிக்க ஆரமபித்துவிட்டார்கள். ஆளுக்கு ஒரு சின்ன பகுதியை வீட்டிற்கு கொண்டுபோய்விட்டார்கள்.  இன்றும் பல ஜெர்மானியர்களின் வீட்டில் ”இது பெர்லின் சுவற்றில் நான் உடைத்ததாக்கும்” என  காட்ட ஷோகேஸ்களில் வைத்திருக்கிறார்கள்.
 .
 அந்த நாளைத்தான் 25 ஆண்டுகள் கழித்து  வெள்ளிவிழாவாக கொண்டாடுகிறார்கள்.  மக்கள் உடைத்ததுபோக  பெர்லின் நகரில் ஒருபகுதியில் இருந்த சுவரையும் ஒரு கண்காணிப்பு கோபுரத்தையும் நினைவுச்சின்னமாக அறிவித்து பாதுகாக்கிறார்கள்.  அங்கு நாட்டின் அதிபர் திருமதி ஏஞ்சலா மெர்கலும் அவரது அமைச்சர்களும் வெள்ளை ரோஜா மலர் அஞ்சலி செலுத்தினார்கள். நகரின் பெருமையான பிராண்டன்பர்க் கேட் என்ற நுழைவாயிலின் முன்னே  ஒளிவெள்ளத்தில்  ஆராவார விழா..  ஆயிரகணக்கான மக்கள். ஒவ்வொரு குடும்பத்திலும் இந்த சுவரினால் ஒரு கண்ணீர்கதை இருக்கும்.  நகர் முழுவதும் இடிக்கபட்ட சுவரின் பகுதிகளில்  நிறுத்தபட்டிருந்த ஸ்டீல் குழாயிலிருந்து ஒளியூட்டபட்ட வெள்ளை ஹீலியம் பலூன்கள் ஒவ்வொன்றாக மக்களின் கரகோஷத்துடன் வானில் பறக்க விடப்பட்டது. விழாவில் முன்னாள் ரஷ்ய அதிபர் கோர்ப்சேவ் பங்க்கேற்றார்.
நாட்டின் அதிபர் ஏஞ்சலா மெர்கல்  பேசும்போது சொன்னது.” இந்த இடிந்த சுவர் சொல்லும் உண்மை - மனிதர்களின் கனவுகள் ஒரு நாள் பலிக்கும்” இவர் தன் இளமைகாலத்தை கிழக்கு ஜெர்மனியில் கழித்தவர்,
அதிகாரத்தை காட்ட அரசினால் எழுப்பட்ட  சுவர் ஒன்று, மக்களிடம். எழுந்த சுதந்திர தாகத்தால் மக்களாலேயே இடிக்கபட்டது
இன்று வலிமையான பெர்லின்  சுவர் இல்லை. ஆனால் அதைவிட மிக வலிமையான ஒருங்கிணைந்த ஜெர்மனி உருவாகியிருக்கிறது. 
23/11/14 கல்கியிலிருந்து 
  



13/11/14

நேருவின் ஆட்சி

நாளை அமரர் நேருவின் 125 பிறந்த நாளை ஆளுவோரும், ஆண்டவர்களும் தனித்தனியாக கொண்டாடுகிறார்கள். அந்த நாளில் என்னுடைய ” நேருவின் ஆட்சி -பதியம் போட்ட 18 ஆண்டுகள்” என்ற புத்தகத்தத்தை ஸிக்ஸ்த் சென்ஸ் பதிப்பகம் வெளியிடுகிறது. மற்ற விபரங்களை அவர்கள் விரைவில் அறிவிப்பார்கள். 

