டிசம்பர்
6 1992. இந்திய வரலாற்றில் ஒர் கருப்பு பக்கம்.
ராமஜன்ம பூமியான அயோத்தியாவில், இருந்த பாபர் மசூதி இடித்து தரை மட்டமாக்க பட்டதும்
அதன் விளைவாக எழுந்த கலவரங்களும் போராட்டங்களும் அழியாவடுக்களாக இன்றும் பலர் மனதிலிருக்கிறது. கர சேவைக்காக போன பக்தர்கள் கூட்டம் தலைவர்களின்
எழுச்சி மிக்க பேச்சுகளால் ஆவேசம் அடைந்து, உணர்ச்சி வசப்பட்டு அந்த பழைய கட்டிடத்தை
இடித்துவிட்டார்கள் என்று சொல்ல பட்ட இந்த விபத்து குறித்து, கமிஷன்களும், வழக்குவிசாரனைகளும்
இன்னுமும் தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில் இப்போது வெளியாகிருக்கும் தகவல், இது
ஒரு திட்டமிட்டு வெற்றிகரமாக அரங்கேற்றபட்ட
சதி என்பது.
கோப்ரா
போஸ்ட்
என்பது ஒரு புலனாய்வு இணைய பத்திரிகை. (டெஹ்ல்கா மாதிரி) இதன் இணை ஆசிரியர் கே ஆஷிஷ்
பாபர்
மசூதி இடிப்பு தொடர்பாக ஓர் ஆய்வு நூல் எழுதுவதாக சொல்லி , 23 முக்கிய
தலைவர்களை பேட்டி
எடுத்துள்ளார். இந்த ரகசிய வீடியோ
பதிவில் வினய் கட்டியார்,
உமா பாரதி, கல்யாண்சிங், சுவாமி சச்சிதானந்த் சாக்ஷி மஹராஜ், மஹந்த் ராம்விலாஸ் வேதாந்தி. சாத்வி ரித்தம்பரா, மஹந்த் அவைத்யநாத் மற்றும் சுவாமி
நிருத்ய
கோபால்தாஸ் மற்றும், பா.ஜ.க., சிவசேனா,
வி.ஹெச்.பி மற்றும் பஜ்ரங்தளம்
ஆகியவற்றின் முக்கிய தலைவர்கள் இடம் பெற்றிருக்கிறார்கள்.
இவர்களில் 15 பேரை
நீதிபதி லிபரான் கமிஷன் குற்றவாளிகள் என்று குறிப்பிட்டுள்ளது.
19 பேர் குற்றவாளிகள் என்று சிபிஐ தனது குற்றப்பத்திரிக்கையில் தெரிவித்துள்ளது.
‘ஆப்ரேஷன் ஜென்மபூமி’ என்ற பெயரில் நடத்தப்பட்ட சதிச்செயலின்
அடித்தளம் வரை சென்று கண்டறிந்த பல உண்மைகளை
வெளியிட்டிருக்கும் 'கோப்ரா
போஸ்ட்' டின்
டிவிடியை டில்லி பத்திரிகையாளர்களுக்கு அதன் ஆசிரியர் அனிரோத் வழங்கியிருக்கிறார்..
இதில் சொல்லப்படும் விஷயங்களின் ஹைலைட்கள்:
பாபர் மசூதி இடிப்பு
வி.ஹெச்.பி., சிவசேனாவால் நடத்தப்பட்ட திட்டமிடப்பட்ட சதிச் செயல் என்றும், இந்த
இரு அமைப்புகளும் தங்களது தொண்டர்களுக்கு பல மாதங்களுக்கு
முன்பாகவே பயிற்சி அளித்ததாகவும், ஆர்.எஸ்.எஸ். அமைப்பின்
சார்பில் ‘பலிதானி ஜாதா’ எனும் பெயரில்
தற்கொலைப்படைகளும் அமைக்கப்படதாகவும் கூறப்பட்டுள்ளளது. பயிற்சி
குஜராத்தில் ஒரு கிராமத்தில் முன்னாள் ராணுவ அதிகாரிகளால் அளிக்கபட்டது. எதற்கு
பயிற்சி என்று சொல்லப்படாத நிலையில் கடின மலைஏற்றம், கயிற்றில் தொங்கி சுவற்றை
உடைப்பது போன்ற பயிற்சிகள் தரப்பட்டன. இந்த படைக்கு லக்ஷ்மண சேனை என்று பெயர்.
