28/5/15

கறுப்புப் பணம்

Ramanan Vsv
May 26 at 10:19am ·
கறுப்புப் பணம்
மதிப்புரை.காம் எனது “ கறுப்பு பணம்” புத்தகத்திருக்கு வெளியிட்டிருக்கும் விமர்சனம் இது

கறுப்புப் பணம், ரமணன், கிழக்கு பதிப்பகம், ரூ 80
கறுப்புப் பணம் புத்தகத்தின் அட்டையில் புத்தகத்தின் பெயரை பெரிய எழுத்தில் சிவப்பில் வடிவமைத்துள்ளனர். கறுப்புப் பணம் என்பது பழைய சொற்றொடர். அதனை மாற்றி சிவப்புப் பணம் என்றே இனி சொல்லலாம்.
இந்தியாவின் கோடிகணக்கான கறுப்புப் பணம் சுவிட்ஸர்லாந்து வங்கிகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது என்று நாள்தோறும் செய்திகள் வருகிறன. அதனை மீட்டு வருவோம், ஒவ்வொரு இந்தியனுக்கும் சுமார் இருபது லட்சம் கிடைக்கும் என்று சொல்லியே ஆட்சியைப் பிடித்தார்கள். இன்றும் அதே நிலையில்தான் இந்த நாடு உள்ளது.
கறுப்புப்பணம் என்றால், ப்ளாக் ஜோக்காக சொல்லவேண்டும் என்றால், கறுப்புப்பணம் கடவுளைப்போல.
கடவுளை யாரும் கண்ணால் கண்டதில்லை. அதே போல் கறுப்புப் பணத்தையும் யாரும் கண்ணால் கண்டதில்லை.. எல்லாரும் கடவுளை பற்றியும் பேசுவார்கள். கறுப்பு பணத்தைப் பற்றியும் பேசுவார்கள்.
கறுப்புப் பணத்துக்கு அனைவரும் ஒரு காரணம் என்று இந்த நூலின் ஆசிரியர் ரமணன் ஓர் அதிர்ச்சி அளிக்கிறார். அது எப்படி? வரி கட்டப்படாத எந்த ஒரு பணமும் கறுப்புப் பணமே.
நீங்கள் ஒரு உணவகம் செல்கிறீர்கள்.. அங்கு பணிபுரியும் சர்வருக்கு டிப்ஸ் அளித்தால், அது அவன் கணக்கில் கறுப்புப் பணம். இது போல. கோவில் அர்ச்சகர் தட்டில் சேரும் தட்சணையும், உண்டியல் குலுக்கி சேரும் நிதியும்கூட.
எந்த ஒரு பணத்துக்கும் முறையான கணக்கு இருக்க வேண்டும்.. அதற்கு வரி கட்டப்பட வேண்டும்.. இல்லையேல் அது கறுப்புப் பணம்தான்.
கறுப்புப் பணம் என்றால் என்ன, அது எப்படி உருவாகிறது, எப்படி பதுக்கி வைக்கப்படுகிறது, இதில் சுவிஸ் வங்கியின் முக்கியத்துவம் என்ன, சுவிட்ஸர்லாந்து தவிர மற்ற எந்த நாடுகள் கறுப்புப் பணம் பதுக்க வழி செய்கிறது எனப் பல விவரங்களை புட்டு புட்டு வைக்கிறார் நூலாசிரியர்.
ஒரு இரண்டாயிரத்தி நானூறு சதுர அடி உள்ள ஓர் அலுவலகத்திலிருந்து இந்தியாவிற்கு எவ்வளவு அந்நிய முதலீடு வர முடியும்? யோசித்து பாருங்கள். இந்தியாவிற்கு வரும் அந்நிய முதலீட்டில் 7௦% மொரீஷியஸ் நாட்டிலிருந்து வருகிறது. ஒரே முகவரியில் சுமார் 2௦௦ அலுவலகங்கள் பதியப்பட்டுள்ளன. இவை அனைத்தும் லெட்டர்பேட் கம்பனிகள்.
எதற்கும் நிஜமான முகம் கிடையாது.. இந்தியாவில் உள்ளது போல KYCஐ (ஒரு வாடிக்கையாளர் பற்றிய முழு விவரங்கள்) இந்த நாட்டு வங்கிகள் வைத்திருப்பதில்லை. அதனால் இந்த கறுப்புப் பணத்தை மீட்க நினைத்தாலும் முடிவதில்லை.
ஆளும் கட்சி எதிர்க் கட்சி என பல தரப்பிலும் குற்றவாளிகள் உள்ளார்கள். வேண்டாதவர்கள் தவிர அனைவரையும் காப்பற்றும் மிக பெரிய பொறுப்பு நிதி அமைச்சருக்கு உள்ளது.
முன்னாள் நிதி அமைச்சர் பிரணாப்முகர்ஜி, நாடாளுமன்றத்தில் சுவிஸ் வங்கி பட்டியலை வெளியிட்டால் அவர்கள் பணத்தை எடுத்து வேறு நாட்டுக்கு கொண்டுசென்று விடுவார்கள், அதனை மீட்கவே முடியாது என்றார். அப்போது பாஜக கட்சியினர் அதைக் கடுமையாக எதிர்த்தார்கள். அவரிடம் தகுந்த விளக்கம் கேட்டார்கள். வெளிநடப்பு செய்தார்கள்.
ஆட்சி மாறியது.. ஆனால் காட்சி மாறவில்லை. இப்போது அதையே காங்கிரஸ்காரர்கள் செய்கிறார்கள். கறுப்புப் பணத்தை மீட்க இன்னும் எவ்வளவு காலம் எடுக்கும் என்று தெரியவில்லை.
ரமணன் மிகுந்த நம்பிக்கை உள்ளவர். ஊழலை ஒழிக்க நினைக்கும் சக இந்தியர்களுக்கு இந்த புத்தகத்தை சமர்பித்துள்ளார். அந்த நம்பிக்கை நிஜமாகி விட்டால் இந்தியாவிற்குப் பொற்காலம்தான்.
-முருகதாஸ்
புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: https://www.nhm.in/shop/978-93-8414-907-9.html
போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் 94459 01234
Share this:
Ramanan Vsv's photo.
Like · Comment · Share
Kavingar Nepolian, Srichandar Krishna Rao, குமார் லலித்குமார் and 10 others like this.
2 shares

