செவ்வாய் கிரகத்திற்குச் செல்லப்போகும் முதல் பெண்.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் லாஸேஞ்சல்நகருக்கு
அருகிலிருக்கும் பாஸடினா(Pasadena) பகுதியிலிருக்கிறது
நாஸா (NASA)வின் செவ்வாய் கிரக ஆராய்ச்சி
நிலையம். 80களின் இறுதியிலிருந்தே தனது ஆய்வுகளை செய்து கொண்டிருக்குக்கும்
இந்த நிறுவனம் பூமியிலிருந்து 57
கோடி கீமீ தொலைவிலிருக்கும் செவ்வாய் கிரகத்தில் உயிரினம் வாழ தேவையான ஆக்ஸிஜன்.தண்ணீர்
இருக்கிறதா என்பதை அறிந்தபின்னர் அங்கு
முதலில் மனிதனை அனுப்பும் மிகப்பெரிய கனவு திட்டத்துடன் இயங்குகிறது
. இப்போது 14000க்கு
மேற்பட்டவர்கள் பணியாற்றும் இந்த நிலையத்தில் இதற்காக
தொடர்ந்து முயற்சிகள், பரிசோதனைகள் செய்யபட்டுவருகிறது. , முதல் கட்டமாக செவ்வாய் கிரகத்தின் அருகில் சென்று சுற்றி வந்து தகவல்கள் பெற விண்வெளிகலங்கள்
அனுப்பட்டன. அதன் மூலம் கிடைத்த அடிப்படை தகவல்களின் அடிப்படையில் நேரிடியாக
செவ்வாய் கிரகத்தில் ஒரு விண்கலத்தை இறக்கி சோதனைகள் செய்ய முடிவு செய்து
அதற்காகவே உருவாக்கபட்டது “கியூரியாஸிட்டி”“ எனற விண்கலம். அதுவெற்றிகரமாக தரையிறங்கி
செய்திகளை அனுப்பிகொண்டிருக்கிறது. இதன் அடுத்த
கட்டமாக அடுத்த 15 ஆண்டுகளுக்குள் மனிதனை அனுப்பும் திட்டங்களை தயாரித்துகொண்டிருக்கிறது.
அலீஸா கார்சன் என்ற 13 வயது பெண்,
ஏழாம் வகுப்பு மாணவி இப்போதே அந்த பயணத்துக்கான
பல தகுதிகளையும் பெற்று தன்னை தயாரித்துகொண்டிருக்கிறார்.. நாசா இந்த பெண்ணுக்கு நிறைய முன்னுரிமைகளை அளித்து
ஊக்குவிக்கிறது. அனேகமாக செவ்வாயில் காலடி வைக்கபோகும் முதல் மனித இனம் இந்த பெண்ணாக
இருக்கலாம் என அமெரிக்க பத்திரிகைகள் எழுதுகின்றன. மத்திய அமெரிக்காவின் லூயிசினா(Louisiana) மாநிலத்தில் வசிக்கிறார். அவரை போனில் தொடர்பு கொண்டபோது
அவரது தந்தையுடனும் பேசும் வாய்ப்பும்கிடைத்தது. அலீஸா புதியதலைமுறைக்காக போனில் அளித்த எக்ஸ்கூளிஸிவ் பேட்டி
ஒரு பள்ளிகுழந்தையின் சந்தோஷத்தோடு ஆனால் மிக தெளிவான
ஆங்கிலத்தில் ”என் உச்சரிப்பை புரிந்துகொள்வதில்
கஷ்டம் ஏதுமில்லையே?” என கேட்டு பேசுகிறார். இந்தியாவைப்பற்றி அறிந்திருக்கிறார்.
செவ்வாய் கிரகத்தின் மீது உங்களுக்கு என் ஆர்வம் ஏற்பட்டது?
நான் 3 அல்லது 4 வயது குழந்தையாக இருந்தபோது, செவ்வாய் கிரகத்திற்கு போகும்மனிதர்கள்
பற்றி ஒரு படம் பார்த்தேன். அப்பாவிடம் இதுவரை யாராவது இப்படி போயிருக்கிறார்களா? என்று
கேட்டேன். அவர் இதுவரை யாரும் போகவில்லை என்றும்
அந்த கிரகத்தைபற்றியும் நிறைய சொல்லிகொடுத்தார். ஒரு மேப் கூட கொடுத்தார். தொடர்ந்து அதை பார்ர்துகொண்டே இருப்பேன். நிறைய படித்துதெரிந்து கொண்டேன். பள்ளியில் சேரும்போதே
நான் விண்வெளி பயணியாகி செவ்வாய் கிரகத்திற்கு போக முடிவு செய்துவிட்டேன். தொடர்ந்து எல்லோரிடமும் செவ்வாய் கிரகத்தைப்பற்றி
கேட்டுகொண்டே இருப்பேன் பள்ளியில் என் எல்லா பிராஜக்கெட்டும் செவ்வாய் கிரகம் பற்றிதான்.
