காட்டு
யானைகளை நாட்டிற்குள் கொண்டுவந்து அந்த சுழலில்
வாழ பழக்ககபடுத்துவது நமக்கு தெரியும். நாட்டிலேயே பலநாள் வாழந்த யானையை திரும்ப காட்டில்
வாழவைக்க முடியுமா? முயற்சித்திருக்கிறார்கள்.
மஹராஷ்ட்டிர
மாநிலத்தின் கோலாப்பூர் மாவட்ட எம் எல் ஏ விஜய் கோர். இவர் குடும்பத்தினர் அவர்களது கிராம கோவிலுக்கு ஒரு யானையை நன்கொடையாக
தந்திருந்தனர். அதன் பெயர் சுந்தர். கோவிலுக்கு போதுமான வருமானம் இல்லாதாதால் அவர்கள்
யானையை எம்/ எல் ஏ விடம் தந்து பராமரிக்க வேண்டினர். விஜய் அதை தன் வீட்ட்ருகே இருக்கும்
ஒரு ஷெட்டில் கட்டிப்போட்டு வைத்திருந்தார். முறையாக பராமரிக்க படாதால் சுந்தர் நலிவடைந்து கொண்டிருந்தது. அந்த கிராமத்திற்கு
வந்த ஒரு டூரிஸ்ட் இரண்டு கால்களும் சங்கிலியால்
கட்டபட்டிருக்கும் சுந்தரை படமெடுத்து தன் பேஸ்புக்கில் 7 ஆண்டுகளாக
அது கட்டபட்டிருப்பதையும், அதனால் அதன் கால்களில் புண்ணாகியிருப்பதையும். அதன் காதுகளில்
அங்குசம் குத்தி புண்ணாகியிருக்கும் அவல நிலையையும் எழுதியிருந்தார். சில நாளில் மற்றொருவர் அது படும் அவஸ்த்தையை வீடியா எடுத்து வெளியிட்டார். பலர் அந்த யானையை விடுவிக்க
வேண்டும் என எழுதிக்கொண்டிருந்தனர்.
பம்பாயில்
வசிக்கும் முன்னாள் மிஸ் இந்தியாவும், நடிகையுமான செலினா ஜெய்ட்லி மிருகங்களை கெளரவமாக நடத்தும் மக்கள் இயக்கத்தின்(PEOPLE
FOR ETHICAL TREATMENT OF ANIMALS-PETA) தீவிர உறுப்பினர். அவர் மும்பாய் உயர் நீதிமன்றத்தில்
சுந்தரை காப்பாற்ற வனத்துறையினருக்கு ஆணையிட ஒரு வழக்கை தொடர்ந்தார். ஒர்ரண்டு பின்னர்
கோர்ட் ஆணையிட்டும் அதிகாரவர்க்கம் அசையவில்லை.
14 மாதம் ஆகிவிட்டது. இதற்கிடையில் இந்த சுந்தர் விவகாரம் பேஸ்புக்கிலும், டிட்டரிலும்
பெரிய விஷயமாகிவிட்டது. சுந்தரை காப்பற்ற ஒரு பக்கமே துவக்கபட்டு பலர் ஆதரவாக எழுதிகொண்டிருந்தனர். யானையின் சொந்தக்காரர் எதிர் வழக்காடினார். இறுதியில் நீங்கள்
உரிமையாளராக இருந்தாலும் துனப்புறுத்த உரிமையில்லை என்றும் வனத்துறையினர் சுந்தரை விடுவித்து
பங்களூர் யானை பார்க்கில் வைத்து பராமரிக்க வேண்டும் என்றும் மும்பாய் உச்ச நீதி மன்றம்
மீண்டும் கண்டிப்புடன் ஆணையிட்டது.
உரிமையாளார்
விஜய் கோரே உச்சநீதிமன்றத்திற்கு அப்பீல் செய்திருக்கிறார்., சமூக வலைத்தளத்தில் இந்த
விவாதத்தில் கொண்டிருந்தவர்கள் சீறினர். புதிய நண்பர்கள் இனைந்தனர். சர் பால் மெகார்த்தி,
”பேவாச்” புகழ் பமீலா ஆண்டர்சன், போன்ற
சர்தேசபிரபலங்களும், அமிதாபச்சன், மாதுரிதிக்ஷீத்
மாதவன் போன்ற நம்மூர் பிரபலங்களும் சுந்தரின்
உடனடி விடுதலைக்கு ஆதரவு தெரிவித்து எழுதினர். ஒராண்டுக்கும் மேலாக தொடர்ந்து இந்த யானை பற்றி எழுதிக்கொண்டிருப்பவர்களில் ஒருவர் அமிதாப். மொத்தம் இதுவரை சுந்தரின் விடுதலைக்கு
ஆதரவு தெரிவித்தவர்கள் 2, 20,000பேர்.
வழக்கு
அப்பீல்லில் இருந்தாலும் உயர் நீதிமன்ற தீர்ப்பிற்கு
தடை எதுவுமில்லாதால். சுந்தரை விடுதலை செய்து
பத்திரமாக பங்களுரு பன்னர் கட்டா யானை பார்க்கில் சேர்க்க வேண்டும் என கோர்ட் விளக்கமளித்திருந்தது. யானையை விடுதலை செய்யவேண்டும் என்பது கட்டளையாக
இருந்தால் சங்கலியை அவிழ்த்துவிட்டு போய்விடலாம்.” ”பத்திரமாக பெங்களுரு கொண்டு செல்லபடவேண்டும்
என்பது கோர்ட் ஆணையாகையால் மஹராஷ்டிர வனத்துறைக்கு தலைவலி. ஆரம்பித்தது. கோலாப்பூரிலிருந்து பங்களுர் 700 கீமி. 25 மணி நேர
பயணம். அதற்கு சுந்தரை தயார் செய்ய வேண்டும். பல வருடங்கள் கட்டி போடபட்ட நிலையிலேயே
இருந்ததால் அதன் மனநிலை எப்படி என்பதை சோதிக்க வேண்டும் இப்படி பல பிரச்சனைகள் எழுந்தன.
