23/6/13

பெரிய அண்ணன் பார்த்து கொண்டிருக்கிறார்,





உங்கள் ஈ மெயில், பேஸ்புக், டிவிட்டர், பிளாக்இண்டர்நெட்டில் அனுப்படும் போட்டோக்கள், ஸைக்ப்பில் பேசுவது, யூடூபில் பார்ப்பது, அனுப்புவது எதுவாக இருந்தாலும் அமெரிக்க உளவுதுறையால் எப்போது வேண்டுமானாலும் உங்கள் இண்ட்ர்னெட்டின் சர்வரிலிருந்து நேரிடையாக பெற்று பார்க்க முடியும். தொடர்ந்து கண்காணிக்கவும் முடியும்.  அதற்கான அதிகாரமும்  அத்தனை வசதிகளும் அவர்களிடமிருக்கிறது. .  ஆப்பிள், மைக்ரோசாப்ட். குகூள், யாகூ போன்ற எல்லா நிறுவனங்களும் இதற்கு உதவ ஒப்பந்தம் செய்து  கொண்டிருக்கின்றன,இந்த திட்டத்திற்கு பிரிசம்”PRISM என்று பெயர்  ”உலகம் முழுவமுள்ள தனி மனிதர்களின்  சுதந்திரத்தில் தலையிடும் மிகப்பெரிய குறுக்கீடு, மனித உரிமை மீறல் இது என்ற அதிர்ச்சியான தகவலை கடந்த வாரம் அமெரிக்காவின் புகழ் பெற்ற தினசரி கார்டியன்” வெளியிட்டிருக்கிறது கார்டியன் இதழ் அதன் நம்பகமான செய்திகளுக்கும், ஆணித்தரமான தலையங்களுக்கும் பெயர் பெற்றது. தொடர்ந்து வாஷிங்டன் போஸ்ட் தினசரியும்  இது பற்றி ஒரு கட்டுரையை வெளியிட்டிருக்கிறது.
NSA நேஷனல் தேசீய ஏஜென்ஸி என்பது அமெரிக்க உளவு துறையின் 
ஒரு அங்கம் 1952லேயே துவக்கபட்ட இது முதல் 20 ஆண்டுகள் எங்கிருந்து இயங்குகிறது எனபதே தெரியாத அளவிற்கு ரகசியமானதாக இருந்தது. NSA என்றால் ”நோ ஸ்ச் ஏஜென்சி” என்று கூட கிண்டல் செய்யபட்டது. 1975ல் ”இது வெளிநாடுகளில் அமெரிக்க பாதுகாப்புக்கு ஏதிராக நடவடிக்கைகளில் ஈடுபடும் சந்தேகத்திற்குரிய நபர்களின் செய்தி தொடர்புகளை கண்காணிக்கிறது. அமெரிக்க மக்களின் தனிநபர் சுதந்திரத்தில் தலையீடுவதில்லை” என்று இதன் அன்றைய தலைவர்  அமெரிக்க நாடளுமன்றத்தில் ஆஜாராகி தெரிவித்தார். ஆனால் இந்த நிறுவனம்தான்  இப்போது அமெரிக்கா மட்டுமில்லை உலகம் முழுவதும் உள்ள அத்தனை பேரின் அந்தரங்களுக்குள்  ஊடூருவும் சர்வ வல்லமை பெற்றிருக்கிறது.. இது அமெரிக்க அதிபரின் அனுமதியையும் பெற்றிருக்கிறது என்கிறது கார்டியன். NSA இன்று ஆண்டுக்கு 20 கோடி டாலர் பட்ஜெட்டில் 1000பேருக்கு மேல் பணியாற்றும்-(பலர் ராணுவ சேவை எனற போர்வையில்) - நிறுவனம். பல வெளிநாடுகளில் அலுவலகங்கள் எனஇன்று உலகின் மிகப்பெரிய கண்காணிப்பு நிறுவனமாக பிரமாண்டமாக வளர்ந்திருக்கிறது. இதன் கண்காணிப்பு பட்டியலில் 5 வது இடத்தில் இருப்பது இந்தியா. கடந்த மார்ச் மாதம்மட்டும்  இவர்கள் ஆராய்ந்திருப்பது 63 லட்சம் இந்திய செய்திகளை!
