ஆழம் கிழக்கு பதிப்பகத்திலிருந்து வெளிவரும் கடந்த 8 மாதங்களாக வரும் மாதபத்திரிகை. சீரியஸான விஷயங்களை மட்டும் பேசும் இதில் கடந்த மாதத்தில் எழுதிய கட்டுரை இது.
சஹாராவின் சாதனை
இது வரை எந்த இந்திய வியாபார நிறுவனமும் இப்படிப்பட்ட நெருக்கடியை இதுவரை சந்தித்ததில்லை. எந்த நிறுவனத்துக்கு எதிராகவும் இப்படிப்பட்ட அதிரடி தீர்ப்பை உச்ச நீதிமன்றம் இதுவரை வழங்கியதுமில்லை. வர்த்தக உலகம் மிகவும் உன்னிப்பாக கவனித்து வந்த இந்த வழக்கின் முடிவில் அருமையான தீர்ப்பு எழுதப்பட்டிருக்கிறது. சிறு முதலீட்டாளர்களுக்கு இதன் மூலம் நல்ல பாதுகாப்பு கிடைக்கும்.இந்திய நிதி, சட்டம் மற்றும் நீதித்துறைகளின் வரலாற்றில் புதிய அத்தியாயம் எழுதப்பட்டுள்ளது
தீர்ப்பால் பாதிக்கப்பட்ட நிறுவனம் சஹாரா குரூப். 90 நாட்களில் 24 ஆயிரம் கோடியை முதலீட்டாளர்களுக்கு வட்டியுடன் திருப்பித் தர வேண்டும் என்பதுதான் அந்த அதிரடி தீர்ப்பு. ஆடிப் போயிருக்கிறது சஹாரா குரூப். அதிக லாபம் கிடைக்கும் என்று ஆசைகாட்டி கிராம மக்களிடம் வசூல் செய்த பணத்தையெல்லாம் வட்டியுடன் திருப்பிக் கொடுக்க சகாரா ரியல் எஸ்டேட், சகாரா ஹவுசிங் இன்வெஸ்ட்மென்ட் ஆகிய இரண்டும் திருப்பி கொடுக்க வேண்டிய தொகை இருபத்து நாலாயிரம் கோடி + 15 சதவீத வட்டியுடன்
தரவேண்டிய நிர்ப்பந்தம் இந்தியாவின் மிகப்பெரிய குழும நிறுவனமான சஹாராவின் இரு கம்பெனிகளுக்கு ஏற்பட்டுள்ளது..
ஏன் இப்படி
ஒரு தீர்ப்பு? எனபது பற்றிய விபரங்களை தெரிந்துகொள்ளும் முன்னால் சஹாரா குழுமத்தை பற்றியும்
அவர்கள் செயல்படும் முறையை பற்றியும் புரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது. சஹரா இந்தியா பரிவார் என விளமபரபடுத்திக்கொள்ளும் இந்த குழுமம் கடந்த 20
ஆண்டுகளில் தொடாத துறை எதுவும் இல்லை. மின்சாரம் முதல் மீடியாவரை பல துறைகளில் கால்
பதித்திருக்கும் இவர்கள் இந்திய கிரிகெட், ஹாக்கி விளையாட்டுகளின் பிரதான ஸ்பான்ஸ்ர்கள்.
