உலகிலேயே
மிக உயரமான இடத்தில் நின்று
கொண்டிருக்கிறோம். தடித்த கண்ணாடிச்சுவர்களுக்கு வெளியே கீழே
நீண்டமரவட்டைகளாக நெளியும் மெட்ரோ ரயில்களும், எறும்புகளாக
ஊரும் வாகனங்களும் அடையாளமே
தெரியாத மொட்டை மாடிகளும்,அருகில் ஓரளவு
அடையாளம் தெரியும் கட்டிடங்களும் நாம் இருக்கும் உயரத்தை
நமக்குச் சொல்லுகிறது. அந்த வட்ட வடிவ
தளத்தின் நடுவில் . அந்தக் கட்டிடத்தின் மாதிரிகளை,
படங்களைப் பல ஸைஸ்களில் நினைவுச்சின்னங்களை
விற்கும் பெரிய கடை. நம்மைப்
போல் அதைக் கடந்து செல்லும்
பலர். அமைதியாக நடக்கும் பல வெளிநாட்டவர்கள். சற்றே
தூக்கலாகக் கேட்கும் தென்னிந்திய மொழிகள்
துபாய்
நகரின் நடுவில் 828 மீட்டர் உயரத்தில் 163 தளங்களுடன்
இருக்கும் புர்ஜ் காலிபா தான்
உலகின் உயரமான கட்டிடம். அதன்
124 தளத்திலிருக்கிறோம். டெலிஸ்கோப் பைனாகுலர் எல்லாம் ரிட்ய்ர்ட் ஆகிவிட்டது.
அழகாக மானிட்டரில் தொலைவில்
இருப்பதைப் அருகில் பார்க்கும் வசதி.
உலகின்
பெரிய மால்களில் ஒன்றாக வர்ணிக்கப் படும்
துபாய் மால் இந்தக் கட்டிடத்தின்
மூன்றுதளங்களில். ஆண்டுக்கு 18 லட்சம் சுற்றுலா பயணிகள்
வரும் இடம். ஜெட்வேகத்தில் நேரடியாக
இந்த மேல்தளத்துக்கு வர லிப்ட். அழகான
ஆப்ரேட்டர். ஏறியவுடன் கட்டிடத்தின் பெருமையை, கின்னஸ் சாதனைகளைச் சொல்லும்
படம் ஆரம்பிக்கிறது, சில நிமிடங்களில் 124 வதி
மாடி. கதவுதிறக்கும்போது படம் முடிகிறது. தளத்தின்
பெயர் AT THE TOP. ஆனால் இதற்கும் மேலே
மாடிகள் இருக்கின்றன. இந்தத் தளத்துக்கு வர
200 திராஹம் கட்டணம்.சாதாரண நேரங்களில்
125 தான் சூரிய அஸ்தமனம் பார்க்கப்
பிரைம் டைம் கட்டணம் 200 திரஹாம்
சூரியனைப்பார்க்க டிக்கெட் கொடுத்துக் காசு வாங்கும் புத்திசாலிகள்.
கீழ்த்தளத்தில் பார்த்துவிட்டு மேலே போய்ச் சூரியன்
மறைவதற்குள் இரண்டாம் முறையாகவும் பார்க்கலாம். எங்கள் லிப்ட் அவ்வளவு
வேகம் என்ற டிக்கெட்டில் குறிப்பு
வேறு
இந்தத்
தளத்திலிருந்து இன்றைய மாலைப்பொழுதில் சூரிய
அஸ்தமனத்தை பார்க்கக் காத்திருக்கிறோம். இன்று சூரிய பகவான்
நிறைய நேரம் நம்மைப் பார்க்க
விரும்பினாரோ என்னவோ அவர் அறிவிக்கப்பட்ட
நேரத்தில் மறையவில்லை. உட்கார வசதிகள் இல்லதால்
ஏற்கனவே உட்கார்ந்திருக்கும் சிலரைப் பார்த்து நாமும்
தைரியமாகத் தரையில் உட்காருகிறோம். படமெடுக்கக்
காத்திருக்கிறோம்.
