9/8/14

மாலனின் பேஸ்புக்கிலிருந்து




மல்லிகை மாலை சூட்டி, மங்கல வாத்தியம் முழங்க, மாப்பிள்ளையை மணவறைக்கு அழைத்து வருவது போல் மேடைக்குக் கூட்டிவந்து, சிறந்த எழுத்தாளருக்கான விருதைக் கம்பன் கழகம் நேற்றுமாலை எனக்கு அளித்தது. மேனாள் உச்சநீதிமன்ற நீதிபதி லட்சுமணன் விருதை அளித்தார்.
எனக்குக் கம்பனை அறிமுகப்படுத்தியவர் பாரதி. உரைநடை எழுதப்பயின்ற காலத்தில் அதற்கான உதவிக் குறிப்புக்களைப் பட்டியலிடும் பாரதியார், ‘கம்பன் கவிதைக்குச் சொல்லியதைப் போலவே” எனக் குறிப்பிட்டு (கம்பன் வரிகளைச் சொல்லாமல்) உரைநடைக்கான நான்கு அம்சங்களை தெளிவு, ஒளி, தண்மை, ஒழுக்கம் எனப் பட்டியலிடுவார். இதில் ஒழுக்கமாவது தட்டுத் தடையின்றிச் செல்லும் நடை என்றும் விளக்குவார். என் அறிவுக்கு எட்டியவரையில் இன்றளவும் பாரதிக்குக் கம்பன் சொல்லிய இந்த ஃபார்முலாவை என் உரைநடையில் பின்பற்றி வருகிறேன். எனவே இது எனக்கு என் குருவின் குரு -பேராசிரியர்- அளித்த பிரசாதம்
இந்த விருதை நான் எழுதத் துவங்கிய நாளிலிருந்து என்னைச் சிகரங்களை நோக்கி உந்தி வரும் என் அண்ணன் ரமணனுக்கு சமர்ப்பிக்கிறேன்

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்கள்