30/7/15

புதிய தலைமுறை டிவியின் மக்கள் மேடையில்



அனுதாப அலைகள் சூனாமியாக தாக்கிக்கொண்டிருக்கும் நேரத்தில் புதிய தலைமுறை மக்கள் மேடையில் பங்கு கொள்ள திரு வெங்கட் அழைத்தார்.(29/07/15) சற்று யோசித்தேன். நிகழ்ச்சியில் மாவட்டங்களிலிருந்து மாணவர்களும் பங்கேற்பதாக சொன்னதால் நிகழ்ச்சி வெறும் அஞ்சலியாக இல்லாமல் மாறுதலாக இருக்கும் என எண்ணி பங்கேற்றேன். அந்த நிகழ்ச்சியில் தெளிவான பார்வையில் துணிவாக கருத்துகளை சொன்ன இந்த மாணவர்கள் கலாம் கண்ட கனவுகளின் நம்பிக்கை விதைகளாகத் தெரிகிறார்கள். விரைவில் வளர்ந்து விருட்சமாகப்போகும் அடையாளங்கள் தெரியும் இவர்களை வளரும் இந்தியாவின் அடையாளமாக பார்க்கிறேன். சென்னையிலிருக்கும் முகங்களையே பார்க்க வேண்டிய நிலையிலிருந்து மாறி மாவட்டங்களிலிருந்து மக்களை நேரலையில் இம்மாதிரி பங்கு கொள்ளச் செய்யும் நிகழ்ச்சிக்கு புதிய தலைமுறைக்கு நன்றி சொல்ல வேண்டும். தனது தொழில் வாழ்க்கையின் துவக்க காலங்களிலேயே நான் கண்ட கலாமின் நம்ப முடியாத எளிமை,பற்றிச் சொல்ல ஒரு வாய்ப்பு. ராஷட்டிரபதி பவனில் அவர் இருந்த அறையில் மழை ஒழுகிய போது தூங்காமல் தவித்த கலாம், ஊழியர்களின் வீடுகள் எந்த நிலையில் இருக்கிறதோ என்று பட்ட கவலை ( நன்றி: சுதாங்கனின் கலாம் காலங்கள் புத்தகம்) பற்றிச் சொன்ன போது நெறியாளர் வெங்கட் கேட்டது ஒழுகும் அரசாங்க கட்டிடங்களுக்கு ராஷ்டிரபதி பவனும் விலக்கில்லையா?வினாடி நேரத்தில் அரசியலாகியிருக்ககூடிய ஒரு விஷயம் கலந்துரையாடலில் வந்தபோது அதை மிக சாமர்த்தியமாக கையாண்ட சட்ட மன்ற உறுப்பினர் மாஃபா பாண்டியன், நிகழ்ச்சி முழுவதும் கலாம் நல்ல குழந்தைகளை உருவாக்க ஆசிரியர்களின் கடமைகள் பற்றி கலாம் சொன்னதை நினைவூட்டிக் கொண்டிருந்த "தோழமை" அமைப்பின் தேவநேயன் ஆகியோருடன் பங்கேற்றது மகிழ்வாகவும் நிறைவாகவும் இருந்ததுநன்றி வெங்கட்.

அந்த வீடியோவை இங்கே  கிளிக் செய்தால் பார்க்கலாம்




    • 2 shares
    • கூத்தப்பாடி மா கோவிந்தசாமிபார்த்தேன்.ஒருசாதாரணமனிதனின்மனிதநேயபண்புகளைவெளிப்படுத்தினீர்கள்.நன்றி
    • Jeeva Kumaran NICE SHARING
    • Saidai Nithyanandam பார்த்தேன் சார்
    • Akilan Kannan நான் அண்மையில் கண்ட ஒரு சிறந்த ' மக்கள்மேடை ' நிகழ்வு இது . பங்கேற்ற விருந்தினரும் இளந்தளிர்களும் கூர்ந்த அறிவுடன் சொல் நேர்த்தியுடன் தம் கருத்துக்களைப் பதிந்தனர் . ஒருங்கிணைப்பாளரும் சிறப்பாக நெறிப்படுத்தினார் . கலாம் சிந்தனைகளை - பகிர்ந்து - ஏன், விமர்சனம் செய்தும் கூட அலசி , தெளிந்து அடுத்த தலைமுறைக்குக் கொண்டுசெல்லவேண்டிய பணி ஊடகங்களுக்கும் அறிவுஜீவிகளுக்கும் , படைப்பாளர்களுக்கும் உண்டு . வெங்கட்டின் நயமான தொகுப்புத் திறன் எம் .எஸ்.வி. மறைவின் போது நேரலையில் கண்டு வியந்தேன் - மகிழ்ந்தேன் ! நேற்று நீங்கள் , நண்பர் பாண்டியராஜன் , தேவ நேயன் அனைவருமே சிறப்பாகப் பதிவு செய்தீர்கள் ; ஆனால் , கலாம் கண்ட கனவு நனவாகும் சாத்தியம் தொலைவில் இல்லை என்பது அந்தப் பிஞ்சு நெஞ்சங்களின் வாயிலிருந்து வந்த கருத்துக்கள் மெய்ப்பித்தன! இதுவே , சிறந்த அஞ்சலி நிகழ்ச்சி ! உங்களனைவருக்கும் , பு.த குழுவிற்கும் வாழ்த்துக்கள் !
    • Indu Sankar Program neril parkka mudiyalaye enru enga vaithadhu
      Like · Reply · 4 hrs
      • Ramanan Vsv இது புதிய தலைமுறை டிவியில் 29/07/15 வந்த நிகழ்ச்சி . இந்த யூ டுயூப் லிங்க்கைக் கிளிக்கினால் பார்க்கலாம்.
        https://youtu.be/9ftEJHZgfAA...
        Like · 3 hrs · Edited
      • Indu Sankar Thank you so much
        Like · 3 hrs
      • Ramanan Vsv

