நூல் அறிமுகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நூல் அறிமுகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

3/2/17

ஒரு எழுத்தாளின் படைப்பு நேசிக்கப் படுகிறதுஒரு எழுத்தாளின் படைப்பு நேசிக்கப் படுகிறது

"அவள் விகடனுக்காக' தினமும் ஒரு புத்தகம் விமர்சனம் 
 செய்யும் சவாலை ஏற்றிருக்கிறார் சுமிதா ரமேஷ்.

 முதல் புத்தகம் என்னுடைய "கங்கைக் கரை ரகசியங்கள்." மிக விரிவான, தெளிவான விமர்சனம். ஒரு முன்னுரையைப் போல. அதை அவருடைய முகநூலிலும் வெளியிட்டிருக்கிறார்.   விமர்சனத்தின்  வீச்சு அவருடைய பதிவுக்கு வந்தபின்னூட்டாங்களில் தெரிகிறது. ஒரே இரவில் 100பேர் லைக் செய்து 26 பேர் கருத்துகளைப்பதிவு செய்திருக்கிறார்கள்.  சந்தோஷமாக இருக்கிறது ஒரு எழுத்தாளனின் படைப்புநேசிக்கபடும்போது எழும் சந்தோஷம் 

Sumitha Ramesh Image may contain: one or more people, beard, text and outdoor

 !
கவிதா பதிப்பகம், ஏப்ரல் 2016 ல் வெளியிட்டுள்ள இப்புத்தகத்தின் விலை 140 ரூ.

