14/11/10

அழிவின் விளிம்பில் எழுந்த புரட்சி.



சி

 

னந்து சீறி எழுந்த அந்த ஆழிப்பேரலைகளில் சிக்கி அழிந்து கொண்டிருந்தது ஜப்பானின் வடகிழக்கு கடற்கரை நகரமான  புக்கூஷிமா. மனிதர்கள் வீடுகள்கார்கள்சாலைகள்பாலங்கள் எல்லாம் கசக்கிபோட்ட காகிதங்களாக  சில நிமிடங்களில் கடல்அலைகளில் மிதந்த கோரத்தை உலகின் அத்தனை தொலைகாட்சிகளும்  ஒளிபரப்பி கொண்டிருந்தன.  அச்சத்துடனும் அனுதாபத்துடனும் பார்த்துகொண்டிருந்த பலகோடி பேர்களில் அந்த ஜெர்மானிய பெண்மணியும் ஒருவர். இரவில் தொடர்ந்து வந்த டிவி செய்திகளில் அந்த ஜப்பானிய நகரிலுள்ள அணு மின் உற்பத்தி உலைகளின் கூரை ஒன்று வெடித்ததையும் எந்த நிமிடத்திலும்  மற்றவைகள் வெடித்து அணுக்கதிர்கள் பரவும் அபாயமிருப்பதையும்அதை தடுக்க முடியாமல் தவிக்கிறார்கள் என்பது காட்டபட்டவுடன் “ காலையில்  அமைச்சரவையின் அவசர கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யுங்கள் “ என உதவியாளாரிடம் சொல்லிவிட்டு தனது நூலகத்தில் அணு உலைகளில் பாதுகாப்பு ப்ற்றிய புத்தகங்களை தேட துவங்குகிறார்.
அவர் ஜெர்மானிய அதிபர் திருமதி ஏஞ்சலா மெர்க்கீல் (Angela Merkel)

 “ரஷ்ய நாட்டின் செர்னோபைல் (Chernobyl) நகரில்  நடந்த அணு உலை விபத்துகள் மனித தவறினால் நிகழந்தவை,   அணுஉலைகளில் விபத்து ஏற்பட 0.5% கூட வாய்ப்பில்லை அணு மின் உற்பத்தி பாதுகாப்பானது போன்ற நமது  நம்பிக்கைகளை மாற்றி கொள்ள வேண்டும். இயற்கையின் சீற்றத்தினால் ஏற்படும் இந்த மாதிரி விபத்துகளிலிருந்து அணு உலைகளயும் அதன் அழிவில் எழும் பின்  விளைவுகளயும் யாரலும் தவிர்க்க முடியாது.  எனவே நமது மின் அணு உலைகளை மூட உத்திரவிடப்போகிறேன்.  அணு மின் சக்க்திக்கு மாற்றான எரிசக்தி   அதற்கான செலவு பட்ஜெட்உலைகளை படிப்படியாக மூடும் திட்ட அட்டவணை போன்ற பணிகளுக்கு அமைச்சகங்கள் முன்னுரிமை கொடுத்து உடனடியாக ஒரு வரைவு திட்டத்தை அடுத்த  4 நாள் கூட்டதில் விவாதிக்க வேண்டும்“ அந்த காலை நேர கூட்டதில் இந்த அதிரடி அறிவிப்பை கேட்ட அமைச்சர்களும் அதிகாரிகளும் திடுக்கிட்டு அதிர்ந்து போனார்கள். உடனடியாக எப்படி முடியும்?. மாற்று சக்திகான பெரும் செலவை எப்படி சமாளிபது?, எனற சந்தேகங்களை எழுப்பிய  அதிகாரிகளுக்கும்,  அடுத்த மாதம் சில மாநிலங்களில் தேர்தல்  நடக்க இருக்கும் நேரத்தில் இப்படி பட்ட அறிவிப்பு கட்சியையின் செல்வாககை குறைக்கும் என்று  சொன்ன கட்சி  அமைச்சர்களுக்கும் அதிபர் திருமதி ஏஞ்சலா மெர்க்கீல் (Angela Merkel) சொன்ன பதில் ” “வருங்காலத்தில் இத்தகைய பேரபாயங்களிலிருந்து ஜெர்மனியார்களை காக்கும் பொறுப்பு நமக்கு இருக்கிறது எனபதை மறக்காதீர்கள் “ எனபதுதான். கட்சிகாரகளின் பயத்தில் அர்த்தமிருந்தது. காரணம் கடந்த ஆண்டு இதே அதிபர் தான் உற்பத்திய துவக்கிய 8 ஆண்டுகளுக்கு பின் மின் அணு ஆலைகளை மூடி விடவேண்டும் என்ற விதியை  தளர்த்தி 12 ஆண்டுகளுக்கு என நீடித்தார்.. இருந்தாலும் அமைச்சரவை கூட்டதில்  சொன்னபடியே  ஓரே வாரத்தில் அறிவித்து  அதே நாளிலியே 4 அணு மின் உற்பத்தி ஆலைகளை மூடவும் உத்திரவிட்டார்.

