21/8/18

இது இறைவனின் செயல்



பெயரைக் கேட்டவுடனேயே புண்ணிய, புனித பூமி ஒரு முறையேனும் போய்ப்பார்க்க வேண்டும் என்று  இதுவரை பார்க்காதவர்களுக்கும்,  மீண்டும் செல்ல வேண்டும் என்ற எண்ணத்தை பார்த்தவர்களுக்கும்  எழுப்பும் மந்திரச்சொல் காசி.   காசி என்ற சொல்லுக்கு பிரகாசமானது என்று பொருள். வாரணாசி என்பது அறிவிக்கப்பட்ட பெயராகயிருந்தாலும் உலகம் முழுவதும் இந்த நகரம் அறியப்பட்டிருப்பது காசியாகத்தான்.
வேதங்கள் பிறந்த இடமாக நம்பப்படும்  காசி நகரம் நூற்றுக்கணக்கான சக்திவாய்ந்த கோயில்களால் சூழப்பட்டு ஒரு சக்தி வளையமாகத் திகழ்கிறது இந்தக் கோவில்களின் நடுவில் இருப்பது காசி விசுவநாதர் கோவில். மிகப் பழமையான கோயில் பலமுறை படையெடுப்புகளால் தகர்க்கப்பட்டிருக்கிறது. மூன்று முறை முழுவதுமாக இடிக்கப்பட்டு மீண்டும் எழுந்தது இந்தக்கோவில் என்கிறது வரலாறு... .
1779-ம் வருடம், இந்தூர் மகாராணி அகல்யா பாய் ஹோல்கர் இப்போது இருக்கும் காசி விஸ்வநாதர் கோயிலை எழுப்பினார். மகாராணி கட்டிக்கொடுத்த கோவில் பனாரஸை ஆண்ட மன்னர்களின் கட்டுப்பாட்டிலிருந்தது. அவ்வப்போது சிறு மராமத்து பணிகள் நடந்ததே தவிர இந்தக் கோவிலில் கும்பாபிஷேகம் எதுவும் நடைபெற்றதில்லை.

239 வருடங்களுக்குப் பின்னர் , இப்போதுதான் கடந்த ஜூலை மாதம் 5-ம் தேதி காசி விஸ்வநாதர் கோயில் கும்பாபிஷேகம் முதல் முறையாக நடைபெற்றது என்பதை விட ஆச்சரியமான செய்தி அதைச்செய்திருப்பவர் ஒரு தமிழர். காரைக்குடியருகிலிருக்கும் வலையபட்டியைச் சேர்ந்த திரு சுப்பு சுந்தரம்.   மிகக் குறுகிய காலத்தில் திட்டமிட்டபடி பலர் வியக்கும் வண்ணம் அதைச் செய்து முடித்திருக்கிறார்.அவர் சென்னையிலிருக்கும் ஒரு ஏற்றுமதி- இறக்குமதி நிறுவன அதிபர்.  பல நகரத்தார் கோவில்களின் ஆன்மீக பணிகளில் பங்குகொண்டவர். .

இவர்  காசி விஸ்வநாதர் கோவிலுக்கு அடிக்கடி செல்லும் பக்தர்களில் ஒருவர் இல்லை. காசி நகரில்  பிஸினஸ் எதுவுமில்லை.  பின் ஏன் இவர் இதைச் செய்தார்.?  என்ற நம் கேள்விக்கு ஒரு வார்த்தையில் “தெய்வச்செயல்” என்கிறார்.
“நான் வேறு சில பணிகளுக்காகக் காசி சென்றிருந்தபோது.  காசி விஸ்வநாதர் கோவிலுக்கு அருகிலிருக்கும் அன்னபூரணி கோவிலுக்குச் சென்றிருந்தேன். அது ஆந்திரமக்களால் நிறுவப்பட்டு  மிகவும் பிரபலமாகயிருக்கும் ஒரு கோவில். அந்தக் கோவில் நிர்வாகத்தினர் அதற்கு  3  வெள்ளி கதவுகள்  அமைக்க விரும்பி உதவி கேட்டு என்னை அணுகினர். . நான் சம்மதித்திருந்தேன். ஆனால் கடந்த தீபாவளி சமயத்தில் நான் காசி சென்றபோது   அந்தக் கோவில் நிர்வாகத்தினர் ஒரு உள்ளூர் குடும்பம் அதைச் செய்ய ஏற்றுகொண்டுவிட்டதாகச்,சொல்லி  என் உதவியை வேண்டாம் என்று சொல்லி விட்டார்கள். இது எனக்கு மிகுந்த வருத்தத்தை அளித்தது. கோவில் கையங்கரியத்துக்கு உதவச் சம்மதித்தும் ஏற்க படவில்லையே என்ற எண்ணத்துடன் அருகிலிருக்குக் காசி விஸ்வநாதர் கோவிலில் பிரார்த்தனை செய்து விட்டு பிரஹாரத்தில் சுற்றி வந்து கொண்டிருந்தேன்.
  அந்தச் சமயம் ஒருவர் என்னை அணுகி இந்தக் கோவிலின் ஒரு முக்கிய பணியை  நீங்கள் செய்து கொடுக்க முடியுமா? என்றார்.  முன் பின் தெரியாத அந்த நபர், இன்னும் சொல்லப்போனால் ஏதோ பண உதவி கேட்கப்போகிறவர் என நினைத்து  ஒதுக்கியவரின் இந்த வார்த்தைகள் எனக்கு அதிர்ச்சியாகயிருந்தது.. வாருங்கள் என்று கோவிலின் அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றார். அவர் அந்தக் கோவிலின் நிர்வாக அதிகாரி அரசால் நியமிக்கப்பட்ட IAS அதிகாரி என்பது அங்குப் போய் சில நிமிடங்களில் புரிந்தது.. என்ன பணி செய்ய வேண்டும் என்று கூட கேட்காமல் என் உள்மனம் கட்டளையிட்டபடி செய்து கொடுக்கிறேன் என்றேன். எதையும் யோசித்து நிதானமாகப் பேசும் நான்   எப்படி அந்த வார்த்தைகளைச் சொன்னேன் என்பது இன்று  வரை புரியாத ஆச்சரியமான புதிர். 
அவர் கேட்டவிஷயம்  என்னைச் சிலிர்க்க வைத்தது. காசி விஸ்வநாதர் சன்னதி என்பது நான்கு புறமும்  வாயில் கொண்ட ஒரு அறை.. அதன் நடுவில் தரையில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருப்பது தான் மூலவர்.. அதற்குத் தான் தினசரி   அபிஷகம், பூஜைகள் எல்லாம். அந்த மண்டபத்தின் மூன்று நுழை வாயில்கள்  வெள்ளி கவசமிட்டவை. வடக்கு புறமிருக்கும் வாசலை வெள்ளிக்கவசமிட்டுக் கொடுக்க முடியுமா? என்பது தான் அவர் கேள்வி
.எங்கோ தமிழ் நாட்டிலிருந்து வந்த என்னை, அதுவும் நான் யார் என்று தெரியாத நிலையில் ஏன் இப்படியொரு கேள்வியைக்கேட்டார்? என்பதையெல்லாம் சிந்திக்காமல் சரி முயற்சிக்கிறேன் என்றேன். வரும் சிவராத்திரிக்குள் முடிக்க வேண்டும் என்றார். அவர், 
மற்ற மூன்று வாசல்களும் 1841ல் போன்ஸ்லே குடும்பத்தினர்  அமைத்துக்கொடுத்திருக்கின்றனர். . இத்தனை நாளும் இந்த வாசலுக்கு கவசமிடவேண்டும் என்று எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை.  எனக்குத்தான் அந்த வாய்ப்பைக் காசி விஸ்வநாதர்  தருகிறார் என்று எண்ணினேன்.  காரைக்குடியிலிருந்து நமது வெள்ளி ஆசாரிகளை அழைத்துப் போய் அளவுகள் எடுத்தோம்.  முதலில் எளிதாக முடித்துவிடலாம்  என்று சொன்ன ஆசாரிகள் வேலைத்தொடங்கியவுடன்  அதன் கஷ்டத்தை உணர்ந்தனர். ஒவ்வொரு சதுர அங்குலமும் சலவைக்கல்லில் செய்யப்பட்ட பூ வேலைகளுடன் கூடிய அந்த வாயிலுக்கு வெள்ளிக்கவசமிடுவது அத்தனை சுலபமாகயிருக்கவில்லை. இரவு பகல் எப்போதும் அந்தப்பணியைச் செய்ய  அந்த கர்ப்பகஅறையின் இரண்டு வாசல்களை இணைத்து  மறைத்து  வசதி செய்து கொடுத்தனர். பணி முடியும் வரை வரை நான் அவர்களுடன் அந்த கர்ப்பகிரகத்தில் விஸ்வநாதர் அருகிலேயே அமர்ந்திருந்திருந்தேன். விஐபிகளுக்கு கூட  அதிக பட்சம் 20 நிமிடங்கள்  ஒதுக்கப்படும் அந்த சன்னதியில்  இரவு பகலாக. இருக்கும் பாக்கியம் நான் பெற்றேன்.   தெய்வ அருளால் சிவ ராத்திரிக்குள் அந்தப் பணி முடிந்தது. 
இந்தப் பணியில்  மிகுந்த ஈடுபாட்டுடன் நேரடியாக நானே கவனித்துச்செய்து  கொண்டிருந்த கவனித்த கோவில் பண்டாக்களும் அதிகாரிகளும் மற்றவர்களும் மிகவும் நெருக்கமானார்கள். அன்புடன் பழகினார்கள். பணிமுடிந்தபின்னர் ஒரு நாள் பேசிக்கொண்டிருந்த போது உலகப்புகழ் பெற்ற இந்த கோவிலில் சுத்தம் சரியாக பேணப்படவில்லை.அடிப்படை வசதியான குடிநீர் கூட இல்லை. இதற்கு நீங்கள் ஆவன செய்ய வேண்டும் என்றேன்.  நமது மீனாட்சியம்மன், ஶ்ரீரங்கம் கோவில்களை எப்படி பாரமரிக்கிறோம் என்று சொன்னேன். படங்களைக் காட்டினேன்.  ஆச்சரியபட்டுபோனவர்கள் இதை இங்கு உங்களால் செய்ய முடியுமா? என்றார். 
ஒரு கோவில் என்பது தொடர்ந்து நல்ல நிலையில் பராமரிக்கப் பட வேண்டும். ஒரு முறை செய்துவிட்டு ஆண்டுக்கணக்கில் கவனிக்காமல் விட்டுவிடக்கூடாது என்பதற்காகத் தான்  தமிழகத்தில் கோவில்கள் கும்பாபிஷகம் செய்யப்படுகிறது என்றேன். அது என்ன? என்றுகேட்டவர்களுக்கு நமது கும்பாபிஷகம் பற்றி விளக்கிச்சொன்னேன்.  காசிக்கோவிலுக்கும் அதைச்செய்ய ஆர்வம்  காட்டிய அவர்கள் அரசிடமும் அவர்களது நிர்வாகக் குழுவிடமும் ஒப்புதல் பெற இப்படிச் செய்ய வேண்டிய முறைகள் பற்றிய ஆவணங்கள்  இருக்கிறதா? என்று கேட்டார்கள். பிள்ளையார் பட்டி தலைமை சிவாச்சாரியார் சிவ ஶ்ரீ பிச்சை குருக்கள் சிவன் கோவிலில் எத்தனை வகை எந்த மாதிரி கோவில்களுக்கு எந்த முறையில் கும்பாபிஷேகம் செய்ய வேண்டும் என்ற விபரங்கள் கோவில் ஆகம விதிகளில் சொல்லப்பட்டிருப்பதையும் அது பல நூற்றாண்டுகளாகத் தமிழக கோவில்களில் பின்பற்றபட்டுவருவதையும் ஒரு ஆவணமாக்கிக்கொடுத்தார். அதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து அனுப்பிவைத்தேன்.
சில நாட்களில் காசி விஸ்வநாதஎ கோவில் தமிழக தொழிலதிபர் சங்கர சுப்புவால் தமிழகக்கோவில்கள் முறைப்படி  கும்பாபிஷேகம் செய்யப்படவிருக்கிறது என்ற செய்தி உள்ளூர் தினசரிகளில் வந்திருப்பதாக நண்பர் போன் செய்தார். “மறுநாளே அரசிடமிருந்து  கும்பாபிஷகப் பணிகளைச்  செய்யும் பொறுப்பை  எனக்கு வழங்கி  கடிதம் வந்தது.  எல்லாமே கனவைப்போல இருந்தது எனக்கு” என்கிறார்.  பலமுறை காசி காரைக்குடி சென்னை என்ற தொடர்ந்த முக்கோணப் பயணங்களின் போது இந்தப் பணிக்கு   அவசியமானவற்றை சென்னையிலிருந்து  செய்தவர் இவரது மனைவி  திருமதி அன்னபூரணி. 
ஒரு வட நாட்டுக் கோவிலில் அதுவும் காசி போன்ற பண்டாக்கள் ஆதிக்கம் செலுத்தும் கோவிலில் அவர்களுக்குப் புதிதாக இருக்கும் விஷயங்களை எப்படி இவர் அவர்களை ஏற்க வைத்திருக்கிறார்  என்பதை அறிய ஆச்சரியமாகயிருக்கிறது.  கும்பாபிஷேகத்துக்காகத்  தமிழகத்திலிருந்து 50க்கு மேற்பட்ட சிவாச்சாரியார்களை  அழைத்துப்போயிருந்தாலும் 10 ஹோம குண்டங்களுடன்  யாகசாலை அமைப்பதிலிருந்து  முதல் குடமுழுக்கு தீர்த்தம் விடுவது வரை அனைத்துப் பணிகளிலும் அவர்களை முன்னிலைப்படுத்தியிருக்கிறார்.   கும்பாபிஷேகத்திற்காக யாக சாலையில் பூஜிக்க கங்கையிலிருந்து  கலசங்களில் நீர் கொண்டுவருவதிலிருந்து ஹோமங்களில் முதல் அக்னியிடுவது வரை  காசி கோவில் பண்டாக்கள் தான் துவக்கியிருக்கிறார்கள். பின்  நம்மவர்கள் தொடர்ந்திருக்கிறார்கள். இந்தச்செயல்கள்  அவர்களுக்கு நமது கோவிலுக்குத்தான்  நம் மூலமே இவர்கள் செய்கிறார்கள் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது. ஒத்துழைத்திருக்கிறார்கள்..
இவர்களைபோலவே அந்தக் கோவிலின் நேர்மையான அதிகாரி ,விஷால் சிங்  மற்றும்  மாநில அளவில் கோவில்களின் தலமைப்பொறுப்பிலிருந்த கமிஷனர் தீபக் அகர்வாலும்  செய்த உதவிகளும் அளித்த ஆதரவும் மறக்க முடியாத ஒன்று என்கிறார் இவர் 
யாக சாலை அமைப்பு,  ஹோம குண்டங்கள், தினசரி  பூஜைகள் எல்லாம்  உள்ளூர் மக்களின் ஆர்வத்தை மேலும்  அதிகமாக்கி    பணிகளை எளிதாக்கியிருக்கிறது.. மாயவரத்திலிருந்து யாக சாலை அமைக்க வந்தவர்கள் கேட்ட பெரிய இடத்தைக் கோவிலுக்குள் ஒதுக்க முடியவில்லை.   கோவில் வாயில் எதிரே பல ஆண்டுகளாகக் கொட்டி கிடந்த மண்ணும் குப்பையும் ஒரே இரவில் எடுக்கப்பட்டு  சுத்தம் செய்யப்பட்ட இடத்தில் யாகசாலை அமைக்கப்பட்டது.  இது  இந்தப்பணியில் உள்ளூர் நிர்வாகத்தின் ஆர்வத்துக்குச் சாட்சி.  மேலும்   அந்த இடத்தில் அழகாக நிமாணிக்க பட்ட யாகசாலை குண்டங்கள் அப்படியே இருக்க வேண்டும் எனப் பக்தர்கள் விரும்பியதால் அந்த இடத்தில் அது இன்னும் தொடர்கிறது. கோவிலுக்கு வரும் பக்கதர்கள் அதையும்  வணங்குகிறார்கள் கலச தீர்த்தம் கங்கையிலிருந்து  தமிழ் நாட்டுமேளதாளங்களுடன்  கொண்டு வரப்பட்டபோது மலர் தூவி மக்கள் வரவேற்றிருக்கிறார்கள்.. 
பிரச்சனைகள் எழாமல் இல்லை.  காசி விஸ்வநாதர் கோவிலின் பாதுகாப்பு  துணை ராணுவத்தினர் வசம் இருக்கிறது. கோவிலின் கோபுரம் முழுவதும் ஒரு டன்  தங்கத்தாலானது என்பதால் மட்டுமில்லை மிக அருகிலேயே மசூதியும் இருப்பதால் செக்யூரிட்டி கெடுபிடிகள் எப்போதுமே அதிகம். கும்பாபிஷகத்துக்காக எல்லா ஏற்பாடுகளும் நடந்து கொண்டிருந்த  போது கோபுரகலசத்துக்கு  அருகில் செல்ல படிகள் அமைக்க சாரங்கள் அமைக்க  முயன்ற போது அனுமதி.  மறுக்கப்பட்டிருக்கிறது. மேலே போய் ஏன் தண்ணீர் விடவேண்டும்? கிழேயிருந்து  ஒரு ஹோஸ் பைப்மூலம் பீச்சலாமே என்ற யோசனை வேறு.. சொல்லியிருக்கிறாகள் பாதுகாப்பு அதிகாரிகள். கலங்கிப்போனார் சுப்பு சுந்தரம்.. அதிகாரியிடம் விவாதம்   செய்து காரியம் கெட்டுவிடாமல் அவரிடம் மென்மையாக எடுத்துச் சொல்லியிருக்கிறார். நீண்ட உரையாடலுக்குப்  பின்னர் அனுமதிக்கப்பட்டது.
 ஆனால் விதிக்கப்பட்ட நிபந்தனை  சாரத்தின் எந்தக் கம்பமும் கோபுரத்தின் மீது படக்கூடாது.  அந்த அளவு நேர்த்தியாக சாரம் கட்டுபவரை இந்தக் காசியில் எப்படித் தேடிக்கண்டுபிடிப்பது? என்ற குழம்பிய நிலையில் இருந்தவரிடம் வந்து பேசிய ஒருவர்  “கவலை வேண்டாம்  பாதுகாப்பு அதிகாரிகள் சொல்லுவது போல் நான் செய்துகொடுக்கிறேன்” என்ற சொன்ன போது அது காசி விஸ்வநாதரின் வார்த்தைகளாகத்தான் என் காதில் கேட்டது. என்கிறார் சுப்பு சுந்தரம்.   பின்னால் கோவில் அதிகாரிகள் மூலம் அறிந்த செய்தி அவர் நகரத்தின் மிகப்பெரிய காண்டிராக்டர் தற்செயலாகக் கோவிலுக்கு வந்தவர் பாதுகாப்பு அதிகாரியின் உடையாடலைக் கேட்டு உதவமுன் வந்தவர் என்பது. இரண்டே நாளில் மிக அழகாகக் கோபுரத்தின் எந்தப்பகுதி மீதும் படாமல்,  வசதியாக ஏறிச்செல்ல அகலமான படிகளுடன்  சாரம் அமைக்கபட்டுவிட்டது.
பாதுகாப்பு காரணங்களால் குறிப்பிட்ட சிலருக்கே அனுமதி அளிக்கப்பட்ட அந்த கும்பாபிஷம் முடிந்தவுடன் மக்கள் அன்று இரவு முழுவதும் அனுமதிக்கப்பட்டனர்.  இந்த கும்பாபிஷகத்துக்காக பக்தர்களிடம் நன்கொடை பெறப்படவில்லை. யாகசாலைக்குப் பார்க்கவந்த பத்தர்கள் லட்சகணக்கில்வழங்க முன்வந்த போதும் ஏற்க வில்லை. பெரும் பகுதியை சுப்பு சுந்தரம் ஏற்றிருக்கிறார்.  தமிழக தொழில்நிறுவனங்கள் கேசிபி, முருகப்பா குழுமம் ஈரோடு சிவகுமார் குடும்பத்தினர்   சலவைக்கல் தளமிடுவது,  யாக சாலை அமைப்பு,  சுகாதார வசதிகள் போன்றவகைகளில் உதவியிருக்கிறார்கள்.

