25/6/16

பொன்மாலைப் பொழுதுகள் 5


இன்னிக்கு நான் உன் நடனத்தை வீடியோ எடுக்கப் போறேன். அழகாக ஆடணும். கொஞ்சம் பின்னாடி போய் கிராஸ் லைட் இல்லாத ஏரியாவிற்குள் போய் ஆடுகிறாயா?” 

என்ன ரமணன்? . எங்களூர் மயிலிடம் தமிழில் பேச ஆரம்பித்துவிட்டீர்கள்? 
“4 நாளில் நல்லபிரண்டாகிவிட்டது அதற்குத் தமிழ் புரிகிறது 
என்ற என் பதிலைக்கேட்டு நண்பரும் அவர் மனைவியும் அந்தத் தோட்டமே அதிரும்படி சிரித்தார்கள். துபாய் நகரின் பரபரப்பான வீதியிலிருக்கும் பல உயர்ந்த கட்டிடங்களுக்கு நடுவே நிற்கிறது எமிரேட் டவர்ஸ் என்ற இரட்டைப்பிறவி உயர்ந்த கட்டிடங்கள்.
ஜேம்ஸ்பாண்ட் படங்களில் கூட நடித்திருக்கிறதாம், அதில் ஹோட்டல்கள், கார்பேர்ட் அலுவலகங்கள், பேங்க் கிளப்கள் எல்லாம் இருக்கிறது. அந்தக் கட்டிடங்கள் இருக்கும் வளாகம் ஒரு அழகான சோலையாக இருக்கிறது, பச்சை கார்ப்பெட்டாக புல்வெளி. பல வண்ணங்களில் சிரிக்கும் மலர்கள் சில வண்ணத்துப்பூச்சிகள், அடர்ந்து உயர்ந்திருக்கும் மரங்கள் அதன் பின்னே உயர்ந்த கட்டிடங்கள் என அந்த இடமே ரம்மியமாக இருக்கிறது. இந்த இடத்தில் அனுமதிபெற்றவர்கள் காலையில் காலாற நடக்கலாம். நண்பர் வாக்கிங்க்காக முதல் நாள் அழைத்துபோன இந்த இடத்தைப் பார்த்து அசந்து போனேன். அந்தச் சோலையில் மயில்கள். அரை டஜனுக்கும்மேல் ஆடிக்கொண்டிருந்த ஆச்சரியம். மயிலாடும் துபாயை நான் எதிஎபார்க்கவில்லை. இந்த சோலைகளைப் பார்த்து வளரும் இன்றைய தலைமுறையினர் . துபாய் நகரம் பாலைவனத்தின் ஒரு பகுதியாகத்தான் இருந்தது என்று சொன்னால் நம்பமாட்டார்கள். நகரில் பல இடங்களில் பசுமை கொப்பளிக்கிறது. சாலைஒரங்கள், சாலைச் சந்திப்புக்கள், எனப் பல இடங்களில் பசும் புல், மலர் படுக்கைகள். இந்த மண்ணிற்கு தகுந்த விதைகள், செடிகள் அதற்கு சொட்டு நீர் பாயச்சும் டெக்னிக் எல்லாம் இஸ்ரேல் தந்திருக்கும் தொழில்நுட்பம். .


.தினமும் காலையில் வாக்கிங்கில் மயில்களைப் படமெடுத்தேன்.மயில்களை ஆடும் நேரத்தில் படமெடுப்பதின் கஷடம் போட்டோகிராபர்களுக்கு புரியம். . அருகில் போனால் தோகையை மடக்கிக்கொண்டு முறைக்கும். தள்ளிநின்றால் நல்ல படம் கிடைபது கஷ்டம். ஆனால் இங்கே தொடும் தூரத்தில் சமர்த்தாகச் சொன்னபடி கேட்டுக்கொண்டிருக்கிறது. ஸ்டைல் காட்டி சைட் அடிக்கும் பையன்களை கவனிக்காத கல்லூரி பெண்கள் போல அழகாக ஆடிக்கொண்டிருக்கும் இவைகளைகவனிக்காமல் பெண்மயில்கள் சற்று தள்ளி தங்கள் வேலைகளில் பிசியாக இருந்தது. 

