அடேஅப்படியா? லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அடேஅப்படியா? லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

24/1/18

யானைக்குட்டியை தூக்கிய பாகுபலி




தான் விரும்பும் பணியைச் செய்யும் வாய்ப்பு கிடைக்காமல், கிடைத்த வேலையை பொருளாதரா அழுத்தங்களினால் தொடர்பவர்கள் பலர். ஆனால் கோவையைச் சேர்ந்த சரத்குமார் இவர்களிலிருந்து மாறுபட்ட இளைஞர். பட்டபடிப்பு முடித்த இவருக்கு கிடைத்த வேலை ஒருதொழில் நிறுவனத்தின் விற்பனை அதிகாரி. காடுகளையும் யானைகளையும் நேசிக்கும் சரத்குமாருக்கு அந்த வேலையில அவ்வளவு பிடிப்பில்லை. தனது மாவட்ட எல்லையில் ஒரு நாள் யானை ஒன்று புகுந்து அட்டகாசகம் செய்து கொண்டிருந்தது. அதை விரட்ட வனத்துறை அதிகாரிகள் செய்து கொண்டிருந்ததைப் பார்த்த சரத் குமாருக்கு தெரிந்த ஒரு விஷயம் வனத்துறையில் யானைகளை தந்தங்களுக்க கொல்வதை தடுப்பதற்கும், மனிதர்கள் வாழும் பகுதியில் வரும்யானைகளை விரட்டித் திரும்ப காட்டுக்குள் அனுப்ப தனியாக ஒரு ஸ்குவாட் இருப்பது. உடனேயே பார்த்துக்கொண்டிருந்த வேலையை ராஜினாமா செய்துவிட்டு வனத்துறையில் அந்தப் பணியில் சேர்ந்தார். சம்பளம் குறைவுதான். ஆனால் அவர் நேசிக்கும் யானைகளை தினசரி பார்க்கலாம் என்ற நிறைவு.

கடந்த மாதம் இவர் செய்த ஒரு துணிவான செயலால் இன்று இவர் இந்தியா முழுவதும் மட்டுமில்லாமல் உலகெங்கும் இருக்கும் வனவிலங்குகளின் நல ஆர்வலார்களால் பாராட்டப்படுகிறார்.

பாவனி ஆற்றில் நீர் அருந்த வந்த பெரிய யானை ஒன்று நதிக்கரையிலிருக்கும் கிராமமான சமயபுரத்தின் உள்ளே புகுந்து இரண்டு மோட்டர் சைக்கிள்களையும் கடைகளையும் உடைத்து நொறுக்கி துவம்சம் செய்து கொண்டிருக்கிறதாக செய்தி வந்தவுடன் சரத்குமார் தன் குழுவுடன் அங்கு விரைந்தார்.
பணியில் 5 ஆண்டு அனுபவம் பெற்றிருக்கும் சரத்குமாருக்கு பலயானைகளையும் அதன் குணங்களையும் பற்றி நன்கு தெரியம். வந்திருப்பது வயதான ஒரு பெண்யானை. 3 மணி நேரம் போராடி அதைக்காட்டுக்குள் விரட்டி அனுப்பி வைத்தனர் குழுவினர். ஆனால் அரைமனிக்குள் திரும்பவும் வந்து கண்ணில் பட்டதையெல்லாம் மிதித்து நொறுக்க ஆரம்பித்தவிட்டது அந்த யானை. அப்போது சரத்குமார் கவனித்த விஷயம் அந்த யானை ஏதோ ஒரு கோபத்திலிருக்கிறது என்பதைத்தான். மறுபடியும் அதை விரட்டிவிட்டு அதன் கோபத்துக்கு காரணம் என்னவாயிருக்கும் என யோசித்துக்கொண்டே நடந்த போது அவர் பார்த்தது.

 காட்டில் உபரிநீர் வழிந்தோட அமைக்கப்பட்ட கால்வாயில் சிலாப் திறாந்து கிடந்த்தையும் அதன் உள்ளே   பள்ளத்தில் விழுந்திருந்த சின்ன சிறு யானைக்குட்டியையும். . பிங்க் வண்ண துதிக்கையுடன் சின்னஞ்சிறு பிறந்து 10 அல்லது 15 நாளே இருக்கும்  அந்த யானைக்குட்டி. சரியாக நிற்க, நடக்க்க் கூட தெரியாத அந்த குட்டி பள்ளத்தில் விழுந்துவிட்டிருக்கிறது. வெளியில் வரத்தெரியவில்லை. தாய் யானை பள்ளத்தின் ஒருபுறம் அது வெளிவர மண்னைத்தள்ளி மேடாக்கி முயற்சித்திருக்கிறது. ஆனாலும் அதற்கு வெளியே வரத்தெரிய வில்லை. தன் அருமைக்குழந்தையை மீட்க முடியாமல் தவித்த தாயின் கோபம் தான் தாக்குதலுக்கு காரணம்.

பள்ளத்தில் தவிக்கும் குட்டியைப் பார்த்தவுடன் விஷயத்தைப் புரிந்த கொண்ட சரத் குமார் குழுவினர் பள்ளத்தினுள்ளே இறங்கி பயந்து மிரண்டு போயிருந்த அந்தக்குட்டியை வெளியே கொண்டுவந்தனர். தாயின் பாலைத்தவிர வேறு எதுவும் சாப்பிட முடியாத அந்த பச்சைக்குழந்தையை காட்டுக்குள் விரட்டமுடியாது. அதன் தாய்வரும் வரை காத்திருக்கவும் முடியாது. மேலும் மனிதர்களுடன் குட்டியைப் பார்த்தால் அவர்கள் செய்யும் உதவியைப்புரிந்து கொள்ளாமல் பயங்கரமாகத்தாக்கும் அபாயாமும் உண்டு
.
அப்போது அவர் செய்ததுதான் வீடியோவில் வைரலாகப் பரவி உலகை ஆச்சரியபடுத்திக்கொண்டிருகிறது 
அந்த குட்டி யானையை தன் தோள்களில்., பாகுபலி கனமான லிங்கத்தை தூக்கியதைப் போல 50 மீட்டர் தூரத்திலிருக்கும் ஜீப்புக்கு ஒட்டமும் நடையுமாக வேகமாக கொண்டுசென்றார். உள்ளூர் போட்டோகிராபர் எடுத்த அந்த வீடியோவை பிபிசி  செய்தியில் காட்டியது

100 கிலோ கனமிருக்கும் அதை எப்படி ஒருவராகத்தூக்கினீர்கள்? என்ற கேள்விக்கு சரத் சொன்னபதில். “எனக்கே தெரிய வில்லை. அந்த வினாடியில் அதை உடனடியாக ஜீப்புக்குகொண்டு போய்விடவேண்டும் என்ற எண்ணம் தான் மனதிலிருந்தது”. மேலும், இரண்டு மூன்றுபேர் ஒரு குட்டியைத்தூக்குவது என்பதும் அதற்கு பாதுகாப்பு இல்லை என்று எனக்குத்தெரியும்
காட்டுக்குள் 12 யானைகள் கூட்டமாக இருக்கும் ஒரு குழுவில் அதன் தாய் யானையை அடையாளம் கண்டு அதனருகில் குட்டியைவிட்டு பாதுகாப்பான தூரத்தில் காத்திருந்தோம். அப்போது காலை 3 மணி என்பதால் தாய்யானை அதை அழைத்துசென்றதைப்பார்க்க முடியவில்லை. ஆனால் அப்போது  காடே அதிரும்படியான அதன் சந்தோஷப் பிளிரலில் எனக்கு செய்தி கிடைத்துவிட்டது என்கிறார் சரத்குமார்
கல்கி 28/01/18ல் எழுதியது
 https://youtu.be/XufMeIFn4A8

8/10/17

சிலைகள் எழுப்பியிருக்கும் பிரச்சனை

       
 