Valiyur Subramanian I like the review
Like · Reply · May 26 at 1:05pm

Ramakrishnan Narayanan Will it become a BLACK MONEY even if the total of such unaccounted money is less than the exempted limit. If so, the amounts paid to veg vendors, servants, dhobi, ironman and so on will also come under the category. Let us be reasonable.
Like · Reply · May 26 at 3:27pm

Suprajaa Sridaran ரமணின் கருப்பு பணம்
Like · Reply · May 26 at 5:56pm

Anbu Jaya வாழ்த்துகள்
Like · Reply · May 26 at 6:25pm
Ramanan Vsv

Write a comment...

23/5/15

ஒபாமா பொய் சொன்னாரா?


”ஆப்ரேஷன் நெப்டியூன் ஸ்பியர்” நினவிருக்கிறதா? 
2001-ம் ஆண்டு, செப்டம் பர 11-ம் தேதி அல-கொய்தா தீவிர வாதிகள் வாஷிங்டனில்அமைந்துள்ள அமெரிக்க ராணுவத் தலைமையிடமான பெண்டகன், நியூயார்க்கில் உள்ள இரட்டை கோபுரம் ஆகிய தாக்குதல்களில் 3 ஆயிரத் திற்கு மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டனர். இதற்கு மூளையாக இருந்து செயல்படுத்தியவர் அந்தஇயக்கத் தின் தலைவர் ஒசாமா பின்லேடன். இவரைப் பிடிக்க அமெரிக்கா தீவிரமாக, உலகெங்கும் தேடிக்கொண்டிருந்தனர். 
10 ஆண்டுகள் தேடுதலுக்குப் பின்னர் ”ஆப்ரேஷன் நெப்டியூன் ஸ்பியர்” என்ற பெயரில் ஜேம்ஸ்பாண்ட் சினிமாவைப்போல ஒர் அதிரடி நடவடிக்கையில் 2011- மே 2-ம் தேதி பாக்கிஸ் தானின் அபோட்டா பாத பகுதியில் ஒரு வீட்டில் பதுங்கியிருந்த ஒசாமாவை சிறிய விமானங்களில் சென்று அமெரிக்க ராணுவம் சுட்டுக் கொன்றது.. முழுநடவடிக்கைகளையும் அமெரிக்க அதிபர் ஒபாமா வெள்ளை மாளிகையில் இருந்து ”லைவ்” வாக்க பார்த்துக்கொண்டிருந்தார். என்பதுதான் மறுநாள் உலகம் முழுவதும் தலைப்புச் செய்தியாக இருந்தது. 
அமெரிக்க உளவு, மற்றும் ராணுவத்துறைகளின் மிகப்பெரிய ராணுவ சாதனையாக வர்ணிக்கப்படும் இதில் முழுவதும் உண்மையில்லை என்கிறார். சேய்மோர் எம்.ஹெரிஸ் (Harsh) என்ற புலானாய்வு பத்திரியாளார். இவர் லண்டன் புக ரிவ்யூ என்ற இதழில் எழுதியிருக்கும் கட்டுரையை இஸ்லாமபாத்திலிருந்து வெளிவரும் டான் பத்திரிகையும் வெளியிட்டிருக்கிறது. இவர் அமெரிக்க வியட்நாம் போர்களில் அமெரிக்க நடவடிக்கைகள் பற்றியும் அமெரிக்கச் சிஐஏ பற்றியும் புத்தகங்கள் எழுதியிருப்பவர். மிக நீண்ட புலானாய்வுகளுக்குப் பின்னர் எழுதுபவர். உலகின் பெரிய பத்திரிகைகளின் நம்பிக்கை பெற்றவர். 
இந்தப் பரபரப்புக் கட்டுரையில் இவர் சொல்வது. அமெரிக்கா பின்லேடனை ஆப்கானிஸ்தான் மலைக்குகைகளில் தேடிக்கொண்டிருந்த காலகட்டத்திலேயே 2006 முதல் பின்லேடன் பாக்கிஸ்தானில் ரகசிய இடத்தில் கைதியாக . சவுதிஅரேபிய அரசின் வேண்டுகோளுக்கு இணங்க ஐஎஸ்ஐ என்ற பாக்கிஸ்தான் உளவு நிறுவனத்தால் பாதுகாக்கப்பட்டார். அல்கொய்தாவிற்கு உதவிகள் செய்து வந்த சவுதி அரசு இந்தப் பாதுகாப்பு செலவுகளை ஏற்பதாகவும் எந்தக் காரணத்திற்காகவௌம் அவர் கொல்லப்படக்கூடாது என்றும் சொல்லியிருந்தது. 
