12/6/18

சோழனைக் காப்பாற்றிய வேல்

10 நூற்றாண்டுகளைக் கடந்தும் தமிழனின் திறன்மிகு கட்டிட கலைக்குச் சான்றாக நிற்கும் தஞ்சைப் பெரிய கோவில் அந்நியர் படையெடுப்பு, இயற்கை பேரிடர்கள், அண்மைகால அரசியல் வாதிகளின் “அரசியல்”, போன்ற பிரச்னைகளைச் சந்தித்திருக்கிறது. காலத்தின் சாட்சியாகக் கம்பீரமாக நிற்கும் இந்தத் தஞ்சை பெரிய கோவில் அண்மையில் சந்திருக்கும் ஆச்சரியம் அங்கிருந்து மாயமாக மறைந்த மன்னர் ராஜராஜன், மற்றும் அரயின் ஐம்பொன் சிலைகள் பத்திரமாக மீட்கப்பட்டு மீண்டும் நிறுவபட இருப்பது தான்.


பல தமிழக கோவில்களில் அது உருவாகக் காரணமான மன்னர் பரம்பரையினர், எழுப்பிய சிற்பிகள் போன்ற விபரங்களைப் பார்க்க முடியாது. மாறாகத் தஞ்சைப் பெரிய கோவிலில் அதைத் திட்டமிட்ட பொறியாளார். தலமைச் சிற்பி, பலதுறைகளில் உதவியவர்களின் பெயர்கள் கல்வெட்டுகளாகக்  கோவிலிலேயே இருக்கிறது.

உள்ள உலகப் புகழ் பெற்ற பெரிய கோயில் எனப்படும் பெருவுடையார் கோயிலில், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அக்கோயிலைக் கட்டிய மாமன்னன் ராஜராஜ சோழனின் ஆட்சிக் காலத்தில், அந்தக் கோயில் அதிகாரியாக இருந்த தென்னவன் மூவேந்த வேளாண் என்பவரால், ராஜராஜன் சோழன் மற்றும் அவரது பட்டத்தரசி உலகமாதேவியார் ஆகியோருக்கு அவர்கள் உயிருடன் இருக்கும்போதே ஐம்பொன் சிலைகள் உருவாக்கப்பட்டு, கோயிலில் வைக்கப்பட்டு இருந்தன.ராஜராஜன் இறந்த பிறகு அவற்றோடு குத்துவிளக்கு, விபூதி மடல் இவைகளையும் செய்து வைத்தார்அதிகாரி. இந்தக் தகவல்களை அனைத்தையும் தஞ்சை பிரகதீஸ்வரர் கோயி லின் மேற்கு திருச்சுற்றில் உள்ள கல்வெட்டு சொல்லுகிறது.

எப்போது இந்தச் சிலைகள் காணமல் போனது தெரிந்தது.?

ராஜராஜன் லோகமா தேவி சிலைகள் 1900 வரை பிரகதீஸ்வரர் கோயிலில் இருந்ததாகச் சொல்லப்படுகிறது. அதன்பிறகு அங்கிருந்து கடத்தப்பட்டு புதிய சிலை ஒன்றை செய்து, அதன் பீடத்தில் ‘பெரிய கோயில் ராசா ராசேந்திர சோள ராசா’ என்று பெயர்வெட்டி வைத்து விட்டார்கள். கடத்தப்பட்டது ராஜ ராஜன் சிலை கூட என்பது தெரியாமல் ராஜேந்திர சோழன் பெயரை வெட்டி இருக்கிறார்கள்.

.எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபோது தஞ்சை பெரிய கோயிலில் இப்போதுள்ள ராஜராஜன் சிலைக்குக் காஞ்சி மடம் வைரக் கிரீடம் வழங்கியது. அதை அணிவிப்பதற்காகப் பிரதமர் இந்திரா காந்தியை தஞ்சைக்கு அழைத்து வந்தார் எம்.ஜி.ஆர். அதுசமயம், தஞ்சை கோயிலில் இருப்பது ஒரிஜினல் ராஜராஜன் சிலையே இல்லை என்று ஆதாரத்துடன் சர்ச்சையைக் கிளப்பினார் தஞ்சை சரஸ்வதி மஹால் நூலகத் தின் வெளியீட்டு மேலாளராக இருந்த தொல்லியல் ஆர்வலர் குடவாயில் பாலசுப்பிரமணியன். அப்ப்போது தெரிந்த விஷயம் தான் ஒரிஜனல் ராஜராஜனும் ராணியும் காணாமல் போய்விட்டார்கள் என்ற விஷயம். இப்போது கிடைத்திருக்கும் ஆவணங்களின் படி இந்த ஐம்பொன் சிலைகள் தான் 50 ஆண்டுகளிக்கு முன்னரே காணமல் போயிருக்கிறதுஅரசனும் அரசியும் எங்கே போனார்கள்?

அகமதாபாத்தில் உள்ள கவுதம் சாராபாய் ஃபவுண்டே ஷனுக்குச் சொந்தமான ‘காலிக்கோ’ மியூசியத்தில் வைக்கப்ட்டிருக்கும் இருபதுக்கும் மேற்பட்ட சோழர்கால செப்புச் சிலைகளில் இந்த ராஜராஜன் - லோகமாதேவி சிலைகள் இருக்கிறது என்ற செய்தி கசிந்தது. அது உண்மையானதுதானா என்ற விவாதமும் எழுந்தது. அந்த நிலையில் டெல்லி நேஷனல் மியூசியத் தின் டைரக்டர் ஜெனரலாக இருந்த சி.சிவமூர்த்தி 1963-ல், அவர் எழுதிய தென் இந்திய செப்புச் சிலைகள்குறித்த ஒரு நூலில் சாராபாய் மியூசியத்தில் இருப்பது ராஜராஜன் சிலைதான் என்பதை தெளிவுபடுத்தினார். 1983-ல் டெல்லியில், அணிசேரா நாடுகள் கூட்டம் நடந்தபோது, டெல்லி நேஷனல் மியூசியம் இந்தியாவின் அரிய செப்புச் சிலைகள்பற்றி, ‘The Great Tradition India Bronze Master Pieces' என்ற தலைப்பில் நூல் ஒன்றை வெளியிட்டது. அதில், ‘காலிக்கோ மியூசியத்தில் உள்ளது ராஜராஜன் - லோகமாதா சிலைகள்தான் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை’ என்று அதில் குறிப்பிட்டிருந்தார் முனைவர் தொல்ப்ருள் அறிஞர் நாகஸ்வாமி

மீட்கும் முயற்சிகள்இருக்குமிடம் தெரிந்து விட்டதால் ராஜராஜனை மீட்டுவர அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆர் பிரதமர் இந்திரா மூலம் முயற்சி எடுத்தார். ஆனாலும்  சொல்லதக்க முன்னேற்றம் எதுவுமில்லை

.

தொடர்ந்து இந்தச் சிலைகளை மீட்க திமுக ஆட்சிக் காலத்தில் சுற்றுலாத்துறை செயலர் இறையன்பு, தொல்லியல் துறை இயக்குநர் டாக்டர் நாகசாமி, தொல்லியல் ஆய்வாளர் குடவாயில் பாலசுப்பிரமணியன், அப்போதைய அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் கொண்ட குழு அமைக்கப்பட்டு, அவர்கள் அப்போது குஜராத் முதல்வராக இருந்த மோடியிடம் பேச்சுவார்த்தை நடத்தினர் முதல்வர் இருந்த நரேந்திர மோடியும் ராஜராஜன் சிலையைத் தமிழகத் துக்கு மீட்டுக் கொடுப்பதில் ஆர்வமாக இருந்தார். குஜராத் அரசுச் செயலாளராக இருந்த வெ.இறையன்புவின் சகோதரர் திருவாசகம் மற்றும் அங்கிருந்த தமிழகத்து ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அத்தனை பேரும் இந்த விஷயத்தில் ஆர்வம் காட்டினர். ஆனாலும், ராஜராஜனை தமிழகம் கொண்டுவரமுடிய வில்லை. அருங்காட்சியம் அசைய வில்லை. பல்வேறு காரணங்களைக் கூறி தர மறுத்துவிட்டது.

ஆச்ரியப்படுத்திய ஒர் ஆவணம்

.

