20/5/12

அரண்மனையில்வாழும் புத்தகங்கள்




ஒரு கிரேக்க கோட்டையை போல் கம்பீரமாக நிற்கும்  அந்த கட்டடித்தின் முகப்பில் திமிறிப்பாயும் குதிரையை அடக்கும் வீரன்நெப்ட்யூன் தேவதை   சிலைகளில் மீது பீறீட்டு பாயும் நீர் ஊற்றுக்கள். கட்டிடத்தின் இருபுறமும் முதல் மாடிக்கு இட்டுச்செல்லும் வளைந்த படிகள். ஏறி சென்ற நம்மை பிரம்ப்பில் ஆழத்துவது  பளிங்கு தூண்கள் பரவி நிற்கும் பிரமாண்டமான கூடம்.  உலகின் மிகப் பெரிய நூலகம் என்று சொன்னார்களே தவறுதலாக எதாவது அரண்மனைக்குள் வந்துவிட்டோமோ என எண்ணிக்கொண்டிருந்த்போது  “வெல்கம் டூ அமெரிககன் லைபரரி ஆப் காங்கிரஸ் “ என சொல்லி தன்னை அறிமுகபடுத்திக்கொளகிறார் நமக்கு நூலகத்தை காட்டபோகும் கைட்.
உலகின் மிகப்பெரியமிக அதிகமான புத்தகங்களை கொண்ட இந்த லைப்பரி ஆப் காங்கிரஸ் வாஷிங்டன் நகரில் அமெரிக்க நாடளுமன்றத்திற்கு அருகிலிருக்கிறது. 210 ஆண்டுகளுக்கு முன் துவக்கபட்ட இதில்  இன்று வரை புதிய புத்தங்கள் சேர்க்கபட்டு பிரமாதமாக நிர்வகிக்கபடுகிறது.   புத்தகங்கள் நிறைய  கண்னாடி அலமாரிகள் மேசைகளில் பரவிகிடக்கும் புத்தங்கங்கள்,பத்திரிகைகள்  என்றே நூலகங்களைப்பார்த்து பழகிய நமக்கு இந்த ஆடம்பரமான அரண்மணை சூழ்நிலை ஆச்சரியமாகயிருக்கிறது. 75 அடி உயரத்தில் வண்ண சித்திரங்கள் நிறைந்த  வட்டவடிவ கண்ணாடி விதானம்,  அதே போல் படங்களுடன் கண்ணாடி சாரளங்கள் அமைக்கபட்டிருக்கும் அந்த கூடம் தான் ரீடிங் ரூம்.  வட்ட வடிவில் தனித்தனி சிறு டெஸ்க்கள் அதில் மேசை விளக்கு.  புத்தங்கள் எல்லாம்  அருகிலிருக்கும் தனித்தனி அறைகளில்துறைக்கு ஒரு அறை சிலதுறைகளுக்கு பல அறைகள்.  அறைகளிலிருக்கும் புத்தகங்கள்  வெளியிலிருந்து பார்த்தால்  தெரியாதவண்ணம் அமைக்கபட்ட அலமாரிகளில். விரும்பித்தேர்ந்தெடுத்த புத்த்கத்தை நாம் இருக்கும் இடதில் கொண்டுவந்து தந்து விட்டு படித்துபின் உடனே கொண்டுபோய் அல்மாரியில் வைத்துவிடுகிறார்கள் இங்குள்ள பணியாளார்கள். அதனால் காலியாகயிருக்கும் மேசையில் புத்தகங்கள் இருக்காது.
நூலகத்தின் சுவர்களிலும்,மாடிப்படி வளைவுகளிலும் அழகான ஒவியங்கள் கலைபொருட்கள் நிரம்பியிருக்கிறது. நடைபாதைகளின் மேற்கூரை முழுவதும் கண்னைபரிக்கும் வண்ணத்தில் சித்திரங்கள்  அமெரிக்க சுதந்திர போரின் காட்சிகள்நாட்டின்  அரசியல் சாஸனத்தின் கையெழுத்துபிரதிசட்டவடிவின் முதல் அச்சுபிரதிகொடிகள் சின்னங்கள்  சிலைகள் என ஒரு அருங்காட்சியகமாகவே அமைத்திருக்கிறார்கள்.
