11/7/12

 கடவுளை கண்டார்களா?

இந்த உலகம் பிறந்தது எனக்காக  என மகிழும்  நம்மில் சிலருக்கு தொடந்து எழுந்துகொண்டிருக்கும்  ஒரு கேள்வி- இந்த உலகம் எப்படி பிறந்தது? யார் படைத்தது?  
 வர் தான்  கடவுள் என உலகின் பல மதங்கள் சொல்லுகின்றன . ஆனால்

 1370 கோடி ஆண்டுகளுக்கு முன்பிரம்மாண்ட அணுக்கள் ஒன்றுடன் ஒன்று மோதி வெடித்த  பிங் பேங்க் வெடிப்பு நடந்த அந்த வினாடியில் அல்லது அதற்கும் குறைவான நேரத்தில்  அதிவேகத்தில் எல்லா திசைகளிலும் சிதறிய அணுக்கள் தான்  நாம் இருக்கும் பூமி, நட்சத்திரங்கள், கோள்கள்  வெளி மண்டலம்  எல்லாம் நிலை கொண்டன என்கிறது விஞ்ஞானம். பிரபஞ்சம் இப்படி உருவானதாக  உலகளவில் விஞ்ஞானிகளினால் ஒப்புகொள்ள பட்ட ஒரு தியரி இது. இதன் படி .பிரபஞ்சம் சூரியன், சந்திரன், கடல், காற்று,  நீங்கள், நான்  நீங்கள் படித்துகொண்டிருக்கும்  இந்த கலகி உள்பட எல்லாமே  மூலத்துகள்களால் (Elementary Particles) ஆனது.
 பிரபஞ்சம் உருவாக அடிப்படையாக இருந்தவை 12 வகையான அணுத் துகள்கள். இதில் 11 அணுத்துகள்களை  ஒரு முக்கியமான அணு இணைக்கிறது அந்த ஒரு அணுத்துகளுடன் தொடர்பு கொண்ட பின்னரே மற்ற அணுக்களுக்கு மாஸ் (எடை அல்ல நிறை) கிடைக்கிறது அதனால் தான் பேரண்டம் உருவாகியிருக்கிறது என்கிறது விஞ்ஞானம். விஞ்ஞானிகளுக்கு புரியாத புதிராக இருந்த அந்த ஒரு அணுத்துகளுக்கு ஹிக்ஸ் போசான் என பெயரிட்டிருந்தார்கள். பெயருக்கு காரணம் இதை உலகுக்குச் சொன்ன விஞ்ஞானியின் பெயர் பீட்டர் ஹிக்ஸ். அவர் கையாண்ட கணக்கீட்டு முறையை கண்டுபிடித்தவர் இந்திய விஞ்ஞானி சத்யேந்திரநாத் போஸ். இவர் 1920களில் ஆல்பர்ட் ஈன்ஸ்டினுடன் பணியாற்றியவர். அணுத் துகள் ஆராய்ச்சியில் உலக புகழ் பெற்றவர்.   அவரது பெயரால்  அணுச்சிதறல்கள் போஸான்கள்.அழைக்கப்படுகின்றன.