இந்திய கார்பெரேட் பாஷையில் குழுமம் (GROUP) என்றால் பிரதானமாக இருக்கும் ஒரு லிமிடட்
கம்பெனியின் முதலீடுகளோ அல்லது அதன் இயக்குநர்கள்
பங்குபெற்றிருக்கும் மற்ற துறைகளில் ஈடுபட்டிருக்கும் பிற கம்பெனிகளின் கூட்டமைப்பு
என்று பொருள். ஆனால் சஹாரா பரிவார் குழுமம் என அவர்கள் அழைத்துகொள்வதில் பார்ட்டனர்ஷிப், ப்ரொப்பரைட்டர்ஷிப், தனிநபர்களின்
கூட்டமைப்பு டிரஸ்ட் எல்லாம் சேர்ந்து இருக்கிறது..பரிவார்
என்ற சொல்லுக்கு குடும்பம் என பொருள்.எங்களூடையது இந்தியாவின் மிகப்பெரிய குடும்பம்
என்ற அவர்களின் விளம்பரங்களில் ‘குருப்” என்ற சொல்லை பயன்படுத்துவதால் பொதுமக்களிடம்
இது மிகபெரிய பளிக் லிமிடெட் நிறுவங்களின்
கூட்டமைப்பு என்ற தோற்றத்தை உருவாக்கி யிருந்தனர். இந்திய கம்பெனி சட்டபடி பதிவு செய்யபட்ட பப்ளிக் லிமிடெட் கம்பெனிகள் ஆண்டுதோறும் தங்கள்
பாலன்ஸ் ஷிட்டை வெளியிட்டு அதை ரிஜிஸ்டிரார் ஆப் கம்பெனியில் பதிவு செய்ய வேண்டும்.
இதை விரும்புவர்கள் எவரும் பார்வையிடலாம்.
ஆனால் நேரிடியாக பொதுமக்களிடம் பங்குகளை விற்காமல் ஒருசில முதலீட்டாளர்களே கம்பெனியின் எல்லா பங்குகளை
வாங்கியிருந்தால் அது பிரைவேட் ”பிளேஸ்மெண்ட்ட்” என்ற வகையான முதலீட்டில் பப்ளிக் லிமிட்டெட்
கம்பெனியாகிவிடும். இவைகள் கம்பெனிகள் சட்டபடி பப்ளிக் லிமிட்டட் கம்பெனியாக அறியபட்டாலும்
அதன் கணக்குகளை கம்பெனி ரிஜிஸ்ட்ராரிடம் ஆண்டுதோறும்
சம்ரபிக்க வேண்டிய அவசியமில்லை என்ற விலக்கைப் பெற்றவை. இந்த விதியை (ஓட்டையை?) செம்மையாக பயன்படுத்திகொண்டது
ஸஹாரா. அவர்களுடைய குழுமத்தின் கம்பெனிகளில் பல இந்த வகை கம்பெனிகள் தான்., அதனால் எந்த நிறுவனத்தின் கணக்குகள், வருடந்திர
பாலன்ஸ்ஷிட்கள் எதுவும் பொது மக்கள் அறியமுடியாத ரகசியமாக்கபட்டது. ஸஹாரா என்ற பெயருக்கு வங்காள மொழியில் “அறியபடாதது”
(unknown) என்று பொருள். ஸஹாராவின் மூதலீடுகள்,
அதன் பின்னால் இருப்பவர்கள் எல்லாமே “ஸ்ஹாரா” தான். இதன் அதிபராக அறியப்படும் சுப்ரதோர
ராயின் செல்வாக்கு மிக அபரிமிதமானது. வளர்ச்சி பிரமிக்கதக்கது. ஸகாரா குடும்பத்தின் “மேனஜிங் ஓர்க்கர்” என தன்னை அழைத்துகொள்ளும் இவர்
30 ஆண்டுகளுக்கு முன் ஒரு லாம்ரட்ரா ஸ்கூட்டரில்
உ.பி கிராமஙகளில் சுற்றி சுற்றி சிட்பண்ட்க்காக பணம் வசூலித்தவர், தொடர்ந்து ரியல் எஸ்டேட் ப்ரோக்கராக உயர்ந்தவர்
இன்று இன்று அமெரிக்காவிலும்
ஐரோப்பாவிலும் மாபெரும் ஓட்டல்களை வாங்கிப் போடும் அளவுக்கு வளர்ந்திருக்கிறார். சகாரா குரூப் இன்று இந்தியாவின் மிகப்பெரிய ரியல் எஸ்டேட் நிறுவனங்களில் ஒன்று. மும்பை அருகே புனேயில் இந்த குரூப் அமைத்து வரும் ஆம்பி வேலி சிட்டி என்ற திட்டத்தின் மதிப்பு மட்டுமே 40 ஆயிரம் கோடிக்கு மேல். இதுபோல் நாடு முழுவதும் 64 நகரங்களில் 4,378 ஏக்கர் பரப்பளவில் பல்வேறு ரியல் எஸ்டேட் திட்டங்களை நிறைவேற்றி வருகிறது. ஸஹாராவின்
மொத்த சொத்துமதிப்பு 10,000 கோடிகளுக்கு மேல் என்று இந்தியா டுடே பேட்டியில்
சுப்ரதோரா ராய் சொல்லியிருக்கிறார். ஆனால் ஓவ்வொரு புதுதிட்தத்திற்கும் எப்படி
இவ்வளவு பணம் கொட்டுகிறது என்பது புரியாத புதிர்.