 ஜெர்மனியின்  பல பகுதிகளில் 17 அணுமின் உலைகள் இருக்கின்றன   நாட்டின் தொழில் நகரங்களுக்கு மின்சாரத்தை தருபவை அவை. தொழிற்கூடங்கள் நிறைந்த   ஒரு நாட்டில் அதுவும் மொத்த மின் உற்பத்தியில்  28% த்தைதரும் மின் உலைகள மூட முடிவெடுக்க  துணிச்சல் வேண்டும். அதிலும்  அதிபர் ஏஞ்சலா மெர்க்கீல் (Angela Merkel) எடுத்தது மிக துணிச்சலான முடிவு.   ஏன் எனபதை தெரிந்து கொள்ள ஜெர்மனியின் இன்றைய அரசியலை புரிந்துகொள்ள வேண்டும்.
 ஜெர்மனியில் இப்போது ஆட்சியிலிருப்பது ஒரு 3 கட்சி கூட்டணி.. நமது நாட்டைபோலவே  கொள்கையளவில் சில அடிப்படை வேறு பாடுகளிலிருந்தாலும் ஆட்சியில் ஒருங்கிணைந்திருக்குக்ம் கட்சிகள் இவை. இதில் அதிக  பாரளமன்ற  உறுப்பினர்களை கொண்டது அதிபர் ஏஞ்சலா மெர்க்கீல் (Angela Merkel) லின் கிறஸ்டியன் டெமாகிரடிக் யூனியன் Christian Democratic Union கட்சி. ஜெர்மானிய அரசியல் சட்டபடி பராளூமன்றதின் மொத்த உறுப்பினர்களில் பெறுமானமையானவர்களின் ஒட்டை பெறும் ஒருவரைத்தான்   தலைவர்  நாட்டின் அதிபராக (Chancellor of Germany)  அறிவிப்பார். பிரதமரை போல அதிகாரம் பெற்ற இவர் தான் மந்திரிசபையை அமைக்கமுடியும். இந்த முறையினால் அதிக உறுபினர்களை பெற்ற கட்சியாக யிருந்தாலும் பாராளுமன்றத்தில்  அதிபர் தேர்தலில் 50%  எம் பி களின் ஓட்டுகளை பெற கட்சிகளின் கூட்டணி தேவை  இவர் அதிபராக உதவியிருக்கும் அந்த இரண்டு கட்சிகளில் ஏதேனும் ஒன்று இந்த திட்டத்திற்கு ஆதரவு அளிக்காவிட்டால்செயல்படுத்த முடியாது .பிடிவாதமாகயிருந்தால் அதிபர் பதவியுடன் ஆட்சியும்  பறிபோகும் அபாயமும் இருந்த  சுழ்நிலையிலும் இப்படி ஒரு முடிவை அறிவித்திருந்தது இவரது மன உறுதி அணுசக்தியைப்போல வலிமையானது என்பதை காட்டியது.
 ஜப்பானில் நிகழந்த அணு உலைவிபத்தினால் மட்டும் அதிபர் ஏஞ்சலா மெர்க்கீல் (Angela Merkel) அதிபர் இந்த முடிவை எடுக்கவில்லை. ஒரு சிறிய கிராமத்தில்  கிருத்துவ பாதிரியாரின் மகளாக பிறந்த இவர் கஷ்ட்டபட்டு படித்து கல்லுரரியில் ரசாயனத்தில் பட்டபடிப்பும்பெளதிகத்தில் முதுகலையும் பின்னர் அதிலேயே முனைவர் பட்டமும் பெற்று. பல்கலை கழகத்தில் ஆசிரியராக பணியாற்றியவர். போதித்த பாடம் அணுசக்தி. அதனால் அதன் வீரியமும்வீபரிதமும் நன்கு தெரியும். ஒருங்கிணைந்த ஜெர்மெனி உருவான் காலகட்டதில் 1989ம் ஆண்டில் ஆசிரியர் பணியிலிருந்து அரசியலுக்கு வந்து கட்சியில் மளமளவென் வளர்ந்து கட்சியின் செய்லாளரனவர். 2005ல் முதல் முறை அதிபர் தேர்தலில் வென்று ஜெர்மனியின் முதல் பெண் அதிபர் ஆனார். 2009ல் தேர்தலில்  கூட்டனியின் கட்சிகள் மாறினாலும் மீண்டும் அதிபராக தேர்ந்தெடுக்கபட்ட இவர்  ஐரோப்பிவின் செல்வாக்கு பெற்ற பெண்மணிகளின் பட்டியலில் முதலிடம் பெற்றவர்.  ஜெர்மன் மொழியை தவிர ரஷ்யன்,பிரெஞ்ச்,ஆங்கிலம் சரளமாக பேசும் இவர் எப்போதும் தன் நிலையை தெளிவாக உறுதியாக சொல்லும் திறமையான பேச்சாளார்.. கடந்த ஆண்டு நேரு நினைவு பரிசு பெற இந்தியாவிற்கு வந்திருக்கிறார்,இந்த 56 வயது அதிபர்.