10/11/14

உதைத் திருவிழா

கிரிக்கெட் விளையாட்டுக்கும், அதன் வீர்ர்களுக்கும் கிடைக்கும் புகழும் பணமும் மற்ற விளையாட்டுகளுக்கு கிடைப்பது இல்லை. அதற்கான முயற்சிகளும் எடுப்பதில்லை. என்பது கடந்த சில ஆண்டுகளாக நாம் கேட்கும்  குரல். இப்போது நமது புட்பால் வீர்ர்களுக்கும் அத்தகைய வாய்ப்புகள்  உருவாகியிருக்கிறது.  கிரிக்கெட் இன்று ஒரு பணம்காய்க்கும் மரமாக வளர முக்கிய காரணம் ஐபிஎல்.  ஒரு  விளையாட்டை எப்படி வெற்றிகரமான பிஸினஸாக செய்யலாம் என்பதை செய்து  செய்துகாட்டியவர்கள் இவர்கள்.
இப்போது அதைப்போல கால்பந்தாட்டத்தையும் செய்ய, சில ஆரம்ப பிரச்னைகள், சண்டைகளுக்கு பின்னர்  ஐபிலை போல  இந்தியன் சூப்பர்லீக் உருவானது.(ஐஎஸ்எல்) இதை நிர்வகிக்க ஒரு கம்பெனியின் பாணியில் அமைக்கபட்டிருக்கும் புட்பால் ஸ்போர்ட்ஸ் டெவல்ப்மெண்ட். டின்  தலைவர் திருமதி நீதா அம்பானி. அடுத்த 15 ஆண்டுகளுக்கு  இந்த நிறுவனம் நடத்தும் அத்தனை மேட்ச்களின், விளம்பரம், டிவிஓளிபரப்பு, போன்ற சகல் உரிமைகளையும்  700கோடி களுக்கு வாங்கியிருக்கிறது ரிலெயன்ஸ் நிறுவனம்.

இந்த ஐஎஸ் எல்லின் நோக்கம்   புதிய லீக் டீம்களை அமைத்து,  அந்தடீம்கள்  உலக புகழ்பெற்ற ஆட்டகார்களை  ஏலத்தில் எடுத்து  அவைகளுடன் நம் வீர்ர்களும் இணைந்து விளையாடும் மேட்ச்களினால் இந்திய கால்பந்துவிளையாட்டின் தரத்தை உலக தரத்துக்கு உயர்த்தும் என்று அறிவிக்கபட்டிருக்கிறது. அறிவிக்கபடாவிட்டாலும் புரிந்து கொள்ளவேண்டிய விஷயம் இதில் இருக்கும்  ’பணம்’. விளையாட்டுவீர்ர்கள், லீக்கின் உரிமையாளர்கள், விளையாட்டு நடக்கும் நகரிலுள்ள கால்பந்து சங்கங்கள், உலகெங்கும்  டிவியில்  மாட்சுகளை ஒளிபரப்ப உரிமை பெற்றிருக்கும் நிறுவனங்கள் அனைவருக்கும் பெரும் அளவில் பணம் கொட்டப்போகிறது.
அதில் எட்டு நகர அணிகளுக்கான உரிமை ஏலத்தின் மூலம் முடிவு செய்யபட்டது. . கிரிக்கெட் பிரபலங்களும்,சினிமா நடிகர்களும்,  அணிகளை வாங்கியுள்ளனர். சில அணிகளில் உள்ளூர் நிறுவனக்களுடன் வெளிநாட்டு கால்பந்து லீக்களும் பங்குதாரர்களாகயிருக்கின்றனர். மிக்குறுகிய காலத்தில் இந்த ஏல அறிவிப்பின், முடிவுகளின் மூலம் ஐஎஸ்எல் மிக பணக்கார நிறுவனமாகியது.
சச்சின் டெண்டூல்கர் கொச்சி அணியையும் சவுரவ் கங்கூலி கொல்கத்தா அணியையும் வேறு சிலருடன் இணைந்து வாங்கியுள்ளனர். சென்னை அணியின் உரிமையாளர்கள் இந்தி நடிகர் அபிஷேக் பச்சன், கிரிக்கெட் கேப்டன் டோனி கெளஹாத்தி அணியை ஜான் ஆப்பிரஹாம்,ரந்தீர்கபூர், ஹிர்திக் ரோஷன்  இணைந்து ஏலத்தில் எடுத்திருக்கிறார்கள்