இந்திய தொழிற்துறையில் மிக சாதாரண நிலையில் துவங்கி சிகரங்களை
தொட்டவர்கள் இருக்கிறார்கள். ஆனால் அவர்களுடன் ஒரு நிறுவனத்தின் வளர்ச்சி, பங்குதாரர்களின்
வளர்ச்சி, வெளிப்படையான நிதிநிலை ஆண்ட அறிக்கை
போன்றவை எல்லாம் இருக்கும்.
ஸகாரவின் விஷயத்தில் இவை எதுவுமே கிடையாது. அடிக்கடி தேசத்தின் அத்தனை பேப்பர்களிலும்
ஆர்பாட்டமான புதிய திட்டங்களின் முழுபக்க
விளம்பரங்கள் வரும் இவரின் செல்வாக்குக்கு
ஒரு உதாரணம் 2004ஆம் ஆண்டு நடந்த இவருடைய
மகன்களின் திருமணம். உலகின் ஆடம்பர திருமணங்களின் வரிசையில் இன்று வரை முதலிடத்திலிருக்கிறது.
128 மில்லியன் டாலர்(1 மில்லியன் = 10 லட்சம்)செலவில் நடந்த அந்த
திருமணத்தில் அத்துனை மாநில
முதல்வர்களும், மத்திய அமைச்சர்களும் அன்றைய பிரதமர் வாஜ்பய்யும் பங்கு பெற்றிருந்தனர்.
இந்தியாவின் மிக சக்தி வாய்ந்த முதல் 10 மனிதர்களில் ஒருவராக இடம் பெற்றவர் சுப்ர்தோரா ராய். இவர் நிறுவனத்தினர் தங்கள்
வெற்றிக்காக சாம, தான் பேத, தண்டத்தில் இறங்கி சாதிப்பவர்கள். திரு ஆப்பிரஹாம்
செபியின் மூத்த உறுப்பினர். நேர்மையான அதிகாரி. கடந்த ஆண்டு இவர்கள் குழுமத்தின் மீது அவர் அறிக்கை கொடுத்த
போது, பிரதமருக்கு தனக்கும் தனது
அதிகாரிக்கும் நிதித்துறையின் வருமான அதிகாரிகள் தேவையில்லாமல் தனக்கு ஒரு
நோட்டிஸ் அனுப்பி பிரச்சனை செய்வதை ரகசிய கடிதமாக எழுதியிருக்கிறார். வழக்கமாக
ஒய்வு பெறும் ஒராண்டுக்குமுன் நியமிக்கபடும் அந்த பதவியிலிருப்பவர்களுக்கு பதவி
நீடிப்பு தரப்படும். ஆனால் அவருக்கு வழங்கபடவில்லை. அந்த அளவிற்கு சர்வ வல்லமை வாய்ந்த குழுமம் இது.
