சி
னந்து சீறி எழுந்த அந்த ஆழிப்பேரலைகளில் சிக்கி அழிந்து கொண்டிருந்தது ஜப்பானின் வடகிழக்கு கடற்கரை நகரமான புக்கூஷிமா. மனிதர்கள் வீடுகள், கார்கள், சாலைகள், பாலங்கள் எல்லாம் கசக்கிபோட்ட காகிதங்களாக சில நிமிடங்களில் கடல்அலைகளில் மிதந்த கோரத்தை உலகின் அத்தனை தொலைகாட்சிகளும் ஒளிபரப்பி கொண்டிருந்தன. அச்சத்துடனும் அனுதாபத்துடனும் பார்த்துகொண்டிருந்த பலகோடி பேர்களில் அந்த ஜெர்மானிய பெண்மணியும் ஒருவர். இரவில் தொடர்ந்து வந்த டிவி செய்திகளில் அந்த ஜப்பானிய நகரிலுள்ள அணு மின் உற்பத்தி உலைகளின் கூரை ஒன்று வெடித்ததையும் எந்த நிமிடத்திலும் மற்றவைகள் வெடித்து அணுக்கதிர்கள் பரவும் அபாயமிருப்பதையும், அதை தடுக்க முடியாமல் தவிக்கிறார்கள் என்பது காட்டபட்டவுடன் “ காலையில் அமைச்சரவையின் அவசர கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யுங்கள் “ என உதவியாளாரிடம் சொல்லிவிட்டு தனது நூலகத்தில் அணு உலைகளில் பாதுகாப்பு ப்ற்றிய புத்தகங்களை தேட துவங்குகிறார்.
அவர் ஜெர்மானிய அதிபர் திருமதி ஏஞ்சலா மெர்க்கீல் (Angela Merkel)
“ரஷ்ய நாட்டின் செர்னோபைல் (Chernobyl) நகரில் நடந்த அணு உலை விபத்துகள் மனித தவறினால் நிகழந்தவை, அணுஉலைகளில் விபத்து ஏற்பட 0.5% கூட வாய்ப்பில்லை அணு மின் உற்பத்தி பாதுகாப்பானது போன்ற நமது நம்பிக்கைகளை மாற்றி கொள்ள வேண்டும். இயற்கையின் சீற்றத்தினால் ஏற்படும் இந்த மாதிரி விபத்துகளிலிருந்து அணு உலைகளயும் அதன் அழிவில் எழும் பின் விளைவுகளயும் யாரலும் தவிர்க்க முடியாது. எனவே நமது மின் அணு உலைகளை மூட உத்திரவிடப்போகிறேன். அணு மின் சக்க்திக்கு மாற்றான எரிசக்தி அதற்கான செலவு பட்ஜெட், உலைகளை படிப்படியாக மூடும் திட்ட அட்டவணை போன்ற பணிகளுக்கு அமைச்சகங்கள் முன்னுரிமை கொடுத்து உடனடியாக ஒரு வரைவு திட்டத்தை அடுத்த 4 நாள் கூட்டதில் விவாதிக்க வேண்டும்“ அந்த காலை நேர கூட்டதில் இந்த அதிரடி அறிவிப்பை கேட்ட அமைச்சர்களும் அதிகாரிகளும் திடுக்கிட்டு அதிர்ந்து போனார்கள். உடனடியாக எப்படி முடியும்?. மாற்று சக்திகான பெரும் செலவை எப்படி சமாளிபது?, எனற சந்தேகங்களை எழுப்பிய அதிகாரிகளுக்கும், அடுத்த மாதம் சில மாநிலங்களில் தேர்தல் நடக்க இருக்கும் நேரத்தில் இப்படி பட்ட அறிவிப்பு கட்சியையின் செல்வாககை குறைக்கும் என்று சொன்ன கட்சி அமைச்சர்களுக்கும் அதிபர் திருமதி ஏஞ்சலா மெர்க்கீல் (Angela Merkel) சொன்ன பதில் ” “வருங்காலத்தில் இத்தகைய பேரபாயங்களிலிருந்து ஜெர்மனியார்களை காக்கும் பொறுப்பு நமக்கு இருக்கிறது எனபதை மறக்காதீர்கள் “ எனபதுதான். கட்சிகாரகளின் பயத்தில் அர்த்தமிருந்தது. காரணம் கடந்த ஆண்டு இதே அதிபர் தான் உற்பத்திய துவக்கிய 8 ஆண்டுகளுக்கு பின் மின் அணு ஆலைகளை மூடி விடவேண்டும் என்ற விதியை தளர்த்தி 12 ஆண்டுகளுக்கு என நீடித்தார்.. இருந்தாலும் அமைச்சரவை கூட்டதில் சொன்னபடியே ஓரே வாரத்தில் அறிவித்து அதே நாளிலியே 4 அணு மின் உற்பத்தி ஆலைகளை மூடவும் உத்திரவிட்டார்.