Sumitha Ramesh added 3 new photos — with Ramanan Vsv.
இலக்கியம் என்பதை தேர்வு செய்ததும் ஏனோ முதலில் கையிலிருந்த இந்தப்புத்தகம் தான் எழுத, படிக்க ஈர்த்தது !
கதை, சிறுகதை, நாவல், கவிதைத்தொகுப்புகள் என்றிருக்க..சமூகம் சார்ந்த , எதோ ஒரு ஈர்ப்பை..இன்னமும், இனி வரும் காலங்களிலும் புனிதத்தை தன்பெயரில் கொண்டுள்ள கங்கையைப்பற்றிய புத்தகம் என்றதும் கைகள் தானாக தழுவியது இதனை !
யார் எழுதியது..என்ன மாதிரியான புத்தகம் இது ?
பயணக்கட்டுரைகளின் தொகுப்புதான் இந்த நூல் ! பயணக்கட்டுரைகளில் சில ,
நேராக உள்ளதை உள்ளபடி சொல்லும் கட்டுரைகள், சில பயணத்தின் போதே பார்த்தது , எண்ணக்கிடங்கில் விளைந்தது என நம் மனதிலும் விதைக்கும் கட்டுரைகள் ! இரண்டாவது ரகம் இந்தப்புத்தகம்.மொத்தமே 112 பக்கங்கள்.
ஆனால் ஒவ்வொரு வரிகளும் பலமுறை படிக்க வைப்பவை. அப்படியென்ன ஸ்பெஷல்..?
மேலே படிங்களேன் !
இந்த கங்கைக்கரை ரகசியங்கள் அப்படித்தான் நம்முள்ளும் பல ரகசியங்கள், ஆசைகள்..வேட்கைகளை விதைக்கின்றன, எழும் எண்ணக்கேள்விகளுக்கு விடைகளையும் அளிக்கின்றன.
காலைப்பொழுது , கடலாக விரிந்திருக்கும் அறுபது அடி ஆழம் கொண்ட நதி, படித்துறைகளில் நாக்குகளாய் நாவாய்கள்
இப்படித்தான் இழுத்துப்போடுகிறது இழைந்தோடும் வர்ணனை. மெல்ல எழுத்தாளரின் கைப்பிடித்து சிறுப்பிள்ளையாய்
அவர் கால்களுடனே..பயணிக்க நாமும் ஆரம்பிக்க , பிரமிப்பை தன் தோள்களில் ஏற்றிக்காட்ட , கைப்பிடித்து தோழமையுடன் எண்ண அலைகளோடு அழைத்துச்செல்கிறார்.
கங்கைக்கரை என்றதுமே நினைவில் வருவது காசி நகரம் தான் !
கிரேக்க், எகிப்திய, பாரசீக நாகரீகங்கள் அழிந்து உருமாறியப்போதும் மாறாத இந்திய நாகரீகத்தின் அந்த தொன்மையினைப் பாதுகாப்பது சக்தியை, ஆற்றலை பிரதிஷ்டை எனும் கருவியாகக்கொண்டு எழுப்பப்பட்ட ஆலயங்கள், அதனால் உருவான நகரங்கள் தான் என்கிறார் ஆசிரியர்.
காசி..சிவனே வாழ்ந்த ஊர், அவரது சூலாயுதத்தின் நேர்க்கோட்டில் அமைந்த ஊர்.. 25,000 கோயில்களைக்கொண்ட ஊர் தற்போது 648 கோயில்களாகவும் மையப்புள்ளிகளாக மூன்று கோயில் கள், வடக்கே ஆம்கார் ஈஸ்வர், மையத்தில் விஸ்வ நாதர் , தெற்கில் கேதார் ஈஸ்வர் என அனைத்துக்கோயில்களுமே ஐந்தடுக்குப்பாதையில் அமைந்திருப்பதாக விளக்குகிறார் ஆசிரியர் அதற்கான மேற்கோள்களுடன் !
ஈஷா யோகமையம் ஏற்பாடு செய்யும் யாத்திரை யில் பங்கேற்பவர், அதன் சிறப்பான செயல்பாடுகளையும், நடு நடுவே தனக்கான சந்தேகங்களை நம் மன மொழியைப்போலவே எதிரொலிக்கும் விதமாக சத்குரு ஜக்கி குரு வாசுதேவ் அவர்களிடன் கேட்டு நமக்குமான பதில்களைப்பெற்றுத்தருகிறார்.
காசி நகரம் கங்கையின் கரையில் உள்ளதையும் , கங்கையின் அழகையும் வாய்ப்புக்கிடைக்கும் போதெல்லாம் ஆசிரியரதுப்பார்வையில் அவர் மயங்கியதை நமக்கும் கடத்தி மயங்கச்செய்கிற்து அவர் நடை!
எல்லாக்கோவில்களுக்கும் செல்லும் குறுகலான பாதை, அதிகாலையில் செல்லும்போது ஏற்படும் அசௌகர்யங்கள், அங்கே நகரத்தார் கட்டிவைத்த நாட்டார் கோட் சத்தர் , அவர்கள் செய்யும் பால் வழங்கும் திருப்பணி, கட்டிவைத்த கோயில்கள் என முதல் நாள் பார்த்ததில் பகிர்கிறார்.
3 நாட்கள்..இதில் விஸ்வ நாதர் ஆலயம் பற்றிய பகிர்வில் அவரது சிலிர்ப்பையும், அங்கு ஏற்படும் அதிர்வையும் நாமும் உணரமுடிகிறது ! சைக்கிள் ரிக்‌ஷா , படகுக்காரர்களின் தன்மை, அணுகும் விதம் என அணைத்து செல்லும் நடையில் பல காட்கள் எனப்படும் படித்துறைகளிலும் அவருடன் ஏறி நாம் இறங்குகிறோம் !
குளித்து எழுகிறோம் !
காசி , வாரணாசி என்ற அழைக்கப்படுவதில்..பனாரஸ் என்பது தனி நகரம் என்றும் அங்கு பட்டுத்தறி நெய்யும் நெசவாளர்களின் வாழ்வில் வண்ணங்கள் இல்லை எனவும் பதிகிறார்!
அச்சச்சோ என நாமும் இரக்கம் கொள்ள உடனே படகுப்பயணம் , அங்கிருந்து..மணிகர்ணிகா காட் என தாவும் எழுத்துக்களால்..மாறினாலும் கனத்துப்போகிறோம் !