அந்த
உயர்ந்த கட்டிடத்தின் வெளியே தொங்குவது போலவும்,
கண்ணாடிச்சுவர்கள்மீது நடப்பது போலவும் விளிம்புகளில்
நிற்பதுபோலவும் படங்கள் எடுத்துக்கொள்ள விரும்புபவர்களை
ஒரு சாம்பல் வண்ண
பின்னணியில் படமெடுக்கிறார்
ஒரு சீன பெண் போட்டாகிராபர்.
படத்தில் இருப்பவர்களின் போஸ் இயற்கையாக இருக்க
ஆலோசனை சொல்லும் பெண் அஸிட்டெண்ட் நடித்துக்காட்டுகிறார்.
சிலசமயம் பயத்தால் கத்தும் உணர்வைக் காட்ட
கத்தியே காட்டுகிறார். மனிதர்கள் ஆர்வமாக நடிக்கின்றனர்.. மனிதர்களுக்குத்
தான் சாகச நடிப்பில் எவ்வளவு
ஆர்வம்.! எடுத்தபடம் வைஃபையில் கிழ்தளத்திற்கு போய்ப் படம் போட்டோஷாப்பில்
ஆபத்தான படமாக அமைக்கப்பட்டு இவர்கள்
கீழே போகும்போது தயாராகவிருக்கும்.
இலவசமாகக்
கிடைக்கும் இந்த நடிப்பு காட்சிகளையும்
சத்தங்களையும், இடையிடையே வெளியில் சூரியனையும் நாம் கவனித்துக் கொண்டிருக்கிறோம்.
சட்டென்று
அந்த இடம் பரபரப்பாகிறது. பறந்து
கிடக்கும் பாலைவனப்பகுதிகளுக்கும் அசையாத கடலுக்கும் பின்னே
பெரிய மஞ்சள் பந்தாக இருக்கும் சூரியன்
நிமிடங்களில் நிறம் மாறிச் சரசரவென
இறங்குவது தெரிகிறது. அந்த இடம் அமைதியாகிறது.
உயரமான இடத்திலிருந்து பார்ப்பதால் சூரியன் மறையும் வேகத்தைப்
பார்க்கமுடிகிறது. தரைத்தளத்திலிருந்து பார்த்தால் இந்த வேகத்தை உணர
முடியாது. ஒரே நேரத்தில் பல
கேமிராக்கள் இயங்குகின்றன.
இந்தியாவிலும்
உலகின் பல இடங்களிலும் சூரிய
அஸ்தமனங்களை கண்டிருந்தபோதிலும். சூரியன் நமது காலடிக்கும்
கீழே நழுவிப்போவதுபோலத் தோன்றும் இந்தக் காட்சி மாறுதலானது.
கூராகச்
சீவிவைத்த தடித்த பென்சிலைச் சுற்றி
வெவ்வேறு உயரங்களில் வட்ட நாணயங்கள் அடிக்கவைக்கப்பட்டிருப்பதைப்
போல இருக்கும் இந்தக்
கட்டிடம். இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய
கட்டிடகலை சாதனை. பார்க்க அரைவட்டங்களாகத்
தோன்றினாலும், அருகில் பார்க்கும்போது அவை
செவ்வக பட்டகங்களாக இணைக்கப்பட்டிருப்பது தெரிகிறது. பாலைவனப்பகுதியான துபாயில் காற்று மிக அதி
வேகத்தில் வீசும். அந்த உயரத்தில்
இதன் மீது மோதும் காற்றின்
அழுத்தத்தையும் வேகத்தையும் குறைக்க இந்தப் பட்டகங்கள்.
அதில் மோதும் காற்றை திசை திரும்பச் செய்திறது.
அதனால் கட்டிடம் எப்போதும் பாதுகாப்பாக இருக்கும்.