அக்டோபர் முதல் டிசம்பர் வரை 8 இந்திய நகரங்களில் நடக்கும் 61 மேட்ச்களில் உலக கோப்பை கலபந்து விளையாட்டில் பங்கேற்க தகுதி பெற்ற  49 வீர்ர்கள் இந்த தொடரில் பங்கேற்கிறார்கள். விளையாட்டு தொடரை 10 நாடுகளில் ஸ்டார் நேரிடையாக ஒளிபரப்புகிறது.
 ஒவ்வொரு டீமிலும்  22 ஆட்டகார்கள். இவர்களில்; 7 வெளிநாட்டு வீர்ர்கள், 14 இந்திய வீர்ரகள். ஒரு சர்வதேச புகழ்பெற்ற அடையாள” ஆட்டவீர்ர், இவர்கள்  டீம்களால் மிக அதிக பணம் கொடுத்து ஏலத்தில்  எடுக்கபட்டவர்கள். வெளிநாட்டு ஆட்டகார்களில்  மிக அதிகமாக ஏடுக்கபட்ட ஏலம்   750,000 டாலர்கள்(4,5 கோடி) இந்திய விளையாட்டு வீர்ர்களில் அதிகம் பெற்றது 85 லட்சம்
வண்ணமையமான தொடக்க விழாவுடன் அமர்க்களமாக தொடங்கிய நாளில் நடந்த முதல் போட்டியே  ரசிகர்களை மகிழ்ச்சியைலாழ்த்தியது. “ இந்திய கால்பந்து வரலாற்றில் இது மிகப்பெரிய தருணம். இந்த தொடரால் இந்தியாவில் மிகப்பெரிய கால் பந்து புரட்சி ஏற்படும் என நம்புகிறேன். இதில் எனக்கும் பங்கு இருக்கிறது  என்பதில் பெருமை அடைகிறேன். ஓட்டு மொத்த தேசமும் இந்த தொடரை ஆதரிக்க வேண்டும் என்றார் அந்த விழாவில் பங்கேற்ற சச்சின் தண்டுல்கர். இந்த அணிகளில் ஒன்றைத்தவிர, மற்ற அனைத்துக்கும் வெளிநாட்டு வீர்ர்கள் தான் கேப்டன் மற்றும்  கோச். இவர்கள் வழிகாட்டுதலில் நம் வீர்ர்கள் உலகதரத்துக்கு உயர்வர்கள்.  உலக கோப்பை மேட்சகளில்  டிவியில் நாம் பார்த்த பிரபலங்கள் நமது நகரங்களில் விளையாடுகிறார்கள்  என்பதால் கால்பந்து ரசிகர்களிடையே ஆர்வம் அதிகமாகியிருக்கிறது.  இந்த தொடரில்  சமீபத்தில்  சென்னையில் கோவா அணிக்கும்  சென்னை அணிக்கும்  நேரு ஸ்டேடியத்தில் நடந்த போட்டியின் போது  10,000 பேர் பார்க்க கூடிய ஸ்டேடியம் நிரம்பி வழிந்தது. சென்னை கால்பந்து ரசிகர்களின் ஆர்வத்தையும் பக்தியையும் அன்று பார்க்க முடிந்தது. இந்த தொடரில் முதல்கோல் அடித்த பெருமையை பெற்றவர் இந்திய வீர்ர் ப்ல்வந்து சிங். தொடர்ந்து  சென்னை அணிக்காக ஆடிய  பிரேசில் ஆட்டகாரர் எலோனோ புளூமர் பிரமாதமாக ஆடினார். 42 வது நிமிடத்தில்  கிடைத்த ஃபிரி கிக் வாய்ப்பில் அவர் அடித்த கோலினால் தான் சென்னை அணி அன்று வென்றது.  பரபரப்பான அந்த வினாடிகளுக்கு பின்னர் ஸ்டேடியத்தில்  எழுந்த  ஆரவாரத்தில் , கேட்ட  ”சூப்பர் கோல் மச்சி” என்ற கமெண்ட் புரிண்டிருக்காவிட்டாலும் அந்த வெளிநாட்டு வீர்ருக்கு சென்னை ரசிகரிகளின் சந்தோஷம் புரிந்திருக்கும்
இந்த தொடர் இந்திய கால்பந்தாட்த்தின் தரத்தை  உயர்த்தை நல்ல வாய்ப்பு, நம் வீர்ர்கள் புதிய டெக்கினிக்களையும் வெளிநாட்டு விளையாட்டுவீர்ர்களின் அணுகுமுறைகளையும் அறிந்து கொள்ள அருமையான் வாய்ப்பு என சொல்லபடுகிறது.
பிரபலங்களைக் கொண்டு வருவதால் மட்டுமே கால்பந்து விளையாட்டு இந்தியாவில் பெரும் வெற்றி அடையும் எனக் கூற முடியாது என்கிறார் இந்திய அணிக்காக எட்டு ஆண்டுகள் விளையாடியுள்ள சபீர் பாஷா. இவர் சென்னை மேட்சுக்கு சர்வதேச மைபின் பார்வையாளாரக வந்திருந்தார்.
ஐரோப்பா மற்றும் தென் அமெரிக்காவிலுள்ள நாடுகளின் கால்பந்து சங்கங்களில் எட்டு வயது முதல் சிறுவர்களை தேர்ந்த்டுத்து தொடர்ந்து பயிற்சி அளித்து சிறந்த வீர்ர்களாக உருவாக்குகிறார்கள்.  அதை நாம் செய்ய வேண்டும்  இந்த டீம் கள் அதற்கான முயற்சிகளிலும் ஈடுபட வேண்டும். என்கிறார் இவர்.

