20/3/15

புனே உயரமாகிக்கொண்டிருக்கிறது

அடுக்குமாடிவீடுகள் புனேயில் புதிதல்ல. 50 ஆண்டுகளுக்கு முன்னரே துவங்கிவிட்ட விஷயம். ஆனால் இப்போது பல அடுக்குமாடிகளுடன் களுடன் அதிகமான கட்டிடங்கள் மிக வேகமாக எழுந்திருக்கின்றன. 28  அல்லது 24  அடுக்குமாடி வீடுகள். 8 அல்லது 10 மாடி பிரமாண்ட அலுவலககட்டிடங்கள் நிறைய எழுந்திருக்கின்றன. எல்லா அடுக்குமாடி வீடுகளிலும். முதல் 4 மாடிகளுக்கு -1,-2,-3.-4 என நம்பரிட்டு 5  வது

மாடியைத்தான் முதல் மாடி என குறித்திருக்கிறார்கள். இது வாஸ்து சாஸ்த்திரமா இல்லை விதிமீறலை மறைக்கும் சமாச்சாரமா என தெரியவில்லை.   நான்கு புறமும்  அழகான பசுமை குன்றுகளால் சூழப்பட்ட புனே நகரில் அந்த குன்றுகளுக்கு 10 கீமி வரை கட்டிடங்கள் எழுப்ப கூடாது என்று சட்டமிருந்தது. சரத்பாவர் காலத்தில் விதிகள் தளர்த்தபட்டு இப்போது சுத்தமாக மறக்கபட்டு குன்றுகளுக்கு அருகிலேயே. கட்டிடங்கள் வளர்க்க பட்டுகொண்டிருக்கின்றன. இன்னும் சில ஆண்டுகளில் அந்த குன்றுகளிலும் இம்மாதிரி கட்டிடங்கள் எழந்து குன்றுகளே காணமல் போகலாம் நகரமே நான்கு திசைகளிலும் கான்கீரிட் காடுகளாக விரிந்து கொண்டிருக்கின்றன.  
ஹின்சஞ்ன்வாடி என்ற புறநகர் பகுதியில் அத்தனை முன்னணி சாப்ட்வேர் நிறுவனங்களும். பிரமாண்டமான பல கட்டிடங்களில் இயங்குகிறது. 138 ஏக்கரில் 3000 வீடுகளுடன் 200 அலுவலகங்களுடன் மாறிவரும் இந்தியாவின் முகத்தை காட்டும் ஷோகேஸ். தனியார் நிறுவனங்கள் உருவாக்கிகொண்டிருக்கிறார்கள். இதுபோல் இன்னும் மூன்று அருகே வரப்போகிறதாம். அலுவலகங்களுக்கு அருகிலேயே வசிக்க அடுக்கமாடிகள். Walk to work  என்ற வாழ்க்கை. பயண நேரம் மிச்சம் என சொல்லி அந்த நேரத்திலும் வேலை வாங்கும் புத்திசாலிகம்பெனிகள்.  பல கட்டிடங்களில் விளக்குகளை அணைப்பதே இல்லை. அமெரிக்க  கஸ்டமர்களின் பகல் நேர அலுவலகங்களுக்காக  இங்கே இரவெல்லாம் உழைக்கும். பெரிய இளைஞர் பட்டாளம்.  5 ஸ்டார் சம்பளம் வாங்குபவர்கள்  தெருவோர கையேந்திபவனில் வாங்கி பிளாட்பாரத்தில் உட்கார்ந்து ஜவா மொழியில் பேசிக்கொண்டே சாப்பிடுகிறார்கள். இம்மாதிரி கடைகள் 50க்கும் மேல் இருக்கிறது. ஆம்லெட் தோசை போடும் நம்மூர்காரர் கடையில் நல்ல கூட்டம். தமிழ் பாடல்களும் கேட்கிறது.

அடையாள அட்டையை அழுத்தினால் திறக்கும் கதவு. கிச்சனில்; புகைவந்தால் அலறும் அலாரம்  நடக்க நல்ல பாதைகள் மெத்தென்ற பசும்புல்வெளி பார்க்   நீச்சல் குளம், குழந்தைகள் விளையாட வெண்மணல்திடல்  கோல்ப்மைதானம் என மிக நவீன வசதிகளுடன் சுத்தமான குட்டி ஹைடெக் ஊர். கால்நகம்வெட்டிக்கொள்வதிலிருந்து சகல நகர வாழ்க்கையின் ஆடம்பரங்களும் இங்கேயே இருக்கிறது.
ஆனாலும்.  பனித்துளிகள் மின்னும்பயிர்களுடன் அருகிலிருக்கும் விளைநிலங்களையும் அதன் எதிரே மிதக்கும் மேகங்கள் தொட்டுசெல்லும்  உயர்ந்த கட்டிடங்களையும் நம் பால்கனியிலிருந்து ஒன்றாக பார்க்கும்போது ஒரு மாறுபட்ட வினோதமான  உணர்வு எழுகிறது.

