19/8/12


அந்த 7 நிமிடங்கள்..

23/08/12 புதிய தலைமுறை இதழில் எழுதியது


அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் லாஸேஏஞ்சல்நகருக்கு அருகிலிருக்கும்  பாஸடினா(Pasadena) பகுதியிலிருக்கிறது நாஸா (NASA)வின்  செவாய் கிரக ஆராய்ச்சி நிலையம். பூமியிலிருந்து பூமியிலிருந்து 57 கோடி கீமீ தொலைவிலிருக்கும் செவ்வாய் கிரகத்தில் உயிரினம் வாழ தேவையான ஆக்ஸிஜன்.தண்ணீர் இருக்கிறதா என்பதை அறிவதற்கான மிகப்பெரிய கனவு திட்டத்துடன் இயங்குகிறது இது. 14000க்கு மேற்பட்டவர்கள் பணியாற்றும் இந்த கூடத்தில் பல இந்தியர்கள் பணியிலிருக்கின்றனர்.. கடந்த 7 ஆண்டுகள் இதற்காக தொடர்ந்து முயற்சிகள், பரிசோதனைகள் செய்யபட்டுவந்தன, முதல் கட்டமாக செவ்வாய் கிரகத்தின் அருகில்  சென்று சுற்றி வந்து தகவல்கள் பெற  விண்வெளிகலங்கள் அனுப்பட்டன. அதன் மூலம் கிடைத்த அடிப்படை தகவல்களின் அடிப்படையில் நேரிடியாக செவ்வாய் கிரகத்தில் ஒரு விண்கலத்தை இறக்கி சோதனைகள் செய்ய முடிவு செய்து அதற்காகவே உருவாக்கபட்டது “கியூரியாஸிட்டி”“ எனற விண்கலம்.   மேற்கூறையில்லாத காரைப்போல் ஒருடன் எடையில் அமைக்கபட்டிருக்கும் இது அதி நவீன வசதிகள் கொண்ட ஒரு குட்டி  நடமாடும் லாபரட்டிரி. செய்வாயின் நில பரப்பில் கிடைக்கும் சாம்பிள்களை அதன் உள்ளேயே சோதனையிட்டு முடிவுகளை பூமியிலுள்ள மிஷின் கண்ட்ரோலுக்கு  உடனுக்கு உடன் அனுப்பும் வசதிகளை கொண்டது. 13 கேமிராக்களுடன் 6 சக்கரங்களுடன் இருக்கும் இது தரையிலிருக்கும் கட்டுபாட்டில் இயங்கும்.  8000 விஞ்ஞானிகள், பொறியாளார்களின் 7 ஆண்டு கடின உழைப்பில் உருவான இதற்கான செலவு 13000கோடி ரூபாய்கள். 2009ம் ஆண்டு இதில் ஒரு சின்ன சிப்பில் (சிம்கார்டுபோன்றது)  விரும்புகிறவர்கள் பெயர்களை அனுப்பினால் பதிவு செய்து அனுப்ப போகிறோம் என்ற இவர்களது அறிவிப்புக்கு வந்தகுவிந்த பெயர்கள் ஒரு கோடிக்கும் மேல்.   செவ்வாய்கிரகம்  சந்திரனைவிட மிக தொலைவிலிருப்பதால் அந்த நீண்ட பயணத்தை தாங்கதேவையான பல வசதிகளுடன் அமைக்கபட்டிருந்த இது கடந்த ஆண்டு இறுதியில் விண்ணில் செலுத்தபட்டது. அதன் 8 மாத பயணத்தை மிக கவனமாக தினசரி கண்காணித்துவந்தனர் கண்ட்ரோல் ரூமிலிருந்த ஸ்பெஷலிஸ்ட்கள். மிக கடுமையாக உழைக்கும் இவர்கள் மீடியாவை கவனமாக தவிர்ப்பவர்கள். பயணம் திட்டமிட்டபடி போய்கொண்டிருப்பதில் சந்தோஷமாகயிருந்தாலும்  அதன்  கடைசி கிளைமாக்ஸான   ஆகஸ்ட் 5 தேதிக்காக காத்திருந்தார்கள். அன்று செவ்வாய் கிரகத்தில் இறங்கி விடும் என்பது கணிக்கபட்டிருந்தாலும், காலையிலிருந்தே அனைவருக்கும் பரபரப்பு.. ஆகஸ்ட் 5 என அச்சிடபட்டிருந்த நீலவண்ண டி ஷர்ட் அணிந்தவர்கள் நிரம்பியிருந்த அந்த அறை   டென்ஷனலில் உறைந்திருந்தது. கியூரியாஸிட்டி செவாய்கிரகத்தை மெல்ல நெருங்கியதை ஸ்கிரினில் பார்த்த்தும்  கைதட்டியவர்களை மிஷின் டைரக்டர் கையை உயர்த்தி அமைதிபடுத்தினார்.   அடுத்து சில நிமிடங்களில்  41 அடி விட்ட பெரிய பாரச்சூட் மெல்ல விரிய அதிலிருக்கும் கியூராஸிட்டி  மிதந்து செவ்வாயின் மண்ணை  தொட்டதும். அந்த அறை சந்தோஷத்தின் உச்சத்தில் அதிர்ந்தது. வாழ்த்துக்கள்  அணைப்புகள் முத்தங்கள் என ஒரே ஆரவாரம். இந்த  இறுதிதரையிரங்கல்தான் திட்டத்தின் முக்கிய கட்டம். ஈர்ப்பு சகதி இல்லாத நிலையில் அது கடினமான ஒரு பாறையில் மோதி நொறுங்கிவிட்டால் இத்தனைபேருடைய கடின உழைப்பும் வினாடியில் விணாகிவிடும் தரையில் உட்கார வைத்திருக்கிறார்கள்.   திட்டமிட்டபடி வெற்றிகரமாக  கலம் தரையிறங்கியதை திரையில் பார்த்ததும் நீர் நிறைந்த கண்களுடன்   “  ” “இப்போது நிம்மதியாகயிருக்கிறது. அந்த கடைசி 7 நிமிடங்கள் பயங்கரமானது’’”  வாழ்க்கை முழுவதும் மறக்க முடியாதது. “  என்று சொன்னவர் இந்த தரையிறங்கலை மிக கவனமாக  திட்டமிட்டு தந்த வல்லுனர் குர்கிர்பால்சிங்.(Dr.Gurkirpal Singh)   இவர் ஒரு இந்தியர், என்பதை அறிந்து  நாசாவின் உதவியுடன்  உடனடியாக புதிய தலைமுறைக்காக போனில்  தொடர்பு கொண்ட   பேசிய போது...