ஐஎஸ்ஸின் நோக்கம் வெறும் மேட்ச்கள் நடத்துவதுமட்டுமில்லை. ஒவ்வொரு டீமும் அவர்கள் பகுதியில் அகடமிகளை நிறுவி  முறையாக கால்பந்தாட்டாத்தை கற்பித்து வீர்ர்களை உருவாக்குவதும் ஒரு   லட்சியம்  என்று அறிவித்திருக்கிறார் அதன் தலைவர் நீனா அம்பானி.
அறிவிப்பும், ஆரம்பமும் அமர்க்களமாக இருக்கிறது. செய்வார்களா? அல்லது ஐபிஎல் யைப்போல விளம்பரமும், வியாபாரமாக ஆகபோகிறதா? \ஆட்டகார்களின் ஆட்டத்தைமட்டுமில்லை, ஆட்டுவிப்போரின் ஆட்டத்ஹையும் -காண இந்திய கால்பந்து ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்


5/11/14

அலிபாபாவும் 40 டாலர்களும்





இன்று உலகம் முழுவதும் வேகமாக பரவிக்கொண்டிருப்பது ”இ காமர்ஸ்” என்று அறிமுகமாகி இன்று ஆன்லைன்  ஷாப்பிங் என்ற விஷயம் . இந்த துறையின் வளர்ச்சி கடந்த ஆண்டில் மட்டும் 300% மேல் இன்னும் வரும் ஆண்டுகளில் இன்னும் வேகமாக வளரும் என கணித்திருக்கிறார்கள்
அபிரிதமான அன்னிய மூதலீடுகளால் உலகில் பொருளாதார நிலையில் இரண்டாவது இடத்தை பிடித்திருக்கும் சீனாவில் இந்த வர்த்தகம் இருக்கிறது. இதில் முன்னணி நிறுவனமான அலிபாபா நிறுவனம் அன்னிய நேரடி முதலீட்டு சந்தையில் பங்குகளை வெளியிட அனுமதிகள் பெற்று நீயூயார்க் பங்கு சந்தையில் தனது டாலர் பங்குகளை கடந்த மாதம்  வெளியிட்டது.   IPOவின் (முதலில் பொதுமக்களுக்கு வழங்கபடும் விலை) துவக்கவிலையாக 40 டாலர்களாக பட்டியலிடபட்டிருந்தது.  மார்க்கெட் துவங்கிய சில நிமிடங்களில் ஜிவ் வென்று விலை ஏறி 93.8 டாலர்களில் நாளின் விற்பனை முடிந்தது. மொத்தம் விற்றபங்குகளின் மதிப்பு 25 பில்லியண்டாலர்கள். இது பங்கு மார்க்கெட்டில் ஒரு  உலக சாதனை. இதுவரை எந்த கம்பெனியின் பங்கு இந்த வேகத்தில் உயர்ந்ததில்லை.விற்றதில்லை.
இதன் மூலம் அலிபாபா நிறுவனத்தின்  நிகர மதிப்பு ஒரே நாளில் 231 பில்லியன் டாலர்கள் உயர்ந்தது. அதன் நிறுவனர் ஜாக் மா வின் பங்குகளின் மதிப்பு 26.5 பில்லியன் டாலர்கள். (ஒரு பில்லியன் என்பது100 கோடிகள்). இந்த் பங்கு வெளியிடு மூலம் ஜாக் மா ஆசியா பணக்காரர்கள் பட்டியலில் 3 வது இடத்திலிருக்கும் முகேஷ் அம்பானியையும்,  இரண்டாவது இடத்திலிருக்கும் சினாவின் லீஷா கீ  என்ற தொழிலதிபரையும்  ஒரே பாய்ச்சலில் தாண்டி ஆசியாவின் முதல் பணக்காரர் என்ற இடத்துக்கு வந்துவிட்டார்.
 ஒரு  சீன நிருவனம் முதன் முதலில் அமெரிக்க பங்குசந்தையில் இறங்கும் போது எப்படி இத்தகைய வரவேற்பு என்பதை உலக பொருளாதார மற்றும் பங்குசந்தை ஆராய்ச்சி நிறுவனங்கள் ஆராயத்துவங்கிவிட்டன.
 உலகில் மிகஅதிகமான இண்டர்னெட் இணைப்புகள் கொண்ட சீனாவில்   ஆன்லைன் வர்த்தகத்தை அறிமுகபடுத்தி அதை மிக வேகமாக வளர்ந்து பல சாதனைகளை படைத்தவர்கள் இந்த.அலிபாபா. 40க்கும்மேற்பட்டபொருட்களை 140க்கும்மேற்பட்ட நாடுகளில் விற்கிறார்கள். நாளொன்ருக்கு ஒரு ல்ட்சம்பேர்கள் இவர்கள் தளத்தை பார்வையிடுகிறார்கள். ஆன்லைன் ஷாப்பிங்கில் சில புதிய முறைகளை அறிமுகபடுத்தியவர்கள். இண்டெர்னெட்டில்  பொருளை பார்த்து பணம் செலுத்திய பின் உங்கள் பகுதியிலிருக்கும் கடையில் அதை பெறலாம். இதன் விலை கடையில் வாங்குவதை விட குறைவாக இருக்கும்.(சில பொருட்கள் 50%கூட) கடையில் பொருளை பார்த்தபின் பிடிக்காவிட்டால் பணம் வாபஸ்.  விழாக்க்காலங்களில் கடைக்கே போக வேண்டாம். கல்லூரி, பள்ளி அலுவலக கட்டிடங்களில் கொட்டி குவித்து வைக்கிறார்கள். வீட்டுக்கு போகும்போது பொருளை எடுத்து செல்ல்லாம்.  இப்படி பல புதிய ஐடியாக்களுடன் இப்போது இவர்கள் சீனாவின் கிராமங்களை குறிவைத்திருக்கிறார்கள். அடுத்த இரண்டாண்டில் 1000 நகரங்களில் 10,000 கிராமங்களிலும் எங்களது பொருள்வழங்கும் செண்டர்கள் (கடைகள் இல்லை)  துவக்கபடும் என அறிவித்திருக்கிறார்கள் இதன் மூலம்  அலிபாபா நிறுவனம் ஆன்லைன் ஷாப்பிங்கில் உலகின் முதல் நிறுவனமாக உயரும் என்கிறது ஒரு கணிப்பு. அமோசான்,  இ பே  போன்ற ஆன்லைன் நிறுவனங்களைவிட இவர்கள் மலிவான விலைக்கு பொருட்களை தருவதுதான் என்பதும் ஒரு கணிப்பு

