என்னுடைய
கடைசிக்கோடு புத்தகத்தை திருப்பூர் தமிழ்சங்கம் ”2013 இலக்கிய விருது”க்கு தேர்ந்தெடுத்து
5/2/15 அன்று விழாவில் பணப்பரிசும்,கேடயம், சான்றிதழ் தந்து கெளரவித்தார்கள்.. திருப்பூர் தமிழ் சங்கம் தரும் இந்த விருது தனிமதிப்பு வாய்ந்தது..23
ஆண்டுகளாக தமிழின் சிறந்த படைப்புகளுக்கு வழங்குகிறார்கள்.
அவர்கள்
தேர்ந்தெடுக்கும் நடுவர்களின் குழுவை அறிவிக்க மாட்டார்கள். அதே போல் அவர்களுக்கு வரும் படைப்புகளை நடுவர்களுக்கு அனுப்புதோடு
சங்கத்தின் பணி முடிந்துவிடுகிறது. நடுவர்கள் முடிவுகளை அறிவித்தபின் விருதுபெறும் படைப்பாளிகளை திருப்பூருக்கு அவர்கள்
செலவில் அழைத்து நல்ல முறையில் வரவேற்று வசதியாக
தங்கவைத்து மகளின் திருமண விழாவிற்கு வந்தவர்களைப்போல
அன்புடன் உபசரிக்கிறார்கள்.
விருது
பெற்றவகளை விழா மேடையில் அமரச்செய்து விருதுகளை அளிக்கிறார்கள்.. விழா புத்தக கண்காட்சி
அரங்கில் நடைபெற்றது. வாசிப்பதை நேசிக்கும் நல்ல மனிதர்கள் நிறைந்த மாபெரும் சபையில்
மாலைகள் விழுந்ததால், . படைப்பாளிகளின் படைப்பின் பெருமையை பேசப்பட்டதால். விருதுபெற்றவர்கள்.உண்மையான
கெளரவத்தை (சற்று கர்வத்தை கூட) உணர்கிறார்கள்.
தமிழறிஞர்
சிலம்பொலி செல்லப்பன் அவர்களும் லேனா தமிழ்வாணனும் பங்கேற்று விருகள் வழங்கினார்கள்.
என் வாழ்வின் மகிழ்வான தருணம் அது.
திருப்பூர்
தமிழ் சங்கத்தலவர் டாக்டர் ஆ. முருகநாதன், செயலர் ஆடிட்டர் அ.லோக நாதன். இருவரும் தத்தம் தொழிலில்
உச்சத்தில் இருப்பவர்கள்.. ஆனலும் தமிழ் இலக்கியத்திற்கான சேவைகளில் தங்களை அர்பணித்துக்கொண்டவர்கள்
தமிழ் படைப்பாளிகள் அனைவரும் எழுதுபவர்களுக்கு
இத்தகைய உயரிய கெளரவம் அளிப்பதற்காக இவர்களுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறார்கள்..
திருப்பூர் டாலர் நகரம்
என்பது தெரியும். பணத்தை மட்டும் நேசிக்காமல் தமிழையும் நேசிப்பவர்களும் நிறைந்த நகரம்
என்பதையும் புரிந்து கொண்டேன்,