16/10/11

கலாம் சொன்னதைச் செய்தவர்


லைப் பூஸ்டர் 11             

 ராகவேந்திர ராவ்

  

ராகவேந்தர்  சென்னையில் பிறந்து  தெனாலியில் படித்து வளர்ந்தவர். தந்தை ஒரு ரெயில்வே அதிகாரி. குடும்பத்தில் யாரும்பிஸினஸோ தொழிலோ செய்பர்கள் இல்லை. ஆனால்  பிகாம் பட்டபடிப்பில் பல்கலைகழகதங்க மெடல் பெற்று, அகில இந்திய தகுதித்தேர்வில் பெற்ற முன்ணணி ரேங்க்கினால் அஹதாபாத் ஐஐஎம் ல் இடம் பெறறு எம்பிஏ படித்த இவரின் கனவு சொந்த தொழில். அதவும் சாதாரண கனவில்லை.  பிரமாண்டமான பலநூறு கோடிகளில் ஒரு பெரிய தொழிற்சாலை கனவு. அதுதான் இன்றைய உலகமறிந்த 300மில்லியன் டாலர் கம்பெனியான ஆர்ச்சிட் பார்மா (ORCHID PHARMA ) நிறுவனம்
கிடைத்த முதல் வேலை மும்பாயில் குவாலிட்டி ஐஸ்கீரிம் நிறுவனத்தில். நஷட்த்தில் இயங்கிகொண்டிருந்த அதன் அஹமதாபாத் கிளையை சீராக்கி சிறப்பான நிலைக்கு கொண்டுவந்த ராகவேந்தரின் சாதனை தாகத்திற்கு அது போதுமானதாக இல்லை.  சென்னை அசோக்லேண்ட் பணியில் ஒரு தொழிற்சாலையின் பன்முகங்களை அறிய வாய்ப்பு கிடைத்தாலும்,  பெரிய அளவில் சாதிக்க துடிக்க காத்திருந்தவருக்கு 1986ல் ஹைதிராபாத்தில் கெமிகல் ஆலையை துவக்க திட்டமிட்டகொண்டிருந்த  ஒரு குழுமத்தினரின் அழைப்பு சவாலாக இருந்தது. அந்த நிறுவனத்தை முதல் செங்கலிருந்து உருவாக்கிய அந்த நிறுவனம் 2 ஆண்டுகளில்  5 மடங்கு வளர்ந்திருந்த்து. அவரது  சொந்த கம்பெனியின் கனவைப்போலவே. சொந்த தொழில் துவக்க வேண்டிய மூலதனத்திற்கான் பணத்தை இந்த வேலையில் சம்பாதிக்க முடியாதென்பதால் வெளிநாடுபோய் வேலைசெய்து சம்பாதிக்க திட்டமிட்டதின் விளைவு நல்ல சம்பளத்திலிருந்த வேலையை ராஜினாமா செய்தது. இதற்கிடையில் திருமணமாகி ஒரு குழந்தையும் குடுமப உறுப்பினராகியிருந்த்து. மனைவி இல்லத்தரசிஇத்தனை நாள் உழைப்பில் வங்கிகணக்கில் இருந்த் சேமிப்பு  11000ரூ மட்டுமே இந்த நிலையில் ஒமன் நாட்டில் ஒரு ஹோட்டலின் அக்கெண்டிங் மேனஜர் வேலைக்கு தேர்வாகி தனியே அங்கு போனபோது இவர் அடைந்தது மிகப்பெரிய ஏமாற்றம். அது ஒரு 30  ஊழியர்களுடன் 16 அறைகளை  கொண்ட சின்னஞ்சிறு ஹோட்டல். அதில் அதிகம் படித்த ஊழியர் 12 வகுப்பு பாஸ் செய்திருந்தவர் நிறைய நிலமும், பெரியஆசைகளுடனும் கொண்டவர்கள் அதன் முதலாளிகள்.  முதலில் தயங்கிய ராகவேந்தர் இதை சவாலாக ஏற்று சாதிக்க  வேண்டும் என்று முடிவு செய்தார், எல்லா பொறுப்புகளையும் நேரடியாக கவனித்து அந்த ஹோட்டலை பெறும்லாபத்தை ஈட்டி தரும் நிறுவனமாக்கினார். அதன் உரிமையாளர்களுக்கு நல்ல ஆலோசனைகளை வழங்கி அவர்கள் ஒரு ரெடிமேட் ஆடைதயாரிக்கு நிறுவனம், சின்ன உருக்காலை, ஒரு கெமிகல் ஆலை போன்றவைகளை உருவாக்க உதவினார். 