29/5/11

மதராஸ பட்டிணத்தின் காதலர்




ஹிந்து நாளிதழலில்  ஒவ்வொரு திங்கட்கிழமையும் வெளிவரும் ஒரு தொடர் பகுதி  “மெட்ராஸ் மிஸ்லேனி””“ ” சென்னை நகரின் மிக பழைமையான  கட்டிடங்கள்நிகழ்வுகள், மனிதர்கள் புத்தஙகள் போன்ற பாரம்பரிய சின்னங்களைப்பற்றிய  சுவராசியமான கட்டுரைகளை நகைசுவையோடும் அரிய புகைபடங்களுடனும் எழுதிவருபவர் திரு. எஸ் முத்தையா. 1999 ஆம் ஆண்டு துவக்கிய இந்த  செய்திகட்டுரைகளின் தொடர்  இன்றும் தொடர்கிறது.   உலகில் ஒருவாரம் கூட இடைவெளியில்லாமல் 11 ஆண்டுகளாக தொடர்ந்து ஒரேவிஷயத்தை பற்றி தனிப்பகுதி எழுதிக்கொண்டிருக்கும் பத்திரிகையாளார் இவராகத்தான் இருக்க முடியும்.
இவரது 11 ஆண்டு கட்டுரைகளை தொகுத்து  “பீப்புள்-பிளேஸஸ்-பாட்பூரி என்ற பெயரில் சமீபத்தில் புத்தகமாக வெளியிட்டிருக்கிறார்கள்.. மேற்கு வங்க முன்னாள் கவர்னர் திரு கோபாலகிருஷ்ண காந்தி  இந்த புத்தகத்தை வெளியிடும்போது   “வாரம் தோறும் தொடர்ந்து எழுதும் சில பத்திரிகையாளார்கள் தினசரியில் இடத்தை நிரப்ப உதவுவார்கள். சில பத்திரிகயாளர்கள் தங்கள்  எழுதும் பகுதியினால் தினசரிக்கு பெருமை சேர்ப்பார்கள். முத்தியா இரண்டாவது ரகம். சென்னையையின் பெருமைமிக்க பழைய கட்டிடங்களின் மீது முத்தியா கொண்டிருக்கும் அலாதி பிரியத்தினால், அவர் தொடந்து அதுபற்றி எழுதி வந்ததால்தான் பல கட்டிடங்கள் காப்பற்றப்டட்டிருக்கின்றன. அதற்கு சென்னை நகரம் அவருக்கு கடமைப்பட்டிருக்கிறது” “. என்றார்
திரு முத்தையாவின் கட்டுரைகள் வெளியான உடனேயே  வாசக்கர்களிட்மிருந்து வரும்  அது தொடர்பான பிறசெய்திகள், சமந்தபட்டவர்களின் வாரிசுகள் இப்போது இருக்குமிடம் போன்ற பல தகவல்களையும் பின்னுட்டமாக வெளியிட்டு  எழுதிய விஷயத்தை முழுமையாக்குவதினால் இவரின் இந்த பகுதி ஹிந்து நாளிதழில் வாசகர்களிடையே பெறும் வரவேற்பை பெற்றிருக்கும் ஒன்று. அறுபது ஆண்டுகளாக எழுதிக்கொண்டிருக்கும் இந்த எழுத்தாளார் கடந்த 50 ஆண்டுகளாக  தினசரிகளில் தொடர்பகுதிகளை தொடர்ந்து எழுதும் சாதனையை படைத்திருப்பவர். தனது 81 வது பிறந்த நாளில் இந்த புத்தகம் வெளியானதில்     “தான் சென்னையின்   வரலாற்று பதிவாளார் என்று அங்கீகரிக்கபட்டதற்காக  மகிழ்ச்சியடைகிறார்.

 “நீண்ட ஆராய்ச்சிகளுக்குபின்னர்ஆனால் அந்த ஆராயச்சியின்வாசனை சிறிதுமில்லாமல், சிக்கனமானவார்த்தைகளில், அழகான ஆங்கிலத்தில் சுவராஸ்யமான  கட்டுரைகளை ஒவ்வொரு வாரமும் சரியான நேரத்திற்கு அனுப்பிவைப்பவர் முத்தையா” “ என்று  அன்றைய விழாவில் பாரட்டியவர் ஹிந்து நாளிதழ் ஆசிரியர் ராம்.