இப்போது
என்ன பிரச்சனை?
இந்தியாவில் பொதுமக்கள் வங்கிகள், மீயூட்சுவல் பண்ட்,
போன்றவற்றில் சேமிப்பது போலவே NBFC எனப்படும் வங்கியல்லாத நிதி நிறுவனங்களின்
மூலமும் சேமிக்கலாம். இவைகள் வங்கிகளைவிட அதிக வட்டி தரும். இத்தைகைய முதலீடுகளைப்பெற்ற
இந்த NBFC க்கள் அவற்றை அதிக லாபம் தரும் நிறுவங்களில் முதலீடு செய்து
சம்பாதிக்கும். இது அரசால் அனுமதிக்க பட்ட ஒன்று. NBFC துவக்க மத்திய அரசின்
கம்பெனித்துறையின் அனுமதி மட்டும் போதும். ஆனால் கம்பெனிகளில் முதலீட்டை
கண்காணிக்கும் SBEI இதை கண்காணிப்பதில்லை.
இதன் செயல்பாட்டை கண்காணிக்க தனி அமைப்பு எதுவும் இல்லை. ரிஸ்க் முழுவதும் முதலீடு செய்யும் மக்களின்
பொறுப்பு. ஸ்ஹாராவின் குழுமத்திலிருக்கும் இந்தியா ஃபைனான்ஷியல் கார்பொரேஷன் லிமிடெட் என்னும் NBFC, கடந்த பல ஆண்டுகளாக
இப்படி டெப்பாஸிட்களை மக்களிடம் பெற்று வந்தது. கடந்த வருடம் (2011) ஜுலை மாதம்
ஸஹார வெளியிட்ட ஒரு முழுபக்க விளம்பரம் பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. அந்த
விளமபரத்தில் தங்கள் நிறுவனம் அதுவரை மக்களிடம் பெற்ற டெப்பாஸிட்கள் 73000 கோடி
என்று அறிவித்திருந்ததது. கடந்த ஆண்டு 500கோடிக்கு விஜய்
மல்லையாவுடன் சேர்ந்து ஃபோர்ஸ் ஒன் என்ற சர்வதேச ரேஸ்கார் நிறுவனத்தை வாங்கியது,
3500 கோடிகளில் இன்கிலாந்திலும், அமெரிக்காவிலும்
ஹோட்டல்களை வாங்கியிருந்தது.
2004ல் UPA அரசு பதவியேற்ற பின் அரசின் முத்த அதிகாரியாக இருந்து பின்னர் ஒரு
மாநில கவரனராக பதவிவகித்தவர் தந்த ரகசிய அறிக்கையில் நிறுவனத்தால் திரட்டப்பட்ட பணத்தின் பெரும்பகுதி கருப்பு பணமாக இருக்குமோ என்ற சந்தேத்தையும்
அவை அரசியல் வாதிகளடையாதாகவும் இருக்கலாம் எனற சந்தேகத்தையும் எழுப்பியிருந்தது.
