நூல் அறிமுகம்
திராவிட மாயை-ஒரு
பார்வை ஆசிரியர் சுப்பு.
இருப்பதை மறைப்பது மாயை. இல்லாதை இருப்பதுபோல் காட்டுவதும்
மாயயே. முன்னது மெய்மேல் போர்த்திய பொய். பின்னது பொய்யையே மெய்யென காட்டுவது. இன்று தமிழக அரசியலில் அழியாத இடம்பிடித்து
விட்ட, திமுக விற்கு பிறகு பிறந்த கட்சிகள் விட்டு
விடமுடியாத அடைமொழியான “திராவிடம்” “ எனபது ஒரு” பொய்- ஒரு தோற்றுவிக்கபட்ட மாயை அதை திராவிட
இயக்கங்கள் விடாப்பிடியாக நிர்வகித்துவருகின்றன எனபதை தனது நீண்ட ஆராய்சிக்கு பின்னர் இந்த புத்தகத்தில் ஆசிரியர் சான்றாவணங்களோடும், மேற்கோள்களுடனும் விளக்குகிறார். நீதிகட்சி,சுயமரியாதை இயக்கம்,திராவிடர்கழகம், திராவிடமுன்னேற்ற கழகம் குறித்து நேர்மையாக விமர்சனம்
செய்யமுடியாத இன்றைய சுழலில், 1917 முதல் 1944
வரையிலான காலகட்டத்தில் தமிழக அரசியலில் ஏற்பட்ட மாறுதல்களின் வாயிலாக “ திராவிட”
“ எனற மாயை தோற்றுவிக்கபட்ட வரலாற்றை விவரிக்கும் கட்டுரைகளின் தொகுப்பு இந்த
நூல்.
`திராவிடம் எனபது தமிழ்நாடு மட்டுமில்லை. அது தமிழ்ச்சொல்லுமில்லை.
விந்திய மலைக்குதென்புறம் உள்ள நிலப்பகுதியே திராவிடம் என அழைக்கப்பட்டது.1856ல்
அதுவரை நிலப்பரப்பை குறிக்கும் சொல்லாக இருந்த
“திராவிட” “என்ற சொல் கிருத்துவ
பாதிரியார் கால்வெல்ட்னிலால் தங்கள் மதத்தை பரப்ப ஒரு ஆயுதமாக, திராவிட இனத்தை
குறிக்கும் சொல்லாக, மாற்றியமைக்கபட்டிருக்கிறது. எப்படி அரசியல் லாபங்களுக்காக அந்த திராவிட இனவாதத்தை ஒரு அரசியல் கொள்கையாவே அறிவித்து திராவிட கழகத்தை நிறுவி ஈ.வெ.ரா வளர்த்தார், தொடர்ந்து வந்த அவரது சீடர்கள் எப்படி அந்த மாயயை தொடர்ந்து
போற்றினார்கள் எனபதை பல கட்டுரைகள்
விவரிக்கின்றன.
19ம்-மற்றும் 20
ம்நூற்றாண்டு தொடக்க்த்தின் முக்கிய நிகழ்வுகள், தாழ்த்தபட்டோரை
திராவிட இயக்கதினர் நடத்திய விதம்,வைக்கம்போராட்டம்
பற்றிய உண்மைகள், ஊடகங்களால்
உருவாக்க பட்ட மாயை, மகாத்மா
காந்தியின் தமிழக விஜயம், இடஒதுக்கீடு வந்த
வழி, த்மிழறிஞராக போற்றபடும் கிருத்தவ பாதிரியார் கால்வெல்ட்
செய்த ஜாதி அரசியல்,தமிழக் வேளாண்மை பொருளாதாரசூழல், வெகுசன இலக்கியங்கள் ஈவெராவின் பிரமாண எதிர்ப்பு, இரட்டைவேடம் அந்த காலகட்டதில் தேசிய இதழ்களின் போக்கு இப்படி
பல விஷயங்களைப்பேசுகிறது இவரது 42 கட்டுரைகள்
தொடர்ந்து வந்த தலைமுறையினர்மீது திணிக்கபட்ட
பிராசார பொய்களை அகற்றுவதற்கும் அதை பரப்பிவருவோரின் மூகமூடிகளை களைய முயற்சிப்பதற்கும
மிக அசாத்தியமான் துணிவும், உணர்ச்சிவசப்படாமல்
அறிவு பூர்வமாக அணுகும் மனப்பான்மையும் ஆதரங்களை அடுக்கும் திறமையும், எவரையும் புண்படுத்தாமல் எழுதும் நாகரிகமும தேவை.