அரபுநாடுகள்
வெறும் எண்ணைவளம் மட்டும் கொண்ட பாலைவனம்
என்பதை மாற்றி மிக நவீனமான
இடமாக அத்தனை வசதிகளும் கொண்ட
சர்வதேசசுற்றுலா தலமாக, அன்னிய முதலீடுகளை
வரவேற்பதற்க ஒரு நகரை உருவாக்க மன்னர்
கண்ட கனவினால், 2000களில் துபாயில் பல
உயர்மாடிகட்டிடங்கள் உலகதரத்தில் எழுந்தன. நகரம் நவீனமயமாயிற்று. அப்போது
எழுந்த அலையின் உச்சக்கட்டம்தான் இந்தக்
கட்டிடம். அமெரிக்க நிறுவனங்கள் வடிவமைத்து ஜெர்மானிய நிறுவனங்கள் கட்டியவை. முதலில் துபாய் டவர்
என்றுதான் பெயரிடப்பட்டிருந்தது. 5 வருடங்களில் கட்டிமுடிக்கப்படுவதற்குள் அரபு நாடுகளின் பொருளாதாரம் சரிந்து, கட்டிடத்தை எழுப்பிய துபாய் வேர்ல்ட் நிறுவனம்
80 பில்லியின் டாலர் கடனில் மூழ்கியதும்,
அந்த நிறுவனத்தையும், துபாய் பொருளாதாரத்தையும் காப்பாற்றச்
சவுதி மன்னர் உதவியதும் -ஒரு
புத்தகம் எழுதுவதற்கான விஷயங்கள். உதவிய மன்னரைக் கௌரவிக்கும்
விதமாக கட்டிடத்திற்கு அவர் பெயரிடப்பட்டது(Khalifa bin Zayed Al Nahyan)
இந்த
160 மாடிகட்டிடத்தில் அலுவலகங்கள், மட்டுமில்லை ஆடம்பர ஹோட்டல்கள், பிளாட்களும்(flats)
இருக்கின்றன. 19ம் மாடியிலிருந்து108 வரை
900 வீடுகள். மிகப் பணக்கார குடும்பங்கள்
வசிக்கின்றன. ஷில்பா செட்டியின் கணவருக்கு
ஒரு தளமே இருக்கிறதாம். பல
பணக்கார இந்தியர்களுக்கும் வீடு இருக்கிறதாம். சட்டைப்பித்தானிலிருந்து
சகலத்தையும் மிக மிக அதிகவிலையில்
விற்கும் ஆர்மானி என்ற நிறுவனத்தின்
ஆடம்பர ஹோட்டலும் இருக்கிறது டின்னரின் விலை சென்னை -துபாய்
விமான கட்டணம்!
திரும்பும்போது
வேறு பாதை ஓர் நீண்ட
நடைபாதைக்கு பின் தான் லிப்ட்.
அந்தச் சுவரெங்கும் கட்டிடம் வளர்ந்த கதை படங்களுடன்.
ஆர்வமும் பொறுமையும் இருந்தால் நிறையத் தெரிந்து கொள்ளலாம்.
ஆயிரக்கணக்கான மனிதர்களின் உழைப்பின் சின்னம் இது என்ற
எண்ணத்தோடு, இதுகுறித்து படித்த மனித உரிமை
மீறல் விஷயங்களும் மனதில் எழுந்தது.
வெளியே
வரும்போது ஒரு தளத்திலிருந்து அந்த
மாலில் உள்ள the fall சிற்பத்தை அவசியம் பாருங்கள் என்றார்கள்
நண்பர்கள். விழும் அருவியில் மேலிருந்து
பாயும் மனிதர்களாக தெரிந்த அதில் எனக்கு
ஒரு நயமும் புரியவில்லை. அருவியில்
எவரும் அப்படி தலைகீழாக பாய்ந்து
குளிக்க முடியாது. சிற்பத்தில் என்ன தாத்பரியமோ புரியவில்லை.
இந்திரன் போன்றவர்களைத்தான் கேட்க வேண்டும்
.
எப்போதும்
மின்விளக்குகளின் ஒளியில் மூழ்கி இருப்பதனால்
மாலின் உள்ளே இருக்கும்போது பகலா இரவா எனத்தெரிவதில்லை.
வெளியே இருள் பரவிக்கொண்டிருந்தது.
மியூசிகல்
பவுண்டன் மறக்காமல் பாருங்கள் என்று சொன்னது நினைவுக்கு
வந்தது. அதற்கு எந்த கேட்?
