6/5/15

சின்னத் திரை மொழிமாற்றுத் தொடர்கள் அவசியமா? ஆபத்தா?


சிலவாரங்களுக்கு முன் தமிழ்நாடு சின்னத்திரை கலைஞர்கள் கூட்டமைப்பு மற்றும் தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர் சம்மேளனமாகிய அமைப்புகள் இணைந்து ஒருநாள் வேலை நிறுத்தத்த போராட்டத்தை அறிவித்தனர். காரணம் டிவி சானல்களில் அதிக அளவில்மொழிமாற்றபட்ட தொடர்களைக் காட்டப்படுகிறது. தொலைக்காட்சி மெகா தொடர்கள் பல ஆயிரம் கலைஞர்களுக்கும்,தொழிலாளர்களுக்கும் வாழ்வதாரமாகத் திகழ்கிறது மொழி மாற்றுத் தொடர்களின் வரவு பல ஆயிரம் தொழிலாளர்களின் வேலைவாய்ப்பினை பறித்து வருகிறது. இதனைத் தடுத்து நிறுத்திப் பல ஆயிரம் குடும்பங்களைக் காப்பாற்றுமாறு சின்னத்திரைக் கூட்டமைப்புமற்றும் பெப்ஸி அமைப்பின் சார்பாகத் தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டு வந்தது. அதற்கு அவர்கள் செவிசாய்க்காததால் இந்தப் போராரட்டம் 
உண்மையில் இந்த மொழிமாற்றப்பட்ட தொடர்களினால் தமிழ்சின்னதிரைக்கு ஆபத்தானதா? 
தமிழில் டிவி சீரியல்கள் டப் செய்யபட்டு வெளியிடப்படுவது புதிது இல்லை. 1990களிலேயே தூர்தர்ஷன் துவக்கி வைத்த ஒரு விஷயம் இது..பொழுதுபோக்குக்கான தனியார் சானல்கள் இல்லாத, ,தூதர்ஷன் மட்டுமே இலுப்புபூ சக்கரையாக இருந்த அந்தக் காலகட்டத்தில் மிகமோசமாக மொழிபெயர்ப்புடன், அதைவிட மோசமான குரல்களில் டப் செய்யப்பட்ட ஹிந்தி சீரியல்களைக் கிண்டல் செய்துகொண்டே மக்கள்ரசித்தார்கள். ஆனால் டிவி யில் தனியார் சானல்கள் பொழுதுபோக்குகாக அனுமதிக்கபட்டபின் இந்த டிவி தொடர்கள் புதிய அவதாரம் எடுத்தது.குறுந்தொடர்கள், நீண்ட தொடர்கள், மெகா தொடர்கள் எனப் பல வடிவங்களில் மிகப்பெரிய அளவில் வளர்ந்துவிட்டது இன்று சீரியல் பார்ப்பதுஎன்பது பலக் குடும்பங்களின் அன்றாட வாழ்வில் ஒரர் அங்கமாகவே ஆகிவிட்டது 
தொலைக்காட்சி மெகா தொடர்கள் பல ஆயிரம் கலைஞர்களுக்கும், தொழிலாளர்களுக்கும் வாழ்வதாரமாகத் திகழ்கிறது. ஆனால், சமீபகாலமாக அதிகரித்துள்ள மொழி மாற்றுத் தொடர்களின் வரவு பல ஆயிரம் தொழிலாளர்களின் வேலை வாய்ப்பினை பறித்து வருகிறது. இதன்விளைவால் சின்னத்திரையை மட்டுமே முழுமையாக நம்பியுள்ள பல பேர் வேலையில்லாமல் கடன் தொல்லையால் அவதிப்பட்டுவருகின்றனர். தமிழில் தயாரிக்கப்படும் ஓர் அரை மணி நேர எபிஸோட்டின் பின்னே கிட்டத்தட்ட 150 பேரின் உழைப்பும் வருமானமும்இருக்கிறது. மொழிமாற்ற தொடர்களினால் இவர்கள் வாழ்க்கை மட்டுமில்லை துறையே மெல்ல அழிந்து கொண்டிருக்கும் ஆபத்துஉருவாகியிருக்கிறது இதைத்தடுக்கவே களத்தில் இறங்கியிருக்கிறோம் என்கிறார் கவித்தா பாரதி. இவர் சின்னதிரை கலைஞர்களின்கூட்டமைப்பின் தலைவர். பலதொடர்களை இயக்கியவர். 