காசி விஸ்வநாதர் சன்னதியருகே இருக்கும் அன்னபூரணியின் கோவிலின் நுழை வாயிலிலிருக்கும்  ஒரு கல்வெட்டு  100  ஆண்டுகளுக்கு முன்னர் நகரத்தார் தினசரி அன்னதானம் வழங்க நிறுவிய ஒரு  அறக்கட்டளையின் விபரத்தைசொல்லுகிறது.  அந்த நகரத்தார் பாரம்பரியத்தை இந்த நூற்றாண்டில் தொடரும் வாய்ப்புப் பெற்ற சுப்பு சுந்தரம் தம்பதியினருக்கு நம் வாழ்த்தைச்சொன்னபோது. பணிவுடன்  “இந்தப்பெரிய செயல் எங்களுடையதில்லை ஒவ்வொரு கட்டத்திலும் உதவிசெய்து கருவியான  எங்கள் மூலம் ஈசன் செய்த செயல்தான் இது” என்கிறார்கள்  சுப்பு சுந்தரம், அன்னபூரணி தம்பதியினர்.


9/8/18

தேடல்

தேடல் 

“எமோஷனல் ஆகாமல் அழுவதை நிறுத்திவிட்டுத் தெளிவாகச்சொல்லுங்கள். நீங்கள் சொல்வதை வைத்துத்தான் நாங்கள் உதவ முடியும்”

உதவிப் போலீஸ் கமிஷனர் இந்துமதியின் கம்பீரமான உருவத்துக்கும் விறைப்பான அந்த யூனிபார்முக்கும் சம்பந்தமே இல்லாமலிருந்தது அந்த மென்மையான குரல். அந்தக் குரலில் தெரிந்த கனிவு நம்பிக்கையத்தரத் தன்னைச் சற்று ஆசுவாசப்படுத்திக்கொண்டு பேச ஆரம்பித்தார்  சுமிதா,

“தினமும் போல இன்றைக்கும் டிரைவர் அடையாரிலிருக்கிற ஸ்கூலுக்கு குழந்தையை அழைத்துவரக் காரை எடுத்துக்கொண்டு 2 மணிக்குப் போனார். ஆனால் வழக்கமாகக் குழந்தை வெயிட் பண்ணும் இடத்தில் இல்லாதால் கொஞ்ச நேரம் காத்திருந்து பார்த்திருக்கிறார். வராததால் ஸ்கூல் உள்ளே கிளாஸ் ரூமில் போய்ப் பார்த்திருக்கிறார். அங்கு கிளின் பண்ணிக்கொண்டிருந்த ஆயா எல்லாப்புள்ளைங்களும் அரை மணி முன்னதாகவே போய்விட்டதாகச்சொல்லியிருக்கிறார். அருகில் எங்கும் குழந்தை இல்லாதால் அப்பாவிற்குப் போன் செய்திருக்கிறார். நானும் அப்பாவும் உடனே ஸ்கூலுக்கு பதறி அடித்துக்கொண்டு போனோம். அதற்குள் ஸ்கூலில் எல்லோரும் போய்விட்டார்கள் எச் எம் ஊரில் இல்லை. இருக்கும் இரண்டு டீச்சர்களூம் பதட்டத்தில் இருந்தார்கள். அப்பா எல்லா கிளாஸ் ரூம்களையும் திறந்து பார்க்கச்சொன்னார். நாங்கள் பார்த்துவிட்டோம் என்று சொன்னவர்களிடம் தான் பார்க்கணும் என்று சொல்லிச் சத்தம் போட்டார். குழந்தைய எங்கும்  காணலே.
 “மேடம் எப்படியாவது கண்டுபிடிச்சுக்கொடுங்க மேடம் என்று முடிப்பதற்குள் சுமிதாவிற்கு அழகை பீரீட்டது
.“கவலைப்படாதீர்கள் சுமிதா வீ வில் டூ தெ பெஸ்ட்,  ஐ ஆம் ஆல்சோ ஏ மதர்” என்று சொல்லிக்கொண்டே அந்த ஐபிஎஸ் அதிகாரி தன் முன்னிருந்த கம்யூட்டரில் ஏதோ டைப்பண்ணி கொண்டிருந்த படியே
“சார் உங்க பெயர் என்ன சொன்னீங்க?
“கோபாலன்.- மேடம்” என்று சொன்ன அவரின் தலை வழுக்கையால் அகலமாகத் தெரியும் நெற்றியில் ஒற்றைச் சிவப்பு கீற்று நாமம். பளிச்சென்று இருந்த முகத்தில் கவலையின் தீவிரம் தெரிந்தது. 
 “உங்களுக்குத் தொழில் ரீதியாக ஏதாவது போட்டியாளர்கள் பிரச்சனை? எதிரிகள்? யாராவது?” என்று சொல்லிக்கொண்டிருக்கும்போதே “அதெல்லாம் கிடையாது மேடம். நான் என் தொழிலில் மட்டுமில்லை என்னை அறிந்தவர்களுக்கெல்லாம் பிரண்ட்தான்,  40 வருஷமா எழுத்தாளர்களுடைய புத்தகங்களைப் பதிப்பிக்கும் கம்பெனி என்னுடையது. பிஸினஸில் எந்தப் பிரச்சனையும் கிடையாது”
உங்க டிரைவர் எப்படி?
“ரொம்ப நல்லவன் எங்களிடம் எழு வருடமாக இருக்கிறார். இந்தக் குழந்தையிடம் தனிப்பாசம்”
“குழந்தையை யாராவது கடத்தியிருப்பாங்களா மேடம்?”
என்று பதறிய சுமிதாவிடம். “ரூல் அவுட் பண்ண எல்லா ஆங்கிளிலும் தான் பார்க்க வேண்டும்... ம்ம் பார்க்கலாம் அமைதியாக இருங்கள்” என்ற உதவிக்கமிஷனர் இன்ட்ர்காமில் யாரையோ அழைத்தார்.
வினாடிகளில் உள்ளே நழைந்த அந்த யூனிபாரம் அணியாத அதிகாரி எஸ் மேடம் என சல்யூட் செய்தார்
“ஶ்ரீதர் இவங்களோடு போய் வீட்டில் இருங்க. செல்போன்,லேன்ட் லைன் எல்லாவற்றையும் டிராக்கிங்லே போடுங்க, அப்டேட் கொடுங்க  என் பெர்சன்ல் லயனுக்கு வாங்க. வயர்லெஸ் வேண்டாம்
.
“நீங்க வீட்டில் போய் இருங்க இவர் கூட இருப்பார் அவர் சொல்லுவதை கவனமாக ஃபலோபண்ணுங்க. யாரிடமும் எதுவும் பேச வேண்டாம் மீடியாக்காரங்க கிட்ட எதுவும் பேசாசாதீங்க.. ஸ்கூலிருந்து எதாவது சொன்னா எங்கிட்ட அவங்களை பேசச்சொல்லுங்கள்”. எனப் பட படவெனக் கட்டளை மாதிரி சொல்லிக்கொண்டே போனார். உதவிக் கமிஷனர் இந்துமதி.
“உங்கள் டிரைவர் வந்திருக்கிறாரா? அவர் இங்கேயே இருக்கட்டும். நீங்கள் வீட்டில் இருங்கள் எதாவது போன் வந்தால் என்ன செய்ய வேண்டும் என்று ஶ்ரீதர் சொல்லுவார்”.
குழந்தைபேர் என்ன சொன்னீங்க? ம்ம்.. பிரியா இல்லே 5 வயசு. ஒ.கே அவங்க படம் இருக்கா? சுமிதா உடனே தன் செல்போனிலிருந்த கடந்த வாரம் ஸ்கூல் பங்ஷன் டான்ஸில் எடுத்த படத்தைக் காட்டினார்.” இது வேண்டாம் நார்மல் படம் முகம் தெளிவாக இருக்கும் படம் கொடுங்க”
பரவென்று போனில் தேடி ஒரு படத்தைக்காட்டியவுடன். ஓகே இதை எனக்குப் போனில் அனுப்புங்க என்ற சொல்லிவிட்டு அலறிக்கொண்டிருந்த வயர்லெஸ் போனை எடுத்துப் பேச ஆரம்பித்தார்.
தாங்கள் கிளம்ப வேண்டும் என்பதை உணர்ந்த அப்பாவும் பெண்ணும் எழுந்தனர்
“மேடம் எப்படியாவது...” என்று மறுபடியும் அழத்துத்வங்கிய சுமிதாவைப்பார்த்தவுடன், வயர்லெஸ்போனில் “ஜஸ்ட் மினிட்” என்று சொல்லிவிட்டு அவர் தோளைத்தட்டி “அண்டர்ஸ்டான்ட். வீ ஹவ் டு வெயிட்.. பீ போல்ட் அன்ட் கோஆப்ரேட்”, என்று சொன்னார் இந்துமதி.
“மேடம் ஒரு விஷயம் இங்கே வர முன்னாடி கிளாஸ் மதர்ஸ் வாட்ஸ் குருப்பில் பிரியா வீட்டுக்கு வரவில்லை என்று போட்டிருக்கிறேன்.”
ஓ குட். அவர்கள் யாரவது மெஸெஜ் அனுப்பினா பாருங்க. ஆனா போனில் பேச வேண்டாம்
அவர்கள் வெளியேபோனதும். உள்ளே நுழைந்த நபரிடம்
“ஷாஜஹான் டிடெட்யல்ஸ் எல்லாம்  கேட்டிங்கிங்க இல்லே?”. என்றார். இந்துமதியிடம் புகார் கொடுக்கவருபவர்கள் பேசுவது பக்கத்து அறையிலிருக்கும் அதிகாரிகளுக்கு ஸ்பீக்கரில் கேட்கும் வசதி செய்யப்பட்டிருக்கிறது.. விஷயங்களை மறுபடி சொல்லும் நேரத்தைத் தவிர்க்கவும், அதேநேரத்தில் விபரங்களைக் கேட்டுக்கொண்டிருக்கும்போதே  அவர்கள் பார்வையில் அதை அலசவும் இந்துமதி செய்திருக்கும் ஏற்பாடு.இது.