அமெரிக்க காங்கிரஸ் (பாராளுமன்றம்) உறுப்பினர்களின் தேவைக்காக நிறுவபட்ட இதை மிகப்பெரிய நூலகமாக்க கனவுகண்டவர்அன்றைய அதிபர் ஜெபர்ஸன்தன்னுடைய சொந்த நூலகத்தை தந்து உதவியிருக்கிறார். இன்று  அமெரிக்க அரசின் அதிகாரபூர்வமான தேசிய நூலகமாகவும் ஆராய்ச்சி நிலையமாகவும்  அங்கிகரிக்கப்ட்டிருக்கும் இந்த நூலகத்தின் தலமை நூலகர் அமெரிக்க அதிபரால் நியமிக்க படுகிறார். நூலகரின் பதவிக்காலம் வாழ்நாள் முழுவதும். அமெரிக்க அதிபர்துணை அதிபர்சென்னட்டர்கள்சுப்ப்ரீம்கோர்ட் நீதிபதிகள் மட்டும்தான் இந்கிருந்து புத்தகத்தை இரவல் பெற்று எடுத்துசெல்ல முடியும் ம்ற்றவர்களுக்கு இஙுகு படிக்க மட்டுமே கொடுக்கபடும். காங்கிரஸின் கூட்ட தொடரின் போது எதேனும் தகவல் கேட்கபட்டு அந்த சமயத்தில் தேவையான புத்தகம் நூலகத்தில் இல்லாது போகும் வாய்ப்பை தவிர்க்கவே இந்தமுறை.
3 கோடி புத்தங்கள் கேட்லாக் செய்யபட்டிருக்கும் இந்த நூலகத்தில் 400க்கு மேற்பட்ட மொழிகளில் புத்தகங்கள் இருக்கின்றன. தமிழில்  தொல்காப்பிய பதிப்பையும்1822ல் எதிர்புறத்தில் ஆங்கில மொழிபெயர்ப்புடன் லண்டனில அச்சிடபட்ட பார்மார்த்த குருகதையும் இருக்கிறது. கல்கியின் பொன்னியின் செல்வன் உள்பட அனைத்து புத்தகங்களையும் பார்க்க முடிந்தது சந்தோஷமான ஆச்சரியம்.  கைகொடுக்கும் தொழில்நுட்பத்தின் உதவியோடு இன்று பலவற்றை டிஜிட்டல் செய்துவைத்திருக்கிறார்க்ள். பல புத்தங்களை கப்யூட்டர் திரையிலே படிக்கலாம்.அதற்கான டச் ஸ்கிரீன்களைகூட கலைநயத்துடன் சூழ்நிலைக்கேற்ப வடிவமைதிருக்கிறார்கள். இவைகளைத்தவிர 60 லட்சம் கையெழுத்து பிரதிகள், 3000ஆண்டுகளின் செய்திதாட்கள், பத்திரிகைகள் லட்சகணக்கில். உலகின் முதல்  அச்சிட்ட பைபிளிலிருந்து இந்த மாதம் வந்த ஹாரிபாட்டர் வரை எல்லாம் இருக்கிறது. இதைத்தவிர போட்டோக்கள்மேப்கள்இசை தட்டுக்கள் வேறு. நூலகம் 5 மைல் நீளத்திற்கு 4 கட்டிடங்களில் பரவிகிடக்கிறது. அவைகள் சுரங்க பாதையால் இணைக்கபட்டிருகிறது.  நீங்கள் டீவிட்டரில் தனிப்பட்ட முறையில் இல்லாமல் பப்ளிக் என்ற வகையில் டிவிட் செய்பவராஅமெரிக்க அரசு அல்லது வேறு செய்திகள் பற்றி நீங்கள் டீவிட் செய்தால் அதன் பிரதியும் இஙகு சேமிப்ப்படுகிறது. இதற்காக டீவிட்டர் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்திருகிறர்கள்.
காங்கிரஸ் உறுப்பினர்கள் இதை பயன்ப்டுத்துகிறார்களா?  “நிறையபல செனட்டர்கள் இங்கு வருவார்கள் ஹிலாரி கிளிண்ட்டன் போன்றவர்கள் அடிக்கடி வருவதோடு எதாவது தகவல்களை கேட்டுகொண்டேயிருபார்கள்  சிலருக்கு எந்த புத்தகம் எங்கே எனப்து கூட அத்துபடி”“. என்கிறார் ஒரு உதவியாளார்.
உல்கின் மிக பெரிய நூலகத்தை பார்த்ததே  ஒரு நல்ல புத்தகத்தகத்தை படித்த உணர்வை தந்தது. அதோடு வெளியே வருகிறோம். நாலு கட்டடங்களையும் நீண்ட சுரங்கபாதைகள் வழியே கடந்துவிட்டதால்   வெளியே வரும்போது வேறு ஒரு தெருவில் இருக்கிறோம்
---------------------------------------------------

