சவாலே சமாளிதொடர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சவாலே சமாளிதொடர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

14/2/13

இங்கிலாந்து போய் திரும்பிவந்த இந்திய பிஸ்கட்



பெயரைச்சொன்னாலே சின்ன குழந்தைகூட பிஸ்கட் எனறு புரிந்து கொள்ளும் பெயர் பிரிட்டானியா. 120 ஆண்டுகளுக்கு முன் கல்கத்தாவில் ஒரு சிறிய வீட்டில் 295 ரூபாய் மூலதனத்தில்  பிஸ்கட் பேக்ரியாக ஒரு இந்தியரால் துவக்க பட்ட இந்த நிறுவனத்தை இரண்டாம் உலகபோரின் போது பிஸ்கட்டுக்கு ஏற்பட்ட டிமாண்டால் கல்கத்தாவிலிருந்த வெள்ளைகாரார்களால் வாங்கி விரிவாக்கபட்டது. மிகப்பெரிய அளவில் பணம் ஈட்டிய அந்த நிறுவனம் பம்பாயில் பெரிய தொழிற்சாலையை நிறுவி இங்கிலாந்துக்கே இங்கிருந்து பிஸ்கட் தயாரித்து அனுப்பிக்கொண்டிருந்தது. 1821லியே இறக்குமதி செய்யபட்ட கியாஸ் அடுப்புகளிலும்  தொடர்ந்து மின்சார அடுப்புகளிலும் தரமான பிஸ்கட்கள் தயாரித்த இந்தநிறுவனம் அந்த கால்கட்டத்திலியே 1 கோடி ருபாய் விற்பனையை எட்டியிருக்கிறது. ஆனால் முழு முதலீடும் இங்கிலாந்துகாரர்கள் வசமாகிவிட்டதால் கம்பெனியின் தலமையகம் இங்கிலாந்துக்கு மாறியது.  தொடர்ந்து இந்தியாவில் பிஸ்கட் தயாரித்து விற்பனையை மற்றொரு ஆங்கில நிறுவனம் மூலம் செய்து கொண்டிருந்த இந்த பிரிட்டானியா இந்திய நிருவனமாக மாறியது  பல போராட்டங்களுக்கும் திருப்பங்களுக்கும் பின்னர் தான்.
டெல்லி கிளாத் மில்ஸ்(DCM) என்ற நிறுவனத்தின் அதிபர் ,நுஸ்லி வாடியா (Nusli Wadia)மிக வேகமாக வளரும் தொழிலை நிறுவ எண்ணிக்கொண்டிருந்தவர். இந்த பிஸ்கட் நிறுவனத்தை இந்தியாவிற்கு கொண்டுவர விரும்பி இங்கிலாந்திலேயே  மற்றொரு ஆங்கிலேய நிறுவனத்துடன் இணைந்து முதலீடு செய்தார். அப்போது அந்த நிறுவனத்தின் தலமைப்பொறுப்பிலிருந்த ஒரு இந்தியர் அவர்கள் நிருவனத்திற்கே தெரியாமல் நிறுவனத்தின் பெரும்பாலான பங்குகளை ஒரு அமெரிக்க பிஸ்கட் நிறுவனத்திற்கு விற்றுவிட்டார். இந்த மோசடியை மறைக்க அவர்பிரச்சனைகளை எழுப்ப, வாடியா பணம் முதலீடு செய்த நிறுவனத்துடன் போராடவேண்டியிருந்தது.