“மேடம் இவங்க பெரிய பப்ளிஷர்ஸ் மேடம். ஜெயகாந்தன் போன்ற பெரிய ஆளுங்கள் புத்தகமெல்லாம் போட்டிருக்காங்க. நம்ப பழைய டிஜிபி அம்மா புத்தகங்கள் கூட போட்டிருக்காங்க.பெரிய வசதியானவங்க. இப்ப பக்தி புத்தகம் நிறைய போடறாங்க.

“ஓ அப்படியா? வந்த காரைப்பார்த்தாலே புரியது ஐ அம் சஸ்பெட்டிங் கிட்நாப்பிங் ஃபொர் கெயின்.. உங்க டீமை இறக்குங்க. டிரைவரைத் தரோவா விசாரிங்க. அவன் வழியா யாராவது ஆப்ரேட் பண்ணற பாசிபிளிட்டி இருக்கிற ஆங்கிளையும் பாருங்க.. ஸ்கூல் ஸ்டாப்,, அப்ப ஸ்கூலுக்கு வந்த கார்களின் வேன்களின் டிரைவரைங்க எல்லாரையும் டிரேஸ் பண்ணுங்க கியூக், கியூக்” என்று சொன்னவடனேயே
“யெஸ் மேடம். நீங்க பேசிட்டிருக்கும்போதே டீமை ரெடிபண்ணிட்டேன். குழந்தையின் படத்தைக் கன்ட்ரோலுக்கு அனுப்பிடேறேன். மீடியா உள்ளே நுழையாம லாக் பண்ணிடலாம்” என்றார் ஷா என்று பலரால் அழைக்கப்படும் ஷாஜஹான்.. கிரைம் இன்டலிஜென்ஸில் அவரது 20 ஆண்டு அனுபவம். மிடுக்குடன் பேசியது
.
****
“குழந்தை 3 மணி அளவில் காணாமப்போயிருக்கு, நார்மலா இந்த மாதிரி கேஸ்கள்ல 3 அல்லது 4 மணி நேரம் கழித்துத்தான் அவங்க பேசுவாங்க. இப்ப மணி 6 ஆகுது. எப்ப வேணா கால் வரலாம்.நீங்க இரண்டுபேரும் தெரிந்தவங்க போன் வந்தாலும் கூட எடுக்கக் கூடாது. எதாவது புது நம்பர் வந்தா எனக்குச் சிக்னல் கொடுங்க நான் சொன்னப்புறம் எடுங்க. நிதானமா பேசுங்க. நான் எழுதிக் காண்பிக்கிறமாதிரி பேசுங்க போதும். கன்ட்ரோல் ரிக்கார்ட் பண்ணிக்கொண்டே போன் வரும்  இடத்தை டிரேஸ்பண்ணுவாங்க. அதுக்கான டைம் கிடைக்கிறவரை நீங்க பேசிக்கிட்டே இருக்கணும். புரியிதுங்களா? “
“மேடம் வேண்டாம்- போன் வந்தா நீங்க பேசுங்க சார்”.
என்று சொன்ன ஶ்ரீதரிடம் “கிட்நாப்பாகத்தான் இருக்குமுன்னு முடிவுசெஞ்சுட்டிங்களா?” என்றார் கோபாலன்
இல்லை அந்த ஆங்கிளீலிலும் பார்க்கிறோம். நார்மல் போலீஸ் செர்ச்சும் ஆரம்பிச்சிட்டாங்க
அந்த ஏர்கண்டிஷன் அறையில் மேஜை மீது இருக்கும் இரண்டு செல் போன்களையும் பார்த்தபடியே மூன்று பேரும் உட்கார்ந்திருக்கின்றனர். கோபாலன் சஸ்ரநாமம் சொல்லஆரம்பித்திருந்தார். சுமிதா அழுகையை அடக்கமுடியாமல் தவிக்கிறார். ஶ்ரீதர் தன் போனில் ஏதோ படித்துக்கொண்டிருக்கிறார்.’
***   
“ரகு எங்கேயிருக்கீங்க? எவ்வளவு நேரமா டிரைப் பண்றேன் தெரியுமா? சீக்கிரம் வீட்டுக்கு வாங்க. சம் ஸ்டேரெஞ் திங்கஸ் ஆர் ஹாப்பனிங்” என்று லதா தன் கணவரைப் போனில் அழைத்தார்.
“ஐ ஆம் ஆன் மை வே” வீட்டில் என்ன ஆச்சரியம்?. குழாயில் தண்ணி வந்துவிட்டதா? என்று சிரித்த கணவனிடம். 
“ரகு நோ ஜோக்ஸ் பிளிஸ் பீ சீரியஸ். சீக்கிரம் வாங்க பயமாகயிருக்கு” என்று பதறுகிறார்.     ரகு எப்போதுமே ஜோவியலாகப் பேசும் மனிதர். தினமும் பேஸ்புக்கில் எழுதுபவர். அதை வியாசம் என்று சொல்லுவார்,
“ஓகே.. ஒகே 5 நிமிஷ ட்ரைவில் தான் இருக்கேன். வரேன்”
.
ரகுநாதன் லதா இருவரும் ஆடிட்டர்கள். ரகு மேனேஜ்மென்ட் கன்ஸ்ல்டண்ட் லதா இன்கம் டாக்ஸ் விவகாரங்களில் எக்ஸ்பர்ட். நாள் முழுவதும் பிசி. அண்ணா நகரில் தனி வீடு, ஆளுக்கு ஒரு பெரிய கார் வாங்குமளவுக்கு வருமானம்.
“என்ன விஷயம்? ஏன் மிரண்டமாதிரி இருக்கே? என்று கேட்டபடியே உள்ளே நுழைந்த ரகுநாதன் சோபாவில் தூங்கிக்கொண்டிருந்த அழகான குழந்தையைப் பார்த்து ஹய் இந்தக் குழந்தை யாரு?”

சாயங்காலம் சாந்தி வேலைக்கு வரும்போது “அம்மா நம்ம காரிலே இந்தக் குழந்தை அழுதுகொண்டிருந்தது”ன்னு சொல்லி உள்ளே தூக்கிக்கொண்டுவந்தாள். எனக்கு ஒன்றும் புரியவில்லை, யார் என்ன என்று எதுவும் தெரியல்ல. உள்ளே வந்ததும் “நீங்க அம்மா பிரண்டா? என்று மடியில் உட்கார்ந்து கொண்டுவிட்டது”. ரொம்ப நாள் தெரிந்தமாதிரி ஒட்டிகொண்டுவிட்டது
.
நம்ம வித்தியாவை  20 வருடத்துக்கு முன்னால் குழந்தையாக பார்த்த ஞாபகம் வந்தது. . ஏதாவது சாப்பிடிறியான்னு கேட்டேன் சாக்லேட் காம்பளான் என்றது.  அது நம்மகிட்ட இல்ல.. அதனால் சாந்தியை வாங்கிக் கொண்டு வரச்சொல்லிப் போட்டுக்கொடுத்தேன். மெள்ளக் குடித்துவிட்டு என்னவோ பேசிக்கொண்டேயிருந்தது. இப்பத்தான் தூங்கறது. இன்னும் மழலையே போகல்ல பேசறது புரியவே இல்லை. ஆனா நன்னா பேசுறது. யாருடைய குழந்தையோ?. பேர் ஒரு சமயம் தேவி என்கிறது ஒருசமயம் பிரியா என்கிறது. வேறு எதெல்லாமோ சொல்லுகிறது எனக்குப் புரியவில்லை.
“அதைவிட நான் பயந்து போன விஷயம் மோட்டார் சைக்கிளில் வந்த ஒருத்தன் நம்ப வீட்டு வாசலையே பார்த்துக்கொண்டிருந்தான். நான் கேட்டுக்குப் போனவுடன் போய்விட்டான். கொஞ்ச நேரம் முன்னால் மறுபடியும் வந்தான் நான் ஜன்னல் இடுக்காலே பார்த்தேன் கொஞ்ச நாழியிலே போயிட்டான். அவன் கொண்டுவந்து விட்டிருப்பானோன்னு பயமா இருக்கு”,
என்று ஒரே மூச்சில் சொன்ன லதாவிடம் “கூல். காரிலிருந்து இந்தக் குழந்தையை சாந்தி தூக்கியதை நீ பார்த்தையா?”

“இல்லை அவள் உள்ளே கொண்டுவந்தப்புறம் தான் சொன்னாள். வழக்கம் போல கார் கதவைப் பூட்டாமல் வந்து விட்டேன் போலிருக்கிறது.
“அப்போ அந்த மோட்டார் சைக்கிள் ஆள் இருந்தானா?
“நான் பார்க்கல ரகு”
இது சீரியஸ் மேட்டர் போலீஸ்ல ரிப்போர்ட் பண்ணி குழந்தையை ஹேண்ட் ஒவர் பண்ணனும்.  இந்த ராத்திரி நேரத்தில் லோகல் ஸ்டேஷனில் குழந்தையை விடுவது சேப் இல்லை யாரவது ஹைர் அப்பிடம் பேசிவிட்டு காலைவரை வைத்திருப்பது தான் பெட்டர் என்று சொல்லியபடியே ரகு தன் போன் காண்டாக்ட்டில் ஒரு நம்பரைத் தேட ஆரம்பித்தார்,

சட்டென்று முழித்துக்கொண்ட குழந்தை ரகுவைப்பார்த்து “ஹலோ அங்கிள்” என்றது. சற்றே திடுக்கிட்ட ரகு ஹலோ என்றார். மிகசுவாதீனமாக அவர் மடியில் உட்கார்ந்து கொண்ட அந்தக் குழந்தை அப்பா எப்ப வருவாங்க? என்றது.

