19/9/12


ரகசிய புனிதபயணம்

இலங்கையின் கொழும்பு நகரிலிருந்து 10கீமீ தொலைவிலிருக்கிறது  “கெள்ண்ய விஹாரய” என்ற புத்த மடலாயம். இந்த கோவிலில்   கடந்த மாதத்தில் காட்சிக்கு வைக்கபட்டிருந்தை  சுட்டெரிக்கும் வெய்யிலை பொருட்படுத்தாது பல மணி நேரம் நீண்ட கியூவில் காத்திருந்து ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பக்தியுடன் தரிசித்தார்கள். இங்கு மட்டுமில்லை அனுராதபுரம் உள்பட 7 நகரகங்களிலும் இதேபோல்  மக்கள் வெள்ளம்.காத்திருந்து  அதை தரிசித்தது.
அது புத்தர் பெருமானின் உடலின் நான்கு எலும்புகள்.  இளவரசராக புத்தர் வளர்ந்து ஞானம் பெற்று வாழ்ந்து உலகுக்கு நெறிபோதனைகளை வழங்கிய கபிலவாஸ்த்து நகரில் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களால் கண்டெடுக்கபட்டவைகள் இவை.  இவைகளும்,இவைகளோடு அகழ்ந்தெடுக்கபட்ட மற்ற சிலபொருட்களும்  டில்லியிலுள்ள தேசிய 
அருங்காட்சியகத்தில்  காட்சியில் வைக்கபட்டிருக்கிறது. புத்தர் ஞானம் பெற்ற 2600 ஆண்டுவிழாவை கொண்டும் இந்த ஆண்டில் இதை இலங்கை மக்களின் பார்வைக்கு வைக்க விரும்பினார் அதிபர் ராஜபக்‌ஷே. 2010ஆம் ஆண்டு இந்தியா வந்தபோது அவர் விடுத்தவேண்டுகோளை இந்திய பிரதமர் ஏற்று கொண்டார். விசேஷ பாதுகாப்பு ஏற்பாடுகளுடன்  இந்திய விமானப்படையின் விமானத்தில் பயணம் செய்த இதை ஒரு நாட்டு
 தலைவருக்கு அளிக்கபடும் ராணுவ மரியாதையுடன் விமான நிலையத்தில் வரவேற்று, செருப்பு அணியாத கால்களுடன் வந்து பயபக்தியுடன் பெற்றுகொண்டவர் அதிபர் ராஜபக்‌ஷே.  அந்த எலும்புகள் அடங்கிய கலசத்துடன் பயணம் செய்து அதை எடுத்துசென்றவர் நமது மத்திய அரசின்கலாசார துறை அமைச்சர் குமாரி செல்ஜா. அவரையும் அவருடன் சென்ற குழுவையும் டெல்லி விமானநிலயத்தில் புத்தபிட்சுக்கள் ஜெபித்து கலசத்தை ஆராதித்து வழியனுப்பினர்,

இந்த புனித பயணத்தில் அரசியலும் இருக்கிறது. தமிழனத்தை அழித்த இலங்கையின் அதிபரின் வேண்டுகோளை ஏற்பது இலங்கை தமிழர்களுக்கு இந்திய அரசு செய்யும் மன்னிக்க முடியாத நம்பிக்கைத் துரோகம் என பிரமருக்கு கடிதம் எழுதியிருந்தார்.  ஆனால் கோரிக்கை ஏற்கபட்டு கலசம் அனுப்பட்ட விஷயம் அது இலங்கை போய் சேர்ந்தபின்னர் தான் தெரிய வந்தது,  தமிழகத்தின் மற்ற கட்சிகள், மீடியாக்கள் இதைப்பற்றி எதுவும் பேசாதது ஆச்சரியம். இந்த கலசம் இலங்கைக்கு பயணிப்பது இது முதல் முறை இல்லை. 1978ல் இது போன்ற ஒரு பயணத்தில் இலங்கையில் இதை 10 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் தரிசித்திருக்கிறார்கள். அப்போது சென்னை வழியாக கொண்டு செல்லபட்ட இது எழும்பூர் அருங்காட்சியகத்தில் மக்கள் பார்வைக்கு வைக்கபட்டிருக்கிறது. இம்முறை சென்னையைத் தொடாமல் கல்கத்தா வழியாக அனுப்பட்டிருக்கிறது. இலங்கை மட்டுமில்லாமல்1990 களில் மங்கோலியா, கொரியா சிங்கபூர் தாய்லாந்து நாடுகளிலும் பவனி வந்திருக்கும் இந்த கலசங்களை பாதுகாப்பு காரணங்களுக்காக இனி வெளிநாடுகளுக்கு காட்சிகளுக்கு அனுப்ப வேண்டாம் என அரசு 1997ல் முடிவெடுத்து தேசிய அருங்காட்சியகத்தில் நிரந்தர காட்சியக்கபட்டது. இப்போதுபிரதமரின் விசேஷ அனுமதியில் இலங்கைக்கு பயணித்திருக்கிறது,