அமெரிக்க சட்டத்தின் படிஒரு அமெரிக்கரின் அல்லது வெளிநாட்டாவரின் போன் அல்லது எந்த ஒரு செய்தி தொடர்புகளை கண்காணிக்க வேண்டுமானால் அரசு அதற்கென மட்டுமே இயங்கும் ஒரு கோர்ட்டில் ரகசிய ஆணையை வாரண்ட்டாக பெற வேண்டும். இது செனட் கமிட்டிக்கு தெரிவிக்கபடும். ஆனால் இப்போது இது NSA வின் நடவடிக்கைகளுக்கு பொருந்தாது என அமெரிக்க அதிபர் விசேஷ அதிகாரம் அளித்திருக்கிறார். அதனால் அவர்கள் எப்போது வேண்டுமானலும் யாருடைய கணக்கையும் கண்காணிக்க முடியும். இந்த அதிகாரம் புஷ் அதிபராக இருந்தபோது வழங்கபட்டது. ஒபாமா அதன் ஆயூட்காலத்தை இப்போது நீடித்திருக்கிறார். ஒபாமா தன் முதல் தேர்தலில்”புஷ் நிர்வாகத்தில் அமெரிக்க மக்களின் தனி உரிமைகளில் அரசாங்கத்தின் தலையீடுகளை” கண்டித்தவர்.
 செய்தி வெளியாகி ஊடகங்கள் கலக்கி கொண்டிருந்தபோது , ”பிரிஸமா ?” அப்படி ஒன்றும் எங்களுக்கு தெரியாதே!. நாங்கள் கோர்ட் கேட்கும் தகவல்களை மட்டுமே கொடுப்போம். எங்கள் வாடிக்கையாளர்களின் செய்திகளை நாங்கள் யாருடனும் பகிர்ந்து கொள்வதில்லை என எல்லா இண்ட்ர்நெட் சேவை நிறுவனங்களும் தெரிவித்தன. எல்லா கம்பெனிகளின் அறிக்கைகளூம் ஒரே மாதிரியான வாசகங்களை கொண்டிருப்பதிலிருந்தே உண்மை புரிய வில்லையா? என கேட்கிறது வாஷிங்டன் போஸ்ட்.  கார்டியன் வெளியிட்ட செய்திகள் முழுவது உண்மையில்லை என சொல்லும் NSA வின் தலைவர் கண்காணிக்க படுவதை மறுக்க வில்லை.  அமெரிக்க அதிபர் ஓபாமா ”தேச நலனுக்காக செய்யபடும் விஷயங்களில் எந்த நிர்வாகமும் 100% வீத பாதுகாப்பும், 100% தனிஉரிமையையும் 0% யாருக்கு தொல்லையில்லாத வாழக்கையை எல்லோருக்கும் அளிக்க முடியாது” என்று  சொல்லியிருப்பது அவரின் ஆசியுடன் தான் இந்த விஷயங்கள் நடைபெறுகிறது என்பதை உறுதி செய்கிறது. பிரிஸம் பிரிவினருக்கு பயிற்சி அளிக்க தயாரிக்க பட்டிருந்த 41 ஸ்லைட்(power point slides) கள் கார்டியனிடம் சிக்கியதால் வெளிச்சதிற்கு வந்த விஷயம் இது. எப்படி இந்த அதி ரகசிய ஆவணம் லீக் ஆனது? என்பதை விசாரிக்க உயர்மட்ட குழு அமைக்கபட்டிருக்கிறது. மக்கள் நலன் கருதி சொன்னது நான் தான் என எட்வர்ட் என்பவர் அறிவித்திருக்கிறார். இவர் முன்னாள் ஊழியர்.
இணையஉலக வாசிகள் அதிர்ந்துபோயிருக்கிறார்கள். அமெரிக்காவில் எதிர்க்ட்சிகள் நாடளுமன்றத்தில் எழுப்ப காத்திருக்கின்றன. மீடியாக்கள்எதிர் குரல் எழுப்பிகொண்டிருக்கின்றன. இந்தியாவில் அகில இந்திய சேவை வழங்குவோர் சங்கம், அமைச்சர் கபில் சிபிலை சந்தித்து பிரச்சனை குறித்து பேசவிருக்கிறார்கள்.
ஏது எப்படியோ இனி மெயில் எழுதும்போது பேஸ்புக் கமெண்ட் போடும்போது ஜாக்கிரதையாக (தலைவர் ஒபாமா வாழ்க?) எழுதுங்கள்.  பெரிய அண்ணன் பார்த்து கொண்டிருக்கிறார்,    

16/6/13

இன்னும் ஒரு காந்தியாக..