வளாகத்தின் உள்ளே நடக்கும் சாலைகள் பளிச்சென்று எப்போதும் சுத்தமாக இருக்கிறது. ஹார்ன் கேட்டால் பதறிபறக்காமல் சற்று ஒதுங்கி வழி விட்டு மறுபடியும் சாலையில் வந்து ஆடுகிறது. துபாயில் பொதுஇடங்களில் குப்பை போட்டால் பைன் என்று அந்த மரங்களுக்குக்கூட தெரியுமோ எனத் தோன்றியது.
நகரின் பெரிய சாலைகளைக் கடக்க தனிப் பாதை-பாலங்கள் கிடையாது. அருகிலுள்ள மெட்ரோ நிலையங்களிலிருந்து வெளியே வரும் பாலங்களைத்தான் பயன்படுத்தவேண்டும். காலை 6 மணிக்கு அதன் சுத்தமும் ஏசியின் இதமும் நடக்கும் தொலைவை மறக்கச்செய்கிறது. 
நகரிலுள்ள மால்களில் எல்லாவற்றிலும் ஆடம்பரமான விலையுர்ந்த பொருட்களை விற்க தனிப் பகுதியிருக்கிறது.. ஆனால் பணக்காரர்கள் மட்டுமில்லை சும்மா பார்க்க வந்தவர்களும் மற்ற கடைகளில் எதையாவது வாங்கிக்கொண்டே இருக்கிறார்கள். விலைகள் மலிவு என்று சொல்ல முடியாது. ஆனால் சேல் என்பது நிஜமான சேலாக இருக்கிறது. உள்ளுர்கார்கள் உதவினால் புத்திசாலித்தனமாக ஷாப்பிங் செய்யலாம். மால்களில் என்னை கவர்ந்தவிஷயம். அதன் ஒவ்வொரு மாலின் மாறுபட்ட டிசைன்களும் உட்புற அலங்காரங்களும். ஒவ்வொன்றும் ஒவ்வொரு மாதிரி வடிவமைக்கப்பட்டிருக்கிறது. பகலிலேயே மின்சார விளக்குகளின் வெள்ளத்தில் மிதக்கும் ஒரு மாலில் மேலிருந்து சூரிய ஒளி உள்ளே அழகாக விழும் அமைப்பு. ஒரிடத்தில் பல வண்ணக்குடைகளைக்கொண்டே திறந்த வெளியை நிரப்யியிருக்கிறார்கள்.
மால்களின் உள்ளே நம் நேரத்தையும் பணத்தையும் சாப்பிடப் பல விஷயங்கள். எமிரேட்டிஸ் ஏர்லயனின் புதிய விமானமான ஏர் பஸ்ஸின்(380) விமானியின் அறையில் உட்கார்ந்து பார்க்கலாம். பனிச்சறுக்கில் விளையாடலாம். எல்லாவற்றிருக்கும். கட்டணங்கள் உள்ளூர் வாழ்க்கைத்தரத்திற்கே கூட அதிகம் தான். 