 (இந்த் மாபெரும் மேதை இந்தியாவில் கவனிககபடாமலும் உலகம் மறந்து போனதற்கான காரணமும் அதிலிருக்கும் அரசியலும் தனிக்கதை)  
அப்படியானால் அந்த அணுத்துகள் தான் கடவுளா?  என்ற விவாதம் வலுத்துகொண்டிருந்ததினால் அதுகடவுள் அணுத் துகள்என்றே பாப்புலாரக அறியபட்டது. ஆனால் கடவுளுக்கும் இந்த அணுத் துகளுக்கும் எந்த வித  சமபந்தமும் இல்லை. ஹிக்ஸ் போஸான் பற்றி இயான் லெடெர்மென் எனற நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி 1993ல் ஒரு புத்தகம் எழுதினார்.  சனியன் பிடித்த அணு; இதுதான் பிரபஞ்சத்தின் விடை என்றால் கேள்வி என்ன? (The Goddamn Particle: If the Universe Is the Answer, What Is the Question?’) என்று ஒரு புத்தகம் எழுதினார்.பதிப்பகத்தின் பதிப்பாசிரியர் அதை God Particle என்று மாற்றிவிட்டதால் உலகம் அதை அப்படியே அழைத்தது.
 இந்த பேரண்டம் உருவாக காரணமான மற்ற அணுக்கூறுகளின்  எடை அளவை கணக்கில் கொண்டு மீதியிருக்கும் ஒரு மிகச்சிறிய பகுதியான (இம்மியளவு) மூலஅணுக்கூறான துகிள் ஹிக்ஸ் போசானின் எடை 125 கிகா எலொக்ட்ரோ வோல்ட்ஸ் எனபதை கணக்கிட்டுவிட்டார்கள். அந்த எடையை  பரிசோதனைகள் மூலம் நிருபித்துவிட்டால்   நமக்காக பிறந்த இந்த உலகம் எப்படி?  எவைகளினால் உருவாயிற்று என அறியமுடியும் என்று அதை தேடி அமெரிக்கா உட்பட பல நாடுகள் ஆராய்ச்சியில் இறங்கின. ஆனால், பல ஆயிரம் கோடி செலவழித்த நிலையில் ஹிக்ஸ் போசானை கண்டுபிடிக்க முடியாததால் ஆராய்ச்சியில் இருந்து அமெரிக்கா விலகியது.
கண்ணாலும், மைக்ராஸ்கோப்பிலும் பார்க்கவே முடியாத ஹிக்ஸ் போஸானை நிரூபிக்க ஒரே வழிதான் இருந்தது. அதன் சரியான எடையைக் கண்டுபிடிப்பது.  அதற்கு  அணுக்களை மோதவிட்டு  ஒரு பிரளயத்தை ஏற்படுத்தி பார்க்கவேண்டும், 20 நாடுகள் இணைந்து  உருவாக்கிய ஐரோப்பிய கூட்டமைப்பு சார்பில் பிரான்ஸ் சுவிட்சர்லாந்து எல்லையில் ஜெனீவா அருகே பூமிக்கு அடியில் 100மீட்டர் ஆழத்தில் 27 கிமீ பரப்பில். வட்ட வடிவ ஆய்வகம் அமைத்து செர்ன்(CERN)  7 விதமான ஆராய்ச்சிகளை செய்து கொண்டிருக்கிறது.  அதில் ஒன்றாக 10 மில்லியன் டாலர் செலவில் 17கிமீ நீள சுரங்கத்தில் விஞ்ஞானிகள் இரவு பகலாக செய்த ஆராய்ச்சியின் ஒரு கட்டம்தான் இந்த சிறிய செயற்கை   பிரளயம். 40 ட்ரில்லியன் (40 லட்சம் கோடி) புரோட்டான்களின் அதிபயங்கர வேகத்தில் மோதச்செய்து  வெடித்துச் சிதறிய அணுத் துணை துகள்கள், கதிர்வீச்சுகளுக்கு இடையே ஹிக்ஸ் போசானையும் (அதன் எடையை)  கண்டுபிடித்துவிட்டனர்.   . ஹிக்ஸ் போசனின் எடை  ஆராய்ச்சிகளில் கணக்கிட்டிருந்த்துபோலவே மிகச்சரியாக  125.3 கிகா எலெக்ட்ரோ வோல்ட்ஸ்  என்ற உண்மைதான் இன்று உலகை உலுக்கி  கொண்டிருக்கிறது.  பிரளயத்தினால் உலகம் அழியும் என்று நம்பும் உலகில்  ஒரு செயற்கைப் பிரளயத்தை உருவாக்கிப் பிரபஞ்ச ரகசியத்தை அறியும் மனித முயற்சியின் வெற்ரியாக் இப்போது  “கடவுளின் அணுத் துகள்“ கண்டுபிடிக்கப்பட்டுவிட்டது.

 இது ஏதோ ஒரே நாளில் நிகழந்த அற்புதம் போல்,  கிட்டதட்ட கடவுள் “  “கடவுளை கண்டுபிடித்துவிட்டார்கள்” “ (எப்போது காணமல் போனார்?) என்றெல்லாம் மீடியாக்கள் சாகஸம் செய்கின்றன. உண்மையில்  இது   பல ஆண்டுகளாக செய்யபட்டு வந்த  ஒரு ஆராய்ச்சியின் முடிவு. பின் ஏன் இவ்வளவு கலாட்டா என்கிறீர்களா ? அணுத்துகள் ஆராய்ச்சியில்  ஒரு துகளை பரிசோதனை ரீதியாக உருவாக்கி விட்டதாக அறிவிக்க ஐந்து சிக்மா துல்லியம் தேவை (ஐந்து சிக்மா என்பதன் பொருள் 99.999% சரியானது. எனபது. அதாவது லட்சத்தில் ஒரே ஒன்று மட்டும் பிழையாகலாம்). அந்த நிலையில் நடைபெற்ற பரிசோதனை இப்போது வெற்றியில் முடிந்திருகிறது. 3000௦௦௦க்கும் அதிகமான விஞ்ஞானிகளின் 25 வருட உழைப்பின் பலன் தான் இந்தக் கண்டுபிடிப்பு.இந்தியாவிலிருந்தும் டாடா இண்ஸ்ட்யூட் ஆஃப் ஃபண்டமென்டல் ரிசர்ச் (TIFR) உள்ளிட்ட ஆராய்ச்சிக்கூடங்களிலிருந்து பல விஞ்ஞானிகள் CERN ஆராய்ச்சியில் பங்கு கொண்டிருக்கிறார்கள்  நடராஜர் சிலை வைக்கபட்டிருக்கும் இந்த மையத்தின் செய்தி தொடர்பாளர் பாலோ ஜிபெலினோ இந்த ஆராய்ச்சி திட்டத்தின் வரலாற்று தந்தையாக இந்தியா விளங்கியது. இந்த சாதனையை அடைய இந்திய விஞ்ஞானிகளின் பங்கு மகத்தானதுஎன்று சொல்லியிருப்பதால் நாமும் காலரை தூக்கிவிட்டுகொள்ளலாம். “என் வாழ்நாளிலியே    நான் எழுதிய தியரி நிருபிக்க பட்டிருப்பது  நம்ப முடியாத ஆச்சரியம் என சொல்லும் 83 வயது பீட்டர் ஹிக்ஸ்க்கு  இந்த ஆண்டின் நோபல்பரிசு நிச்சியம்.  .  “கடவுளின் துகளை”“ கண்டுபிடித்த்தாக அறியப்படும் இவருக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது. 

 

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்கள்