5 ஆண்டுகளுக்கு முன் சிறிய அளவில் துவங்கிய இந்த மொழிமாற்ற தொடர்கள் மெல்ல படிப்படியாக வளர்ந்து இன்று மிகப்பெரிய அளவில்சானல்களில் ஆக்கரமித்தவிட்டன. தமிழில் முன்னணியில் இருக்கும் 8 சானல்களில் இப்போது குறைந்த பட்டசம் 2 அல்லது 3 மொழிமாற்றதொடர்கள் தினசரி ஒட்டிக்கொண்டிருக்கின்றன. இவ்வளவும் தமிழ் தொடர்களின் இடம் என்கிறார் இவர். 
ஏன் சானல்கள் இந்தத் தொடர்களை ஓளிபரப்புகின்றன? 
ஒரு வார்த்தையில் சொல்ல வேண்டுமானல், ரிஸ்க் இல்லாத லாபகரமான பிஸினஸ். மிக வெற்றிகரமாக ஹிந்தியில் ஒடிய ஒரு சீரியலைஎப்பிசோடுக்கு 5 அல்லது 10 ஆயிரத்துக்கு வாங்கி அதைக் குறைந்த செலவில் டப் செய்தால் போதும். தேவையானதெல்லாம் ஒரு டப்பிங்ஸ்டூடியாவும் குரல் கலைஞர்களும்தான். இந்திய டிவிக்களின் விளம்பரங்களின் விதிகளை நிர்ணயக்கும் “கடவுள்” களான விளம்பரஏஜெண்ட்கள் எல்லஓரும் மும்ம்பயில் இருக்கிறார்கள். இம்மாதிரி மொழி மாற்ற தொடர்கள் ஏற்கனவே ஹிந்தியில் வெற்றிப் பெற்றிருப்பதால்தயங்காமல் ட்ப்பிங் சீரியல்களுக்கும் விளம்பரங்களை வழங்குகிறார்கள்.. கடந்த சில ஆண்டுகளில் துவங்கப்பட்ட புதிய சானல்கள்முன்ணனியிலிருக்கும் பெரிய சானல்களுடன் போட்டியிடவும், நிகழ்ச்சிகளின் தயாரிப்பு செலவுகளைக் குறைக்கவும் ஒரு எளிதான வழியாகஇதைப்பார்க்கின்றன. மேலும் இந்த இந்தி டிவி சீரியல்கள் தொழில்நுட்ப ரீதியாகவும் மிக உயர்ந்த தரத்தில் இருக்கிறது. விளம்பரதார்கள்விரும்புகின்றனர். இதில் முன்னோடிகள் ஜீ டிவியும், ஸ்டார் டிவியும் தான். இவர்களுக்கு ஹிந்தி சீரியகல்களை வாங்கும் செலவு கூடஇல்லை. அவர்கள் சானலில் இந்தியில் ஓளிபரப்பும் போதே அனைத்து மொழிகளுக்கான உரிமையுடன் தான் தயாரிக்கிறார்கள் எனவே அந்தச்செலவும் இந்தச் சானல்களுக்கு மிச்சம். 
இதுபோன்ற காரணங்களால் இந்தசானல்கள் மேலும் அதிக எண்ணிக்கையிலான தொடர்களை மொழி மாற்றம் செய்து ஒளிபரப்பி வருகின்றன.இப்போது ஹிந்தியில் பாப்புலாராக ஓடிக்கொண்டிருக்கும் சானல்களுக்கு அடுத்த வருடத்திற்கு இப்போதே அட்வான்ஸ் புக்கிங் செய்யுமளவிற்கு இந்தத் தொழிலின் டிரண்ட் வளர்ந்துகொண்டிருக்கிறது. 
மக்கள் விரும்புகிறர்களா? 