சீக்கிரமா என்று சொல்லியபடி அந்தக் குழந்தையிடம் பேசத்துவங்கினார். ரகு. “நீ எந்தக்கிளாஸ்? உஷா மிஸ்தானே உங்க மிஸ்?
“நோ அவங்க ராதிகாவோட மிஸ். எங்க மிஸ் ..” என்று புரிந்துகொள்ள முடியாத ஒரு பெயரை மழலையில் சொல்லியது. இதில் நடுவில் இங்கிலிஷ் வேற.
“வந்ததிலிருந்து நான் கேட்டுப்பார்த்திட்டேன் ஸ்கூல் பேர் டிச்சர் பேர் அப்பா பேர் எதுவும். அது சொல்லறது நமக்குப் புரியல்ல. ஆனா சமத்துக்குழந்தை. புது இடங்கிற பயமே இல்லாமல் பேசுகிறது”. என்றார் லதா
“இன்னும் கொஞ்சம் ட்ரைப்பணலாம். கண்டுபிடிச்சிடலாம். பொறுமையாக இரு”. என்று சொன்ன மேனேஞ்மெண்ட் குருவான ரகுவிற்கு இது ஒரு புதுமாதிரியான சாலென்ஞ்.
.
 ரகு போனில் கூப்பிட்ட போலீஸ் நண்பர் ஒரு அவரசகூட்டத்திலிருப்பதாகவும் முடிந்தவுடன் கூப்பிடுவதாகவும் எஸ்மெஸ் அனுப்பியிருந்தார். நகருக்கு நாளைப் பிரதமர் வரப்போவதும் அதற்கான செக்யூரிட்டிகளுக்கு நண்பர் தான் பொறுப்பு என்பதும் அப்போது தான் ரகுவிற்கு நினைவுக்கு வந்தது
டிவியில நீயூஸ் பார்க்க ஆரம்பித்த ரகுவின் மடியில் உட்கார்ந்து கொண்ட குழந்தை “டாம் அன்ட் ஜெரி போடுங்க அங்கிள்” என்றது.
“நீயூஸ்பார்த்துட்டு பார்க்கலாமா?
“ஓகே” என்றது குழந்தை. தந்திச் சேனலில் 9 மணிச்செய்தியில் சென்னைப் புத்தக கண்காட்சியில்   முதல் நாள் மாலை   விருதுகள் அளிக்கப்பட்ட விழா. ஓடிக்கொண்டிருந்தது. இந்த ஆண்டின் சிறந்த பதிப்பாளர் விருது என அறிவிக்கப்பட்டபோது அந்த நடிகரிடம் ஷில்ட் வாங்கியவரைப் பார்த்ததும் குழந்தை “ஹை தாத்தா” என கத்தியது. உடனே ரகுவும், லதாவும் குழந்தையிடம் பேச ஆரம்பித்தனர்.

**லேண்ட் லயன் மூன்று முறை மணியடித்து முடிந்தவுடன் தன் கையிலிருந்த கருவியில் ஒரு பட்டனை அமுக்கி அலர்ட் என்ற சொன்ன ஶ்ரீதர் சில வினாடிகளில் எடுத்துப் பேசுங்க  என்றார்.
சற்றே தயங்கியபடி போனை எடுத்தார் கோபாலன்
“மிஸ்டர் கோபாலனிருக்கிறாரா?”
“நீங்க யார் பேசுறிங்க?”
அண்ணா நகரிலிருந்து பேசறேன், கோபாலனிடம் முக்கியமான ஒரு விஷயம் அவசரமாகப் பேசணும்.
ஶ்ரீதர் கையை உயர்த்திக் காட்டியவுடன்.
“சொல்லுங்க நான்தான் கோபாலன் என்ன விஷயம்.?.”

“சார் உங்க பேத்தி பிரியாவைத்தேடறீங்களா? எங்க கிட்ட பத்திரமா இருக்கா”.. . முடிப்பதற்குள் போனை ஶ்ரீதர்  வாங்கி தொடர்ந்து பேசுகிறார்.
சில நிமிடங்களில் ‘ பேபி பிரியா டிரேஸ்ட் .அன்ட் ஸேப்’ என்ற செய்தி உதவிக்கமிஷனருக்கும் கன்ட்ரோல் ரூமுக்குச் பறக்கிறது
5 நிமிடத்தில் அண்ணா நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர். ரகுவின் வீட்டு வாசலில். அவரிடம் பேசிக்கொண்டிருக்கும்போதே உதவிகமிஷனர் இந்துமதியின் பரிவாரத்தின் ஜீப், கார்கள். பின்னாலேயே சுமிதாவின் கார். அந்தச் சின்னத் தெரு போலீஸ் கார்களால் நிறைகிறது. தூங்கப்போய்விட்ட அந்த அமைதியான தெரு பரபரப்பாகிறது
.
தாத்தாவைப் பார்த்தது ஓடிவந்தபிரியாவை வாரித்தூக்கிக்கொண்டார். கோபாலன்
எப்படிம்மா கண்ணு இங்கே வந்தே?
“நான் வரலைத் தாத்தா இந்த ஆன்ட்டிதான்” .என்று தன் மொழியில் எதோ சொல்ல “இல்லை குழந்தை தெரியாமல் சொல்லுகிறது” என்று லதா ஆரம்பித்தபோது இந்துமதி கையை உயர்த்தி “குழந்தை பேசட்டும்” என்றார். அவரது கண்களில் தெரிந்த ‘கவனியுங்கள்’ என்ற கட்டளைக் கவனித்த போலீஸ் குழு அலர்ட்டாக அந்தக் குழந்தை சொல்வதைக் கவனிக்கத்தொடங்கியது
“ஸ்கூல டிரைவர் சோமு அங்களை கார்கிட்ட காணும் தாத்தா சரி வருவார்ன்னு நினைச்சு . நான் உள்ளே ஏறி வாட்டர் குடிச்சுட்டு படுத்துண்டேன் தாத்தா. அப்பறம் இந்த ஆண்ட்டி இல்ல,- அம்மா பிரண்டு. ரொம்ப நல்ல ஆண்ட்டி. 2 கிட்கேட் சாக்லேட், காம்ப்ளான் எல்லாம் கொடுத்தாங்க.. அங்கிள் தான் உன் மாதிரியே டாம் அன்ட் ஜெரி போடாம நியூஸே பார்க்கிறார் “, என்றது

உள்ளே நுழையும் போதே கவனித்த ஒரு விஷயம் மின்னலடிக்க இந்துமதி குழந்தையை வாசலுக்கு அழைத்து இதில் எந்தக் காரில் நீ படுத்துண்டே சொல்லு? என்று கேட்டார்
ஒரே மாடல், ஒரே மாதிரியான பளீர் வெள்ளைகலரில் இருந்த இரண்டு ஆடி கார்களையும் பார்த்து முழித்த பிரியா பிங்கி பாங்கிபோட்டு ஒரு காரைக் காண்பித்து ஒடிச்சென்று பூட்டாமல் இருந்த அதன் பின்கதவைத் திறந்து. காண்பித்தது.
ஒரே மாதிரியாகியிருந்ததால் தெரியாமல் அவர்கள் கார் மாதிரியே இருந்த மற்றொரு காரில் ஏறி தூங்கிவிட்ட குழந்தைத்தான் இவ்வளவு நேரம்  தேடிக் கொண்டிருக்கிறோம் என்று வினாடியில் புரிந்துவிட்டது அந்த ஐபிஎஸ் முளைக்கு.
மத்தியானம் அடையாரிலிருக்கும் அந்தப் பள்ளிக்கு எதிரிலிருக்கும் கிளையண்ட்டைப் பார்க்கப்போனதும், காரை பள்ளிகேட்டின் அருகில் நிறுத்தியதும் லதாவுக்கு நினைவுக்கு வந்தது. வழக்கம்போல காரி லிருந்து சாவியை எடுத்தபின் பட்டனை அழுத்தி காரைப் பூட்ட மறந்திருக்கிறேன்.. திரும்பும் போது பின்சீட்டில் ஒரு குழந்தை இருந்ததைக் கவனிக்காமல் வீட்டுக்கு  ஒட்டிவந்திருக்கிறோம் என உரைத்தது ஆடிட்டர் லதாவிற்கு.

உள்ளே ரகு, லதாவின் அழகான பூஜைரூமில் 6 அடியில் தஞ்சாவூர்படமாக நிற்கும் பட்டாபிஷக ராமர் முன்னால் என் குழந்தையை இந்த நல்ல மனுஷாள் வழியாகக் காப்பாத்திட்டே பெருமாளே“ என்று சாஷ்டாங்கமாக விழுந்துகொண்டிருந்தார் கோபாலன்.
இரவு 10 மணிக்கும் புளு ஜீன்ஸ்,  வொயிட் டாப்ஸில் பிரஷ்ஷாக இருந்த இந்துமதி இந்தக் கேஸ் முடிந்தது என்று சொல்லும் உடல்மொழியுடன் நடந்து கொண்டே “ஶ்ரீதர் அந்த மர்டர் அக்யூஸ்ட் ஏதாவது பேசறானா?” என்று கேட்டபடியே  அவர் காருக்கு வேகமாக நடந்துகொண்டிருந்தார்.  அவர் பின்னே ஒடிவந்து “ தாங்கஸ் மேடம் நாளை ஆபிஸில் வந்து பார்க்கிறேன்” என்று சொல்லுகிறார் சுமிதா..
“யூ ஆர் வெல்கம்” என்ற அரைப்புன்னகையுடன் காரில் ஏறுகிறார் இந்துமதி
“நீங்க பெருமாள் ஆசியோடு நன்னா ஷேமமா இருக்கணும்” என்று சொல்லிக்கொண்டே தன் காரின் முன் சீட்டிலிருந்து இன்றைக்கு சயாங்காலம்தான் பைன்டிங் முடிந்து வந்தது. உங்களுக்குத்தான் முதல்காப்பி” என்று ஒரு புத்தகத்தை ரகுவிடம் கொடுக்கிறார் கோபாலன்.. 
அதன் நீலக்கலர் அட்டையில்   ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிரத் திவ்யப்பிரபந்தம் என்பதைப்பார்த்து கண்ணில் ஒத்திக்கொள்கிறார் லதா..
“இந்த டிரைவருக்கு  எத்தனைத் தரம் சொல்லியிருக்கிறேன். கார் பக்கத்திலேயே எப்பவும் இருக்கணும்ன்னு. சே அவனாலே எவ்வளவு பிராபளம் டென்ஷன்” எனச் சொல்லிக்கொண்டே காரை ஸ்டார்ட் செய்கிறார் கோபாலன்

எல்லா கார்களும் போனபின் சட்டென்று வெறுமையானது வீடு. நாளை பேஸ்புக்கில் இதை ஒரு வியாசமாக எழுதலாமா? என நினைத்துக்கொண்டே வீட்டின் உள்ளே நுழைகிறார் ரகுநாதன்.

ஆதித்யா (ரமணன்)

 ரமணன்
1A NATURA HARAMONY
12 SRINIVASAPURAM MAIN RD
THIRUVANMIYUR CHENNAI 60041
     944902215 


22/7/18

செருப்பு



கடந்த வார கல்கியில் வெளியான எனது சிறுகதை



செருப்பு





“அம்மா இன்னிக்காச்சும் வாங்கித்தாங்க அம்மா. காதர் பாய் கடையிலே நான் பார்த்தது இன்னும் அது இருக்கும்மா”.

“பார்க்கலாம்ப்பா. இன்னிக்கு சீட்டுக்குப் பணம் கட்டணும். நாளை வியாபாரத்தில் கடையில்வரதைப்பார்த்துட்டுசயாங்காலமா போலாம்”

சரி என்று அரை மனதோடு தலையாட்டுகிறான் கணபதி. வரும் அழுகையை அடக்கிப் பையன் பார்க்காமல்கண்ணைத்துடைத்துகொள்கிறார் காவேரி.



அந்தச் சிறுவன் கேட்டது புதுச்செருப்பு. கடந்த ஒரு மாதமாகக் கேட்கிறான். காவேரியால் வங்கித் தர முடியவில்லை. குழந்தையைக் கொடுத்துவிட்டு கணவன் கைவிட்டு காணாமல் போனபின் வாழ்க்கையுடன் போராடி இந்தப் பையனைவளர்த்துக்கொண்டிருப்பவள். வீட்டு வேலை, கட்டிடத்தொழிலாளியெனப் பல அவதாரங்கள் எடுத்ததில் அவள்புரிந்துகொண்டது எங்கும் தன் பெண்மைக்குப் பாதுகாப்பில்லை என்பதைத்தான்.

இறுதியாக அவள் செய்த துணிவான முடிவு தான் இந்தச் சொந்தப் பலகாரகக்கடை. ராமநாதபுரம் அருகில் தேசியநெடுஞ்சாலையைத் தெட்டுக்குக்கொண்டிருக்கும் ஒரு சின்னக் கிராமத்தின் நுழை வாயிலில் அரசின் புறம்போக்குஇடத்திலிருக்கும் சிறு குடிசைதான் அவளுடைய வீடு கடை எல்லாம். திண்ணையிலிருக்கும் அடுப்பும் சமையல்சாமன்களும் அங்கு மாட்டப்பட்டிருக்கும் கிருஷ்ணன் படமும் தான் அவளுடைய சொத்து.