இந்தக் கைதியை அமெரிக்காவிற்குத் தருவதின் மூலம் தங்கள் உளவு நிறுவனங்களுக்குப் பெருமளவில் அமெரிக்க நிதி மற்றும் ஆயூத உதவிகளைப் பெற பாக்கிஸ்தான் திட்டமிட்டிருந்தது. அதற்கான நேரத்திற்காகக் காத்திருந்தது. இதற்கிடையில் அமெரிக்கா பின்லேடனை கண்டுபிடிக்க உதவுபவர்களுக்கு 25 கோடி டாலர் பரிசுத்தொகை அறிவித்து இருந்தது. பாக்கிஸ்தானில் பின்லேடனை ரகசியமாகக் காக்கும் பொறுப்பேற்றிருந்த ஜெனரல் பர்வேஷ் ஆஷ்பஃ கியானி, மற்றும் உளவுத்துறை தலைவர் அஹமது ஷுஜா பாசா அமெரிக்கப் பரிசு தொகைக்காகத் தங்கள் தேசத்திற்குத் துரோகம் செய்து ரகசியத்தை விற்றுவிட்டனர் என்கிறார் ஹெரிஸ். பாகிஸ்தானிலுள்ள அமெரிக்கச் சிஅய் ஏவின் அதிகாரி இவர்கள் சொல்வது உண்மைதான் என்று உறுதிசெய்யது கொள்ளப் பொய் சொல்லவதைக் கண்டறியும் டெஸ்ட்களைக் கூடச் செய்திருக்கிறார்கள். விஷயத்தை உறுதி செய்துகொண்டதும் அமெரிக்க ராணுவம் செயலில் இறங்கியது. 
சாட்டிலைட்கள் மூலம் பின்லேடனின் இருப்பிடத்தைக் கண்டுபிடித்து, கூரியர் தபால் தருபவர் மூலம் உறுதி செய்து கொண்டு, தடுப்பூசிபோடுபதாகச் சொல்லி ரத்த சாம்பில் எடுத்து DNA டெஸ்ட் செய்து பின்லேடன் இருப்பதை உறுதி செய்து கொண்டு சிறிய அதிவேக விமானங்களில் அதரடியாகச் சென்று பின்லேடன் வசித்துவந்த வீட்டிற்குள் சென்று ஆயுத போரட்டம் நடத்தி அவரைச் சுட்டு கொன்றோம் என்று அமெரிக்கா சொல்லியிருக்கிறது. இது பொய் என்கிறார் கட்டுரையாசிரியர். 
இருக்குமிடத்தை அறிவித்துத் தாக்குதல் நடத்தும்போது பாக்கிஸ்தான் ராணவ கட்டுப்பாடுகளைத் தளர்த்தி, மின் இணைப்புகளைத் தூண்டித்து ஆப்ரேஷன் நெப்டியூன் ஸ்பியர் சரியாக நடக்க எல்லா வசதிகளையும் இந்த ஐஸ்ஐ அதிகாரிகள் செய்து கொடுத்தனர். இதைச் சற்றும் எதிர்பார்க்காத பாக்கிஸ்தான் அரசு ஆப்ரேஷன் பற்றி அறிந்ததும். இது எங்கள் ராணுவத்துக்குப் பெரிய இழுக்கு. அதனால் ஒருவாரத்திற்குப் பின்னர் செய்தியை வெளியிடுங்கள். எங்கள் உதவியுடன் செய்ததாக உலகிற்கு அறிவியுங்கள்.. என்று அமெரிக்க அதிபரை வேண்டியது. 
ஆனால் ஓபாமா உடனையாக அறிவித்துவிட்டார். அதற்கு இரண்டு காரணங்களைச் சொல்லுகிறார் ஹெரிஸ் (Harsh) ஒன்று  அந்த சமயத்தில் அமெரிக்கத் தேர்தலில் மறுமுறை போட்டியிட தீர்மானித்திருந்த ஒபாமா இதைத் தன் அரசின் சாதனையாக மட்டுமே இருப்பதை விரும்பினார், மற்றொன்று இந்த ஆப்ரேஷனில் ஒர் அமெரிக்க ஹெலிகாப்டர் பின் லேடன் வசித்துவந்த கட்டிடத்தில் மோதி நொறுங்கிவிட்டிருந்தது. அது அமெரிக்க விமானம் இல்லை என்று மறைப்பது கடினமான செயல். எல்லாவற்றையும் விட ஒரு சின்ன நாடு அமெரிக்காவை ஏமாற்றிவிட்டதே என்ற அவரின் கோபம் 
பின்லேடன் பிடிபட்டபோது அவர் நிராயத பாணியாக இருந்தார். பாதுகாவலர்கள் இல்லை அமெரிக்கச் சீல் (SEAL) ராணுவம் மிக எளிதாக வீட்டின் உள் நுழைந்து அவரைச் சுட்டுக் கொன்றது. அமெரிக்கா சொல்லுவது போலக் கடலில்விமானம் தாங்கி கப்பலில் எடுத்து சென்று  அவர் உடல் இறுதி முகமதிய மதசடங்குகளுடனும் மரியாதைகளுடன் யுடன் அடக்கம் செய்யபடவில்லை. தூண்டு துண்டான உடலை இந்துகுஷ் மலைப்பகுதிகளில் எறிந்தனர் என்றும் எழுதியிருக்கிறார்.பின்லேடனின் இறுதிச் சடங்கு படங்களை வெளியிடாதற்கு இதுதான் காரணம் என்கிறார், 
இந்தக் கட்டுரை ஆதாரமற்றது என அமெரிக்க அதிபர் மாளிகை அறிவிப்புச் சொல்லுகிறது. . 
உலகின் சில அரசியல் தலைவர்களின் மரணங்களுக்குப் பின் ஏற்படும் சர்ச்சைகள் மரணமடைவதில்லை. பல ஆண்டுகள் அவை தொடர்ந்துகொண்டே இருக்கும். அந்த வரிசையில் ஓசாமா பின்லேடனும் இப்போது சேருகிறார். 