ஜெர்மனியின் பல பகுதிகளில் 17 அணுமின் உலைகள் இருக்கின்றன நாட்டின் தொழில் நகரங்களுக்கு மின்சாரத்தை தருபவை அவை. தொழிற்கூடங்கள் நிறைந்த ஒரு நாட்டில் அதுவும் மொத்த மின் உற்பத்தியில் 28% த்தைதரும் மின் உலைகள மூட முடிவெடுக்க துணிச்சல் வேண்டும். அதிலும் அதிபர் ஏஞ்சலா மெர்க்கீல் (Angela Merkel) எடுத்தது மிக துணிச்சலான முடிவு. ஏன் எனபதை தெரிந்து கொள்ள ஜெர்மனியின் இன்றைய அரசியலை புரிந்துகொள்ள வேண்டும்.
ஜெர்மனியில் இப்போது ஆட்சியிலிருப்பது ஒரு 3 கட்சி கூட்டணி.. நமது நாட்டைபோலவே கொள்கையளவில் சில அடிப்படை வேறு பாடுகளிலிருந்தாலும் ஆட்சியில் ஒருங்கிணைந்திருக்குக்ம் கட்சிகள் இவை. இதில் அதிக பாரளமன்ற உறுப்பினர்களை கொண்டது அதிபர் ஏஞ்சலா மெர்க்கீல் (Angela Merkel) லின் கிறஸ்டியன் டெமாகிரடிக் யூனியன் Christian Democratic Union கட்சி. ஜெர்மானிய அரசியல் சட்டபடி பராளூமன்றதின் மொத்த உறுப்பினர்களில் பெறுமானமையானவர்களின் ஒட்டை பெறும் ஒருவரைத்தான் தலைவர் நாட்டின் அதிபராக (Chancellor of Germany) அறிவிப்பார். பிரதமரை போல அதிகாரம் பெற்ற இவர் தான் மந்திரிசபையை அமைக்கமுடியும். இந்த முறையினால் அதிக உறுபினர்களை பெற்ற கட்சியாக யிருந்தாலும் பாராளுமன்றத்தில் அதிபர் தேர்தலில் 50% எம் பி களின் ஓட்டுகளை பெற கட்சிகளின் கூட்டணி தேவை இவர் அதிபராக உதவியிருக்கும் அந்த இரண்டு கட்சிகளில் ஏதேனும் ஒன்று இந்த திட்டத்திற்கு ஆதரவு அளிக்காவிட்டால், செயல்படுத்த முடியாது .பிடிவாதமாகயிருந்தால் அதிபர் பதவியுடன் ஆட்சியும் பறிபோகும் அபாயமும் இருந்த சுழ்நிலையிலும் இப்படி ஒரு முடிவை அறிவித்திருந்தது இவரது மன உறுதி அணுசக்தியைப்போல வலிமையானது என்பதை காட்டியது.
ஜப்பானில் நிகழந்த அணு உலைவிபத்தினால் மட்டும் அதிபர் ஏஞ்சலா மெர்க்கீல் (Angela Merkel) அதிபர் இந்த முடிவை எடுக்கவில்லை. ஒரு சிறிய கிராமத்தில் கிருத்துவ பாதிரியாரின் மகளாக பிறந்த இவர் கஷ்ட்டபட்டு படித்து கல்லுரரியில் ரசாயனத்தில் பட்டபடிப்பும், பெளதிகத்தில் முதுகலையும் பின்னர் அதிலேயே முனைவர் பட்டமும் பெற்று. பல்கலை கழகத்தில் ஆசிரியராக பணியாற்றியவர். போதித்த பாடம் அணுசக்தி. அதனால் அதன் வீரியமும், வீபரிதமும் நன்கு தெரியும். ஒருங்கிணைந்த ஜெர்மெனி உருவான் காலகட்டதில் 1989ம் ஆண்டில் ஆசிரியர் பணியிலிருந்து அரசியலுக்கு வந்து கட்சியில் மளமளவென் வளர்ந்து கட்சியின் செய்லாளரனவர். 2005ல் முதல் முறை அதிபர் தேர்தலில் வென்று ஜெர்மனியின் முதல் பெண் அதிபர் ஆனார். 2009ல் தேர்தலில் கூட்டனியின் கட்சிகள் மாறினாலும் மீண்டும் அதிபராக தேர்ந்தெடுக்கபட்ட இவர் ஐரோப்பிவின் செல்வாக்கு பெற்ற பெண்மணிகளின் பட்டியலில் முதலிடம் பெற்றவர். ஜெர்மன் மொழியை தவிர ரஷ்யன்,பிரெஞ்ச்,ஆங்கிலம் சரளமாக பேசும் இவர் எப்போதும் தன் நிலையை தெளிவாக உறுதியாக சொல்லும் திறமையான பேச்சாளார்.. கடந்த ஆண்டு நேரு நினைவு பரிசு பெற இந்தியாவிற்கு வந்திருக்கிறார்,இந்த 56 வயது அதிபர்.