மக்களிடம் வரவேற்பு இருக்கிறது என்பதுதான் ஒரு ஆச்சரியமான உண்மை. பிரம்மாண்ட சினிமாவிற்கு இணையான தயாரிப்பு, அழகான்வண்ணங்கள், தமிழ்ச் சூழலில் பார்க்க முடியாத புதிய இடங்கள் ஆடம்பரமான செட்கள், ஆடைகள் இவைகள் பார்வையாளர்களைக்கவர்கின்றன. ”தமிழ் மெகா தொடர்கள் வீட்ல பெரியவங்க பார்த்தப்ப சீரியல் மேலே நிறையக் கோபம் வந்தது எப்ப பார்த்தாலும் அழுகைகாட்சி ,மாமியார் மருமக சண்டை, அபத்தமான வார்த்தைகள் . இப்ப ஹிந்தி சீரியல் வந்த பிறகு தான் இப்ப இருக்கிற இளைய தலைமுறைசீரியல் பக்கம் திரும்பி இருக்கோம்.எங்களுக்குத் தேவையான லவ் , பொழுதுபோக்கு ,ஆடை அலங்காரம் இதுல இருக்கு அதனால ஹிந்திசீரியல் ஓகே” . என்கிறார் ஒரு கல்லூரி மாணவி .மருமகள் IPS , சமைக்கத் தெரியுமா, அதைப் பார்க்க மாமியாரின் நண்பிகள் வருவார்கள், அதைமாமியாரும், மருமகளும் எப்படிச் சமாளிகிரர்கள் போன்ற லைட்டான விஷயங்கள்.... புதிய மாதிரி புடவை டிசைன்கள் நகைகள் மேலும்.......குடும்பத்தோடு உட்கார்ந்து, பார்க்கலாம், நகைச்சுவை தொடர்கள் ஏராளம், கபிலம் சித்து வும் கலக்கும் தொடர்கள், போன்றவைகள்இளைஞர்களை இதன் பக்கம் இழுக்கின்றன. 

கலைஞர்களுக்கு ஏது மொழி இனம் என்று சொல்லுவார்கள்..! மொழி மாற்றத் தொடரை பார்க்க வேண்டுமா இல்லையா என்பதை முடிவு செய்யவேண்டியவர்கள் மக்கள். இன்னும் கொஞ்சம் காலம் போனால் எங்களது தொடரைத்தான் ஒளி பரப்ப வேண்டும் என்று கோரிக்கைவைப்பார்களோ..! மொழி மாற்றத்தில் வருகின்ற ஒரு தொடரை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பிப் பார்க்கிறார்கள். அதுபோன்றதொடர்களை ஏன் இவர்கள் கொடுப்பது இல்லை. தொடரில் திருப்பங்கள் வேண்டும் என்பதற்காக நடைமுறையில் சாத்தியப்படவே முடியாதகதாப்பாத்திரங்களைக் காட்டி... குழந்தைகளோடு உட்கார்ந்து பார்ப்பதற்குக் கூசுகின்ற தொடர்களை விட மொழி மாற்றத் தொடர்கள் மிகவும்ரசிக்கத்தக்க அளவில் இருந்தால் அதை ஒளி பரப்புவதில் தவறொன்றும் இல்லை. இந்த மொழி பேசுபவர்கள்தான்.. இந்த மாநிலத்தைச்சேர்ந்தவர்கள்தான் நடிக்க வென்றும் கோரிக்கை வைத்தாலும் வைப்பார்கள். இது சின்னத்திரை கலைஞர்களால் காட்டப்படும் எதிர்ப்பல்ல...தங்களது தொடரைத்தான் மக்கள் பார்க்க வேண்டும்... அனைத்து வருமானமும் தங்களுக்குத்தான் கிடைக்க வேண்டும் என்ற பேராசையால்....அவர்கள் முன்னிறுத்தப்படுகிறார்கள். அவ்வளவே. என்று முக நூலில் தன் கருத்தை பதிவு செய்கிறார் ராமராசு என்ற இளைஞர். 
”அன்பாலே அழகான வீடு”, ”நிலவே மலரே”, ”என்கணவன் என்தோழன்” போன்ற தலைப்புக்கள் மட்டுமில்லை. மொழிபெயர்ப்பும் உச்சரிப்பும்கூட நன்றாகத்தான் இருக்கிறது அதனால்தான் உதட்டசைவும் குரலும் ஒத்துப் போகாவிட்டாலும் உள்ளத்துடன் ஒத்துப் போகிறது. புடவைஅணிந்திருக்கும் முறையும், முகங்களும் தான் அவ்வப்போது நாம் ஏதோ வேறு மொழி தொடர் பார்க்கும் என்ற உணர்வைத்தருகிறது. மற்றபடிநன்றாக ரசிக்க முடிகிறது. பல மொழி மாற்றுத் தொடர்களில் அருமையான தமிழ் வசனங்களைப் பயன்படுத்துகிறார்கள். விஜய டிவிமகாபாரதம் தொடரில் பயன்படுத்தும் தூய தமிழ் அற்புதமாக இருக்கிறது. இவர்கள் நல்ல தொடர்களைக் கொடுத்தால் மக்கள் ஏன் மொழிமாற்று தொடர்களுக்குப் போகிறார்கள். என்கிறார் ஒரு குடும்பத்தலைவி. இவர் தினசரி 4 மணிநேரம் சீரியல்கள் பார்ப்பதற்காகச் செலவிடுபவர். 