என்றுவிசாரிக்க திரும்பியபோது நான் இங்கே தானே
நிற்கிறேன் எனச்சொல்லுவது போல ஒரு உயரமான
நீருற்று நம்மைப் பார்த்துச் சிரிக்கிறது.
மிக உயரமானது. 100 அடிக்கும் மேல் இருக்கும். இரவு துவங்கியதும். இந்த
பௌண்டன் ஒளிவெள்ளத்தில் இசைக்கேற்ப நடனம் ஆடுகிறது. இது
ஒன்று மட்டுமில்ல பாரதிராஜா படத்தில் வரும் தேவதைகள் மாதிரி
கூட்டமாக ஆங்காங்கே பல திட்டுமென எழுந்து ஆடுகிறது. வண்ணங்கள்
மாறும்போது வட்டங்களாகவும் வளைவுகளாகவும் மாறி மாறி உயர்ந்தும்
தாழ்ந்தும் ஆடுகிறது., சட்டென்று ஒரே
ஒரு ஊற்று மாத்திரம் பின்னணியிலிருக்கும் கட்டிடத்தின் பாதி
உயரத்துக்கு பீச்சிய்டிக்கிறது, அது அடங்கியவுடன் பரவும்
நெருப்பு மஞ்சள் வண்ணத்தில் அந்தத்
தடாகத்தில் 5 வட்டங்கள் எழுகின்றன. அது அணைந்து அலைகளாகின்றன.
இருளும் ஒளியும், இசையும் நீரும் சேர்ந்து
செய்யும் இந்த ரகளை உண்மையிலேயே வர்ணஜாலங்கள் தான் நீருக்குள்ளிருக்கும் , மிகச் சக்திவாய்ந்த விளக்குகளும்
எங்கோ ஒளிந்திருக்கும் பல
புரெஜக்டர்களும் இந்த
ஜாலத்தை நிகழ்த்துகின்றன. அரபிய. ஹிந்தி, ஆங்கில
இசையில் மாறி மாறி நிகழ்ச்சிகள்
இரவுவரை நீண்டுகொண்டிருக்கிறது தமிழ் பாட்டு இல்லை.
ஓருவேளை நம் குத்துபாட்டு கேட்டால்
இன்னும் துள்ளிகுதித்து ஆடுமோ
என்னவோ?
ஒவ்வொருமுறையும்
பௌண்டன் ஓய்ந்து இருள் சூழ்ந்த
அடுத்த வினாடி பின்னால் நிற்கும்
புஜ் கலிபா கோபுரத்தின் வெளிசுவற்றின்
மீது ஓளி விளையாடுகிறது. வாரியிறைத்த
வண்ணபூக்களாக, புள்ளிக் கோலங்களாக, வண்ணகட்டங்களாக, ஒளிஊசிகளாக, நட்சதிரமழையாக, மாறி மாறி ஜொலிக்கும்
வண்ணவிளக்குகளின் ஜாலம். அசத்துகிறது. அந்தக்
கட்டிடத்தில் எத்தனைப் பிஞ்சு பல்புகள்ஒளிந்திருக்க்கும் ஒரு
லட்சம்? இல்லை அதற்கும் அதிகமாகவா?
தெரியவில்லை. இந்த ஒளி, நீர்
விளையாட்டுகளுக்குப் பின்னே மிகச்சவாலான கணினி
சூத்திரங்கள் இருக்கிறது எழுதிய புண்ணியவான்களுக்கு (நிச்சியம்
இந்தியர்கள் இருப்பார்கள்). சலாம்
குளிராத
மெல்லிய இதமான காற்று வீசத்
துவங்கி நடக்க அழைக்கிறது. தொலைவில்
வெளிர்நீல நிறத்தில் புஜ் கலீபா
உலகின்
உயரமாகயிருக்கும் கட்டிடத்தை
விடப் பெரிதாக, உலகிலிருக்கு பெரிய மியூசிகல்
பெளண்டனைவிடப் பெரிதாக
இப்படி எல்லாவற்றிலும் -பெரிதினும் பெரிது கேட்டு- கனவுகண்டு
அதை நனவாக்கிய மன்னரின் துணிவும், தன்னம்பிக்கையும் தான் இந்த கோபுரத்தைவிடப்
பெரிது எனத் தோன்றிற்று