தனது  கூட்டணி கட்சிகளின் தலைவர்களிடம் அணுஆலைகள் அகற்றபடவேண்டியதின்  முக்கியததுவத்தை விளக்கிய 15 மணிநேர ஆலோசனை கூட்டத்திற்கு பின்  அவர்களின் ஒப்புதலுடன் சட்ட வடிவாகவே இந்த அறிவிப்பு வெளியானது. ஜெர்மனியின்  எல்லா அரசியல் கட்சிகளிலும். பேராசிரியர்கள்முன்னாள் அரசு அதிகாரிகள்,பத்திரிகயளார்கள்  என ஒரு அறிவுஜீவிகளின் கூட்ட்மே இருக்கும்.  அதனால் அதிபரின் முயற்சிக்கு அரசியலுக்கு அப்பாற்பட்ட ஆதரவும் இருந்தது.
 இதன்படி ஜெர்மனியின் மினனணு ஆலைகள் எல்லாம் படிப்படியாக் முடப்படும். 2020க்குள்ளாக படிப்படியாக 17 ஆலைகளும் மூடபட்டு  காற்றாலைசூரியஒளி இயற்கை எரிவாயுபோன்ற்வற்றின் உதவியுடன்  குறைந்த செலவில் மாற்று எரிபொருள்கலிலிருந்து  தயாரிக்கபடும்  மின்சாரமே நாடு முழுவதற்கும் வழங்கபடும். இதற்கான திட்டஙகளுடன் வரும் ஆண்டுகள் அரசு செயல்படும்  .  2020ல்  ஜெர்மனி உலகின்  முதல்  பசுமைசக்தி (GREEN ENGERY NATION) நாடாக  இருக்கும். என அறிவித்திருக்கிறார். உலக அரங்கில் ஆச்சரியத்தை ஏற்படுத்திய இந்த அறிவிப்பை பல நாடுகள் வரவேற்றன. சுவிஸ் நாடு தாஙகளும் இதை பின பற்ற போவதாக் அறிவித்தது. ஜி8  நாடுகள் தங்கள் அணு உலைகளின் பாதுகாப்பை  பரிசிலிக்கும் பற்றி திட்டங்களை தொடங்கி விட்டன.
 இந்த திட்டத்தை முழுமையாக செயல் படுத்த  10 ஆண்டுகள் ஆகும். இவரது பதவிகாலம் 4 ஆண்டுகள்தான்.  அதற்குபின் அரசியல் மாற்றம் நிகழந்தால் திட்டம் என்னவாகும்?  ஜெர்மானிய அரசியல் சட்டபடி  மக்களின் அடிப்படை நலன்களை மாற்றி அமைக்கும்  எந்த சட்ட திருத்திற்கும்  பாரளாமன்ற ஒப்புதல் மட்டும் போதாதுமக்களிடம் வாக்கெடுப்பு நடத்த வேண்டும். அதனால் இதில் எந்த கட்சியும் மீண்டும் அணுமின் உலைகள் தேவை என  சொல்லி அரசியல் செய்யமுடியாது. அப்படியே செய்தாலும் மக்கள் ஏற்கமாட்டார்கள் எனபது அதிபர் ஏஞ்சலா மெர்க்கீலின் கணிப்பு.
பல பில்லியன் யூரோ செலவாகப் போகும் இந்த திட்டதிற்கு தேவையான நிதியை எப்படி சமாளிக்க போகிறாகள்.?  அணுமின் உலைகளின் செலவுக்கு ஒதுக்கபட்ட பணத்துடன்  புதிய காற்றாலை திட்டங்களில் தனியாருடன் சேர்ந்து அரசும் முதலீடு செய்யும்அன்னிய முதலீடுகள் வரவேற்கபடும். இங்கு வந்து மின்சாரம் தயாரித்து  அரசுக்கு விற்றும் மீதியை அண்டை நாடுகளுக்கு  “ஏற்றுமதி” “ செய்தும் பணம் சாம்பாதிக்க வாய்ப்புள்ள நாடாக ஜெர்மனி ஆக போகிறது என்கிறார் அதன் நிதி அமைச்சர்.
விபத்துகள் நிகழும் போது பல இழப்புகளோடு சில நன்மைகளும் ஏற்படும் என்று சொல்லப்படுவதுஉண்டு. சுனாமியால் ஜப்பானில் நிகழந்த பேரழிவினால் ஜெர்மனியில ஒரு பசுமைசக்திப் புரட்சி க்கு வித்திட்டிருக்கிறார் இந்த புரட்சிதலைவி.
  
