அவர்கள் சொன்ன காரணங்களில் முக்கியமானது ஒரு முக்கியமான காரணம் இது ராஜராஜனின் சிலை என்பதற்கு எந்தவிதமான ஆதாரமும் இல்லை என்பது தான். அதற்கு அவர்களிடமிருக்கும் வலுவான சாட்சியம். அந்த அருங்காட்சியகத்திலிருக்கும் சிலைகளுக்கென்று அவற்றின் வரலாற்றைச் சொல்லும் கேட்லாக். அதில் அது ராஜாராஜின் சிலை இல்லை என்று பதிவு செய்யபட்டிருந்தது.தான். ஒரு தனியார் கேட்லாக்கில் சொல்லபட்டிருப்பதால் ஏற்றுகொள்ள வேண்டிய அவசியம் என்ன? இங்குதான் எழுந்தது ஒர் அதிர்சியான ஆச்சரியம். ஒரு சர்வ தேச் கூட்டத்தில் வாசித்தளித்த ஒரு பேப்பரில் அந்தச் சிலை ராஜராஜன் தான் என்று சொன்ன திரு நாகஸ்வாமி தான் அந்தக் கேட்லாக்கை தயாரித்தவர். ஏன் இப்படி எழுதியிருக்கிறார்? என்பது இன்றுவரை புரியா மர்மங்களில் ஒன்று. தொல்லியல் ஆர்வலர்கள் மத்தியில் இது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், சிலையை மீட்டுவர சென்றிருந்த தமிழக குழுவினரிடம் காலிக்கோ மியூசியத்தின் தலைவரான கிரா சாராபாய், ‘இது ராஜராஜன் சிலைதான் என்றுநிருபிக்கபட்டால் மட்டுமே சிலையைத் தர முடியும் என்று சொல்லிவிட்டனர். ஏமாற்றத்துடன் திரும்பியது குழு

.

கால வெள்ளத்தில் மக்களும் அரசும் மறந்துபோன் பல விஷயங்களில் இதுவும் ஒன்றாகக் கரைந்து போயிற்று. மன்னர் ராஜராஜன் தன் மனைவியுடன் அந்த ஆருங்காட்சியகதிடின் கண்ணாடிச் சிறைக்குள்ளேயே காலத்தைக் கழித்துகொண்டிருந்தார்.

கைகொடுக்காத தீர்ப்பு

இந்த நிலையில் தான்,தமிழக இந்து சமய அற நிலையத்துறை முன்னாள் அமைச்சர் சுவாமிநாதன் சென்னை உயர் நீதிமன்றத்தில்ஒரு பொதுநல வழக்கைத் தொடர்ந்தார். அன்றைய தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் மற்றும் நீதிபதி ஆர்.மகாதேவன். மனுவை விசாரித்தனர். இறுதியில் நீதிபதிகள், ‘‘விலை மதிக்க முடியாத பழங்கால சிலைகள் வெளி மாநிலத்தில் இருந்தால், அவற்றை மீட்டு கொண்டு வருவது தமிழக அரசின் கடமை நீதிமன்றம் நேரடியாக அருங்காட்சியகத்துக்கு உத்திரவிட முடியாது.மனுதாரர் தமிழக அரசை மீண்டும் அணுகி இந்தக் கோரிக்கையை முன் வைக்க வேண்டும். என்று  மனுவைப் பொதுநல வழக்காகக் கருத முடியாது’’ எனக்கூறி தள்ளுபடி செய்தனர்.

.தமிழக அரசு நீதிமன்ற ஆணைப்படி காணமல்போனாதாக்ச்சொல்லப்படும் சிலைகளைக் கண்டுபிடிக்க தமிழக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஐஜி பொன்.மாணிக்கவேலுக்கு உத்திரவிட்ட்து., அவர் அப்பிரிவின் டிஎஸ்பி வெங்கட்ராமனை முதல் கட்ட விசாரணை நடத்த நியமித்தார். அதன்படி, டிஎஸ்பி வெங்கட்ராமன் தலைமையிலான குழுவினர், அண்மையில் பெரிய கோயிலில் நடத்திய ரகசிய விசாரணையில், இரண்டு சிலைகளும் திருடப்பட்டிருப்பது தெரிய வந்தது. மேலும், மாமன்னன் ராஜராஜ சோழனால், பெரிய கோயிலுக்கு வழங்கப்பட்டதாகக் கோயில் கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ள 68 சிலைகள் பெரும்பாலானவை இங்கு இல்லாமல் போனதும், பல முறைகேடுகள் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வந்ததும் தெரியவந்தது. இந்தச்சிலைகளை கோயிலில் பணிபுரிந்த அதிகாரிகள் சிலர், தஞ்சையில் உள்ள சறுக்கை கிராமத்தைச் சேர்ந்த ராவ் பகதூர் சீனிவாச கோபாலாச்சாரி மூலமாகச் சென்னைக்குக் கடத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர், கௌதம் சாராபாய் என்பவருக்குக் கோடிக்கணக்கான ரூபாய்க்கு இரு சிலைகளையும் விற்கப்பட்டது தெரியவந்தது.

அதிரடி  மீட்பு

உடனே செயலில் இறங்கினார் பொன்மாணிக்கவேல். கிராமங்களுக்குத் தானே நேரில் சென்று இந்தச்சிலைகளை நேரில் பார்த்தவர்களை தேடினார். இரண்டு 80 பிளஸ் பெரியவர்கள் கோவிலில் சிலைகளைப் பார்த்தவர். அவர்களில் ஒருவர் கோவில் பணியா

ற்றியவர். கல்வெட்டுகளில பழந்தமிழர் கணக்குமுறையில் சொல்லப்ட்ட உயர, பீடங்களின் அளவுகளை இன்றைய சென்டிமீட்டரில் கணக்கிட்டபோது அது சிலைகளின் அளவோடு பொருந்திப் போயிருந்தது.

கோவிலில் இருந்தது, திருடபட்டது, விற்கபட்டது, கல்வெட்டு சொல்லும் விபரங்களுடனும் தன் டீமுடனும் அஹமதாபாத் பறந்த ஐஜி அருங்காட்சிய அதிகாரிகளிடம் இந்த விபரங்களுக்குபின்னர்சிலை திருப்பித் தரப்படவிட்டால் தமிழக அரசுக்குச் சொந்தமான அவற்றை பறிமுதல் செய்வேன் என்றார். அதிர்ந்துபோன அருங்காட்சியகத்தினர் சிலைகளை கொடுக்கச் சம்மதித்தினர். உடனே அவைகளை

தம்முடன் ரயிலில் பலத்த பாதுகாப்புடன் கும்பகோணம் கொண்டு வந்தார். இவர் ரயில் பாதுகாப்பு ஐஜியாகவும் இருந்த்தால் வழக்கமான தாமதங்கள் அனைத்தும் தவிர்க்கப் பட்டன. தமிழகத்துக்கு கொண்டுவந்துவிட்டார். சென்னையில் மேள்தாளத்துடன் வரவேற்கபட்டசோழ மன்னரைச் சிதம்பரம் கோவிலில் பூஜித்தபின்னர் கும்பகோணம் கொண்டு வந்து கும்பகோணம் குற்றவியல் நீதிமன்றத்தில் இன்று ஒப்படைக்கப்பட்டன. இந்த 2 சிலைகளையும் தஞ்சை பெரிய கோயிலில் வைக்க நீதிமன்றம்உத்தரவிட்டிருக்கிறது, நீதிமன்றத்தின் இந்த உத்தரவினை பக்தர்கள் வரவேற்றுள்ளனர். பெருவுடையார் இனி தஞ்சை மாவட்டத்திலே பஞ்சம் நீக்கி அருள்பாலிப்பார் என்று விவசாயிகள் மகிழ்ச்சியுடன் சொல்வது “இனி காவிரியில் தண்ணீர் வந்துவிடும்”

இந்தச் சிலைகள் மீட்பை உலகின் பல பகுதிகளிலிருக்கு தமிழ் ஆர்வல்களும் தொல்பொருள் ஆய்வாளர்களும் பாராட்டிக்கொண்டிருக்கின்றனர்.

