செங்கோட்டைரயில் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
செங்கோட்டைரயில் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

11/4/18

மாட்டுவண்டியில் வந்த ரயில் என்ஞின்


 மன்னர்மூலம் திருநாள் ராமவர்மா திருவாங்கூர் சமஸ்தானத்தை ஆண்டு கொண்டிருந்த காலத்தில்(1885-1924) அந்தச் சமஸ்தானம் நிர்வாகத்திலும் அடிப்படை வசதிகளிலும் பல புதிய திருப்பு முனைகளைச் சந்தித்தது. அதில் ஒன்றுதான் கொல்லத்திலிரு;ந்து சென்னைக்கு ரயில் பாதை. அன்று சென்னையிலிருந்து திருனெல்வேலி வரை ரயில் பாதையிருந்தது. ஆனால் அன்றை ரெயில்வே நிர்வாகம் அதைக் கொல்லம் வரை நீடிப்பதில் ஆர்வம் காட்டாதிருந்ததற்கு காரணம் தமிழகத்தையும் திருவாங்கூர் சமஸ்தானத்த பகுதிகளை இணைக்கும் பகுதியிலிருந்த அடர்ந்த ஆரியங்காவு காடு. செலவு அதிகமாக்குமிந்தததிட்டத்தினால் ரயில் கட்டணம் அதிகமாகும் அதனால் ரயிலை மக்கள் பயன்படுத்தமாட்டார்கள். என்பது அவர்கள் கணிப்பு.

ஆனால் மன்னர் அந்தப்பாதை அமைக்கப்டவேண்டுமென்பதில் தீவரமாகயிருந்தார். திட்டச் செலவில் பாதியை சமஸ்தானமேற்கும் எனத் தென்னிந்திய ரயிவே கம்பெனியுடன்1900 ஆம் ஆண்டு ஒப்பந்தம் செய்து கொண்டார். திருநெல்வேலியிலிருந்து செங்கோட்டை(அப்போது இது திருவாங்கூர் சமஸ்தானைச்தேர்ந்திருந்த பகுதி) வரையிருந்த பாதையை 45 மைல்களுக்கு கொல்லம் வரை நீட்டிப்பது என்று முடிவாயிற்று.


நாட்டின் முதல் தனியார் – அரசு கூட்மைப்பு இதுதான். பாதை அமைப்பதில் எழுந்த பிரச்சனைகள் பல. அடர்ந்த காட்டுப் பகுதிகளில் பணிசெய்தவர்கள் மிருகங்களால் தாக்கபட்டனர். திட்டமிட்டபடி சிறிய ம்லைகளை குடைந்து குகைகள் அமைப்பது எளிதாக இல்லை. அந்த மலைக்குகைகளின் பக்கவாட்டு சுவர்கள் சரிந்து பாதையை மூடிவிடும் அபாயமிருந்தது. 4 மலைக்குகைகள்,5 பெரிய பாலங்கள் 120 சின்ன சின்னப்பாலங்கள் என்று பயணிக்கும் இந்த ரயில் பாதையின் இரு பக்கமும் பரவிக்கிடக்கும் பசுமைக்காடு. பகவதிபுரம்- ஆரியங்காவு என்ற இரண்டு ஸ்டேஷ்ன்களுக்கிடையே ஒரு கீலோமிட்டருக்கு நீண்ட குகைப்பாதை.



ஒரிடத்தில் இரண்டு மலைச்சரிவுகளுக்கு இடையிலிருக்கும் பள்ளத்தாக்கை கடக்க பாலம் அமைக்கவேண்டியிருந்தது. மிகக்குறுகிய காலத்தில் கருங்கற்களால் பதிமூன்று தூண்களுடன். 3000 அடி நீளத்தில் ஒரு பாலம் எழுப்பப்பட்டது. இந்தப் பாலத்தின் தூண்களை வெறும் தூண்களாக அமைக்காமல் அழகான ஆர்ச்களுடன் வடிவமைத்தார்கள் அன்றைய கேரள கட்டிடக் கலைஞர்கள். இதை 13 கண் பாலம் என அழைத்தார்கள். இரும்பு கர்டர்களை உபயோகிக்காமல் கட்டபட்ட இந்தப் பாலம் அன்றைக்கிருந்த தொழில்நுட்பங்களில் மிகப்பெரிய சவால்.
பாலம் முடிந்தகையுடன் தண்ட வாளங்களை பதிக்க ஆரம்பித்துவிட்டனர். இரண்டே ஆண்டுகளில் செங்கோட்டை வரை ரயில் பாதை அமைக்கும் பணி முடிந்துவிட்டது.
1900 ஆம் ஆண்டு 30 லட்சம் என மதிப்பீட்டில் துவங்கபட்ட இந்த இந்தத் திட்டம் 1902ல் முடியும்போது 1.12 கோடியில் போய் நின்றது


பஞ்சாங்கள் பார்த்துப் பண்டிதர்களை ஆலோசித்தபின்னர் மன்னர் 1904 ஆம் ஆண்டு ஜீன் 1ம் தேதி(அன்று மன்னரின் பிறந்த நாள்) கொல்லத்திலிருந்து பூஜைக்களுக்குப் பின்னர் மன்னர் கொடியசைத்து ரயிலைத்துவக்குவாரென முடிவு செய்து அறிவிக்கப்பட்டது.