அருகில் எழுந்துகொண்டிருக்கும் பெரிய பிராஜக்டின் பணியாளர்கள் தான் அவளுடைய கஸ்டமர்கள். பேர்தான் பலகாரக்கடையே தவிர அதிகம் விற்பது டீ, காபி தான். காலை நேரத்தில் வேலைக்குப் போகும் முன் வரும் சிலதொழிளார்களுக்கான இட்லி, வார இறுதி சம்பளநாளின்போது தவறாமல் வீட்டுக்கு வாங்கிப்போகும்வாடிக்கையாளர்களுக்காகப் பஜ்ஜி வடை, போண்டா போடுவது என்றளவில் தான் வியாபாரம் .காலை 10 மணிக்கும் மதியம்3 மணிக்கும் கணபதி ஒரு பிளாஸ்க்கில் டீ அடுக்காகச் சொருகிய அட்டை டம்பளர் சகிதம் தொழிளார்களிடம் ஒரு ரவுண்ட்போய் கப் 3 ரூபாய் என்று டீ கொடுத்து காசை வாங்கி வருவான்.



யாருக்கும் கடன் கிடையாது, கடையில் சிகரட் விற்பனை செய்வதில்லை உட்கார்ந்து பேச வசதி கிடையாது. என்றகாவேரியின் கட்டுப்பாடுகளினால் கஸ்டமர்கள் குறைவுதான். என்றாவது கம்பெனி அல்லது பிராஜக்கெட் அதிகாரிகள்மீட்டிங், என்றால் கூடுதலாக 25 கப் டீ விற்பனையாகும். காவேரியின் கடையில் வாங்கிய டீயை “உங்களுக்காகவேராமநாதபுரத்திலிருந்து கொண்டு வந்தது” என்று அழகான பீங்கான் கப்புகளில் கொடுத்து அந்த சைட்டின் காண்டிராக்டர்பாராட்டுக்களை வாங்கிக் கொள்வது காவேரிக்குத்தெரியாது.

அன்று நாள் துவங்கியதிலிருந்தே பரப்பாகியிருந்தது. அந்தப் பகுதியில் காவேரி அதுவரை பார்க்காத மனிதர்கள் பலர் வந்துகொண்டிருந்தார்கள். சிலர் கடையில் டீ சாப்பிட்டார்கள். கடையின் முன்னால் மெல்லக் கூட்டம் சேர்ந்தது. யாரின்வரவுக்கோ காத்திருந்தார்கள். காவேரி தெரிந்தவர்களுடன் கூட அதிகம் பேசமாட்டார். அதனால் புதியவர்களிடம் என்னவிஷயம் என்று கேட்கவில்லை.

சற்று நேரத்தில் சர் என்று ஒரு கார் வந்தது அதிலிருந்த இறங்கிய ஒரு கரை வேட்டி வெள்ளை சட்டை மனிதர்.” தலைவர்கூட்டு ரோட்டுக்கு வந்திட்டு இருக்கார். எல்லோரும் அங்கே வாங்க, மினிஸ்டர் வர பாதையை மாத்திட்டாங்களாம். அதனால் நாம் அந்த ரோடுக்குதான் போகணும் சீக்கிரம் வாங்க என்று சொல்லிவிட்டு காரில் ஏறிப்போனார்

மிக வேகமாக ஓடி வந்த கணபதி “அம்மா சீக்கிரம் இன்னும் இரண்டு பிளாஸ்க்க்கு டீ போடும்மா. மெயின் ரோட்டில் ஒரேகூட்டம் கட்டிடத்துக்குக் கொண்டு போன டீயை எல்லாம் அவங்க 5 நிமிஷத்தில் வாங்கிட்டாங்க. கப் 5 ரூபான்னுகொடுத்தேன். என்று தான் சம்பாதித்த 100 ரூபாயை காவேரியிடம் கொடுத்தான்.

அடுப்[பில் கொதித்துக்கொண்டிருந்த டீயை பிளாஸ்கில் ஊற்றிக்கொண்டே எதுனாச்சும் அரசியல் கூட்டமாடா? என்றார்

என்ன கட்சின்னு தெரியல்லம்மா எல்லாரும் கருப்பு கொடி வைச்சிருக்காங்க. ஆளுங்க வந்திட்டே இருக்காங்க என்றுசொல்லிக்கொண்டே பரபரப்புடன் பிளாஸ்க்கை எடுத்துக்கொண்டான் கணபதி.

“சூவுதானமாக இருந்துக்கோ காசைப் பத்திரமாக வைச்சுக்கோ” என்று சொல்லுவதை காதில் வாங்கக் கணபதி அங்குஇல்லை. இந்த பிளாஸ்க் டீ முழுவதையும் விற்று காலிசெய்யும் ஆர்வம் அவனை ஓடச்செய்திருந்தது.



“தமிழகத்தை வஞ்சிக்காதே !, உச்ச நீதிமன்ற தீர்ப்பை உடனடியாக அமுல் படுத்து ! ” என்ற முழக்கங்கள் தொலைவில்தலைவரின் காரைப்பார்த்ததும் உச்ச ஸ்தாயில் ஒலிக்கத்துவங்கியது. தலைவரின் கார் அருகில் வந்ததும் அவர்பெயரைச்சொல்லி வாழ்க கோஷங்கள் எழுந்தன.

காரின் முன் சீட்டிலிருந்து நிதானமாக இறங்கிய தலைவர் கூட்டத்தைப் பார்த்து கைகூப்பி வணக்கம் சொல்லிவிட்டு பேசஆரம்பித்தார். “நமது கருப்புகொடி கண்டன ஆர்பாட்ட அறிவிப்பினால் மத்திய அமைச்சர் கிராமத்துக்கு வரும் பாதையைமாற்றிவிட்ட தகவல் நமக்குக் கிடைத்திருக்கிறது. அதனால் தான் இடத்தை மாற்றி இங்கு போராட்டம் செய்யவந்திருக்கிறோம். அமைச்சர் கார் வரும்போது கறுப்புக்கொடியை அசைத்துக் கோஷமிடவேண்டும். நம் நோக்கம் அவர்காரை மறிப்பதில்லை. நமது கண்டனத்தை அவருக்குப் புரிய வைக்க அவர் வருமிடத்தில் நின்று கருப்பு கொடிகாட்டுகிறோம். அதனால் கார் வரும்போது எவரும் குறுக்கே பாயக் கூடாது. எந்த அசம்பாவிதமும் கூடாது. உங்கள்அருகிலிருப்பவர்களைக் கவனித்துக்கொண்டிருங்கள். மாற்றுகட்சிகார்கள் ஊடுருவி எதாவது அராஜகம் செய்து பழியைநம்மீது போடுவார்கள் ஜாக்கிரதையாக இருங்கள்.” பேச்சை முடிப்பதற்குள் “மாவட்ட எஸ்பி பேசுகிறார் சார்” என யாரோபோனைக்கொடுக்கத் தலைவர் போனில் பேசியபடியே காரிக்குத்திரும்பினார்.

வெய்யிலைப்போலவே கூட்டமும் அதிகமாகிக்கொண்டிருந்தது. மாவட்டத்தின் பல பகுதிகளிலிருந்து வந்த வேன்களும்மோட்டார் சைக்கிள்களும் அந்தச் சாலையின் இருபக்க வெளிகளில் நிறைந்திருந்தன.

“அம்மா இந்த பிளாஸ்க்கும் காலி. சீக்கிரம் இன்னொண்ணு ரொப்பு. கூட்டம் அள்ளுது. கப் ஆறுருபாய்ன்னு வித்திட்டேன்” என்று கையில் நிறைந்த நோட்டுகளை அம்மாவிடம் கொடுத்தான் கணபதி.

“இந்த பிளாஸ்க்கு மட்டும் தான் பாலிருக்குடா. அதோடு போதும்”. என்ற காவேரியின் மனதுக்குள் மகனின்சாமர்த்தியத்தைக் கண்டு மகிழுந்தாலும் பின் என் இந்தப்பையனுக்குப் படிப்பு ஏறவில்லை? என்ற வருத்தமும் எழுந்தது

.“டீ இல்லான தின்றதுக்கு ஏதாவது பண்ணு. அதையும் வித்துருலாம். கணபதியின் கண்ணில் செருப்பின் விலைச்சீட்டுமின்னி மறைந்தது.

கூட்டம் அதிகரித்துக்கொண்டேயிருந்தது. எப்படி எங்கிருந்து இத்தனைபேர் இந்த கிராமத்துக்கு வந்தார்கள்? எனஉள்ளூர்க்கார்களும் ஆச்சரியத்தோடு அவர்களுடன் இணைந்து கொண்டிருந்தனர்.

“உங்களுக்கு இந்த இடத்தில் போராட்டம் நடத்த அனுமதியில்லை. கலைந்து போகச்சொல்லுங்கள்” என்ற அந்தப்போலீஸ்அதிகாரியிடம் “அமைச்சர் வருவதாக அறிவிக்கப்பட்ட பாதையை நீங்கள் மாற்றும்போது நாங்கள் மாற்றக்கூடாதா?” என்றுஉள்ளூர் அரசியல் வாதி ஒருவர் சத்தமாக வாதிட்டுக்கொண்டிருந்தபோது மிக வேகமாக வந்த ஒரு லாரியிலிருந்துசாலைகளின் நடுவில் ரோடைபிரிக்க வைக்கும் இரும்பு தடுப்பு வேலிகள் சர சர வென்று இறங்கின. அதைச் சாலையின்இருபுறங்களிலும் பரபரவென்று நிறுத்தினார்கள் அந்த லாரியில் வந்த போலீசார். அந்த இரும்பு தடுப்புக்களிலிருந்தவிளம்பரங்கள் அது மாவட்ட தலைநகரிலிருந்து வந்திருப்பதைச்சொல்லியது.

“இந்த தடுப்புக்குப்பினால் போங்க” என்று கத்தியபடி அடுத்த லாரியிலிருந்து. பெரிய கம்புகளுடனும் ஃபைபர் கிளாஸ்கேடயங்களுடனும் இறங்கினார்கள் நீல வண்ண உடுப்பு அணிந்த போலீசார். வினாடிகளில் மாறிப்போனது அந்த இடம்.

மக்கள் அந்த தடுப்புக்குப்பின் போக மறுக்க போலீஸ் அவர்களை முழுவேகத்துடன் தள்ள சில நிமிடங்களில் அந்த இடம்உணர்ச்சிகளின் சங்கம மாகியிருந்தது. கறுப்புக் கொடிகளை ஏந்திய தொண்டர்களின் கோஷத்தில் இப்போது போலீஸ்அராஜகம் ஒழிகவும் சேர்ந்து கொண்டது

.“அமைச்சரின் கான்வாய் இராமநாதபுரத்திலிருந்து கிளம்பிவிட்டது ரோஜர்” என்று அலறிக்கொண்டு வந்த ஸ்பீக்கர்வைத்தடிராபிக் கிளியரன்ஸ் ஜீப்பைப் பார்த்தவுடன் போலீஸாரின் வேகம் அதிகமானது. கம்பி தடுப்புக்கு பின்னால்போகாதவர்களை பிரம்பால் அடிக்க ஆரம்பித்தார்கள். களேபரமாகியது. தொண்டர்கள் அடிவாங்காமலிருக்க ஓட சிலர் அந்ததடுப்பின்மேலே விழுந்து அது சரிந்து மறுபக்கம் இருப்பர்வகளை அது நசுக்கியதால் வேதனையால் அவர்கள் கத்தஆரம்பித்தார்கள்

அந்த ஓலங்கள்அமைச்சரின் குழு கார்களின் அணிவகுப்பின் பைலட் ஜீப்பின் சைரன் ஒலியில் அமுங்கிவிட்டது. என்னநடக்கிறது? என்பது புரிவதற்குள் வினாடிகளில் அமைச்சரின் கார் அந்தப் பகுதியைக் கடந்துபறந்தது. அப்போது எங்கோதொலைவிலிருந்து எறியப்பட்ட ஒரு சிறிய கல் அமைச்சரின் அணிவகுப்பில் கடைசியாக வந்த காரின் மீது பட்டு தெறித்துசாலையில் விழுந்தது. தொடர்ந்து விழுந்தது ஒரு வார் அறுந்த பழைய செருப்பு..

அடிபட்டால் அடுத்தவினாடி திருப்பித் தாக்கும் விலங்குகளைப் போலப் போலீசார் நிற்பவர்கள் எல்லோரையும் தாக்கஆரம்பித்தனர் தொண்டர்கள் அலறிக்கொண்டு சிதறி ஓடினர்.



“ஐயோ என் பிளாஸ்க் - பிளாஸ்க் சார் பிளீஸ்” என்று கணபதி கத்தியதைக் கேட்க எவருக்கும் நேரமில்லை. தவறிவிழுந்தஅதை மிதித்து உடைத்துவிட்டு ஓடிக்கொண்டிருந்தது கூட்டம். பதறி ஓடிக்கொண்டிருப்பவர்களிடையே சிக்கி தடுக்கி கிழேவிழுந்த கணபதியை மிதித்துக்கொண்டே பல கால்கள் தொடர்ந்து ஓடிக்கொண்டிருந்தன. மிகுந்த கஷ்டத்துடன் எழுந்தகணபதியின் மீது விழுந்த ஒரு போலீஸ்காரின் அடியில் அவன் மயங்கி தரையில் விழுந்தான்.