துணிவுடன் அதிரடி முடிவுகளை எடுத்து அதை செம்மையாகச் செயலபடுத்தும் பொன்மாணிக்கம் போன்ற அதிகாரிகளைத் தமிழகம் பெற்றிருப்பதற்காகப் பெருமயை அடைந்தாலும், தாங்கள் பதுகாக்கவேண்டிய அரிய  செல்வங்களை காசுக்காக  விற்ற அதிகாரிகளை நினைத்து வருத்தமும் வேதனையும் எழுவதைத் தவிர்க்க இயலவில்ல._______

தெய்வங்களைக் காக்க நீதி மன்றம் நியமித்த காவலர்

தூங்கிக்கொண்டிருக்கும் சில அரசுத்துறைகள் தலமை அதிகாரிகளின் மாற்றத்தால் சட்டென்று விழித்துக்கொண்டு பபரபுடனும் சுறு சுறுப்புடனும் இயங்கும். அப்படியான ஒன்றுதான் தமிழகப்போலீசின் சிலைகடத்தல் தடுப்பு பிரிவில் நடந்துகொண்டிருக்கிறது. வேறுபல மாநிலங்களில் இல்லாத இந்தப் பிரிவின் தலமைப் பதவி ஆளுவோரால் ஓரங்கட்டபட்ட அதிகாரிகளுக்காக ஒதுக்கபட்டது. திரு பொன்மாணிக்க வேல் தன் திறமையான, கண்டிப்பான அதிகாரியாகப் பெயர் எடுத்தவர், படிப்படியாக உயர்ந்து ஐஜியாகப் பதவி உயர்வு பெற்ற இவருக்குத் தரப்பட்ட போஸ்டிங் சிலகடத்தல் தடுப்பு பிரிவின் தலமை
.
செய்யும் தொழிலைத் தெய்வமாக நேசித்துச் செய்யும் பொன் மாணிக்க வேல் பதவி ஏற்றுக்கொண்டவுடனேயே தூசி படிந்து தூங்கிக்கொண்டிருந்த பைல்களை தேடி ஆராய ஆரம்பித்தார். . இவர் தலைமையிலான டீம், தமிழகக் கோயில்களில் திருடப்பட்ட 155 கோடி ரூபாய் மதிப்புள்ள சிலைகளை மீட்டது. சுமார் 250 கோடி ரூபாய் மதிப்புள்ள சிலைகள் கடத்தப்படுவதையும் தடுத்திருக்கிறது. சிலைக்கடத்தல் பிரிவில் 33 வழக்குகளும் தமிழகம் முழுவதும் 455 வழக்குகளும் பதிவாகின. இதுவரை இந்தத்துறை இவ்வளவு வேகமாக இயங்கியதில்லை
.
சென்னையில் தீனதயாளன் என்ற முதியவர் சர்வ தேச கடத்தல் மன்னன் கபூருக்கு உதவியர் என்பதை கண்டுபிடித்து அவரைக் கைது செய்தார். இந்நிகழ்ச்சியைத் தொடர்ந்து தமிழக போலீஸ் பொன்.மாணிக்கவேலை ரயில்வே ஐ.ஜி-யாக மாற்றியது தமிழக அரசு. சிலைக்கடத்தல் தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, ‘சிலைக்கடத்தல் தொடர்பான 19 வழக்குகளைப் பொன்.மாணிக்கவேல் விசாரிப்பார். பிற வழக்குகளைச் சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு விசாரிக்கும்’ என்று டிஜிபி உத்திரவிட்டிருப்பதாகச் சொன்னவுடன் நீதிபதி மிக் கோபமாக
நீதி மன்றம் 531 வழக்குகளைப் பொன்.மாணிக்கவேல் விசாரிக்க உத்தரவிடப்பட்ட நிலையில், எதன் அடிப்படையில் 19 வழக்குகளை மட்டும் அவர் விசாரிப்பதற்கு டி.ஜி.பி உத்தரவு பிறப்பித்தார்? என்று கேள்வி எழுப்பினார். இதையடுத்து, சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் ஐ.ஜி-யாக பொன்.மாணிக்கவேல் நியமிக்கபட்டார்
.
இது இவர்மீது நீதி மன்றம் வைத்துள்ள நம்பிக்கையையும் நன்மதிப்பையும் காட்டுகிறது. அண்மையில் இவர் வெளிக்கொண்டுவந்த பழனி ஆண்டவர் கோவில் ஐம்பொன் சிலை மோசடியில் கைது செய்யபட்ட அரசியல் பின்புலம் கொண்ட ஒரு முன்னாள் அறநிலைத்துறை துணை ஆணயர் ஜாமின் மனு வழக்கில் தானே நேரில் ஆஜாராகி ஏன் ஜாமீன் வழங்கக் கூடாது? என்று நீதிபதியிடம் விளக்கினார்.
(புதிய தலைமுறையில் எழுதியது)

6/6/18

பழையகோவிலில் புதிய கடவுள்அஹமதாபாத் நகரில் பிரமாண்டமான கோவிலைத் தலமையகமாக்கொண்டு இயங்கும் ஸ்வாமி நாரயாயணன் ஸன்ஸ்தான் என்ற அமைப்பு உலகின் பல நகரங்களில் ஸ்வாமி நாராயணன் கோவில்களை நிறுவி வருபவர்கள். இந்தக் கோவில்கள் அஹமதாபாத்திலும், டில்லியிலும் இருப்பதைப் போன்ற அக்ஷரதாம் ஒவ்வொரு நாட்டிலும்  மிக அழகாக வெளிர் ஆராஞ்ச் வண்ணத்தில் இந்திய சிற்ப, கட்டிட கலை மிளர அமைக்கபட்டிருக்கும்
.
ஓவ்வொரு இடத்திலும் செல்வச் செழுமையை பறை சாற்றும் இந்தக் கோவில்கள் முழுவதும் பிரமாண்ட சாண்டிலியர்கள், தானியங்கி கதவுகள், சன்னதியில் நீங்கள் நிற்கும் நேரம் மட்டும் தானே ஒலிக்கும் பிரார்த்தனை, லேசர் ஷோ, இசை நீருற்று என அமர்களபடுத்துவார்கள்.
இந்தியக்கோவில்களில் இரு புறமும் ஒலி ஒளி காட்சிகளாக அமைக்கப்பட்டிருக்கும் அவர்களின் முதல் குருவின் வாழ்க்கை கதையைப் பார்க்க அமைக்கபட்டிருக்கும் செயற்கை கால்வாயில் திரிலிங்கான படகுப் பயண வசதியும் இருக்கும். 3D  சினிமாக்கூட உண்டு 
.
இவர்கள் அமெரிக்காவில் ஏற்கனவே இதுபோல இருக்கும் கோவில்களைத் தொடர்ந்து இப்போது மேலும் சில புதிய கோவில்களை உருவாக்கிவருகிறார்கள் என்ற செய்தியில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. ஆனால் இவர்கள் அங்குள்ள பழைய சர்ச்களை வாங்கி அதைப் புதுப்பித்து ஸ்வாமிநாரயாணன் கோவில்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பது தான் ஆச்சரியம்.
கலிபோர்னியா, கென்டகி மாநிலங்களில் உள்ள இரண்டு நகரங்களில் சர்ச்களில் ஸ்வாமி நாரயணனைக்குடியமர்தியிருப்பதைப் போல அண்மையில் அமெரிக்காவின் டெலவேர் என்ற மாநிலத்தில் பேர் (bear) என்ற நகரில் ஒரு 50 ஆண்டு பழமையான சரச்சை வாங்கி வினாயகரை பிரதிஷ்டை செய்து கணபதி பூஜையுடன் கடந்த ஆண்டு புதுபிக்கும் பணியைத் துவக்கி இபோது முடித்திருக்கிறார்கள். இதற்கான கோபுர முகப்புகளும் விதானங்களும் இந்தியாவில் செய்து அனுப்பபட்டிருக்கிறது.

சில ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் பயணம் செய்த இந்த அமைப்பின் தலைவர் புருஷோத்மபிரியதாஸ் ஸ்வாமிகள் அமெரிக்காவில் பல நகரங்களிலும் ஸ்வாமி நாரயாண கோவில் அமைக்க ஆர்வம் கொள்ள வேண்டும் எனப் பக்கதர்களை கேட்டுகொண்டதின் விளைவாக முனைப்புடன் செயல்பட்ட பக்தர்கள் கண்டுபிடித்த விஷயம், பெரிய வழிபாட்டுக் கூடம் பலர் சாப்பிடும் வசதியுடன் இருக்கும் சமயலறையுடன் இருக்கும் இந்த சர்ச் விற்பனைக்கு வருகிறது என்பது தான்.