குஜராத் பயணம் 1

     
அஹமதாபாத்திலிருந்து காரில்போய் பஞ்ச துவாரக்களையும் அதில் ஒன்று ராஜ்ஸ்த்தான் எல்லயில் இருப்பதால் அதனருகிலிருக்கும் புஷ்கர் பார்க்க  7 நாள் பயண திட்டம். துவாரகா அருகில் இருக்கும் சோமநாத் கோவிலை பார்க்க போகும் 7 மணிநேர பயனத்திற்கு முன் அஹமதாபாத்தில் சில மணிகளை செலவிட்டு போகலாம் என்று முதலில் போன இடம் அண்ணல் காந்தி அடிகள் வாழ்ந்த சபர்மதி சேவாஸ்ரம். அந்த இடத்தை மீயூசியமாக மாற்றியிருக்கிறார்கள்.

ஓடுவேயந்த தாழ்வாரம் வடிவில்  கான்கீட்டில் வடிவமைக்கபட்ட 6 பட்டை வடிவ கூடம். இயற்கையான வெளிச்சம் வரும்படியான சுழலில் நிறைய படங்கள் காந்தியின் இந்த தேசத்தின் கதையை சொல்லுகிறது. நிறைய நேரமும், பொறுமையும் சரித்திர நேசிக்கும் தன்மையும் வேண்டும். சில படங்கள் இதுவரை நாம் எங்குமே பார்க்காதது. காந்தியின், அவர்பற்றிய புத்தகங்கள் நிறைந்த நூலகம் இருக்கிறது. ஆராய்சியளர்களுக்கு மட்டும்தான் அனுமதியாம்.
வெளியே பெரிய தோட்டம். காந்திகாலத்தில் பெரிய திடலாக இருந்திருக்கும் போல. ஆஸ்ரமத்தை ஒட்டிய படி சமர்மதி நதி போகிறது. இப்போது அதை லண்டன் தேம்ஸ் அளவிற்கு அழகுபடுத்த  முதல்வர் மோடி திட்டமிட்டிருக்கும் வேலைகள் நடப்பதால் நதி எங்கியோ திருப்ப பட்டு காய்ந்து கிடக்கிறது. அதை நோக்கியிருக்கும் பிராத்தனை திடல். இது காந்தியின் வாழக்கையில் முக்கிய இடம். பல விஷயங்கள் அறிவிக்கபட்ட இடம் என்ற குறிப்பை நிறுத்தியிருக்கிறர்கள். அவர் வாழ்ந்த ஹிருத்ய குஞ் வீட்டை பார்த்தவுடன் அதை முதன்முதலில் பார்த்த ஆட்டன்ப்ரோவின் காந்தி படம் நினைவிற்கு வந்தது.உள்ளே பார்த்தபோது இந்த சின்ன இடத்திலிருந்தா இந்த மனிதன் உலகத்தையே கவனிக்க செய்தார் என ஆச்சரியமாக இருந்தது. நுழையுமிட்த்தில் ஒருவர் ராட்டையில் நூல் நூற்றுகொண்டிருந்தார். ஸ்ரீவில்லிப்தூர் வீட்டில் என் தாத்தா டாக்டர் நாராயண அய்யர் தினமும் நூற்று அந்த நூலை கதர் கடையில் கொடுத்து கதர் துணி வாங்கி அதை தானே சட்டையாக தைத்துபோட்டுகொள்வது நினைவலைகளாக தொட்டுபோனது. வெளியே
சற்று தள்ளி வினோபாவே வாழந்த இடத்தை  பார்த்த்தும் ஒரு கணம் மூச்சே நின்றுவிட்டது. எவ்வளவு எளிமையான வாழ்க்கையை நமது தலைவர்கள் வாழ்ந்து காட்டியிருக்கிறார்கள்?.
ஓவ்வொரு இந்தியனும் இதை பார்க்கவேண்டும் தன் குழந்தைகளுக்கு காட்டவேண்டும் என தோன்றுகிறது. பணம்கொட்டும் குஜராத் மாநிலம் இதை இன்னும் வெளிநாடுகளில் இருக்கும் நினைவுதலங்கள் போல சிறப்பாக அமைக்கலாம். ஒலி ஓளிகாட்சி,காதில் மாட்டிக்கொள்ளும் வசதியுடன் விளக்க உரை தரும் சிடிபேளையர்கள், கதைகள் சொல்லும் கைடுகள் என நிறைய செய்யலாம். காந்தி சம்பந்த பட்ட சினிமாபடங்களை காட்டும் காட்சிகூடம் அமைக்கலாம். காந்தியை பிடிக்காத பிஜேபிகாரகள் செய்யாவிட்டால் கூட   ஒரு காந்தியாக வரப்போகும் ராகுல் காந்தியாவது செய்யவாரா?செய்ய வேண்டுமம்
அஹமதபாத்தை ரொம்பவும்  மாற்றிகொண்டிருக்கிறார்கள்.பஸ்க்கு தனிபாதை-டிராக்,