        Write a reply...

Pitchumani Sudhangan நேற்று உங்கள் புதிய தலைமுறை நிகழ்ச்சி அபாரம்! அதை விட அந்த குழந்தைகள் பேசியபோது உங்கள் முகத்தில் தெரிந்து அந்த உற்சாகம்! இன்னொரு கலாம் இன் தி மேக்கிங்!







26/7/15

கடைசிக் கோடு நீண்டுகொண்டிருக்கிறது



திரு மு.பசுலுதீன் தமிழ்நாடு நில அளவைத்துறை அலுவலர்கள் சங்கத்தின் மாநில தலைவர். நீண்ட போராட்டங்களுக்குப்பின் . 14000 பேருக்கு அத்துறையில் பணி நிரந்தரம் பெற்றுத்தந்த ஒரு தொழிற்சங்க போராளி. 20 ஆண்டுகளுக்கு மேல் தொடர்ந்து தலைவர் பதவியிலிருந்தவர். 
கடந்த மாதம் பணிநிறைவு பெற்ற அவருக்கு அவரது சங்கம் அவரது சொந்த மண்ணான மணப்பாறையில் ஒரு விழா எடுத்தது. விழாவிற்கு இவருக்கு வாழ்த்துரை வழங்குவதற்காக துரையின் இயக்குநர்,துணை இயக்குநர் என மூத்த அதிகாரிகளின் பட்டாளமே வந்திருந்தது. சங்கத்தின் பல மாவட்ட தலைவர்கள் தங்கள் பரிவாரங்களுடன் . . வலிமை மிக்க தமிழ் நாடு அரசு ஊழியர் சங்க தலைவர் திரு சண்முக ராசன் விழாவிற்கு தலமை ஏற்றார். இத்தகைய கெளரவம் பணிநிறை செய்த எல்லோருக்கும், எல்லாத் தொழிற்சங்க தலைவர்களுக்கும் கிடைப்பதில்லை.