யேசு நாதர் வாழ்ந்த வீடாக இருந்தாலும் பரவாயில்லை அதை ஸ்வாமி நாராயணன் கோவிலாக மாற்ற ஆட்சேபணை இல்லையென இந்திய தலமை சொல்லிவிட மளமளவென எழுந்துவிட்டது கோவில்
இதுவரை செலவழித்திருப்பது 14 லட்சம் டாலர்கள். டெலவேர் மாநிலம் அமெரிக்காவின் மிகச்சிறிய மாநிலங்களில் ஒன்று.  அமெரிக்க சுதந்திர பிரகடனத்தில் கையெழுத்திட்ட முதல் மாநிலம் என்பதால் பல சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டிருக்கும் மாநிலம். டெலவேரில் 800 இந்தியர்களே இருந்தாலும் நியூஜெர்ஸி, மெரிலான்ட், பென்ஸ்லிவேனியா போன்ற அண்டை மாநிலங்களிலிருந்து இது ஒரு மணி நேரப்பயணம் என்பதால் அந்த பகுதிகளில் வாழும் அதிகமான இந்தியர்களிடையே பிரபலமாகிக்கொண்டிருக்கும் கோவில் இது.


மிகப்பெரிய நிலப்பரப்பை வாங்கி அதில் பிரமாண்டமாகக் கோவில்களை எழுப்பும் இவர்கள் இப்படி சர்ச்களை வாங்கி புதுபித்து இந்து கோவில்களாக மாற்றுவதற்கு காரணம் அமெரிக்க வழிபாட்டு தலங்களின் விதிகள் என்கிறார்கள். அமெரிக்காவில் எந்த மத்தினர் கோவில் போன்ற வழிபட்டுதலங்கள் அமைக்க அரசிடம் லைசென்ஸ் பெற வேண்டும். எந்தக்கோவிலாக இருந்தாலும் சர்ச் என்ற பெயரில் தான் அனுமதி வழங்கப்படும். சில மாநிலங்களில் இப்போது புதிய வழிபாட்டுதலங்களுக்கு அனுமதியில்லை. அதனால் சர்ச் அனுமதியிள்ள கட்டிட்டத்தை வாங்கி புதிப்பது என்ற அணுகு முறையை இவர்கள் கையாளுகிறார்கள்.

சரி ஏன் சர்ச்சுகளை அதுவும் 50 அல்லது 80 ஆண்டுகள் பழமையான சர்ச்களை விற்கிறார்கள்? சர்ச்களை விற்க முடியுமா?

அமெரிக்காவில் பல மாநிலங்களில் பல சர்ச்கள் எந்தவித கூட்டமைப்பின் கீழ் இல்லாமல் தனிச்சையாக இயங்கும் அதிகாரம் பெற்றவை. அந்த சர்ச்சும் அது சார்ந்த இடங்களுக்கும் அதன் தலைமைப் பாதிரியார் தலமையில் இயங்கும் குழுவினர்தான் உரிமையாளர்கள்.
அதிக அளவில் பிரார்த்தனை கூட்டங்களுக்கு மக்கள் வருவதில்லை. வருபவர்களுக்கு இவ்வளவு பெரிய இடம் அவசியமில்லை என்றும் உயர்ந்துவரும் இன்றைய நில மதிப்பினால் கிடைக்கும் பெரும் தொகையை அவர்களது கல்வி சமூகப்பணிகளுக்கு செலவிட முடியும் என்றும் காரணங்கள் சொல்லபடுகிறது. சமூக பணிகளுக்குச்செலவிட்டால் வரிவிலக்குகளும் இருக்கின்றன. என்ற காரணமும் சொல்லப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாகச் சர்ச்களுக்கு தனியார் கொடுத்துவரும் நன்கொடைகள் குறைந்து கொண்டே வருகிறது முன்போல் சர்ச் திருமணங்கள் என்பது இப்போதில்லை. பெரிய அளவில் இருக்கும் சர்ச்களை பராமரிக்க அதிகம் செலவாகிறது என்பதும் ஒரு காரணம் 80 சதவீத  அமெரிக்கர்கள் கடவுளை நம்புபவர்களாக இருந்தாலும் வார இறுதி விடுமுறை நாளை சர்ச்சில் கழிக்க விரும்புவதில்லி. 
.

சில ஆண்டுகளுக்கு முன் நியார்க் நகரில் மன்ஹாட்டன் பகுதியில் சாலை சீரமைப்பு பகுதிக்காகப் பல தனியார் கட்டிடங்களை நகர நிர்வாகவம் வாங்கியதில் அந்ததெருருவிலிருந்த ஒரு பழைய சர்ச்சையும் வாங்கினார்கள்.  அதற்கு நகர நிர்வாகம் தந்த விலை பல பழைய சர்ச் நிர்வாகங்களைச் சிந்திக்க வைத்திருக்கிறது.
இப்போது அமெரிக்காவின் பல நகரங்களில் பழைய சர்ச்களை விற்க ஆரம்பித்திருக்கிறார்கள் கோல்ட் வெல் என்ற பிரபல அமெரிக்க ரியல் எஸ்டேட் நிறுவனம் பழைய சர்ச்கள் விற்பனைக்கென்றே ஒரு தனி இணைய தளத்தைத்துவங்கி சர்ச்சின் படங்களுடன் விளம்பரபடுத்திக்கொண்டிருக்கிறார்கள். இது பல மில்லியன் டாலர் பிஸினஸ் என்பதால் வேறுசில ரியல் எஸ்டேட் நிறுவனங்களும் களத்தில் இறங்கியிருக்கிறார்கள்.
அதனால் இந்துக் கோவில்கள் தவிர தனிப்பட்டமுறையில் ஆசிரமங்கள் நடத்தும் அமெரிக்க வாழ் இந்தியர்களின் அமைப்பினர்களும் இந்த சர்ச்களை வாங்க ஆர்வம் காட்டுகிறார்கள்.
அமெரிக்க மக்களிடம் இந்த சர்ச் விற்பனைகளுக்கு மத ரீதியாகக் கூட எந்த எதிர்ப்பும் எழவில்லை. சொத்தின் உரிமையாளார்கள் அதை விற்கிறார்கள். என்ற ரீதியில் தான் பார்க்கிறார்கள். சர்ச்களை ச்ர்ச்சையில்லாமல் விற்றுகொண்டிருக்கிறார்கள்
 தீவிர மதபக்தியுள்ளவர்களில் சிலர் மட்டும் ஏற்கனவே சர்ச் வழிபாடுகள் குறைந்து வரும் இன்றைய நிலையில் இம்மாதிரி விற்பனைகள் இளைஞர்களுக்கு சர்ச்களை விட்டு விலகும் எண்ணத்தை அதிகரிக்கும் என சில நாளிதழ்களில் எழுதிக்கொண்டிருக்கிறார்கள்
.
ஸ்வாமி நாரயணன் கோவில் நிர்வாகம் அமெரிக்காவில் மட்டுமில்லை இங்கிலாந்திலும் இரண்டு நகரங்களில் சர்ச்களை வாங்கி கோவில்களை நிறுவியிருக்கிறார்கள் என்ற செய்தி ஐரோப்பவிலும் மெல்ல இந்த பழைய சர்ச்களின் விற்பனை ஜுரம் பரவிக்கொண்டிருக்கிறது என்பதை உணர்த்துகிறது
.
முன்பு இங்கு இருந்தது  யாராகயிருந்தால் என்ன? உலகெங்கும் நிறைந்திருக்கும் எங்கள் கடவுள் இப்போது இங்கு இருக்கிறார் என்பதைச்சொல்ல சர்ச்சாக இருந்த கட்டிடங்களையும்  ஏற்று  இந்து மதத்தின் பெருந்தன்மையை உலகிற்கு காட்டியிருக்கிறார்கள் ஸ்வாமி நாரயாயணன் ஸன்ஸ்தான்.

30/5/18

கடவுளின் வீடுஅது அழகான இடம் அவசியம் பார்க்கவேண்டிய ஒர் இடம். தவறவிடாதீர்கள். அந்தப் பயணத்தையும், இடத்தையும் வாழ்நாளில் மறக்கமாட்டீர்கள் என்றார் நண்பர். அங்குள்ள இயற்கையின் எழிலில் மயங்கி அவர் ஒவ்வொரு ஆண்டும் அங்குச் சென்று ஓய்வெடுப்பதையும் சொல்லி ஆவலை அதிகப்படுத்தினார். அவர் சொன்ன இடம் விசாகபட்டினத்திலிருந்து 120 கீமி தொலைவிலிருக்கும் அரக்கு பள்ளதாக்கு.