”மிக அருமையான விஷுவல் குவாலிட்டி, பெரிய பட்ஜெட்டில் தயாராகும் ரிச்சான தயாரிப்புகளுக்கு விளம்பரம் கொடுப்பதைப் பரியநிறுவனங்கள் விரும்புகின்றன. அதிகப் பார்வையாளர்கள் இந்தப் படைப்புகளுக்கு இருப்பதை டிஆர்பி ரேட்டிங்கள் சொல்லுகின்றன. என்பதுஉண்மையானாலும் டிவி நிறுவனங்களின் கொள்கைகளுக்கு ஏற்ப காட்டப்டும் சீரியல்களின் எண்ணிக்கைகள் மாறும் என்கிறார் மக்கள்டிவியின் விள்மபர தொடர்பு அதிகாரி திரு. சதீஷ். நல்ல தமிழ் நிகழ்ச்சிகளை ஊக்குவிக்கும் மக்கள் டிவி மிகக் குறைந்த அளவிலேயேமொழிமாற்ற தொடர்களை ஒளிபரப்புகின்றன. என்கிறார். . 

தமிழகத்தின் சின்னதிரை கலைஞர்களும், தொழிநுட்பபணியாளர்களும் எவருக்கும் சளைத்தவர்கள் இல்லை. மிகதிறமையானவர்கள்.சினிமாவில் அகில இந்திய அளவில் தங்களை நிலை நிறுத்திகொண்டிருப்பவர்கள். ஆனால் சின்னத் திரையில் சில தனித்துவ்மானபிரச்னைகள் இருக்கின்றன. ஹிந்தியில் மார்க்கெட் மிகப்பெரியதாக இருப்பதால் சிரியலின் ஒரு எபிஸோடை எடுக்க 25 லட்சங்கள் கூடச்செலவழிக்கிறார்கள். தமிழில் ஒரு சானலுக்குத் தொடர் தயாரிக்க ஒரு எப்பிஸொட்டுக்கி அதிகப் பட்சம் 1 லட்சம் தான் கொடுப்பார்கள். இதில்தான் கலைஞர்கள் சம்பளம் உட்பட அத்தனை செலவுகளும் அடக்கம். இந்த நிலையில் ஆடம்பர செட், பிரம்மாண்ட தயாரிப்பு என்பதெல்லாம்சாத்திய படாது. என்கிறார் கவித்தா பாரதி. ஹிந்தியில் பாதி அளவு செலவழித்தால் கூட [போதும் இங்கு இருப்பவர்கள் அதைவிடப் பிரமாதமாகத்தயாரிப்பார்கள் என்று சொல்லும் இவர்.மஹாபாரதம் போன்ற இதிகாசங்களை மொழிமாற்றம் செய்வதை நாங்கள் எதிர்க்கவில்லை.ரமாயாணம், பாரதம் போன்றவைகள் பலக் காலமாக மொழிமாற்றம் செய்யப்பட்டுவருபவை தமிழ்ச் சூழலில் சமூகக் கதைகளைத் தயாரிக்கஎல்லா வசதிகளும் இங்கு இருக்கும்போது சானல்கள் அதை விடுத்து கலைஞர்களின் வாழ்வாதரத்தையே கேள்விக்குறியாக்கும் இப்படிபட்டமொழி மாற்றிய தொடர்கள் அவசியமா? என்பது தான் பிரச்சினை. மேலும் டிவி தொடர் தயாரிப்பு என்பது வெறும் பணமூதலீட்டு விஷயமில்லை. சானலின் ஆதரவு இருந்தால் மட்டுமே தொடர் தயாரிக்க முடியும். 150 தயாரிப்பு நிறுவனங்களுக்கு மேல் இருக்குமிந்த துறையில்அவர்களுக்கு வாய்ப்பு அளிக்காமல் போனால் அவர்கள் துறையை விட்டு வெளியேறிவிடும் அபாயமிருக்கிறது. என்பதால் தொலைக்காட்சிநிறுவனங்கள் மொழி மாற்றுத் தொடர்களை நிறுத்தி விட்டு, நேரடி தொடர்கள் மூலம் வேலை வாய்ப்பைப் பெருக்கித் தந்து பல ஆயிரம்குடும்பங்களைக் காப்பாற்ற வேண்டும்.