அப்போது எதிர்பாரமல் எழுந்தது ஒரு சிக்கல். துவக்க விழா ரயிலைக் கொல்லத்திலிருந்து இழுத்தச்செல்ல வேண்டிய எஞ்ஞின் மறுமுனையிலிருந்த செங்கோட்டையிலிருந்தது. விழா நாளுக்கு முன் அதைக் கொண்டுவரலாம்   எனத் திட்டமிட்டிருந்த நிர்வாகத்திற்கு வந்த செய்தி “ஆரியங்காவு கணவாயில் இடையில் புனலூருக்கு முன்னால் உள்ள ஒரு குகையில் மண் சரிந்து ரயில் பாதையை மூடிவிட்டது” எஞ்சினை கொல்லத்துக்குக்கொண்டுவர முடியாது.


செய்தியைச் சொல்லி மன்னரை வருத்தமடையச் செய்ய விரும்பாத தலமை எஞ்ஞினியர் உடனடியாக அந்த எஞ்சின் பாகங்களைக் கழட்டி செங்கோட்டையிலிருந்து தூத்துக்குடிக்கு எடுத்துச் சென்று அங்கிருந்து படகில் கொல்லத்திற்கு கொண்டுவந்து சேர்த்தனர் படகில் வந்த எஞ்சினின் பகுதிகள் மாட்டுவண்டியில் ரயில் நிலையத்துக்குக் கொண்டுவரப்பட்டது. இரண்டு பகல் இரண்டு இரவு தொடர்ந்து வேலைசெய்து அந்த எஞ்சினை அமைத்துத் தயாரக இருந்த பெட்டிகளுடன் இணைத்துத் துவக்க விழாவிற்கு அலங்காரங்களுடன் நிறுத்தினர்.

ஒரு சிக்கலான சவாலைச் சமாளிக்கும் சமயோசிதமிக்க அதிகாரிகளும் அவர்களின்  கட்டளைக்கேற்ப ஆர்வத்துடன் செயல் பட்ட தொழிலளார்களுடனும்  இருந்திருக்கிது அன்றைய ரயிவே நிர்வாகம் . 
மாலைகள் அணிந்த அந்த ரயில் எஞ்சின் 6 பெட்டிகளுடன், மேளதாளங்கள், வேதங்கள் முழங்க, 21 பிரங்கி சல்யூட்டுடன் புறப்பட்டுப் புனலூர் வரை சென்று திரும்பியது.

அன்றைய விழாவில் கெளரவிக்கபட்டவர் கொல்லம் ரயில் நிலையத்தின் முதல் ஸ்டேஷன் மாஸ்டர் ராமய்யா. ரயில்களுக்குப் பெயர் வைக்கும் பழக்கம் அப்போதே இருந்திருக்கிறது. இந்த ரயிலின் பெயர் “தூம சகட சூரன்”
சில வாரங்களில் பாதை சீராக்கப்பட்டு 1904 நவம்பர் முதல் தினசரி செங்கோட்டை கொல்லம் வரை ரயில் ஒட ஆரம்பித்தது.


நாடு முழுவதும் அகல ரயில் பாதைமாற்றம் என்ற திட்டத்தில் இந்தப்பாதையும் இணைக்கபட்டது. அதற்காக இந்தப் பாதையில் செல்லும் ரயில்கள் 2010 முதல் நிறுத்தப்பட்டன.
120 ஆண்டுகளுக்குமுன்னால் மன்னராட்சியில் 2 ஆண்டுகளில் முடிக்கபட்ட இந்த 48 கீமி பாதையை அகலப் பாதையாக மாற்ற எடுத்துக்கொண்ட காலம் 8 ஆண்டுகள் பட்ஜெட்டில் போதிய நிதி ஒதுக்கப்படவில்லை என்பதைத்தாண்டி வேறுபல அரசியல்களும் இருந்தன.
ஒரு வழியாக இந்தப்பாதை அகலப்பாதையாக மாற்றபட்டுவிட்டது. கடந்த மாதம் 31ம் தேதி முதல் ரயில்கள் ஓடத்துவங்கியிருக்கின்றன. இந்தப்பாதை இணைப்பின் மூலம் தமிழகத்தின் மிகப்பழமையான ரயில் பாதையான திருநெல்வேலி, தென்காசி செங்கோட்டை கொல்லம் ரயில் பாதை மீண்டும் உயிர்பெற்றிருக்கிறது. பயணங்களில் ஆர்வமுள்ளவர்கள் அவசியம் பயனம் செய்ய வேண்டிய பாதை இது. அடர்ந்த காடுகளும் இருண்ட குகைகளும், 13 கண் பாலத்தில் ரயில் மெல்ல அழகாகத் திரும்புவதும் மனதில் என்றென்றும் நிற்கும் பசுமை காட்சியாகப் பதியும்.
ஒரு மன்னரின் தொலைநோக்கையும் இந்திய ரயிவேயின் சாதனைச் சரித்திரத்தையும் சொல்லும் இந்த ரயில்பாதை புத்துயிர் பெற்றதை கேரளத்தின் கொல்லம் ரயில் நிலையத்தில் அரசியல் வாதிகளும் அதிகாரிகளும் விழா எடுத்து வரவேற்றிருக்கிறார்கள். தமிழகத்தில் வழக்கம்போல் ஒடும் ஒரு ரயிலாகத்தான் இது  புறப்பட்டிருக்கிறது. சொன்ன காரணம். அடுத்த மாதம் நடைபெறப்போகும் அதிகாரபூர்வமான விழாவில் மத்திய அமைச்சர்களுடன் கலந்துகொள்வோம்