ஆந்திர-ஒடிஸா எல்லைப்பகுதியிலிருக்கும் கிழக்குத் தொடர்ச்சி மலையின் ஒரு பகுதிதான் இந்த அரக்கு வேலி என்றழைக்கப்படும் பள்ளதாக்கு. ஆந்திர மாநிலத்துக்கு இயற்கை அளித்திருக்கும் கொடையான இந்த அழகான பள்ளதாக்குக்கு ரயிலில் சென்று மறுநாள் பஸ்ஸில் திரும்ப ஆந்திர மாநில சுற்றுலாத்துறை. ஒர் இரவு தங்க, உணவு வசதிகளுடன் பேக்கேஜ் டிக்கெட் தருகிறார்கள்
.
பல காலமாக இந்த வழித்தடத்தில் சென்று கொண்டிருக்கும் ஒரு பகல் நேர பாஸன்ஞ்சர் தொடர் வண்டியில் கடந்த ஆண்டு ஒரு ஏசி சேர் காரை இணைதிருக்கிறார்கள் இது அழகான இயற்கை சூழலை ரசித்துப் பார்த்துக்கொண்டேசெல்லவதற்கென்றே வசதியாக அமைக்கப் பட்ட பெட்டி. இருபுறமும் பளிச்சென்று தெரியும் வெளிப்புற காட்சிகளைப் பார்க்க பெரிய கண்ணாடி ஜன்னல்கள். வசதியாகத் திருப்பிக்கொள்ளும் சீட்டுகள். கண்ணாடி ஜன்னல்களுடன் கூடிய மேற்கூரை. பிரமாதமாக இருக்கிறது
.
நண்பர் சொன்னது மிகச்சரியான வார்த்தைகள் என்பதை தொடர் வண்டி புறப்பட்ட ஒன்றை மணியில் உணர்கிறோம். 13400 மீட்டர் உயர மலைப்பகுதிக்கு மெல்ல ஏறுகிறது. இரண்டு புறமும் பசுமை அடர்ந்த காடு, தொலைவில் கருநீலவண்ணத்தில் மலைச்சிகரங்கள். அதைத்தொட்டுச் செல்லும் மேக கூட்டங்கள் சட்டென்று காட்சி தரும் அருவிகள். சில இடங்களில் மெல்லிய தூறல் என அற்புதமான காட்சிகள். கண்ணாடி மேற்கூரையில் வானமும் நமது தொடர் வண்டியைப் பார்த்துக்கொண்டு செல்லும் பறவைகளும் கூட அவ்வப்போது தெரிகிறது.வண்டியினுளிருக்கும் டிவி திரையிலிருந்து எழும் மெல்லிய இசை சுழலுக்கு மேலும் இதம் சேர்க்கிறது.

மலைப்பகுதியில் பயணிக்கும்போது இடது புறம் பசமையான பள்ளதாக்கும் வலது புறம் சிறிதும் பெரிதுமாக அருவிகளும் நம்மை அசத்துகின்றன. 5 மணி நேரத்தில் 58 குகைகளையும் 84 பாலங்களையும் கடக்கிறது. தொடர் வண்டி. சில குகைகள் மிகப் பெரிது. இருள் சூழுவதால் குகைகளுக்குள் நுழைந்தவுடன் வண்டியின் உள்ளே விளக்குகள் எரிகிறது அந்தக் குகையின் நீளம் உயரம் பற்றிய விபரங்கள் ஒலிபெருக்கியில் கேட்கிறது. சில இடங்களில் தொடர் வண்டிகீழ் நோக்கிசென்று பின்னர் மேலேஏறுகிறது. இந்தக் குகைகள் பாலங்கள் தவிர பள்ளதாக்கின் கணவாய்களிலும் செல்லுகிறது எனப் புரிந்துகொள்கிறோம். சில இடங்களைக் கடக்கும் போது இந்த ரயில் பாதை குகைகளைச் சில திரைப்படங்களில் சண்டை கட்சிகளில் பார்த்த நினைவு வருகிறது
பல இன்னல்களுக்கடையே பல ஆயிரக்காணக்கான மனிதர்கள் கடும் உழைப்பில் பாலங்களும், குகைகளுமாக உருவாகியிருக்கும் இந்தத் தொடர் வண்டிப்பாதை உருவானதற்கு காரணம். சட்டிஸ்கர் மாநில நிலக்கரி சுரங்களிலிருந்து நிலக்கரி மற்றும் தாதுக்களை நேரடியாக விசாகபட்டணம் ஏற்றுமதிக்காகத் துறைமுகத்துக்கு கொண்டுவரவும் விசாகப் பட்டின உருக்காலையில் பயன்படுத்தபடுவதற்கும் தான்.
இன்றும் அந்தப்பணி தொடரும் நிலையில், ஆந்திர சுற்றுலாத்துறையில் யாரோ ஒரு புண்னியவானுக்கு, இந்தப்பாதையில் செல்லும் ஒரு பாஸஞ்சர் வண்டியில் இப்படியொரு கோச்சை அமைத்து டூரிஸ்ட்களை கவரும் யோசனை பிறந்து அது செயலாக்கவும் பட்டிருப்பது நமது அதிர்ஷ்டமே
.
சிடம்பள்ளி என்ற இடத்தில் நீண்ட குகையைக்கடக்கும்போது குகையின் முடிவில் வரும் அருவியைக் காணத்தவறாதீர்கள் என்ற அறிவிப்பு கேட்கிறது. காத்திருக்கிறோம். மெல்ல வளைவில் செல்லும் தொடர் வண்டி அந்த அருவியில் சற்று நனையுமளவுக்கு அருகில் அந்த அருவி. கண்ணாடி ஜன்னல் வழியாகப் பார்ப்பதால் அருவியின் ஓசையக் கேட்க முடியவில்லையென்றாலும் உணர்கிறோம்
.
போரா குலாவு (BORRAGUHALU) என்ற நிலையத்தில் நிற்கும் வண்டியிலிருந்து இறங்கி போரா குகைகளைப் பார்க்கச் சுற்றுலா பேருந்தில் பயணிக்கிறோம். ஒடிசா மொழியில் போரா என்றால் பெரிய துளை என்றும் குலாவு என்றால் குகை என்றும் பொருள்.
ஒரு பெரிய மலையின் உச்சிப்பகுதிக்கு ஏறிப் பின் அங்கிருக்கும் ஒரு பெரிய வாசலின் வழியே கிழே இறங்கி அந்தக் குகைகளைப் பார்க்க வேண்டும்.
அந்தக் குகையின் உட்புறம் முழுவதும் மேலிருந்து உருகி வழிந்து உறைந்தது போல விழுதுகளாகவும் பல வடிவங்களில் பிம்பங்கள் தொங்கிக் கொண்டிருக்கிறது
.
மிகப்பெரிய அளவில் பரந்திருக்கும் அந்தக் குகையின் உள்ளே வெவ்வறு உயரங்களிலிருக்கும் இயற்கையாகப் படந்திருக்கும் இவைகளின் மீது பல வண்ணங்களில் எல்இடி விளக்கு ஓளிகளைப்பாய்ச்சி காட்டுகிறார்கள். ஒரிடத்தில் கிட்டதட்ட லிங்க வடிவிலிருக்கும் பாறையில் அண்மையில் பூஜித்து வழிபட்ட அடையாளங்கள்

சுண்ணாம்புக்கற்கள் நிறைந்த மலைப்பகுதிகளில் இப்படி இயற்கை குகைகள் இருக்கும். அப்படிப்பட்ட குகைகளில் நீரில் இருக்கும் ஹூமிக்(HUMIC) அமிலத்தினால். சுண்ணாம்புக்கற்களுக்குள் இருக்கும் உப்புப்படிவங்கள் கரைந்து உள்நோக்கி செல்வதனால் இப்படிப்பட்ட குகைகள் உருவாகின்றன.  சில் இடங்களில் நீர் கசிந்து கொண்டிருக்கிறது.  இப்படி உருவான இந்தக் குகையை 1807 வில்லியம் கிஞ் ஜார்ஜ் என்ற ஆங்கிலேயே சர்வேயர் கண்டுபிடித்துபதிவுசெய்திருக்கிறார் என்கிறது பூவியல் சரித்திரம்.
 இந்தக்குகைகளின் வயது 15கோடி வருடங்கள். இங்கு 15000 ஆண்டுகளுக்கு மனிதன் வசித்தற்கான அடையாளங்களை ஆந்திர பலகலைகழக ஆராய்ச்சி கண்டுபிடித்திருப்பதைச்சொல்லி ஆச்சரியப்படுத்துகிறது சுற்றுலாத்துறையின் தகவல் பலகை.