இந்நிறுவனத்தை ஆராய்ந்த ரிசர்வ் வங்கியின் விசேஷ ஆடிட் டீம் , இந்த NBFC. நிதி நிறுவனம் நிதியை எம்மாதிரி நிர்வகிக்கவேண்டும் என்ற விதிமுறைகளை பின்பற்றவில்லை. யார் யார் வைப்பு நிதி அளித்துள்ளார்கள் என்பது பற்றிய தகவல்களை சரியாக வைத்திருக்கவில்லை என்பதை கண்டுபிடித்தது. மூதலீடு செய்தவர்களின் பணம். பாதுகாப்பாக இருப்பதற்காக RBI இனி புதிய டெப்பாஸிட்கள் ஏற்க கூடாது, வாங்கிய
வற்றை 7 ஆண்டுகளுக்குள் திருப்பி கொடுத்து
விடவேண்டும் அதன் பின் கம்பெனியை முடிவிட வேண்டும் என உத்தரவிட்டது. இதை மக்களின் நன்மையை கருதி பொது அறிவிப்பாக
விளம்பரமாகவே வெளியிட்டது. RBI யின் ஆணையை
எதிர்த்து சுப்ரீம் போர்ட்வரை வழக்காடி
தோற்ற பின் “மக்களின் நம்பிக்கையை பெற்ற எங்களுக்கு இது பெரிய விஷயமில்லை என்று அறிவித்து, கடந்த ஆண்டு (4 ஆண்டுகளுக்குள்) 20,000க்கோடிக்கும் மேல் முழுவதுமாக திருப்பி
தந்துவிட்டதாகவும் அறிவித்தது.. உண்மையா? எப்படி இது முடிந்தது ? என ஆராய்ந்ததில் ஸஹாரா நிறுவனம்
அந்த பணத்தையும் அதற்கும் மேலும் வேறு ஒரு
புதிய வழியில் பொதுமக்களிடமிருந்தே
பெற்றிப்பதாக சொல்லபட்ட விஷயம் வெளிவந்தது. மூதலீட்டாளார்களுக்கு திருப்பி தர
வேண்டிய கட்டத்தில் புதிய மூதலீட்டு திட்டத்தை அறிவித்து அதில் கிடைக்கும்
பணத்தினால் திருப்பி கொடுப்பதற்கு பொன்ஸி திட்டம் என பெயர் (Ponzi scheme.) இது அமெரிக்கா, இங்கிலாந்தைப்போல
இங்கே கடுமையான குற்றமில்லை என்றாலும் செபியின் விதிகள் இதை அனுமதிக்கவில்லை.
அப்படியானால்
ஸஹாரா செய்தது தவறா?
மிகப்பெரியதவறு என்றும் நிச்சியம்இல்லை என்றும் வாதாட இந்திய கம்பெனிசட்டம்,
செபிவிதிமுறைகள், கம்பெனிநீர்வாக அமைச்சகத்தின் குழப்பமான ஆணைகள் இருதர்ப்பினருக்கும்
உதவுகின்றன. சுருக்கமாக சொல்வதானால், சட்டதின் ஓட்டைகளை சாமர்த்தியமாக, தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ளும்
புத்திசாலிகளுக்கும், தமாதமானாலும் தங்களுடைய விதிகளின் கிழேயே நடவடிக்கை எடுத்து நிகழபோகும்
வீபரிதத்தை தடுத்து உணமையை வெளிக்கொண்டு வரதுடிக்கும் நிர்வாக அமைப்புகளுக்குமான போர்
இது.
ஒரு லிமிட்டெட் கம்பெனி
தங்களுக்கு தேவையான நிதி ஆதாரத்தை பங்கு சந்தை, வங்கிகடன்கள், நிதி நிறுவனகடன்கள் இவற்றின் மூலம் பெருக்கி கொள்ள கம்பெனி
சட்டவிதிகள் அனுமதிக்கின்றன. இதில் ஒன்று கம்பெனியின் கடன் பத்திரங்கள்.
கம்பெனிகளில் ஷேர்கள் என்பது அவற்றில் பொதுமக்கள்
செய்யும் முதலீடு. டெபனச்சர்கள் எனபது கம்பெனியால் குறிபிட்ட காலத்திற்கு விற்கபடும்
கடன் பத்திரம். இதற்கு வட்டி உண்டு.முதிர்ச்சி அடைந்த உடன் திருப்பிதரும்
உத்திரவாதமும் உண்டு. இந்த டெபன்ச்சர்களில் பல வகைகள். வட்டியுடன், வட்டிஇல்லாமல், விரும்பினால் கம்பெனியின் பங்குகளாளாக
மாற்றிக்கொள்ள கூடிய, வாய்ப்புடன், ( optional convertible debentures) அல்லது அப்படி மாற்றாமல் போட்ட பணத்தை திருப்பிபெற
இப்படி பல. இம்மாதிரி பொதும்களிடம் பணம் வசூலிக்க SEBIயிடம் அனுமதி பெற வேண்டும்.