அமெரிக்காவில் வெர்ஜினியா மாநிலத்திலிருக்கும் ஒரு நகரம் சார்லொட்டஸ்வில் (Charlottesvulle). அமைதியான இந்த நகரில் எழுந்த ஒரு போராட்டம், இன்று அமெரிக்காவின் சிலநகரங்களில் இனவெறிப்போராட்டமாகப் பரவிக்கொண்டிருக்கிறது. நகரப் பார்க்கில் இருக்கும் ராபர்ட் இ-லீ என்பவரின் சிலையினால் எழுந்தது பிரச்னை.
அமெரிக்கா ஒரு ஐக்கியநாடாக, பிறந்தவுடன் சில மாநிலங்களை இணைக்க ஒரு நீண்ட உள்நாட்டுபோரை சந்தித்ததைச் சரித்திரம். சொல்லுகிறது 1861 முதல் 1865 வரை நடைபெற்ற இந்த உள்நாட்டுப் போருக்கான காரணங்களில் ஒன்று. .அடிமைகளின் விடுதலை. முறையை ஒழிப்பதை முன்னிறுத்தி ஆபிரகாம் லிங்கன் அந்த   தலைமையில் ஒரு படையும், அடிமைகளை விடுதலை செய்யக் கூடாது என்பதை முன்னிறுத்தி ஜெபர்சன் டேவிஸ் தலைமையில் மற்றொரு படையும் போரில் ஈடுபட்இதிஸீல் ஜெபர்சன் டேவிஸ் அணியியை ஜெனரல் ராபர்ட் இ-லீ வழிநடத்தினார்.
இந்தப் போரில் ஆபிரகாம் ஆபிரஹாம் லிங்கள் வெற்றி பெற்றாலும் அவரை எதிர்த்துப் போராடிய மாநிலங்களில் ஆட்சி செய்யதவர்களின் சிலைகளும் பெயர்களைத்தாங்கிய பொதுக் கட்டிடங்களும் தொடர்ந்து கொண்டிருந்தன. காலப் போக்கில் மக்கள் அவைகளை தங்கள் மாநிலத்தின் சரித்திர அடையாளாங்களாக ஏற்றுகொண்டார்கள்.
வெர்ஜினியா மாகாணம் சார்லோட்டஸ்வில் நகரில்  இந்த ஜெனரல் ராபர்ட் இ-லீ-யின் சிலை உள்ளது. அந்தச் சிலையை அகற்ற நகர நிர்வாகம் முடிவு செய்தது. சொல்லப்பட்ட காரணம் இம்மாதிரி சிலைகள் அமெரிக்காவில் வெள்ளையினத்தவரின்களின் ஆதிக்கத்தைக் காட்டும் அடையாளம். என்பது. முடிவு செய்து ஒராண்டாகியும் சிலை அகற்றபடாதால், அதைச்செய்வதற்கு இயந்திரங்களுடன் ஒரு தன்னார்வ குழு பார்க்கில் குழுமிவிட்டது இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மற்றொரு குழு சார்லோட்டஸ்வில் நகரில் பேரணி நடத்தினர். அதேநேரம் இன ஒற்றுமையை வலியுறுத்தும் ஒரு  குழுவினரும் அதே பகுதியில் கூடினர்.
 இருதரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதல் பெரிய கலவரமாக வெடித்தது அதில் நகரின் முக்கிய மனித உரிமை ஆர்வலர் ஒருவர் இறந்துவிட்டார். இது தேசிய சின்னமாக அறிவிக்கபட்ட  பல சின்னங்களில்  இந்தச் சிலையும் ஒன்று. அகற்ற நகரகவுன்சிலுக்கு அதிகாரமில்லை என்று போடப்பட்ட வழக்கில் நீதிபதி, அகற்ற தடையுத்தரவு பிறபித்து சில நகரங்களில் நடந்திருப்பதைப் போல சிலைஉடைக்கபட்டுவிடக்கூடாது என்பதற்காக சிலையை கருப்பு துணியால் மூடி பாதுகாக்க  உத்திரவிட்டிருக்கிறார்.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து மெரிலாண்ட், ஃபளோரிடா வடக்கு காரோலினா போன்ற மாநிலங்களில் உள்ள சில பெரிய நகர கவுன்சில்கள் இம்மாதிரி இருக்கும் சிலைகளை அகற்ற தீர்மானங்கள் போட்டு இரவோடு இரவாக அகற்றவும் செய்துவிட்டார்கள். துர்ஹாம் என்ற நகரில் போராட்டக்கார்களே சிலையைப் பீடத்திலிருந்து கழட்டி கயற்றில் கட்டி கிரேன் மூலம் பகலில் மக்கள் கைதட்டலுடன் அகற்றியிருக்கிறார்கள். சில இடங்களில் சிலைகள் கறுப்பு துணிகளால் மூடப்பட்டன. சில சிலைகள் மரப்பெட்டிகளால் மறைக்கபட்டன.
நகர பார்க்குகளை நிர்வகிக்கும் உரிமை நகர கவுன்சில்களுக்கு இருந்தாலும் இப்படி சிலைகளைச் சின்னங்களையும் அகற்றும் உரிமைகளை ரத்து செய்திருப்பதாகச் சில மாநில அரசுகள் அறிவித்திருக்கின்றன.  இந்த முடிவை எதிர்த்து வழக்குகளும் போடபட்டிருக்கின்றன
இம்மாதிரி நாட்டின் ஒற்றுமையைக் குலைக்கும் இனவெறிச் செயல்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஸ்டன் நகரில் பல்லாயிரக் கணக்கானோர் கலந்து கொண்ட பிரம்மாண்ட பேரணி ஒன்றும் அண்மையில் நடைபெற்றது
இந்த எதிர்ப்பும் போராட்டமும் ஒரே இரவில் எழுந்தவை இல்லை. 2015ல் கொலைவெறி பிடித்த வெள்ளை இன அமெரிக்கர், ஒருவர் பல கறுப்பினத்தவரை சுட்டுக்கொன்றதில்  எழுந்த கோபம் அடங்காமல் மெல்ல கனிந்து கொண்டிருந்தது. “கருப்பு இனத்தவரின் உயிர்களும் முக்கியமானது(Black lives matter movement) என்று ஒரு இயக்கம் எழுந்த்து. அது தான் இதைச்செய்து கொன்டிருக்கிறது
.
அமெரிக்காவின் பல நகர கவுன்சிகளில் கறுப்பினத்தவர் பெருமளவில் இடம் பெற்றிருப்பதால் இதைச் செய்யத் துவங்கியிருக்கிறார்கள். சிலைகளை அகற்றுவது ஒரு அடையாளமே தவிர பிரச்னையின் ஆழம் பெரிது.
இந்த ஆண்டு பிப்ரவரியில் யேல் பல்கலைகழகம் இந்தப் பிர்ச்னையை சந்தித்தது. அந்தப் பலகலைகழகத்திலிருக்கும் பல கல்லூரிகளில் ஓன்று கால்ஹென் காலேஜ்(CALHOUN COLLEGE) செல்வந்தரான அவரது நன்கொடையினால் உருவாக்கப்பட்ட இந்தக் கல்லூரிக்கு அவரது பெயரிடப்பட்டு அதன் முகப்பில் அவர் சிலையும் நிறுவப்பட்டு பலகாலமாக இருந்து வருகிறது. திரு கால்ஹென் கறுப்பின அடிமை முறையை ஆதரித்தவர், அதனால் அந்தப் பெயரை மாற்றிச் சிலையை அப்புறபடுத்துங்கள் என மாணவர்கள் போராட்டம் செய்தனர். முதலில் வெகுகடுமையாக எதிர்த்த பல்கலை கழக நிர்வாகம் நீண்ட போரட்டங்களுக்கு பின்னர் தன் முடிவை மாற்றிக்கொண்டு கல்லூரியின் பெயரை  இப்போது மாற்றியிருக்கிறது. இதுபோல பல பல்கலைகழங்களில் இப்படி நனகொடை கொடுத்தவர்களின் பெயர்களும், சிலைகளும் இருப்பதால் இம் மாதிரிப் போராட்டங்கள் அங்கும் தொடரலாம் என்ற அச்சம் எழுந்திருக்கிறது.
இதுவரை 60க்குமேல் சிலைகளும் அடையாளங்களும் அகற்றப்பட்டிருக்கின்றன, . நமது உள்நட்டுப் போரும் அடிமைமுறை ஒழிப்பும் நாட்டின் சரித்திரம். அதில் பங்குபெற்றவர்களும் அமெரிக்கர்கள் தான். 20ம் நூற்றாண்டில் நிறுவபட்ட சிலைகளை இப்போது அகற்ற போராடுவது அநாகரிகம். சரித்திரத்தை நாம் ஏன் மறைக்க வேண்டும்? என இருநிற இனத்தவரும் இணைந்த குழு ஒன்றும் குரல் எழுப்ப்யிருக்கிறது
.
இந்த இனமோதலை அமெரிக்க அதிபர் டிரம்ப் சரியான விதத்தில் கையாளவில்ல என அனைத்து தரப்பினரும் விமர்சிக்கின்றனர். பிர்ச்சனை தீவிரமாக இருந்தபோது “இன்று ராப்ர்ட்- இ லீ நாளை ஜார்ஜ் வாஷிங்டனா? பின்னர் ஜெபர்ஸ்னா? அவர்களும் அடிமைகளை வைத்திருந்தவர்கள் தானே?” என்ற அவரது பேச்சு அமெரிக்க வெள்ளையினத்தவரின் ஆணவ வெளிபாடாகப் புரிந்துகொள்ளபட்டது. வழக்கம் போலப் பின்னால் அவர் தெரிவித்த குழப்பான விளக்கங்கள் எடுபடவில்லை.
உலக சரித்திரத்தை உற்று நோக்கினால்  பெரிய போராடங்களுக்கும் புரட்சிக்கும்  பின்னால் ஒரு தனி மனிதனின் செயல் தீப்பொறியாகத் துவங்கியிருக்கும். ஒரு கோபக்காரின் துப்பாக்கி சூட்டில் இறந்தவர்களுக்கு விலையாக் இந்தப் போராட்டம் எழுந்திருக்கிறது.
இது வலுக்குமா? சரியான நடவடிக்கைகள்மூலம் டிரம்ப் பின் நிர்வாகம் வலுவிழக்கச்செய்யுமா?
 உலகம் பார்த்துக்கொண்டிருக்கிறது


 

13/9/17

விற்கப் படும் வீரப்பதக்கங்கள்



தலை நகரில் குடியரசு தின அணிவகுப்புக்கு முன்னர் குடியரசுத் தலைவர் இந்திய ராணுவத்தின் உயரிய கெளரவமான பரம வீர் சக்ரா. வீர்சக்ரா போன்ற பதக்கங்களை வழங்கும்போது, அவற்றை அதிகாரிகள் பெருமிதத்தோடு பெறும் கம்பீரமான காட்சிகளைப் பார்த்திருக்கிறோம். இந்த உயரிய விருது பதக்கங்களைத்தவிர 10 விதமான பதக்கங்களை நமது ராணுவ அதிகாரிகளுக்கும் வீரர்களுக்கும் வழங்குகிறது இந்திய அரசு என்ற செய்தியை நம்மில் பலர் அறிந்திருக்கக்கூடும்.

ஆனால் அதிர்ச்சியான செய்தி இந்தப் பதக்கங்கள் கடைகளில் விற்கப்படுகிறது என்பதுதான். செகந்திரா பாத் நகரில் லால் பஸார் என்ற பகுதியில் மிலிட்டிரி லேன் என்றழைக்கப்படும் ஒரு சிறிய சந்திலிருக்கும் கடைகளில் இந்திய ராணுவம் தரும் எந்தமெடலும் விலைக்குக் கிடைக்கிறது. மெடல்கள் மட்டுமில்லை ராணுவ அதிகாரிகள் தோள்பட்டையில் அணியும் அந்தஸ்த்தை குறிக்கும் ஸடார்கள், பட்டைகள் எல்லாமே கிடைக்கிறது. 2500 ரூபாய்களில் ஒரு ராணுவ அதிகாரி தன் வீர தீரச் செயல்களுக்காகப் பெறும் அத்தனை மெடல்களுடன் அதிகாரி அணியும் யூனிபார்மே கிடைக்கிறது.

1999 கார்கில் போர் ஆப்ரேஷன் விஜய் யில் பங்குபெற்றதற்கான மெடல் 40ரூபாய், சியாச்சின் பனிச்சிகரங்களின் பணியிலிருந்ததற்காகத் தரப்படும் உச் துங்கட்டா மெடல் 40 ரூபாய், மிகச்சிறந்த பணிக்கான மெடல் ரு 180 என விலைபட்டியலைப் பார்த்துசொல்லுகிறார்கள். மெடல்கள் ஷோ கேஸ்களில் காட்சிக்கு வைக்கபடவில்லையே தவிர, மருந்துக்கடை களிலிருப்பது போல அட்டைப்பெட்டிகளில் போட்டுப் பெயர் எழுதி அடுக்கி வைத்திருக்கிறார்கள். உங்களுக்கு எந்த மெடல் வேண்டும்? எனக் கேட்டுத் தருகிறார்கள். மெடல்கள் கோர்க்கபட்டிருக்கும் ரிப்பன்களின் கலரும் டிசைனும் அது எந்த வகை மெடலை சேர்ந்தது என்பதைச்சொல்லும். எல்லா நேரங்களிம் மெடல் அணிய முடியாதாகையால் இந்த ரிப்பன் வண்ணங்களை ஒரு குறிப்பிட்ட அளவில் பேட்ஜ்களாக அணிவார்கள். இதை அதிகாரிகள் யூனிபார்ம் அணியாத போதும் அணிந்துகொள்வார்கள். அந்த மாதிரி பேட்ஜ்களூம் கிடைக்கிறது.
யார் இதை வாங்குகிறார்கள்? என்ற கேள்விக்கு—“நமது வீரர்கள் தான்” என்று வந்த பதில் நமது அதிர்ச்சியை அதிகபடுத்துகிறது. விருது பெற்ற வீரர்கள் அதை ஏன் இவர்களிடம் வாங்குகிறார்கள்?,

