6/8/12

கடலுக்கு அடியில் கொட்டி கிடக்கும் வெள்ளி கட்டிகள்


(கல்கி12/8/12)

ஆழ் கடலின் அடி மட்டத்தில் என்ன கிடைக்கும்? அரிய கடற் தாவரங்கள், மீன் வகைகள்,  சிப்பி சங்கு, முத்து போன்றவைகள் தானே. ஆனால் சமீபத்தில் கிடைத்திருப்பது  வெள்ளி கட்டிகள் அதுவும் அரசு முத்திரையிடப்பட்ட சுத்த வெள்ளி கட்டிகள். கடலின் கீழே மிக ஆழத்தில் கண்டெடுக்கபட்ட இதுவரை கிடைத்ததில் மிகப்பெரிய  மிக கனமான புதையாலாக வர்ணிக்கபடுகிறது இந்த கண்டுபிடிப்பு.
1941ல் கல்கத்தாதுறைமுகத்திலிருந்து இங்கிலாந்துக்கு இந்த  240  டன் வெள்ளிகட்டிகள் எஸ். எஸ் கரிஸோப்பா என்ற கப்பலில் அனுப்ப பட்டது.
   கர்நாடக மாநிலத்தின் அழகான ஜோக் ஃபால்ஸ்  நீர்வீழ்ச்சியின் பெயர் கிரிஸோப்பா. இந்தியாவில் நிறுவபட்ட ஒரு கம்பெனிக்கு சொந்தமான அந்த கப்பலுக்கு அதன் நினைவாக இந்த பெயர். வெள்ளியை தவிர டீ, இரும்பு போன்ர் மற்ற சரக்குகளுடன்  வேறு ஆறு சரக்கு கபபல்களுடன் ஒரே வரிசையில் சென்று கொண்டிருந்த அது போதுமான நிலக்கரியில்லாதால் மற்றவைகளின் வேகத்துக்கு ஈடுகொடுக்கமுடியாமல் பின் தங்கிவிட்டது. தனித்துவிடப்பட்ட கப்பல் நாஜிபடைகளினின் போர்கப்பல் ஒன்றின் டார்பிடோவால் தாக்க பட்டு மூழ்கிபோனது. 85 பணியாளர்களுடன் மூழ்கிய இந்த கப்பலில் வெள்ளிக்கட்டிகள் அனுப்ப பட்டது ராணுவ ரகசியமாகையால் அந்த விஷயம் வெளியிடப்படவில்லை. சர்வதேச கபபல் பயணங்களின் விபரங்களை பதிவுசெய்து வைக்கும் லாயிட்ஸ் நிருவனம் 90களில் வெளியிட்ட தகவலினால்  அயர்லாந்து கடல் பகுதியில் மூழ்கிபோன இந்த கப்பலை உலகம் அறிந்தது. அதை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்ட பிரிட்டிஷ் அரசு கண்டுபிடிக்கும் பணியை . தனியார் நிறுவனங்களுக்கு  அளிக்க முன்வந்தது.  முழ்கிய கப்பலை கண்டுபிடித்து வெள்ளிகட்டிகளை  எடுத்தால் 80% நிறுவனத்திற்கும் மீதி அரசுக்கும் எனபது ஒப்பந்தம். கப்பலை கண்டுபிடிக்கும் சர்வேமுயற்சியிலேயே சில கம்பெனிகள்  முயற்சியை கைவிட்டநிலையில் ஓடிஸி என்ற அமெரிக்க நிறுவனம் டெண்டரை ஏற்று  ஆழ்கடல் ஆராய்ச்சிகளில் பயன் படுத்தபடும் மிகவும் அதிநவீன தொழில் நுட்பத்துடன் களமிரங்கியது.
 ஒடிசி எக்ஸ்போளாரர் என்ற  தாய்கப்பலிலிருந்து கம்ப்யூட்டர்கள் மூலம் கட்டுபடுத்த கூடிய சிறு நீர் மூழ்கிகபல்ளையும் ரோபோக்களையும் பயன்படுத்தி அணுகி  வெற்றிகரமாக வெள்ளிகட்டிகளை எடுக்க ஆரம்பித்த விட்டார்கள்.
 முதல் முயற்சியில் கிட்டதட்ட  48 டன்(20%) எடையளவில் வெள்ளி கட்டிகளை  கொண்டுவந்துவிட்டார்கள்.
 70 ஆண்டுகள் ஜல வாசம் செய்திருக்கும் இந்த கட்டிகளில் படிந்திருக்கும் கடற்பாசியைதவிர வேறு பாதிப்புகள் எதுமில்லை.. எடுத்தவரை புதையலின் இன்றை மதிப்பு  38மில்லியன் அமெரிக்க டாலர்கள் (ஒரு மில்லியன் 10 லட்சம்) விரைவில் இதைப்போல் இன்னும் 4 பங்கு  வெளியே வரும்.  இதில் தங்கள் சொந்த செலவில் இந்த முயற்சியை மேற்கொண்ட  ஓடிசி கம்பெனிக்கு 80% கிடைக்கும். 
 மீதி பிரிட்டிஷ் அரசுக்கு. இந்தியாவிலிருந்து போனதுதானே நமக்கு? அதெல்லாம் ஒன்றும் கிடையாதாம். அரசாங்க சொத்தான அது அன்றைய அரசுக்குதானாம். 
  ரோபோக்களை ஈடுபடுத்தியிருக்குமம்  இந்த முயற்சி ஆழ் கடல் ஆராய்ச்சியில்  ஒரு முக்கிய திருப்புமுனை, மூழ்கிபோன கபபல்களை மீட்க மட்டுமில்லை பல ஆராய்சிகளுக்கும் உதவும். என்கிறார்கள் வல்லுனர்கள்.
 ஓடிசியின் அடுத்த முயற்சி 1995ல் கண்டுபிடிக்க பட்ட கடலடியில் கிடக்கும் ஒரு நீர் முழ்கிகப்பல்.  ஏன் அந்த கப்பல்? அதில் 2 டன் தங்கம் இருக்கிறது.

2 கருத்துகள் :

 1. Interesting !! like wise a lot of things can be explored / being explored.
  but very few news being let know to public !!
  keep writing.. :)

  பதிலளிநீக்கு
 2. very nicely brought out. Such information are nor known to many ( that includes me). Continue the journey of bringing such valuable information in your own style. Bringing out such information in Tamil is appreciated. with best wishes


  NS

  பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்கள்