கேரளத்திலிருந்து யானைகளை நன்கு அறிந்த ஸ்பெஷலிஸ்ட் மாவுத்தர்கள் வரவழைக்கபட்டனர்.
மாநில கால்நடைத்துறை யானை ஸ்பெஷ்லிஸ்ட்கள் வந்தனர். அவர்களின் ரிப்போர்ட் படி அதன் கால் புண்கள் குணமாகும் வரை காத்திருக்க வேண்டியிருந்தது.
அதன் எடையை தாங்கக்கூடிய வசதியான விசேஷ லாரி ஒன்று தயார் செய்யப்பட்டது.போகும் வழியில்
அதன் உடல் நலம் பாதித்தால், சிகிச்சை அளிக்க கால்நடைடாக்டர்களுடன் ஒரு ஆம்புலன்ஸும்
ரெடியானது. பெரிய லாரி, கிரேன் இவைகளை முதன்
முதலில் பார்த்த சுந்தர் மிரண்டு போய் நகர மறுத்துவிட்டது. 4 நாட்கள் வாழை பலா பழங்களை கொடுத்து ஆசை காட்டியபோது அவற்றை
மட்டும் சாப்பிட்டுவிட்டு லாரியில் ஏற மறுத்தது. கடைசியில் ஒரு வழியாக ஏற்றிய போது
லாரியை எடுக்க முடியவில்லை. அதன் சக்கரங்கள்
பஞ்சர். உள்ளூர்கார்களின் உபயம்.. யானையை கீழே இறக்கி டயர்களை மாற்றியபின் மீண்டும்
ஏற்றமுயற்சித்தபோது பயங்கரமாக முரண்டு செய்ய ஆரம்பித்துவிட்டது. 14 ஆண்டுகள் அதனுடன்
இருந்த பாகன் அதன் காதுகளில் ஏதோ சொல்லிவிட்டு காணமல் போனதுதான் காரணம். கேரளா பாகன்கள்
அதனிடம் பல முறை பேசி ஒருவழியாக லாரியில் ஏற்றினர். உள்ளூர் மக்கள் தங்கள் எதிர்ப்பை காட்ட லாரியை மறித்தனர்.
பேஸ்புக்க் மூலம் செய்தி பரவிக்கொண்டிருந்ததால். PETA தொண்டர்கள் வனத்துறை அதிகாரிகளுக்கு
உதவி செய்ய மோட்டர் சைக்கிள், கார்களில் வந்து குவிந்தனர். அந்த சின்ன கிராமம் பரபரப்பாகிவிட்டது.
போலீஸ் வண்டிகள் புடை சூழ ஒருவழியாக சுந்தரின் லாரியும் ஆம்புலன்ஸும் தங்கள் பங்களுர்
பயணத்தை துவக்கின..
பங்களூர்
மிருக காட்சி சாலையில் இயற்கை சூழலில் மிருகங்கள் வாழும் சபாரி பார்க் இருக்கிரது அதில்
யானைகளுக்கு என பெரிய வனப்பகுதியும் இருக்கிறது.
இரண்டு
நாள் பயணத்திற்கு பின் பங்களூரு வந்த சுந்தர் லாரியிலிருந்து இறங்க இரண்டு மணி நேரம் முரண்டு செய்து பின்னர் இறங்கியது.
நகரத்திலிலேயே வளர்ந்த அந்த யானையை நேரடியாக
காட்டுக்குள் விட முடியாது என்பதால் அங்கு வாழும் சில யானைகளுடன் முதலில் சில நாட்கள்
சுந்தர் பழக ஏற்பாடு செய்யபட்டிருந்தது. ஆனால் நம்மாளுக்கு அவர்களையெல்லாம் பிடிக்க வில்லை. முதல்நாள் முழுவதும் தனியேதான்
நின்றுகொண்டிருந்தது. . இரண்டாம் நாள் அந்த சபாரிபார்க்கில் இருக்கும் ஒரு சின்ன யானை
குட்டி 4 வயது சிவா. வரவழைக்கபட்டது. சுந்தர்
அந்த சைஸ்ஸில் யானையையே பார்த்த்தில்லையாகையால் முதலில் மிரண்டு, வியந்து
பின்னால ரொம்ப பிரண்டாகி அந்த குழந்தையுடன் விளையாட ஆரம்பித்து விட்டது இரண்டு
நாட்களுக்கு பின்னர் அந்த யானைகளின் சீனியர்
வன்ராஜ் வந்து தும்பிக்கை குலுக்கி சுந்தரை அழைத்து சென்றிருக்கிறது. விரைவில் அங்குள்ள 13 யானைகளுடன் பழகிவிடும் என்கிறார்கள் வனத்துறை அதிகாரிகள்.
கண்காணித்து கொண்டும் இருக்கிறார்கள்.
சுந்தர்
பன்னர்கட்டாவிற்குள் போனதும் “ சுந்தருக்கு சுதந்திரம் கிடைத்தது மகிழ்ச்சியான விஷயம். PETAவின் இந்தவெற்றி முக்கிய சாதனை என அமிதாப் டிவிட் செய்திருக்கிறார்.
நம்மூர்
கோவில்களில் கஷ்டபடும் யானைகளை யார் காப்பற்ற போகிறார்கள்?
ரமணன்.
கருத்துகள் இல்லை :
கருத்துரையிடுக
உங்கள் கருத்துக்கள்