ராணுவத்தில் ஆண்டுதோறும் சிறந்த சேவைக்காக, திறமையான பணிக்காக என பல மெடல்கள் அறிவிக்கபட்டாலும், அந்தக் கடிதமும், சிலசமயம் அதற்கான பணப்பரிசும் அந்த வீரர்களுக்கு அனுப்பபடும். ஆனால் மெடல்கள் அவர்களுக்கு அளிக்கத் தாமதம் ஆகும். சில சமயங்களில் ஆண்டுகள் கூட ஆகிவிடுமாம். 10  ஆண்டுகளுக்கு முன் அறிவிக்கபட்ட மெடல்கள் இன்னும் கொடுக்கபடவில்லையாம்.  
 இந்த மெடல்களில் ராணூவத்தினரின் பெயரோ அலலது நம்பரோ பொறிக்க பட்டிருக்காது. பணப்பரிசை விட மெடல் அணிந்துகொள்வதை பெரிய  கெளவரமாகக் கருதுவதால் வீரர்கள் இந்த மாதிரிகடைகளில் கிடைக்கும் டூப்பிளிகேட்களை வாங்கி அணிந்து கொள்கிறார்கள். 
இதை டூப்பிளீகேட் எனச்சொல்லக் கூடாதாம். இவற்றிற்கு “டெயிலர் காப்பி” என்று பெயர் என்ற கடைக்காரர்களிடம் இதற்கு அவர்களுக்குரிய அனுமதி வழங்கப்பட்டிருக்கிறதா என்று கேட்டால் மழுப்புகிறார்கள். ஒரு கடைக்காரர் யூனிபாரம் தைத்து விற்க அனுமதியிருக்கிறது. மெடல்களும் யூனிபார்மின் ஒரு பகுதிதானே என்றார். வாங்குபவர்கள் ராணுத்தினரா? என்று கூடக் கேட்பதில்லை
.
ஒரு கடையில் சில ஓரிஜனல் மெடல்களையும் விற்கிறார்கள். பஞ்சாப் மாநில போலீஸின் விருதான ஸ்பெஷல் டுயூடி மெடலை அதனுடைய பெட்டியுடன் காட்டினார்கள்.
 சரியான போர்டு கூட இல்லாத கடைகளில் இப்படி விற்கிறார்களேயென ஒரு முன்னாள் ராணுவ அதிகாரியிடம் கேட்டபோது, “நமது மெடல்களை தயாரிப்பது அரசின் மின்ட் தான். அவர்களால் ஒரே நேரத்தில் பல மெடல்களை உரிய நேரத்தில் தயாரித்துக்கொடுக்க முடியவில்லை. அதனால் அந்த மெடல்களை தயாரிக்கும் மோல்ட்களை தயாரித்து இப்படி மெடல்களைச் செய்யும் ஒரு நிறுவனம் பஞ்சாபில் துவங்கியது. இவைகள் மிகவும் மலிவான உலோகங்களில்  கனம் இல்லாமல் செய்யப்பட்டிருக்கும். ராணுவத்தினருக்கு அது ஒரிஜினல் இல்லை என்பது எளிதாகத் தெரிந்துவிடும்.
இப்போது பெரிய பிஸினஸ் ஆகி விட்டது. சில சமயம் அரசின் முடிவுகளும் காரணம். இந்திய சுதந்திரத்தின் 50 வது ஆண்டுவிழா நினைவாக இந்திய ராணுவத்திலிருக்கும் அனைவருக்கும்  மெடல் என்று அறிவிக்கபட்டது. அதை எல்லோருக்கும் வினியோகிக்க 5 ஆண்டுகள் ஆனது. அதற்குள் சிலர் ஓய்வே பெற்றுவிட்டார்கள்.பலருக்கு போயே சேரவில்லை. இது போலச் சில குழப்பங்கள் என்ற அவர். இந்த ஒரிஜினல் மெடல்களை நீங்கள் ஆன்லைனிலேயே கூட வாங்கலாம்” என்றார்
.
ஆச்சரியப்பட்டு இணையத்தில் தேடியபோது  இந்திய சுதந்திர 50ஆம் ஆண்டு மெடல்  360 ருபாய்க்கும் மற்றொரு நிறுவனத்தில் அதைவிட 10 ரூபாய் குறைவாகவும் கிடைக்கிறது. இதைத்தேடும்போது பார்த்த  மற்றோரு விஷயம் இ பே என்ற ஆன்லைன் நிறுவனம் இந்திய ராணுவ  மெடல்களை ஏலத்தில் விற்கிறது. ஒன்பது வெவ்வேறு மெடல்கள் அடங்கிய ஒரு மெடல் பார் ரூ 3500 என்று ஒரு நிறுவனம் விலை சொல்லுகிறது.
 அதிகாரிகளின்பெயர்களுடனும் நம்பர்களுடனும் உள்ள ஒரிஜினல் மெடல்களுக்கு அமெரிக்க டாலரில் விலைபட்டியலிட்டிருக்கும் இ பே அவற்றை இந்தியாவிற்கு அனுப்ப முடியாது என்பதைத் தெளிவாகக் குறிப்பிட்டிருக்கிறது
.
“பெயர் பொறிக்கப்பட்டிருக்கும் மெடல்களை எந்த ராணுவ வீரனும் விற்க மாட்டான். அவன் உயிரைவிடவும் நேசிக்கும் விஷயம் அது. சில சமயங்களில் மரணத்துக்குப் பின் புதைக்கும்போது கூட அதை அணிந்த நிலையில் தான் புதைப்பார்கள். இப்படி விற்பனைக்குக்  கிடைப்பது திருடப்பட்டது அல்லது வீரர் இறந்த பின் எவரும் உரிமை கோராத தாக இருக்கும் என்கிறார். ஒரு மூத்த முன்னாள் ராணுவ வீரர்.

ராணுவத்தினருக்கு வெற்றி பதக்கங்கள் என்பது அவர்களின் சாதனைகளைப் பார்ப்பவருக்குச் சொல்லும் அடையாளம். சியாச்சின் பள்ளதாக்குகளின் பனிப்புயல்களிலும், இமயப்பகுதி எல்லைகளிலும் பலவிதமான இடையூறுகளுக்குமிடையில் தங்கள் சிறப்பான பணிக்காகப் பெறும் விருதுகளூம் பதக்கங்களும் அவர்களை உடனே அடைவதில்லை என்பது மிக வருத்ததுக்குரிய விஷயம்.
 எவ்வளவோ விஷயங்களை மாற்றத்துடிக்கும் இந்த அரசு இதையும் கவனிக்குமா?










7/7/17

தெரியுமா? தென்கொரியர்களின் மொழி -தமிழ்!



அந்தப் பொன்மாலைப் பொழுதில் மஹாபலிபுர கடற்கரையில் மெல்ல மறையும் சூரியனை ரசித்துக்கொண்டே நடந்து கொண்டிருக்கின்றனர் ஒரு கொரிய நாட்டுத் தம்பதியினர்.. கணவர் சில நாட்களுக்கு முன் சென்னை அலுவலகத்தில் பதவி ஏற்றிருக்கும் அதிகாரி. பின்னாலிருந்து  " அப்பா" என்று குரல் கேட்கவும் ஆச்சரியத்துடன் திரும்பிப்பார்க்கிறார். ஆச்சரியத்துக்குக் காரணம் அவர் மகனும் மகளும்  முன்னால் சென்றுகொண்டிருக்கிறார்கள்.  நம் மொழியில் யார் நம்மை அழைக்கிறார்கள்? என்று திரும்பிப்பார்த்த அவர் பார்த்தது ஒரு தமிழ் குடும்பத்தை.   தன் மொழியில் அப்பா என்றால் தந்தை என்பது போல தமிழிலும் தந்தைக்கு அப்பா தான் என்பதை அறிந்து ஆச்சரியப் பட்டுப் போகிறார் அந்ததென் கொரிய நாட்டுக்காரர். 
அவர் திரு குயூங்குசூ கிம் (KYUNGSOO KIM)  தென் கொரியாவின் தூதர்.