944902215
170515

19/5/15

அட நம்ம ஊர்காரர் மாப்பிள்ளை!

இங்கிலாந்து தேர்தல் ஒரு புதிய பாடம் 


பொதுத் தேர்தலில் கருத்துக்கணிப்புகளும், மீடியாக்களின் ஜோசியங்களும் பொய்த்துப்போனது இந்தியாவில் மட்டுமில்லை இங்கிலாந்திலும் தான்.
இங்கிலாந்தில், சமீபத்தில் நாடாளு மன்றத் தேர் தல் நடை பெற்றது. இதில், பல்வேறு கட்சி கள் போட்டி யிட்டாலும், தற்போதை பிரதமர் டேவிட்கேம்ரூனின் கன்சர்வேட்டிவ் கட்சிக்கும், தொழி லாளர் கட்சிக்கும் இடையே தான் இதுவரை நடந்த எல்லாத் தேர்தல்களையும் விடக் கடுமையானபோட்டி நிலவியது. கருத்துக்கணிப்பு நடத்திய இங்கிலாந்தின் மிகப்பெரிய மீடியாக்கள் சொன்ன விஷயம் இந்தத் தேர்தலில் எவருக்கும் அறுதிப்பெரும்பான்மை கிடைக்காது. தொங்கு பாராளு மன்றம் அல்லது ஒரு பெரிய கட்சி உதிரிகட்சிகளுடன் இணைந்த கூட்டணி ஆட்சி என்பது. ஆனால் தற்போதை பிரதமர் டேவிட்கேமரூனின் இன்னும் 5 ஆண்டுகள் 10 டவுனிங்கில் ஸ்டீரிட்டில் வசிக்கட்டும் என்பது மகேசன்களான மக்கள் சொன்ன தீர்ப்பு

மொத்தம் உள்ள 650ல், 330 தொகு தி களில், கன்சர் வேட்டிவ் கட்சி வெற்றி வாகை சூடியது. இத்தனை இடங்கள் கிடைக்கும் என நாங்கள் எதிர்பார்க்கவில்லைஎன்று ஆச்சரியப்பட்ட டேவிட் கேமரூன்.இங்கிலாந்தின் பிரதமராக 2வது முறையாகப் பதவியேற்றிருக்கிறார். இந்தத் தேர்தலில் கன்சர்வேட்டிவ் கட்சியின் மாபெரும் வெற்றியைப் போலவே எதிர்க்கட்சியான லேபர் கட்சியும் அதன் தலைவர்களும் மிகப்பெரிய தோல்வியைச் சந்தித்திருப்பது மற்றொரு ஆச்சரியம். புதிய பாராளுமன்ற உறுப்பினர்களில் அதிக அளவில் இளைஞர்கள். 30%க்கு மேல் பெண்கள். ( இதற்கான சட்டம் எதுவும் இல்லை)

தேர்தலில் டேவிட் கேமருனின் இந்த வெற்றிக்கு கணிசமான அளவில் உதவியிருப்பவர்கள் இங்கிலாந்தில் வாழும் இந்திய வம்சாவளியினர். பொதுவாக இவர்களில் லேபர்கட்சியை ஆதரிப்பவர்கள்தான் அதிகம் என்ற நிலை இருந்தது. ஆனால் தலையெடுத்திருக்கொண்டிருக்கும் நாலவது தலைமுறை மாற்றிச் சிந்திக்கத் துவங்கியிருக்கிறது. இங்கிலாந்தில் மூதலீடு செய்திருக்கும் பெரிய நாடுகளில் இந்தியா 3 வது இடத்தில் இருக்கிறது. 700க்கும் மேற்பட்ட கம்பெனிகளலிட்டிருக்கும் மொத்த மூலதனம் 1.3 பில்லியன் பவுண்ட்கள்(100 கோடிகளுக்கு மேல்). கடந்த ஒர் ஆண்டில் மட்டும்3500 வேலைவாய்ப்புகளை உருவாக்கியிருக்கிறார்கள். கேரூனின் இந்திய- இங்கிலாந்து நட்புறவு 21ம் நூற்றாண்டின் மிகச்சிறந்த விஷயங்களில் ஒன்று
அறிவிப்பும் கடந்த 5 ஆண்டுகளில் 3 முறை இந்தியாவிற்குத் தொழில் அதிபர் குழுக்களுடன் இந்தியாவிற்கு வருகை தந்திருப்பதும் இந்த இளைய தலைமுறையினருக்கு நம்பிக்கையைத் தந்திருக்கிறது. நீண்ட காலமாக இந்தியவம்சாவளியினர் இங்கிலாந்தின் அரசியலில் பங்கு பெற்றிருந்தாலும் சமீபகாலங்களில் அதிக அளவில் இளைஞர்கள் எல்லாக் கட்சியிலும் இருக்கிறார்கள். தேர்தலிலும் போட்டியிடுகிறார்கள். இந்தத் தேர்தலில் போட்டியிட்ட 59 இந்தியர்களில் 10 பேர் வென்று எம்பியாகியிருக்கிறார்கள், அப்படி வென்றவர்களில் ஒருவர் ரிஷி சுனாக். ஆக்ஸ்போர்ட் ,ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகங்களில் படித்தவர். ரிச்மோண்ட் என்ற தொகுதியில் நல்ல வாக்கு வித்தியாசத்தில் வென்ற இந்தக் கன்சர்வேட்டிவ் கட்சி வேட்பாளர் , இன போ சிஸ் நிறுவனத் தின் நிறுவனர் நாராயண மூர்த்தியின் மருமகன்,

