18/7/15

உயர்ந்த மனிதர்கள்



சென்னை நந்தம்பாக்கம்டிரெட் செண்டர் அரங்கம். கறுப்பு கவுன் தொப்பிகளுடன்  சந்தோஷ பூக்களாக மலர்ந்திருக்கும்   மாணவர்களின் சிரிப்பும் மகிழ்ச்சி குரல்களும்  செல்பி குழுக்களும்  நிறைந்திருக்கும் அந்த வளாகத்தில் பரவசத்துடன் பெற்றோர்கள் . பேராசிரியர் பாலாவை சந்திக்க விஐபி அறையில் காத்திருக்கிறேன். 
கிரேட் லேக்ஸ் இன்ஸ்டியூட் ஆப் மேனேஜ்மெண்ட்டின் தலைவர் திரு பாலா பாலச்சந்தரின் வாழ்க்கை கதையைதொடராக நான்  எழுதியது. புத்தகமாக வந்திருக்கிறது (கவிதா பதிப்பு) அதன் ஆங்கில பதிப்பு இந்த ஆண்டு துவக்கத்தில் மும்பையில் வெளியிடப்பட்டது. திரு ரத்தன் டாட்டா வெளியிடுவதாக இருந்த அந்த நிகழ்ச்சியில் இறுதி நேரத்தில் அவரால் உடல் நல குறைவினால் பங்கேற்கமுடியவில்லை. புத்தகத்தை மற்றொரு விருந்தினரான ஆதி காத்ரஜ் வெளியிட்டார்.

நேற்று (15/07/16) திரு ரத்தன் டாட்டா கிரேட் லேக்ஸின் பட்டமளிப்பு விழாவிற்காக சென்னை வந்திருந்தார். திரு பாலா பாலசந்திரன் என்னை விழாவிற்கு அழைத்து அவரிடம் நூலின் ஆசிரியர் என அறிமுகப்படுத்தினார்
மும்பையில் நீங்கள் வெளியிட்டிருக்க வேண்டிய புத்தகத்தின் ஆசிரியர் என அறிமுகப் படுத்தினார் பாலா.
கைகுலுக்கியபின் திரு ரத்தன் டாட்டாவிற்கு புத்தகத்தின் பிரதியை கொடுத்தேன். திறந்த பார்த்த அவர்
 ”கையெழுத்திட்டுகொடுங்கள்”: என்றார். 
ஆச்சரியம்,சந்தோஷம், பெருமிதம் எல்லாம் ஒருசேரத் தாக்க சிலகணங்கள் உறைந்து போனேன். இந்தியா தொழில் சாம்ராஜ்யத்தின் சக்கரவர்த்தி எனது புத்தகத்தை கையெழுத்துடன் கேட்கிறார். (சொக்கா இது நிஜம்டா) 
கையெழுத்திட்டு புத்தகத்தை கொடுத்த பின் மற்றொரு பிரதியில் அவரது ஆட்டோகிராப் தந்தால் மகிழ்ச்சி அடைவேன் என்றேன். 
உடனே உட்கார்ந்து என் பெயரை நிதானமாக எழுதி(இடது கை பழக்கமுள்ளவர்) வாழ்த்துகளுடன் என்று கையெழுத்திட்டுகொடுத்தார்.
ஒரு எழுத்தாளனை கௌரவித்த . இந்தப் பெரிய மனிதருக்கும் என்றென்றும் என் நினைவில் நிலைக்கபோகும் இந்த மகிழ்வான தருணத்தை எனக்குத் தந்த, பேராசியர் திருபாலா அவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி
இந்த உயர்ந்த மனிதர் அன்றைய பட்டமளிப்பு விழாவில் வழக்கமாக நிகழம்” அறிவுரைகளை வழங்கவில்லை. மாறுதலாக மாணவர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார்.
மனதைத்தொட்ட அந்த எளிமையான, நேர்மையான உரையாடல் பற்றி விரைவில் எழுதுகிறேன்.