19/9/10

எரியும் திரியின் பின்னே..


எரியும் திரியின் பின்னே..


அருப்புகோட்டை நகரின் தெற்கு தெரு. மாலை நேரம். அன்று மின்வெட்டில்லை ஆனாலும் இருட்டு.
பற்ற வைத்துவிட்டு பரபரவென்று நாம் ஓடிவருவதற்குள் சரசரவென்று தங்கப் பொறியாக நகர்நது பலத்த ஒசையுடன் கிளம்பி வானில் ஒளிப்பூவாய் சிதறும் பட்டாசுகளின் திரிகளின் பிறப்பிடம் அது. இருண்டு கிடக்கும் சிமிண்ட் பூசாத செங்கல்சுவர்களும் ஓட்டுகூரையுமாகயிருக்கும் சின்ன சின்ன வீடுகள். ஒருகாலத்தில் நெசாவளார் வீதியாகயிருந்தது, இன்று ஒரு தறி கூட கிடையாது. மிகக்குறுகிய அந்த தெரு முனைகளில் குவியல்களாக திரி நூல்கள். கந்தக வாசனை.. குடும்பம் முழுவதும் குனிந்த தலை நிமிராமல் பிசியாகயிருக்கிறது. தெரியாதவர்கள் அனுமதிக்கபடாத அந்த தெருவில்நுழைந்த நம்மை சந்தேகத்துடன் பார்க்கும் கண்களும் உயரும் புருவங்களும் உடன் வரும் அவர்களின் தலைவர் களின் நண்பரை பார்த்ததும் அமைதியாகின்றன.
மிகமிக ஆபத்தான இந்த பட்டாசு திரி தயாரிக்கும் தொழில், இங்கே 100 வீடுகளில் எந்த அனுமதியுமில்லமல் திருட்டுதனமாக இருட்டில் நடந்துக்கொண்டிருக்கிறது. ஒரு சிறிய நெருப்பு பொறி பட்டால் கூட பெரும் விபத்தாகவிடக்கூடிய அபாயமிருப்பதால் வீடுகளில் சமையல் கிடையாது, பூஜை விளக்கு கூட கிடையாது.. கார்கள் கூட போக முடியாத இந்த தெருக்களில் தீயனைக்கும் வண்டிகள் நுழைவதை நினைத்துகூட பார்க்கமுடியாது.
இந்தியாவின் பட்டாசு நகரமான சிவாசியில் பட்டாசு திரிகள் தயாரிக்கபடுவதில்லை. ஒரு சில பெரிய நிறுவனங்களில் மட்டும் இதற்கு தனி பகுதி வைத்திருக்கிறார்கள். மற்ற ஆயிரக்கணக்கான தொழிற்சாலைகளுக்கு இங்கிருந்துதான் திரி போகிறது. பொட்டாசியம் நைட்டிரேட், கந்தகம், மற்றும் கரித்தூளில் தோய்த்த