4 ஆண்டுகளில் ஒரு சின்னஹோட்டலை நடதிக்கொண்டிருந்த குடுமபம் ஆண்டுக்கு 80 மில்லியன் டாலர்கள் சம்பாதிக்கும் குழுமம் ஆகியிருந்தது. அரபு நாடுகளில் நிறுவனத்தின் பங்குகள்ஊழியர்களுக்கு வழங்கபடமுடியாது என்பதால் 10000 டாலர் சம்பளம், பலவசதிகளை அந்த நிறுவனம் ராகவேந்தருக்கு தந்திருந்தாலும்  தன் கனவை மறக்காமல் இன்னும் பல புதியபரிமானங்களுடன் கண்டுகொண்டேயிருந்தார்.நிறுவனத்தின் வளர்ச்சசியில் கட்டுமான பணி, இயந்திர இறக்குமதி,  பணியாட்கள் எல்லாம் இந்தியாவிலிருந்தே ஏற்பாடுசெய்து பலருக்கு வாய்ப்பளிதிருக்கிறார்.  சேமித்த பணத்துடன் இந்தியா திரும்பிய ராகவேந்தர் திட்டமிட்டது  மருந்துகள் தயாரிக்கும்  தொழிலுக்கு தேவையான் அடிப்படை கெமிகல்கள் உற்பத்திசெய்யும் ஒரு ஆலை. மருந்து தயாரிக்கும் தொழில் மனித சமுதயாமிருக்கும் வரை வளர்ந்துகொண்டிருக்கும் ஒரு தொழில் அதில் ஈடுபடுவது மற்றதை விட லாபகரமானது  எனபதை கணித்த ராகவேந்தர் அதை  ஒரு சிறுதொழிலாக துவக்கவதை விரும்பவில்லை. தன்னுடையது ஒரு பெரிய நிறுவனமாக இந்தியா அறிந்த, உலகம் அறிந்த நிறுவனமாக இருக்கவேண்டும் என்பதை விரும்பினார். அதற்காக  12 கோடியில் தனக்கிருந்த தயாரிப்பு, நிர்வாக அனுபவம் எல்லாவற்றுடன் அழகான ஒரு பெரிய திட்டத்தை தயாரித்தார். தனது சேமிப்பு மட்டும் போதாது எனபதால் வங்கிகளை கடன் வசதிக்காக அணுகினார். ஐடிபிஐ வங்கி கடன்  5 கோடி கடன் தரமுன் வந்தது. ஆனால் சொன்ன நிபந்தனை  “ உங்கள் மூலதனத்தை 6 கோடிகளாக்க வேண்டும் “ அதற்காக பங்குசந்தையில் நுழையும்படி ஆலோசனையைவழங்கி  அதை நிர்வகிக்கவும் முன்வந்தது. தொடர்ந்து நேரடி மூதலீட்டுக்கு சில தனியார் நிறுவனங்களையும் அணுகினார். தன் திறமையின் மீது கொண்ட அசாத்திய நமபிக்கையினால்  நனபர்கள், நண்பர்களின் நண்பர்கள்,  அப்பலோ மருத்துமனையில் டாக்டராக இருந்த அண்ணனின் நணபர்களை என பலரை அணுகி திட்டத்தை விவரித்து  மூதலிட்டை பெற்றார். தனிமனிதராக இதைச்செய்ததைவிட  பெரியசாதனை,இறுதியில் குறைந்த 50 லட்சத்தை ஐடிபிஐ வங்கி முதலீடு செய்ய முன்வந்ததுதான். கடன் கொடுக்கும் வங்கியே அந்த தொழிலில் முதலிடு செய்வது எனபது இந்தியாவில் அது தான் முதல் முறை.   1992ல் துவங்கிய முயற்சி மொட்டுக்கள் ஒரே ஆண்டில் தொழிற்சாலையாக மலர்ந்தது.   எல்லா கட்டஙகளிலும் திட்டமிட்ட நாட்களுக்கு முன்னதாகவே பணிகள் முடிக்கபட்டன. முதல் இரண்டு மாதத்தில் தயாரிப்பும் பிஸினஸும் 5 கோடி லாபம் 43 லட்சம். அன்று முதல் இன்று வரை இந்த நிறுவனத்திற்கு தொடர்ந்தது வெற்றிகள் மட்டுமே. 94-95 ஆண்டுகளில் நிறுவனத்தின் பிசினஸ் 192 கோடிகள். திட்ட அறிக்கையில் எதிர்பார்ப்பாக சொல்லபட்டிருந்தது 37 கோடிகள்.