ஆனால் . சஹாரா இந்தியா ரியல் எஸ்டேட் கார்பொரேஷன், சஹாரா ஹவுசிங் இன்வெஸ்ட்மெண்ட் கார்பொரேஷன் என்ற இரண்டு நிறுவனங்கள் அவர்களின் அனுமதியை பெறாமலேயே பத்திரங்களை வெளியிட்டு விற்றன. சேகரித்த பணம் எவ்வளவு தெரியுமா? 24 ஆயிரம்
கோடிகள் ! 2..3 கோடி மக்களிடம்
திரட்டியது.வாங்கியவர்களில் பலர் உ பி,
பிஹார் மாநில கிராம மக்கள் நிச்சியம் இது எதோ மோசடி என சந்திக்கித்த செபி விசாரணையை
துவக்கியது. நாங்கள் செபியின்
கட்டுபாட்டுக்குள் வர மாட்டோம். இது பிரைவேட் பிளேஸ்மெண்ட் முதலீட்டு நிறுவனம் என
ஸஹாரா வாதிட்டது. 50 பேருக்கு மேல் முதலீடு செய்திருக்கும் எந்த நிறுவனமும் எங்கள்
கண்காணிப்பின் கீழ் என்ற விதிமுறையை சுட்டிகாட்டியது செபி. ,வழக்குகள், தீர்ப்பாயங்கள் மேல்முறையீட்டு ஆணையங்கள், கம்பெனி விவகார அமைச்சகத்தின் சட்டமேதைகளின்
விளக்கங்கள். , உயர் நீதிமன்ற மேல்முறையீடுகள் என பலகட்டங்களை தாண்டி
உச்சநீதிமன்றத்தில் வந்து நின்றது வழக்கு. அந்த வழக்கில்தான் இந்த அதிரடி தீர்ப்பு வந்துள்ளது. முதலீட்டாளர்களிடம் வசூலிக்கப்பட்ட அத்தனை பணத்தையும் 15 சதவீத வட்டியுடன் 90 நாட்களுக்குள் திருப்பித் தர வேண்டும். அடையாளம் காணப்படாத முதலீட்டாளர்களின் பணத்தை மத்திய அரசின் கணக்கில் சேர்க்க வேண்டும் என அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவுக்கு காரணம், இதில்
2.3 கோடி முதலீட்டாளர்களும் உண்மையானவர்களா அல்லது சஹாராவே போலியாக
முதலீட்டாளர்கள் என்ற பெயரில் தனது கருப்புப் பணத்தையே வெள்ளையாக்க முதலீடு
செய்ததா? என்ற எழுப்பட்ட சந்தேகத்தை நீதிமன்றம் நம்பியதுதான் . அதனால்தான் வழக்கு நடந்து
கொண்டிருந்தபோதே 11 லட்சம் முதலீட்டாளர்களுக்கு பணத்தை திருப்பிக் கொடுத்து விட்டோம் என சஹாரா அதிரடியாக
சொன்னபோது, அந்த முதலீட்டாளர்களின் விவரத்தையும் 10 நாட்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும். என சொல்லியிருந்தது
அப்படி தாக்கல் செய்யபட்ட ஆவணங்களில் சிலவற்றை
மாதிரி சோதனை செய்ததில் கலாவதி என்பவரிடம் வசூலித்த16000ஐதிருப்பிக் கொடுத்ததாகக கூறியிருந்தது. அதில் முகவரியாக எஸ்.கே. நகர், உ.பி. எனக் கொடுக்கப்பட்டிருந்தது. தந்தை பெயர் என்ன, கணவன் பெயர் என்ன, வீட்டு டோர் நம்பர் என்ன என எந்த விவரமும் இல்லை. இதை எப்படி நம்ப முடியும்? ஒரு பெட்டிக் கடைக்காரர் கூட முக்கிய விவரங்களை வைத்திருப்பார். ஆனால் இவ்வளவு பெரிய நிறுவனம் இப்படி ஒரு முகவரியை கொடுத்திருக்கிறது என