உங்களுக்கு நாசாவில் பயிற்சி கொடுத்திருக்கிறார்களாமே?
நாஸாவில் ”பாஸ்போர்ட்” என்று ஒரு திட்டமிருக்கிறது. இது பள்ளி மாணவர்களுக்கானது.
அமெரிக்காவில் நாஸா 14 இடங்களில் தகவல் மையங்களை அமைத்திருக்கிறது. ஒவ்வொன்றும்
அவர்களின் ஒரு திட்டம் பற்றியது. அதில் படங்கள் சார்ட்கள் புத்தகங்கள் ஸ்லைடு
காட்சிகள் எல்லாம் இருக்கும். அதை நன்கு பார்த்த பின் விரும்பினால் ஒரு பரீட்சை எழுதலாம்.
அப்படி எழுதி தேர்ந்தால் பாஸ்போர்ட் மாதிரி
ஒரு புத்தகத்தில் சீல் இட்டு கொடுப்பார்கள். நான் அந்த 14 நிலையங்களுக்கும்
சென்று பரீட்சைகள் எழுதி என் பாஸ்போர்ட்டில் அந்த ஸீல்களை பெற்றேன். எல்லாபரிட்சைகளிலும் முதல் மார்க் வாங்கியிருகிறேன்.
இதை முதலில் செய்திருக்கும் ஒரே அமெரிக்க மாணவி நான் தான்
இதனால் நாஸாவில் விஞ்ஞானிகளுக்கு
மட்டுமே அனுமதியுள்ள இடத்திலிருந்து ஏவுகணைகள் ஏவப்படுவதை பார்க்க என்னை அனுமதிப்பார்கள்
ஏரோநாட்டிக்ஸ் முடித்தவர்களுக்கு நடத்தும்
ஒரு பயிற்சி முகாமுக்கு என்னையும் அழைத்தார்கள். அதில் அவர்களோடு நானும்பயிற்சியை முடித்திருக்கிறேன்
அந்த பரீட்சையையும் எழுதினேன்.,. அந்த பயிற்சியின் ஒரு பகுதியாக சிறுவிமானம் ஓட்ட கற்று கொடுப்பார்கள்.
எனக்கு கார் டிரைவிங் லைசென்ஸே இல்லாதால், முதலில் அதை வாங்கிகொண்டு மீண்டும் பயிற்சிக்கு வா என்று
சொல்லியிருக்கிறார்கள். ஸ்டூடண்ட் கார் டிரைவிங்
லைசன்ஸ் வாங்க நான் அடுத்த பெர்த்டே வரை காத்திருக்கவேண்டும்.
பள்ளி படிப்பையும் இவைகளையும் எப்படி செய்யமுடிகிறது?
பள்ளியில் பாடங்கள் எனக்கு கஷ்டமாக
இருப்பதில்லை. நல்ல கிரேடுகளை வாங்குகிறேன். நேரத்தை சமாளிப்பது தான் சவால்.சிலசமயம் மிக கஷ்டமாக
இருக்கும். ஆனால் அப்பா நேரத்தை எப்படி செலவழிக்க வேண்டும் என சொல்லிகொடுத்திருக்கிறார்.
எதை முதலில் எதை பின்னால் செய்யவேண்டும் என்று எனக்கு 5ஆம் வகுப்பில் படிக்கும்போதே
சொல்லி கொடுத்துவிட்டார். பள்ளிகூடத்தில்
என் ஆசிரியர்களுக்கும் பிரண்ட்ஸ்களுக்கு என்னைப்பற்றி ரொம்ப பெருமை அதுவும் ஒரு வசதியாக
இருக்கிறது.
வானியல்,ராக்கெட்சயின்ஸ் தவிர வேறு எதில் ஆர்வம்.?
பள்ளியில் புட்பால் ஆடுவேன், இபோது கூட உங்கள் போனுக்கு முன்னால் ஒரு மாட்ச் ஆடிவிட்டுதான்
வந்தேன். பியோனோ வாசிக்க கற்றிருக்கிறேன்.
டான்ஸும் தெரியும். எங்கள் பள்ளி ரோபோடிக்ஸ் பிரிவு ஒரு ரோபோவை உருவாக்குகிறது. அந்த டீமில் நான் இருக்கிறேன் நான் ஒரு கேர்ல் ஸ்கெளட்.
நிறைய பேட்ஜ் வாங்கியிருக்கிறேன் பெர்ஸி ஜாக்ஸன் புத்தகங்கள் படிப்பேன்.
நீங்கள் மற்ற பள்ளிகளில் சிறு குழந்தைகளுக்காக பேசுகிறீர்களாமே? அது
எதைப்பற்றி?