இங்கிலாந்து கோர்ட்களில் வழக்குகள், அமெரிக்க கோர்ட்களில் வழக்குகள் எனத்துவங்கி பல திருப்பங்கள், வழக்குகள் எல்லாம் ஒய ஆன காலம் 7 ஆண்டுகள். ” கோர்ட்களிலும் போர்ட் ரூம்களிலும் நடந்த இந்தியாவின் மிகப் பெரிய கார்பேரட் போராட்டம்” என  இதை எக்னாமிஸ் டைம்ஸ் வர்ணித்தது எல்லாம் முடிந்து தொழிற்சாலையின் விரிவாக்கம் என்ற திட்டங்களுடன் களம் இறங்கிய வாடியா சந்தித்தது இன்னொரு புதிய பிரச்னை. வெளி நாடுகளில் போராட்டங்களை கூடவே இருந்து கோர்ட், வழக்கு பிரச்சனைகளை சந்தித்த பிஸினஸ் பார்ட்னர்களான டானொன்  (Danone) என்ற பிரஞ்ச் நிருவனம் பிரிட்டானியாவையே தங்கள் வசபடுத்தம் முயற்சியில் இறங்கிவிட்டது. அதுவும் இந்தியாவிலேயே ஒரு பிஸ்கட்  ஆலையை. முதற்கட்டமாக பங்களூரில் ஒரு உள்ளூர் நிருவனத்துடன் இணைந்து ரொட்டிகள் தயாரிக்கும் கம்பெனியையாக துவக்கிவிட்டார்கள், இதுஅன்னிய நாட்டு நிறுவனங்கள் பங்கு கொள்ளும் ஜாயிண்ட் வென்ச்சர்கள் என்ற திட்ட விதிமுறைகளுக்கு எதிரானது. இந்த திருப்பத்தை சற்றும் எதிர் பார்க்காத வாடியா மீண்டும் அரசின் துறைகளையும் நீதிமன்றங்களையும் நாடவேண்டிய நிலைக்கு தள்ள பட்டார். அரசின் விதிமுறைகளை சுட்டிகாட்டி வாதிட்டது இங்கிலாந்து நிறுவனம். நீண்ட போராட்டங்களுக்கு பின்னர் அரசு அந்த நிறுவனத்தின் பணிகளை முடக்கியது. . பிரச்னைகள் தொடர்ந்தாலும் இந்த இந்திய தயாரிப்புக்கும் இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் வரவேற்பு இருக்கும் என வாடியா நம்பினார். அதன்படியே திட்டமிட்டு படிப்படியாக வளர்ந்த இந்த நிருவனம் 2004ம் ஆண்டில் ஆண்டுக்கு நாலு லட்சம் டன் பிஸ்கட்கள் தயாரிக்கும் நிருவனமாக உயர்ந்தது. ஆனால் அந்த ஆண்டு இவர்கள் சந்தித்த சவால் வினோதமானது. பிரிட்டானியா பலவகைகளான பிஸ்கட்களை தயாரித்து வந்தது. அதில் ஒன்று ”டைகர்” என்ற வகை. இந்த தயாரிப்பை இங்கிலாந்திலிருக்கும் இவர்களது  பார்ட்னர்கள் தற்போது போட்டியாளார்ளாகிவிட்டனர். அந்த நிருவனம் உலகின் பல நாடுகளில் டைகர் பிஸ்கட்களை தயாரித்து விற்க ஆரம்பித்து விட்டனர். அது எங்களுடைய தயாரிப்பு. மற்றவர்கள் எங்கள் ஒப்புதல் இல்லாமல் அதை தயாரிப்பது  அறிவார்ந்த சொத்து உரிமை (intellectual propertyright)   மீறல் வகையில் குற்றம் என விற்கபடும் ஒவ்வொரு நாட்டிலும் வழக்குகள் தொடர்ந்து போராடினார் வாடியா.. ஒரு இந்திய நிறுவனம் தனது படைப்புக்கு இப்படி போராடியது இதுவே முதல் முறை. சில நாடுகளில் இதற்கான சட்டங்கள் மிக ஆரம்ப நிலையில் அல்லது இல்லாமலேயே இருந்தனால் வழக்குகளில் வெற்றி கிடைக்கவில்லை, ஆனாலும் அயராது வாடியா குழுமத்தினர் போராடினர் மலேசியா சிங்கபூர் நாடுகளில் நடந்த இந்த வழக்கில் இறுதியில் பிரிட்டானிய வெற்றியும் 22 ருபாய் கோடி நஷ்ட ஈடும் பெற்றது.
