11/7/12

நெல்லையிலிருந்து வீனஸுக்கு..

கடந்த ஜுன் 6ம்தேதி விண்வெளிமண்டலத்தில்  105 ஆண்டுகளுக்கு பின்  நடந்த  ஒரு அரிய நிகழ்வு  ” “டிரான்ஸ்சிட் ஆப் வீனஸ்” “. அன்று காலை 5.30 மணிக்கு வெள்ளி கிரகம் (வீனஸ்) சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் ஒரே நேர் கோட்டில் சஞ்சரித்தது. தகிக்கும் சூரிய கிரகத்தின் முன்னே மெல்ல மறு புறம் நோக்கி நகர்ந்த வெள்ளி கிரகத்தை ஒரு சின்ன கருப்பு புள்ளியாக நகர்வதை பூமியிலிருந்து பார்க்க முடிந்த்து. இந்த வெள்ளி இடை நகர்தலை இனிமேல் 2117ல் தான் பார்க்க முடியும்.
இந்த அரிய வானவியல் நிகழ்வை நெல்லையின்
, அவர்கள் தாங்கள் தயாரித்த பவர் பாயிண்ட் ஸ்லைடுகளின் உதவியுடன் மற்ற ஜுனியர் மாணவர்களுக்கு நிகழ்வை விளக்க தயார் செய்யபட்டனர். பள்ளியின் மாடியில் அமைக்க பட்டிருந்த விசேஷ வானவியல் கூடத்திலிருந்து  பில்ட்டர்  பொறுத்தபட்ட டிஜிட்டல் டெலிஸ்கோப்பின் மூலமும், விசேஷ கண்ணாடிகள் வழியாகவும் நிகழ்வை பார்க்குமுன் இந்த விளக்கஙகள் தரப்பட்டது. இவ்வளவும் நடந்தது காலை 5.மணிக்கு.  அந்த நேரத்தில் 1000 மாணவர்களும், 300 க்கும் மேற்பட்ட பெற்றோர்களும் பங்கு கொண்ட இந்த நிகழ்ச்சியில் பெற்றோர்கள்  பார்த்து வியந்த விஷயம் ” “வெள்ளி நகர்தல்”“ மட்டுமில்லை. மாணவர்களின் பாடம் நடத்தும் திறனையும் தான். வரமுடியாத பெற்றோர் வீட்டிலிருந்தே பார்க்க பள்ளியின் வெப்ஸைட்டில்  மாணவர்களின் வர்ணனையுடன் வெப்காஸ்டிங்கில்  ஒளிபரப்பி கலக்கிவிட்டார்கள்.
பாளையங்கோட்டை பகுதி ஜெயந்திரா பள்ளி ஒரு விழாவாகவே கொண்டாடினர்.   பள்ளி மாணவர்கள் அனைவரும்  நிகழ்வை நேரடியாக பார்த்தனர்.  சிலநாட்களுக்கு முன்னரே இந்த நிகழ்வின் முக்கியத்துவம் குறித்து 10 மற்றும் 12 ஆம்வகுப்பு மாணவர்களுக்கு விளக்கபட்டு
 “ராங்க்குகளையும், நல்ல மதிப்பெண்களையும் தாண்டி எங்கள் மாணவர்களை  பன்முக திறன் கொண்டவர்களாகக்குவதற்காக நாங்கள் செய்யும் சில விஷயங்களில் இதுவும் ஒன்று என்கிறார்“  ஜெயேந்திரா பள்ளியின் இயக்குனர் திரு ஜெயேந்திரன். கல்வியாளரான இவர் அகில இந்திய வான் இயல் கழகத்தின் உறுப்பினர்.  “ஓரு நூற்றாண்டின் அரிய நிகழ்வை வி்ளக்குவதற்காக  அதை கற்றுகொண்டு மற்றவருக்குசொல்லிகொடுத்தால் இது மாணவர்களின் வாழ்நாள்முழுவதும் நினவிலிருக்கும்’”: என்கிறார் தலமையாசிரியை திருமதி ஜெயந்தி.
 இந்த பள்ளி இந்த ஆண்டின் 12ம் வகுப்பு தேர்வுகளில் மாநில அளவில் பல முன்னிலையிடங்களையும், 10வகுப்பு தேர்வில் மாநில இரண்டாம், மூன்றாம் இடங்களையும் பெற்றதோடுஆல் ரவுண்ட் அடென்ஷன்”“க்காக மாநில அளவில் முதல் இடத்தையும் பெற்றிருப்பதில்  ஆச்சரியம் ஒன்றுமில்லை.

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்கள்