சென்னைத்திரும்பியதும். தன் அலுவலகம் மூலம் கொரிய, தமிழ் மொழிகளுக்கிடையே உள்ள ஒற்றுமைகளைப் பற்றி அறிந்து, ஆச்சரியபட்டு அது குறித்த தகவல்களைசேகரிக்கிறார்.  இரு  மொழிகளுக்கு இடையே உள்ள ஒற்றுமைகள் குறித்து தமிழ் நாட்டில்  பல ஆய்வுகள் செய்யப்பட்டிருப்பதையும் அறிந்து வியக்கிறார்.  இதில் தன் பங்காக எதாவது செய்ய வேன்டும் என்று கருதி தமிழை முறையாக கற்றுக்கொள்ளத் துவங்குகிறார்.
 சென்னையில் இன்று 4000க்கு மேற்பட்ட கொரியர்கள் வசிக்கிறார்கள். ஹூண்டாய், ஹூன் போன்ற பல நிறுவனங்களில் பணிபுரிபவர்களுடன் அவர்களது குடும்பங்கள்.
கொரிய மொழியில் பல தமிழ் வார்த்தைகள் இருப்பதையும், அது தமிழில் பேகசப்படுவது போலவே உச்சரிக்கப்படுவதை முதலில்  சொன்னவர்கள் பிரெஞ்ச் பாதிரியார்கள். இரண்டு நாடுகளிலும் பணிபுரிந்த பாதிரியார்கள் கண்டுபிடித்த விஷயம் இது. அன்று முதல் ஆய்வுகள் தொடர்ந்துகொண்டிருக்கிறது.  ஹவாய் பல்கலைக்கழகத்தின்  “கொரிய மொழி மையம்” இதுகுறித்து பெரிய அளவில் ஆய்வுகள் நடத்தி கட்டுரைகளை வெளியிட்டிருக்கிறது. இவர்கள் ஆய்வின் படி  கிட்டத்தட்ட  கொரிய மொழியில்  4000 தமிழ் வார்த்தைகள் இருக்கின்றன.  பல வார்த்தைகளின் பொருளும் அதேதான் மட்டுமில்லை ஒலிக்கும் பாணியும் உச்சரிப்பும் கூட தமிழ் போலவே இருப்பது தான் ஆச்சரியம்.
இரு நாடுகளுக்குமிடையே உள்ள உறவு முதல் நூற்றாண்டில் துவங்கியிருக்கிறது. சூரோ என்ற அரசன் கார்க் என்ற பகுதியை ஆண்டுவந்தார்.கார்க் என்ற சொல்லுக்கு  பண்டைய தமிழில் மீன் என்று பொருள். அந்த மன்னரின் கொடியில்  மீன் சின்னம். இருக்கிறது.  அவரும் அன்றைய பாண்டிய(வேளநாடு) மன்னர் ஆயியும் நல்ல நண்பர்கள்.  அவர்குடும்பத்தைச்சேர்ந்த ஒரு தமிழ் பெண்ணை  கார்க் நாட்டின் இளவரசர்      திருமணம் செய்துகொண்டதால்,  வணிகம்,  அரசுப்பணிகளில், படைகளில் நிர்வாகத்தில் தமிழர்கள் இணைந்திருக்கிறார்கள்.  பின்னாளில் சூரிரத்னா என்ற   அந்தப் பெண்  நாட்டின் அரசியாகியிருக்கிறார்.
 இன்றும் அவரது  சமாதி கிம்ஹே என்ற கொரிய நகரில் இந்த விபரங்கள் பதிக்கப்பட்ட கற்பலகையுடன் இருக்கிறது.    கொரியா நாட்டில் சொல்லா என்பது ஒரு மாவட்டத்தின் பெயர் இது சோழ என்ற  சொல்லின் திரிந்த வடிவம் என்று கருதப்படுகிறது. இது போன்ற பல விஷயங்களை ஆய்ந்து நிறைய எழுதியிருக்கிறார்கள் என். கண்ணன், ஒரிஸாபாலு,  நாகராஜன் போன்ற  வரலாற்று ஆய்வாளர்கள்.
"மொழி மட்டுமில்லை கலாச்சாரத்திலும் நிறைய ஒற்றுமைகள். கொரிய குழந்தை முதலில்; அறிந்து கொள்ளும் வார்த்தைகள் அப்பா, அம்மா தான். என்பது மட்டுமில்லை. குழந்தையைத் தொட்டிலில் இடுவது, வாசலில் மாவிலைத் தோரணங்கள் கட்டுவது, போன்ற பல விஷயங்களில் தமிழ் நாட்டைப் பார்க்கிறேன். தென்கொரியாவில் மாங்காய் கிடையாது. அதனால் மிளகாய் தோரணம் கட்டுகிறார்கள்.  குழந்தைக்குத் திருஷ்டி கூடாது என்ற பழக்கமும் இருக்கிறது".  என்கிறார்  கொரிய தூதர் குயூங்குசூ கிம்  . இவர்  தமிழ் நாட்டில் ஆர்வத்துடன் பல விஷயங்களைக் கூர்ந்து கவனித்து தனது கட்டுரைகளில் எழுதுகிறார்.. அவர் சொல்லும் பல விஷயங்களில் ஒன்று தமிழக கிராமங்களில் இருப்பது போலத்தான் கொரிய கிராமங்களில் குடிசைகள் அமைக்கப்படுகின்றன. உரலுக்கும்  உலக்கைக்கும்  அதேபெயர்கள், அதே பயன்கள் என்பது தான்.  இப்போது தமிழ் கற்றுவரும் இவர்  தமிழ் இலக்கணம் எழுவாய்- செயப்படுபொருள்- வினைச்சொல் அடிப்படையில் தான் கொரிய மொழியின் இலக்கணமும் இருக்கிறது  என்கிறார்.  கொரியர்களும் தமிழர்களைப்போல் அத்தை, மாமன், தாய்மாமன் உறவு முறைகளும் அதில் திருமணமும் செய்துகொள்கிறார்கள்.( சண்டைகள் வருவதும்  உண்டாம். )
தென்கொரியாவைச்சேர்ந்த ஒரு எண்ணை நிறுவனத்தில் விஞ்ஞானியாகப் பணியாற்றும் திரு நாராயணன் கண்ணன் 10 ஆண்டுகளாக அங்கு வசிப்பவர்.  அங்கு ஒரு அறக்கட்டளையை நிறுவி இரு மொழிக்கும் உள்ள தொடர்பு பற்றி ஆராயந்துவருகிறார். பல ஆண்டுகாலம் சீன மொழியைப் பயன்படுத்திய கொரியநட்டினர் 10ஆம் நூற்றாண்டில் ஹங்குல் என்ற மொழியை தாய் மொழியாக ஏற்றனர். இது தமிழ்மொழியின் சாயலில் இருக்கிறது. இந்த ஹங்குல் மொழியை ஏற்றபின்னர்தான் கொரியமக்களின் பொருளாதாரம் வேகமெடுத்திருக்கிறது. இன்று கொரியாவில் 99%மக்கள் கல்வியறிவு பெற்றிருக்கிறார்கள். மொழியை முன்னிறுத்தியே  எந்த ஒரு நாடும் முன்னேறும் என்பதற்கு  இது சான்று என்கிறார். இவர் செம்மொழி மாநாட்டில் பங்கேற்று இது குறித்த தனது கட்டுரையை வாசித்தவர்.
கொரிய மொழியில் பல வார்த்தைகள் தமிழ் சாயலில் இருக்கிறது. உரத்துக்கு- உரம், கண்ணுக்கு -நுகண், பல்லுக்கு =இப்பல் புல்லுக்கு =புல் எனப் பல வார்த்தைகளில் அதே பொருளில் இருப்பதை விட ஆச்சரியம் அவர்கள் தூரி, தூரி, சாஞ்சுக்கோ, கொஞ்சு ஜம்ஜம், அபூபா, ஜோ ஜோ  என  சிறு குழந்தைகளைக் கொஞ்சுவதில் கூடத் தமிழ் கொஞ்சுகிறது. மொழி, கலாச்சாரம் போல சில உணவு வகைகளையும் தோசை, கொழுக்கட்டை  சுண்டல்  ஊறுகாய் போன்றவற்றிலும்  தமிழ்நாடு இருக்கிறது.

 
மொழி, உணவு மட்டுமில்லை .நட்பு பாராட்டுவதிலும்  தமிழர்களைப் போலத்தான் என்கிறார் திருமதி மீரா.
ஒரு பெரிய கார் தயாரிக்கும் நிறுவனத்தின் உயர் அதிகாரி யெங் மின் ஓ வின் குடும்பம் அண்மையில் சென்னைக்கு வந்தது.  அவரது மனைவி காங் மின் (KANG MIN)   ஆங்கிலம் அதிகம் அறியாத குடும்பத்த லைவி.  உள்ளூர் மொழியும் தெரியாத புதிய சுழலில் மிரண்டு, கலங்கிய அவருக்குப்   பக்கத்து பிளாட்டில் வசிக்கும் இவர் “ நான் உன் தாய் மாதிரி பயப்படாதே எல்லா உதவியும் செய்வேன்” என்று  ஆறுதலாக ஆங்கிலத்தில்  சொன்னதில் அவருக்குப் புரிந்த  வார்த்தைகளில் ஒன்று  “மதர்”   ஒ! நீங்கள் எனக்கு  “அம்மா” என்று சொல்லி சந்தோஷமானார். அன்றிலிருந்து அந்தப்பெண்மணியை அவர் இந்திய அம்மா என்றுதான் அழைக்கிறார். மெல்ல  தமிழும் ஆங்கிலமும் கற்றுவருகிறார். குழந்தைகளுக்குச் சென்னையும் உணவும்  ரஹ்மானின் இசையும் மிகவும் பிடித்துவிட்டது.

5000 கீமிக்கு அப்பால் சீனாவைத்தாண்டியிருக்கும்  கொரியாவில் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே  தமிழ் மொழியும் கலசாரமும் வேறுயூன்றியிருப்பதில் நம்மைப்போலவே கொரியர் பெருமையும் சந்தோஷமும் அடைகிறார்கள்.  ஆனால் எங்கள் தொப்புள் கொடி உறவு முப்பாட்டன் வாழ்ந்த நிலம் என்றெல்லாம் அரசியல் செய்ய முடியாது. புதிய அரசியல் கட்சிகளுக்கு தென்கொரியாவில் அனுமதியில்லை.
கல்கி 9/07/17

11/5/17

அடுத்த கோஹினூர் வைரம்உங்களுக்குக் கிடைக்குமா?


இந்திய அரசியல் வரலாற்றில் சகா வரம்பெற்ற சில செய்திகள் உண்டு. அதில் ஒன்று கோஹினுர் வைரம். 



இந்தியாவின் ஆந்திர மாநிலத்தில் உள்ள கோல்கொண்டா சுரங்கத்தில் இருந்து தோண்டி எடுக்கப்பட்ட 105 காரட் மதிப்பு கொண்ட வைரம் தான் தற்போது வரை உலகின் மிகப் பெரிய வைரமாகக் கருதப்படுகிறது. இதனை கோஹினூர் வைரம் என்று வர்ணிக்கின்றனர். இந்தியாவுக்கு சொந்தமான இந்த வைரம் பல நூற்றாண்டுகளாக பலரிடம் கைமாறி இறுதியாக 1850-ல் பிரிட்டன் மகாராணி விக்டோரியாவிடம் சென்று சேர்ந்தது.
அப்போது முதல் இந்த வைரம் பிரிட்டன் மன்னர் பரம்பரையின் சொத்தாக மாறியுள்ளது. தற்போது மகாராணியின் மகுடத்தில் இந்த வைரம் பதிக்கப்பட்டிருக்கிறது., ஆண்டு தோறும் லண்டனில் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்படுகிறது