ஆனாலும் அடுத்த சில ஆண்டுகளில் அந்த  நிறுவனம் இதை  மீண்டும் தயாரிக்காமலிருக்க  250 மில்லியன் டாலர்கள் கொடுத்து தங்களது பங்கு மூதலீட்டை திரும்ப பெற்றதோடு அவர்கள் பிஸ்கட் தயாரிப்பு தொழிலிருந்தே விலகும்படி ஒரு ஒப்பந்தத்தையும் பெற்றனர்.. எங்கள் தயாரிப்புக்கே நாங்கள் கொடுத்த ”நியாமான” விலை இது என்கிறார் வாடியா. இவர் தனது நிருவனத்தின் தயாரிப்பை ஒரு பிஸ்கட் என்ற அளவில் பார்க்காமல் அதை கம்பெனியைன் சொத்தாக பார்ப்பதை உலகம் புரிந்து கொண்டது. ஒரு இந்திய தயாரிப்பை காப்பிஅடித்து தங்களது தயாரிப்பாக காட்ட இனி மற்ற நாட்டு நிருவனங்கள் தயங்கும் என சொல்லுகிறார். நாடு முழுவதும் 2500 க்கும்மேபட்ட மிக பெரியஸ்டாக்கிஸ்ட்கள்மூலமும் எண்ணற்ற சிறு கடைகள் மூலமும் ஒரு நாளைக்கு விற்கும் பிஸ்கட் களின் எண்ணிக்கை 1.5 கோடிகளுக்கு மேல். மிக திறமையான நிர்வாகிகள் நிர்வகிப்பில் விற்பனை ஆண்டுதோறும் உயர்கிறது. ஒரு குறிபிட்ட வகை நாடு முழுவதும் வாரம்தோறும் வாங்கபடுவதையும் பள்ளி விடுமுறைகாலங்களில் குறைவதையும் கவனித்த இவர்கள் அதை ஆராயந்தபோது,  அந்த பிஸ்கட் குழந்தைகளுக்கு பள்ளிக்கு அனுப்பும்போது கொடுத்து  அனுப்படுவதையும்  அது பிரஷ் ஆக இருப்பதற்காக பெரிய பாக்கெட் வாங்கமல் சிறிய பாக்கெட்களை வாங்குகிறார்கள் என்பதையும் அறிந்தார்கள். வாடியாவின் ஆலோசனைப்படி மூன்று பிஸ்கட்களை  சீலிட்ட சின்னபாக்கெட்களில் இட்டு  அவைகளை பெரிய பாக்கெட்களிலிட்டு அறிமுகபடுத்தினார்கள். பிஸ்கட் பாக்கிங் முறையில் இந்த திருப்பு முனை விற்பனையை இரட்டிபாக்கியிற்று.. பல நிறுவனங்கள் இன்று இதை பின்பற்றுகின்றன.  உற்பத்தியை பெருமளவில் அதிகரிப்பதின் மூலம் விலையை குறைக்கும் மாடலை இந்த நிறுவனம் கையாளுகிறது. மாநில அரசுகள் சத்துணவிற்காக செலவிடும் பணத்தில் ஒரு பகுதியை ஒதுக்கி ஊட்ட சத்து செறிவுட்டபட்ட  கேக்காக தயாரித்து  குழந்தைகளுக்கு வழங்கலாம்.  நாட்டின் எல்லா பிஸ்கட் நிறுவங்களும் அரசும் இணைந்து இதைசெய்யலாம் என்கிறார் இதன் மேலாண்மை இயக்குநர் திருமதி வினிதா பாலி. இவர் அமெரிக்காவில் பெப்சிகோலாவில் மார்கெட்டிங் பிரிவு தலைவராகயிருந்தவர்.
இன்று டைகர் உட்பட16 வகைகளுக்கு மேல் பிஸ்கட்களும் ரொட்டி, கேக் போன்றவைகளை தயாரிக்கும் இந்த நிருவனத்தின் கடந்த ஆண்டு மொத்த வியாபாரம் 2000 கோடிக்கும் மேல். எதிர்கால திட்டம்? பல இருக்கிறது  எதிர்வரும் எதிர்பாராத திருப்பங்களை திறமையாக சந்திப்பது உட்பட என்கிறார் நுல்சி வாடியா.