.உள்நாட்டின் அரசியலை தவிர இதில் பேசப்படும் மற்றொரு பிரச்சனை அண்டை நாடான நேப்பாளம் எழுப்பிகொண்டிருப்பது. முதன் முதலில் 19ம்நூற்றாண்டில் புத்தரின் வாழ்க்கை பதிவுகளை ஆராயத் துவங்கிய ஆங்கிலேய ஆட்சியின் தொல்பொருள் துறையினர்  கிழக்கு உத்திர பிரதேச மாநிலத்தில் நேபாள நாட்டின் எல்லை அருகேஇருக்கும் ஒரு கிராமத்தில் ஒரு நீண்ட கல் பேழையின் உள்ளே ஐந்து கலசங்களில் சில எலும்புகளை கண்டெடுத்தனர். நீண்ட ஆராய்ச்சிக்கு பின்னர் அந்த இடம்தான் புத்தர் வாழ்ந்த கபில வாஸ்த்து இவைகள் புத்தர்காலத்தவை எனறு அறிவித்தனர், ஆனால் நேப்பாள நாட்டினர் புத்தர் வாழ்ந்த கபிலவாஸ்த்து அவர்கள் நாட்டிலுள்ள ஒரு இடம். அதனால் இது புத்தருடையது இருக்க முடியாது என்று சொன்னார்கள்.  நாட்டின் சுதந்திரத்திற்கு பின்னரும் சர்ச்சை தொடர்ந்து கொண்டிருந்தது. மீண்டும் 1971 ஆம் ஆண்டு அந்த இடத்தில்  பல அடிகள் ஆழம் தோண்டி அகழ்வார்ய்ச்சியை தொடந்த ஸ்ரீவஸ்த்தவா என்ற இந்திய தொல்பொருள் துறை ஆராய்ச்சியாளர் கண்டெடுத்தது  இரண்டு அழகான  வழவழப்பான கற்களில் வடிக்கபட்ட கல்ஜாடிகள் அவற்றில் ஒன்றில்10ம் மற்றொன்றில் 12 மாக 22 எலும்புகள், அவற்றோடு எழுதி சுடப்பட்ட சிறு மண்பலகைகள்.ஆண்டுகளும் எழுத்துகளும் பொறிக்கபட்ட வேறுபல பொருட்களிலிருந்தும் அவர்  இவைகள் புத்தருடையது எனபதை கண்டுபிடித்து விபரஙகளை ஒரு நீண்ட  அறிக்கையாக்கியிருக்கிறார். என்ன காரணமோ தெரியவில்லை இந்த கண்டுபிடிப்புஅறிக்கை 20 ஆண்டுகள்  அரசால் வெளியிடப்படவில்லை. அது வெளியான பின்னர் நேபாள அரசு அதை ஏற்க  இன்று வரை மறுத்து வருகிறது.  இதனால் நேபாளத்தில் உள்ள லும்பினி என்ற இடம் புத்தர் பிறந்த இடம் என்பதை யூனஸ்கோ ஏற்று உலக கலாசார, பாரம்பரிய சின்னங்களின் பட்டியலில் அறிவித்தது போல இந்தியாவிலுள்ள  கபிலவாஸ்த்துவை அறிவிக்க தயக்கம் காட்டுகிறது
நேப்பாளஅரசின் மறுப்பைவிட ,யூனஸ்கோவின் அங்கீகாரத்தைவிட, அரசியல்வாதிகளின் ஆர்பாட்ங்களைவிட மக்களின் நம்பிக்கை வலிமையானது..,


1 கருத்து :

உங்கள் கருத்துக்கள்