.
105 காரட், 21 கிராம் எடையும் உள்ள இந்த  வைரத்தின் மதிப்பு  அதிகாரப்பூர்வமாக அறிவிக்கபடவில்லை. ஆனால் இது பதிக்கப்பட்டிருக்கும் கீரிடத்தின் மதிப்பை  இங்கிலாந்து அரசு அறிவித்திருப்பதால் அதிலிருந்து இதன் மதிப்பை ஒரு பில்லியன் டாலர்(6700 கோடிகள்) என மதிப்பிடுகிறார்கள்  
 பாகிஸ்தான், வங்கதேசம் உள்பட கோஹினூர் வைரத்தைப் பல நாடுகள் சொந்தம் கொண்டாடி வருகின்றன. அந்த வைரம் இந்தியாவின் இறையாண்மையைப் பிரதிபலிக்கும் வைரம். அது இந்தியாவில் தான் இருக்க வேண்டும் பிறப்பிடத்துக்கே மத்திய அந்த  அரசு கோஹினூர் வைரத்தை மீட்டுக் கொண்டுவர உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் “ஆல் இந்தியா ஹியூமன் ரைட்ஸ் அண்ட் சோஷியல் ஜஸ்டிஸ் பிரன்ட்” என்ற அமைப்பு பொதுநல மனு தாக்கல் செய்யதது. நீண்ட நாட்களுக்குப்பின் இந்த வழக்கில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹார் தலைமையிலான அமர்வு, "வெளிநாட்டு அரசாங்கத்துக்கு நாம் எவ்வித உத்தரவையும் பிறப்பிக்க முடியாது. இத்தகைய மனுக்கள் அவசியமற்றது"  என்று தீர்ப்பளித்திருக்கிறார். 
இந்த வைரம் இனி இந்தியாவிற்குத் திரும்பவாய்ப்பில்லை என்ற நிலை எழுந்திருக்கும்  நேரத்தில்,  வெளியாகியிருக்கும் ஒரு செய்தி இந்த வைரம் கிடைத்த இடத்தில் வைரம் தேடும் வேட்டை இந்த  ஆண்டு திவிரமாகத் துவங்கியிருக்கிறது. 
விஜயவாடாவில் இருந்து சுமார் 100 கி.மீ. தொலைவில் உள்ளது கொல்லூர் கிராமம் இதுகிருஷ்ணா ஆற்றின் மீது  டாக்டர் KL ராவ் சாகர் நீர்ப்பாசன திட்டத்தினால் உருவான ஒரு அணையினால் முழ்கிய 2.லட்சம் சதுர கிலோமீட்டரில் மூழ்கிய   கிராமங்களில் ஒன்று. .  
இந்தக் கிராமமும் அதன் பகுதிகளும்  பல நூற்றாண்டுகளாக வைர சுரங்கமாக இருந்திருக்கிறது, குதுப் ஷாஹி வம்சத்தின் கீழ் அதன் தலைநகரமான கோல்கொண்டா வர்த்தகத்தின் ஒரு உலகளாவிய மையமாக இருந்திருக்கிறது மில்லியன் கணக்கான வைரங்கள் பல காரட்களில் 15லிருந்து 19 ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையிலான காலத்தில்  கொல்லூர் நகரத்தில் இருந்து வெட்டப்பட்டதாக நம்பப்படுகிறது.
கோஹினூர் 16 ஆம் நூற்றாண்டின் போது வெட்டப்பட்டது மற்றும் கோல்கொண்டாவில் விற்பனை செய்யப்பட்டது. கொல்லூர்-பாரிடலா பகுதிகளைச் சுற்றியுள்ள சுரங்கங்கள் 1830 ஆம் ஆண்டு வரை செயல்பட்டன, ஆனால் அவை படிப்படியாக கைவிடப்பட்டன. 1990 களில் மாவோயிஸ்டுகள் இப்பிராந்தியத்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தபோது, ஏறக்குறைய 1,000 ஏக்கர் நிலப்பரப்பை ஏழைகளுக்கு  வழங்கினார்கள்.  பின்னர் 2004 ஆம் ஆண்டில்,  கிருஷ்ணாவின் தண்ணீரைத் தடுத்து  ஒரு பாசன நீர் திட்டத்தை ராஜசேகர ரெட்டி அரசாங்கம்  துவக்கியதின் விளைவாக கொல்லூர் உட்பட எல்லாக் கிராமங்களும் 50 அடி நீரில் முழ்கி கிடக்கிறது. அந்த கிராங்களில் வசித்தவர்களுக்கு மாற்று இருப்பிடங்கள், நிலங்கள் வழங்கப்பட்ட போதிலும் இந்த ஏரிக்கரை ஓரத்திற்கு  ஒவ்வொரு  கோடைக்காலத்திலும்  அந்த மக்கள் வருகிறார்கள்.  அவர்கள் மட்டுமில்லை ஆர்வலர்கள், ஆராய்ச்சியாளர்கள், பெரிய வைர வியாபாரிகள் என்றும் பலரும் வருகிறார்கள்.
 எதற்குத்  தெரியுமா? அந்த ஆற்றின்  நீர் வற்றி கரைப்பகுதிகளிலிருக்கும் பாறைகளில் இடுக்குகளில் கிடைக்கும் அபூர்வ கற்களுக்காக. சுரங்கங்கள் அழிந்து பல காலங்கள் ஆனாலும் இன்னும்  வைரக்கற்கள் இருக்கின்றன என அவர்கள் நம்புகின்றனர். அவ்வப்போது  தொடர்ந்து கிடைக்கும் சில விலை மதிப்புள்ள கற்கள் இந்த நம்பிக்கையை  வலுவடையச்செய்கிறது.  
 இந்த பகுதியில் வாழும்  விவசாயக்கூலிகள், ஆடுமாடு மேய்ப்போருக்கு  இங்கு வைரக்கற்கள் தேடுவது ஒரு பார்ட் டைம் பிசினஸ். நீர்த்தேக்கத்தில் நீர் குறைய ஆரம்பிக்கும் போது ஒவ்வொரு ஆண்டும் இவர்கள் பிஸியாகி விடுவார்கள். கற்களை தேடிஎடுத்து சேமித்துக்கொள்வார்கள்.  பின்னர் வியாபாரிகளிடம் காட்டி விற்று விடுகிறார்கள். இதற்காகவே  இப்போது இங்கு  வெளி மாநிலங்களிருந்து வியாபாரிகள் வந்து அருகிலிருக்கும் குண்டூர், விஜயவாடா போன்ற இடங்களில்   தங்கி நேரடியாக  கூலிக்கு இவர்களை அமர்த்தி கற்களை சேகரிக்கிறார்கள். கற்கள் கிடைத்தவுடன் அவர்களுக்கு செல்போன் மூலம் தெரிவிக்கிறார்கள்.   நாள் கூலியைத்தவிர கொண்டுவரும் கற்களை ஆராய்ந்து அதற்கேற்ப நல்ல   விலையும்  தருகிறார்கள் என்கிறார் உள்ளூர் வங்கி மேலாளர் ஒருவர். 
ஒரு கல்லை எப்படி மதிப்பிடுகிறார்கள்? இதற்கான   நவீன எலக்டிரானிக் கருவிகளை இங்கு வரும்  வியாபாரிகள் கொண்டுவருகிறார்கள்.  முதல் சோதனையில் தேர்ந்தெடுக்கப் பட்ட கற்கள் அதில் தீவிரமாகச் சோதிக்கப்பட்டு  கிராம கமிட்டி தலைவர்,  தேடி  எடுத்தவர்கள்  முன்னிலையில் விலை நிர்ணயக்கபடுகிறது  

பிரச்சனைகள் இல்லாமல் இல்லை. சில ஆண்டுகளுக்கு முன் ஆடுமேய்க்கும் ஒரு சிறுமிக்கு கிடைத்த கல்லின் மதிப்பு 7 லட்சம்  என்றவுடன் அத்தனை கிராமங்களும் மகிழ்ச்சியடைந்தன. ஆனால் அந்தச் சிறுமியின் உயிருக்கே பாதுகாப்பில்லை என்ற  நிலை எழுந்தது, கடைசியில் போலீஸார் தலையிட்டினால் அந்த பெண்ணுக்கிடைத்தது 30, 000 ரூ  தான் என்கிறார்   இதில் ஈடுபட்டிருக்கும் ஒரு வியாபாரி. இந்த நிலையினால் இப்போது கிராம மக்கள் கூலிக்கு வைரங்களைத் தேடுவதையே விரும்புகிறார்கள் தனியாகப் போய் தேடபவர்களும் இருக்கிறார்கள் .  
 அரசின் அனுதி வேண்டாமா?  எந்த ஒரு நீர்ப் பாசன திட்டப்பகுதியின் நிலப்பரப்பும்  அரசுக்குச்சொந்தமானது. அதில் இப்படிப் போய்த் தேடுவது சட்டப்படி குற்றம்.  ஆனால் 40 ஆண்டுகளாக நடைபெறும் இந்த வைரத்தேடல் அரசால் அதிகம் கண்டுகொள்ளப்படவில்லை என்பதால்  ஆர்வத்துடன்  வருபவர்கள்  ஆண்டுதோறும் அதிகரிக்கிறார்கள்  முதல் முறையாக வருபவர்களுக்கு  பணம் வாங்கிக்கொண்டு வழிகாட்டியாக உதவ, உள்ளூர் இளைஞர்கள் காத்திருக்கின்றனர்.  
நீங்களும் போய் முயற்சிக்கலாம்.   அடுத்த கோஹினூர் கிடைக்கும் அதிர்ஷடசாலி   ஒரு வேளை நீங்களாக   இருக்கலாமே

19/8/13

பென்ஸ் காரின் விலையில் ஒரு எருமை

ஆதித்தியா
அரியானா மாநிலம் ஹிசார் மாவட்டத்தில் உள்ள சின்சுவாஸ் கிராமத்தை சேர்ந்த விவசாயி கபூர்சிங். இவர் ஒரு பெண் எருமையை  லட்சுமி என பெயரிட்டு அன்புடன்  வளர்த்து பராமரித்து வந்தார். அரியானா மாநிலத்தின் முர்ரா எருமை மாடுகள்  உலக அளவில் மிகவும் பிரசித்தி பெற்றது. அவை நாளொன்றுக்கு 32 கிலோ அளவிற்கு கூட பால் கறக்கும்   அந்த இனத்தை சேர்ந்த லட்சுமி நாள்  ஒன்றுக்கு சராசரியாக 22.5 லிட்டர் முதல் 28 லிட்டர் வரை பால் கறக்கிறது..


லட்சுமி பல கால் நடை கண்காட்சிகளில் கலந்து கொண்டு பல லட்சம் மதிப்புள்ள பரிசுகளை பெற்றுள்ளது. சமீபத்தில் முக்ஸ்டார் என்ற இடத்தில் நடந்த கண்காட்சியில் ”அழகி போட்டி” அதிக அளவு பால் வழங்கும் எருமை” போன்ற  பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்று ரூ.3 லட்சம் பரிசை வென்றதினால் இந்த கருப்பு அழகி  மாநிலம் முழுவதும் பாப்புலர்..

 பலர் விலைக்கு கேட்டும் தர மறுத்துகொண்டிருந்தார் அதன் உரிமையாளர். . கடந்த மாதம் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த விவசாயி ராஜீவ் சார்பாஞ்ச் என்பவர்   மிக அதிக விலையாக லட்சுமிக்கு 19 லட்சம் தருவதாக கேட்டபோது அவரை தவிர்ப்பதற்காக  விலை 25 லட்சம் என்று சொல்லியிருக்கிறார்.  ராஜீவ் அதை தர சம்மதித்து உரிமையாளர் கபூர் சிங்கை ஆச்சரியபடுத்தினார்,   இவ்வளவு பெரும் பணத்தை தனக்கு அளித்த அருமை லட்சுமியை ஒரு பிரிவுபசார விழா நடத்தி மரியாதையோடு அனுப்ப விரும்பினார் கபூர் சிங்.விழாவிற்கு நாள் குறிக்க பட்டது. அன்று லஷ்மிக்கு விசேஷமாக தயாரிக்கப்பட்ட ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள வெள்ளி நகைகளை அணிவித்து  அலங்கரித்தார். 

 
அதை தனது கிராமத்தை சுற்றி ஊர்வலமாக அழைத்து சென்றார். மேலும்  அரியானா மாநிலத்தில் உள்ள முக்கிய பிரமுகர்கள், அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் என 2 ஆயிரம் பேரை அழைத்து அவர்களுக்கு தடபுடலாக விருந்து அதற்கு மட்டும் ரூ.2 லட்சம் செலவு செய்திருக்கிறார்.   அருகிலுள்ள கிராம மக்களும் பங்கு கொண்ட  அந்த விழாவில் அரசு அதிகாரிகளும் கலந்துகொண்டிருக்கிறார்கள். மாநில கால்நடைத்துறையின் மூத்த அதிகாரி இம்மாதிரி நிகழ்ச்சிகள் மேலும் பல விவசாயிகள் இத்கைய மாடுகளை வாங்கி பால் உற்பத்தியை பெருக்க தூண்டும்  என்று சொல்லுகிறார். நிகழச்சியை பிபிசி டிவி கவர் செய்திருக்கிறது.
இதை கடந்த 2 ஆண்டுக்கு முன்பு கபூர்சிங் இதை வாங்கிய விலை 2 லட்சம்.  தற்போது இது 3-வது தடவை கர்ப்பமாக உள்ளது. இன்னும் ஒரு மாதத்தில் கன்று ஈனும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 ஆந்திராவிலிருந்து அரியான  வந்து  ஒரு பென்ஸ்காரின் விலையில் ஏன் இப்படி இந்த  எருமை மாட்டை வாங்குகிறார் ?  2014 ஜனவரியில் ஆந்திர அரசு நடத்தவிற்கும் கால்நடை கண்காட்சியில்  தேர்ந்தெடுக்கபடும்  சிறாந்த எருமைக்கு கிடைக்க போகும் பரிசு   ஒரு கிலோ தங்கமாம்.