எஸ் முத்தையா.   BOX MATTER
செட்டிநாட்டின் பள்ளத்தூர் கிராமத்தில் பிறந்த முத்தையா மிக சிறுவயதிலியே இலங்கை சென்று அங்கு வளர்ந்தவர். அங்கு பத்திரிகையாளாராக வாழ்க்கையை துவக்கி டைம்ஸ் ஆப் சிலோன் என்ற நாளிதழில் முதல் நிலை ஆசிரியராக தன் 38 வயதில் உயந்தவர். பத்திரிகையின் நிர்வாக ஆசிரியராக ஒரு சிங்களரே இருக்க முடியும் என்பது விதியாகையால் ஆசிரியராக்குமுன்  இவருக்கு கெளரவ குடிமகன் உரிமைக்கு சிபார்சு செய்யபட்டிருந்த்து. ஆனால் அப்போது நிகழந்த ஆட்சி மாற்றத்தால் அது கிடைக்கவில்லை. வாழ்நாள் முழுவதும் இரண்டாம் நிலை ஆசிரியராக இருக்க விரும்பாத முத்தையா மனம் வெறுத்து போய் சென்னை திரும்பி  பிரபல ஆங்கில பத்திரிகைகளில்  வேலைக்காக முயற்சித்துகொண்டிருந்தார். கிடைத்தது டி டி கே குழுமத்தின் மேப்புகள் அச்சிடும் புதிய நிறுவனத்தின் பொறுப்பு. அதன் ஒரு பதிப்பாக  சென்னையை பற்றிய புத்தகம் தயாரிக்க துவங்கியதில் ஏற்பட்ட ஆர்வத்தில்  இவருக்கு இந்த நகரத்தின் மீது பிறந்த காதல் இன்றும் தொடர்கிறது.நகரின் பராம்பரிய கட்டிடங்கள் படங்கள் புத்தகங்கள் பற்றிய பல விபரங்களை தொடர்ந்து சேகரித்துவரும் இவரது முயற்சியினால் தான் சென்னை நகரின் பிறந்த


தினம் கண்டுபிடிக்க்பட்டு இப்போது ஆண்டுதோறும் ஆகஸ்ட்மாதத்தில்
விழாவாக கொண்டாடபடுகிறது. சமீபத்தில் தனது 81 பிறந்தநாளை கொண்டாடிய இவரின் சுறுசுறுப்பு பிரமிக்க வைக்கிறது. தினமும 8 மணிநேரம் அலுவலகதில் பணிபுரிந்தபின் எழுதுகிறார்.
இதுவரை 30 புத்தகங்கள் எழுதியிருக்கும் இவர் மெட்ராஸ் மியூஸிங்ஸ் என்ற மாத சஞ்சிகையயையின் பதிப்பாசிரியரும்கூட... இன்றைய கம்யூட்டர், ஈமெயில் யுகத்தில், டைப் செய்து கட்டுரையை அனுப்பும் ஆங்கிலத்தில் எழுதும் ஒரே எழுத்தாளார் இவர் தான்.  ” “தொடர்ந்து  வேலைகள் செய்துகொண்டிருப்பதால்  வாழக்கை இனிமையாக இருக்கிறது”” “  என்று சொல்லும் முத்தையா விற்கு  அவரது  பாரம்பரிய சின்னங்களின் பாதுகாப்பு பணிக்காக  இங்கிலாந்து  அரசு  அரசியின்MBEவிருது அளித்து கெள்ரவித்திருக்கிறது

.





22/5/11

இந்த தேர்தலில் திமுக ஏன் மோசமாக தோற்றது ? 1





கணக்கினால் பெயில்;;;; கெமிஸ்ட்ரியினால் பாஸ்

தமிழக தேர்தலில் எப்போதுமே  கூட்டணியின் சில கணக்குகள் தான் முடிவை தீர்மானிக்கும். கணக்கை சரியாக போட்ட அணி ஜெயிக்கும் என்று சொல்லப்படுவது உண்டு. ஆனால் இம்முறை கலைஞர் போட்ட கணக்குகள் அத்த்னையும் தப்பாக போயிற்று.  முந்தைய தேர்தலில் கிடைத்த வோட்டுகளீன் சதவீத கணக்கு, சாதி ஓட்டுகளின் கணக்கு,  34 சீட் ஜெயித்த  காங்கிரஸுக்கு 63ஐ கொடுத்தது , 2ஜீ விஷயம்  கிராம மக்களுக்கு புரியாது என்ற கணக்கு, தன் குடும்ப வாரிசுகளைப்போலவே மாவட்டங்களின் வாரிசுகள் ஜெயித்துவிடும் என்ற் கணக்கு,இலவச டிவி, காஸக்கும் மக்கள்  நன்றி செலுத்துவார்கள் என்று எல்லா கணக்குகளையும் தப்பு தப்பாக போட்டதினால் மக்கள் மார்க போடவில்லை.,
 தொகுதி அறிவிப்பு என்ற் முதல் கேள்விக்கு அளித்த தவறான விடையை உடனே மாற்றி  கூட்டணி கட்சி தலைவர்களுடன் நல்ல கெமிஸ்ட்ரியை   ஏற்படுத்தி அதை  தொண்டர்கள் மட்டத்திலும்  உருவாக்கியதனால் தான் அம்மாவிற்கு மக்கள் நல்ல மார்க் கொடுத்திருக்கிறார்கள்.
பல இடங்களில் காங்கிராஸுக்காக வேலை செயாத திமுக  தொண்டர்கள், செய்தவர்களை அவர்கள் கட்சிகாரகள் தடுத்ததையும்தேதிமுக தலைவரை பற்றிய விமர்சனங்கள் கடுமையாக இருந்த போதிலும் அதிமுக தொண்டன் அது பற்றிய கவல்யில்லாமல் அம்மாவின் கட்டளைப்படி வேலை செய்ததை பல இடங்களில் பார்க்க முடிந்தது.
ரமணன்.