சிதறிக்கிடந்த கிழிந்த கறுப்பு கொடிகள், சட்டைகள் கொடிக்கம்புகள் அறுந்தச் செருப்புகள் அடிபட்டு விழுந்திருக்கும் சிலமனிதர்கள் என ஒரு போர் நிகழ்ந்த இடம்போல் மாறியிருந்தது. அந்த இடம்



அரைமணிக்குப் பின் மயங்கிய நிலையிலிருந்து விழித்த கணபதிக்கு கண் இருட்டிக்கொண்டு வந்தது. காலில் பலமாகவிழுந்த அடி இப்போது விண்ணென்று வலித்தது. அப்போது அருகில் கிடந்த ஒற்றைச் செருப்பு அவன் கவனத்தை ஈர்த்தது. புத்தம் புதிய செருப்பு அவன் பார்த்து வைத்திருந்த அதே மாடல். அதைக்கையில் எடுத்துப்பார்த்துகொண்டிருந்த அடுத்தநிமிட,ம் ஒரு கெட்டவார்த்தையைச் சொல்லிக்கொண்டே அவனைப் பளீரென்று அறைந்தார் ஒரு போலீஸ்காரர். “மவனே நீதான் செருப்பை வீசினயாடா?” எனச்சொல்லி தரதரவென அவனை இழுத்துக்கொண்டே ஜீப்புக்குப் போனார். கணபதிக்குஒன்றுமே புரியவில்லை. “சார் சார் என்று அவன் பேசஆரம்பிக்கு முன்னரே பளார் பளார் என்று அறை, அவனுக்கு அழுகைமுட்டிக்கொண்டு வந்தது. கால் வலி வேறு அதிகமாகிக்கொண்டேயிருந்தது.

விஷயமறிந்து போலீஸ்டேஷனுக்கு பதறி அடித்துக்கொண்டு வந்த காவேரி கணபதியை ஜட்டியுடன்உட்காரவைத்திருப்பதைப்பார்த்து கூசித் துடித்துபோனார்

.அந்த இன்ஸ்பெக்டரின் காலில் விழுந்து “ஐயா அவனுக்கு ஒன்றும் தெரியாதய்யா விபரம் பத்தாத பையன் விட்டுடங்கஅய்யா என்று கண்ணீருடன் கெஞ்சினார்

“சும்மா கத்தாதம்மா ஓம் மவன் மந்திரி கார் மேல் செருப்பு எறிஞ்சிருக்கான். இது எவ்வளவு பெரிய கேஸ் தெரியமா? கேஸ்எழுதிட்டோம் நாளைக்கு ராமநாதபுரம் கோர்ட்டுக்கு வக்கீலோடு வந்து ஜாமீன் கேக்கச்சொல்லு. போ” என்று கத்திவிட்டுயாரோடுனோ போனில் பேச ஆரம்பித்துவிட்டார்.

கருணையை வேண்டும் காவேரியின் கதறலையும் அழுகையையும் ஒரு பொருட்டாகவே மதிக்க வில்லை அந்தக் காக்கிசட்டையின் மரத்துப்போன நெஞ்சம்

.மதியம் கடந்துகொண்டிருந்தது. என்ன செய்வது? என்று தெரியாமல் தவித்துக்கொண்டிருந்த காவேரி. ஸ்டேஷன்வாசலிலேயே உட்கார்ந்திருந்தார்.



சட்டென்று வந்த அந்த காரை காவேரி முதலில் கவனிக்கவில்லை. காரிலிருந்து இறங்கியவர் ஒம் மகனாம்மா? பேர் என்ன? என்ன வயசாகிறது? என்ற கேட்ட அந்தத் தொனியிலேயே இவர் நமக்கு உதவி செய்யபவர் போலிருக்கிறது என்றுநினைத்து அழுதபடி “பேர்“கணபதி சார். இந்த ஆனிக்கு 14 வயசாகுதுங்க நெடுநெடுன்னு வளர்ந்திருக்கே தவிர விபரம்பத்தாத புள்ளை படிப்பு ஏறல்ல, எங்கூட பலகாரகடையிலிருக்கான். அவனைப்புடிச்சி “ ,என்று புலம்ப ஆரம்பித்தார். கறுப்புகோட்டுடன் கம்பீரமான நடையில் ஸ்டேஷனுக்குள் நுழைந்தவரை இன்ஸ்பெக்டர் சற்றும் எதிர்பார்க்கவில்லை என்பதுஅவர் உடல் மொழியில் தெரிந்தது

. என்ன சண்முகம்? ராமநாதபுரத்தில் செய்ததை இங்கும் செய்ய ஆரம்பிச்சிட்டுங்களா? ஏன்ய்யா சர்வீஸ் முழுவதும் இப்படிபொய்கேஸ் போட்டுகிட்டே இருப்பிங்களா? இதுவே பனிஷ்மெண்ட் போஸ்டிங். இங்கேயும் ஆரம்பிச்சிட்டிங்களா? என்றுசொல்லியபடியே நாற்காலியில் உட்கார்ந்தார் கிருஷ்ணத்தேவர்.

சுற்று வட்டாரத்தில் இருக்கும் மாவட்ட கோர்ட்டுகளில் மனித உரிமை, பெண் பாதுகாப்பு சமூக நீதி சிறுகுழந்தை நலம்போன்ற விஷயங்களுக்காக வழக்குப்போட்டு போராடும் வழக்கறிஞர். சமூக ஆர்வலர். இடது சாரி சிந்தனையுள்ளவர். இன்று நடந்த போராட்டத்தில் இடது சாரி அமைப்புகள் இல்லாததால் இவருடைய வருகை அந்த இன்ஸ்பெக்டருக்குஅதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் தந்தது.



“இல்ல சார் இரண்டு சாட்சி ஸ்டிராங்க இருக்கு. காலிலிருந்து கழட்டி எறிந்ததைப்பார்திருக்காங்க சார், அரசியல்போராட்டம், சென்டரல் மினிஸ்டர்... அந்தக்கட்சி பிரஷர் அதனாலே” என்று இழுத்தவர். எறிந்த “செருப்பைக்கூடஎடுத்துவைச்சிருக்கோம் சார்.” என்று தன் மேஜையின் மீதி ஒரு பிளாஸ்டிக் கவரில் வைத்திருந்த செருப்பை நோக்கிக்கையை காட்டினார்

.

மொதல அவன் டிரஸ்சை கொடுங்க அரசியல் போராட்ட கைதுன்னு சொல்றீங்க அப்புறம் ஏன் இந்த கிரிமினல்டீரிட்மென்ட்?

மேஜைமீது இருந்த அந்த பிளாஸ்டிக் கவரையும் அதில் உள்ள செருப்பையும் அரை நிமிஷம் பார்த்த கிருஷ்ணத்தேவர்.

“அப்படியா சரி புறப்படுங்க ராமநாதபுரம் மாஜிஸ்ட்ரேட் வீட்டுக்கு” என்றார்.

சற்றே திகைப்புடன் “சார் வண்டி இல்ல சார் நாளைக்குக் காலையிலே கூட்டிப் போய் ரிமாண்ட் பண்ணறோம் நீங்க வந்துஜாமீனல எடுத்துடுங்க”.

“மிஸ்டர் சண்முகம் ! மாஜிஸ்ட்ரேட் கிட்ட போறது பையனுக்கு ஜாமீன் எடுக்க இல்லை நீங்கபொய்கேஸ்போட்டிருக்கின்னு ஆதாரத்தோடு சொல்லி உங்க மேலே கோர்ட்லேயே ஒரு புகார்கொடுத்து வழக்குப் பதிவுசெய்யத்தான்

.ஒரு மைனர் பையனை இப்படி ஸ்டேஷனில் வச்சதுக்கு சட்டத்தில் இடமில்லை. எங்கேய்யா? உங்க சாட்சிகள்அவங்களையும் வரச்சொல்லுங்க. பொய் சாட்சி கொடுத்தற்காக அவங்க மேலேயும் மாஜிஸ்டிரேட் கிட்ட ஒரு புகார்கொடுக்கணும்

.சார்...

“பின்ன என்ன சண்முகம் சட்டங்களைத்தான் மறந்திட்டிங்க, சொந்தமா சிந்திக்கிறதையே மறந்தீட்டிங்களா?

இந்த புதுச் செருப்பில் சைஸ் 9 நம்பர் பளிச்சின்னு தெரியுது. இந்த சிறுபையனின் கால் சைஸ் உஙளுக்குப் பார்த்தவுடன்தெரியலையா? கழட்டி ஏறிஞ்சதைப்பார்த்த சாட்சி இருக்காங்களாம் என்ன கதைய்யா இது?

வாங்க போலீஸ் வண்டியில்லாவிட்டால் பராவாயில்ல என் காரில் போகலாம். கிளம்புங்க” என்று சொல்லிக்கொண்டேஎழுந்தார்.



“சார்,சார் அவசரத்திலே கவனிக்கல்ல. சாரி சார். மேட்டரைப் பெருசு பண்ணாதீங்க சார். பிளீஸ்”காலையில் கருணையேஇல்லாமல் பேசிய காக்கிச்சட்டை இப்போது கருணைக்காகக்கெஞ்சியது



இன்ஸ்பெக்டர் கான்ஸ்டபளைப் பார்த்துக் கண்ணைக்காட்டியதும் அவர் கணபதியின் டிரஸைக்கொடுத்து “நீ போப்பா” என்றார்.



“அய்யா நீங்க மஹராசனாக இருக்கணும். நா கும்படற கிருஷ்ணன் சாமி நேரில்ல வந்தது போல வந்து இவனைக்காப்பாத்திட்டிங்க” என அழுதுகொண்டே அவரின் காலில் விழுந்து வணங்கினார் காவேரி.

வெளியே வந்த கிருஷ்ணத் தேவர் காத்திருந்த உள்ளூர் நண்பரிடம் "சரியான டைத்துக்கு இன்பெர்மேஷன் கொடுத்தீங்க. கோர்ட்டுக்குப் போக வேண்டிய அவசியமே இல்லை. இந்த பையனைத் இவனுக வேறு தொந்தரவு பண்ணாம பாத்துங்க" என்று சொல்லிக் கொண்டே காரில்ஏறிப்போனார்

“நல்ல மனுஷன் மவராசன். நேரத்துக்கு வந்து காப்பத்திட்டார்டா... “நாளைக்குப் போய் உனக்குச் செருப்பு வாங்கலாம்கணபதி”.



“எனக்கு இனிமே செருப்பே வேண்டாம்மா. நளைக்கு நமக்கு வேற பிளாஸ்க் வாங்கணும்”



அந்த பதிலைக் கேட்டு ஒரு வினாடி ஸ்தம்பித்துப் போய் கணபதியைக் கட்டி அணைத்துக்கொண்டார். காவேரி

----ஆதித்யா

முக நூலில் வந்த பின்னூட்டங்களில் சில

Panneerselvam Natarajan
Panneerselvam Natarajan அருமையான சிறுகதை சார்.. இன்னமும் இப்படிப்பட்ட நிகழ்வுகள் தமிழகத்தில் ஆங்காங்கே அரங்கேறிக் கொண்டுதானிருக்கிறது.
Manage
Like · Reply · 1w

Ramanan Vsv replied · 1 Reply
Subramanian Venkateswaran
Subramanian Venkateswaran Really excellent and touching. Touching story. Welldone.
Manage
Like · Reply · 1w

Ramanan Vsv replied · 1 Reply
Raghunathan Vaidyanathan
Raghunathan Vaidyanathan ரமணன் சார்,

அருமை. தூத்துக்குடி சம்பவம் ஒரு இன்ஸ்பைரேஷனாக இருந்ததோ? ஆனால் இதுபோன்ற அராஜஹங்கள் அடிக்கடி நடக்கிறது. கதை நன்றாக இருக்கிறது.
Manage
Like · Reply · 1w
Ramanan Vsv
Ramanan Vsv நன்றி இதில் பாதி நிஜம். ராமநாதபுரத்தில் நிகழ்ந்தது
2
Manage
Like · Reply · 1w · Edited
Uma Ganesh
Uma Ganesh நல்ல வேளை கணபதிக்கு ஒண்ணும் ஆகலை.
Manage
Like · Reply · 1w

Ramanan Vsv replied · 1 Reply
Kamaraj Rathinasamy
Kamaraj Rathinasamy நெஞ்சைத் தொடும் கதை தான், இருந்தாலும் கதையில் கூட ஏழை எளியவர்கள் மட்டுமே துன்பப் பட வேண்டுமா?
Manage
Like · Reply · 1w

Ramanan Vsv replied · 1 Reply
M Nithyanandam
M Nithyanandam அருமையான கதை சார், ஏன் இத்தனை வருஷம் நீண்ட இடைவெளி, அதிகம் சார். பல நல்ல சிறுகதைகள் கிடைக்காமல் போய்விட்டதே.
Manage
Like · Reply · 1w

Ramanan Vsv replied · 1 Reply
Vidya Subramaniam
Vidya Subramaniam அருமை.
Manage
Like · Reply · 1w

Ramanan Vsv replied · 1 Reply
Moorthy Athiyanan
Moorthy Athiyanan இன்று தான் படித்தேன் சார்....நன்றி.
Manage
Like · Reply · 1w