ஆதித்தியா

12/8/13

"பேசும்” பொன்னியின் செல்வன்


 ஒரு நல்ல புத்தகத்தை வாசிப்பது என்பது ஒரு சுகமான அனுபவம், அதைவிட சுகமானது அதை யாராவது உணர்ச்சி பொங்க படிக்க, ரசித்து கேட்பது.  கல்கியின் அமர காவியமான பொன்னியின் செல்வனின் அத்தனை கதாபாத்திரங்களும் அவர் எழுதிய வார்த்தைகளை அப்படியே பேசுகின்றன. கதாசிரியரின் வர்ணனைகள் சொல்ல படும்போது அந்த காட்சிகள் கண்முன்னே விரிகிறது ஸ்ரீகாந்த் சீனிவாசா  தயாரித்திருக்கும் ஆடியோ புத்தகத்தில்.  கடந்த சில ஆண்டுகளாக ஆங்கில புத்தகங்களைபோலநல்ல தமிழ் புத்தகங்களும் ஆடியோ புத்தகமாக  சி. டி வடிவில் வெளிவருகின்றன. ஆனால் ஸ்ரீகாந்த் தயாரிப்பு இணையத்திலிருந்து தரவிறக்கம் செய்யக்கூடிய ஆடியோ புக் வகையைசேர்ந்தது.  
ஸ்ரீகாந்த் அமெரிக்காவில் கலிபோர்னியா மாநிலத்தில் சான்பிரான்ஸிஸ் நகரில் கடந்த 20 ஆண்டுகளாக வசிப்பவர். மென்பொருள் நிறுவனத்தில் அதிகாரியாக பணி. பாரதியின் கவிதைகள் நாடகம், தமிழசை போன்ற பலவற்றில் ஆர்வம்கொண்டவர். பாரதி தமிழ் மன்ற தலைவர்.  ”ஸ்ரீ” என்று  பாப்புலராக அறியபட்டிருக்கும் இவரது முகம் மட்டுமில்லை குரலும் அங்கிருக்கும் தமிழர்கள் அனைவருக்கும் பரிச்சியமானது., காரணம்.  நகரிலுள்ள ஸ்டான்போர்ட் பல்கலை கழகம் நடத்தும் பண்பலை ரேடியோ நிலையத்தின் தமிழ் சேவைக்காக ஒவ்வொரு புதன் கிழமையும் 3 மணி நிகழ்ச்சியை தயாரித்து, தொகுத்துவழங்குபவர் இவர்தான். அதில் பாடல். நேர்காணல். நாடகம், தமிழகத்திலிருந்துவரும் பிரமுகர்களின் பேட்டி எல்லாம் உண்டு. கடந்த 11 ஆண்டுகளாக இதை செய்து வருகிறார்.
ஆடியோ புத்தக ஐடியா எப்படி வந்தது? வெளிநாடுகளில் வாழும் தமிழர்களின் அடுத்த தலைமுறை தமிழை முறையாக கற்பதில்லை. பல குடும்பங்களில்  நன்றாக புரிந்தாலும் கூட தமிழில் பேசுவது கூட குறைந்து வருகிறது.. அவர்களை கவர, படிக்க முடியாத நிலையில் இருக்கும் முதியோரின் வசதிக்காக இதைச்செய்தால் என்ன என்ற எண்ணம் எழுந்தது. தமிழ் மேடை நாடகங்களில் நடித்த அனுபவம், ஆர்வம் நம்பிக்கையை தந்தது. என்று சொல்லுகிறார். ஆடியோ புத்தகம் எனறால் செய்தி வாசிப்பது போலிருக்கும் என்ற  எண்ணத்தை மாற்றுகிறது இவரது படைப்பு.. நாவலின் நடையில், காட்சி விவரிப்புக்கு ஒரு குரலையும், கதாபாத்திரங்கள் பேசுவதற்கு பல வகையான குரல்களையும் பயன்படுத்தி. கல்கியின், "பொன்னியின் செல்வன்' நூலில் வரும், பெண்பாத்திரங்கள் உள்பட  40க்கும் மேற்பட்ட கதாபாத்திரங்களை, இவர் மட்டுமே பேசி அசத்தியுள்ளார். பேசியிருப்பவர் ஒரே நபர் என்பது சொன்னால் தான் தெரியும் அந்த அளவிற்கு பாத்திரங்களுக்கேற்ற கச்சிதமான குரல் மாடுலேஷன்.   நாவல் முழுவதும் பாத்திரங்கள் தொடர்ந்து அதே குரலில் பேசுகிறார்கள்.   75 மணி நேரம் ஓடும் இந்த ஆடியோ புத்தகம் 5 பகுதிகளானது.  இதைப்போல பார்த்திபன் கனவு, சிவகாமியின் சபதம்  ஆடியோ புத்தகங்களையும் தயாரித்து இணையத்தில் வெளியிட்டிருக்கிறார்.. நிறைய மனழுத்தம் கொடுக்ககூடிய பரப்பரபான பணியுடனும் பயணங்களுக்குமிடையே  ஸ்ரீகாந்த்தால் இதை எப்படி செய்ய முடிந்த்தது? ஆர்வம், சாதிக்கவேண்டும் என்றவெறி, அன்பு மனைவி ஜானகியின் ஒத்துழைப்பு என்கிறார், வீட்டிலேயே ஒரு சின்ன ஆடியோ ஸ்டுடியோ அமைத்துகொண்டு இரண்டு வருடங்கள் நீண்ட இரவுகளிலும்,அத்தனை விடுமுறைநாட்களிலும் உழைத்திருக்கிறார்.



   ஐ போன், ஐபேட், டேபிளட் என எதில் வேண்டுமானாலும் டவுன்லோட் செய்து கொள்ளகூடிய வசதியுள்ளது.. கட்டணம்? மிக மிக குறைவு, 120 ரூபாய் ஆன்லைனைல் செலுத்தினால்  போதும் ஒரு புத்தகத்தை டௌன்லோட் செய்துகொள்ளாலாம். (www.tamilaudiobooks.com)விற்பனை எப்படியிருக்கிறது? உலகின் பல மூலைகளிலிருக்கும் தமிழர்கள்  வாங்குகிறார்கள். விற்பனையைவிட  “என் தந்தைக்கு அவரது இளமை காலத்தை திருப்பி கொடுத்திருக்கிறீர்கள்”  ஆடியோ புத்தகத்தை கேட்ட  என் அம்மா அழுதுவிட்டார்” போன்ற  வார்த்தைகள் தான் மிகுந்த சந்தோஷத்தை தருகிறது என்கிறார். “ஸ்ரீ” இவரது அடுத்த பிராஜெக்ட் தமிழ் தாத்தாவின் “ என் சரித்திரம்”
கல்கியின் அமர காவியங்களுக்கு தனது குரலால் உயிருட்டி உலகமெங்கும் ஒலிக்க செய்திருக்கும் இந்த மனிதரின்  பணி மகத்தானது.

-ஆதித்தியா (ரமணன்)

3/8/13

மொட்டை “ பாஸ்”

ஆதித்தியா
 அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ்புஷ் இப்போது  டெக்ஸாஸ் மாநிலத்தில் ஹூயூஸ்டன் நகருக்கு அருகே வசிக்கிறார்.   முன்னாள் அதிபர்களுக்கான உரிமைகளில் ஒன்று  முழுநேர செக்யூரிட்டி.. அதற்காக ஒரு சிறிய ரகசிய உளவுப் படைப்பிரிவு இயங்குகிறது, அந்த குழுவில் ஒருவரின் மகன் பாட்ரிக்.   வயது இரண்டு. சமீபத்தில் அந்த குழந்தை லுக்கேமியா என்ற ரத்த புற்றுநோயால் தாக்கபட்டிருப்பது கண்டறியபட்டது.  அதன் சிகிச்சையின் தீவிரத்தால் அந்த குழந்தையின் தலை முடி முழுவதும்  கொட்டி மொட்டையாகியிருக்கிறது. அந்த குழந்தைக்கு அது வினோதமாக தெரியக்கூடாது என்பதற்காக  ஒரே காலனியில் வசிக்கும் பாட்ரிக்கின் தந்தை ஜோனின் குழுவினர் அனைவரும் மொட்டை அடித்துகொண்டனர். அந்த குழந்தையின் மருத்துவ செலவிற்கு நிதிதிரட்ட பாட்ரிக் பிரண்ட்ஸ் என்ற பெயரில் ஒரு  வெப் சைட்டையும் துவக்கி நன்கொடைகள் கேட்டிருக்கின்றனர்.
திடுமென ஒருநாள் தன் அத்தனை பாதுகாவலர்களும் மொட்டைதலையர்களாக இருந்ததைப்பார்த்து விசாரித்து விஷயம் அறிந்த புஷ் உடனே பெரிய அளவில் நிதிஉதவி செய்தததோடு அந்த குழுவில் தானும் இருப்பதை அறிவிக்கும் வகையில்  மொட்டை அடித்து கொண்டார்.  அவர்களோடு  ஒரு குருப் போட்டோ எடுத்து அதை அவர்களின் வெப் ஸைட்டில் வெளியிடச்செய்தார்.
நன்கொடை வசூலிப்பதற்காக நகரில் ஒரு மோட்டார் சைக்கிள் பந்தையத்தைதானே முன்னின்று நடத்தியிருக்கிறார். அதோடு நிற்காமல் அந்த சிறுவனோடு ஒரு படம் எடுத்துகொண்டார் அதை திருமதி புஷ் தேசிய நாளிதழ்களுக்கு அனுப்பி அந்த சிறுவனின் மருத்துவ செலவிற்கு உதவ வேண்டியிருக்கிறார்.



கையில் மோட்டார்  பொம்மைகளுடன் யார் மடியில் இருக்கிறோம் என்பது கூட புரியாமல் உட்கார்ந்திருக்கும் அந்த மொட்டை சிறுவனும் மொட்டைதலையுடன்  முன்னாள் அதிபர் புஷ்ஷும் இருக்கும் அந்த படம் பலரை பாட்ரிக் நண்பர்கள் குழுவிற்கு நன்கொடை அனுப்ப செய்திருக்கிறது.
அதிபர் புஷ்ஷுக்கு இபோது வயது 89, பெர்க்கின்ஸ் நோய் தாக்கியிருப்பதால் சக்ர நாற்காலியிலிருக்கிறார்.