ஒரு நாளைக்கு குறைந்தது 50 இறந்த உடல்கள் (இப்படித்தான் குறிப்பிடுகிறார்..பிணங்கள் என்றில்லை) வர..பாதி எரிந்த உடல்கள் அடியே தள்ளப்பட, இதனை 6 உதவியாளர்களுடன் நிர்வகிக்கும் சத்திய நாராயண சௌத்ரி என்பவரது நிலையையும் குறிப்பிட.. ஆவென திறந்த வாய் மூட மறுக்கின்றன.
பனாரஸ் மன்னர்களுக்கான குளியல் கட்டம் அதில் கங்கை உள் நுழைவதென அனைத்துப்படித்துறைகள் , அதன் கரையில் அமைந்துள்ளக்கோயில்கள் என விவரிக்கப்பட்டு அங்கு ஆங்கிலேயர், முகலாயர் , புத்த மத ஈடுபாட்டினையும் சொல்லி..புத்தருக்கும் காசிக்குமான தொடர்பு, அவர் ஞானம் பெற எப்படி வந்தார் என்ற தகவல்களுடன்
மெதுவாக அவருடன் நாமும் சார நாத் பயணிக்கிறோம்.
அங்குள்ள காட்சியகம் அதிலுள்ள உண்மைகள் , அதைச்சார்ந்த தகவல்கள், புகைப்படங்கள் என ஆசம் ஆசம் என்ச்சொல்லி நம்மை நகர வைக்கின்றன பக்கங்கள் .
சார நாத் அடுத்து புத்த கயா..!
சார நாத்ல் புத்தர் சமணர்களுடன் இணைந்து தவமிருந்து, வெறும் உடல் மட்டும் மெலிந்து ஞானத்திற்காக போதி மரம் தேடி கயா க்கு செல்கிறார். அதை விளக்கும் காரணங்கள்,
செல்லும் வழியில் தம்மை பாதித்த விஷயங்கள் என அனைத்தையும் ரசிக்கும் விதத்தில் அள்ளித் தருகிறார்.
புத்தகயா அமைந்துள்ளது காசியிலிருந்து 250கிமீ தள்ளியுள்ளது எனவும் அங்கு அமைந்துள்ள புத்த விஹார்கள், புத்த சபாக்கள், அங்கு ஒவ்வொரு விஹார்கள் , வழிபடும் முறை..ஏன் புனிதத்தன்மைப்பெறுகிறது அங்கெல்லாம் புத்தர் என்ன போதித்தார் என தகவல்களைப்படிக்க முடிகிறது!
நாளந்தா.. கிமுவில் ஆரம்பிக்கப்பட்ட பல்கலைக்கழகம் வானியல், மருத்துவம், மொழி, ஆன்மீகம் சார்ந்த படிப்புகள்..மாணக்கர்களைக்கொண்டிருந்ததை வரிகளால் விளக்கி , படங்களுடன் நம் மனதில் பதியமாகிறது!
கில்ஜி படையினரால் அழிக்கப்பட்ட பல்கலைக்கழகம் படிக்கும் போதே கண்ணீர்துளிக்க, நாகரீகமே தெரியாத உலகில்..சிகரமாக வாழ்ந்திருக்கிறோமே என்ற உணர்வை எழுப்புகிறது!
கில்ஜி யின் அழிப்பினால்..தொடர்ந்து பாதிக்கப்பட்ட காசி நகரம், நம் மன்னர்கள் கோட்டைகள், கயா, நாளந்தா என மனம் புரண்டு அழுகிறது படிக்கும் போது !
சமணர்கள் தவம் செய்த, புத்தரின் புனித இடமாகவும் அவர் சீடர்களுக்கு போதித்த இடமும் ஆன ஏழு மலைகளுக்கிடைப்பட்ட ராஜ் கீர் என்ற இடமும் முன்னர் மகத நாட்டின் தலை நகர் அதற்கான விவரிப்புகள் அங்கு செல்லும் வழி என நகைச்சுவை இழையோட நமக்கும் தெரிவிக்கிறார்.
மீண்டும் பாட்னா வருகை, அங்குள்ள தானியம் சேமிக்கும் கோடவுன், படகு சவாரி, கங்கைக்குளியல் என நாமும் களிக்கிறோம்!
கடைசியாக எதோ மிஸ்ஸிங் போலவே என நாம் நினைக்கும் போதே..கங்கையின் ஆர்த்தியும் கண்களில் காமிக்கப்பட்டு..புத்தகம் நிறைவுறுகிறது !
வழுவழுப்பான கவிதா பப்ளிகேஷனில் வெளிவந்துள்ள இந்தப்புத்தகம் கல்கியில் தொடராக வெளிவந்ததன் தொகுப்பாக வெளியிடப்பட்டுள்ளது.
மிக அழகான படங்களுக்கும், வர்ணனைகளுக்கும், வரிகளுக்கும், சிந்தனைகளுக்கும் சொந்தக்காரரன அந்த ஆசிரியர், எழுத்தாளர் திரு. ரமணன் அவர்கள்.
Ramanan Vsv அவர்கள்.
இவர் வங்கியில் உயர்பதவி வகித்தவர், சமூகம்,அரசியல், வரலாறு என பல ஜான்ர்களில் விரிவாக தன் படைப்புக்களை புத்தகங்களாக வெளியிட்டிருக்கிறார்.
அவரது முன்னுரை, பதிப்பாளரது பதிப்புரை..நம் ஆவலைத்தூண்டி உள் தள்ளிட..நிறைவான நெகிழ்வான பயண அனுபவத்தைப்பெறுகிறோம் !
ஆனாலும்..நாமும் பார்க்கவேண்டுமே இந்த இடங்களை என்ற ஆர்வமும் அதிகமாகி, இவரைப்போலவே இணைந்தப்பல விஷயங்களைக்கூச்சமின்றி கேட்டு தெளிவுறவேண்டும் என நினைக்கிறது மனம் !
கங்கைக்கரை ரகசியங்கள் , கங்கை காசியை உணர்ந்துக்கொள்ளவேண்டிய பார்க்கவேண்டிய சக்தி அதிர்வுகளின் ஆணி வேராக அறிய வைக்கும் பயணப்படத்தூண்டும் புத்தகம் .
அகோரிகள், கங்கையில் மிதக்கும் பிணங்கள் பற்றி நாம் டாகுமெண்ட் ரி க்களில் பார்த்தவை இதில் இல்லாமல் போனாலும் கங்கையின் வாசத்தை புராதனத்தை , அறிவை நிறைவைத்தருகிறது !
கங்கைக்கரை ரகசியங்கள் பற்றிய ரகசியத்தை உங்களுடன் பகிர்ந்த நான் நாளை ..வேறொரு புத்தகத்துடன் சந்திக்கிறேன் !
கவிதா பதிப்பகம், ஏப்ரல் 2016 ல் வெளியிட்டுள்ள இப்புத்தகத்தின் விலை 140 ரூ.


