113 வயதாகும் கார்னகில் மெலன் யூனிவர்ஸிட்டி அமெரிக்காவின் மிகப்பெரிய பலகலைகழகங்களில் ஒன்று.
பென்ஸில்வேனியா மாநிலத்தின் பிட்ஸ்பர்க் நகரில் 140 ஏக்கரில் 5 கீமி சுற்றளவில் விரிந்திருக்கும்
இந்த புகழ் பெற்ற பல்கலைகழகம் இன்று உலகின்
பல நாடுகளிலும் கிளைகளுடன் இயங்குகிறது. இதன் முன்னாள் மாணவர்களில் பலர் முன்னணி நிறுவனங்களின்
தலைவர்கள். ஆண்டுக்கு 1000கோடி ரூபாய்களுக்குமேல் மானியங்களுக்காக செலவிடும் இந்த பல்கலை
கழகத்தின் தலைவராக சமீபத்தில் பொறுப்பேற்றிருப்பவர்
ஒரு இந்தியர். திரு. சுப்பரமணியம் சுரேஷ்.
நம் ஊர்காரர். சென்னையில் வளர்ந்து படித்தவர் 1977ல் சென்னை ஐஐடியில் கெமிகல் எஞ்ஞினியரிங்
முடித்து மேற்படிப்புகாக, பயணத்திற்கா கடன் வாங்கி கையில் 100 டாலர்களுடன் அமெரிக்கா
வந்தவர், படிப்படியாக வளர்ந்து பல உயரங்களை தொட்டு இன்று உலகம் முழுவதும் சுபா சுரேஷ்
என்ற புகழ்பெற்ற விஞ்ஞானியாக அறியப்பட்டிருப்பவர். 1881ல் தனது முதல் டாக்ரேட்டை எம்
ஐ டி யில் பெற்ற சுரேஷ் அங்கேயே ஆசிரியராகும் வாய்ப்பையும்பெற்றார், ஆசிரியப்பணியுடன் ஆராய்ச்சி பணியையும் அங்கு தொடர்ந்த இவர் இதுவரை 250 கட்டுரைகளையும், 6 புத்தகங்களையும் எழுதியிருக்கிறார்.
22 புதிய கண்டுபிடிப்புகளுக்கு காப்பு உரிமை பெற்றிருக்கிறார். பொறியியல், ரசாயனம், மருத்துவம், உயிரியல் என பலவேறுபட்ட
துறைகளில் தன் ஆராய்ச்சியை செய்து வந்த இவர் எம் ஐடி பல்கலைகழகத்தில் 5 வெவ்வேறு துறைகளின்
தலைவராக பணியாற்றியிருக்கிறார், பெருமையான இந்த விஷயத்தை செய்திருக்கும் முதல் ஆசிய இனத்தவர் இவரே. உலகின் பல நாடுகளின் ஆராய்ச்சி பணிகளில் ஈடுபட்டிருக்கும், 100 விஞ்ஞானிகளுக்கு மேல் பணியாற்றும் இவரது ஆராயச்சி
குழுவில் சேருவது விஞ்ஞானிகளிடையே ஒரு பெருமைக்குரிய
விஷயமாக கருதப்படுகிறது. உலகின் பல பல்கலைகழகங்களின் கெளரவ பேராசியராக இருக்கும் சுரேஷ்
பெற்ற விருதுகள் பல. இந்திய அரசு பத்மஸ்ரீ வழங்கியிருக்கிறது.
அமெரிக்காவில்
நேஷனல் ஸயின்ஸ் பௌண்டேஷன்(NATIONAL SECIENCE FOUNDATION) என்பது விஞ்ஞான ஆராய்ச்சிகளையும்,
புதிய கனடுபிடிப்புகளையும் செய்ய இளைஞர்களை ஊக்குவித்து நிதி உதவும் ஒரு அமைப்பு, கடந்த
ஆண்டு இந்த அமைப்பு 3 லட்சம் இளம் ஆராய்ச்சியாளர்களுக்கும் 1500க்கு மேற்பட்ட நிறுவனங்களுக்கும்
நிதி உதவி செய்திருக்கிறது. இதன் ஆண்டு பட்ஜெட்
7 பில்லியன் டாலர்கள் (ஒரு பில்லியன் 100கோடி) எம் ஐ டியில் பணியைலிருந்த சுரேஷை
அதிபர் ஒபாமா இதன் தலைவராக 2010ல் நியமித்தார். அங்கு பல புதிய ஆராய்ச்சிகளுகளுக்கு
வழிவகுத்த சுரேஷை கார்னகில் மெலன் பல்கலை கழகம்
தலமை ஏற்க அழைத்தது. ஆராய்சிப்பணிகளையும் ஆசிரிய பணிகளையும் விரும்பிய சுரேஷ் அதைஏற்பதற்காக
NSF தலைவர் பொறுப்பிலிருந்து விலகிய போது அதிபர்
ஒபாமா “சுபா சுரேஷ் இந்த பெளண்டேஷனுக்கு தலமையேற்று
வழி நடத்தியது நம் அதிர்ஷ்டம். அவர் தன் சீரிய
பொறியியல், ஆராய்ச்சி,நிர்வாக திறன்கள் மூலம்
நாட்டின் விஞ்ஞான வளர்ச்சியில் தன்னை அர்பணித்துகொண்டவர். விஞ்ஞான தொழில்நுட்பத்தின்
பயன்களை பல ஆயிரக்கணக்கான அமெரிக்கர்கள் குறிப்பாக பெண்களும் சிறுபான்மையினரும் பெறச்செய்தவர்.
அவரது சேவைக்கு நான் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்.” என்று அறிக்கை வெளியிட்டார்.
அரசின் நியமனங்களிலிருந்து விலகுபவர்களை பாராட்டி
வெள்ளை மாளிகையிலிருந்து இத்தகைய அறிவிப்புகள் வருவது அபூர்வம்.
கார்னகில்
பலகலைகழகத்தில் இவரையும் குடும்பத்தினரையும் வரவேற்றதையே ஒரு அழகிய நிகழ்ச்சியாக நிகழ்த்தினார்கள். அந்த பல்கலைகழக
பராம்பரியத்தின் படி ஸ்காட்டிஷ் பைப் இசைக்கருவி வாசித்தபடி குழுவினர் முன்னே வர குடும்பத்தினர் மேடைக்கு
அழைக்கபட்டனர், மாணவர்கள் தயாரித்திருந்த ரோபோ கைகுலுக்கியது,
உலகின் பல பகுதியிலிருக்கும்
பல்கலை மாணவர்களும் ஆசிரியர்களும் வாழ்த்து
கூறியது விழாவில் நேரலையாக ஒளிபரப்பட்டது. ”இவர்களின் அனைத்து உதவிகளுக்கு நன்றி என சொல்லி
தனது மனைவி மேரியையும் பெண்கள் மீரா, நீனாவையும் அறிமுகபடுத்தினார் சுரேஷ். கார்னகிலில்
என்ன புதிதாக செய்ய போகிறீர்கள்? என்ற பலரின் கேள்விக்கு இவரின் பதில்
“முதலில் சில காலம், மாணவர்கள், ஆசிரியர்கள், ஊழியர்கள் சொல்வதை கவனமாக கேட்கபோகிறேன்”
“முதலில் சில காலம், மாணவர்கள், ஆசிரியர்கள், ஊழியர்கள் சொல்வதை கவனமாக கேட்கபோகிறேன்”