கல்கி17/02/13

7/2/13

வானத்தை தொட்ட வண்ணத்து பூச்சி

  2

கர்நாடக மாநிலத்தின்  ஒருசின்னகிராமத்தில் எளியகுடும்பத்தில் பிறந்த சிறுவன்கிராமியச்சூழலில் வளர்ந்துராணுவத்தில்அதிகாரியாகிறான்.பின்னர் தனதுகிராமத்திற்கே திரும்பி விவசாயம்செய்யத்துவங்கி மிகுந்தபோராட்டங்களுக்கு கிடையே படிப்படியாக உயர்ந்து,ஹெலிகாப்டர்களைவாடகைக்கு விடும் நிறுவனத்தைத் துவக்கும் அந்த இளைஞன் சிலஆண்டுகளிலேயே உள்நாட்டுவிமான சர்வீஸையும் துவக்கி, மிக வெற்றிகரமாகநடத்தி  இந்திய உள்நாட்டு விமானத்துறையின் சரித்திரத்தில் நம்ப முடியாதசாதனைகள படைக்கிறார்.அவர்தான்,சாதாரண இந்தியனுக்கு  குறைந்த கட்டணத்தில் விமானப்பயணவசதியைவழங்கி, மிகக்குறுகிய காலத்தில் இந்தியாவின் பலமுனைகளைத்தொட்ட  விமான நிறுவனமாக ஏர்டெகன் சாம்ராஜ்யத்தைநிறுவிய கேப்டன் கோபிநாத். இப்போது   எர்டெகன் கிங்பிஷ்ஷர் ஏர்லையன்ஸுடன் இணைக்கபட்டு அது இன்று மூடப்படும் நிலையிலிருக்கிறது. ஆனாலும் போரட்டங்களையும், வெற்றிகளையும் தொடர்ந்து  திருப்புமுனைகளாக்கிய கோபிநாத் இப்போது புதிய விமான சர்விஸை துவக்குகிறார்.

1971 பங்களாதேஷ் போரிலும்தொடர்ந்து காஷ்மீர் எல்லையிலும் 8 ஆண்டுகள் பணியாற்றினேன்.திடுமெனஒருநாள் பெரிதாகபுதிதாக எதாவது செய்யவேண்டும் தோன்றியதால் ராணுவவேலையைராஜினாமா செய்துவிட்டு, கிராஜிவிட்டியாக தந்த 6500 ரூபாய்களுடன்  புதிதாகவிவசாயத்தில் எதாவது வெற்றிகரமாக  செய்யவிரும்பிய இவரது போரட்டம் அங்கே துவங்கியிருக்கிறது. மனைவியின் சில நகைகளையும் அடகு வைத்துவிவசாயம் செய்திருக்கிறார். எதிர்பார்த்த அளவில் வெற்றியில்லை.ஆனால். சுற்றுபுறசூழல் பாதிக்காத வண்ணம் பட்டுப்பூச்சிவளர்ப்பதில் சில முறைகளை அறிமுகப்படுத்தியதில்.மிகப்பெரிய வெற்றியை தந்த அந்த திட்டம் பெரிய அளவில் பாராட்டைப்பெற்றது. 1996ல் சர்வதேசஅளவில் இம்மாதிரி முயற்சிகளை ஊக்குவிக்கும் ரோலக்ஸ்நிறுவனம்(கடிகாரம் தயாரிக்கும் நிறுவனம்)பரிசுஅளித்துகெளரவித்தது.தொடர்ந்த  மாநில அரசின் பரிசு, பல நிறுவனங்களின்அங்கீகாரம் என இவரது பயணம் தொடர்ந்தது. வெற்றிகள் தந்த நம்பிக்கையில்தொடர்ந்த வேறு பல  வணிக முயற்சிகளும் வெற்றிபெற தொடங்கின.