இந்தியாவின் வரைபடம் பிறந்த கதையைச்சொல்லும் புத்தகம் என்னுடைய ’கடைசிக் கோடு’. இது முழுக்க முழுக்க நமது நாட்டின் பல பகுதிகளின் நிலங்களை அளக்க போராட்டங்கள் நிறைந்த ஒரு நில அளவையாளரின் 40 ஆண்டு பயணத்தையும்,. அவரைத்தொடர்ந்த நில அளவையாளர்கள் அந்தப் பணியை முடித்ததையும்,அதன் இறுதியில் எவரஸ்ட் சிகரம் தான் உலகில் உயர்ந்தது என்பது கண்டுபிடிக்க பட்டதை விவரிக்கும் கதை. புதிய தலைமுறையில் தொடராக வந்தது. புத்தகமாகவும் வெளியாகியிருக்கிறது.
தமிழ்நாடு நில அளவைத்துறை சங்கத்தினர் ஒரு நில அளவையாளரின் கதையான இந்தப் புத்தகத்தின் ஒரு சிறப்பு பதிப்பை அவர்கள் தலைவர் பணிநிறைவு விழாவில் விழாவில் வெளியிட விரும்பி என்னை அணுகினார்கள். இம்மாதிரி விழாக்களில் புகழார மலரும் தலைவரின் வாழ்க்கை கதை போன்றவற்றை வெளியிடும் பலரிடையே ஒரு புத்தகத்தை சிறப்பு பதிப்பாக கொண்டுவருவது ஒரு மாறுதலான ஆச்சரியம்.
மகிழ்ச்சியுடன் சம்மதித்தேன். புத்தகத்தின் பதிப்பாளர் (கவிதாபதிப்பகம்) சொக்கலிங்கம் மிக குறைந்த அவகாசத்தில் (4 நாட்கள்) சங்கத்தினர் விரும்பியபடியே ஒரு சிறப்பு பதிப்பை உருவாக்கித் தந்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். 
விழாவில் திரு சிலம்பொலி செல்லப்பன் புத்தகத்தை வெளியிட அதை நில அளவை துறை இயக்குநர் இரா வாசுகி IAS பெற்றுக்கொண்டார். ”இந்த நூல் நில அளவைத்துறைக்கு கிடைத்ததொரு வரப்பிரசாதமாகக் கருதுகிறேன். ஒவ்வொரு நில அளவையாளர்களும் அவசியம் படிக்கவேண்டிய புத்தகம்” என பராட்டினார். சிலம்பொலியாருக்கு என் எழுத்துப்பணிகள் பற்றித் தெரியும். அவர் அது குறித்தும் புத்தகத்தின் பல பக்கங்களைக் குறிப்பிட்டும் நீண்ட நேரம் பேசினார்
.
ஒரு எழுத்தாளானின் வாழ்வில் அவனுடைய எழுத்து சம்பந்தபட்டவர்களை அடைவதும் அதனை அவர்கள் பாராட்டி வரவேற்பதும் மிக மகிழ்ச்சியான தருணம். அன்று அது நிகழ்ந்தது
. 
தமிழில் அறிவியல் நிகழ்வுகள் சார்ந்த படைப்புகள் அதிகம் வெளிவருவதில்லை. அப்படி வருவதும் சேரவேண்டியவர்களை சரியான முறையில் சேருவதில்லை என வருந்துவதில் நண்பர் சுப்புவும்(வாசகர் வட்டம்/தமிழ் வளர்த்த சான்றோர்) ஒருவர். 500க்கும் மேற்பட்டவர்கள் பங்கு கொண்ட அந்த விழாவில் 300 நில அளவை பணியாளர்கள் இந்த புத்தகத்தை பணம் கொடுத்து பெற்றுக்கொண்டனர். என்ற செய்தி அவரை சந்தோஷப்படுத்தும்

  • Ramanan Vsv நில அளவையாளர்களுக்காக ஒரு சிறப்பு பதிப்பு
    Like · Reply · 3 · July 23 at 6:08am · Edited
  • Sundaram Narayanswamy M Very happy. Survey dept people are the one who have done their job in a way very much appreciable. I remember, during 1953-54, Govt engaged fresh candidates just from schools to undertake this job.(but on a temporary basis) Few of my friends worked then. I do not know whether they got their post confirmed! Now I hear the good news. It is after nearly 62 years? My best wishes to all and Mr Ramanan.
  • Varman Mahendra Thangalin ezhuthu pani thodarttum . Vazhthukkal
  • Valiyur Subramanian போற்றக் கூடிய எழுத்துப் பணி. பிரபலங்களைத் தவிர பிற பணிகளில் உள்ளவரையும் அவர் ஆற்றிய துறை சார்ந்த பணிச் சிறப்பையும் தங்கள் நூல் மூலம் ஆவணப்படுத்தியுள்ளீர்கள். பாராட்டவேண்டிய செய்தி. வாழ்த்துகள்.
    Like · Reply · 1 · July 23 at 6:27am
  • Vedha Gopalan அருமை அருமை!
    அந்த டைட்டிலுக்கே லடச ரூபாய் தரணூம்!!
    ...See More
  • Vedha Gopalan 300 நில அளவை பணியாளர்கள் இந்த புத்தகத்தை பணம் கொடுத்து பெற்றுக்கொண்டனர்.
    நம்பிக்கையூட்டும் வரி!
  • பன்னீர் செல்வம் ஒரு எழுத்தாளனின் எழுத்துக்கள் மதிக்கப்படும் போது தான் அது மன நிறைவையும் மேலும் எழுத வேண்டும் எனும் ஆர்வத்தையும் வளர்க்கிறது. வாழ்த்துக்கள் Ramanan Vsv
    Like · Reply · 1 · July 23 at 6:31am
  • Elumalai Venaktesan வாழ்த்துக்கள் சார்...அருமையான தருணங்கள்...
  • Skrajendran S Krihsnasamy Naidu ஒரு எழுத்தாளனின் எழுத்துக்கள் மதிக்கப்படும் போது தான் அது மன நிறைவையும் மேலும் எழுத வேண்டும் எனும் ஆர்வத்தையும் வளர்க்கிறது. வாழ்த்துக்கள்
  • Azad Kamil வாழ்த்துக்கள்
  • Moorthy Athiyanan Moorthy Athiyanan புகழார மலர்கள்..... வாழ்த்துக்கள்....
  • Sumitha Ramesh அருமை !! வாழ்த்துகிறோம்.சார் smile emoticon
  • Rajan V Mani புத்தகத்தின் மறுவெளியிடு, வித்தியாசமான பினனணியில்.....வாழ்த்துகள்