13/5/12

ஜெயிக்க போவது யாரு?


ஜெயிக்க போவது யாரு?

ஒரு வழியாக  வேட்பாளார் யார் எனபது நிச்சியமாகிவிட்டது. வரும் நவம்பர் மாதம் நடக்க உள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் ஆளும் கட்சி சார்பில் 2 வது முறையாக அதிபர் பராக் ஒபாமா போட்டியிடுகிறார்.  அவரை எதிர்த்து போட்டியிடும்  குடியரசு கட்சி  வேட்பாளார் ரோம்னி எனபது இப்போது நிச்சியமாகிவிட்டது. அமெரிக்க அரசியலில் உட்கட்சி ஜனநாயகம் மிக வலுவானது.  வேட்பாளாரை உயர் மட்ட குழு தேர்ந்தெடுப்பது, கட்சிதலமைக்கு வழங்கபடும் அதிகாரத்தால் நியமிக்கபடுவது போன்ற சமாசாரங்கள எல்லாம் கிடையாது.  வேட்பாளாராக தகுதி பெற்ற  போட்டியிட விரும்பவர்கள்  ஒவ்வொரு மாநிலங்களில்  நடைபெறும் கட்சி மாநாடுகளில் மற்றவர்களை விட  அதிக ஓட்டுகள் பெற்று முன்னிலையில் இருக்க  வேண்டும். அவர்தான் கட்சியின் வேட்பாளாராக முடியும். கடந்த முறை ஒபாமாவுக்கும் ஹிலாரி கிளிண்டனுக்கும் இறுதி வரை கடுமையான போட்டி இருந்தது நினைவிருக்கிறதாஇம்முறை குடியரசு கட்சியின் உள்கட்சி தேர்தல்களில் துவக்கத்திலிருந்தே ரோம்னி பல மாநிலங்களில் முன்னிலையிலிருந்தார். போட்டியிட்டவ்ர்கள் தங்கள் பலம் அறிந்து ஒவ்வொருவராக போட்டியிலிருந்து விலகிவிட கட்சி வாக்கெடுப்பில் இப்போது அவர் மட்டுமே இருப்பதால் அவர் தான் ஒபாமாவை எதிர்க்கபோகும் வேட்பாளார் எனபது உறுதியாகிவிட்டதுவிரைவில் கட்சி அதிகாரபூர்வமாக  இதை அறிவிக்கும்.
65 வயது ரோம்னி நீண்ட அரசியல் பாரமபரியம் கொண்ட குடும்பத்திலிருந்து வருபவர். மாஸாசுஸட்ஸ் மாநில கவர்னராகயிருந்தவர். அவரது தந்தையும் மாநில கவர்னாராகயிருந்தவர். 2008 அதிபர் தேர்தல் வேட்பாளாரவதற்கு உட்கட்சி தேர்தலில் போட்டியிட்டு ஒதுங்கியவர். ஹார்வர்ட் பல்கல்லைகழகத்தின் எம்பிஏ. படிப்பிற்கு பின் நிதிநிறுவன பிஸினஸ் துவங்கி மிக பெரிய வெற்றிகளை அடைந்தவர். 5 குழந்தைகளும், 15 பேரகுழந்தைகளும் உள்ள  இவர் இன்று அமெரிகாவின் பெரும் பணக்காரர்களில் ஒருவர். சொத்தின் மதிப்பு 250 மில்லியன் டாலர்கள். ஆண்டு வருமானம் 45 மில்லியன் டாலர்கள்
உள்கட்சி தேர்தலில் இவரின் செல்வாக்கு ஒங்குவதை கவனித்தவந்த  ஒபாமா மற்றவர்களை கண்டுகொள்ளாமல் இவரது வாதங்களுக்கு மட்டுமே பதிலளித்து கொண்டிருந்தார். கட்சி தேர்தல்கள் முடிந்து வேட்பாளார் நிலையை அடைந்ததும் அனல் பறக்கும் பிராசரத்தை  தொடங்கிவிட்டார்  ரோம்னி.  “ஒபாமா எல்லா வகையிலும் தோல்வி அடைந்துவிட்டார் அவரது அரசு செயலிழந்து கிடக்கிறது என ஆரம்பித்து. வரிவிதிக்கும்முறைகளில் மாற்றம் என்ற பெயரில் சாதரண அமெரிக்க மக்கள் செலுத்தும் வரிகளை கூட்ட முயற்சிக்கிறார், பொருளாதார சுதந்திரத்தை முடக்கும் வகையில் தனியார் துறைகளில் அரசின் தலையீடு, கட்டுபாடு இல்லாத பெட்ரோல் விலையேற்றம்.“  என ஒபாமா மீது அடுக்கடுக்கான  குற்றசாட்டுகளை வைக்கிறார். முக்கியமான விஷயம் ஒபாமா அறிவித்து செயல் படுத்த முடியாமல் தவிக்கும் புதிய மருத்தவ பாதுகாப்பு திட்டம். இது கிட்டதட்ட கலஞர் காப்பீட்டுதிட்டம் மாதிரி. அமெரிக்காவில் அரசாங்க மருத்துவமனை என எதுவும் தனியாக கிடையாது.  தனிநபர் மருத்தவ சேவைக்கு  மிக அதிக கட்டணம்.  இதை நோயாளிகளின் இன்ஷ்யூரன்ஸ் நிறுவனத்திலிருந்து மருத்துவமனை பெற்றுகொள்ளும். இதை மாற்றி வயதானவர்களுக்கும், வறியோர்களுக்கும் ஆகும் மருத்தவ செலவை அரசாங்கம் நிர்ணயிக்கும் கட்டணத்தில் மருத்துவமனைகள் பெற ஒபாமா ஒரு திட்டத்தை அறிவித்தார். இது இப்போது அரசியலாகியிருக்கிறது. இருக்கும் நல்லசிஸ்டைத்தைவிட்டு விட்டு மக்கள வரிப்பணத்தை வீணடிக்கும் திட்டம் இது எனபது ரோம்னியின் வாதம்.  அடுத்தது கடந்த தேர்தலின் போது  ஆப்கானிஸ்தனிலிருந்து படைகளை வாபஸ் பெறுவேன் என சொல்லி அதை இன்னும் முடிக்காமல் இப்போது ஈரானுக்கு  அதிக அமெரிக்க படைகள் அனுப்பபடுகிறது.  அவர் சொன்னது எல்லாம்  “தேர்தல் நேர சத்தியங்கள்” “  மட்டுமே என பாய்கிறார்.

