சற்று முன் face bookல் இதை பார்த்தேன். சந்தோஷத்தை தாண்டிய ஒர் உணர்வு. எல்லோருடனும் பகிர்ந்து கொள்ள விரும்பியதால் சுவடுகளில் பதிகிறேன். பொற்கோவில் கட்டுரையை விடுங்கள் மற்றவர்கல் சொல்லியிருப்பதை பாருங்கள்.
ரமணன்
மாலன் நாராயணன் commented on this.
ரமணன்
மாலன் நாராயணன் commented on this.
1984ல் பொற்கோவிலில் ராணுவம் நுழைந்த நேரம். அந்தச் செய்தி பற்றிய பின்னணிகள் அந்த வாரமே வந்துவிட வேண்டும் என ஜீனியர் விகடன் விரும்பியது. நீங்கள் எழுத முடியுமா என போனில் தொடர்பு கொண்டு கேட்டார்கள். “எழுதுகிறேன், எப்போது வேண்டும்?” என்றார்கள். ”இப்போதே” என்றார்கள். ” என்ன விளையாடறீங்களா?” என்றேன். ”இல்ல சார் நிஜமாதான், நீங்க கொஞ்சம் உடனே ஆபீசிற்கு வரமுடியுமா என்றார் சுதாங்கன். மாலை இரவை நெருங்கிக் கொண்டிருந்தது. அப்போது ஜூவி ஆ.வி அலுவலகத்திற்கு வெளியே தனியாய் சோவியத் கலாசார மையத்தின் அருகில் ஒரு வீட்டை அலுவலகமாக்கி இயங்கிக் கொண்டிருந்தது. போனேன். ”இங்க உட்காருங்க சார்’ என்று சுதாங்கன் அவர் உட்கார்ந்திருந்த நாற்காலியிலிருந்து எழுந்து அவரது இடத்தையும் மேசையையும் கொடுத்தார். “சார் அர்ஜண்ட் சார். நிஜமாத்தான் சார். இன்றிரவே அச்சுக்குப் போகணும்சார்” என்றவரின் அடுத்த வரி என்னை திடுக்கிட வைத்தது. “கொஞ்சம் இங்கேயே உட்கார்ந்து எழுதிக் கொடுத்திடுங்க சார்” என்றார். அவர் என்னுடன் திசைகளில் செயலபட்டவர். மறுக்க முடியாத தர்மசங்கடத்தோடு ‘முயற்சிக்கிறேன்” என்று சொன்னேன், அவ்வளவுதான் நியூஸ்பிரிண்ட் காகிதங்கள் என் முன் வைக்கப்பட்டன.மூன்று மணி நேரம் எழுதியிருப்பேன். இடையிடையே சில தகவல்களை சரிபார்த்துக் கொள்ள வேண்டிய புத்தகங்களையும் பத்திரிகைகளையும் தாமதமின்றி சுதாங்கன் கொண்டு வந்து தந்தார்.
முப்பது வருடங்களுக்கு முன் அப்படி உருவானது இந்தப் ’பொற்கோவில் ரணகளமான கதை’ அன்று எழுத கணினி இல்லை. தேட கூகுள் இல்லை. மின்னஞசல் இல்லை. ஆனால் எங்கள் முன் சவால்கள் இருந்தன.
இதன் அச்சுப் பிரதி கூட இன்று என்னிடம் இல்லை. ஆனால் விகடன் லைப்ரரியிலிருந்து Srinivasa Raghavan அவர் பதிவில் வெளியிட்டிருந்தார். அவருக்கும் விகடனுக்கும் நன்றி. பழைய நினைவுகளைக் கிளறியதற்க்காக ஸ்ரீநிவாச ராகவனுக்குக் கூடுதலாக நன்றி

கருத்துகள் இல்லை :
கருத்துரையிடுக
உங்கள் கருத்துக்கள்