டிவி நிகழ்ச்சிகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
டிவி நிகழ்ச்சிகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

30/7/15

புதிய தலைமுறை டிவியின் மக்கள் மேடையில்அனுதாப அலைகள் சூனாமியாக தாக்கிக்கொண்டிருக்கும் நேரத்தில் புதிய தலைமுறை மக்கள் மேடையில் பங்கு கொள்ள திரு வெங்கட் அழைத்தார்.(29/07/15) சற்று யோசித்தேன். நிகழ்ச்சியில் மாவட்டங்களிலிருந்து மாணவர்களும் பங்கேற்பதாக சொன்னதால் நிகழ்ச்சி வெறும் அஞ்சலியாக இல்லாமல் மாறுதலாக இருக்கும் என எண்ணி பங்கேற்றேன். அந்த நிகழ்ச்சியில் தெளிவான பார்வையில் துணிவாக கருத்துகளை சொன்ன இந்த மாணவர்கள் கலாம் கண்ட கனவுகளின் நம்பிக்கை விதைகளாகத் தெரிகிறார்கள். விரைவில் வளர்ந்து விருட்சமாகப்போகும் அடையாளங்கள் தெரியும் இவர்களை வளரும் இந்தியாவின் அடையாளமாக பார்க்கிறேன். சென்னையிலிருக்கும் முகங்களையே பார்க்க வேண்டிய நிலையிலிருந்து மாறி மாவட்டங்களிலிருந்து மக்களை நேரலையில் இம்மாதிரி பங்கு கொள்ளச் செய்யும் நிகழ்ச்சிக்கு புதிய தலைமுறைக்கு நன்றி சொல்ல வேண்டும். தனது தொழில் வாழ்க்கையின் துவக்க காலங்களிலேயே நான் கண்ட கலாமின் நம்ப முடியாத எளிமை,பற்றிச் சொல்ல ஒரு வாய்ப்பு. ராஷட்டிரபதி பவனில் அவர் இருந்த அறையில் மழை ஒழுகிய போது தூங்காமல் தவித்த கலாம், ஊழியர்களின் வீடுகள் எந்த நிலையில் இருக்கிறதோ என்று பட்ட கவலை ( நன்றி: சுதாங்கனின் கலாம் காலங்கள் புத்தகம்) பற்றிச் சொன்ன போது நெறியாளர் வெங்கட் கேட்டது ஒழுகும் அரசாங்க கட்டிடங்களுக்கு ராஷ்டிரபதி பவனும் விலக்கில்லையா?வினாடி நேரத்தில் அரசியலாகியிருக்ககூடிய ஒரு விஷயம் கலந்துரையாடலில் வந்தபோது அதை மிக சாமர்த்தியமாக கையாண்ட சட்ட மன்ற உறுப்பினர் மாஃபா பாண்டியன், நிகழ்ச்சி முழுவதும் கலாம் நல்ல குழந்தைகளை உருவாக்க ஆசிரியர்களின் கடமைகள் பற்றி கலாம் சொன்னதை நினைவூட்டிக் கொண்டிருந்த "தோழமை" அமைப்பின் தேவநேயன் ஆகியோருடன் பங்கேற்றது மகிழ்வாகவும் நிறைவாகவும் இருந்ததுநன்றி வெங்கட்.

அந்த வீடியோவை இங்கே  கிளிக் செய்தால் பார்க்கலாம்
  • 2 shares
  • கூத்தப்பாடி மா கோவிந்தசாமிபார்த்தேன்.ஒருசாதாரணமனிதனின்மனிதநேயபண்புகளைவெளிப்படுத்தினீர்கள்.நன்றி
  • Jeeva Kumaran NICE SHARING
  • Saidai Nithyanandam பார்த்தேன் சார்
  • Akilan Kannan நான் அண்மையில் கண்ட ஒரு சிறந்த ' மக்கள்மேடை ' நிகழ்வு இது . பங்கேற்ற விருந்தினரும் இளந்தளிர்களும் கூர்ந்த அறிவுடன் சொல் நேர்த்தியுடன் தம் கருத்துக்களைப் பதிந்தனர் . ஒருங்கிணைப்பாளரும் சிறப்பாக நெறிப்படுத்தினார் . கலாம் சிந்தனைகளை - பகிர்ந்து - ஏன், விமர்சனம் செய்தும் கூட அலசி , தெளிந்து அடுத்த தலைமுறைக்குக் கொண்டுசெல்லவேண்டிய பணி ஊடகங்களுக்கும் அறிவுஜீவிகளுக்கும் , படைப்பாளர்களுக்கும் உண்டு . வெங்கட்டின் நயமான தொகுப்புத் திறன் எம் .எஸ்.வி. மறைவின் போது நேரலையில் கண்டு வியந்தேன் - மகிழ்ந்தேன் ! நேற்று நீங்கள் , நண்பர் பாண்டியராஜன் , தேவ நேயன் அனைவருமே சிறப்பாகப் பதிவு செய்தீர்கள் ; ஆனால் , கலாம் கண்ட கனவு நனவாகும் சாத்தியம் தொலைவில் இல்லை என்பது அந்தப் பிஞ்சு நெஞ்சங்களின் வாயிலிருந்து வந்த கருத்துக்கள் மெய்ப்பித்தன! இதுவே , சிறந்த அஞ்சலி நிகழ்ச்சி ! உங்களனைவருக்கும் , பு.த குழுவிற்கும் வாழ்த்துக்கள் !
  • Indu Sankar Program neril parkka mudiyalaye enru enga vaithadhu
   Like · Reply · 4 hrs
   • Ramanan Vsv இது புதிய தலைமுறை டிவியில் 29/07/15 வந்த நிகழ்ச்சி . இந்த யூ டுயூப் லிங்க்கைக் கிளிக்கினால் பார்க்கலாம்.
    https://youtu.be/9ftEJHZgfAA...
    Like · 3 hrs · Edited
   • Indu Sankar Thank you so much
    Like · 3 hrs
   • Ramanan Vsv

    Write a reply...

Pitchumani Sudhangan நேற்று உங்கள் புதிய தலைமுறை நிகழ்ச்சி அபாரம்! அதை விட அந்த குழந்தைகள் பேசியபோது உங்கள் முகத்தில் தெரிந்து அந்த உற்சாகம்! இன்னொரு கலாம் இன் தி மேக்கிங்!