அதிகார பூர்வமாக தேர்தல் பிரச்சாரங்கள் துவக்கப்படாவிட்டாலும்அதிபர் ஒபாமாவின் சமீப பேச்சுகளில் அரசியல் தொனிக்க ஆரம்பித்துவிட்டது. நிறைய சம்பாதிக்கும் அமெரிக்க கோடிஸ்வரர்கள்- ரோம்னி போன்றவர்கள் குறைவாக  15 % வரி மட்டுமே செலுத்துகிறார்கள் இது நியாமில்லை. ஆண்டுக்கு ஒரு மில்லியன் டாலருக்கு மேல் சம்பாதிக்கும் அமெரிக்கர்கள் 30% வ்ரி செலுத்த வேண்டும் இது அரசங்கத்தின் பல நல திட்டங்களுக்கு உதவும் என அறிவித்திருக்கிறார். ரோம்னி அளவு பணக்காரர் இல்லையென்றாலும் ஒபாமாவும் ஒன்றும் சாமனியன் இல்லை  சாதாரண அமெரிக்கர்களை விட பணக்காரர். அவர் எழுதிய புத்தகங்களிலிருந்து மட்டும்  ஆண்டுதோறும் 2 மில்லியன் டாலர்கள்  சம்பாதித்து கொண்டிருக்கிறார்.
உலக  முதல் பணக்காரகள் பட்டியலில் ஆண்டு தோறும் தவறாமல் இடம்பெறும் திரு வாரன் பஃபெட் ஒமாவின் வரிஉயர்வு திட்டத்தை வரவேற்று இது சமூக கடமை என அறிவித்திருக்கிறார்.  வரியை உயர்த்தபோகிறோம் என்று சொல்லி ஓட்டு கேட்கபோகும் முதல் அரசியல் வாதி ஒபாமாவாகத்தனிருப்பார்..
.  “நியமான வரிவீதம் எனபதைவிட அடிப்படையாக சரி செய்ய வேண்டிய  பொருளாதார நடவைடிக்கை என்ன என்று இரண்டு பேரும்  சொல்லபோவது தான் வெற்றியை தீர்மானிக்க போகும் விஷயம்”“ என்கிறார்..  திரு. மாட் பெனட். இவர் பில்கிளிண்டன் அதிபராக இருந்தபோது அவரது உதவியாளாரக வெள்ளை மாளிகையில் பணியாற்றியவர். அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றியை கணிக்கும் எக்ஸ்பர்ட்.
 “மாறுதல்கள் வரும் என சொல்லி கடந்த  தேர்தலில்  வென்ற  ஒபாமா அவருக்கு முன்பிருந்த குடியரசு கட்சி அதிபர் புஷ் செய்த அத்தனை மோசமான காரியங்களையும்  எந்த மாறுதலுமில்லாமல் செய்துகொண்டிருக்கிறார்.  எகிப்து, லிபியாவில் புரட்சிகளை உருவாக்கியது, ஈரானுக்கு படைகளை அனுப்பியது, ஆஸ்திரேலியாவில் அமெரிக்க ராணுவதளம், ராணுவ ஜெயில்களில் மனித உரிமை மீறல்அக்கிரங்கள், வீக்கி லீக் போன்ற பிரச்சனைகளின் மூலம் தன்னை நிலைநிறுத்திகொள்ள பார்க்கிறார். அமெரிக்கா வலிமையாக இருந்தால் தான் உலகம் பத்திரமாகயிருக்கும் என நம்புவர்தான் அமெரிக்க ஜனாதிபதி. இதை விரும்பும் அமெரிக்க மக்கள்  தேர்தல் நேரத்தில்  இதை யார் செய்வார்கள் என நம்புகிறார்களோ அவர் தான் ஜெயிப்பார். என்கிறார் இந்திரஜித் பார்மர். இவர் மான்செஸ்டர் பல்கலைகழக் பேராசிரியர். அமெரிக்க அரசியல், அதிபர்கள் பற்றி பல புத்தகங்கள் எழுதியிருக்கிறார்.
மக்கள என்ன நினைக்கிறார்கள்கடந்த மாதமே கருத்துகணிப்புகள் துவங்கிவிட்டன முதல் கருத்து கணிப்பில் சிறிய வித்தியாசத்தில் ரோம்னி முந்தினார். இப்போது கால்ப் டெய்லி என்ற மீடியா சார்பில் பலவேறு மாநிலங்களில் நடத்த பட்ட கணிப்பில் ஒபாமாவிற்கு 50% வீத ஆதரவும் ரோம்னிக்கு 44%வீதமும் பதிவாகயிருக்கிறது. இடைவெளி 6% எனபது அதிகம் மட்டுமின்றி ஆட்சியில் உள்ள அதிபர் 50% மக்கள் ஆதரவை பெற்றிருப்பது. ஆச்சரியமான ஒரு திருப்பம்.. நீண்ட நாள் தேடலுக்குபின் அதிரடி ஆப்ரேஷனில் பின்லெடனை கொன்றது, பலநூற்றுகணக்கான பாங்குகள் திவாலானதால் ஏற்பட்ட சிக்கலை சரி செய்ததுசிட்டிபாங்க போர்ட் போன்ற நிறுவனங்களை அரசு பணத்தில் காப்பற்றி வேலைவாய்ப்பை பெறுக்கியதினால்  அமெரிக்க மக்கள் கிளிண்டன், புஷ்,க்கு தந்தது போல ஒபாமாவிற்கு இரண்டாவது வாய்ப்பை தருவார்களா அல்லது  அவர் தந்த ஒரே மாற்றம் ஏமாற்றம் தான் என்று ரோம்னி சொல்வதை ஏற்று அவருக்கு வாய்ப்பு கொடுக்கபோகிறார்களா? தேர்தலுக்கு இன்னும் நாள் இருக்கிறது. இன்னும் பல கருத்துகணிப்புகள் நடக்க இருக்கும் நிலையில், உலகின் எல்லா ஜனநாயக  நாட்டின் தேர்தல்களைப்போல  இதிலும் எது வேண்டுமானலும் நடக்கலாம்,  
 ரமணன்.
CLAYMONT . USA  25/4/12