சஹாரா குரூப் தாக்கல் செய்த முதலீட்டாளர்கள் தொடர்பான ஆவணங்களில் போதுமான விவரம் இல்லை என்பதால்
கடுமையாக சாடியுள்ளது நீதிமன்றம். முன்னாள் உச்சநீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி பி,என் அகர்வால்
முதலீட்டார்களுக்கு பணம் திருப்பி தரும்
பணியை கண்காணிப்பார் என்றும் நீதிபதி உத்தரவிட்டிருக்கிறார். முதலீட்டாளர்கள் குறித்த
முழு விவரத்தையும் செபி அமைப்பிடம் சஹாரா நிறுவனம் தர வேண்டும் என்றும், அதைத்
தராவிட்டால் சஹாராவின் சொத்துக்களை செபி நிறுவனம் கைப்பற்றி, ஏலம் விடலாம் என்றும்
உச்ச நீதிமன்றம் கூறியிருக்கிறது.
இந்த வழக்கில் செபி சார்பில் அரசின் சீனியர் வழக்கறிஞர்கள் யாரும் ஆஜராகாதது ஆச்சரியம். சஹாரா பிரபல சட்ட மேதைகளான சோலி சொரப்ஜி, ஃபாலி எஸ்.நாரிமன் உள்ளிட்ட படையை முன்னிறுத்தியது. மூத்த சென்னை வழக்கறிஞர் அரவிந்த் தத்தார் செபியின் சார்பில் ஆஜராகி மேற்படி மேதைகள் சகாராவின் நலன் காக்க முன்வைத்த புதுப்புது சட்ட விளக்கங்களை ஒவ்வொன்றாக தகர்த்தார்.
கம்பெனி சட்ட வழக்கறிஞர்களும் சட்டம் பயிலும் மாணவர்களும் அவசியம் படிக்க
வேண்டிய வாதங்கள் இவை.
தீர்ப்பு
வெளியான இரண்டாம் நாள் நாட்டின் எல்லா தினசரிகளிலும் ஸஹாரா ஒரு முழு பக்க விளம்பரம் வெளியிட்டது. அதில்
கடந்த 8 ஆண்டுகளாகவே இதுபோல் பல்வேறு அமைப்புகள் சகாரா குழுமத்துக்கு நெருக்கடி கொடுத்து வருகின்றன. முதலீட்டாளர்களிடம் நாங்கள் வசூலிக்கும் டெபாசிட்டும் முதலீடுகளும் போலியானது என்றும் பினாமி பணம் என்றும் கருப்பு பணம் என்றும் கூறி வருகின்றன. அரசியல்வாதிகள் ஊழல் செய்து சம்பாதிக்கும் பணத்தை நாங்கள் பெறுகிறோம் என்றும் புகார் கூறுகிறார்கள். இது எதுவும் உண்மையில்லை
ஒரு பைசா கூட பினாமி பணம் கிடையாது. முடிந்தால் பினாமி பணம் என நிரூபியுங்கள் என சவால் விடுகிறோம். கடந்த 33 ஆண்டுகளாக நாங்கள் வசூலித்த பணம் அத்தனையும் 12 கோடி முதலீட்டாளர்களிடம் இருந்து பெறப்பட்டதுதான். அத்தனைக்கும் ரசீது வைத்திருக்கிறோம் என்று
அறிவித்திருக்கிறது.