உலகின் சிறந்த புத்தக கடைகளில் ஒன்று kinokuniya book world ஜப்பானிய நிறவனமாக இது உலகின் பல முக்கிய நகரங்களில் இருக்கும் புத்தககடல். (ஜப்பானில் மட்டும் 60 கடைகள்) துபாய் மாலில் 68000 சதுர அடியில் (நம் புத்தக் கண்காட்சி சைஸ்). 5 லட்சம் புத்தகங்கள் ஆயிரக்கணக்கான பத்திரிகைகள். சும்மா பார்க்கவே ஒரு நாளாகும். உட்கார்ந்து படிக்க வசதி உதவ கைட்கள். தேவையான புத்தகம் எங்கேயிருக்கிறது என்று நீங்களே தேட கம்யூட்டர்கள். என பல வசதிகள்.
துபாய் உருவான கதையைச்சொல்லும் Christopher Davidson, என்ற ஆசிரியர் எழுதிய Dubai: The Vulnerability of Success புத்தகத்தைத் தேடிக்கொண்டிருந்தேன். கைட் அருகில் வந்து மேனேஜர் என்னைப்பார்க்க விரும்புவதாகச் சொன்னார். எதற்கு என்ற ஆச்சரியத்துடன் அவரைச் சந்தித்தேன்.
முதல் கேள்வி நீங்கள் டூரிஸ்ட்டா?
நீங்கள் தேடும் புத்தகத்தில் இருக்கும் சில வரிகள் இந்நாட்டு மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல் இருப்பதால் இங்கு தடை செய்யப்பட்ட புத்தகம்”. தேடாதீர்கள். இந்த தடை உள்ளுர்கரார்களுக்கு தெரியும். நீங்கள் வெளிநாட்டில் வாங்கிக்கொள்ளுங்களேன் என்றார். அவ்வளவு பெரிய புத்தக கடையை அனுமதித்திருக்கும் அரசு எப்படி அதை கண்காணிக்கிறது என்ற ஆச்சரியம் என்னைத் தாக்கியது. மிகுந்த நட்புடன் பேசிக்கொண்டிருந்த அந்த லெபனான் நாட்டுக்காரர்இன்று இங்கு வெளியான மன்னர் புத்தகங்களைப் பாருங்களேன்எனக் காட்டினார். நாட்டின் மன்னர் எழுதிய புத்தகம் அங்கு அன்றுதான் வெளியிடப்பட்டிருக்கிறது. மலையாள மொழி பதிப்புடன். விழா, கூட்டம் எதுவும் கிடையாது. கடையில் முன்னால் தனி மேசையில் வைத்திருக்கிறார்கள். அவ்வளவு தான் வெளியீடு. நம் வெளியீட்டு விழாக்கள் கண்ணில் மின்னி மறைந்தது. விற்கும் இந்திய புத்தகங்கள் பற்றி கேட்டேன். கலாமின் வாழ்க்கை வரலாறு புத்தகங்கள் தொடர்ந்து நல்ல விற்பனையில் இருப்பதாகச் சொன்னார். சந்தோஷமாக இருந்தது. நல்ல ஆங்கில இதழ்கள் வெளியான அடுத்த மாதம் பாதி விலைக்குக் கிடைக்கிறது. அதற்காகவே காத்திருந்து வாங்குகிறார்களாம். இந்தப் பயணத்தில் மிக மகிழ்ச்சியாகக் கழித்த நேரங்களில் இந்தப் புத்தக உலகமும் ஒன்று.