29/4/12

ஓரே ஒரு ஊரிலே ஒரே ஒரு ஆள்



உலகிலேயே மிக மிக குறைந்த ஜனத்தொகையை கொண்ட  நகரம் அமெரிக்காவிலிருக்கிறது. வியோமிங் என்ற மலைப்பகுதி  மாநிலத்திலிருக்கும் பியூஃபோர்ட்(BUFORD)  என்ற குட்டி நகரத்தின் ஜனத்தொகை எவ்வளவு தெரியமாஓன்று.  ஆம் ஒரே ஒருவர் வாழும் இந்த சின்ன மலை நகரத்தின் ஜனத்தொகையாக  கடந்த ஆண்டு சென்ன்ஸில் பதிவு செய்ய்பட்ட எண் இது. நகர் நுழை வாயிலில் ஊரின் பெயரோடு இதையும் சொல்லும் பெயர்பலகையும்  இருக்கிறது. ஒரு பெட்ரோல் பங்க், பள்ளிக்கூடகட்டிடமும்  செல்போன் டவரும் இருக்கும் இந்த நகருக்கு.   தனி ஜிப் கோட்  (அமெரிக்காவின் பின் கோட்) எண்.  இந்த நகரம் தான் இபோதுஅமெரிக்க  மீடியாவின் ஹிலைட். காரணம் அந்த ஒரு நபரும் நகரத்தை விட்டு  விரைவில் காலி செய்யப்போகிறார்.
நியூயார்க்கிலிருந்து சான்பிரான்ஸ்கோ செல்லும் தேசிய நெடுஞ்சால 80ல் லாஸ் ஏஞ்சல் நகரின் அருகிலிருக்கும் ஒரு மலைப்பகுதியில் 8000 அடி உயரத்திலிருக்கும் இந்த நகரத்தில் ஆண்டில் 6 மாதத்திற்கு மேல் பனியும் குளிரும் பயங்கரமாகயிருக்கும் இந்த நகரத்தில் சில ஆண்டுகளுக்கு முன் 2000 பேர் வசித்திருக்கின்றனர். 1980ல் இருந்த ஒரே ரயில் வசதியும் நிறுத்தபட்டத்தால் மக்கள்  மெல்ல வேறு  நகரங்களுக்கு சென்ன்றுவிட்டார்கள். தங்கள்  ஊரைவிட்டு போக விரும்பாத டான் சாம்ன்ஸ் (DON SAMMONS)  தம்பதியினர் இங்கேயே தங்கிவிட்டனர். 15 ஆண்டுகளுக்கு முன் மனைவியும் மறைந்தபின், மகனும் வேறு ஊருக்கு பிழைக்கப் போனபின்  இவர் தனியாளாக வசிக்க ஆரம்பித்தார். இப்படி ஒரு ஆச்சரியமான மனிதரையும், அந்த ஊரையும் பார்க்க டூரிஸ்ட்கள் கோடைவிடுமுறைகளில் வரத்துவங்கினர். அவர்களுக்காக நினைவுசின்னங்கள் விற்க துவங்கபட்ட ஒரு சிறிய கடையையும், பெட்ரோல் பங்க்கையும் நிர்வகிக்கும் லான் சாம்ன்ஸ் (DON SAMMONS)  தான் ஊரிலிருக்கும் பள்ளிக்கூடம் மற்றும் ஒரு கட்டிடத்திற்கு சொந்தகாரர்.அந்த கட்டிடம் அவர்து 3 அறை வீடு.  பியூஃபோர்ட்(BUFORD)  நகரின் மேயராக  தன்னை அறிவித்துகொண்டிருக்கிறார். கடந்தமாதம்   தன் ஊரை  ஏலத்தில் விற்க விரும்புவதாக இண்டெர்நெட்டில் விளம்பரம் செய்தார்,  25 பேர் பங்குகொண்ட இந்த ஆன்லயன் ஏலம்  ஒரு லட்சம் டாலரில் துவங்கி  90000 லடசம் டாலரில் முடிந்த்திருக்கிறது. வாங்கியவர்கள் ஹோசிமின் சிட்டியிலிருக்கும் இரண்டு வியட்நாமியர்கள். எதிர்பாரத இந்த விலைகிடைத்தில் லான் சாம்ன்ஸ்க்கே ஆச்சரியம்.
தான் மட்டும் ராஜாவாக வாழும் இந்த 61 வயது காரர்  ஏன் தன் ஒரே சொத்தான் ஊரையே விற்கிறார்?  தனிமையான வாழ்க்கை போரடித்துவிட்டதாம்.  எனவே  மக்கள் சற்று குறைவாக இருக்கும் ஒரு கடற்கரை பகுதியில் தன் வாழ்க்கையின் இரண்டாவது இன்னிங்ஸை தொடர  விரும்புகிறாரம்.
யாருமே இல்லாத இந்த ஊரை வாங்கியவர்கள் என்ன செய்யலாம் எனபதற்கான யோசனையை தெரிவிக்க நேயர்களுக்கு போட்டி அறிவித்திருக்கிறது ஒர் டிவி சேனல்.