ஆனாலும்அதிகம் போட்டியில்லாத,லாபம்தரக்கூடிய ஒரு புதிய பிஸினஸ்துவக்குவதுபற்றி சிந்தித்கொண்டேயிருந்தஇவர் ராணுவத்திலிருந்தநண்பர்களுடன் இணைந்து ஒரு          ஹெலிகாப்டர் நிறுவனத்தை துவக்கினார்.தனியார்விமான   சார்ட்டர்  முறையை முதலில் இந்தியாவில் துவக்கியது இந்த நிறுவனம்தான்.பல நிறுவனங்களும், வெளிநாட்டு பயணிகளும் பயன் படுத்தும் இந்தநிறுவனத்தில்  இன்றைக்கு 11 ஹெலிகாப்டரும், இரண்டு குட்டி விமானங்களும்இருக்கிறது. இந்த நிறுவனத்தைத்துதுவக்கியபோது,சொந்த மாட்டுவண்டி கூடஇல்லாத இந்த குடும்பம் விமானம் வாங்க முடியுமா? `ன்றுகிண்டலடித்தவர்களும் என் கிராமத்தினரும் ராக்பெல்லர்குடும்பத்தினர் எங்கள் ஹெலிகாப்டரில் பயணம் செய்தைப் பார்த்து வியந்தனர். ஹெலிகாப்டர்நிறுவனம் தந்த வெற்றி,  தனியார் நிறுவனங்களுக்கும் பயணிகள்விமானத்துறையில் அனுமதி என்ற அரசின் புதிய கொள்கைஅறிவிப்பு போன்றவையினால் எழுந்த எண்ணம் தான் பயணிகளுக்கானவிமான சேவையை துவங்கவைத்தது. டெக்கான் என்பது  அறிமுகமானபெயராகயிருந்ததால் அதிலியே துவக்கினார்.’”.செலவுகளை குறைத்து மிககுறைவான கட்டணத்தில் அதிக பயணிகளை இந்தியாவின் சிறியஎர்போர்ட்டுகளுக்கு எற்றிசெல்லவேண்டும் என்பதுதான் குறிக்கோள். பெறும்போரட்டங்களைச்சந்திக்கவேண்டியிருந்தது. போர்முனையில் எதிரிகளுடன்போராடியதைவிட டெல்லியில்  அதிகாரிகளுடன் போராடுவது கஷ்டமாகயிருந்தது.” என்கிறார் கோபிநாத். ஓவ்வொரு இந்தியனுக்கும்   வாழ்க்கையில் ஒருமுறையாவது விமானத்தில் பறக்கும் வாய்ப்பயை எற்படுத்தி வேண்டும்என்பது இவரது கனவாகியிருநது.  மிக குறைவான கட்டணங்களில்-ஒரு ருபாய்க்கு கூடவிமான டிக்கட்-   என துவங்கிய  இவரது  விமான சேவை மிகப்பெரியவரவேற்பைப் பெற்றது. 4 விமானங்களுடன் துவக்கிய  டெக்கான் நாலேஆண்டுகளில்,67 நகரங்களை இணைக்கும் இந்தியாவின் மிகப்பெரிய  முதல்நிறுவனமாக,வளர்ந்து இந்தியன் எர்லைன்ஸை மூன்றாவதிடத்திற்குதள்ளியது. சாமனிய இந்தியனாக இந்தியா முழுவதும் அறியப்பட்டிருந்த RKலஷ்மணனின் கார்ட்டுன் படம்  விளம்பரசின்னமாகவிமானத்திலேயே வரையபட்டது. டிராவல்ஏஜண்ட்கள் இல்லாமல்ஆன்லயனிலியே டிக்கெட் பதிவு, அச்சிட்ட டிக்கட்கள இல்லாமல் செய்ததது,விமானத்தில்  உணவு வழங்குதை நிறுத்தியது, போன்ற பல செலவுகளைகுறைத்து, இந்திய உள்நாட்டு விமான சேவையில்  ஒரு புரட்சி எனவர்ணிக்கபட்ட   நிலையைத் தோற்றிவித்த பெருமை  இவரையேசாரும்.குறைந்த காலத்தில்  1.5 கோடி பயணிகளைகையாண்ட எர்டெக்கானின்வெற்றியை பார்த்து,குறைந்த கட்டண விமான சேவை வழங்கும்  புதியகம்பெனினிகள் மள,மளவென்று தோன்ற ஆரம்பித்தன. ஆனால் இந்த வெற்றிகள் சந்தோஷத்தோடு பல கவலைகளையும் சேர்த்தது
 விமானத்துறையில் பெருகிவரும் போட்டியினால் புதியகம்பெனிகள் டெக்கன்  விமானிகளை, நிர்வாகிகளை அதிக சம்பளம் கொடுத்து இழுத்தார்கள்.  டெக்கனில் பயிற்சி பெற்றவர்களின் திறமைபோட்டியாளர்களுக்கு பயன் பட்டது  புதிய வரிக்கொள்கைகளினால் டிக்கட்கட்டணத்தை  அதிகரிக்க வேண்டியதாயிற்று.  ஏர்டெக்கன் 500 பைலட்டுகளுடனும்,500எஞ்சினியர்களுடமும் 8 கேந்திரங்களிலிருந்து இந்தியாமுழுவதும் பறந்துகொண்டிருந்தாலும் மிககுறைந்த பட்ச லாபமான ஒரு பயணிக்கு 600 ருபாய்கூட தரவில்லை..  செலவினங்களுக்கு தேவையான அளவிற்கு வருமானம்  உயரவில்லை.அதிக மூலதனம் உடனடி அவசியம் என்ற நிலை உருவாயிற்று, இது கோபிநாத் சந்தித்த மிகபெரிய சவால் . இந்த நிலையில் மிக வேகமாக வளரும் அவரது நிருவனத்தை விலைக்கு வாஙக சிலர் தயாரகயிருந்தார்களே தவிர அதிக முதலீடு மட்டும் செய்து உதவ முன்வரவில்லை.