இங்கிலாந்தின் வளரும் தொழிலதிபரான இவர் நாராயணமூர்த்தியின் ஒரே மகள் அக்க்ஷதாவை(Akshata) திருமணம் செய்து கொண்டிருப்பவர். தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும்போது நாராயணமூர்த்தி லண்டனில் இருந்தார்.
இம்முறை பாரளுமன்றதேர்தலில்போட்டியிட்ட லண்டன் நகர மேயரும் வெற்றிபெற்றிருக்கிறார், இவரது மனைவி இந்தியவம்சாவளியினர். இந்திய மருமகன்கள் ஜெயித்துகொண்டிருக்கிறார்கள்எனச் செய்தி வெளியிட்டது ஒரு தினசரி.
.ஸ்காட்லாந்து பகுதி வாக்காளர்களின் முடிவு இந்தத் தேர்தலில் மற்றொரு ஆச்சரியம் அங்குத் தனிநாடு கேட்டுப் போராடிக்கொண்டிருக்கும் ஸ்காட்டிஷ் நேஷனல் பார்ட்டி அதிரடியாக 59 சீட்டுகளில் 56ல் வென்றிருக்கிறது.. 8 மாதங்களுக்கு முன் ஸ்காட்லாந்து தனிநாடாகவேண்டுமா? என்ற பொதுவாக்கெடுப்பில் வேண்டாம் என்பது பெரும்பான்மையினரின் விருப்பமாக இருந்தது. ஆனால் இந்தத் தேர்தலில் போட்டியிட்டஇளைஞர்கள் பெற்றிருக்கும் வெற்றி தனிநாடாக விரும்பும் ஒரு புதிய செய்தியைச் சொல்லுகிறது. இந்தக் கட்சியின் வெற்றி வேட்பாளர்களில் ஒருவர் மெய்ரி பிளாக். வயது 20. கல்லூரி மாணவி. இங்கிலாந்து பாரளுமன்றச் சரித்திரத்திலேயே இந்த வயதில் எம் பியானவர் இவர்தான். ஸ்காட்லாந்து அரசியல் இளைஞகர்ளின் தலமையில் எழுந்து கொண்டிருக்கிறது.
இதுதான் கேம்ரூனுக்குத் தலைவலியாக இருக்கப் போகும் ஒரு விஷயங்களில் ஒன்று. ஐரோப்பிய யூனியன் கூட்டமைப்பில் தொடர்வது குறித்துப் பொதுவாக்கெடுப்பு 2017ல் நடத்துவோம் எனத் தனது தேர்தல் அறிக்கையில் சொல்லியிருக்கிறார். ஸ்காட்லாந்து மக்கள் ஐரோப்பியயூனிலில் தொடரவே விரும்புகிறார்கள். இங்கிலாந்தில் அதை விரும்பாதவர்கள் தான் அதிகம். இந்த நிலையில் பொதுவாக்கெடுப்பின் முடிவுகள் ஸ்காட்லாந்து மக்களின் விருப்பத்திற்கு எதிராக அமைந்தால் அவர்கள் தனிநாடக பிரியும் அபாயமிருக்கிறது. ஐக்கியத் தேசம் ஒரு வலிமையான கூட்டமைப்பிலிருந்து வெளியேறி, ஸ்காட்லாந்து தனிநாடகி அதில் உறுப்பினாராகும் என்ற புதிய வரலாறு கேம்ருனின் ஆட்சி காலத்தில் நிகழ்ந்துவிடுமோ என்ற கேள்வி எழுந்திருக்கிறது.

., “நீங்கள் குறிப் பிட்டது போலவே, இந்த முறையும் கேமரூன் அரசு (பிர் ஏக பார், கேம ரூன் சரக் கார) அமைய உள்ளது. உங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.என்று ததியிருக்கிறார்,இந்தத் தேர்தல் முடிவுகளுக்காகத் தனது இங்கிலாந்து பயணத்தை ஒத்திபோட்டிருந்த பிரதமர் மோடி.. இந்தியாவுடன் நட்புடன் இருக்கும் கேம்ருன் ஐக்கியநாட்டு சபையின் நிரந்தர உறுப்பினர் நாடாக இந்தியா வரஉதவுவதையும், இந்தியாவுடன் வணிக உறவுகள் அதிகரிக்கவும் விரைவில்மோடி இங்கிலாந்துக்குப் பயணம் செய்யவிருக்கிறார்.