Ramanan Vsv replied · 1 Reply
Subashini Tirumalai
Subashini Tirumalai அருமையான நெகிழ்வான கதை!
Manage
Like · Reply · 1w

Ramanan Vsv replied · 1 Reply
Namagirilakshmi Arumugam
Namagirilakshmi Arumugam Arumai
Manage
Like · Reply · 1w
Krishnamurthi Balaji
Krishnamurthi Balaji மிக மிக அருமை
Manage
Like · Reply · 1w
Subramanian Narayanan
Subramanian Narayanan அருமை சார்
Manage
Like · Reply · 1w

Ramanan Vsv replied · 1 Reply
Ramanathan Rk
Ramanathan Rk செறிவான கதை.. நல்ல ஓட்டம்..! கதை நேர்கோட்டில் பயணித்து மனித நேயக்குவிப்பில் முடிவது கூடுதல் சிறப்பு. வாழ்த்துகள் ஸார்..!
Manage
Like · Reply · 1w

Ramanan Vsv replied · 1 Reply
இளமதி பத்மா
இளமதி பத்மா படித்துக் கொண்டிருக்கும் போதே பதட்டமானேன் . அருமை சார்.
Manage
Like · Reply · 1w

Ramanan Vsv replied · 1 Reply
Maragatha Mani
Maragatha Mani இன்னும் எத்தனை காலம் தான் கதையும் நடைமுறையும் ஒன்றாகவே இருக்கபோகிறதோ. நீண்ட இடைவெளி விட்டு நீங்கள் எழுதும்போதும் காட்சிகளக தெரிகிறது.
Manage
Like · Reply · 1w

Maragatha Mani replied · 2 Replies
Major Dasan
Major Dasan Arppudham... Vaazthukkal
Manage
Like · Reply · 1w

Ramanan Vsv replied · 1 Reply
Ananthakrishnan Panchanadam
Ananthakrishnan Panchanadam வாழ்த்துக்கள் 💐
Manage
Like · Reply · 1w
Revathi Suriyan
Revathi Suriyan மிக அருமையான கதை. இன்றைய யதார்த்தை தோலுரித்துக் காட்டியிருக்கிறார் கதாசிரியர். என் மனமார்ந்த பாராட்டுக்கள் ரமணன் சார்.
Manage
Like · Reply · 1w · Edited

Ramanan Vsv replied · 1 Reply
Bhuvaneswari Chandrasekaran
Bhuvaneswari Chandrasekaran அருமையான கதை!
Manage
Like · Reply · 1w

Ramanan Vsv replied · 1 Reply
K V Rajamany
K V Rajamany Jeans....ரமணனா...கொக்கா...
Manage
Like · Reply · 1w

Ramanan Vsv replied · 1 Reply
Bhaskaran Jayaraman
Bhaskaran Jayaraman செருப்பைச் சுற்றியே கதை - வறுமை, பாசம், உழைப்பு, அரசியல், காவலில் நேர்மையின்மை, தனியாய் கிடைக்கும் ஒற்றைச் செருப்பு மற்றும் பிய்ந்த செருப்புகள் - ஆரம்பத்தில் விருப்பு, இறுதியில் வேண்டா வெறுப்பானதும் செருப்பாலே! அருமை சார்!
Manage
Like · Reply · 1w

Ramanan Vsv replied · 1 Reply
Rajan Subrahmanian Kalambur
Rajan Subrahmanian Kalambur What a boy. Fantastic and heart rending story.
Manage
Like · Reply · 1w
Gopal Srinivasan
Gopal Srinivasan அற்புதம்
Manage
Like · Reply · 1w

Ramanan Vsv replied · 1 Reply
Venkatachalam Muthiah Muthiah
Venkatachalam Muthiah Muthiah அவரை விட இவரை தான் மிகவும் ரசித்தேன்(ஆதித்யாவை)
Manage
Like · Reply · 1w

Venkatachalam Muthiah Muthiah replied · 2 Replies
Raghavan Chetlur
Raghavan Chetlur இன்றைய நடப்புகளின் பிரதிபலிப்பை உணரமுடிகிறது. அடிப்பவன் அடிகளெல்லாம் அப்பாவிகள் தலைகளிலே தான்....
Manage
Like · Reply · 1w

Ramanan Vsv replied · 1 Reply
எழுத்தாளர் கே ஜி ஜவஹர்
எழுத்தாளர் கே ஜி ஜவஹர் அருமை சார்
Manage
Like · Reply · 1w

Ramanan Vsv replied · 1 Reply
Mathanagopal Nagarajan
Mathanagopal Nagarajan கதையின் களமும் , உரையாடல்களும் , சம்பவங்களும் உண்மைக்கு அருகில்.
காபியை வைத்து காண்டிராக்டர் நல்ல பேர் எடுக்க முயல்வது அருமை.
இடது சாரிக் காரரை வைத்து ஜாமீன் எடுப்பதும் …See More
Manage
Like · Reply · 1w

Ramanan Vsv replied · 1 Reply
Bharathi Godakrishniah
Bharathi Godakrishniah Very much interesting This happens very rarely in reality. The innocent and the poor are the scapegoats in reality. Congratulations.
Actually I read half the story yesterday. Could not continue due to other work. I completed reading it just now. Well done AUDITYA!
Manage
Like · Reply · 1w

Bharathi Godakrishniah replied · 2 Replies
Latha Kamala
Latha Kamala கதை நன்றாக வந்திருக்கிறது கல்கியில் வரும் கட்டுரை நிறைய படித்திருக்கிறேன் இது வரை .இனி தொடருமா?
Manage
Like · Reply · 1w

Ramanan Vsv replied · 3 Replies
Latha Kamala
Latha Kamala நான் US ல் இருப்பதால் கல்கி படிக்கவில்லை .
Manage
Like · Reply · 1w

Latha Kamala replied · 2 Replies
Gopalakrishnan Lokanathan
Gopalakrishnan Lokanathan super sir...
Manage
Like · Reply · 1w
Ramanan Vsv
Ramanan Vsv thank you very much
Manage
Like · Reply · 1w
Vedha Gopalan
Vedha Gopalan குடிசையை வர்ணித்த விதம் நேரில் பார்த்த உணர்வைத் தந்தது
//அடுக்காகச் சொருகிய அட்டை டம்பளர் / ஆஹா
//காவேரியின் கட்டுப்பாடுகள்// அருமை …See More
1
Manage
Like · Reply · 1w

Vedha Gopalan replied · 2 Replies
Kandasamy K
Kandasamy K வாழ்த்துக்கள்
Manage
Like · Reply · 1w
Saraswathi Rajendran
Saraswathi Rajendran அருமைசார்
Manage
Like · Reply · 1w
Valiyur Subramanian
Valiyur Subramanian இனி இடைவெளியின்றித் தொடர்ந்து எழுதவும். நல்ல நடை.
Manage
Like · Reply · 1w

Ramanan Vsv replied · 1 Reply
Rajaram Sankaran
Rajaram Sankaran அருமை நண்பரே
Manage
Like · Reply · 1w
Geetha Chandra
Geetha Chandra இப்ப தான் நிதானமா படிக்க முடிந்தது ....வெகு அருமை....கதைக்களமும் விவரித்த விறுவிறுப்பும் ஒரு திரில்லர் அனுபவத்தைக் கொடுத்தது ..கடைசி வரை அந்த பையனுக்கு ஏதோ ஆகப் போகிறதென்றே நினைத்தேன் ...துணுக்கு தோரணங்களால் கதை சொல்வது எளிது சீரியஸ் கதை செய்வது கடினம் ...Congrats
Manage
Like · Reply · 3d
Vijayalakshmi Ranganathan
Vijayalakshmi Ranganathan Normal story
But very nice
Manage
Like · Reply · 19h
Ramanan Vsv

Write a comment...


1

18/7/18

சினிமாக்கள் பார்த்துதான் தொழில் கற்றேன்”



வங்கிக்கொள்ளை, ஆள்கடத்தல், கைதிகள் சிறையிலிருந்து தபிப்பது போன்ற காட்சிகளைப் பிரமிப்புடன் பார்க்க வைத்த ஹாலிவுட் படங்கள் 1990 களிலும்,2000களிலும் வெளிவந்த அல்பேஷினோ, ஸ்கார்ஃபேஸ் ஹீட் போன்றவை. இன்றும் ரசித்துப் பார்க்கப்படும் இந்த ஹாலிவுட் படங்களைத் தூக்கிச் சாப்பிடுமளவிற்கு ஒரு சிறை யிலிருந்து தப்பிக்கும் சாகசம் அண்மையில் பிரான்ஸில் நிகழ்ந்திருக்கிறது.
பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரீஸின் புறநகர் பகுதியான சூட் பிரான்ஸிலியனில் (sud-Francilien) நவீன பாதுகாப்பு வசதிகளுடன் ஒரு அதி பாதுகாப்பு அமைப்புக்கொண்ட சிறைச்சாலை. இருக்கிறது.  இதில் 25 ஆண்டு சிறை தண்டனையை அனுபவித்துக்கொண்டிருக்கும் கிரிமினல் குற்றவாளி ரொடோய்ன் ஃபெய்ட்.( Redoine Faid)

கைதிகள் பார்வையாளர்களைச் சந்திக்கும் அறையில் அண்மையில் இவரைச் சந்திக்க வந்த ஒரு ஒரு உறவினருடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது திடுமென்று நவீனத் துப்பாக்கிகளுடன் பிரான்ஸின் கமாண்டோக்கள் உடையணிந்த இருவர் கண்ணாடிக்கதவுகளை வலிமையான டிரில்லர்களால் துளைத்து உடைத்துக்கொண்டு உள்ளே வந்தனர். கதவுகளை உடைக்கும் போதே புகைக்குண்டுகளை வெடித்ததால். புகை சூழுந்த அந்த நிமிடங்களில் என்ன நடக்கிறது என்று புரிந்துகொண்டு சிறைக் காவலர்கள் சுதாரிப்பதற்குள் ரொடொய்ன் ஃபெய்ட்டை இழுத்துக்கொண்டு  வெளியே ஒடி  ஒரு கமாண்டோ காவலுடன் நின்று கொண்டிருந்த ஹெலிகாப்டரில் ஏற்றிக்கொண்டனர். அதன் உள்ளே பைலட்டின் தலையில் துப்பாக்கியை வைத்திருந்த மற்றொரு காமண்டோ கட்டளையிட்டவுடன் விமானம் பறந்து சிலநிமிடங்களில் மறைந்தது.உலகச்சிறைச்சாலைகள் உடைப்பு வரலாற்றில் இதுவரை இவ்வளவு வேகமாக ஒரு சிறை தப்பிப்பு நடந்ததில்லை. உண்மையான கமாண்டோ ஆக்‌ஷன் இது.
ஒரு ஹாலிவுட் திர்ல்லர் போல 10 நிமிடத்தில் நடந்து முடிந்துவிட்ட இந்தத் தப்பிப்பித்தலில் துப்பாக்கிச்சூடு, மனித உயிர் இழப்பு எதுவுமில்லை. ஒத்திகைப்பார்க்கபட்ட ஒரு சினிமா ஷூட்டிங் போல ராணுவத்துல்லியத்துடன் நிகழ்ந்த இதைக் கண்டு பிரான்ஸின் போலீஸ் திகைத்து நிற்கிறது. நாட்டின் நீதித்துறை துறை அமைச்சர் இது அழகாகத் திட்டமிடப்பட்டு அருமையாகச் செயலாக்கப்பட்டிருக்கும் சிறை உடைப்புதான் என்பதை ஒப்புக்கொண்டிருக்கிறார்
.
நிகழ்ந்த சில வினாடிகளில் வயர்லஸ், போன்களில் செய்தி பறந்தது. தேடிக்கொண்டிருந்த போலீஸ் ஒரு மணி நேரத்தில் கண்டுபிடித்தது நெடுஞ்சாலையில் 40 மைகளுக்கு அப்பால் எஞ்ஞின் எரிந்த நிலையில் நின்று கொண்டிருந்த ஹெலிகாப்டரையும் அதனுள் மயங்கிக்கிடந்த அதன் பைலட்டையும் தான். அந்த ஹெலிகாப்டர் அருகிலுள்ள ஒரு விமான கிளப்புக்கு சொந்தமானது. உறுப்பினர்களக்கு பயிற்சி அளிக்கும் பயிற்சியாளர் பைலட்டை துப்பாக்கி முனையில் கடத்தி அந்த ஹெலிகாப்படரில் சிறைக்குள்ளிருந்த ரொடோய்ன் ஃபெய்ட் யை அதிரடியாக மீட்டிருக்கின்றனர் அவரது நண்பர்கள்.
ஹெலிகாப்பட்டர் நின்ற இடத்திலிருந்து ஒரு அதி வேகக் காரில் 100 மையில் பயணம் செய்து பாதி வழியில் அதன் எஞ்ஞினையும் எரித்துவிட்டுத் தப்பியிருக்கின்றனர் குற்றவாளிகள். ஒரு ரயில் நிலையம். சின்ன விமான நிலையம் இருக்குமிடத்தின் அருகில் அந்த கார் இருந்ததால் அங்கிருந்து எங்கே எப்படி சென்றிருப்பார்கள் என இப்போது ஆராய்ந்துகொண்டிருக்கிறார்கள்
இந்தச் சிறை ஒரு அதி பாதுகாப்புச் சிறை ஹெலிகாப்டர்கள் இறங்க முடியாத மேல்தளம், வலையிடப்பட்டு மூடப்பட்டிருக்கும் மைதானங்கள் போன்ற பல பாதுகாப்பு ஏற்பாடுகள்.  சிறையிலிருந்து விடுதலையாகும் கைதிகள் சில நிமிடங்கள் நின்று கடக்க வேண்டிய ஒரு திறந்த வெளியில் மட்டும் இந்த ஹெலிகாப்டர் பாதுகாப்பு தடுப்பு அமைப்புகள் இல்லை. சரியாக அந்த இடத்தில் ஹெலிகாப்டரை இறக்கிக் காத்திருந்திருந்து காரியத்தை முடித்துவிட்டார்கள்.
.
சிசிடிவி கேமிராக்களில் புகை மூட்டத்தால் பதிவானவை எதுவும் தெளிவாக இல்லை. . இப்போது பிரான்ஸ் முழுவதும் 30000 போலீஸார் இவர்களைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள்
இப்படி சிறையிலிருந்து தப்பித்திருக்கும் ரொடோய்ன் ஃபெய்ட்.க்கு இப்படி சிறையிலிருந்து தப்புவது இது முதல் முறை இல்லை. வங்கிக் கொள்ளை, நகைக்கடை கொள்ளையென பலகுற்றங்களில்ஈடுபட்டிருக்கும் பெரிய கொள்ளைக்காரனா இவருக்குத் திட்டமிட்டு குற்றங்கள் செய்வதும்ஜெயிலிருந்து அட்டகாசமாகத்தப்பிப்பதும்  வாடிக்கை.