இந்த  மகத்தான வெற்றிக்ககான காரணமாக 3 விஷயங்களை  சொல்லுகிறார்  பத்மஸ்ரீ ராகவேந்திரா ராவ். முதலில்  ” “என்னுடைய டீம். என்னுடன் ஹைதிராபாத்திலும்,ஓமனிலும் என்னுடன் இணைந்தது உழைத்த அருமையான நண்பர்கள். . இன்று எல்லோருக்கும் கணிசமான பங்குகள் இருந்தாலும் கம்பெனி துவங்கிய காலங்களில் சமபளம் எடுத்துகொளாமல் நம்பிக்கையோடு உழைத்தவர்கள். இரண்டாவது தேர்ந்தெடுத்த தொழிலில்  எதைத்யாரிக்கவேண்டும் எனற  தீர்மானமான குறிக்கோள். நிறைய கம்பெனிகள் இந்த தொழிலில் இருந்தாலும் போட்டியில்லாத, மிகஅதிக அளவில்மருந்துகளின் தயாரிப்புக்கு தேவைப்படும்  ஒரு  முக்கிய ஆண்டிப்யாட்டிக் மூலப்பொருளை தயாரிக்க முடிவு செய்தது. “ (இன்று உலகில் 5 கம்பெனிகள்  மட்டுமே தயரிக்கும் ஒரு பொருளை இவர்கள் உற்பத்தி செய்கிறார்கள்.)  மூன்றாவது உலக மார்கெட்டில் கண்வைத்து முழுதயாரிப்பையும் 100% ஏறுமதிக்காக உற்பத்திசெய்யும் நிறுவனமாக துவங்கியது. உலகளவில்.  அடிப்படை மருந்துகளின் தேவையில் இந்தியா 1%  ஏறுமதி தான் செய்துவருகிறது அதில் இறங்குவதிலிருக்கும் ஆபத்துகளைப்பற்றி மற்றவர்கள் பேசிக்கொண்டிருந்த்காலத்தில் மீதி 99 % தயாரிப்பில் பெரிய இடத்தை பிடிக்க நாங்கள் நம்பிக்கையுடன் திட்டமிட்டதுதான் எனகிறார்..முதல்ஆண்டு 3 நாடுகளுக்கும், இரண்டாம் ஆண்டு 12 நாடுகளுக்கும் ஏற்றுமதிசெய்துகொண்டிருந்த ஆர்ச்சிட் நிறுவனம் இன்று 90 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது. மிக அதிக அளவில் அமெரிக்காவிற்கு.  இன்று அமெரிக்க ஆஸ்பத்திரிகளில் வழங்கபடும் மருந்துகளிலும் மாத்திரைகளிலும் இருக்கும் அடிப்படை வேதியப்பொருள் இந்தியாவில் தயாரிக்கபட்டது என்ற பெருமையான விஷயத்தை செய்தவர்கள் இவர்கள்.
இவர்களின் வெற்றிக்கு மற்றொரு பெரிய காரணம் இவர்களது  3700 ஊழியர்கள். பலர் நிறுவனத்துடன் வளர்ந்தவர்கள். டீ கொடுக்கும் பையனிலிருந்து ஜெனரல் மானேஜர்கள் வரை பலருக்கு நிறுவனத்தின் ஷேர்கள்  வழங்கப்பட்டிருக்கிறது. சாப்ட்வேர் கம்பெனிகளில் மட்டுமேஇருந்த இந்த திட்டதை 199லியே தன் நிறுவனத்தில் அறிமுகபடுத்தியிருக்கிறார்.
உலகப்பொருளாதாரநெருக்கடி. பன்னாட்டுகம்பெனிகளின்போட்டி அன்னிய முதலீட்டு கொள்கைகளினால் வெளிநாட்டுகம்பெனிகளின்போட்டி, கமபெனியையே முழுங்க முயறசிக்கும் உள்நாட்டு போட்டியாளர்கள் எல்லாவற்றையும் திறமையாக சமாளித்து பிரமாண்டமாக நிற்கும்  இந்த நிறுவனம்  ஒரு  இந்திய இளைஞனின் “ நம்பிக்கையின் அடையாளம்
 096     


கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்கள்