15/4/12

மச்ச அவதாரம்




ஜேம்ஸ் கேம்ரோனின்  “ மச்ச அவதாரம்

உலக சினிமா  வரலாற்றில் அழியாத இடம் பெற்றிருக்கும் படம் டைடானிக். இன்றும் உலகின்  எந்த பகுதியில் திரையிடப்பட்டாலும் வசூலை அள்ளிக்குவிக்கும் இந்த படத்தின் டைரக்டடர் ஜேம்ஸ் கேம்ரோன்.  தொடர்ந்து தன் படங்களுக்கு ஆஸ்கார், அக்கடமி விருதுகளை வாங்கிக்கொண்டிருக்கும் இந்த டைரக்டர் இந்த ஆண்டு பெறப்போகும்  ஒரு விருது அவரது சினிமாவிற்காக இல்லை. அறிவியலில்கடல்பற்றிய ஆராய்ச்சியில் அவரது பங்களிப்புககாக..
ஆழ்கடலின் அடிப்பகுதியை முதலில் பார்த்து அதில் பயணம் செய்த முதல் மனிதன் என்ற சாதனையை சமீபத்தில் நிகழ்த்தியிருக்கிறார் கேம்ரோன். சினிமாதிரைக்கதையாசிரியர், கேமிராமேன், டைரக்டர் எனபல முகங்கள் கொண்ட இவருக்கு பிடித்த மற்றும் ஒரு விஷயம் ஆழ்கடல் ஆராய்ச்சி. ஸ்கூபா டைவராக உலகின் கடல் பகுதிகளை பார்த்திருக்கும் இவரது ஆசை கடலின் அடி மண்ணை பார்க்கவேண்டும் என்பது. பள்ளிப்படிப்பை பாதியில் விட்டு டிரக் டிரைவராகி, ஸ்டார்வார் பாத்த ஆர்வத்தால் நூலகங்களில் சினிமா, கேமிரா பற்றி படித்தறிந்து போராடி சினிமா உலகில் சரித்திரம் படைத்திருக்கும் கேம்ரோன்  “இது என் 7 ஆண்டு கனவு”“ என்று சொல்லுகிறார். இவர் அவதார் படத்திற்கு பின் இதில் தீவிரமாக ஈடுபட்டு அதற்காக தன்னை தயாரித்துகொள்ள ஆரம்பித்தார். உலகியே அதிக ஆழமான கடல் பகுதியாக அறியபட்டிருக்கும்  “சாலெஜ்ர் டீப்” “ என்ற  கடல் பகுதியில் செல்வதற்காகவே பல மில்லியன் டாலர் செலவில்  24 அடி நீளத்தில் ஒரு குட்டி சப்மெரீன் ” “டீப் ஸீ சாலெஜ்ர்“ தயாரிக்கபட்டது. அவருக்கு பிடித்த பச்சை வண்ணத்தில், இயந்திர கைகள், சக்திவாய்ந்தவிளக்குகள், 3டி கேமிராக்கள் என விசேஷமாக தயாரிக்கபட்ட இதில் ஒருமுறை பரிசோதனை பயணமும் செய்தபார்ததிருக்கிறார்.   ஸ்பெயின் நாட்டின் ஒரு பகுதியான மேரினா தீவு பகுதிதான் உலகிலேயே ஆழமான கடற்பரப்பை கொண்டது. அந்த கடல் பகுதியில்தான் இந்த சாதனையைச் செய்திருக்கிறார்.  “நாங்கள் திட்டமிட்டதைவிட மிக வேகமாக ஒரு டார்பிடோ போல பாய்ந்த  டீப் ஸீ-சாலென்ஜர் கடலடியை  2 மணி நேரத்தில்  அடைந்தது.  கடலின் அடிப்பகுதியில் 4மணி நேரம் சற்று தூரம் அந்த கப்பலை ஒட்டிச்சென்று  பார்த்தேன். அடர்ந்த இருட்டில் 35 000 அடி ஆழத்தில் கப்பலின் விளக்குகளின் வெளிச்சத்தில் பார்த்த அற்புதமான காட்சியை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.  