சில தமிழ் சினிமாக்களின் கதாநாயகர்கள் எப்படி மக்கள் மனதில் நீங்காத இடத்தைப்பெற்றிருக்கிறார்களோ அதேபோல் சில தமிழக போலீஸ் அதிகாரிகளும் மறக்க முடியாதவர்களாக, மதிக்கப்படுபவர்களாகயிருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் திரு விஜயகுமார் ஐபிஎஸ்.
பள்ளியில் படிக்கும்போதே ஒரு போலீஸ் அதிகரியாக வேண்டும் என்ற தாகத்துடன் வளர்ந்தவர் விஜயகுமார். காரணம் அவரது தந்தை. மிடுக்கான, கண்டிப்பான போலீஸ் அதிகாரியான கிருஷ்ண நாயர்தான் அவரது ரோல் மாடல். அதனால் தான் 1975ல் ஆட்சிப்பணிக்கான தேர்வில் ஐஏஎஸ்ஸில் முதல் ரேங்க் பெற்றிருந்த போதும் காக்கியின் மீதிருந்த காதலால் இரண்டாவது இடம் பெற்றிருந்த ஐபிஎஸ்ஸை தேர்ந்தெடுத்தார்.
ஒரு காவல் துறைத் துணைக் கண்காணிப்பாளராகத் தன் வாழ்வைத் தொடங்கிய விஜயகுமார், தேசிய காவல் அகாடமியின் இயக்குநர் பதவிவரை காவல் துறையின் பெரும் பதவிகள் அனைத்தையும் பார்த்தவர். தமிழகப் போலிஸின் 20 ஆண்டு சவலாகயிருந்த வீரப்பனை வீழ்த்தியது இவர் அடையாளம்.
சில பதவிகள் அதிலிருக்கும் அதிகாரிகளால் பேசப்படும். விஜயகுமார் எந்தப் பதவியிலிருந்தாலும் அதில் தன் அடையாளத்தைப்பதித்தவர். மாவட்டங்களிலிருந்தபோதும் சரி சென்னைக் கமிஷனர்களாகயிருந்த போதும் சரி நிறைய ரவுடிகளை ஒடுக்கியவர். ஒரே வாரத்தில் 1000 பேரை கைது செய்தவர். தமிழகப் போலீஸில் எஃபி அருள். வால்ட்டர் தேவாரத்துக்கு அடுத்தபடியாகத்தமிழக ரவுடிகள்தல்காட்டாமல் இருந்தது இவர்காலத்தில் தான். அதற்காக 7 என்கவுண்டர்களை நடத்தி சர்ச்சைகளுக்கும் உள்ளானவர்
அபோது அவர் சொன்னது
“நான் எனக்குக் கீழ் பணியாற்றுவோரிடம் அடிக்கடி சொல்வது துப்பாக்கி வெறும் பொம்மை அல்ல என்பதைத்தான். ஒரு அரசாங்கம் யாரிடமாவது சும்மா துப்பாக்கியைக் கொடுத்துச் சுடச் சொல்லுமா? காவல் துறையிடம் கொடுத்திருக்கிறது என்றால், ஏன்? மக்களைக் காப்பாற்றுவதற்காக. அப்படிக் காப்பாற்ற நேரும்போது, உன் உயிருக்கு ஆபத்து வந்தால் உன்னைக் காத்துக்கொள்வதற்காக. ஆனால், எதற்கெடுத்தாலும், துப்பாக்கியைத் தூக்குபவனோ, தூக்கச் சொல்பவனோ அல்ல நான். தவிர்க்க முடியாத தருணத்திலேயே அவை வெடிக்கின்றன”
