1/4/12

உலகம் அறிந்த உடைந்த மணி.


உலகம் அறிந்த  உடைந்த மணி.அமெரிக்காவில் பிலடெல்பியா நகரின் நடுவே சுதந்திர பூஙகாவில்  அழகான ஒரு தனி வளாகத்தில் 30அடி உயரமும், 900கிலோ எடையும் கொண்ட அந்த பிரமாண்டமான லிபர்ட்டி பெல் அதன் பின்னே உள்ள கண்ணாடி சுவரின் வழியே தெரியும் அமெரிக்க முதல் சட்டமன்றத்தின் பின்னணியில் கம்பீரமாக நிற்கிறது    ஆண்டுக்கு 10 லட்சம் பேர் வந்து பார்க்கும் இந்த மணிக்கு  அமெரிக்க தேசிய  கொடிக்கு நிகரான அந்தஸ்த்து வழங்க பட்டிருக்கிறது. தபால் தலைகளிலும் நாணயங்களிலும் இடம் பெற்றிருக்கும் ஒரு தேசிய சின்னம். ஆனால் இந்த மணி அடிக்கபடுவதில்லை. காரணம் அதில்  விழுந்த விரிசல். பயன்படுத்தமுடியாமல் பல ஆண்டுகள் ஒதுக்கிவைக்கபட்டிருந்த இந்த மணி சரித்திர சின்னமானது ஒரு எழுத்தாளார் எழுதிய  சிறுகதையால் தான்.
 அமெரிக்கா, அமெரிக்க ஐக்கிய நாடாக அறிவிக்கபடும் முன்னரே மக்களாட்சி மலர்ந்தது பென்சில்வேனியா மாநிலத்தில்தான். அதன் தலைநகரான பிலடெல்பியா தான் நாட்டின் தலைநகராக அப்போது அறிவிக்கபட்டிருந்தது.  அதை சிறபிக்க புதிதாக எழுப்பட்டிருக்கும் சட்டமன்ற கட்டிட கோபுரத்தில் ஒருமணியை நிறுவ விரும்பினார் மாநில கவர்னர். லண்டனில் உள்ள மணிகள் தயாரிக்கும் புகழ்பெற்ற lலெஸ்ட்டர்&பாக்  (Lester and Pack) நிறுவனத்தால் (இன்றும் இந்த நிறுவனம் இருக்கிறது) வடிவமைக்க பட்டு1793ம் ஆண்டு கப்பலில் பிலெடெல்பியா வந்த மணி  நகர மக்களால்  .. கோலாமாக வரவேற்கபட்டது  மக்கள் பார்வைக்கு வைக்கபட்ட மணி முதல் முறை ஒலிப்பதை ஒரு விழாவாகவே கொண்டாட ஏற்பாடு செய்யபட்டிருந்தது. ஆவலுடன் காத்திருந்த மக்கள்  மணியின் நாதத்தை கேட்டு ஏமாற்றமடைந்தனர். அந்த அளவு அது மோசமாகயிருந்தது. அதில் ஒரு சின்ன மெல்லிய விரிசல் இருந்தது கண்டுபிடிக்கபட்டது,  இங்கிலாந்து நிறுவனம் தவறு எங்களிதில்லை.உங்கள் ஊர் மணியடிப்பவர் சரியாக கையாளாதனால் விரிசல் வந்திருக்கலாம். திருப்பியனுப்புங்கங்கள் சரி செய்து தருகிறோம் என்றது. ஆனால் மீண்டும் ஒரு முறை லண்டன் அனுப்பி திருப்பி பெற ஆகும் கப்பல் கட்டணம் மணியின் விலையை விட அதிகமாக இருந்ததால் அந்த திட்டம் கைவிடபட்டது.ஆனால்மணியை கைவிட மனமிலாத கவர்னர் உள்ளூர் ஆட்களைவிட்டு சரி செய்ய உத்தரவிட்டார். முன்வந்தனர்  இரண்டு இளைஞர்கள். ஜான் சகோதரர்கள் (John Pass and John Stow) இறக்குமதி செய்யபட்ட மணியை உருக்கி அந்த உலோகத்தில் ஒரு புதிய மணியை உருவாக்கினர். ” எல்லா நிபரப்பிலிருக்கும் அனைத்து மக்களுக்கும் சுதந்திரம்” என்று முன்பிருந்த வாசகங்களுடன்  அவர்கள் பெயரும் அதில் பொறிக்கபட்டது. நம் நாட்டிலியே தயாரான மணி என்ற பெருமையை பெற்ற அந்த மணியை   பரிசோதித்தபோது அதன் நாதமும் பலருக்கு திருப்தி தரவில்லை. ஆனாலும் கவர்னரின் உத்தரவின் பேரில் மணி மாடத்தில் நிறுவபட்டது. முக்கியமான நாட்களில் மட்டும் ஒலிக்கபட்ட அந்த மணி ஒரு முறை ஜார்ஜ் வாஷிங்டனின் பிறந்தநாளில் ஒலித்தபோது மாறுபட்டு தெரிந்த அதன் ஒலி மணியில் மீண்டும் ஒரு விரிசல் விழுந்திருப்பதை சொல்லியது.   மணிமாடத்திலிருந்து கழட்டபட்டு ஓரம் கட்டபட்டது. ஆண்டுகள் சில ஆண்டுகளில்  மக்கள் மறந்தே போனார்கள்
அமெரிக்க சுதந்திரபோர்  முடிந்து புதிய நாடும் ஆட்சியும் உருவாகி , மக்களின் உணர்ச்சிகளின் எழுச்சியாகயிருந்த  காலகட்டத்தில். நிகழ்ந்த  சரித்திர நிகழ்வுக பல நாவல்களையும், சிறுகதைகளையும் எழுதியவர்  ஜார்ஜ் லிப்பர்ட்  20கும்  மேற்பட்ட படைப்புகள உருவாக்கியவர் இன்றும் அமெரிக்க இலக்கியத்தில் மதிக்கபடுவர். இவர் 1847ல் எழுதிய ஒரு சிறுகதை  ஃபோர்த் ஜூலை 1776 ("Fourth of July, 1776")  சார்ட்டே ரெவியூ பத்திரிகையில் வெளியானது.  அந்த மணியை அடிக்க நியமிக்க பட்டிருந்தவர் ஒய்வு பெற்றுவிட்டாலும் மணியை மிகவும் நேசித்ததால் அந்த பணியை தொடர்ந்தார். ஜுலை 4 1776 அமெரிக்க மக்கள் சுதிந்திர பிரகடனம் கையெழுத்தாகப்போகும் செய்தியை எதிர்பார்த்திருந்தனர். தன் வாழ் நாளில் நாட்டிற்கு சுதந்திரம் வந்து அதை இந்த மணியை அடித்து தாம் அறிவிக்க  முடியும் என்ற நமபிக்கையை இழந்திருந்த அந்த வயோதிகரின் பேரன் ஓடிவந்து ”தாத்தா பிகடனம் கையெழுத்தாகிவிட்டது” என்று சொன்ன செய்தியில் மகிழ்ந்து வேகமாக அந்த மணியை அடித்து மக்களுக்கு அறிவித்தபின் இற்ந்துபோகிறார் என்பது  அந்த கதையின் ஒன்லைன்..
