11/11/11

11 11 11

 

             11 11 11

 

இந்த தேதியை ம்றுபடி எழுத இன்னும் 1000 ஆண்டுகள் ஆகும். வங்கிப்பணியில் இம்ம்மாதிரி  விநோத தேதிகளில் எதாவது   ஒரு முக்கிய   விஷயத்தை (கிளைதிறப்பு  ஒப்பந்தங்கள் முக்கியஅறிக்கைகள் வெளியிடுவது போன்றவற்றை) செய்வதை வழக்கமாக்கியிருந்தேன். ஒரு கட்டத்தில் இம்மாதிரி நாட்கள் நெருங்கும்போது என்ன செய்ய்ப்போகிறீர்கள் என நணப்ர்கள்  கேட்க துவங்கிவிட்டனர்.
கடந்த ஒருவருடமாக அசைபோட்டுக்கொண்டிருந்த  ஒரு எண்ணமான இந்த  Blog ஐ பதிவு செய்யும் எண்ணம் எழுந்த்து.    
பெயர் ? ....சுவடுகள்     ஏன்  “சுவடுகள்“?

 என் அனுபவச் சிதறல்கள், படித்தவைகள்,  பார்த்தவைகள் கேட்டவைகள்  சந்த்தித்தவைகள், பயணங்கள்  எழுதியவைகள் எல்லாமே என் மனதில் பதிந்த சுவடுகள். சில கடல் அலையருகின் மணலில் பதிந்தவை. சில ஈர சிமிண்ட்டில் பதிந்ததடங்களாக வாழ்ந்துகொண்டிருப்பவை. . அவைகளை, உங்களுடன் பகிர்ந்துகொள்ள, என்னை வசீகரித்த மனிதர்களைப்பற்றிசொல்ல, என் வாழ்வின் வேறு சில நினைவலைகளைப்பதியவும்  இந்த சுவடுகள் உதவும்.   என் எண்ணங்களுக்கு சங்கிலிப் போடாத  என் குடுமப்த்தினருக்கும், எனக்கு தமிழ அறிவித்த ஆசான்களுக்கும்  நன்றியுடன்  இன்று இதைத் துவங்கிறேன். 
படைப்பின்சந்தோஷத்திற்காகவும் படிக்கிறவர்களுக்காகவும்  எழுதுவதை  நிரந்தரமாக பாதுகாக்க இந்த தொழில் நுட்பம் கைகொடுபதும் ஒரு காரணம். சரி நமக்கு பின் இதை பாதுகாத்து பராமரித்து  எழுதப்போவது யார்?  என்ற் கேள்வி மனத்தில் எழுகிறது. சமீபத்த (dec 2011) அமெரிக்க பயணத்திலிருந்தபோது படித்த ஒரு செய்தி. சமயல் குறிப்புகளை வலைப்பூவில் எழுதி வந்த ஒருவரின் மரணத்திற்கு பின் அந்த வலைப்பூவை உரிமை கொண்டாடி அவரின் வாரிசுகள் கோர்ட்டில் நின்றனர். எழுதபட்டிருந்த உயிலில் எதுவும் சொல்லப்ப்டாதால் வழக்கு. பல நூற்றுகணக்கான கட்டுரைகளில்  ஒரே ஒரு கடுரையில்  என வாழநாளுக்கு பின் இதை என் மகள் தொடர்வாள் என் நம்புகிறேன் என்று சொன்னதை சுட்டி அந்த வலைப்பூ எனக்குதான் சொந்தம் எனறாள்  மகள். நான் இந்தியா திரும்பும்  வரை வழக்கின் தீர்ப்பு வரவில்லை.
இதனால் வருங்காலத்தில் வலைப்பூக்களூம் சொத்தாக மதிக்கபடபோவது புரிகிறது.   எனவே இந்த வலைப்பூவின் வாரிசாக எனது பெயர்த்தி பார்கவியை நியமிக்கிறேன். பேச துவங்கிய சில நாட்களிலேயே  மீரா பாட்டி சொல்லிக்கொடுத்த “அகர முதல“” குறளை மனனம் செய்து சொன்ன இந்தப்பெண் தமிழ் நன்கு படித்து மாலனைபோல் தமிழ்எழுத வேண்டும் என  இறைவனை வேண்டுகிறேன்.
பிறப்பின் சரித்திரம் போதுமே. சுவடுகளின் பதிவுகளை பார்த்துவிட்டு எனக்கு எழுதுங்களேன்.
அன்புடன்
Ramanan

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்கள்