24/4/11

அன்னா ஹஸாரே


அன்னா ஹஸாரே (ANNA HAZARE)


1965ல் இந்திய பாகிஸ்தான் போரில் பாக்கிஸ்தானின் கடுமையான விமானதாக்குதலுக்கு ஆளான அந்த ராணுவ யூனிட்டில் மயிரிழையில் உயிர்தப்பிய அந்த இளைஞனைத்தவிர மற்ற அத்தனை பேரும் சந்த்தித்தது மரணம். கனத்த மனத்துடன் தானும் தற்கொலைசெய்து கொள்ள முயற்சித்த  அந்த 25வயது இளைஞனை விடுமுறையில் வீட்டிற்கு அனுப்பினர் அதிகாரிகள். தன் கிராமத்திற்கு பயணம் சென்றுகொண்டிருந்த அந்த இளைஞனின் வாழ்க்கையை திசைதிருப்பியது அன்று  அவன் ரெயிவேஸ்டேஷனில் வாங்கிய விவேகானந்தரின் புத்தகம். படித்து முடித்த பின் தான் மற்றவர்களுக்காக உதவுவதற்காக  வாழவேண்டிய வேண்டிய அவசியத்தை கடமையாக உணர்ந்த ஹாஸாரே தன் ராணுவ வாழக்கையிலிருந்து விருப்ப ஓய்வு பெற்று கொண்டு 1975 ல் தன் கிராமத்தில் மக்களுக்காக உழைக்க துவங்கினார். ராலிகென் சித்தி ( Ralegan Siddhi) என்ற அந்த  சொட்டு தண்ணீர் கூட இல்லாத சின்னஞ்சிறிய கிராமத்தில் குடிப்பழக்கதிற்கு அடிமையான மக்களுடன் போராடி அவர்களுக்கு உழைப்புதானத்தின் அருமையை புரியவைத்து அருகிலிருந்து மலைகளின் இடையே சிறிய அணைகளையும், சின்ன ஏரிகளையும் கிராமமக்களின் உழைப்பை தானமாக தரச்செய்து  நீராதாரத்தை  ஏற்படுத்தி கொடுத்து  விவசாயத்தை செய்ய வைதார். வெற்றியை சுவைத்த மக்களின் பஙக்ளிப்புடன் பக்கத்து கிராமங்களும் பயன்பெற அது ஒரு இயக்க்மாகவே வளர்ந்தது. 1991ல் அரசின் உதவிகளைப்பெற செய்த முயற்சிகளில் அரசின் 42 வனத்துறை அதிகாரிகள் அரசை எமாற்றி பணம் சுருட்டுவதை கண்டு வெகுண்டு எழுந்து தொடர்ந்து போராடி கவர்னரிடம் ஆதாரஙகளை சமர்பித்து ஆறு அமைச்சர்களும் 400 அதிகாரிகளையும் பதவியிழக்கவைத்திருக்கிறார். அன்று முதல் தொடர்ந்து ஊழலை ஒழிக்கும் போரில் ஈடுபட்டிருகிறார் இந்த முன்னாள் படைவீரர். ஊழலுக்கு முக்கிய காரணம் நம்து நடைமுறைகளிலிருக்கும் வெளிப்படையில்லாத அணுகுமுறைதான் எனபதை உணர்ந்து  “தகவல் அறியும் உரிமையை “ சட்டமாக்க போராட ஆரம்பித்தார்.1997லிருந்து 2003 வரை போராடியும் மாநில அரசு அறிவிப்புகள் தந்து கொண்டிருந்த்தே தவிர சட்டமாக்கவில்ல. 2003 ஜுலையில் மும்பாய் ஆஸாத் மைதானத்தில் இவரது 12 நாள் உண்ணாவிரதபோராட்டதிற்கு பின் சட்டமாக்க முன்வந்தது மஹாரஷ்டிரஅரசு. இந்த சட்டம்தான் மத்திய அரசின் தகவல் அறியும் சட்டத்திற்கு அடிப்படை.
மஹாராஷ்டிர கிராம கூட்டுறவு சங்கங்களில் பெரிய அளவில் நடந்த மோசடியில் ஏமாற்றபட்ட மக்களுக்காக உண்ணாவிரதமிருந்து போராடி மீட்டுகொடுத்த பணம் 125 கோடி. பிரம்மச்சாரியான இவருக்கு சொத்து ஏதுமில்லை, வங்கிகணக்கில்லை. தனது முயற்சிகளினால் பலனடைந்த தன் கிராமதிலிருக்கும் சொந்த வீட்டில் கூட வசிக்க்காமல் ஒரு கோவிலில் வசிக்கும் இந்த எளிய மனிதரை பல நிருவனங்கள் கெளரவித்திருக்கின்றன. பல லட்சங்களை பரிசாக வழங்கியிருகின்றன. அனைத்தையும் அறக்கட்டளைக்களுக்கு நன்கொடைகளாக தந்திருக்கும் இவர்  1992ல் ல் தனக்கு தரப்பட்ட பதமபூஷன் விருதை  அரசின் போக்கில் அதிருப்தி அடைந்து திருப்பி தந்திருகிறார்.
இப்போது  தனது 71வது வயதில்  40 ஆண்டுகளாக தூங்கிகொண்டிருக்கும் லஞ்ச ஒழிப்பு சட்டமாக வேண்டிய லோக்பால் மசோதாவை உடனடியாக சட்டமாக்க மதிய அரசுடன் போரை  தனது  “சாகும் வரை அல்லது சட்டமாகும் வரை “ உண்ணாவிரதத்துடன் கடந்த வாரம் துவக்கினார்,   நாடுமுழுவதும் காட்டுதீயாக பரவிய ஆதரவு அலையினால் அரண்டுபோன மத்திய அரசு அன்னா ஹஸாரே விரும்பிய படி மக்கள் பிரதிநிதிகளூம் அமைசர்களும் அடங்கிய குழு தயாரிக்கும் ம்சோதாவை நாடளுமன்றத்தில் தாக்கல் செய்ய ஒப்புகொண்டதால் உண்ணாவிரதத்தை முடித்துகொண்டார்.

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்கள்