கருப்பு நூலும், மெல்லிய பேப்பரும் இவர்களுக்கு வழங்கபடுகிறது. அதை 3 மீட்டர் நீளத்திற்கு வெட்டி டேப்பாக வரும் பேப்பரை அழகாக அதன்மீது சுற்றய பின் ஆண்கள் அதை பெண் தொழிலாளிகளிடம் தருகிறார்கள். அவர் அதை தன் வெற்று தொடையில் திரித்து அளவான திரியாகாக்கி அடுக்கிறார். இந்த வெடி மருந்து பொருட்கள் இப்படி வெற்று உடலில் படுவது ஆபத்து என்பது அவர்களுக்கு தெரிந்திருக்கிறது. அதற்காக பவுடராக அரைத்த கரியை பூசிக்கொள்கிறார்கள். அது இன்னும் எவளவு பெரிய ஆபத்து எனபது அவர்களுக்கு தெரியவில்லை. 1500 திரி தயாரித்தால் கூலி 150 ருபாய்கள். வாரத்திற்கு 800 முதல் 1000வரை ஒரு குடும்பம் சம்பாதிக்கிறது. சீஸன் நேரமாதலால் ஓவர் டைம் வேலை செய்கிறார்கள். சில தெருக்கள் தள்ளியிருக்கும் உறவினர்களுக்கும் வேலை கொடுக்கிறார்கள். ஆண்டுதோறும் பட்டாசு தொழிலில் நிகழும் விபத்துகள் பற்றி கேட்டால் இதுவரை திரி தயாரிப்பில் எதுவும் நடக்கவில்லையே என்கிறார்கள். ஆனால் தாங்கள் யாருக்காக வேலை செய்கிறோம் என்றுகூட தெரியாத இவர்களில் சிலருக்கு இது அனுமதியில்லமல் சட்டவிரோதமாக செய்யபடும்தொழில் என்பது தெரிந்திருக்கிறது. “இங்கு போலீஸ், மற்ற அதிகாரிகள் வரமாட்டார்கள்.எங்கள் தலைவர்கள் பார்த்துகொள்வார்கள்” என்று சொல்லும் இவரகளின் இந்த தொழில் இரண்டு பெரிய கட்சிகளின் உள்ளூர் தலைவர்களின் ஆசியுடன் இயங்குகிறது. தீப்பெட்டி, பட்டாசு தொழிலாளர்கள். தமிழகத்தின் மிக முக்கிய ஓட்டு வங்கிகளில் ஒன்று அதை இழக்க எந்த கட்சியும் தயாரில்லை
பலஆண்டுகளாக பலருக்கு வேலைவாய்ப்பு தரும், இருட்டில் திருட்டுதனமாக நடைபெறும் இந்த தொழிலுக்கு தனியாக எல்லாவித பாதுகாப்பு வசதியுடன் அரசு ஒரு ‘வெடிமருந்து பூங்கா' இதே பகுதியில் நிறுவ முடியதா?