அத்தனை பணத்தையும் 3 மாதங்களுக்குள் திருப்பிக் கொடுப்பது என்பது சகாரா குழுமத்துக்கு ஒரு பிரச்னையாக இருக்காது. சில சொத்துக்களை விற்றாலே போதும், தேவையான பணத்தை திரட்டி விட முடியும். மேலும் ஏற்கனவே 11 லட்சம் பேருக்கு பணத்தை திருப்பிக் கொடுத்துவிட்டதாக உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது சகாரா. மீதம் கொடுக்க வேண்டிய தொகை17,657கோடிதான் என்றும் கூறியிருக்கிறது.
அடுத்த கட்டம்
அதைக்கொடுத்துவிடுவார்களா? அல்லது எதாவது புது
திட்டம் வைத்திருக்கிறார்களா? வங்க மொழி
ஸஹாரா (அறியபடாதாது unknown ) தான்.
அப்படி கொடுக்கபட்டால் உண்மையான முதலீட்டாளர்களுக்கு பணம்
போய் சேர்ந்து விடும்.பினாமி பணம் என்றால் அந்தப் பணம் அரசுக் கணக்கில் சேர்க்கப்பட்டு விடும். இதுபோன்ற அதிரடித் தீர்ப்பு வெளியாவது இதுவே முதன்முறை,
வெளிவந்திருக்கும் இந்த அதிரடி தீர்ப்பை வழிகாட்டதலாக ஏற்று உயர் நீதிமன்றங்கள்
செயல் பட்டால் நாட்டில் பினாமிவரவு செலவுகள் மெல்ல ஒழியும் வாய்ப்புகள் அதிகம்.
என்றாலும் நமக்கு
சில கேள்விகள்1
v
சகாரா குரூப் ஒரே இரவிலா இத்தனை ஆயிரம் கோடியை திரட்டியது?
24ஆயிரம் கோடியை சகாராவின் 10 லட்சம் ஏஜெண்டுகள் பம்பரமாய் சுழன்று பணம் திரட்டும் வரை செபி என்ன செய்து கொண்டிருந்தது. எத்தனை பத்திரிகைகளில் எவ்வளவு விளம்பரம் வந்தது. அப்போதெல்லாம் அதைப் பார்க்காமல் செபி தூங்கிக் கொண்டிருந்ததா?
v குறிப்பிட்ட கெடுவுக்குள் ஸஹாரா பணத்தை திருப்பி
கொடுத்தாக கணக்கு, ரசீது எல்லாம் காட்டிவிட்டால் விஷயம் ஒய்ந்து விடுமா? இவர்களை
இனி மக்களிடம் எந்த வகையிலும் பணமே
வாங்ககூடாது என ஏன் தடை செய்யப்படவில்லை.?
v இந்த “பரிவாரின்”
மற்ற அங்கங்களின் செயல்பாடுகளை கண்காணிக்க
மத்திய அரசின் கண்காணிப்பு அமைப்புகள் ஏன் முடுக்கபடவில்லை. உச்சநீதி மன்றம் சொல்வதற்காக
காத்திருக்கிறார்களா?
v ஸஹாராவின் பினாமி சொத்துகளுக்கும்
முதலீடுகளுக்கும் .உ.பி இன்னாள், முன்னாள் முதல்வர்களுக்கும் அவர்களின்
நிழல்களுக்கும், பாலிவுட் சக்கரவர்த்திகளுக்கும் சம்பந்தம் இருப்பதால் இதில் அரசியலுமிருக்கிறது
2014 தேர்தலில் அவர்களை மடக்க இதை ஒரு ஆயுதமாக்குகிறார்கள் மத்தியில் ஆளும் காங்கிரஸ் கட்சியினர் என்று
சுற்றி கொண்டிருக்கிறகும் ஒரு செய்தி. உண்மையாக இருக்குமா?
கருத்துகள் இல்லை :
கருத்துரையிடுக
உங்கள் கருத்துக்கள்