தனது கூட்டணி கட்சிகளின் தலைவர்களிடம் அணுஆலைகள் அகற்றபடவேண்டியதின் முக்கியததுவத்தை விளக்கிய 15 மணிநேர ஆலோசனை கூட்டத்திற்கு பின் அவர்களின் ஒப்புதலுடன் சட்ட வடிவாகவே இந்த அறிவிப்பு வெளியானது. ஜெர்மனியின் எல்லா அரசியல் கட்சிகளிலும். பேராசிரியர்கள், முன்னாள் அரசு அதிகாரிகள்,பத்திரிகயளார்கள் என ஒரு அறிவுஜீவிகளின் கூட்ட்மே இருக்கும். அதனால் அதிபரின் முயற்சிக்கு அரசியலுக்கு அப்பாற்பட்ட ஆதரவும் இருந்தது.
இதன்படி ஜெர்மனியின் மினனணு ஆலைகள் எல்லாம் படிப்படியாக் முடப்படும். 2020க்குள்ளாக படிப்படியாக 17 ஆலைகளும் மூடபட்டு காற்றாலை, சூரியஒளி இயற்கை எரிவாயு, போன்ற்வற்றின் உதவியுடன் குறைந்த செலவில் மாற்று எரிபொருள்கலிலிருந்து தயாரிக்கபடும் மின்சாரமே நாடு முழுவதற்கும் வழங்கபடும். இதற்கான திட்டஙகளுடன் வரும் ஆண்டுகள் அரசு செயல்படும் . 2020ல் ஜெர்மனி உலகின் முதல் பசுமைசக்தி (GREEN ENGERY NATION) நாடாக இருக்கும். என அறிவித்திருக்கிறார். உலக அரங்கில் ஆச்சரியத்தை ஏற்படுத்திய இந்த அறிவிப்பை பல நாடுகள் வரவேற்றன. சுவிஸ் நாடு தாஙகளும் இதை பின பற்ற போவதாக் அறிவித்தது. ஜி8 நாடுகள் தங்கள் அணு உலைகளின் பாதுகாப்பை பரிசிலிக்கும் பற்றி திட்டங்களை தொடங்கி விட்டன.
இந்த திட்டத்தை முழுமையாக செயல் படுத்த 10 ஆண்டுகள் ஆகும். இவரது பதவிகாலம் 4 ஆண்டுகள்தான். அதற்குபின் அரசியல் மாற்றம் நிகழந்தால் திட்டம் என்னவாகும்? ஜெர்மானிய அரசியல் சட்டபடி மக்களின் அடிப்படை நலன்களை மாற்றி அமைக்கும் எந்த சட்ட திருத்திற்கும் பாரளாமன்ற ஒப்புதல் மட்டும் போதாது, மக்களிடம் வாக்கெடுப்பு நடத்த வேண்டும். அதனால் இதில் எந்த கட்சியும் மீண்டும் அணுமின் உலைகள் தேவை என சொல்லி அரசியல் செய்யமுடியாது. அப்படியே செய்தாலும் மக்கள் ஏற்கமாட்டார்கள் எனபது அதிபர் ஏஞ்சலா மெர்க்கீலின் கணிப்பு.
பல பில்லியன் யூரோ செலவாகப் போகும் இந்த திட்டதிற்கு தேவையான நிதியை எப்படி சமாளிக்க போகிறாகள்.? அணுமின் உலைகளின் செலவுக்கு ஒதுக்கபட்ட பணத்துடன் புதிய காற்றாலை திட்டங்களில் தனியாருடன் சேர்ந்து அரசும் முதலீடு செய்யும், அன்னிய முதலீடுகள் வரவேற்கபடும். இங்கு வந்து மின்சாரம் தயாரித்து அரசுக்கு விற்றும் மீதியை அண்டை நாடுகளுக்கு “ஏற்றுமதி” “ செய்தும் பணம் சாம்பாதிக்க வாய்ப்புள்ள நாடாக ஜெர்மனி ஆக போகிறது என்கிறார் அதன் நிதி அமைச்சர்.
விபத்துகள் நிகழும் போது பல இழப்புகளோடு சில நன்மைகளும் ஏற்படும் என்று சொல்லப்படுவதுஉண்டு. சுனாமியால் ஜப்பானில் நிகழந்த பேரழிவினால் ஜெர்மனியில ஒரு பசுமைசக்திப் புரட்சி க்கு வித்திட்டிருக்கிறார் இந்த புரட்சிதலைவி.
சி
|
கருத்துகள் இல்லை :
கருத்துரையிடுக
உங்கள் கருத்துக்கள்