இதனை வலியுறுத்தும் விதமாகத் தேதி ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டோம்.. .சம்மந்தப்பட்ட தொலைக்காட்சி நிறுவனங்களின் நிர்வாகிகளைச் சந்தித்து எங்களது கோரிக்கையைத் தெரிவித்திருக்கிறோம்.. அவசியமானால்அடுத்தக் கட்டமாக அரசின் தலையீட்டை வேண்டுவோம். இது வெறும் வியாபார பிரச்சினை மட்டுமில்லை. தமிழ் கலைஞர்களின் வாழ்க்கைப்பிர்ச்னை அதனால் அரசின் தலையிடு அவசியம் என்கிறார் கவித்தா பாரதி 
”இது ஒரு தொழில் முழுக்க முழுக்க வியாபாரம் இதில் அரசு எப்படித் தலயீடும் என எதிர்பார்க்கிறீர்கள்?” எனக் கேட்டபோது. கோக்க்கோகோலாநிறுவனத்துக்கு அனுமதி கொடுத்த பின்னரும் மக்கள் எதிர்ப்பால் நிறுத்த வில்லையா? அது போலத்தான் இதுவும். மேலும் மஹராஷடிரத்திலும்கர்நாடகத்திலும் மொழிமாற்றுத் தொடர்களுக்கு அனுமதியில்லை, ஆந்திராவில் 30% நிகழ்ச்சிகளை அனுமதிக்கிறர்கள், இது போலச் சிலநெறிமுறைகளை வரையறுப்பதைத்தான் கோருகிறோம் என்கிறார் கவித்தா பாரதி. . 

, திறமையற்ற சமூகம்தான் , தன்னுடன் போட்டியிடுபவனை முடமாக்கித் தான் மட்டும் வெல்ல நினைக்கும். எந்தத் தொழிலும் கடும்போட்டியையும் சவால்களையும் சந்திப்பதுதான் அதன் திறனை மேம்படுத்திக்கொள்ளக் கிடைக்கும் வாய்ப்பு, இன்று தமிழ் சின்னத் திரை அந்தக்கட்டத்தில் இருக்கிறது. 
இந்தக் கலைஞர்களின் கோரிக்கை நியாமானது என்றாலும் தமிழ் தொடர்களின் தரம் ரசிகர்களை அதை ஏற்க யோசிக்க வைக்கிறது. ..எப்படிகும்பங்களைக் கெடுப்பது, பெண்கள் எத்தனை விதமான துரோகங்களைச் செய்வது, தவறான உறவுகளை ஆதரிப்பது,................என வித விதமானமட்டரகமான களங்களை வைத்து கதைகளைப் பின்னுகிறார்கள். பெரும்பாலான தொடர்கள் பெரும்பாலும் கொலை, கொள்ளை, திருட்டு,வஞ்சகம், இன்னும் எண்ணற்ற தீய சிந்தனைகளைச் சொல்லுவதால் மெல்ல மக்கள் தமிழ் தொடர்களை ஒதுக்கி இந்தப் பிறமொழிதொடர்களுக்கு ஆதரவு தரத்துவங்கியிருக்கிறார்கள். ஒரு நல்ல தொடரை உருவாக்கப் பிரமாண்டங்களும் ஆடம்பரங்களும் அவசியமில்லைநல்ல தரமான கதைகள், பெண்களை வீறு கொண்டு முன்னேறச் செய்யும் கதை களங்கள், மர்மத் தொடர்கள் எல்லாம் சின்னத் திரையில்கொடுத்தவர் கே பாலசந்தர். அதை நமது சானல்களும் கலைஞர்களும் மறந்து போனது தமிழ் சின்னத் திரை ரசிகர்களின் துரதிர்ஷடம் தான்

  • Vedha Gopalan மக்கள் விரும்புகிறர்களா? 
    மக்களிடம் வரவேற்பு இருக்கிறது என்பதுதான் ஒரு ஆச்சரியமான உண்மை!!
    பிறகென்ன செய்ய!!