அனைத்தையும் இந்த தொகுப்பின் ஆசிரியர் சுப்புவின் எழுத்தில் காணமுடிகிறது.
கட்டுரையில் சொல்லப்படும் எந்த விஷயமும் அந்தந்த காலகட்டதில் வந்த பத்திரிகைகளின்
தேதி வாரியான செய்திகள் ,பின்னால் அதுபற்றி
வெளி வந்த புத்தகங்களளின் பக்கங்கள் வார பத்திரிகைகளின் கட்டுரைகள் போன்ற
ஆதாரஙகளுடன் சொல்லபட்டிருக்கின்றன. இப்படி ஆதாரபூர்வமாக, ஆராய்ச்சிசெய்து
எழுதுவதற்காக தன் பணியிலிருந்து
5 ஆண்டுகள் தன்னை விடுவித்துக்கொண்டவர் இவர்.
இந்தியர்கள் எவரும் ஆரியர்களும் இல்லை, திராவிடர்களும் இல்லை என்று மரபணு ஆய்வில் உறுதி செய்யபட்டுவிட்டாலும்,ஆரியம் ஒரு இனம், திராவிடம் ஒரு இனம் எனபதை
மானுடவியல் அறிஞ்ர்கள் எவரும் ஏற்றுகொள்ளவிதில்லை என்றாலும்,அம்பேதகாரிலிருந்து சோ வரை எழுதியிருந்தாலும் பிராசார வலிமை, அரியணை தந்த வசதி, மக்களின் பரவலான அறியாமை, படித்தவர்களின் மெத்தனம், அறிவுள்ளோரின் துணிவின்மை
ஆகியவற்றால் திராவிடம் என்ற மாயை வளர்க்கபட்டிருப்பதை புரிய வைக்கிறார்.
மிக சீரியஸான இந்த கட்டுரை தொகுப்பில்
சில சுவாரஸியமான, ஆச்சரிய தகவல்களும் சிதறி கிடக்கின்றன. சாம்பிளுக்கு ஒன்று.
பக்188
“இப்பத்திரிகையை திறப்பதற்கு ஈசன் அருளால் ஸ்ரீ ஸவாமிகள் போன்ற பெரியார்
கிடைத்த்து அஃதெயாகும். இறைவன் அருளாலும், சுவாமிகள் அருளாலும் பத்திரிகை என்றும் நிலைபெற்று மற்ற பத்திரிகைகளிடமுள்ள
குறை யாதுமின்றிச் செவ்வனே நடைபெறவேண்டுமாய் ஆசிர்வதிக்குபடி சுவாமிகளை
வேண்டுகிறேன் “ கேட்டுகொண்டவர் ஈவெரா. துவக்க விழா நடைபெற்ற பத்திரிகை - குடிஅரசு” – அழைக்கபட்டிருந்தவர் சிவ சண்முக மெய்ஞ்ஞான சிவாச்சாரிய
சுவாமிகள் என்ற பெயருடைய ஞானியரடிகள்
குடிஅரசின் மேலட்டையில் “ சாதிகள் இல்லையடி பாப்பா” “ என்ற
பாரதியாரின் வரிகள் அச்சிடபட்டிருந்தன.ஆனால் அதற்கு அருகிலேயே ஆசிரியர் பெயர்
இருந்தது.ஆசிரியர்கள் இருவர் ஈ.வெ.ராமசாமிநாயக்கர் மற்றும் வ. மு தங்கபெருமாள்
பிள்ளை. இராண்டாண்டுகள் பத்திரிகை இப்படி சாதிப்பெயருடன் தான் வந்திருக்கிறது.
தமிழக அரசியலிலிருந்து ” “திராவிட“ என்ற
பெயரை அகற்றுவது அவ்வளவு எளிதல்ல.ஆனாலும் உண்மை வரலாற்றை ஆழ்ந்த ஆராய்சிக்கும், கடினஉழைப்புக்கும் பின் வரும் தலைமுறையினருக்காக பதிவு
செய்திருக்கும் ஆசிரியரின் பணி பாராட்டுக்குரியது.
R