கல்கி11/08/13

26/7/13

நம்ம ஆளுங்க கலக்கறாங்க !

 

ஓபாமாவை கவர்ந்த ஸ்ரீகாந்த்



 !

அமெரிக்கவாழ் இந்தியர்களின் இரண்டாவது, மூன்றாவது தலைமுறையினர் இப்போது மெல்ல அமெரிக்க  சமூக,அரசியல், கலாசார வாழ்க்கையில் நன்கு பின்னி பிணைந்து கலக்கி கொண்டிருக்கிறார்கள். பல ஆண்டுகளுக்கு முன் வந்து வாழ்க்கையை துவக்கியவர்களில் பலர் அவர்களின் துறைகளில் உயர்ந்து  தங்கள் அடையாளங்களை பதித்துகொண்டிருக்கிறார்கள். அமெரிக்க இந்தியர்களாக அறியப்படும் இவர்கள்  பெரிய கார்ப்ரேட்களில், அரசியல் கட்சி,  பொறுப்புகளில், மாநில அரசுகளின் உயர்ந்த பதவிகளில், மாநில கவர்னராக கூட இருக்கிறார்கள். இந்த வரிசையில் சமீபத்தில் இடம்பெற்றிருப்பவர் ஸ்ரீகாந்த் ஸ்ரீநிவாசன்.அமெரிக்காவின் இரண்டாவது பெரியஉயர் நீதிமன்ற நீதிபதியாக அதிபர் ஒபாமாவால் நியமிக்கபட்டிருக்கிறார். அமெரிக்க நீதிமன்ற முறை நம்முடையதிலிருந்து சற்று மாறுபட்டது.. தேசம் 13 நீதி மண்டலங்கள் அதன் கீழ் பல நீதி மாவட்டங்கள்.என பிரிக்கபட்டிருகின்றன.. இங்குள்ள வழக்குகளை மேல்முறையீடு செய்ய 13 அப்பீல் கோர்ட்டுகள். அமெரிக்க உச்சநீதிமன்றம் ஒர் ஆண்டுக்கு 100 வழக்குகளுக்கு மேல் எடுத்துகொள்வதில்லை என்பதால் இந்த அப்பீல் கோர்ட்டுகள் நமது உயர்நீதி மன்றங்களைவிட வலிமையானது. மாநில. பெடரல் சட்டபிரச்சனைகளைகூடவிசாரிக்கிறது.அத்தகைய கோர்ட்களில் அமெரிக்காவின் இரண்டாவது பெரிய கோர்ட். வாஷிங்டனிலிருக்கிறது.  அதில் தான் ஸ்ரீகாந்த் ஸ்ரீனிவாசன். நீதிபதியாக நியமிக்கபட்டிருக்கிறார். மாவட்ட நீதிமன்றங்கள் இரண்டில்  இந்தியர்கள் நீதிபதிகளாக இருந்தாலும் ஒரு உயர் நீதி மன்றத்தின் நீதிபதியாக அமெரிக்க அதிபரால் நியமிக்க படும் முதல் இந்தியர் மற்றும் ஆசியரும் இவரே.

At a reception in honor of Sri Srinivasan, the first South Asian American judge in the US Court of Appeals for the DC Circuit, at the Embassy Residence, are seen (from left to right): Sri Srinivasan; Mrs. Saroja Srinivasan; Indian Ambassador Mrs. Nirupama Rao; and Srinija Srinivasan. Photo credit: Embassy of India, Washington


சண்டிகரில் பிறந்த ஸ்ரீகாந்த்தின் தந்தை ஸ்ரீனிவாசனும் அம்மாவும்   படிக்க அமெரிக்கா சென்னறவர்கள். பின்னால இருவருக்கும் கன்ஸாஸ் பலகலகழகத்தில் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்ததாதால் அங்கேயே தங்கிவிட்டனர். அதனால் உயர்நிலைப் பள்ளிபடிப்பை அமெரிக்காவில் தொடர்ந்து அங்கேயே வளர்ந்தவர். பள்ளியிலும் கல்லூரியிலும் பேஸ்கட்பால் வீரர். இவருடைய லாரன்ஸ் பள்ளி டிம் மேட்கள் இன்று தேசிய சாம்பியன்கள். இன்றும் வாரம் ஒருமுறை பேஸ்பால்  விளையாடுகிறார்.புகழ் பெற்ற ஸ்டன்ஃபோர்ட் பல்கலைகழத்தில் எம்பிஏ வும் சட்டமும் படித்தவர்  சட்டம் முதுகலைப் படிப்பில் சிறப்பு தேர்ச்சி பெற்றவர். சில காலம் ஹார்வர்ட் பல்கலகழகத்தில் ஆசிரியராகவும் பணியாற்றியிருக்கிறார்.
இவரது ஓரே சகோதரி ஸ்ரீநிஜா யாஹூ நிறுவனம் துவங்கபாடபோது சேர்ந்த முதல் ஐவரில் ஒருவர். 15 ஆண்டுகள் அதனுடன் வளர்ந்து பல உயரங்களைத் தொட்ட பின் இப்போது தனி நிறுவனம் துவக்கியிருக்கிறார். நாட்டின் சிறநத அறிஞர்களை... தேர்ந்தெடுக்கும் வெள்ளை மாளிகையின் குழுவில் ஒருவராக நியமித்திருக்கிறார்


அமெரிக்கஅரசுக்காகவும்  அதற்குஎதிராக தனியார் நிறுவனங்களுக்காகவும் \ வாதாடியவர் ஸ்ரீநிவாஸ் அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டில் 20 வழக்குகளூக்கு மேல் வென்று புகழ் பெற்றவர்எதிர்கட்சியை சேர்ந்த அதிபர் புஷ் அவர் காலத்தில் அரசின் உதவி ஸொலிட்டராக அமர்த்தபட்டஒருவரை. ஒபாமா நீதிபதியாக அறிவித்தபோது அவரது கட்சியில் சின்ன சலசலப்பு.நான் ஒரு வழக்கறிஞரென்ற முறையில். ஸ்ரீகாந்த்தின் திறமமையை  நன்கு அறிவேன். அவரைப்போன்ற திறமைசாலிகள் அமெரிக்க நீதித்துறையில் இருப்பது நாட்டுக்கு கெளரவம்  என சொல்லியிருக்கிறார். 43 வயதாகும் ஸ்ரீகாந்த்துக்கு இது ஆயூட்கால பதவி. எட்டே நீதிபதிகள் கொண்ட அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் வருங்காலத்தில் அமரக்கூடிய வாய்ப்பும் இருக்கிறது.
“ஸ்ரீ“ என நண்பர்களால் அழைக்கபடும் ஸ்ரீகாந்த் சட்டபடிப்பு முடிந்தபின் அமெரிக்க முறைப்படி ஒரு வழக்கறிஞர்கள் நிறுவனத்தில் சேர்ந்து பணியாற்றி அந்த நிறுவனத்தின் பங்குதாரராகவும் பினஅதன் தலைவருமாக வளர்ந்தவர்