இந்த மாலில் ஒரு மிகப்பெரிய மீன்கள் காட்சியகம் இருக்கிறது. அந்த இடத்தின் வெளிச்சுவரே -40 அடி உயரம் 60 அடி நீளத்தில் ஒரு மீன் தொட்டியின் கண்ணாடிச்சுவராக இருப்பதால் அதில் தெரியும் பலவித மீன்கள் நெளிந்து வளைந்து ஆடி நம்மை அழைக்கின்றது. உள்ளே ராட்சத சைஸ் கண்ணாடி குழாய்கள் வழியே நடக்கும் போது அவைகள் நம்மைசுற்றி வந்து நம்மைப் பார்த்து கண்ணாடிச் சுவர்களின் வழியே ஹலோ செல்லுகிறது. எப்போதும் நீரில் வாழும் இனம் நம்முடன் அருகில் அதன் சூழலிலேயே நீந்திக்கொண்டிருப்பதை இருப்பதைப்பார்த்தவண்ணம். நடந்ததும் வெளியே அந்தக் கண்ணாடி சுவரின் அருகில் அமர்ந்து சாப்பிட்டதும் வினோதமான அனுபவம்.

பளிச்சென்று இரண்டுவரிகவிதைகள். பொன்மொழி, ஜோக்குகள்(சில கடி), சொந்த அனுபவங்கள், சூழ்நிலைகளில் கற்றது, சும்மாத்தோன்றியது என்று தன் செல்பி படங்களுடன் முகநூலைத் தினசரி கலக்கிக்கொண்டிருக்கும் சுமிதா ரமேஷ். (அவர் பதிவு போடவில்லை என்றால் FB லீவு என்று எடுத்துக்கொள்ளலாம்) குடும்பத்தினரை அன்று மாலை சந்திக்க திட்டம், அவர்கள் வசிப்பது 40 கீமீயிலுள்ள அடுத்த தேசமான ஷார்ஜாவின்
எல்லையில். .நண்பர் ரமேஷின் பணியிடம் துபாய். ரமேஷ் அவர்களைச் சென்னையில் சந்தித்திருக்கிறேன். நண்பர் சுதாங்கனுக்கு நெருக்கமானவர். தங்கியிருந்த இடத்திற்கு வந்து என்னையும் மனைவியையும் வீட்டிற்கு அழைத்துச் சென்றார். நண்பர் ரமேஷ். “டிராபிக் அதிகம் இல்லை என்றால் 25 நிமிடம்என சொல்லி கூட்டிப்போனார். அவரின் பேச்சு சுவாரசியத்தில் முக்கால் மணீயானது தெரியவில்லை. எங்களைச் சந்தித்த திருமதி சுமித்திராவின் சந்தோஷம், அவர் கண்களில் தெரிந்தது. நீண்ட நாள் தெரிந்த நண்பர்களின் உணர்வை ஏற்படுத்தினர் அந்தத் தம்பதியினரும் அவர்களுது குழந்தைகளும். .சுமித்திரா தமிழ் குஷி காம் என்ற இணைய வானொலியில் தமிழ் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்குபவர். ஒவ்வொரு செவ்வாயும் முகநூல் நண்பர்களின் விருப்பத்தின் வரிசையில் பாடல்களை ஒலிபரப்புகிறார். இதைத்தவிர இவருக்குப் பல முகங்கள். தன் வீட்டு பால்கனியில் வந்து முட்டையிட்டிருந்த ஒரு புறாவைப்பற்றி இவர் பத்திரிகையில் எழுதியதில் ஒரு சிறுகதையின் சாயலைப்பார்த்தேன். இப்போது சுஜாதாவின் பாணியில் இவர் எழுதிய ஒரு கதை வெளிவந்திருக்கிறது. இனி நிறைய எழுதுவார் என நம்புகிறேன். எல்லாவற்றிருக்குமேல் இவரது காரியங்கள் யாவிலும் கைகொடுக்கும் அன்பான கணவரைப் பெற்ற அதிர்ஷடசாலியான பெண்மணி..
அழகான குடும்பம். மகன் ஹரிஷ் முதல் பார்வையிலேயே எங்களைக் கவர்ந்தவர். இந்தியாவிலிருக்கும் NIT க்கான நுழைவுத்தேர்வில் எல்லாப்பாடங்களிலும் 100/100 வாங்கியிருக்கிறார். அட்மிஷன் நிச்சியம் என்றாலும் துளி அலட்டல் இல்லை. என்ன படிக்க வேண்டும்? எங்குப் போகவேண்டும் என்பதில் தெளிவாக இருக்கிறார். நிச்சியமாக இந்த இளைஞன் உயரங்களைத்தொட்டுப் பெற்றோருக்கு பெருமை சேர்ப்பார். மகள் ஶ்ரீநிதி மிகச் சிறிய பெண். பாடப்பிடித்திருக்கிறது. நல்ல குரல்வளம். அம்மாவின் சிறப்பான கவனத்தில் உருவாகிக்கொண்டிருக்கிறார். அவரைபோலவே வருவார் என நம்பிக்கை அளிக்கும் அழகான பெண்குழந்தை. அவர்கள் உபசரிப்பைப்போலவே உணவும் அருமையாக இருந்தது. பேச்சு தொடர்ந்து 

இரவு நீண்டு கொண்டிருந்ததால் துபாய் திரும்பினோம். சொன்னபடி ரமேஷ் 25 நிமிடத்தில் துபாய்.. அந்த நேரத்திலும் சுமிதா எங்களுடன் பயணித்துத் தங்கியிருக்கும் இடம் வரை வந்துவிடையளித்தது நினைவில் என்றும் நிற்கும் நெகிழ்ச்சியான நேரம். 
நாளை வாக்கிங்கில் எல்லா மயில்களையும் சேர்த்து ஒரு குருப் போட்டோ எடுக்கமுடியுமா? என நினைத்துக் கொண்டே தூங்கப் போனேன்.