ஒரு சாதாரண ஆங்கில ஆசிரியராக இருந்த ஜாக் மா . வேலையை விட்டு துணிவுடன் தொழில் துவங்கியவர். அலிபாபா என்று ஏன் பெயர்.? ”எல்லோரும் அறிந்த  ஒருபெயராக இருப்பதை விரும்பி அதை தேடிக்கொண்டிருந்தேன், ஒரு ரெஸ்டிரொண்ட்டில் காபி தந்த பெண்ணிடம் அலிபாபாவை தெரியுமா?  என்ற கேள்விக்கு திருடன் தானே? என்றார். ஒரு டாக்ஸி டிரைவர், ஒரு வயதான மூதாட்டி எல்லோரும் அலிபாபாவை அறிந்திருந்தார்கள் திருடிய பணத்தில் அவர் கிராமத்திற்கு செய்த நல்லதை அறிந்திருக்கவில்லை என்றாலும், அலிபாபவையே   பெயராக்கினேன்” என்கிறார் ஜாக் மா
.இந்திய மார்க்கெட்டின் மதிப்பை உணர்ந்திருக்கும்  இவர்கள் விரைவில் இந்தியாவிற்கு வரப்போகிறார்கள்.

  kalki 9/11/14


3/11/14

செல்வம் நங்கூரமிடும் துறைமுகம்.