வேறு ஒரு கிரகத்திலிருப்பதை போல உணர்ந்தேன். கப்பலின் ஹைடிராலிக் பிரேக் சரியாக இயங்காதலால் சீக்கிரமே திரும்பிவிட்டேன். “ என்று சொல்லும் கேம்ரானின் இந்த பணியில் நேஷனல் ஜியாகிராபிக் சொஸைட்டியின் ஆராய்ச்சியாளார்களுக்காக சாம்பிள் சேகரித்ததோடு 3 டி படங்களும் எடுத்திருக்கிறார். உட்காருமிடம் நாலு அடிக்கும் குறைவாக ஒரு விண்வெளிப்யணியின் சீட்போல வடிவைக்கபட்டிருந்த  இந்த சப்மெரீன் ஒரு ஒரு ஆழ்கடல் ஆராய்ச்சி கப்பலிருந்து இறக்கபட்டதலிருந்து பயணத்தை ஒவொரு நிமிடமும்   “ஆக்டோபஸ்”””“ என்ற  தனது உல்லாச  படகிலிருந்து கண்காணித்து அவருடன் வர்லெஸ் தொடர்பிலிருந்தவர் கேம்ரானின் அருமை நண்பர்  பால்ஆலன். இவர் மைக்ரோ சாப்ட் நிறுவனர்களில் ஒருவர். கேம்ரான் தரும் தகவல்களை  அங்கிருந்து டீவிட் செய்து கொண்டிருந்தார். டிவி சானல்கள் அதை அறிவித்து கொண்டிருந்தது.  கேம்ரோனின் சப்மெரின் கடல்மட்டத்திற்கு  வெளி வரும் பகுதியில் ஹெலிகாப்டர் கண்காணிப்பும் இருந்தது. கடலடியிலிருந்து   அவர் அனுப்பிய முதல் செய்தி  “எல்லாம் சரியாக இயங்குகிறது.””” “
சினிமா சாதனையாளார்களில் அவர்கள் துறையைத்தவிர மற்ற துறைகளில் பெரிய சாதனையை நிகழ்த்திய சினிமாகாரர்கள் மிகச்சிலரே. கேம்ரோன் கடலாராய்ச்சி துறையில் படைத்த வரலாற்று சாதனை காலம் முழுவதும் பேசப்படும்.
ஆழ்கடலிலிருந்து எழுந்த நீர்பிரளயதிலிருந்து உலகை காப்பாற்ற பகவான் மச்ச அவதாரம் எடுத்தாக சொல்கிறது நம் புராணம்.  ஆழ்கடலின் நிலத்தடியை  நிஜமாகவே பார்த்துவந்த இவரின் அடுத்த படம் அதுவாகவே இருக்குமோ ?



8/4/12

கோபுரங்களும் சாய்வதுண்டு.


உலகமே அதிர்ச்சியில் ஆழ்ந்த செப் 11 2001 அன்று இதை நாங்கள் மறக்க மாட்டோம். மன்னிக்கவும் மாட்டோம்என்று கோபத்துடன் அன்றைய அமெரிக்க அதிபர் தன் உரையில் சொன்னதை சொன்னதை உலகமே  பார்த்தது.. 10 ஆண்டுகள் ஆனபின்னரும், அதிரடி ஆப்ரேஷனில் பின்லேடனை பிடித்து கொன்ற பின்னரும் இன்றும்  அந்த கறுப்பு தினத்தை அமெரிக்கர்களால் மறக்கமுடியவில்லைநியூயார்க் நகரின் அத்தனை வானாளவிய கட்டிடங்களுக்கிடையே   துல்லியமாக தகர்க்க பட்ட அந்த இரட்டை கோபுரங்கள்  இருந்த இடத்தில் ஒரு நினைவு சின்னம் எழுந்த்திருக்கிறது. நிகழ்ந்த அந்த விபத்தில் உலக புகழபெற்ற அந்த டவர்களில் வேலை பார்த்து கொண்டிருந்தவர்கள், வேடிக்கை பார்த்து கொண்டிருந்தவர்கள்ஷாப்பிங் செய்துகொண்டிருந்தவர்கள், உணவகங்களில் இருந்தவர்கள், அதே நாளில் மற்றொரு விமானவ்பத்திலும் பெண்டகன் அலுவலகத்தில் பலியானோர்,  மீட்புபணியில் பலியானாவர்கள் என்று மறைந்த போன 3000பேர்களுக்கும்  இப்போது ஒரு நினவு சின்னம்  அங்கே எழுப்பபட்டிருக்கிறது.. 10 ஆண்டுகாலமாக கிரவுண்ட் ஸீரோ  என அழைக்கப்பட்டு வந்த அந்த இடம் இனி 9/11 தேசிய நினைவகம் என அழைக்கபடும், 63 நாடுகளிலிருந்து,பெறபட்ட 5200 டிசைன்களிலிருந்து தேர்ந்தெடுக்க்பட்டிருக்கிறது இந்த டிசைன். 8 ஏக்கர் பரப்பில்,பறந்துவிரிந்திருக்கும் பசும் புல்வெளியில்  அணிவகுத்து நிற்கும் 400 ஓக் மரங்களுடன் நியூயார்க நகர கான்கீர்ட் காட்டிற்கு நடுவே ஒரு பசுஞ்சோலையாக இதை உருவாக்கியிருகிறார்கள்