ஆனால் உள்ளூர் பழங்குடி கைடு சொன்ன கதை சுவாரஸ்யமானது. பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இந்தப் பகுதியில் மாடு மேய்த்துக்கொண்டிருந்த சிறுவன் ஒருவன் மேய்ந்து கொண்டிருந்த தன் மாடு ஒன்றை காணோம் என்று தேடிக்கொண்டுவரும்போது இந்த இடத்தைப் பார்த்ததாகவும் அந்தப் பெரிய பொந்துக்குள் ஆழத்தில் விழுந்த அந்த மாட்டுக்கு எந்த ஆபத்தும் நேராத அதிசயத்தை வியந்து உள்ளே  இறங்கிச்சென்று பார்த்தபோது அங்கே சிவ லிங்கம் இருந்ததைப் பார்த்தாகவும் அது முதல் இது சிவன், பார்வதி வினயாகர் வாழும் கடவுளின் வீடு  என்று தங்கள் இனத்தவர் நம்புவதாகவும் சொன்னார். பொறுமையாக நீங்கள் உற்று கவனித்தால் அந்தப் படிமங்களில் கடவுளரின் உருவங்களைப் பார்க்கலாம் என்றும் சொன்னார்

இந்தக் குகைகளிலிருந்து 20 கீமி தொலைவில் அழகான அருவி அருகில் ஆந்திர சுற்றுலாத்துறையினரில். மிக ரசனையுள்ளவர்கள் இடத்தைத் தேர்ந்தெடுத்து விடுதியை கட்டியிருக்கிறார்கள் 
.
திரும்பும் பயணத்தைச் சுற்றூலாத்துறையின் பேருந்தில். தொடர்கிறோம் தொடர் வண்டிப்பயணத்தில் பார்க்க முடியாத இந்தப்பள்ளதாக்கின் அழகிய மறுபக்கத்தை ரசித்துப் பார்த்துக்கொண்டே வருகிறோம் இருபுறமும் கனண்ணுக்கெட்டிய வரை கண்ட காடு. காபி தோட்டங்கள். பசும் புல்வெளிகள் காட்சிகள் எல்லாம் மெல்ல  பரபரப்பான சாலைளாக மாறியது   நாம் விசாகபட்டிணத்தை நெருங்கிறோம் என்பதைச் சொன்னது.


21/5/18

ஒரு இணைய தள வியாபார நிறுவனத்துக்கு இத்தனை கோடிகளா?

இந்தியாவில் 10 ஆண்டுகளுக்கு முன்னர் பங்களுரில் ஒரு இரண்டு பெட் ரூம் வாடகை பிளாட்டில் துவக்கப்பட்ட ஒரு நிறுவனத்தின் பங்குகள் கடந்த வாரம்1,600 கோடி அமெரிக்க டாலர் (சுமார் 1,07,600 கோடி இந்திய ரூபாய்) விலையில் விற்கபட்டிருப்பதை உங்களால் நம்ப முடிகிறதா?
உலகளவில் வர்த்தகத்திலிடுபட்டிருக்கும் பெரிய நிறுவனங்கள் கூட இந்தச் செய்தியைக் கேட்டு ஆச்சரியத்தில் அதிர்ந்தன.
விற்கபட்ட நிறுவனம் இந்திய இணைய தளமார்க்கெட்டிங் கம்பெனி பிளிப் கார்ட். வாங்கியிருப்பது உலகில் விற்பனையின் அடிப்படையில் இரண்டாவது இடத்திலிருக்கும் பெரிய அமெரிக்க வணிக நிறுவனமான வால்மார்ட்.
அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்ட இ-காமர்ஸ் நிறுவனமான அமேசான், உலகின் பல நாடுகளிலும் தன் வர்த்தகத்தைசெய்கிறது. இவர்கள் எந்தப்பொருளையும் உற்பத்தி செய்வதில்லை. உற்பத்தி நிறுவனங்களிடமிருந்து மிகக்குறைந்த விலைக்குப் பொருட்களை வாங்கி அதைத் தங்கள் இணையதளத்தின் மூலம், வெளி மார்க்கெட்டில் விற்பதைவிட குறைந்தை விலைக்கு விற்பனை செய்யும் ஒரு நிறுவனம். இந்தியாவில் இவர்கள் காலடிவைத்ததும் துவக்கபட்ட பங்களுரு அலுவலகத்தில் பணிக்குச்சேர்ந்தவர்கள் சச்சின் பன்சால், பின்னி. என்ற இரண்டு 22 வயது இளைஞர்கள். இருவரும் டெல்லி ஐ ஐ டியில் படித்தவர்கள். நல்ல சம்பளம் என்பதால் அமேசானில் வேலைக்குச்சேர்ந்தார்கள்.
ஓராண்டு பணிக்குப் பின்னர் இவர்களுக்கு எழுந்த எண்ணம் இந்தக்கம்பெனி செய்வதை நாம் ஏன் தனியாக ஒரு கம்பெனியை உருவாக்கிச் செய்யக் கூடாது? என்பது தான். உடனே வேலையை ராஜினாமாச் செய்து விட்டுச் செயலில்இறங்கினார்கள். ஒரு சிறிய இரண்டு பெட் ரூம் வாடகை பிளாட்டில் 4 கம்யூட்டர்களுடன் துவங்கப்பட்டது பிளிப் கார்ட். .  புத்தக் விற்பனையில் துவங்கி அமேசான் செய்யும் அத்தனையும் செய்வது என்ற முடிவோடு களமிறங்கிய இவர்கள் நிறுவனத்தின் வளர்ச்சியை உலகில் எந்த நிறுவனமும் இதுவரை கண்டதில்லை

.2007ல் துவக்கபட்ட இந்த நிறுவனத்தின் இன்றைய மதிப்பு 20.8 கோடி டாலர்கள் (இது டாடா ஸ்டில் நிறுவனத்தின் மதிப்பைவிட இருமடங்கு). என உலகின் முன்னணி மதிப்பிட்டு நிருவனம் மதிப்பிட்டிருக்கிறது. துவக்க நிலை (Startup) வெற்றிபெற்ற நிறுவனங்களில் உலகின் 15 வது இடத்திலிருக்கிறது பிளிப் கார்ட்
.
இந்தப் பிளிப் கார்ட்டின் 77% பங்குகளை 1,600 கோடி அமெரிக்க டாலர் (சுமார் 1,07,600 கோடி இந்திய ரூபாய்) கொடுத்து வாங்கியிருக்கிறது. இதன் மூலம் இதில் மூதலீடு செய்தவர்கள், நிறுவன ஷேர்களை பரிசாகப் பெற்ற ஊழியர்கள் பெரும் லாபம் அடைவார்கள். மொத்த 10ஆயிரம் ஊழியர்களில் 3000 பேர் ஒரே இரவில் டாலர்களில் லட்சாதிபதிகளாகிவிட்டார்கள் இந்தக் கம்பெனியின் நிறுவனர்களில் ஒருவரான சச்சின் பன்சால் அவரது 6% பங்குகளுகாக 6700 கோடிகள் பெற்றுகொண்டு வெளியேறுகிறார். மற்றொரு நிறுவனர் புதிய நிறுவனத்தில் தொடர்கிறார்.

இந்த நிலையை எப்படி இந்த நிறுவனம் அடைந்தது?.