ஒருகாலத்தில் இந்தியாவின்மீது ஆதிக்கம் செலுத்தி அனைத்தையும் முடிவு செய்து கொண்டிருந்த இங்கிலாந்தின் அரசியலின் தலைவிதியை நிர்ணயப்பதில் இன்று இந்தியர்களின் பங்களிப்பு இருப்பது என்பது உலக அரசியலில் ஒரு புதிய பாடம் .
கல்கி 24/05/15 இதழில் எழுதியது



13/5/15

கல் மீது காத்திருந்த கண்ணன்


இந்தியாவின் முதல் ஆறுவழி,அதிவேகப்பாதையான மும்பை- புனே எக்ஸ்பிரஸ் ஹைவேயில் 100கீமி வேகத்தில் பறந்து கொண்டிருக்கும் நம் கார் சட்டென்று ஒரு திருப்பத்தில் திரும்பியவுடன் வேகம் குறைகிறது. சரியாகப் பராமரிக்கப்படாத புழுதிபறக்கும் சாலையில் பயணம் தொடர்கிறது. சாலையின் இருபுறமும், அரைபட்டுசக்கையாகப்போகும் தங்கள் வாழ்வின் அந்தக் கடைசி நொடிக்காகக் காத்திருக்கும் கரும்பு கட்டுகளுடன் டிராக்டர் டிரையலர்களின் நீண்ட வரிசை.. தொலைவில் புகை கக்கும் சக்கரைஆலைகள்.
மகராஷ்டிர மாநில அரசியலின் அதிரடிகளில் முக்கியப் பங்குவகிக்கும் ”ஷூகர் லாபி”யின் கிராமங்கள் வழியே பண்டரிபுரத்திலிருக்கும் பாண்டுரங்க விட்டல் நாதனை தரிசிக்கப் போய்க்கொண்டிருக்கிறோம், மகராஷ்டிர மாநிலத்தின் ஷோலாப்பூர் மாவட்டத்திலிருக்கும் இந்தச் சின்ன கிராமான பண்டர்பூரில் இருக்கும் இருக்கும் பாண்டுரங்கன் பரப்ரஹ்ம ஸ்வருபம் அவனைப்பாடுங்கள்” எனச் சொல்லியிருப்பவர்,ஆதிசங்கரர். அதனால் இந்த 13ஆம் நூற்றாண்டு கோவிலில் நாள் முழுவதும் ஜெய் ஜெய் விட்டல, ராமகிருஷ்ண ஹரி என்ற நாமசங்கீர்த்தனம் ஒலித்துக்கொண்டே யிருக்கிறது. அந்தச் சின்ன நகரின் நடுவே இருக்கும் அந்தச் சின்னக் கோவிலுக்குள் நுழையும்முன், ‘வாழ்நாளில் ஒருமுறையாவது கங்கையைவிடப் பழமையான சந்திரப்பாக நதியில் நிராடி ஸ்ரீவிட்டலை தரிசனமும், நாமசங்கீர்த்தனமும் செய்தால் நம் பிறவிப்பயன் கிடைக்கிறதுஎன்று பக்த துக்காராம் பாடியிருக்கும் சந்திரப்பாக நதியைத் தேடிப்போகிறோம். கிட்டத்தட்ட ஒரு கீமி அகலமுள்ள அந்த நதி வறண்டு பாலைவனமாகப் பரந்து கிடக்கிறது. ஆற்றின் நடுப்பகுதியையுன் தாண்டி எங்கோ ஒரு கீற்றாக ஒட்டிக்கொண்டிருக்கும் வாய்க்கலில் இருக்கும் நீரை கவனமாக எடுத்துத் தலையில் தெளித்துகொள்ளுகிறோம்.

அருகில் வினோதாமாக நீண்ட கோணிப்பையை  உடையாக, அணிந்த ஒரு குழுவினர் கை கால்களை நனைத்துக்கொண்டு உரத்தகுரலில் பிராத்தித்துக்கொண்டிருக்கிறார்கள். ஹிந்தியோ மராட்டியோ இல்லாத அவர்களின் மொழி புரியவில்லை. அவர்கள் அருகிலிருக்கும் மலைக்காட்டில் வசிக்கும் ஆதிவாசிகள் என்றும் தங்களிருப்பிடத்திலிருந்து நடந்தே விட்டலைன காண வந்திருக்கிறார்கள், குளிர் காலமாக இருப்பதால் அந்த கோணிசாக்கு உடை என அறிகிறோம். நதியின் அகன்ற படிகள் பருவ காலங்களில் அதை அலையலயாகத் தொட்டுச்செல்லும் அழகிய நதியை கற்பனை செய்யத்தூண்டுகிறது. அலங்கரிக்கப்பட்ட பாண்டுரங்கன் உருவத்துடன் படம் எடுத்துக்கொள்ள அழைக்கும் சிறுவர்களைக் கடந்து  மேலே ஏறிப் போகிறோம்.