-----------------
Comments
Devendran Ramanujam Can we get online PDF copy for sale?
Sriram Ram உங்களது பதிவு , இந்த புத்தகத்தை படிக்கத் தூன்டுகிறது......
Ganesh Bala நூலில் ஆழ்ந்து சாரத்தைப் பிழிந்து கையில் பால் குலுக்கல் (மில்க் ஷேக்மா) போல் தந்த ரகளையான விமர்சனம். வாங்கிப் படிக்கத் தூண்டுகிறது என்னை.
Ganesh Bala இனி பதிகையில் பதிப்பகம் பெயர், விலை போன்றவற்றை சொன்னால் வாங்க வசதி.
Vedha Gopalan பிரமாதமான நடையில் அழகாகத் தெளிவாக ரகசியத்தைப் போட்டு உடைத்திருக்கிறாய்
சுவாரஸ்யமான சரித்திர சம்பவங்கள் ஆசிரியரின் பலம்.
//நம்முள்ளும் பல ரகசியங்கள், ஆசைகள்..வேட்கைகளை விதைக்கின்றன, // செம
...See More
Vedha Gopalan திரு ரமணனுக்கு ஸ்பெஷல் பாராட்டுகள்
Sivapriya Hari நான் ஏற்கெனவே போய் இருக்கேன் ,ஆனாலும் நீங்க எழுதியதை படித்ததும் மறுபடியும் போகணும் போல இருக்கு சுமி😍👌
Kannan Jayaraman ஒரு புத்தகத்தை வாசித்தல் , வாசித்த பின் அதில் உள்ள , என்னன்ன விஷயங்கள், அதை எவ்வாறு கிரகித்து கொள்ள வேண்டும்...கிரகித்ததை மற்றவர்களுக்கு புரியும்படி ..எவ்வாறு அழகாக விளக்க வேண்டும் ..என்பதை இந்த பதிவின் மூலம் அறிய முடிகிறது. ..மிக நன்றாக தொகுத்து பதிவிட்டுள்ளீர்கள் ...வாழ்த்துக்கள். ..பதிவை படித்தவுடன் என்னுடைய ரிஷிகேஷ், ஹரித்வார் பயணம் நினைவில் வந்து நின்றது. 
LikeReply1January 31 at 9:26pmEdited
Subbulakshmi Balaji வாரணாசி போக ஏற்கனவே Plan.கூடிய விரைவில் பயணப்பட ஆசை தூண்டியது உங்க எழுத்து, நாளை நூலகத்தில் புத்தக தேடலை துவக்கனும்
Subra Ramesh நானாடி. . . . நீராடினேன்
Sumitha Ramesh இளமதி பத்மா இதற்கு அழைத்தேன்
Geetha Ravi Geetha வெரி வெரி சூப்பர்.இந்த நூலை வேற ஒருவர் எழுதி இருந்தாலும் அதில் முக்கியமான குறிப்புகள் பார்த்து ரசிக்க வேண்டிய இடங்கள் .இடையே தங்களின் தனிப்பட்ட குறிப்பு அருமை மா. எதிர்பார்க்க வில்லை.அருமை.கண்டிப்பாக புத்தகம் வாங்கனும்.படிக்கனும்.
Geetha Ravi Geetha மங்கள ஹாரத்தி ஹைலைட்.சூப்பர்.
R Narumpu Nathan துவக்கமே அருமை ! நல்லதொரு திறனாய்வு . படிக்கத்தூண்டும் விறுவிறுப்பான நடை !
இளமதி பத்மா ஆகா...
அழகான நூல் விமர்சனம்!
படிக்கத் தூண்டுகிறாய்!
...See More
Sheik Mohamed நல்ல அறிமுகம்.. கங்கை பற்றியும் காசி பற்றியும் பாலகுமாரனின் புருஷ வதம் நாவலில் மிக விரிவாக காட்சிப்படுத்தியதில் வாசித்து மனதில் காட்சி விரித்து ரசித்து மகிழ்ந்திருக்கிறேன். நன்றாக அறிமுகப்படுத்தி இருக்கிறீர்கள்.. உங்கள் தளம் உங்கள் திட்டமிடல் தெளிவான பக்கம் திரும்பியிருக்கிறது. மனமார்ந்த நல்வாழ்த்துகள்.
Anusha Satheeshkumar சூப்பர் சுமி !ஆல் தி பெஸ்ட் உன்னால் முடியாதது இல்லை .தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்.
Balaji Sridhar யாருமா நீ எங்கமா இருந்த நீ.