நீண்ட தேடுதலுக்குப்பின் 1990 களில் ஒரு வங்கிகொள்ளைக்காகக் கைது செய்யப்பட்டு 10 ஆண்டுகள் சிறையிலிருந்தபின் 2010ல். தண்டனைக்காலம் முடிந்தவுடன் “நான் திருந்திவிட்டேன், இனி திருடமாட்டேன் பாவமன்னிப்புக் கேட்டுப் புத்தகம் எழுதிக்கொண்டிருக்கிறேன், சமூக சேவை செய்யப் போகிறேன்” என்றெல்லாம் டிவிக்களில் பேட்டி கொடுத்துக்கொண்டிருந்தார்.  வெளிவரப்போகும் வரப்போகும் தன் புத்தகத்துக்காகப் பல நகரங்களில் கூட்டங்கள் நடத்திக்கொண்டிருந்தார்
.
ஆனால் மீண்டும் அடுத்த வருடமே ஒரு நகைக்கடை கொள்ளையில் பிடிபட்டு புத்தகம் வெளிவரும்முன்னரே உள்ளே போனார்.  அந்தக்கொள்ளையில்  ஒரு போலீஸ்காரரைக் கொன்றதால் 25 வருடத் தண்டனையுடன் 2013 ம் ஆண்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்

 ஆனால் ஒரே வாரத்தில் அந்தச் சிறையில் அவரைப் பார்க்கவந்தவர்கள் கொடுத்த டிஷ்யூ பேப்பர் பெட்டியிலிருந்த வெடிகுண்டுகளைவெடித்தும்  காவலாளிகளைப்  பிணைக்கைதிகளாகப் பிடித்துக்கொண்டும் சிறையிலிருந்து தப்பிவிட்டார். வலைவீசித்தேடி 6 வாரத்துக்குள் பிரான்ஸ் போலீஸ்  அவரைத் தேடிக் கண்டுபிடித்தது, மீண்டும் 25 வருடத் தண்டனை கொடுக்கப்பட்டு இந்த அதிபாதுகாப்புச்சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
அங்கிருந்துதான் உலக வரலாற்றிலேயே மிக துல்லிமாகத் திட்டமிடப்பட்டு வேகமாகச் செயலாக்கப்பட்டிருக்கும் இந்த சாகசச்செயலினால் இப்போது தப்பியிருக்கிறார்.

கடந்தமுறை விடுதலையாகி வந்தபோது இவர் டி வி பேட்டிகளில் சொன்னது. “நான் அல்பேஷினோ, ஸ்கார்ஃபேஸ், ஹீட் போன்ற ஹாலிவுட் படங்களைப் பார்த்துத்தான் என் கொள்ளைகளைத் திட்டமிட்டேன். 20 முறை பல மணிநேரம் அந்த படங்களைத் திரும்பத்திரும்பப் பார்த்துத்தான் என்னை வங்கிக்கொள்ளைக்கு தயாரித்துக்கொண்டேன். பாரிஸில் நடந்த உலகப்படவிழாவிற்கு வந்திருந்த ஹீட் என்ற படத்தின் டைரக்டர் மைக்கேல் மான் அவர்களிடமே “நீங்கள் தான் எங்கள் கொள்ளை முயற்சிகளின் டெக்னிகல் டைரக்டர்” என்று நான் சொல்லியிருக்கிறேன்
.
நிகழ்ந்த துணிகரமான சிறை உடைப்பு, வங்கிக்கொள்ளை போன்றவற்றைத்தான் நாங்கள் படமாக எடுக்கிறோம் என்று ஹாலிவுட்காரர்கள் சொல்லுகிறார்கள். . ஆனால் இவர்களின் படத்திலிருந்துதான் நான்  தொழிலைத் திறமையாகச் செய்யக் கற்றேன்  என்கிறார் இந்தக் குற்றவாளி.

உடனடியாக இல்லாவிட்டாலும் கூட அடுத்த கொள்ளை முயற்சியில் நிச்சியம் சிக்கிவிடுவான் என்று நம்பிக்கையுடன் இருக்கும் பிரான்ஸ் போலீஸின் கவலையே வேறு. 
பிடித்துச் சிறையில் அடைத்த பின் இவரை எப்படி தண்டனைக்காலம் வரை  பாதுகாப்பது என்பது தான் அது. 


10/7/18

திறமைகள் ஓய்வதில்லை.



சில தமிழ் சினிமாக்களின் கதாநாயகர்கள் எப்படி மக்கள் மனதில் நீங்காத இடத்தைப்பெற்றிருக்கிறார்களோ அதேபோல் சில தமிழக போலீஸ் அதிகாரிகளும் மறக்க முடியாதவர்களாக, மதிக்கப்படுபவர்களாகயிருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் திரு விஜயகுமார் ஐபிஎஸ்.
பள்ளியில் படிக்கும்போதே ஒரு போலீஸ் அதிகரியாக வேண்டும் என்ற தாகத்துடன் வளர்ந்தவர் விஜயகுமார். காரணம் அவரது தந்தை. மிடுக்கான, கண்டிப்பான போலீஸ் அதிகாரியான கிருஷ்ண நாயர்தான் அவரது ரோல் மாடல். அதனால் தான் 1975ல் ஆட்சிப்பணிக்கான தேர்வில் ஐஏஎஸ்ஸில் முதல் ரேங்க் பெற்றிருந்த போதும் காக்கியின் மீதிருந்த காதலால் இரண்டாவது இடம் பெற்றிருந்த ஐபிஎஸ்ஸை தேர்ந்தெடுத்தார்.

ஒரு காவல் துறைத் துணைக் கண்காணிப்பாளராகத் தன் வாழ்வைத் தொடங்கிய விஜயகுமார், தேசிய காவல் அகாடமியின் இயக்குநர் பதவிவரை காவல் துறையின் பெரும் பதவிகள் அனைத்தையும் பார்த்தவர். தமிழகப் போலிஸின் 20 ஆண்டு சவலாகயிருந்த வீரப்பனை வீழ்த்தியது இவர் அடையாளம். 

சில பதவிகள் அதிலிருக்கும் அதிகாரிகளால் பேசப்படும். விஜயகுமார் எந்தப் பதவியிலிருந்தாலும் அதில் தன் அடையாளத்தைப்பதித்தவர். மாவட்டங்களிலிருந்தபோதும் சரி சென்னைக் கமிஷனர்களாகயிருந்த போதும் சரி நிறைய ரவுடிகளை ஒடுக்கியவர். ஒரே வாரத்தில் 1000 பேரை கைது செய்தவர். தமிழகப் போலீஸில் எஃபி அருள். வால்ட்டர் தேவாரத்துக்கு அடுத்தபடியாகத்தமிழக ரவுடிகள்தல்காட்டாமல் இருந்தது இவர்காலத்தில் தான். அதற்காக  7 என்கவுண்டர்களை நடத்தி சர்ச்சைகளுக்கும் உள்ளானவர்
அபோது அவர் சொன்னது

“நான் எனக்குக் கீழ் பணியாற்றுவோரிடம் அடிக்கடி சொல்வது துப்பாக்கி வெறும் பொம்மை அல்ல என்பதைத்தான். ஒரு அரசாங்கம் யாரிடமாவது சும்மா துப்பாக்கியைக் கொடுத்துச் சுடச் சொல்லுமா? காவல் துறையிடம் கொடுத்திருக்கிறது என்றால், ஏன்? மக்களைக் காப்பாற்றுவதற்காக. அப்படிக் காப்பாற்ற நேரும்போது, உன் உயிருக்கு ஆபத்து வந்தால் உன்னைக் காத்துக்கொள்வதற்காக. ஆனால், எதற்கெடுத்தாலும், துப்பாக்கியைத் தூக்குபவனோ, தூக்கச் சொல்பவனோ அல்ல நான். தவிர்க்க முடியாத தருணத்திலேயே அவை வெடிக்கின்றன”
துணிவான இந்த அதிகாரி ராஜிவ் பிரதமாராக இருந்தபோது அவர் பாதுகாப்புகாக உருவாக்கபட்ட ஒரு விசேஷப்படைக்கு தலமைதாங்க நியமிக்கபட்டவர் மீண்டும் தமிழத்டில் ப[ல பதவிகளை வகித்தவந்த  வந்த இவரை மத்திய அரசு அனைத்திந்திய போலீஸ் உயர் அதிகாரிகளுக்குப் பயிற்சியளிக்குக்கும்  தேசிய போலீஸ் அகடமியின் தலைவராக நியமித்தது. தொடர்ந்து மத்திய ரிசர்வ் போலீஸின் தேசிய தலமைப்பொறுப்பை ஏற்று அதில் பல சிறப்பு பயிற்சி திட்டங்களை உருவாக்கியபின் ஒய்வு பெற்ற இவருக்கு அன்றைய உள் துறை அமைச்சர் திரு சிதம்பரம் உள்துறை அமைச்சகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் பதவி வழங்கினார். அந்தப்பதவியிலிருக்கும்போது விஜயகுமார், வெறும் ஆலோசகராக மட்டும் இல்லை; களத்தில் நின்றார். தேர்தல் புறக்கணிப்பைப் பிரகடனப்படுத்திய மாவோயிஸ்ட்டுகள் பஸ்தாரில் நடத்திய தாக்குதலில் பாதுகாப்புப் படை வீரர்கள் இறந்தபின்னர்  இவரின் திட்டப்படி கொடுக்கபட்ட பதிலடி இன்றும் பேசப்படும் ஒரு விஷயம்.
“ஐந்து லட்சம் பட்டதாரிகளிலிருந்து 150 பேர் காவல் துறை அதிகாரிகளாகத் தேர்ந்தெடுக்கப்படும் முறை உலகில் வேறு எங்கும் இல்லை. அவ்வளவு திறனும் அறிவும் நம்மிடம் இருக்கிறது. இது பலம். இந்தப் பலத்தைப் பயன்படுத்திக்கொள்ள முடியாதது பலவீனம். தேவை எதுவென்றால், சீர்திருத்தம்.” என்று துணிந்து போலீஸ் துறையைப் பற்றி எழுதியிருப்பவர் இவர்.

தன் அரசு ஆலோசகர் பதவிக்காலம் முடிந்த அன்று (கடந்த ஜுன்13ம் தேதி) அமைச்சருக்கும் அதிகாரிகளுக்கும், காவல்துறையினருக்கும் நாலு வரியில் தன் முக நூல் பக்கத்தில் நன்றியைத்தெரிவித்தபோது விஜயகுமாருக்கு அடுத்த ஒரு வாரத்தில் ஒர் ஆச்சரியம் காத்திருப்பது தெரியாது.

காஷ்மீர மாநில  அரசியல் சதுரங்கத்தில் தவறாகக் காய்கள் நகர்ந்தப்பட்டதின் விளைவாக ஆட்சி கவிழ்ந்து குடியரசு தலைவர் ஆட்சி அறிவிக்கபட்டவுடனேயே கவர்னருக்கு ஆலோசகர்களாக நியமிக்கபட்ட அதிகாரிகளில் ஒருவர் விஜயகுமார். திறமையான அதிகாரி என்பது மட்டுமில்லாமல் காஷ்மீரில் எல்லைக்காவல் படை ஐஜியாக இருந்த காலத்தில் இவர் பூட்ஸ் படாத காஷ்மீர் எல்லைப்பகுதி எதுவுமில்லை என்பதும் ஒரு காரணம்
காஷ்மீரத்தில் என்று தணியும் இந்த வன்முறை தாகம் என்று பல இந்தியர்கள் காத்திருக்கும் இந்த நேரத்தில் தொலைநோக்குப் பார்வையோடு கூடிய, ஆழமான ஆலோசனைகளை அரசுக்கு வழங்க ஒரு முன்னாள் தமிழகப் போலீஸ் அதிகாரி நியமிக்கபட்டிருப்பது நமக்குப் பெருமை தரும் விஷயம்.