19/9/10

யாருக்காக இந்த ஓட்டம்கடந்த சில ஆண்டுகளாக மிகப்பெரிய  அளவில் விளம்பரங்கள் அரசியல், சினிமா பிரபலங்களின் கொடிசைப்புகள்,இசைகலைஞர்களின் நிகழ்ச்சிகள்  என்ற  ஆராவாரங்களுடன்துவக்கம்  என்று நிகழ்ந்து கொண்டிருக்குகிறது மாரத்தான் ஓட்டங்கள்முழுமராத்தான், அரை மாராத்தான், நகரின் பெயரில் ஒரு சிறியமினி மாராத்தான் என பல ஒட்டங்கள்சென்னைக்கு  4 ஆண்டுகள் முன் அறிமுகமான இந்த ஓட்டங்கள் அதற்கு முன்பே மும்பபையிலும் டெல்லியிலும் ஆண்டுதோறும் நிகழ்கின்றன. பல கோடிகளில் பணம்புரளும்  இந்த ஓட்டங்களுக்கு கார்ப்ரேட்களின் ஸ்பான்ஸ்ர்ஷிப் ஆண்டுதோறும் அதிகரித்துவருகிறது,
1981ல் புற்று நோய் பற்றிய விழிப்புணர்ச்சி ஏற்படுத்தவும் அதற்கான நிதி ஆதாரத்தை பெருக்கவும் கனடா நாட்டில் டெரிபாக்ஸ் எனபவரால் மிக எளிமையாக துவக்கபட்டு மிக பெரிய வெற்றியை எட்டிய இந்த சமூக விழிப்புணர்வு ஒட்டம் இப்போது உலகின் பல நாடுகளில் எதாவது  ஒரு சமுக பிரச்சனை விழப்புணர்ச்சிகாக நடத்தப்பட்டு பணம் சேர்க்கபடுகிறது.
ஆனால் இங்கே இது ஒரு பெரிய விளம்பர வியாபரமாகி விட்டது. பங்கேற்பவர்களுக்கு ஓட்டதின் நோக்கம் தெரிவதில்லை. ஸ்பான்ஸ்ர்களின் விளம்பரம் ஒட்டத்தின் நோக்கத்தையும் அது மக்களிடம் ஏற்படுத்தவேண்டிய தாக்கத்தை விட அவர்களின் நிறுவனம் அல்லது விற்பனை செய்யும் சாதனங்களை பற்றிய தாக்கத்தைத்தான் அதிகம் ஏற்படுத்துகிறது.  கடந்த ஆண்டு  துபாயில் வாழும் புற்று நோயால் தாக்கபட்ட  அக்காஷ் சென்னையில் டெரிபாக்ஸ் ஒட்டத்தை அறிமுகபடுத்தினார். இதற்காக பல பள்ளிகளில் காலை பிரார்த்தனை கூட்டதில் பேசினார். சில  வாரங்களக்கு முன் சென்னை  IIT யில் நிகழந்த இரண்டாமாண்டு ஆண்டு ஒட்டத்தில் கடந்த ஆண்டைவிட அதிகம்பேர் பங்கேற்றது மகிழ்ச்சியான விஷயம். ஆனால் அதில் பலருக்கு நோக்கம் தெரியாதிருந்ததுதான் வருத்தமானது. ஏன் ஒடினீர்கள்? எனற் கேள்விக்கு என் டிரையினர்  இது ஒரு நல்ல பயிற்சிக்கான வாய்ப்பு போ என்று சொன்னார்என் பிரண்டஸ் கூப்பிட்டார்கள் போன்ற பதில்கள் தான் கிடைத்தது.
அதேபோல் சமீபத்தில்  80000 பேருக்குமேல் பங்குகொண்டதாக அறிவிக்கபட்ட. சென்னை மாராத்தானில் பங்குகொண்ட பலருக்கு அது உதவுப்போகும் நிறுவனம் பற்றி எதுவும் தெரிந்திருக்கவில்லை. “எங்கள் வங்கி இதை ஸ்பான்ஸர் செய்திருக்கிறது.பெரிய அதிகாரிகள் பங்கேற்கிறார்கள் அவர்கள் கண்ணில் நான் பட வேண்டும்,” “சிவமணியின் டிரம்ஸ்சை இலவசமாக கேட்கலாம்எனபது போன்றது தான் பலரின் பதில். பல கோடிகளில் இந்த நிகழ்ச்சிகளுக்கு விளம்பரம்  செய்பவர்கள்  கடந்த ஆண்டுகளில் நடந்த ஓட்டங்களினால் சேகரித்த பணத்தில் என்ன தொண்டு செய்தார்கள் என்பதை பற்றி ஒரு சின்ன விளம்பரம் கூட கொடுக்காதபோது பங்குகொள்பர்களுக்கு தெரியாமல் இருப்பதில் வியப்பு ஒன்றுமில்லை என்றார், 50 குழந்தைகளை கூட்டிவந்த ஒரு ஆசிரியை.
ஒடியவர்கள் ஒடும்போழுதே குடித்துவிட்டு தூக்கிபோட்ட பிளாஸ்டிக் பாட்டில்களை பொறுக்க எழைக் குழந்தகள் ஒடிவந்த காட்சி மனதை உறுத்தியது.
பதவியிலிருக்கும் அரசியல்வாதிகளின் ஆசியோடு சிலர் தங்களை முன் நிறுத்திக்கொள்ளவும் ஸ்பான்ஸ்ர்கள் அவர்கள் உதவியோடு தங்களது தேவைகளை எளிதாக நிறைவேற்றிக்கொள்ளவும் இந்த ஓட்டங்கள் ஒரு எளிதான வழியாகிவிட்டது என்கிறார் ஒரு மூத்த பத்திரிகயாளார். கார்ப்ரேட்கள்  அவர்களது சமூக கடமையாக செய்த பணிகளை வெளியிடவேண்டியது(Corporate Social Responsblity) இபோது கட்டாயமாக்கபட்டிருக்கிறது. அதனால் சில நிறுவனங்கள்  அந்த கணக்கில் புத்திசாலிதனமாக இந்த விளமபரங்களை செய்கிரார்கள். தவிர்க்கமுடியாதாது   இது என்கிறார் பங்கு பெற்ற ஒரு நிறுவனத்தின் உயர் அதிகாரி.
1981 டெரிபாக்ஸ் கனடாவில் ஓட்டத்தை துவக்கியபொழுது தேடிவந்த ஸ்பான்ஸ்ர்களை நிராகரித்தார்.சொன்ன காரணம்விளம்பரங்கள் ஒட்டதின் நோக்கத்தை தகர்த்துவிடும்.” தொடந்து அந்த ஓட்டத்தை உலகமெங்கும் நடத்தி  பல கோடிகளை நிதியாக சேர்த்தளிக்கும்   அவரது அறக்கட்டளை  இன்றும் கார்ப்பெரட் விளம்பரங்களுக்காக ஸ்பாஸ்ர்களை ஏற்பதில்ல.

(கல்கி 19.09.2010)

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்கள்