மிகச்சிறிய 32 குட்டிதிட்டுகளிணைந்து சின்ன  தீவாகயிருக்கும் அந்த நாட்டில் இருப்பது ஒரு சிறிய மீன் பிடிதுறைமுகம்தான்சிறியபயண கப்பல்கள்கூட வரமுடியாது. ஆனால் இன்று உலகம் முழுவதும்நிதி நிலையங்களின் துறைமுகமாக” ( Financial Harbour) அறியபட்டிருக்கும் அந்த வாமனதேசம்தான் பஹரைன்  .
 மிகச்சிறிய இந்த வளைகுடா  தீவில்தான்  முதல் எண்ணைக் கிணறு நிறுவபட்டது..அதன் வளம் குறைந்து இன்னும்10 ஆண்டுகளில் மூடப்பட்டுவிடும் என்ற நிலையிலேயே, நாட்டின் பொருளாதாரத்தை வளமாக்க இந்த தீவின் அரசு செய்த காரியங்கள் இரண்டுஅண்டை நாடான செளதி அரேபியாவிலிருந்து கச்சா எண்ணையை கடலின் அடியில் பதிக்கபட்ட குழாய்களின் மூலம் கொண்டுவந்து சுத்திகரித்து அவர்களுக்கு அனுப்பவதற்காக அதிதொழில்நுட்பத்தில் ஆலைகளை நிறுவி,எண்ணையின்விலையில் பாதியை கட்டணமாக வசூலித்தது. மற்றொன்று வெளிநாட்டு வங்கிகளை  இங்கிருந்து தொழில்செய்ய வரவேற்றது. இன்றைக்கு 300க்கும் மேற்பட்ட வெளிநாட்டு வங்கிகள் இயங்கும் இந்த தேசத்தில் இன்னும் அவர்கள் வருகை தொடர்ந்தவண்ணமிருக்கிறது.
அவர்களின் வசதிக்காகவே நகரின் நடுவே .நவீன வசதிகளுடன் அலுவலகம் சிறப்பான  தொலைதொடர்பு வசதிகள் கொண்ட  பிரமாண்ட 53 மாடி கட்டிடத்தை எழுப்பியிருக்கிறார்கள். இரண்டு  ராட்டசத வடிவ பூட்ஸ் வகை காலணியை எதிரும் புதிருமாக நிறுத்தியதைப்போல நிற்கும் இந்த கட்டிடங்களின் பெயர்  “பைனாஷியல் ஹார்பர்” Financial Harbour
தொழில்வளம் எதுவுமில்லாத வெறும் ஈச்ச மர காடுகளாயிருக்கும் இந்த சின்னஞ்சிறு பாலைவனத்தீவில்  இவ்வளவு வங்கிகள் என்னசெய்கின்றனஉலகஆப் ஷோர் பேங்கிங்”(off shore banking) என்ற பேங்க்கிங் தொழிலின்  முக்கிய கேந்திரம் இதுதான், , உலகில் நல்ல வருமானம் தரும் தொழில்களில் மற்றொரு  நாட்டில்  முதலீடு செய்ய விரும்பும்  நிறுவனங்களுக்கு, அதை அவர்கள் நாட்டிலிருந்து செய்யாமல் மற்றொரு நாட்டிலிருந்து செய்ய  உதவது இந்த வங்கிகளின் பணி. எளிதாக சொல்லவேண்டுமானால்ஒரு ஜப்பானிய நிறுவனம்  மெக்கிஸிக்கோவில் அதிக லாபம் ஈட்டும் தொழிலில் முதலீடு செய்ய இங்குள்ள ஸ்விடன் நாட்டு வங்கிக்கிளை உதவும். இதனால் பல நாடுகளின் பொருளாதாரத்தை கண்கொத்தி பாம்பாக கண்காணித்து தங்கள் வாடிக்கையாளார்களை செல்வந்தர்களாக்கிகொண்டிருக்கிரார்கள் இந்த வங்கியாளார்கள். ஒரே இரவில் கோடிகளை ஈட்டவும், இழக்கவும் செய்கிறார்கள். வருமானத்திற்கு வரி எதுவும் கிடையாது.லாபத்தை உலகின் எந்த மூலைக்கு மாற்ற தடையேதுமில்லை. பல வங்கிகளில் இந்தியர்கள் அதில் கணிசமான அளவில் தமிழர்கள் பணியிலிருக்கிறார்கள்
கடந்த  10 ஆண்டுகளில் இந்த வங்கித்தொழில் நாட்டின் முகத்தையே மாற்றியிருக்கிறது. பிரமாண்டமான பல மாடிகட்டிடங்கள், அகன்ற சாலைகள் என வளர்ந்து கொண்டிருக்கிறது. நகரின் புதிய அடையாளமாக எழுந்திருப்பது