.  

இந்த வரலாற்று சாதனை வெற்றியில் உஙகள் பணியும் முக்கியமானது என்று அறிகிறோம். மகிழ்ச்சி, வாழ்த்துக்கள்.  உங்களது பூர்வீகம்,  இளமைக்கால  இந்திய வாழ்க்கை பற்றி சொல்லுங்கள்.
 லூதியானவில் பிறந்தவன் நான். 1976லில் நான் பள்ளி இறுதியாண்டிலிருந்தபோது முதன் முதலில் நாசா செவ்வாய் கிரக ஆராய்ச்சி  பணிகளை துவக்கியிருந்தது.வைகிங் என்ற குட்டி விண்கலம் ஏவப்பட்டிருந்தது. அந்த செய்திகளால் பிரமித்துபோயிருந்தேன். தொடர்ந்து படித்த, சேகரித்த தவல்களால் ஆர்வம் அதிகரித்து ஏரோநாட்டிகல் என்ஞ்னியராகி எதிர்காலத்தில் நாசாவில் வேலைக்கு சேர்ந்து செவ்வாய்க்கு போக ஒரு விண்வெளிகலம் டிஸைன் செய்ய வேண்டும் என கனவு காண ஆரம்பித்துவிட்டேன். விரும்பியபடி  சண்டிகர் என்ஞ்னியரிங்கல்லூர்யில் ஏரோநாட்டிக்கில் சீட் கிடைத்தது என் அதிர்ஷ்டம். தொடர்ந்து அமெரிக்காவில் மிக்சிகன் பல்கலைகழகத்தில் 1984லில் எம்.எஸும், 1988ல் பிஹெச்டியும் முடித்தேன். என் வாழ்க்கைகனவான நாசாவில் 1989ல் பணிசெய்யும் வாய்ப்பும் கிடைத்தது. கடந்த 23 ஆண்டுகளாக தொடர்ந்து அங்கே பணியிலிருக்கிறேன்.
எந்த மாதிரியானது உங்கள் பணி.?
கலிபோர்னிய மாநிலத்தில் பஸாடினா எனற இடத்தில் செவ்வாய் கிரக் ஆராய்ச்சிகளுக்கென்றே  நாசாவால் துவக்கபட்டது மார்ஸ் சைன்ஸ் லேபரட்டரி (NASA’s Mars Science Laboratory MSL)  அதன் ஒரு அங்கம் நான் பணி செய்யும் ஜெட் ப்ரொப்புல்ஷன் லேபரட்டரி   (Jet Propulsion Laboratory ) ஒரு விண்கலத்தை செலுத்தி அதை அதன் பாதையில் போக செய்ய  கம்ப்யூட்டர்களுகு கட்டளைகளைத் தயாரித்து டிசைன் செய்வது தான் எங்கள் அணியின்முக்கியபணிகலீலியோ,மார்ஸ் பாத்பைண்டர்  காஸினி போன்ற பல பிராஜகெட்களில்  தொடர்ந்து பணியாற்றி இப்போது நாசா நிறுவனத்தின் முதன்மை விஞ்ஞானிகளில் ஒருவராக இருக்கிறேன். என் மாணவ பருவ கனவை நனவாக்கும் வாய்ப்பு  இந்த கியூரிஸிட்டி பிராஜக்கெட்டில்  கிடைத்திருப்பதால்  இதில் பணியாற்றிகொண்டிருப்பதை எனக்கு கிடைத்தை மிகப்பெரிய  அதிர்ஷ்ட்மாகவே கருதுகிறேன்.