கோவிலின் முகப்பு ஒரு சிறிய மண்டபம் போலத்தான் இருக்கிறது. ஒரு பழைய கோவிலின் கம்பீரத்தை அது காட்டவில்லை. நாமத்தேவர் துவாரம் என்ற வாயிலின் உள்ளே நுழைந்தால் பண்டரிநாதனின் முகத்தைமட்டுமே தொலைவிலிருந்து பார்க்கலாம், அருகில் சென்று தொட்டுத்தரிசிக்க வேண்டுமென்றால் பக்கத்திலிருக்கும் கட்டிடத்திற்குள் போங்கள் என்றார்கள். கோவில் இங்கிருக்கும்போது தரிசனம் மட்டும் எப்படி அங்கே? எனப்புரியாமல் அதனுள் நுழைகிறோம். படிக்கட்டுக்கள் இல்லாமல் சாய்தளமாகவே அமைக்கப் பட்டிருக்கும் 4 மாடிகட்டிடம் ஒரு க்யூ காம்ளெக்ஸ் எனப் புரிய சற்றுநேரமாகிறது. அதில் நடந்து கட்டிடத்தின் மேல் தளத்திற்கு வந்த பின் ஒரு பாலத்தைக் கடந்து கோவிலின் மேல் தளத்தை அடைகிறோம் அங்குக் கோவிலை அதன் மேல்மாடங்களின் வழியே ஒரு பிரதட்சணம் செய்து பின் சன்னதிகளின் முன்வாசலை அடைகிறோம். ஒரு நீண்ட க்யூ வரிசையில் நிற்கும் ஆயாசத்தைக்கொடுக்காமல்,
அதே நேரத்தில் இடப்பிரச்சினையையும் தவிர்த்துச் சமோயாசிதமாக இப்படி ஒரு மாடிகட்டிடத்தை எழுப்பியிருக்கிறார்கள். பக்தர்களில் மஹாராஷ்டிராவின் பல பகுதிகளிலிருந்து வந்திருக்கும் எளிமையான மக்கள்தான் அதிகம். சந்த ஞானேஸ்வர் முதல் துக்காரம் வரை பல மஹான்கள் பண்டரிநாதன் குறித்துப் பாடியவைகள் அபங்கங்கள் என்ற பஜனைப் பாடல்களில் எதையாவது பாடிக்கொண்டே வருகிறார்கள். சன்னதியை நெருங்க நெருங்க சங்கீர்த்தனத்தின் டெஸிபல் அதிகரிக்கிறது.
கோவிலின் உள்ளே செல்ல செல்ல அழகான சிற்பங்கள் நிறைந்த கருங்கல் தூண்கள். ஒவ்வொரு சிற்பமும் பேசுகிறது. சன்னதிக்கு அருகில் இருக்கும் ஒரு தூண் முழுவதும் வெள்ளிக்கவசம், நேற்றுதான் சாத்தியதுபோல் பளபளக்கிறது, நாம்தேவர் மனமுருகி பாடி ஆடியபோது பண்டரிநாதனே அவருடன்நடனமாடிய இடம்எனஅதைப்போற்றி அந்தக் காட்சியை அதில் வடித்திருக்கிறார்கள் சாட்சி தூண் என அழைக்கப்படும் அந்தத் தூணை ஆலிங்கனம் செய்து நமது பிராத்தனைகளைக் கண்ணனிடம் சொல்லாம். அந்த இடத்திற்கு வந்தவுடன் சில பக்தர்கள் நடனமாடுகிறார்கள் அருகிலியே மற்றொரு தூணில் சிறிய ஆனால் கம்பீரமான ராமதாஸர் ஸ்தாபித்த ஆஞ்னேயர்.. மெல்ல கடந்து வரிசையோடு நகர்கிறோம். சன்னதிக்குள் நுழையும் முன் பெரிய கண்ணாடிப் பேழையில் பிரித்துவைக்கப்பட்டிருக்கும் அச்சுபோன்ற அழகான கையெழுத்தில் சமஸ்கிருத்தில் எழுதப்பட்டிருக்கும் மஹாபாரதம் புத்தகம்.. வரவேற்கும் வெள்ளிக்கதவுகளைத் தாண்டி சன்னதிக்குள் நுழைகிறோம். துளசியும் சந்தனமும் மணக்கிறது, சுமார் 4 அடி உயரத்தில் இடுப்பில் இரண்டு கைகளையும் வைத்துக்கொண்டு நிற்கும் விட்டலன் மிக அருகில் நிற்கும் நம்மை . என்ன வந்தாச்சா? எப்படி இருக்கிறாய்?” எனக் கேட்பதுபோலப் பிரமை.. அவ்வளவு நெருக்கத்தில் தெய்வத்தின் திருப்பாதங்களைக் கைகளால் தொட்டு நம் தலையை வைத்து வணங்குகிறோம்.பல ஆயிரம் ஆண்டுகள் பூஜிக்கப்பட்ட பல கோடிபக்தர்கள் தொட்ட பாதங்களில் நம் கைகளை வைத்தபோது பரவசத்தில் உடல் சிலிர்த்துப் போனது நிஜம்.

