


உட்பிரகார
சுவற்றில் பெருமாள் சன்னதியிருக்கும் பக்கத்தில் தஸாவதாரமும். சிவபருமான் சன்னதியிருக்கும்
பக்கத்தில் நாயன்மார்களும் அலங்கரிக்கின்றனர். வினாயகர், ஆண்டாள், ஆஞ்னேயர், அய்யப்பன்
என ஒவ்வோரு சன்னதியும் மிகந்த அழகோடு நிர்மாணிக்கப்பட்டு
நேர்த்தியாக பராமபரிக்கபட்டுவருகிறது படு சுத்தமான பளிங்கு தரையில், குளிர்கால மாதலால்
உட்கார்ந்து பிரார்த்திக்க வசதியாக கார்பெட்கள் இடப்பட்டிருக்கிறது சன்னதிகளில் ஆப்பிளும்,
பாதாம் பருப்பும் தான் நைவேத்தியம். அர்ச்சனை, பூஜை கட்டணங்கள் உள்ளூர் பண மதிப்பிலியே.
சற்று அதிகம் தான். ஆனால் நம்ம கோவிலுக்குதானே என்ற எண்ணம் எல்லோரிடமும் இருக்கிறது..
திட்டமிட்ட அட்டவணையுடன் எல்லா கால அபிஷகங்களும்,
பூஜைகளும் நடைபெறுகிறது. இங்குள்ள ஐயப்பன் அமெரிக்க கோவில்களிலிருக்கும் ஐயப்ப ஸ்வாமிகளில்
முதல்வர் என்பதால் பக்கத்து மாநிலங்களிலிருந்து இருமுடிகட்டி விரதமிருந்து வருகிறார்கள்.
நல்ல குளிரிலும் பல குடும்பங்கள் குழந்தைகளுடன் வந்திருப்பதும் அவர்கள் கோவிலுக்குள்
நுழையும் முன் நீரில் கை கால் சுத்தம் செய்துகொள்வதும் பார்க்க சந்தோஷமாகயிருக்கிறது.
கோவிலின்
தலைமை அர்ச்சகர் நாராயணச்சார். கர்நாடக மாநிலத்திலிருந்து
வந்திருக்கும் இவர் இங்கு கடந்த 30 ஆண்டுகளாகயிருக்கிறார். தமிழ் தெலுங்கு ஆங்கிலம்
பேசும் இவரின் கீழ் 10 அர்ச்சகர்கள் சுழல் முறையில் எல்லா சன்னதிகளில் பூஜை செய்கிறார்கள். நாராயணச்சார்
சம்ஸ்கிருத வித்வான், சம்ஸ்கிருத்திலும் ஆங்கிலத்திலும் ஏம் ஏ பட்டம பெற்றவர்.
1999ல் அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகையில் கிருஸ்தமஸ்ஸை போல தீபாவளி பண்டிகையும்
கொண்டாட வேண்டும் என்றஅமெரிக்க வாழ் இந்தியர்களின் கோரிக்கையை அமெரிக்க அதிபர் ஒபாமா
ஏற்ற போது அதை துவக்கிவைக்க அழைக்கபட்டஒரே இந்து அர்ச்சகர் இவர். அதிபர் ஒபாமா நாட்டின்
வளர்ச்சிக்கு அமெரிக்க வாழ் இந்தியர்களின் பங்களிப்பை பாராட்டி பேசிய அந்த நிகழ்ச்சியில்
இனி ஆண்டுதோறும் வெள்ளை மாளிகையில் திபாவளி கொண்டாடப்படும் என அறிவித்து அதற்கான அதிபரின்
ஆணையையும் வெளியிடும் அந்த வெள்ளை மாளிகை விழாவில் புல் சூட்டிலிருக்கும் அத்தனைபேருக்கிடையில் வெண்பஞ்சகச்சத்தில்
பளிச்சன்று நெற்றியில் திருமண்ணுடன் நாராயணச்சார் நாராயணச்சார் தனது கணிரென்ற குரலில் இருளுலிருந்து ஓளியை நோக்கி எனற பொருளில் சொல்லபட்ட
அஸ்த்தோமா சத்-ஃகாம்யா
த்மஸோமா ஜோதிஃகம்யா
ॐ असतो मा सद्गमय ।
तमसो मा ज्योतिर्गमय ।
मृत्योर्मा अमृतं गमय ।
तमसो मा ज्योतिर्गमय ।
मृत्योर्मा अमृतं गमय ।
ॐ शान्तिः शान्तिः शान्तिः ॥
ஸ்லோகத்தை சொல்ல
அதிபர் ஐந்து முக வெள்ளி விளக்கை மெழுகுதிரியினால்
ஏற்றிய பின் திபாவளி விழா துவங்குகிகிறது.. 200 வருடங்களாக கிருத்துவ பாடல்கள் மட்டுமே
ஒலித்த வெள்ளை மாளிகையில் நமது உபநிஷத்தின் பொன்னான வரிகளுடன் ஒரு சரித்திர நிகழ்வை
பதிவு செய்த பெருமை இவருடையது. ”என் வாழ்வின் சந்தோஷமான தருணம் அது” என்கிறார். இவருக்கு மட்டுமில்லை நமக்கும் தான்.
தொடர்ந்து கடந்த ஆண்டு வெள்ளை மாளிகையில் தீபாவளி
கொண்டாடபட்டிருகிறது. இது இனி ஆண்டு தோறும் தொடரும்.
நமது
கோவில்கள் வழிபாட்டுதலங்கள் மட்டுமில்லை.கலாசார வளர்ச்சிக்கு உதவும் இடமாகவுமிருக்க
வேண்டும் என்ற நமது மரபிற்கேற்ப இந்த கோவிலை நிர்வகிக்கும் SSVT டிரஸ்ட் அடுத்த தலைமுறைக்கும்
இந்த ஆர்வம் தொடர பல பணிகளை செய்துவருகிறார்கள். இந்திய கலைஞர்களின் நிகழ்ச்சிகளை தவிர
இசை நடன வகுப்புகளும் அதில் பயின்ற இளைஞர்களின்
நிகழ்ச்சிகளும் மட்டுமில்லாமல்,ஆன்மிக வகுப்புகள், செமினார்கள் என பல நடத்துகிறார்கள்.
கோவிலை இன்னும் பெரிதாக்க வளர்ச்சி திட்டங்கள்,நிதி
ஆதாரங்களை மேம்படுத்த போன்ற பல்வகை பணிகளை பெரிய நிறுவங்களில் பதவிகளிலும்,அமெரிக்க அரசு பணிகளிலும் இருக்கும்
இதன் கெளரவ உறுப்பினர்கள் சிறப்பாக செய்கிறார்கள்.
இது
போல் அமெரிக்காவின் எல்லா மாநிலங்களிலும் பல
கோவில்கள் (குறைந்த பட்சம் இரண்டு கோவில்களாவதுவது) சிறப்பாக இயங்குகிறது. சில கால நூற்றாண்டையும் கடந்தவை. இன்னுமும் புதிய கோவில்கள் எழும்பிக்கொண்டிருக்கின்றன.
2408 society drive
Claymont
DELWARE USA 19703 1760
US1220212
கருத்துகள் இல்லை :
கருத்துரையிடுக
உங்கள் கருத்துக்கள்