நகரின் நடுவே ஒடும் நதியை அழகாக்குவது, பரோடாவை இணக்க எக்ஸ்பிரஸ்வே எல்லாம். இதில் கார்களுக்கும் பஸ்களுக்கும் மட்டுமே அனுமதி. மீனிமம் ஸ்பீடு 100கிமீ.ரோடில் நடந்தால் 1000 ருபாய் பைன் அல்லது ஜெயில். அஹமதாபாத்திலும் சோம்நாத் போகும் வழியில் பார்த்தவைகளில் சில படங்களை இந்த பக்கத்தின் மேலுள்ள பயாஸ்கோப்பை கிளிக் செய்து open in new window வை கிளிக் செய்தால்  ஸ்லைட் ஷோவில் பார்க்கலாம்




7/6/13

GANDHI AND GODSE





மாலனின் ஜனகன மண வை  சாந்தி சிவராமன் 
ஆங்கித்தில் மொழிபெயர்த்திருக்கிறார்.Indian Writing   வெளியிட்டிருக்கிறது.
மூலத்தை அப்படியே பிரதிபலிக்கும் நல்ல மொழிபெயர்ப்பு.





3/6/13

“ஏர்போர்ஸ் ஒன்” என்பது அமெரிக்க  ஜனாதிபதிகள் மட்டும் பயன் படுத்தும் விமானம். சகலவசதிகளுடனும் மிகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடனும்  இருக்கும் இந்த விமானத்தை அமெரிக்க அதிபர்கள் தங்கள் உள்நாட்டு வெளிநாட்டு பயணங்களுக்கு  பயன்படுத்துவார்கள். அதிபர் குடும்பத்தினர், அவரது விருந்தினர்கள் மட்டுமே பயணிக்கும் இந்த பெரிய விமானத்தில் குறைவான இருக்கைகள் அதிகமான வசதிகள். அதிபருக்கு வெள்ளமாளிகை “ஓவல் ஆபிஸ்” போல ஒரு  அறை,குடும்பத்தினருக்கு தனி அறைகள், ஜிம்,  அதிகாரிகள் கூட்டத்திற்கான கான்பிரன்ஸ்ரூம்,தொலைதொடர்பு வசதிகளுடன் பத்திரிகையாளர்கள் அறை, அதிபரின் குரூப் ரத்ததின் சேமிப்புடன் ஒரு குட்டி ஆஸ்பத்திரி  என எல்லாம் இருக்கும்.
அவசியமானால் பறந்துகொண்டிருக்கும்போதே மற்றொருவிமானத்திலிருந்து பெட்ரோல் நிரப்ப வசதி,  தரையிலிருந்து பாயும் ஏவுகணைகள் விமானத்தை தாக்க முடியாத பக்க சுவர்கள் போன்ற பாதுகாப்பு வசதிகள்,  வாஷிங்டனிலுள்ள வெள்ளை மாளிகையுடன் எப்போது தொடர்பிலிருக்கும் ஹாட்லைன். உலகின் எந்த நாட்டு அதிபரையும்  தொடர்புகொள்ளும் வசதியுள்ள டெலிபோன்கள் போன்ற சகல வசதிகளுடன் கூடிய  ஒரு பறக்கும் ”வெள்ளை மாளிகை” இது