2 கருத்துகள் :

  1. Sumitha Ramesh எக்ஸ்லண்ட் சார் :) தன் யையானேன் :) துபாய் மால்..மயில்..பில்டிங்ஸ் அத்தனையும் அழகு பெறுகிறது...கேமராவிலும்..எழுத்திலும் :)
    Like · Reply · 1 · 11 June at 23:13
    Sharadha Sundaresan
    Sharadha Sundaresan அழகான அனுபவம். சொன்ன விதம் அருமை. மானாட, மயிலாட உங்கள் எழுத்து நடையில் ஆடிவிட்டேன். Mrs.Sumitha Ramesh யின் அறிமுகம் அற்புதம். GOD BLESS YOU, my friend..(Sumitha Ramesh)
    Like · Reply · 2 · 11 June at 23:15
    N.Rathna Vel
    N.Rathna Vel பயணம்
    பொன்மாலைப் பொழுதுகள் 5 - துபாய் நகரம் - மயில் தரிசனம் - எங்கள் இனிய நண்பர் திருமதி Sumitha Ramesh - அருமையான பதிவு - எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி சார் திரு Ramanan Vsv
    Like · Reply · 1 · 12 June at 04:28
    Valiyur Subramanian
    Valiyur Subramanian மயிலும் இரமணனும் ஒரே நேரத்தில் தங்கள் தோகையை விரித்து அழகாக ஆடியுள்ளனர்.
    Like · Reply · 1 · 12 June at 07:01
    Subasree Mohan
    Subasree Mohan அருமை.
    Like · Reply · 1 · 12 June at 08:32
    Vedha Gopalan
    Vedha Gopalan ஓ! சுமி பற்றி எழுதியதால் துபாயா!!
    Like · Reply · 1 · 12 June at 09:06 · Edited
    Vedha Gopalan
    Vedha Gopalan //அவர் பதிவு போடவில்லை என்றால் FB லீவு என்று எடுத்துக்கொள்ளலாம்)// மிகச்சரியான வாக்கியம்
    Like · Reply · 1 · 12 June at 09:11
    Vedha Gopalan
    Vedha Gopalan மயிலிடம் தமிழில் பேச ஆரம்பித்துவிட்டீர்கள்? - ஹா ஹா (இதற்கான பதில்தான் டாப்கிளாஸ்)
    /இரட்டைப்பிறவி// வாவ்
    //கார்ப்பெட்டாக // ஆஹா
    //அந்த மரங்களுக்குக்கூட தெரியுமோ // அருமை
    // சேல் என்பது நிஜமான சேலாக இருக்கிறது// செம
    /நம் வெளியீட்டு விழாக்கள் கண்ணில் மின்னி மறைந்தது. // அதே
    /சுஜாதாவின் பாணியில் இவர் எழுதிய ஒரு கதை வெளிவந்திருக்கிறது/ சபாஷ்
    Like · Reply · 1 · 12 June at 09:15
    Ramesh Venkatraman
    Ramesh Venkatraman சூப்பர் ஸார்!
    Like · Reply · 12 June at 12:22

    பதிலளிநீக்கு
  2. Ramesh Venkatraman சூப்பர் ஸார்!
    Like · Reply · 12 June at 12:22
    Bharati Paul
    Bharati Paul Good to hear about all the new experiences that you are having there. Make use of every minute of your,stay,
    Like · Reply · 12 June at 13:38
    V Saiguru Prasad
    V Saiguru Prasad Thank you Ramanan for the tour. In 2013 I was staying in Sharja for 3 weeks. But I missed many things .I repent for it now.
    Like · Reply · 12 June at 14:20
    Chellammal Chells
    Chellammal Chells · 3 mutual friends
    சூப்பரா இருக்கே ...மயில் துபாய் மண்ணில் மையம் கொண்டதா
    Like · Reply · 1 · 12 June at 17:17
    Shahjahan R
    Shahjahan R Beautiful
    Like · Reply · 1 · 12 June at 17:35
    Sridhar Trafco
    Sridhar Trafco இனிமையான பயண அனுபவங்கள்...

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்கள்