கியூரிஸிட்டி பிராஜக்கெட்டில்   உங்கள் பஙக்ளிப்பு என்ன எனபதை சுருக்கமாக சொல்ல முடியமா?
ஆகஸ்ட் 5 அது செவாய்யில் தரையிறங்கியதை உலகமே பார்த்தது. மிக சவாலான அந்த விஷ்யத்தை மட்டும்  6 ஆண்டு உழைப்பில் டிசைன் செய்தோம்.  E D L (ENTRY – DESENT- LANDING )  என்று அழைக்கபட்ட இந்த முறையில் தான் கலம் செவ்வாயில் இறங்கியது. இதுவரை முயற்சிக்காத புதிய முறையில் ஒரு பாராசூட்டை பயன்படுத்தி  மிக வேகமாக இறங்கும் கியூரியாஸிட்டி கலத்தின் வேகத்தை கட்டுபடுத்தி அதன் கடைசிகட்டதில் பாராசூட்டிலிருக்கும் ஒரு கிரேன் மூலம்  கலத்தை இறக்கும் முயற்சி அது. இதில் முக முக்கிய சவால்  செவ்வாய் கிரகத்தின் மேல்  ஒரு மைல் உயரத்தில் மணிக்கு 180 மையில் வேகத்தில் இறங்கிகொண்டிருக்கும் விண்கலத்தின் வேகத்தை மணிக்கு 1.7 கீமி வேகத்திற்கு குறைக்க வேண்டும். அதற்கு பாரசூட்டிலிருக்கும் ஒரு குட்டி ராக்கெட்டின் வேகத்தை எதிர்ப்பு விசையில் கட்டுபடுத்தபட வேண்டும். இவை அனைத்தும்  7 நிமிடங்களுக்குள் நடைபெறவேண்டும்.(இதுதான் அந்த 7 நிமிடம்)   எங்களது ஜெ‌பி‌எல் லேப்  தயாரித்து  பல முறை பரிசோதித்துபார்த்த  டிசைனைதான் நாசாவின் மார்ஸ் ஸைன்ஸ் லேபரட்டரி பயன்  இறுதிகட்டத்தில் பயன் படுத்தியிருக்கிறது.
இந்திய விண்வெளிபயண திட்டங்களில் செவாய்க்கு கலம் அனுப்பும் திட்டம் பற்றி அறிந்திருப்பீர்கள்.  அதில் நீங்கள்  பணியாற்றும் வாய்ப்பு உண்டா?
இத்தனை ஆண்டுகள் அமெரிக்காவில் வாழ்ந்தாலும் வேர்கள் இந்தியாவிலிருப்பதை மறக்க முடியாது. என் நெருங்கிய சொந்த்தங்கள் டெல்லியிலும் சண்டிகரிலும் வாழ்கிறார்கள். வாய்ப்புகிடைக்கும் போதெல்லாம் இந்தியா வருகிறேன். இந்திய விண்வெளி திட்டம் நாசாவுடன் இணைந்த திட்டமாகயிருந்தால் ஒரு வாய்ப்பு கிட்டலாம். கிடைத்தால் மிகுந்த மகிழச்சியுடன் செய்வேன்.
ரமணன்

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்கள்