நீண்ட நாட்களுக்கு பின்னர் ப்ரொப்லர் கள் சுழலும் குட்டி விமானத்தில் பயணம் செய்து இன்று காலை தர்ம்சாலா வந்தவுடன் சித்பாரி என்ற கிராமம் நோக்கிய பயணம். குளிர் இல்லை. இளங்காலை வெய்யிலுடன் இதமான காற்று. தர்ம்சாலா நகரைத் தாண்டினால் இருபுறமும் டீ கடைகள் கூட காண முடியாத கிராமங்கள்.
இந்த சித்பாரியில்தான் ஸ்வாமி சின்மயானந்தா தன் முதல் தபோவன் ஆஸ்ரமத்தைத் தொடங்கினார். இன்று இந்தியாவில் பல இடங்களிலும் உலகின் சில இடங்களிலும் அவரது மிஷனின் பள்ளிகள்.. மருத்துவமனைகள் ஆஸ்ரமங்கள்.
இதே தபோவனத்தில் தான் அவரது சமாதியும் இருக்கிறது. இறந்தது அமெரிக்காவாக இருந்தாலும் அடக்கம் செய்யப் பட்ட நினைவிடம் இங்கே தான்,
அந்த ஆஸ்ரமத்தில் சில நாட்கள் தங்கி பயணங்களைச் செய்ய திட்டம்.