உலக இணைய சந்தை ஆய்வு நிறுவனமான ஃபாரஸ்டர் கடந்த ஆண்டு இந்தியாவில் இணையதள விற்பனையின் மதிப்பு சுமார் 2,100 கோடி அமெரிக்க டாலராக (சுமார் 1,41,250 கோடி இந்திய ரூபாய்) இருந்தது. என்கிறது. இது சராசரியாகக் கடந்த 10 ஆண்டுகளில் ஆண்டுக்கு 10 முதல் 15 % வரை உயர்ந்து வந்ததின் விளைவு. இணையதளம் மூலம் பொருட்கள் வாங்கும் பழக்கம் இந்தியர்களிடையே அதிகரித்து வருவதால் இதைல் மிகப்பெரிய வர்த்தக வாய்ப்பு இருப்பதை அமேசானில் வேலை செய்யும் போதே கணித்து களத்தில் இறங்கியவர்கள் இந்த இளைஞர்கள்.
இவர்கள் இந்த இணைய தள வியாபாரத்தில் இந்தியர்களின் உளவியலைப்புரிந்து கொண்டு தங்கள் பிளிப்கார்ட்டில் அறிமுகப்படுத்தினார்கள். ஆன்லைன் வர்த்தகத்தின் முக்கிய தேவை கிரிடிட், அல்லது டெபிட்கார்ட். அது அதிகம் பிரபலமாகத காலகட்டத்தில் இவர்கள் உங்கள் வீட்டுக்குப் பொருள் கொண்டுவந்து தருபவரிடமே பணம் தரலாம் என்ற புதிய முறையை உருவாக்கினார்கள். அதைத்தொடர்ந்து ஆர்டர் செய்த பொருளைச் சரிபார்த்த பின்னர் டெலிவரி செய்பவரிடமே பணம்தரலாம் சரியில்லை என்றால் பொருளைத் திருப்பிக்கொடுக்கலாம். என்ற அதரடி அறிவிப்புகளினால் நிறுவனத்தின் நன்மதிப்பும் விற்பனையும் பெருகியது.
10 கோடி வாடிக்கையாளார்களுக்கு கடந்த ஆண்டுமட்டும் இரண்டு கோடிக்கும் அதிகமான எண்ணிக்கையில் பொருட்களை ஆன் லைலனில் விற்றிருக்கிறார்கள்

தொடர்ந்த விரிவாக்கத்துக்கு அதிக மூதலீடுகள் வேண்டுமே அதை எப்படி சமாளித்தார்கள்.?

புதிதாகத் துவக்கபட்டு கடின உழைப்பாலும் சமயோசிதமான திட்டமிடலாலும் வளர்ந்து கொண்டுவரும் ஸ்டார்ட்அப் கம்பெனிகளைக் கண்ணில் விளக்கெண்ணை விட்டுக்கொண்டு பார்த்துக்கொண்டிருக்கின்றன சில பன்னாட்டு வென்ச்ச்ர் கேப்பிட்டலிஸ்ட்  என்றா முதலீட்டு நிறுவனங்கள். இவர்கள் இம்மாதிரி கம்பெனிகளைப் பற்றி அறிந்து தங்கள் செலவில் அதன் எதிர்காலத்தை ஆராய்ந்து கணித்து முதலீடு செய்வார்கள். வாய்ப்புகள் வரும்போது தங்கள் முதலீட்டைபோலப் பல மடங்கை லாபமாகப் பெறுவார்கள். இவர்கள் தொழிலே இப்படி முதலீடு செய்வது மட்டும் தான். நஷ்டம் வந்தாலும் அவர்களுக்குத்தான். இப்படி பட்ட சில கம்பெனிகள் இந்தப் பிளப் கார்ட்டை கவனித்து தொடர்ந்து தங்கள் முதலீட்டைச் செய்து வந்தார்கள். இன்று இப்படி முதலீடு செய்த நிறுவனங்களுக்கு இந்த நிறுவனத்தை வால்மார்ட் வாங்குவதால் நல்ல லாபம் கிடைத்திருக்கிறது. கடந்த ஆண்டு இதில் 2.5 பில்லியன் டாலர் முதலீடு செய்த நிருவனங்களில் ஒன்று ஜப்பானைச் சேர்ந்த சாப்ட் பேங்க். இன்று அவர்களின் பங்குகளுக்கு 4 பில்லியன் டாலர் பெறுகிறார்கள் அதாவது ஒரே ஆண்டில்  75% லாபம்.

வால் மார்ட் ஏன் இவ்வளவு விலை கொடுத்து இதை வாங்குகிறது?

கடந்த சில மாதங்களாக இந்தியாவில் போட்டியைத்தவிர்க்க அமேசான் நிறுவனமே பிளிப் கார்ட்டை வாங்கப்போவதாக மார்க்கெட்டில் பேசப்பட்டுவந்தது. ஆனால் உறுதியானதகவல்கள் இல்லை
.
வால் மார்ட். அமெரிக்காவில் உள்ள உலகின் இரண்டாவது பெரிய நிறுவனம். பல நாடுகளிலும் பரந்துள்ளது சில்லறை வணிகத்தில் புதிய சாதனைகளையும் சரித்தரங்களை படைத்தவர்கள்.
மோடி அரசின் புதிய வணிகக்கொள்கைகளின் படி இந்தியாவிலும் பெரிய திட்டங்களுடன் சில்லறை வணிகத்தில் காலடி வைத்தவர்கள், சங்கலித்தொடராக 21 கடைகளைத் திறந்தார்கள். ஆனால் சந்தித்த எதிர்ப்புகளினாலும் அரசியலினாலும் சற்று மெதுவான வேகத்தில் நகர்ந்து கொண்டிருந்தார்கள். பிளிப்கார்ட்டை வாங்கி இந்திய சில்லறை வர்த்தகத்தில் குறுக்கு வழியில் புகுந்துவிடலாம் என்ற அவர்களின் திட்டத்தின் விளைவே இந்த இந்திய மூதலீடு
.
இன்று வெற்றிகரமான் டீலினால் உலகத்தையே தங்களைப்பார்க்க வைத்த சச்சின் பன்ஸாலும், பின்னியும், துணிவுடனும் புதிய சிந்தனைகளுடன் ஸ்டார்ட் அப்களுடன் களமிறங்க காத்திருக்கும் இளைஞர்களுக்கு நம்பிக்கையூட்டுகிறார்கள்

8/5/18

சீனாவில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தமிழர்கள் கட்டிய கோவில்


சீனாவின் தென் கிழக்கில் இருக்கும் ஒரு தொழில் நகரம் குவான்ஷூ(QUANZHOU) இதன் அருகிலில் உள்ள கடற்கரை கிராமங்களில் ஒன்று சேடியன்.(CHEDIAN) கல்பாவிய.சிறிய சந்துகளும் முன் முற்றங்களுடன் கூடிய வீடுகளும், அது பல ஆயிரமாண்டுகள் பழமைவாய்ந்தது என்பதைச்சொல்லும் சாட்சிகள். அங்குள்ள கல்யூன் என்ற புத்தர் கோவில் மிகப்பழமையானது.சீனாவின் பல பகுதிகளிலிருந்தும் உலகின் பல நாடுகளிலிருந்தும் புத்தமத்தினர் தினசரி ஆயிரகணக்கில் வந்து வழிபடும் ஒரு கோவில்.
அந்தப் பழமையான புத்தர் கோவிலில் இருக்கும் ஒரு பெ