    240மீட்டர் உயரத்தில்  வேர்ல்ட் டிரேட் செண்ட்டர்.(world trade center) இரட்டை கோபுரம். தொலவிலிருந்து பார்க்கும்போது சாய்த்து நிறுத்திவைக்கபட்டிருக்கும் படகைப் போல இருக்கும் இதை அருகில் பார்க்கும் போது தான் அது  ஒரு படகில் விரித்து கட்டப்பட்டிருக்கும் இரண்டு பாய்மரங்கள் என்ற வடிவம்  புரிகிறது. 50 மாடிகளுடன் அமைக்கப் பட்டிருக்கும்  இந்த  இரண்டு கட்டடித்திற்கு இடையில் பெரிய காற்றாடிகளை நிறுவி மின் சக்தி பெற ஒரு காற்றாலையை நிறுவியிருக்கிரார்கள். இது இந்த கட்டிடத்திற்கான மின் வசதியை தருகிறது. கட்டிடத்தில் பல பன்னாட்டு நிறுவனங்களின் அலுவலகங்கள். வங்கிகள்மேலேயிருந்து பார்க்கும்போது தேசம் முழுவதும் தெரிகிறது. ஆம். இந்த நகரம் மட்டும் தான் முழுதேசமே!. கீழ்தளத்தில் மிகப்பெரிய ஷாப்பிங் மால்  நிறைய சர்வதேச பிராண்டுகளின் கடைகள்.
இங்குமட்டுமில்லை நகரின் அத்தனை பெரிய கட்டிடங்களிலும்  கீழ் தளம் மால் தான்எல்லா மால்களிலும் பிராத்தனைக்கு என தனி இடம். இவைகளைத்தவிர பல லட்சம் மீட்டர் பரப்பளவில் பல மாடிகட்டிடங்களில்  பல தனி மால்கள்..உலகின் எந்த முண்ணணி பிராண்டும் தங்கள் படைப்பை முதலில் அறிமுகப்படுத்துமிடம் பஹரைன் தான்இந்த மால்களில்தான்.. சில மிக பிரமாண்டமானவை. ஒரு மாலில்  5000 கார்களை நிறுத்த அடுக்கமாடி பார்க்கிங் நிறுவியிருக்கிறார்கள். கடைகளில் யார் வாங்குகிறார்கள்? எந்த வித வரியுமில்லாமல் சர்வதேச விலையைவிட மலிவாக  கிடைப்பதால்  அருகிலிருக்கும் சவுதி அரேபியா போன்ற அண்டை நாடுகளிலிருந்து விடுமுறைகளில் வந்து வாங்கித்தள்ளுகிரார்கள். இதற்கு வசதியாகியிருப்பது பஹரைன் மன்னர் பெயரில் அமைக்கபட்டிருக்கும் கடல் வழி சாலை தான். குறிப்பிட்ட இடங்களில் மட்டும் கீழே படகுகள் கடந்து போக  உயர்ந்தநிலையில்  பாலமாக அமைக்கபட்டிருக்கும் கடல்வழி சாலையில் பலநாட்களில் நெருக்கடியாகிவிடுமளவிற்கு போக்குவரத்துபோக விஸா அவசியமானாலும்  இங்கிருந்து தினசரி  சவுதி அரேபியாவின் நகரங்களுக்கு போய் வேலை செய்து திரும்புவர்களுமிருக்கிறார்கள்.
ஒரே ஒரு நகரமாகயிருக்கும் இந்த தேசத்தை இப்போது நிறைய வசதிகளுடன் ஒரு சுற்றுலா மையமாகக்க  துவங்கியிருக்கிறார்கள். உலகின் சிறந்த ஹோட்டல்கள் இங்கு வந்திருக்கின்றன. ஒரு ஹோட்டல் அருகிலிருக்கும் அமைதியான கடலை அலையடிக்கும்,கடலாகஇயந்திரங்களின் உதவியால்  உருவாக்கியிருக்கிறார்கள்அருகிலுள்ள குட்டி தீவுகளை ரிஸார்ட்டாக மாற்றிக்கொண்டிருக்கிரார்கள். ஃபார்முலா ஒன் என்ற சர்வதேச கார் ரேஸ்களை நடத்த மிக அதிக செலவில் டிராக்களை அமைத்து உலகம் முழுவதுமிருக்கும் கார் ரேஸ்பிரியர்களை ஈர்க்கிறார்கள்
நகர் உருவாகும் போது நிறுவபட்ட  “பாபல் பஹரைன்என்ற நுழைவாயில் முகப்பை மாற்றாமல் போற்றி பாதுகாக்கும் பகுதியில்தான் நகரின்பிரதான கடை வீதிகள். நிறைய  குறுகிய தெருக்கள் நிறைய இந்திய முகங்கள். வீதியோர கடைகள். சன்னமான குரலில் சரளமான மலையாளம். நடிகர் மோகன்லால்,மம்முட்டி படங்களுடன் முடிதிருத்துமிடத்திலிருந்து, குருவாயரப்பன் சன்னதியுடன் கோவிலாக மாற்றபட்டிருக்கும் 2 பெட்ரூம் பிளாட் வரை எங்கும் நிறைந்த கேரள வாசனை. காய்கறி மார்கெட்டைப்போல தங்க நகைகளுக்கு தனியாக 300 கடைகளுடன்  கோல்ட் சிட்டி. என்ற மார்க்கெட்.