13/7/13

மோடியின் எதிர்கால கனவுகளும், என்கவுண்ட்டர்களும்


அதிகாரபூர்வமாக அறிவிக்கபடாவிட்டாலும் பிஜேபியின் பிரதமர் வேட்பாளாரக அறியபட்டிருக்கும் குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு  கட்சியில் முறைத்து கொள்ளும் மூத்த தலைவர்கள், உதறிவிட்டுபோகும் கூட்டணிகட்சிகள் போன்ற பிரச்சனைகளுடன் இப்போது சேர்ந்திருக்கும் புதிய தலைவலி 9 ஆண்டுகளுக்கு முன் நடந்த ஒரு என்கவுண்ட்டர்.
2004ஆம் ஆண்டு ஜூன் 15ந் தேதி அகமதாபாத்-காந்திநகர் நெடுஞ்சாலையில் நடந்த இந்த என்கவுண்ட்டர் சம்பவம் குஜராத்தை மட்டுமல்ல, இந்தியா முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது.  இளம்பெண் இஷ்ரத் ஜகானுடன் பிரனேஷ் பிள்ளை என்கிற ஜாவத் குலாம் ஷேக், அம்ஜத் அலி ரோனா, ஜீஷன் ஜோகர் ஆகிய நான்கு முஸ்லிம்கள் என்கவுண்ட்டர் செய்யப்பட்டது பெரும் பரபரப்பை உண்டாக்கியது.இதில் இஷ்ரத் ஜகான் 19 வயது கல்லூரி மாணவி. பீகாரை சேர்ந்தவர்.இவர் மும்பையில் உள்ள குருஞானக் கல்லூரியில் பட்டப்படிப்பு படித்து வந்தார் இவருக்கு தீவிரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பாவுடன் தொடர்பு என்றும், குஜராத் முதல்வரான நரேந்திர மோடியைக் கொலை செய்யத் திட்டமிட்ட லஷ்கர்-இ-தொய்பாவின் இளைஞர்கள் மூவருடன் இஷ்ரத் இணைந்து செயல்பட்டார் என்றும் இவர்கள் தங்கள் இயக்கத்திற்கான செயல்பாடுகளில் ஈடுபட்டிருந்தபோது போலீசாரால் என்கவுண்ட்டர் செய்யப்பட்டனர் என்றும் குஜராத் காவல்துறை தெரிவித்தது. இந்த என்கவுண்ட்டரை நடத்தியது டி.ஐஜி வன்சார என்பவர், இவர் பல என்கவுண்ட்டர்களை நடத்தியிருக்கும் ஒரு என்கவுண்ட்டர் ஸ்பெஷலிஸ்ட். கொல்லபட்ட நால்வரும் ல்ஷ்கர்-இ-தொய்பா அமைப்பினர் என்றும் முதல்வரை கொல்ல சதி செய்தற்கான ஆதாரங்களும் இருப்பதாக சொல்லியிருந்தார். ஆனால், இஷரத் ஜகான் குடும்பத்தினரும், பிர்னேஷ் பிள்ளையின் தந்தையும் இது என்கவுண்ட்டரே அல்ல. திட்டமிட்ட படுகொலைஎன்றனர். மனித உரிமை அமைப்பினரும் குஜராத் எதிர்க்கட்சியினரும்,பத்திரிகைகளும் இதே குற்றச்சாட்டை எழுப்பின.
 5 ஆண்டுகால விசாரணைக்குப் பிறகு 2009ல், “இஷ்ரத் ஜகான் உள்ளிட்ட நால்வரும் என்கவுண்ட்டரில் கொல்லப்படவில்லை. போலீஸ் திட்டமிட்டு செயல்பட்டுள்ளதுன்றார் அகமதாபாத் மெட்ரோபாலிட்டன் மாஜிஸ்டிரேட். அவர் தனது நீண்ட 243 பக்க அறிக்கையில்  பதவி உயர்வுக்கும், மெடல்களுக்கும், பாதுகாப்பாற்ற நிலையிலிருக்கும் முதல் அமைச்சரை காப்பாற்றியதைபோல நல்ல பெயரை வாங்கவும் இந்த படுகொலையை போலீஸ் அதிகாரிகள் செய்திருக்கிறார்கள் என்று  தீர்ப்பளித்தார். இதை சற்றும் எதிர்பார்க்காத குஜராத் அரசு  தீர்ப்பை எதிர்த்து  உயர்நீதிமன்றத்தில்.  அப்பீல் செய்தது. கொலை, திட்டத்தை நிறைவேற்ற வந்திருக்கும் தீவீரவாதிகளைப்பற்றிய  தகவலை தந்தது மத்திய உளவுத்துறையினர்தான். என்றும் அதை போலீஸ் செயலாக்கியிருக்கிறது.  என்றும் மனுவில் சொல்ல பட்டது.
உண்மை நிலையை அறிய உயர் நீதிமன்றம் ஒரு சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்தது..  குழுவும் விசாரணை தொடர்ந்தது. குஜராத் உயர்நீதிமன்றத்தில், 2011ஆம் ஆண்டு சிறப்பு புலனாய்வுக் குழு தாக்கல் செய்த மனுவில், “இது முறைப்படி நடந்த என்கவுண்ட்டரே அல்ல. என்கவுண்ட்டர் நடந்ததாகச் சொல்லப்படும் தேதிக்கு முன்பாகவே இஷ்ரத் ஜகான் உள்பட நால்வரும் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார்கள்என்று தெரிவித்தது. அதாவது, நால்வரும் போலீசாரால் ஏற்கனவே பிடிக்கப்பட்டு, போலீசின் கஸ்டடியிலேயே கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்பதுதான் சிறப்புப் புலனாய்வுக் குழுவின் அறிக்கை.இதனை ஏற்றுக்கொண்ட குஜராத் ஐகோர்ட்டு இந்த போலி என்கவுண்ட்டர் பற்றி உரிய விசாரணை நடத்த சி.பி.ஐ. போலீசாருக்கு உத்தரவிட்டது. மேலும் இந்த வழக்கு விசாரணை தகவல்களை கோர்ட்டுக்கு அவ்வப்போது தெரிவிக்க வேண்டும் என்று கூறியதோடு சி.பி.ஐ. விசாரணையையும் கோர்ட்டு நேரடியாக கண்காணித்து வந்தது.  கடந்த மார்ச் மாதம் வழக்கு விசாரணையில்  எந்த முன்னேற்றமும் இல்லாதை கண்டித்து  இரண்டு வாரத்திற்குள் குற்றபத்திரிகை தாக்கல்செய்யபடவேண்டும் என  சிபிஐக்கு கட்டளையிட்டது. இந்த  நால்வர் கொலை செய்யப்பட்ட என்கவுண்ட்டரிலும் சம்பந்தபட்டிருந்த டிஐஜி வன்சாரா சிறையிலிருக்கிறார். காரணம் 2005ஆம் ஆண்டு ஷொராபுதீன் ஷேக் என்பவர் லஷ்கர்-இ-தொய்பாவுடன் தொடர்புடையவர் என்றும், அவரும் மோடியை கொல்லத் திட்டமிட்டார் என்று என்கவுண்ட்டர்பாணியில் குஜராத் போலீஸ்  தீர்த்துக் கட்டியிருந்தது. இந்த என்கவுண்ட்டரை முன்னின்று நடத்தியவரும் டி.ஐ.ஜி வன்சராதான். ஷொராபுதீன் என்கவுண்ட்டர் நடந்த இரண்டாவது நாளில் அவரது மனைவி கவுசர்பீ, டி.ஐ.ஜி.வன்சராவின் சொந்த கிராமத்திற்கு அருகே கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தார் .இந்த வழக்கு சி.பி.ஐ. விசாரணைக்குட்பட்டு, சுப்ரீம் கோர்ட் வரை சென்றது. அப்போது, கவுசர்பீ கொலைதான் செய்யப்பட்டார் என்பதை குஜராத் அரசின் வழக்கறிஞரே சுப்ரீம் கோர்ட்டில் ஒப்புக்கொண்டார். ஷொராபுதீன் என்கவுண்ட்டரும் போலியானதே என்பது தெரிய வந்தது. இதனால் இந்த வழக்கில் டி.ஐ.ஜி வன்சரா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அவரிடம்  கோர்ட் அனுமதியுடன் ஜெயிலில் விசாரணை நடத்தியபின் சிபிஐ குற்றபத்திரிகையை தாக்கல் செய்திருக்கிறது. சாம்பல் தாடியும் கறுப்பு தாடியும் இந்த என்கவுண்ட்டருக்குஒப்புதல் கொடுத்த பிறகுதான் எங்கள் பிடியில் இருந்த அந்த 4 பேரையும் தீர்த்துக் கட்டினோம்என்று சிபிஐயிடம் சொல்லியிருக்கிறார் டி.ஐ.ஜி. வன்சரா. என்பது சிபிஐ தரப்பிலிருந்து கசியும் செய்தி.  இந்த அடையாளாங்கள்  குஜராத் முதல்வரையும், உள் துறை அமைச்சராகயிருந்த அமித் ஷாவையும் குறிப்பிடுகிறது அத்துடன், இந்த என்கவுண்ட்டர் படுகொலைக்கு முன்பாக இரண்டு முறை அமித் ஷாவிடம் வன்சரா பேசியிருப்பதாகவும் சி.பி.ஐ. தெரிவிக்கிறது.பதிவு செய்யபட்டிருக்கும் இந்த வாக்குமூலம் கோர்ட்டில் உறுதி செய்யபட்டால் மோடிக்கும், அமித்ஷாவிற்கும் பிரச்சனை ஏற்படும்.
 ஆனால் பல போலீஸ் அதிகாரிகளை குற்றபத்திரிகையில் பட்டியிலிட்டிருக்கும் சிபிஐ அமைச்சர்களை சேர்க்கவில்லை. தொடர்ந்து சமர்பிக்கபடும் கூடுதல் குற்றபத்திரிகைகளில் அமித் ஷாவின் பெயர் சேர்க்கபடும் வாய்ப்பு இருக்கிறது. இது மோடிக்கு அரசியல் ரீதியாக மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தும்.
மேலும் குற்றபத்திரிகையில் சிபிஐ வெடிகுண்டாக  ஒரு  டேப்பை இணைத்திருக்கிறது, அதில் மாநில கல்வி, சட்ட, உள்துறை அமைச்சர், முதல்வரின் செயலாளர் பங்குபெற்ற ஒரு கூட்டத்தில் அதில் குஜராத் அட்வகேட் ஜெனரல் திரிவேதி   “சிறப்பு புலனாய்வுக் குழு தன்னுடைய அறிக்கையில், இஷ்ரத் ஜகான் கொல்லப்பட்டது போலி என்கவுண்ட்டரில்தான் என்று சொன்னால், நாம் அரசுக்கோ அதிகாரிக்கோ எந்த சிக்கலும் இல்லாமல் முறியடிக்கவேண்டும் அதுதான் முக்கியம்என்று சொல்லியிருக்கிறார். . தடய அறிவியல் துறையால் பரிசோதிக்கபட்டிருக்கும் இந்த டேப்பை ரகசியமாக பதிவு செய்தவர் அந்த கூட்டத்தில் பங்குகொண்ட ஒரு போலீஸ் அதிகாரி.
மற்றொரு அதிர்ச்சியான தகவல் மத்திய உளவுத்துறையினர் இதில் சம்பந்தபட்டிருப்பது. ஐபி  என்பது மத்திய உள்துறைஅமைச்சகத்தின் ஒரு அமைப்பு. இவர்களுக்கு சட்டரீதியான எந்த அங்கீகாரமும் கிடையாது. ஆனால் மிக வலிமையான அமைப்பு. ஒவ்வொரு மாநிலத்திலும்   மத்திய அரசின் மூத்த போலீஸ் அதிகாரியின் கீழ் ஒரு சின்னபிரிவு இயங்கும். மாநில போலீஸுக்கு முக்கிய ரகசியங்களையும்   அவர்களைப்பற்றி மத்திய அரசுக்கு தகவல்களையும்  தருவது இவர்கள் பணியில் ஒன்று. குஜராத்தில் அப்படி இருந்த மூத்த ஐபி அதிகாரி ராஜேந்திர குமார். இவர் மோடியுடன் மிக நெருக்கமாகயிருந்த அதிகாரி. இவர் தந்த தவறான தகவலினால்தான் இந்த என்கவுண்ட்டர் என்பதை இப்போது சிபிஐ கண்டுபிடித்திருக்கிறது. இவரை கைது செய்து விசாரிக்க வேண்டும் என சிபிஐ முயற்சிக்கிறது. அதற்கான அனுமதியை அரசிடம் கோரியிருக்கிறது.  இப்படி மத்திய உளவுதுறையின் மீது வழக்கபோட முயற்சிப்பது இதுதான் முதல் முறை.  எந்த சட்டபிரிவின் கீழும் வராத அந்த அமைப்பின் மீதுவழக்குபோடமுடியுமா என்பதே சந்தேகத்திற்கு உரிய கேள்வியாகயிருந்தாலும், அரசு இயந்திரத்தின் இரு அமைப்புகள் இப்படி மோதிக்கொள்ள மத்திய அரசு அனுமதிக்குமா? என்பது தான் இப்போது எழும் முதல் கேள்வி.   உளவுத்துறையின் கண்ணியத்தை காப்பாற்ற மேல் நடவடிக்கைகள்  எதுவும் எடுக்காமல் விடப்பட்டால்  பலன் பெறப்போவது மோடிதான். என்பதை உணர்ந்திற்கும் காங்கிரஸ் அரசு இதை எப்படி கையாளாளப்போகிறது என்பதை சிபிஐ, ஐபி இரண்டு அமைப்புகளின் அதிகாரிகளும்  கூர்ந்து கவனித்துகொண்டிருக்கின்றனர்.
சிபிஐக்கு வெற்றி வாய்ப்புள்ள, குஜராத் அரசுக்கு எதிரான  இந்த போலிஎன்கவுண்ட்டர் வழக்கு மோடியின் பிரதமர் கனவு பலிப்பதை பாதிக்குமா?
நிச்சியமாக இல்லை என்று சொல்லமுடியாவிட்டாலும் இமேஜ் சரிகிறது என்பது நிஜம்.   அவர் இமேஜை பாதிக்கும் விஷயங்களாக பட்டியலிடபட்டிருக்கும், கேப்டலிஸ்ட்,தீவிரமதவாதி,சிறுபான்மையினருக்கு எதிரானவர், போன்றவகைளோடு   போலீஸையும் உளவுத்துறையையும் சுயநலத்திற்காக கையாளுபவர் என்ற லேபிலும் சேர்வதை தவிர்க்கமுடியாது

-ஆதித்யா 
கல்கி  21/07/13 இதழலில்