ண் தெய்வத்தை உள்ளுர் மக்கள் தினமும் தவறாமல் அதன் முன்னேயிருக்கும் வாயகன்ற வெண்கலப் பாத்திரத்தில் நிரம்பியிருக்கும் மணலில் ஏற்றிய ஊதுவத்திகளைச் சொருகி பிராத்தனைகளைச்சொல்லி வழிபடுகிறார்கள்
.
அந்தப் பெண் தெய்வம் சீனாவின் பல இடங்களிலிருக்கும் “கியூனியன் தேவி”(GUANYIN)- போதிசத்துவரின் பெண் வடிவம் என்று உள்ளுர் மக்கள் கருதுகிறார்கள். நான்கு கைகளுடனும் அவற்றில் உடுக்கு, ஆயுதம் ஏந்தி கால்கள் சப்பணமிட்ட நிலையில் இருக்கும் அந்தத் தேவியின் காலடியில் வேலால் தாக்கபட்ட நிலையில் ஒரு அரக்கனின் உருவமும் அருகில் இரு காவலர்களூம் நிற்கிறார்கள். அந்த தேவியின் வடிவம் சீனாவின் மற்ற இடங்களில் வழிபடப்படும் கியூனியன் தேவியின் உருவத்திலிருந்து மாறுபட்டதாக இருந்தாலும் உள்ளுர் மக்கள் இது தேவியின் மற்றொரு வடிவாக இருக்கும் என நம்பி புத்தபிரானை வழிபடும் முன் இந்தச் சன்னதியையும் வணங்கிச் செல்கிறார்கள்.
இது சீனர்கள் வழிபடும் தெய்வமில்லை. இந்த இடத்திலிருந்த ஒரு பழமையான இந்துக்கோவில் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ் நாட்டிலிருந்து வந்த தமிழர்க:ள் நிறுவி வழிபட்டு வந்த கோவில். அது கால போக்கில் புத்தர் கோவிலாகிவிட்டது. இது தெரியாமல் கிராம மக்கள் தொடர்ந்து ஒரு இந்து கடவுளை வணங்கிக்கொண்டிருக்கிறார்கள் என்கிறார் லீ சான் லாங் என்ற ஆய்வாளார். புத்தர் கோவிலின் நுழை வாயிலில் இருக்கும் மேடையின் பக்க வாட்டில் வரிசையாகப் பல நிலைகளைலிருக்கும் நரசிம்மரின் உருவங்களையும் இந்தக் கோவிலின் சன்னதிக்கு முன்னிருக்கும் தூண்களில் இந்துபுராணக்கதைகளைச் சொல்லும் சிற்பங்கள் இருப்பதையும் சொல்லுகிறார்.
சேடியன் கிராமம் பல நூறாண்டுகளுக்கு முன்னர் சீனாவின் மிக முக்கிய துறைமுகங்களில் ஒன்றாக இருந்திருக்கிறது. சீனாவின் கடல் வாணிகத்தில் முக்கிய இடம்பெற்றிருந்த இந்த துறைமுகத்திற்கும் தமிழக கடல் நகரங்களுக்குத் தொடர்பு இருந்திருக்கிறது. தமிழகத்திலிருந்து கப்பலில் வந்த வணிகர்கள் இந்த நகரில் வாழ்ந்திருக்கிறார்கள். இந்த நகரத்தில் இந்தக் கோவில் மட்டுமில்லை சுற்றுவட்டாரத்தில் பல கோவில்களையும் எழுப்பியிருக்கிறார்கள். என்கிறது  இதுகுறித்து ஆய்வுகள் செய்யும் சீனப்பேராசியர்கள் குழு.
சாங் என்ற மன்னர் (கி.பி 960-)பரம்பரையும் தொடர்ந்து வந்த யூவான் (கிபி1279) மன்னர் பரம்பரையினர் சீனாவை ஆண்டுவந்த காலத்தில் இந்தத் துறைமுகத்திற்கு தமிழகத்திலிருந்து கப்பல்கள் தொடர்ந்து வந்திருக்கின்றன. அந்த வணிகத்தைக் கவனிக்க தமிழர்கள் பெருமளவில் குழுக்களாக இங்கு வந்து வசித்திருக்கிறார்கள். அவர்கள் இந்தச் சுற்று வட்டாரத்தில் இரண்டு பெரிய கோவில்களையும் பல சிறிய கோவில்களையும் எழுப்பியிருக்கிறார்கள். என்கிறது வியூ வின்லாங் என்ற ஆராய்ச்சியாளரின் குறிப்பு. உள்ளூர்காரான இவர்தான் முதன் முதலில் இங்கு கண்டுபிடிக்கபட்ட ஒரு நரசிம்மரின் சிலையின் மூலம் அது தமிழ் நாட்டு கடவுள். என்றும் தமிழ்நாட்டுக்கும் இந்த கிராமத்துக்கும் உள்ள தொடர்பைக் கணடுபிடித்து 1930களிலேயே சொன்னவர். தொடர்ந்த ஆராய அவர் கேட்ட நிதி கொடுக்கபடாததாலும் நிகழ்ந்த அரசியல் மாற்றங்களாலும் ஆய்வு தொடரப்படவில்லை.
சில ஆண்டுகளுக்கு முன்னர் பாரம்பரியப் பெருமை மிக்க சீன நகரங்களில் பெரிய அளவில் பல நகரங்களில் கருவூலங்கள் அமைக்க அரசு முடிவு செய்தது. அதில் ஒன்று கடல் வாணிகத்தில் முன்னோடியாக இருந்த சேடியன் நகரம். பண்டைய சீனர்களில் கப்பல்கட்டும் முறை கடல் வாணிகத்தில் அவர்கள் சென்ற கலங்களின்  மாதிரிகளுடன் விளக்க பெரும் பொருட்செலவில் ஒரு நவீன அருங்காட்சியகம் எழுந்தது. அதன் இரண்டாம் மாடியில் நகரத்தின் அருகில் கிடைத்த சிலைகள் சிற்பங்களை வைக்கவும் முடிவானது.
 அந்த சிலைகளும் சிற்பங்களும் அப்படியே அச்சு அசலாகத் தமிழக, ஆந்திர கோவில்களில் காணப்படும் சிற்பங்களாக இருப்பதால் கடந்த சில ஆண்டுகளாக இந்தச் சிலைகளின் பின்னணி தொடர்பான ஆய்வுகள் தொடர வேண்டும் என்ற ஆர்வம் ஆராய்ச்சியாளர்களிடமிருந்து எழுந்திருக்கிறது.
எத்தனை கோவில்கள் இருந்து பின்னாளில் அழிந்திருக்கிறது என்று சொல்ல முடியவில்லை ஆனால் சுற்றுவட்டாரத்தில் பல இடங்களிலிருந்து சிலைகள் எடுக்கப்பட்டிருப்பதால் பல கோவில்கள் இருந்திருப்பதாக நம்பப்படுகிறது என்கிறது அருங்காட்சியகத்தின் குறிப்பு அதலிருக்கும் வரைபடம். சிலைகள கண்டுபிடிக்கபட்ட இடங்களாக இந்த நகரைமட்டும் இல்லாமல் பக்கத்து மாவட்டங்களையும் காட்டுகிறது.
அருங்காட்சியகத்தில் விஷ்ணு, நரசிம்மர். யாளி சிவலிங்கம் காளி போன்ற பல சிலைகள். இருக்கின்றன. ஒரு யானை சிவலிங்கத்திற்கு நீர் சொறிந்து அபிஷேகம் செய்கிற காட்சி. கிருஷ்ணன், பின்னணியில் பாம்பு போன்ற சிற்பங்கள் வடிக்கப்பட்ட தூண்கள் எல்லாமே கடல் கடந்து வந்த தமிழனின் சிற்பகலைக்கு சாட்சியாகயிருக்கிறது. சிலைகளின் கற்கள் உள்நாட்டு வகையாக இருப்பதால் தமிழக சிற்பிகள் வந்திருக்க வேண்டும் அல்லது வரையப்பட்ட படங்கள் கொண்டுவரப்பட்டு உள்ளூர்கலைஞர்களின் உதவியுடன் சிலைகள் வடிக்கப்பட்டிருக்க வேண்டும் என்கிறார்கள்.
ஆராய்ச்சியாளர்களின், பல்கலைகழகங்களின் தொடர்ந்த ஆர்வத்தால் அருங்காட்சியகத்தில் “சீனாவிற்கும் தென் இந்தியாவிற்குமான 1000 ஆண்டுத் தொடர்பு” என்று ஒரு தனிப் பகுதியே நிறுவப்பட்டிருக்கிறது. சிலைகளுக்கும் கல்செட்டுக்களுக்கும் ஆங்கிலத்தில்  விளக்கமும் இருக்கிறது சிவலிங்கமும் யானையும் இருக்கும் சிற்பத்தின் மூலையில் ஒரு சிலந்தியின் உருவமும் இருக்கிறது. சிவனை பாதுகாக்க தினசரி அந்த சிலந்தி கட்டிய வலையை யானை அபிஷனக்தினால் கலைத்து விட்டுக்கொண்டேயிருந்ததால் அந்த சிலந்தி கோபமுற்று யானையின் துதிக்கைக்குள் நுழைந்து அதைக்கொன்று விட்டது என்ற கதையை அருகிலிருக்கிறது
.
அருங்காட்சியகத்திலிருக்கும் கல்வெட்டுக்களில் அன்றைய தமிழ் எழுத்துக்களில் இருப்பதின் ஆங்கிலவடிவம் அருகில் வைக்கபட்டிருக்கிறது. அதில் ஒன்று இது.
ஹரனுக்கு நமஸ்காரம். எங்கும் வளம் நிரம்பியிருக்கட்டும். சித்திரை மாதத்தில் சித்தரை நாளான்று 1203ஆம் வருடம் தவசக்கரவர்த்தி சம்மந்த பெருமாள் ஆசிபெற்று மன்னர் செக்காச்சி கான் எழுத்தில் தந்த அனுமதியுடன் உடைய நாயினாரின் உருவம் மன்னரின் நலத்துக்காகப் பிரதிஷ்டை செய்யபட்டது
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் தமிழன் 2000 மைல்களுக்கு அப்பாலிருக்கும் ஒரு தேசத்துக்குத் தமிழையும் தன் கடவுளையும் கொண்டுசென்றுஅங்குஅதை நிறுவியிருக்கிறான் அது இன்ரும் வழிபடப்படுகிறது  என்பதையறியும்போது   வியப்பாகவும் பெருமையாகவும் இருக்கிறது