ழு படங்களுடன் பேட்டிகள் வெளியானால் அவர்கள் குடும்பத்திற்கு வேலை போய்விடும் என்பதால் படங்கள் எடுக்க அனுமதிக்க படவில்லை.

யாருக்காக இந்த ஓட்டம்



கடந்த சில ஆண்டுகளாக மிகப்பெரிய  அளவில் விளம்பரங்கள் அரசியல், சினிமா பிரபலங்களின் கொடிசைப்புகள்,இசைகலைஞர்களின் நிகழ்ச்சிகள்  என்ற  ஆராவாரங்களுடன்துவக்கம்  என்று நிகழ்ந்து கொண்டிருக்குகிறது மாரத்தான் ஓட்டங்கள்முழுமராத்தான், அரை மாராத்தான், நகரின் பெயரில் ஒரு சிறியமினி மாராத்தான் என பல ஒட்டங்கள்சென்னைக்கு  4 ஆண்டுகள் முன் அறிமுகமான இந்த ஓட்டங்கள் அதற்கு முன்பே மும்பபையிலும் டெல்லியிலும் ஆண்டுதோறும் நிகழ்கின்றன. பல கோடிகளில் பணம்புரளும்  இந்த ஓட்டங்களுக்கு கார்ப்ரேட்களின் ஸ்பான்ஸ்ர்ஷிப் ஆண்டுதோறும் அதிகரித்துவருகிறது,
1981ல் புற்று நோய் பற்றிய விழிப்புணர்ச்சி ஏற்படுத்தவும் அதற்கான நிதி ஆதாரத்தை பெருக்கவும் கனடா நாட்டில் டெரிபாக்ஸ் எனபவரால் மிக எளிமையாக துவக்கபட்டு மிக பெரிய வெற்றியை எட்டிய இந்த சமூக விழிப்புணர்வு ஒட்டம் இப்போது உலகின் பல நாடுகளில் எதாவது  ஒரு சமுக பிரச்சனை விழப்புணர்ச்சிகாக நடத்தப்பட்டு பணம் சேர்க்கபடுகிறது.
ஆனால் இங்கே இது ஒரு பெரிய விளம்பர வியாபரமாகி விட்டது. பங்கேற்பவர்களுக்கு ஓட்டதின் நோக்கம் தெரிவதில்லை. ஸ்பான்ஸ்ர்களின் விளம்பரம் ஒட்டத்தின் நோக்கத்தையும் அது மக்களிடம் ஏற்படுத்தவேண்டிய தாக்கத்தை விட அவர்களின் நிறுவனம் அல்லது விற்பனை செய்யும் சாதனங்களை பற்றிய தாக்கத்தைத்தான் அதிகம் ஏற்படுத்துகிறது.  கடந்த ஆண்டு  துபாயில் வாழும் புற்று நோயால் தாக்கபட்ட  அக்காஷ் சென்னையில் டெரிபாக்ஸ் ஒட்டத்தை அறிமுகபடுத்தினார். இதற்காக பல பள்ளிகளில் காலை பிரார்த்தனை கூட்டதில் பேசினார். சில  வாரங்களக்கு முன் சென்னை  IIT யில் நிகழந்த இரண்டாமாண்டு ஆண்டு ஒட்டத்தில் கடந்த ஆண்டைவிட அதிகம்பேர் பங்கேற்றது மகிழ்ச்சியான விஷயம். ஆனால் அதில் பலருக்கு நோக்கம் தெரியாதிருந்ததுதான் வருத்தமானது. ஏன் ஒடினீர்கள்? எனற் கேள்விக்கு என் டிரையினர்  இது ஒரு நல்ல பயிற்சிக்கான வாய்ப்பு போ என்று சொன்னார்என் பிரண்டஸ் கூப்பிட்டார்கள் போன்ற பதில்கள் தான் கிடைத்தது.