அந்த நேரத்தில் ரிலையன்ஸ் நிருவனம் முன்வந்தது.  “இந்தியாவே உன்னிப்பாக கவனித்தகொண்டிருந்த அம்பானி குடும்ப பிரச்சனை முடிவுக்குவந்து ரிலயன்ஸ் இரண்டாகியிருந்த டெக்கன் தொடர்ந்து  லாபம் அளிக்கும் கம்பெனியாக இருக்குமா என்பதை அவர்களின் நிபுணர் குழு உறுதிசெய்வதைப்பொருத்துதான் முதலிட்டின் முடிவு இருக்கும் என்பதை சொன்னார்கள். ஏர்டெக்கன் நஷட்டங்களை தொடர்ந்து கொண்டிருந்த அந்த நாட்களில் கோபிநாத் மிகபொருமயுடன் காத்திருந்தார் . திரு அமிதாப் ஜூன்ஜின்வாலாவின் தலமையில் 3 மாதங்கள்இயங்கிய ஒரு குழுகம்பெனியின் பலவிஷயங்கள் அலசி ஆராய்ந்து. மதிப்பீடுகள் செய்யதது.இறுதியில் புதிய கம்பெனியில் ரிலயன்ஸின் பங்கு 51% மாதிரி வடிவமைக்கபட்டது ஒரு ஒப்பந்தம். இந்த திருப்பத்தினால்  கோபிநாத்தை விட ரிலையன்ஸின் பங்கு அதிகமாகும். கம்பெனி அவர்கள் வசமாகும் என்ற நிலை உருவாயிற்று.   ”ஆனால் குறைந்த பட்ச லாபத்தையும் ஈட்டாமல், இந்த நல்ல சந்தர்ப்பத்தையும் நழுவவிட்டுவிட்டால் அது மிகபெரிய விபத்தாகிவிடும்.தன்னை நம்பியிருக்கும்எண்ணற்றபங்குதாரர்கள், தொழிலாளிகள்,விமானப்பயணிகள் எல்லோரும் மிக மோசமான முடிவைச்சந்திக்க நேரும்.எனது சொந்த கவுரவத்திற்காக அவர்கள் பலியாகிவிடக்கூடாது  கம்பெனி அழிவிலிருந்து காப்பற்றபடுவிடும்
என்பதினால்  அதை எற்றேன் என்கிறார் கோபிநாத. ஆனால் பிரச்னை வேறு வடிவில் எழுந்தது. ரிலியன்ஸுடன் 15 நாளில் முடிவான முழு ஒப்பந்தம் கையெழுத்திடுவது என முடிவு செய்யபட்டிருந்தது. அந்த ஒப்பந்தம் கையெழுத்தாகியிருந்ததே தவிர அது சட்டபூர்வமாக்படவில்லை. இது தெரிந்த சில முதலீட்டாளார்கள் கோபிநாத்துடன் தொடர்ந்து டெக்கனில் முதலீடு செய்வதுகுறித்து பேசிக்கொண்டேயிருந்தார்கள். குறிப்பிட்ட நாளில் ரிலயன்ஸ் போட்ட குண்டு “நாங்கள் மற்றொரு விமான நிருவனத்தை வாங்குவது பற்றி பேசிக்கொண்டிருக்கிறாம் அதோடு சேர்த்து உங்களுடையதை வாங்குகிறோம்.” இது கோபிநாத் எதிர்பார்க்காத அதிர்ச்சியான திருப்பம் திருமணம் நிச்யக்கபட்ட பெண் ஏமாற்றமடைந்ததைப்போல நான் அதிர்ந்தேன் என்கிறார் கோபிநாத்.