1990லிருந்து அமெரிக்காவின் முன்னாள் அதிபர்கள் ஜெரால்ட் ஃபோர்ட், ஜிம்மி கார்ட்டர், ரொனல்ட் ரீகன், ஜார்ஜ் எஸ்.புஷ், பில் கிளிண்டன், ஜார்ஜ் டபிள்யு.புஷ் ஆகியோர் பயணம் செய்த போயிங்  DC9-32 வகையை சேர்ந்த இந்த ஏர்போர்ஸ் ஒன் விமானத்தை  இப்போது ஏலம் போடபோகிறார்கள். இதைவிட இன்னும் அதிகமான பாதுகாப்பு  மற்ற வசதிகளுடன் கூடிய புதிய விமானத்தை அதிபர் ஒபாமாவின் பயன்பட்டிற்காக வாங்கியிருப்பது தான் காரணம். இம்மாதிரி அதிபரின் ஏர்போர்ஸ் ஒன்  விமானத்தை ஏலம்போடுவது இதுதான் முதல்முறை.  ஆன்லைனில் நடைபெறும் இந்த ஏலத்திற்கு 50000 டாலர்கள் குறைந்த பட்ச தொகை என்று நிர்ணயத்திருக்கிறார்கள்.  ”நாங்கள் இப்படி ஒரு சரித்திர சம்பங்களுக்கு சாட்சியான அரிய பொருளை அடிக்கடி விற்பதில்லை. வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுங்கள் என விளம்பரபடுத்தி எவரும் பங்குகொள்ளகூடிய ”ஆன்லைன்” ஏலத்தை அறிவித்திருக்கிறது GSA(Govt. Service Agency). இவர்கள் தான் அமெரிக்க அரசாங்க அலுவலக சொத்துகளை பராமரிப்பவர்கள்.   ஏலத்தில் கேட்கபடும் அதிக தொகைக்கு விமானம் விற்கபடும்.. அரிசோனா மாநிலத்தில் போனிக்ஸ் விமான நிலையத்தில்  நிற்கும் இந்த விமானத்தை அப்படியே அங்கிருந்து எடுத்து செல்லும் பொறுப்பு வாங்குகிறவர்களுடையது
விமானத்தை வாங்கியவர்கள் ”ஏர் போர்ஸ் ஒன்” என்ற பெயரையோ அல்லது அதிபரின் சின்னத்தையோ பயன்படுத்தமுடியாது. ஏனென்றால் ஏர்போர்ஸ் ஒன் என்பது அமெரிக்க அதிபர் பயணம் செய்யும்  விமானத்தின் அடையாள எண்.  அதிபர் அந்த விமானத்தில் இருந்தால் மட்டுமே அந்த பெயரால் அழைக்கபடும் என்கிறது அமெரிக்க விமானதுறை சட்டம். .இது மிக அதிகமான் செலவில்  தயாரிக்கபட்ட விமானம் என்பதால் இதன் உதிரிபாகங்கள் அதைதயாரித்த நிறுவனத்திடம் மட்டுமே கிடைக்கும் அதுவும் மிக அதிக விலையில்தான் இருக்கும் அந்த விலைக்கு புது ஜெட் விமானமே வாங்கிவிடலாமாம். அப்படியானால் யார் வாங்குபவர்கள்? வாங்கி  என்ன செய்வார்கள்.?

”அருமையான கிச்சன் வசதி இருப்பதால் அதை அப்படியே நிறுத்தி ரெஸ்டோரண்ட் நடத்தலாம்..” ஆபிஸ் அருகில் நிறுத்தி கான்பிரன்ஸ் போன்ற தங்கள் அலுவ்லக மீட்டிங்களுக்கு பயன்படுத்தலாம். பணக்காரர்கள் தங்கள் வீட்டு வாசலில் நிறுத்தி “ நான் சின்ன பையானாக இருந்த போது இதில்தான் நம் பிரெஸிடெண்ட் போவார் என்று பேரகுழந்தைகளுக்கு காட்டலாம் என்ற ரீதியில்  இணைய தளத்திலும் பேஸ் புக்கிலும் பல ஐடியாக்கள் கொட்டுகின்றன. விமானத்திற்கு விலையை சொல்லுபவர்களை விட விதவிதமான யோசனைகள்  சொல்பவர்கள் தான் அதிகமாகிக்கொண்டிருக்கிறார்கள். ம்ம். யார்வீட்டு வாசலில்  இது நிற்கபோகிறதோ?