மெக்கா விலிருந்து கொண்டுவரப்பட்ட கற்களினானால் பிரமாண்டமாக நிறுவபட்டிருக்கிறது அந்த மசூதி.. இத்தாலிய மார்பிள் தரை, இந்திய தேக்கில் கதவுகள்,பிரான்ஸில் வடிவமைக்கபட்ட கண்னாடி சாரளங்கள்.ஸ்பெய்னில் வடிவமைக்கபட்ட பைபர்கிளாஸ் விதானம், தரை முழுவதும் பெர்ஷ்ய கார்பெட் என மிக நேர்த்தியாக கலையுணர்வுடனிருக்கும் அதனுள் பிராத்தனை இல்லாத சமயங்களில் பார்க்க அனுமதிக்கிறார்கள். எந்த நாட்டினாராக, எந்த மதத்தினாராக யிருந்தாலும் பெண்கள் உள்ளே நுழைய பர்தா அணிந்தால்தான் அனுமதி..  ஏர்கண்டிஷன் செய்யப்பட்டிருக்கும் பெரிய பிராத்தனை கூடத்தில் விதானத்திலிருந்து தொங்கும் சரவிளக்கில் இணைக்கபட்டிருக்கும் ஒரு பிரமாண்ட வட்டம்  1000 பல்புகளுடன் நம்மை பிரமிக்கவைக்கிறது.(1000விளக்கு மசூதி)
ஒரு  வளமான முகலாய நாட்டில் அவர்களது வழிபாட்டுதலம் ஆடம்பரமாக இருப்பதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. ஆனால்  நகரின் வெளியே 10 மைல் தொலைவில் பார்த்த ஒரு மரம் தான் ஆச்சரியமான விஷயம். சுற்றுவட்டாரத்தில் 20 மைலுக்கு எந்தநீர்வளம் இல்லாத அந்த மணல் பாலைவனத்தில் 400 ஆண்டுகளுக்கும் மேலாக உயிர் வாழும் ஒரு மரம்.. எங்கிருந்து தனக்கு வேண்டிய நீரை எடுத்துகொள்கிறது என்ற ஆச்சரியத்தை தரும் இந்த மரத்தின் அடி பாகம் ஆலமரம்போலவும் இலைகள் புளிய மர இலைகளைபோலவும் தன் கிளைகளை  சிறு மாமரம்போல தாழ்வாக பரப்பி  ஆராய்சியாளர்களுக்கு சவால் விட்டுகொண்டு நிற்கிறது. மிக அரிதான தாவரமாக அறிவிக்கபட்டு வாழும் மரமாக(tree of life) பாதுகாகப்படுகிறது. வழிபாட்டுக்கு உரியதாக மதிக்கப்படும் இதில் சிலர் தங்கள் பெயரை செதுக்கியிருக்கிறார்கள். அவை தமிழ் எழுத்துகளாக இருப்பது     நெஞ்சில் வலியை உண்டாக்கியது.
.
இந்த வாழும் மரத்தை பார்த்து திரும்பும்போதுஇறைவன் படைப்பில் புரிந்துகொள்ளமுடியாத சில ஆச்சரியங்கள் அவன் மீது கொண்டுள்ள நம்பிக்கையை அதிகரிக்கசெய்கிறது.” என்ற இஸ்ரேலிய பழமொழி  நினைவிற்கு வந்ததது.