அதிக நேரம் அனுமதிக்காவிட்டாலும், யாரும் பிடித்துத் தள்ளவில்லை விரட்டவில்லை. விரைவாக நகருங்கள் என்று கண்ணியமாகச் சொல்லுகிறார்கள். அர்ச்னை, பிசாதம் எதுவும் கிடையாது. அர்ச்சகருக்குப் பணம் கொடுத்தால் சுவாமியின் பாதத்தில் வைக்கச் சொல்லுகிறார்கள். மனநிறைவோடு அடுத்துத் தனியாக இருக்கும் சன்னதிக்குள் நுழைகிறோம், உடல் முழுவதும் நகைகளுடன் கம்பீரமாக அரசகுமாரியின் களையில் ருக்மணி. கோவில் வளாகத்தில் வெங்கடசலபதியும் சிவனுமிருக்கிறார்கள்.
இந்தச் சின்னக் கோவிலுக்கு ஆறு வாசல்கள். எல்லாம் விழாக் காலங்களில் மட்டுமே திறக்கப்படுகிறது. மற்ற நாட்களில் இரண்டில் மட்டுமே அனுமதி. கோவிலைச் சுற்றியிருக்கும் வீதிகளில் வாகனங்களுக்கு அனுமதியில்லை. பூஜைப்பொருட்கள் விற்கும் கடைக்கார்களே வீதிகளில் நீர் தெளித்துக் கோலமிட்டுவைக்கிறார்கள்.
லோகத்தண்டம் என்ற காட்டில் வாழ்ந்தவர் சன்னு முனிவர், அவர்மனைவி சாந்தகி. புதல்வன் புண்டரீகன். ரிஷியின் மகனாக இருந்தும் கொடியவனாகிவிட்ட மகனுக்காக வருந்தி காசி செல்லுகிறார்கள் அந்தத் தம்பதியினர். பயணத்திலும் உடன் வந்து தொந்தரவுகள் செய்யும் புண்டரீகன் வழியில் ஒரிடத்தில் வயதான பெற்றோர்களுக்குத் தவறாமல் பணிவிடை செய்யும் மற்றொரு முனிவரை சந்திக்கநேர்கிறது. அவரது போதனையால் மனம் திருந்தி அவரிடம் பாவ மன்னிப்பு பெற்று இந்த இடத்தில்தங்கி தன் பெற்றோர்களுக்கு மிகச்சிறப்பாகப் பணிவிடைகள் செய்துவருகிறான். மனம் திருந்திய ஒருவன் தன்பெற்றோர்களுக்குச் சிரத்தையுடன் பணிசெய்வதுதான் உண்மையான பக்தி என்பதை உணர்த்த கிருஷ்ணர் புண்டரீகனுக்கு காட்சி தர அங்கு வருகிறார். அந்த நேரத்தில் நதியில் புண்ட்ரீகர். தன் பெற்றோரை கைகளில்தூக்கி
சுமந்து சென்று ஸ்நானம் செய்விப்பதையும் தொடர்ந்து அவன் அவர்களுக்குச் சிரத்தையுடன் பணிவிடைகள் செய்வதையும் பார்க்கிறார். அழைத்த கண்ணனிடம் அவர் யாரென்று அறியாமல்நான் பெற்றோரின் சேவையில் இருக்கிறேன். யாராக இருந்தாலும் அங்கேயே நில்லுங்கள்எனச் சொல்லி வந்தவர் வெயிலினால் சூடேறியிருக்கும் தரையில் நிற்க வேண்டியிருக்குமே என்பதால் ஒருசெங்கலை வீசி எறிந்து இதன் மீது நில்லுங்கள் என்கிறார். பகவானும் அதன் மீது நின்று காத்திருக்கிறார்.

(விட் என்றால் மாரத்தியில் செங்கல் விட்டோபா -செங்கல் மேல் நிற்பவர்) பணிவிடைகள் செய்து முடித்து வந்த பார்த்த புண்டரீகன் கண்ணனை கண்டு ஆச்சரியமும் அதிர்ச்சியும் அடைந்தான். அவனது பெற்றோர் பக்தியை மெச்சி தொலைவில் இருந்த நதியை அவன் வீட்டருக்கே அரைச்சந்திரவடிவில் திருப்பி அமைத்து அந்த நதியின் வேகத்தைக் கட்டுப்படுத்த பீம பைரவரையும் நியமிக்கிறார் கண்ணன்.. இன்றும் நதியின் கரையில் பீமபைரவருக்குக் கோவில் இருக்கிறது.
அன்று புண்டரீகனின் வேண்டுகோளுக்கு ஏற்ப இங்கேயே எந்நாளும் தரிசனம் தர சம்மதித்தார் கிருஷ்ணன் தன்னை ஈன்ற பெற்றோர்களை யாரொருவர் மதித்து அன்புடனும் கருணையுடனும் பாதுகாக்கிறார்களோ அவர்களுகளைப் பிரக்த்யக்ஷமாக உடனிருந்து காப்பான் விட்டலன்என்கிறது தல வரலாறு. இது நடந்த நாள் ஆடிமாத ஏகாதிசி என்பதால் அதை ஆண்டுதோறும் விழாவாகக் கொண்டாடுகிறார்கள். அந்த விழாவில் கண்ணனின் பாதங்கள் ஊர்வலமாக எடுத்துசெல்லபடுகிறது.
ஆண்டுக்கு இங்கு அதற்கு வருபவர்களின் எண்ணிக்கை 10 லட்சம் . பல ஆயிரம் ஆண்டுகளாக எங்கள் முதாதையர்கள் பூஜித்த கோவில் இது. என்கிறார்.பரம்பரைதலமை அர்ச்சகர் பாலகிருஷ்ன படவே. விழா நாட்களில் கண்ணனின் உருவத்தைத் தலையில் தாங்கி நடனம் ஆடும் உரிமை பெற்றவர். நாட்டின் பல பகுதிகளில் இருக்கும் பாண்டுரங்கன் கோவில் விழாக்களுக்கு அழைக்கப்படும் கெளரவத்தைப் பெற்றிருக்கும் இவர் தற்போது அரசு அர்ச்சகர்களை நியமிக்கும் முறை அறிமுகமானதற்காக வருந்துகிறார்.
மும்பை திரும்பும் முன் மீண்டும் ஒரு முறை கண்ணனை தரிசிக்கச் செல்லுகிறோம்.. இம்முறை மெல்ல அசையும் மயிற்பீலி கீரீடத்துடன் ராஜதரிசனம். கண்ணில் நிற்கும் அந்தக் காட்சியுடன்,காதில் ஜெய் விட்டல கோஷம் இன்னமும் ஒலித்துக்கொண்டிருக்கிறது.
படங்கள் ரமணன்
 கல்கி 10/05/15 இதழலில் எழுதியது