அதேபோல் சமீபத்தில்  80000 பேருக்குமேல் பங்குகொண்டதாக அறிவிக்கபட்ட. சென்னை மாராத்தானில் பங்குகொண்ட பலருக்கு அது உதவுப்போகும் நிறுவனம் பற்றி எதுவும் தெரிந்திருக்கவில்லை. “எங்கள் வங்கி இதை ஸ்பான்ஸர் செய்திருக்கிறது.பெரிய அதிகாரிகள் பங்கேற்கிறார்கள் அவர்கள் கண்ணில் நான் பட வேண்டும்,” “சிவமணியின் டிரம்ஸ்சை இலவசமாக கேட்கலாம்எனபது போன்றது தான் பலரின் பதில். பல கோடிகளில் இந்த நிகழ்ச்சிகளுக்கு விளம்பரம்  செய்பவர்கள்  கடந்த ஆண்டுகளில் நடந்த ஓட்டங்களினால் சேகரித்த பணத்தில் என்ன தொண்டு செய்தார்கள் என்பதை பற்றி ஒரு சின்ன விளம்பரம் கூட கொடுக்காதபோது பங்குகொள்பர்களுக்கு தெரியாமல் இருப்பதில் வியப்பு ஒன்றுமில்லை என்றார், 50 குழந்தைகளை கூட்டிவந்த ஒரு ஆசிரியை.
ஒடியவர்கள் ஒடும்போழுதே குடித்துவிட்டு தூக்கிபோட்ட பிளாஸ்டிக் பாட்டில்களை பொறுக்க எழைக் குழந்தகள் ஒடிவந்த காட்சி மனதை உறுத்தியது.
பதவியிலிருக்கும் அரசியல்வாதிகளின் ஆசியோடு சிலர் தங்களை முன் நிறுத்திக்கொள்ளவும் ஸ்பான்ஸ்ர்கள் அவர்கள் உதவியோடு தங்களது தேவைகளை எளிதாக நிறைவேற்றிக்கொள்ளவும் இந்த ஓட்டங்கள் ஒரு எளிதான வழியாகிவிட்டது என்கிறார் ஒரு மூத்த பத்திரிகயாளார். கார்ப்ரேட்கள்  அவர்களது சமூக கடமையாக செய்த பணிகளை வெளியிடவேண்டியது(Corporate Social Responsblity) இபோது கட்டாயமாக்கபட்டிருக்கிறது. அதனால் சில நிறுவனங்கள்  அந்த கணக்கில் புத்திசாலிதனமாக இந்த விளமபரங்களை செய்கிரார்கள். தவிர்க்கமுடியாதாது   இது என்கிறார் பங்கு பெற்ற ஒரு நிறுவனத்தின் உயர் அதிகாரி.
1981 டெரிபாக்ஸ் கனடாவில் ஓட்டத்தை துவக்கியபொழுது தேடிவந்த ஸ்பான்ஸ்ர்களை நிராகரித்தார்.சொன்ன காரணம்விளம்பரங்கள் ஒட்டதின் நோக்கத்தை தகர்த்துவிடும்.” தொடந்து அந்த ஓட்டத்தை உலகமெங்கும் நடத்தி  பல கோடிகளை நிதியாக சேர்த்தளிக்கும்   அவரது அறக்கட்டளை  இன்றும் கார்ப்பெரட் விளம்பரங்களுக்காக ஸ்பாஸ்ர்களை ஏற்பதில்ல.

(கல்கி 19.09.2010)