    ...See More
    Like · Reply · 4 · 14 hrs · Edited
  • Vedha Gopalan நடுவில் பாபியும் யாதோன் கிபாராத்தும் தோரஹாவும் பார்க்கப் ஓடியவர்கள் பாரதிராஜா வந்தவுடன் கவனம் திருப்பவில்லையா!!
    Like · Reply · 1 · 14 hrs · Edited
  • Muthuswamy Krishnamurthy கன்னடத்தில் சின்னத் திரையோ பெரிய திரையோ எதுவாக இருந்தாலும் மொழி மாற்றம் (டப்பிங் ) அனுமதிக்கப் படுவது இல்லை!
    Like · Reply · 1 · 14 hrs
    • Ramanan Vsv மஹாராஷடிரத்திலும் அனுமதியில்லை. அதையும் கட்டுரையில் எழுதியிருக்கிறேன் சார்.
      Like · 14 hrs
  • Ganesh Balasubramaniyam உறவுகளுக்கிடையே இருக்கும் இயல்பான உரசல்களை விட்டு விட்டு, எல்லா தொடரிலும் உறவுகளை ஜென்ம விரோதிகள் போல் கதை எழுதி, பார்க்கும் வீடுகளில் எல்லாம் கைகேயி போல் நுழைந்து விஷம் விதைப்பதை நிறுத்தட்டும். கண்டிப்பாக நிலை மாறும் .
    Like · Reply · 13 hrs
  • Shah Jahan எனக்கு கருத்துக்கூற தகுதியே இல்லை. ஒண்ணுகூடப் பாத்ததில்லே. ஆனா, பெரிய மீன் சின்னமீனை முழுங்குற கதைதான். டப்பிங்கிலும்கூட 1-2 கேங் கையில்தான் மொத்த இண்டஸ்ட்ரியும் இருக்குன்னு நினைக்கிறேன். முன்னாடியெல்லாம் நானும் நிறைய டப்பிங்குக்கு குரல் கொடுத்திருக்கிறேன் - கடைசியா சுமார் பத்து வருசமாச்சு. நோ டப்பிங்.
    Unlike · Reply · 2 · 13 hrs
  • Ramanan Vsv இப்போது சென்னையில் டப்பின் ஆர்ட்டிஸ்ட்டாக வேண்டுமனால் 50, 000 கொடுத்து யூனியனில் மெம்பராக வேண்டும், அப்புறம் சான்ஸ் வாங்க உதவுபவர்களுக்கு செலவு. மும்பயிலிருந்து வரும் மோசமான மொழிபெயப்பை ரிப்பேர் செய்து கொண்டு பேசவேண்டும். ஸ்டூயோக்கள் அதிகமாகிவிட்டாலும் பலருக்கு வாய்ப்பில்லை எனப்து தான் உண்மை. பட்டி மன்றங்களைப் போல செட்களாக தான் இயங்குகிறார்கள்.
    Like · Reply · 4 · 13 hrs
  • Krishnaswami Cvr this is a reflection of free market principles...will be reflected in many ways in our life...
    Unlike · Reply · 1 · 13 hrs
  • Shah Jahan செட்களாக இயங்குவதையும் தவறு என்று கூற முடியாது. ஆளைப் பிடித்து, பயிற்சி கொடுத்து, ஓரளவுக்கு அனுபவமும் பெற்று குழுவோடு ஒத்துப் போன பிறகு சட்டென புதிய ஆளை ஏற்பது கொஞ்சம் கஷ்டம்தான். இதுதான் என் அனுபவமும்கூட. உதாரணமாக, நான் நானாகவே ஒரு செட்டிலிருந்து விலக...See More
    Unlike · Reply · 1 · 12 hrs
  • Rajaraman Subramanian வினோதமான மக்கள் பண்பாடு............?.
    Like · Reply · 8 hrs
  • Sundararaman KN இது ஒரு வீண் போராட்டம். தொலைகாட்சியினால் மேடை நாடகங்களுக்கு பாதிப்பு என்று ஒரு கதாசிரியனாகவும், மேடை நாடக தயாரிப்பாளாராகவும் நான் சொல்லி அதனால் தொலை காட்சியில் வரும் தொடர் நாடகங்களை நிறுத்த வேண்டும் அல்லது குறைக்க வேண்டும் என்று தமிழ் நாடக தயாரிப்பாளர...See More
    Like · Reply · 1 · 6 hrs