”இன்னும் சில நாட்களில் நாங்கள் அங்கேயும் வந்துவிடுவோம்” என்று அந்த உயர்ந்த கட்டிடங்கள் சொல்லுவதைக்கேட்டு  அழும் அந்த நிலங்களின் கண்களில் நீர் கட்டியிருப்பது போல தோன்றிற்று. . 



  • 19 others like this.
  • Vedha Gopalan வாஸ்து சாஸ்த்திரமா இல்லை விதிமீறலை மறைக்கும் சமாச்சாரமா (ஏன் சார்! அதிகாரிகள் நேரில் வந்து பார்க்கும்போது கட்டடத்தின் உயரம்கூடவா கண்ணுக்குத் தெரியாது? ) இறைவா!!

    இந்தியாவின் முகத்தை காட்டும் ஷோகேஸ்

    கட்டிடங்களில் விளக்குகளை அணைப்பதே இல்லை.
    5 ஸ்டார் சம்பளம் வாங்குபவர்கள் தெருவோர கையேந்திபவனில்
    அழகிய வாக்கியங்கள் 

    . பனித்துளிகள் மின்னும்பயிர்களுடன்..நல்ல ரசனை தங்களுக்கு

    அய்யோ..அந்தக் கடைசி வரி மனசைப் பிசைகிறது!..சொல்லாதீங்க
    2 hrs · Edited · Like
  • Amirtham Surya நிலங்களின் கண்களில் நீர் கட்டியிருக்கிறது..செம ஜி
    2 hrs · Like
  • Bala Mukundhan அதே போல் பெங்களூரு தன் தனித்தன்மையை இழந்து வருடங்கள் பல ஆகி விட்டது. யஷ்வந்த்பூரிலிருந்து பனஷங்கரி செல்லும் Outer Ring Road வழியாகப் பயணித்தோமானால், குன்றுகள் அனைத்தும் அழிக்கப்பட்டு அதன் மேல் அடுக்கு மாடிக் கட்டிடங்களும், குடியிருப்புகளும்தான் தென் படுகின்றன. கார்டன் சிடி, கான்கிரீட் சிடியாக மாறி விட்டது. வட பெங்களுருவில் விமான நிலையம் செல்லும் வழியெங்கும் வயல் நிலங்கள் வானாளாவிய கட்டிடங்களைத் தான் தாங்கி நிற்கின்றன. Whitefield சுற்றிய பகுதியை பற்றி கேட்கவேவேண்டாம். இங்கே நிலங்களின் கண்களில் நீர் கூட கட்டாது. ஏனெனில், நீர் வழிந்தோட கூட இடமில்லாது கான்கிரீட் தரைகளும், கட்டிடங்களும் பூமிக்கும் மனிதனுக்கும் இடையே தடை எழுப்பியுள்ளது.

    இதை விட கோரம் ஒன்று உண்டென்றால், அது M G Road தான். எவ்வளவு அழகான ஒரு சாலையாக இருந்த அது இன்று உயர் மட்ட மெட்ரோ ரயில் பாதை அமைக்கப்பட்டதின் மூலம் தன்னிலை இழந்து ஒரு சவப்பாதையாக மாறியுள்ளது. 18 வருடம் கழித்து அந்தப் பாதையைப் பார்த்த என் கண்ணில் நீர்தான் முட்டிக் கொண்டு நின்றது. இந்த ஒரு வருடமாக அந்தப் பாதைப் பக்கமே செல்லவில்லை.
    2 hrs · Like
  • 1 hr · Like · 1
  • Shah Jahan இப்போதெல்லாம் கேடட் கம்யூனிட்டியில் வசிப்பதுதான் நாகரிகம் என்ற மனநிலை உருவாகிவிட்டது. கோவையில்கூட கேடட் கம்யூனிட்டி வந்தாயிற்று.
    1 hr · Like
  • Skrajendran S Krihsnasamy Naidu இன்னும் சில நாட்களில் நாங்கள் அங்கேயும் வந்துவிடுவோம்” என்று அந்த உயர்ந்த கட்டிடங்கள் சொல்லுவதைக்கேட்டு அந்த நிலங்களின் கண்களில் நீர் கட்டியிருப்பது போல தோன்றிற்று. 
    .
    1 hr · Like
  • Pitchumani Sudhangan கவிதை வடிவிலான ஒரு மனக் கலக்கத்தை, ஒரு சமூக அக்கறையை எத்தனை அழகாக ரசனையோடு சொல்லியிருக்கிறீர்கள் ரமணன் ஸார்!
    1 hr · Like · 1











16/3/15

வெற்றி வெளியே இல்லை- கல்கியில் விமர்சனம்



”வெற்றி வெளியே இல்லை” நூலை  மூத்த பத்திரிகையாளார் ‘சுப்ர பாலன்” இந்த வார(22/03/15) கல்கியில் விமர்சித்திருக்கிறார். அதை இந்த சுட்டியில் பார்க்கலாம் 

http://ramananvsv.blogspot.in/