மசூதியை இடிக்கத்
தொடங்கியவுடன், ராம்விலாஸ் வேதாந்தி பாபாதலைமையில்
கரசேவகர்கள் எல்.கே.அத்வானி, அசோக் சிங்கால், முரளிமனோகர் ஜோஷி, கிரிராஜ் கிஷோர், ஆச்சார்யார் தர்மேந்தர் உட்பட பலரது முன்னிலையில்
5 பேர்கள் ராம பக்தர்களானான் நாங்கள்
கோவிலை காப்போம் என ராமர் மேல் சத்தியம்
செய்து கொண்டு பணியை துவக்கினர்கள்.
சுவர்களை உடைக்கும் பெரிய சுத்தியல்கள்,
சரியான நீளத்தில் வலுவான கயிறு எல்லாம் சேகரிக்கபட்டு தயார் நிலையில் வைக்க
திட்டமிட்டவர் உமா பாரதி. என்றும் பயிற்சி
பெற்ற பலரில் இந்த 5 பேர் தலைவர்களாக தேர்ந்தெடுக்கபட்டவர்கள். கட்டிடத்தின்
வெடிப்புகளில் நுழைக்க பெட்ரோல் குண்டுகளும் கொடுக்கப்பட்டடிருக்கிறது.
ஒருவேளை முயற்சி தோல்வி அடைந்தால் மசூதியை
வெடிகுண்டு வைத்து தகர்க்க இரண்டுதற்கொலை படையினர் உடலில் கட்டிய குண்டுகளுடன் பிளான் பி யாக தயாராக.
என்றும் பேட்டிகளில் பதிவாகயிருக்கிறது.
மசூதியை இடிப்பதற்கு
ஒருநாள் முன்னதாக அயோத்தியின் இந்துதாமில் வி.ஹெச்.பி. மற்றும் ஆர்.எஸ்.எஸ். நடத்திய ரகசியக்
கூட்டத்தில், அசோக் சிங்கால்,
வினய் கட்டியார், வி.ஹெச்.டால்மியா, மற்றும் மஹந்த் அவைத்யநாத் ஆகியோர் கலந்து கொண்டனர். ஹனுமன் பாக்கில் நடந்த
ரகசிய கூட்டத்தில் ஆர்.எஸ்.எஸ். சார்பில் ஹெச்.வி.சேஷாத்ரி மற்றும்
பாரதிய ஜனதாவின் முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர் என்று
கோப்ரா போஸ்ட் தெரிவிக்கிறது.
இந்த
நாசவேலை குறித்து அன்றைய மாநில முதல்வர் கல்யாண்சிங்க்கும், பிரதமர் நரசிம
ராவுக்கும் தெரியும் என்கிறது கோப்ரா போஸ்ட். இதில் விருபமில்லாத கல்யாண்சிங் டிச
6 அன்று தன் பதவியை ராஜினாமா செய்யவிருந்த போது தடுத்தவர் முரளி மனோகர் ஜோஷி
என்றும் இடிப்பு முழுவதுமாக முடியும் வரை அவர் லக்னோவில் ஆர் எஸ் எஸ் வீரர்களால்
“சிறை” பிடிக்க பட்டிருந்தார் என்றும் ஒருவர் பேட்டியில் சொல்லுகிறார்.
இந்நிலையில், தேர்தல் அமைதியாக
நடப்பதை தடுக்கும் விதத்தில் 'கோப்ரா
போஸ்ட்'
திட்டமிட்டு காங்கிரஸின்
உதவியுடன் சதி செய்வதாகவும், இதுதொடர்பான
அனைத்துச் செய்திகளையும் உடனடியாக தடை செய்ய வேண்டும் என்றும் தேர்தல்
ஆணையத்தில் பா.ஜ.க புகார்
செய்தது. இந்த கோரிக்கையை தேர்தல் ஆணையம் நிராகரித்து விட்டது..
செய்தியை தடை செய்யவேண்டும் என்று
சொல்லும் பிஜபி அதன் பேட்டிகளை, பேட்டியில் சொல்லப்படும் விஷயங்களை மறுக்க
வில்லையே ஏன்? என்கிறது காங்கிரஸ்.
இது எங்களது இரண்டாண்டு புலானாய்வு.
அத்தனைக்கும் பதிவு செய்யபட்ட ஆதாரம் இருக்கிறது வழக்குகளை சந்திக்கதயார் என சவால்
விடுகிறது கோப்ராபோஸ்ட்.
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ராமர் கோவிலை
சட்டவிதிகளுக்குட்பட்டு கட்டுவோம் என்று கடைசி பக்கத்தில் ஒரு வரியாக தன் தேர்தல்
அறிக்கையில் சொல்ல்யிருக்கிறது பிஜெபி.
கல்கி 20/04/14
கருத்துகள் இல்லை :
கருத்துரையிடுக
உங்கள் கருத்துக்கள்