மிகச்சரியாக இரட்டை கோபுரங்கள் இருந்த  அதே இடங்களில் இப்போது தொடர்ந்து நீர்வழிந்துகொண்டே இருக்கும் இரண்டு பெரிய தடாகங்கள். அதன் சுற்று சுவர்களின்மேலே  சற்றே சாய்வாக அமைக்கபட்டிருக்கும்  கரும்பளிங்கு பலகைகளில் விபத்தில்  உயிர் நீத்த அனைவரின் பெயர்களும் தங்க எழுத்தில் மின்னுகிறது.  அதில் சில தமிழ் பெயர்களைக்கூட பார்க்கமுடிகிறது.


இரண்டு நீர்தடாகங்களுக்குகிடையே ஒரு மியூசியம். பூமிக்கடியில்  உருவாகிகொண்டிருக்கிறது. பணி இன்னம் முடியவில்லை. அதன் முகப்பு ஒரு கோபுரத்தின் ஒரு பகுதி இடிந்து சாய்ந்து விழுந்த நிலையில் வடிவமைக்கபட்டிருக்கிறது.  பின்னணியில் பிரமாண்டமாக எழுந்துகொண்டிருக்கும் புதிய ஒற்றை கோபுரம்.
 மியூசியம் எப்படி இருக்கும் என்பதை புரிந்துகொள்ள அங்கு காட்சியில் வைக்கபடப்போகும் பொருட்கள் சிலவற்றின்  மாதிரிகளுடன்  ஒரு பிரிவியூ செண்டர் அமைத்திருகிறார்கள். மறைந்தவர்களின் உடமைகள், போராடி மடிந்த தீயணைப்பு படையினரின் சீருடைகள், பெயர் பேட்ஜ்கள், மறைந்தவர்களின் குடும்பத்தினர் அளித்த  பரிசு பொருட்கள் இப்படி பல. இரட்டை கோபுரங்களில் ஒன்றின் வடிவில் அமைக்கபட்ட எக்ஸாஸ்ட் பைப்புடன் ஒரு ஒரு மோட்டார் சைக்கிள் பார்ப்பவர்களை கவருகிறது.
கடந்த ஆண்டு செப் 11 பத்தாவது நினைவு நாளான்று அதிபர் ஒபாமா நாட்டுக்கு அர்ப்பணித்த விழாவில் நாள்முழுவதும் கல்வெட்டில் இடம் பெற்றிருக்கும் அத்தனை பேரின் பெயரும் படிக்க பட்டது.. இன்னமும் பணி தொடர்ந்து கொண்டிருக்கும் அந்த சதுக்கத்தில் பலத்த பாதுகாப்பு. முன்னமே ஆன்லனைல் பதிவு செய்துகொண்டவர்கள் மட்டுமே  விமான நிலையங்களைப் போல தீவீர சோதனைக்கு பின்னர் பார்க்க அனுமதிக்கபடுகின்றனர்..
மறந்து தொலைக்க வேண்டிய  ஒரு சோகத்தை ஏன் இப்படி நிரந்திரமாக்கி  பார்பபவர்களின்  மனதை கஷ்ட படுத்துகிறார்கள் என்று கோபமாக அரசை திட்டும் அமெரிக்கர்களும் இருக்கிறார்கள். சரிதானே.. என நமக்கும் தோன்றினாலும்  நீண்ட தூரத்திலிருந்து வந்து  மகனின் பெயரை தேடிபார்த்து தடவி அழும் தாயையும்நண்பனின் பெயரை பார்த்தவுடன் இங்கிருந்தே  அவரது உறவினருக்கு போன் செய்பவர்களையும், தினசரி யாராவது வைத்துதிருக்கும்  பூங்கொத்துக்ளையும்  பார்க்கும்போது, திட்டமிட்ட ஒரு தீவிரவாதத்தையும்  அதன்  உச்சகட்டத்தின் வீபரீதத்தையும் வரும் தலமுறை  உணர்ந்துகொள்ள இப்படி ஒரு நினைவுச் சின்னம் அவசியம்தானே என்ற எண்ணம் எழுகிறது.