சார்ட்டடே ரிவிய்யூவில் வெளியான இந்த கதை தொடர்ந்து மற்ற மாநில செய்திதாட்களிலும்/பத்திரிகையிலும் வெளியானதினால் மிக பிரபலமடைந்தது. கதையில் சொல்லபட்ட சுதந்திர மணியை மணியை பார்க்க ஆவலுடன் மற்ற மாநில மக்களும் அந்த வர ஆரம்பித்தனர். பல ஆண்டுகள் பள்ளிபாடபுத்த்கங்களிலும் இந்த கதை இடம் பெற்றிருந்ததினால் மாணவர்களுக்கும் ஆர்வமான ஒரு விஷயமாகிபோனது. பார்ப்பவர்களின் வசதிக்காக  இந்த மணியை. தேடிபிடித்து தூசி தட்டி மாநில மன்ற வளாகத்தின் தோட்டடதில்,  அடிக்கமுடியாதபடி அலங்கார தூண்களில் காட்சிக்காக வைக்கபட்டது.  அடிமை முறையை சட்ட பூர்வமாக ஒழிப்பது  என்பது அந்த காலகட்டதில் அமெரிக்கா முழுவதும் பேசபட்ட விஷயம். அந்த குழுவினர். மணிஓசை எனபது சுதந்திரத்தின் அடையாளம் என சொல்லி இந்த மணியை அவர்கள் இயக்கத்தின் சின்னமாக அறிவித்து ஆறு குதிரைகள் பூட்டிய வண்டியில் எடுத்துச்சென்று பலநகரங்களில் பேரணியில் காட்சியாக்கினார்கள். மக்களிடம் பிரபலமாகிவிட்ட இந்த உடைந்த மணியை அரசும் அங்கீரித்து தாபால் தலை ஒன்றை வெளியிட்டது. தொடர்ந்து படிப்படியாக பல கெளரவங்களைப் பெற்றது  ஒசை எழுப்பாத இந்த உடைந்த மணி. இன்று இதன் மாதிரி வடிவம் அத்தனை அமெரிக்க மாநில மன்றங்கள் முன்னும் நிற்கிறது. நாட்டின் உயரிய விருது பதக்கங்களில், நாணயங்களில் படம் பொறிக்கபட்டிருக்கிறது.
பிலெடல்பியாவில் காட்சியகத்தில்  காலச்சுவடுகளின் படங்களோடும் ஒலிஓளிகாட்சிகளோடும் நிறுவபட்டிருக்கும்  இந்த மணியை . சில ஆண்டுகளுக்கு முன் வந்த ஒரு பார்வையாளார், தான்  கொண்டுவந்த சுத்தியால் அடித்து பார்க்க முயன்றதால்  இப்போது இதற்கு 24/7 காவல் நுழைவாயில் சோதனை,..மணியை தொடமுடியாதபடியான அமைப்பு எல்லாம்.விரிசல் பெரிதாகிவிடுகிறதா என 3 ஆண்டுகளுக்கு   ஒருமுறை எக்ஸ்ரே, விசேஷ ரசயான பராமரிப்பு, வல்லுனர்சோதனை என பாதுகாகிறார்கள். மணிஓசை எப்படித்தானிருக்கும்? என்ற ஆவல் கொண்டவர்களுக்கு உள்ளூர் பல்கலைகழக உலோகவியல் பேராசிரியரும் மாணவர்களும் மணியின் அளவுகளிலேயே அதே கீறலுடன்  ஒரு மாதிரியை செய்து அதில்  எழுப்பிய ஒலியை பதிவு செய்துவைத்திருகிறார்கள். 
ஜார்ஜ் லிப்பர்ட்  எழுதியது உண்மைக்கதையாக இருக்க முடியாது  என்று ஆராயச்சியாளார்கள் பல ஆதாரங்களுடன் இன்றும் எழுதிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் இந்த மணி எழுப்பிய ஓசையைவிட அந்த   சிறு கதை எழுப்பிய ஒசை தான் இன்று உலகத்தையே இதை பார்க்கவைத்திருக்கிறது.
kalaki 01'0412கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்கள்