துணிவான இந்த அதிகாரி ராஜிவ் பிரதமாராக இருந்தபோது அவர் பாதுகாப்புகாக உருவாக்கபட்ட ஒரு விசேஷப்படைக்கு தலமைதாங்க நியமிக்கபட்டவர் மீண்டும் தமிழத்டில் ப[ல பதவிகளை வகித்தவந்த வந்த இவரை மத்திய அரசு அனைத்திந்திய போலீஸ் உயர் அதிகாரிகளுக்குப் பயிற்சியளிக்குக்கும் தேசிய போலீஸ் அகடமியின் தலைவராக நியமித்தது. தொடர்ந்து மத்திய ரிசர்வ் போலீஸின் தேசிய தலமைப்பொறுப்பை ஏற்று அதில் பல சிறப்பு பயிற்சி திட்டங்களை உருவாக்கியபின் ஒய்வு பெற்ற இவருக்கு அன்றைய உள் துறை அமைச்சர் திரு சிதம்பரம் உள்துறை அமைச்சகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் பதவி வழங்கினார். அந்தப்பதவியிலிருக்கும்போது விஜயகுமார், வெறும் ஆலோசகராக மட்டும் இல்லை; களத்தில் நின்றார். தேர்தல் புறக்கணிப்பைப் பிரகடனப்படுத்திய மாவோயிஸ்ட்டுகள் பஸ்தாரில் நடத்திய தாக்குதலில் பாதுகாப்புப் படை வீரர்கள் இறந்தபின்னர் இவரின் திட்டப்படி கொடுக்கபட்ட பதிலடி இன்றும் பேசப்படும் ஒரு விஷயம்.
“ஐந்து லட்சம் பட்டதாரிகளிலிருந்து 150 பேர் காவல் துறை அதிகாரிகளாகத் தேர்ந்தெடுக்கப்படும் முறை உலகில் வேறு எங்கும் இல்லை. அவ்வளவு திறனும் அறிவும் நம்மிடம் இருக்கிறது. இது பலம். இந்தப் பலத்தைப் பயன்படுத்திக்கொள்ள முடியாதது பலவீனம். தேவை எதுவென்றால், சீர்திருத்தம்.” என்று துணிந்து போலீஸ் துறையைப் பற்றி எழுதியிருப்பவர் இவர்.
தன் அரசு ஆலோசகர் பதவிக்காலம் முடிந்த அன்று (கடந்த ஜுன்13ம் தேதி) அமைச்சருக்கும் அதிகாரிகளுக்கும், காவல்துறையினருக்கும் நாலு வரியில் தன் முக நூல் பக்கத்தில் நன்றியைத்தெரிவித்தபோது விஜயகுமாருக்கு அடுத்த ஒரு வாரத்தில் ஒர் ஆச்சரியம் காத்திருப்பது தெரியாது.
காஷ்மீர மாநில அரசியல் சதுரங்கத்தில் தவறாகக் காய்கள் நகர்ந்தப்பட்டதின் விளைவாக ஆட்சி கவிழ்ந்து குடியரசு தலைவர் ஆட்சி அறிவிக்கபட்டவுடனேயே கவர்னருக்கு ஆலோசகர்களாக நியமிக்கபட்ட அதிகாரிகளில் ஒருவர் விஜயகுமார். திறமையான அதிகாரி என்பது மட்டுமில்லாமல் காஷ்மீரில் எல்லைக்காவல் படை ஐஜியாக இருந்த காலத்தில் இவர் பூட்ஸ் படாத காஷ்மீர் எல்லைப்பகுதி எதுவுமில்லை என்பதும் ஒரு காரணம்
காஷ்மீரத்தில் என்று தணியும் இந்த வன்முறை தாகம் என்று பல இந்தியர்கள் காத்திருக்கும் இந்த நேரத்தில் தொலைநோக்குப் பார்வையோடு கூடிய, ஆழமான ஆலோசனைகளை அரசுக்கு வழங்க ஒரு முன்னாள் தமிழகப் போலீஸ் அதிகாரி நியமிக்கபட்டிருப்பது நமக்குப் பெருமை தரும் விஷயம்.