தூள் மா
Tamil Tamil வாழ்த்துகள் சுமிதா. அழகான ஆரம்பம். இனிதே தொடரட்டும்.
Rajesh Kumar Ganesan புனிதத்தின் ரகசியத்தை வெளியிட்டவர் ஐயா ரமணன்
அதை படித்து, ரசிக்கத்தூண்டிய தோழி சுமி, நீ ஓர் துப்பறியும் கண்(ன்)
நடுசாமம் (1:23) முகநூலில் உன் விரிவுரை படித்து நான் தீட்டிய பன்
...See More
Dhanam Sarathi படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தை தூண்டுகிறது..
உங்கள் எழுத்துக்கள்...
பத்மஸ்ரீ விஜயகுமார் ஆமாம், அருமையான இடம். அதிர்வுகள் நிறம்பிய நகரம் .. பழமையும், நவீனமும் கவலந்த நகரம் ...
Indu Mathy மிக மிக எளிமையான அற்புதமான , அருமையான எழுத்து நடை சுமி ... கண்டிப்பாக சென்று பார்க்க வேண்டும் , புத்தகத்தை தேடி வாங்கி படிக்க வேண்டும், மிகவும் ரசித்து படித்து அனுபவித்து எழுதி இருக்க சுமி ... வாழ்த்துக்கள்
Chellam Zarina வாழ்த்துக்கள் சுமி
ஏற்கெனவே கல்கி தொடராகப்படித்தது மீண்டும் உன் எழுத்துக்களில் உயிர் பெற்று மனதில் தாண்டவமாடின. 
ஒருபுத்தகத்திற்கு எப்ப சுவை குறையாமல் சுவையாக விமர்சனம் பண்ணனும் கிறதை இதைப்பார்த்து கற்று கொள்ளலாம். 
...See More
LikeReply1February 1 at 12:11pmEdited
Viji Loganaths அருமை ! கங்கை பற்றியும் காசி பற்றியும் நல்லதொரு திறனாய்வு. படிக்கத்தூண்டும் விறுவிறுப்பான நடை !வாழ்த்துக்கள் சுமி.
Mukil Rajan சவாலுக்கு மிகவும்
சரியான நபர்
நரூபணம்
...See More
Mukil Rajan நீருபணம்
இக்கணம்
Subathra Rajaram அருமை
Geetha Geetha Kannan ETHANY ETHANY UYIRATTRA MANITHA UDALGAL MIDHAPPINUM, PUNITHA THANMY MAARAADHA NILY....INDRYA VINGYAANIGALYUM VIYAKKA VYPPADU MAA PERUM RAHASYAMTHAAN..