பள்ளிகளுக்கு போய் பேசுவதில்லை. ஸ்கைப்பில் அவர்களிடம் பேசுவேன். இதுவரை நடந்த நாஸாவின் விண்வெளிபயணங்களைப்பற்றி சொல்வேன்.
கேள்விகள் கேட்பார்கள் பதில் சொல்லுவேன். தெரியாததை அப்பாவிடம் கேட்டு பின்னாளில் சொல்லுவேன்.
முக்கியமாக உங்களுக்கு பிடித்த பாடத்தை கண்டுபிடித்து படிக்கவும் என்ன நீங்கள் என்ன
ஆகவேண்டும் என்பதை நீங்களேதான் தீர்மானிக்க வேண்டும். மற்றவர்கள் இல்லை என்று சொல்லுவேன்.
இரண்டு பள்ளிகளில் நான் பேசியது பிடித்திருந்ததால். மற்ற பள்ளிகள் இப்போது அழைக்கிறார்கள். எனக்கு பரிட்சைகள்
இருக்கும்நாட்களில் நான் இதைச்செய்வதில்லை.
செவ்வாய் கிரகம் போகவேண்டும்
என்ற உங்கள் லட்சியம் நிறைவேறினால் அதன் பின் என்ன செய்வீர்கள்? ஒருவேலை போக முடியாமல்
போனால் என்ன செய்யபோகிறீர்கள்?
அந்த லட்சியத்தை அடைய நான் இன்னும் நிறைய செய்யவேண்டும். முதலில் 17 வயது
ஆனபின் பைலட் லைசன்ஸ், ஸ்கை டைவிங் லைசன்ஸ் எல்லாம் நல்ல கிரேடில் வாங்கவேண்டும் இங்கிலாந்திலிருக்கும்
கேம்பிர்ட்ஜ்ஜின் இண்டர்நேஷனல் ஸ்பேஸ் பல்கலைகழகத்தில்
போஸ்ட்கிராஜ்வேட் படிப்பேன் பின்னர் அமெரிக்காவின் MIT யில் (மாசாசூஸ்ட் இன்ஸ்டீயூட்
ஆப் டெக்னாலாஜி) டாக்ட்ரேட் வாங்க வேண்டும். இடையில் நாசா நடத்தும் முகாம்களிலும், பரிட்சைகளிலும் பங்கு கொண்டு தேர்வாவேன்.
ஒருவேளை நீங்கள் கேட்பதுபோல செவ்வாய் போகும் வாய்ப்பு நழுவினால்… நாஸாவின் செவ்வாய் திட்டத்தில் மிஷின் கண்ட்ரோலில்
ஒரு எஞ்னியாராக இருப்பேன். செவ்வாய் கிரகம் என் வாழ்க்கையோடு இணைந்து போன விஷயமாக செய்துகொள்வேன்.
உங்கள் பெற்றோர்கள், நண்பர்கள்
பற்றி சொல்லுங்கள்.
நான் குடும்பத்தின் ஒரே பெண்.
அன்பான தந்தையால் வளர்க்கபடுகிறேன். என் விருப்பங்களை கனவுகளை பெரிதும் மதித்து
அதை அடைய உதவி செய்யும் அன்பான மனிதர் அவர்.
என் கனவுகளுக்கு உதவுவதை தன் லட்சியமாக கொண்டிருப்பவர்.சொந்தமாக டிவி சானல்
வைத்திருக்கிறார் எனக்கு அதில் ஆர்வம் இல்லை. . நண்பர்கள் பற்றி கேட்கிறீர்கள்…ம்ம்
பள்ளீயில் நிறைய, முகாம்களுக்கு போனதால் நாசாவில் சிலர், ஆனால் பெஸ்ட் பிரண்ட் என்
வகுப்பு தோழி மேகி தான். இப்போது உங்களுடன்
பேசுவதை ரிகார்ட் செய்துகொண்டிருகிறேன். இரவில் அவளுக்கு போட்டுகாட்டுவேன்.
இந்தியாவின் மங்கள்யாண் திட்டம் பற்றி தெரியுமா?
ஓ தெரியுமே!. அதுபற்றி பள்ளியில் ஒரு பேப்பர் தயாரித்து படித்திருக்கிறேன்,
உங்களுக்கு அனுப்புகிறேன்.
பேட்டி அளித்ததற்கு நன்றி அலீஸா. உங்கள் கனவுகள் வெற்றியாக எங்களுடைய வாழ்த்துக்கள்
நன்றி சார். பேட்டி வெளியான உங்கள் பத்திரிகையை அனுப்புவீர்கள்தானே?
நிச்சியமாக.
நன்றி சார்.
(புதிய தலைமுறை இதழ் )
கருத்துகள் இல்லை :
கருத்துரையிடுக
உங்கள் கருத்துக்கள்