ரிலயன்ஸ் வார்த்தை தவறியதை அடுத்து கிங்பிஷ்ஷ்ர் மூதலீடுசெய்து நடத்த முன் வந்தது.  அவர்கள்  டெக்கனை கிங்பிஷ்ஷரின் கம்பெனியின் ஒருஅங்கமாக நடத்துவதாக சொல்லி வாங்கி குறுகியகாலத்திலியே இணைப்பை அறிவித்து டெக்கான பெயரை சின்னங்களை நீக்கி விட்டார்கள். மலிவு விலை டிக்கட்களையும் நிறுத்திவிட்டார்கள். “ நிஜமாகி வந்த என் கனவுகள் உருமாறி கலைந்துபோனதில் எனக்கு மிகுந்த வருத்தம் தான். ஆனால் எனது சொந்த கெளரவப்பிரச்சனையாக கருதி போராடிக்கொண்டேயிருந்தால் 6 மாதத்தில் கம்பெனி திவாலாகி 4000 பேர் வேலையிழந்திருப்பார்கள்.  பொதுத்துறைவங்கிகள் LIC போன்ற நிறுவனங்களிடமிருந்து பெற்ற பலநூறு கோடி கடன்கள்வராத கடன்களாகி பொதுமக்களின் பணம் நஷ்டமாகியிருக்கும். இன்றுஅவையெல்லாம் காப்பற்றபட்டு டெக்கானை நம்பி மூதலீடு செய்தஷேர்ஹோல்டர்களுக்கும் நல்ல  விலைகிடைத்ததில் எனக்கு மகிழ்ச்சியே.” என்று சொல்லும் கோபிநாத் தொடர்ந்து புதிய கனவுகளோடு  இந்தியாவின் எல்லாப்பகுதிகளையும்ஒருமையப்புள்ளியில் இணைக்கும் சரக்குகள்விமானகேந்திரத்தை8விமானங்களுடனும் 100லாரிகளுடனும் . மிகப்பெரிய  சரக்குகளை கையாளும் நிறுவனமாக்கும் திட்டத்துடன்  360டிகிரி எனற சரக்கு விமான  சர்வீசை துவக்கினார். இந்தியாவில் எந்த பகுதியிலிருந்தும் சரக்குகளை விமானத்தின் மூலம் லாரிகளின் உதவிய விரைவாக செய்வது குறிக்கோள். தொடர்ந்த எரிபொருள் விலையேற்றம் மாநிலங்களக்கிடையே உள்ள வரிகட்டணங்கள் அரசின் கொள்கைகள் முட்டுகட்டையாக, இந்த முயற்சி தோல்லிவியை கண்டது. தோல்விகளை ஏற்காத கோபிநாத் இப்போது மீண்டும் விமான சர்வீஸை துவக்குகிறார்.   கிங் பிஷ்ஷரின் இணைப்பில் இவர் தனியாக ஒரு விமான சர்விஸ் துவக்க கூடாது எனபது ஒரு நிபந்தனை. அந்த கெடு இந்த ஆண்டு ஜனவரியில் முடிந்துவிட்டதால் சின்ன நகரங்களை இணைக்கும் சின்ன விமானங்களின் சர்விஸை துவக்கிறார்.இவரையும் இவரது திறமைகளையும் நம்பும் ஒரு வெளிநாட்டு நிறுவனம் முதலீடு செய்கிறது மக்களின் முதலீட்டையும் நாடுவேன் என்கிறார் நம்பிக்கையோடு கோபிநாத். பருவங்கள் மாறினாலும் வண்ணத்து பூச்சிகள் பறப்பதை நிறுத்துவதில்லை.